Wednesday, August 14, 2013

கருப்பாக இருந்திருந்தால் ஆசை நிறைவேறி இருக்கும்..... (மலேசியப் பயணம் 5 )

வரைபடத்தில் பார்க்கும்போது எல்லாமே   ரொம்பப் பக்கத்தில் தான் இருக்கு. ஆனால்.... வெயில்....  சாலையில் இருந்த  கைகாட்டிப் பலகை சொல்லுது  மஸ்ஜித்  நெகரா இந்தப்பக்கமுன்னு.

முந்தியே குறிப்பிட்டமாதிரி மெனெக்கெடுதல்   ரொம்ப அதிகமில்லை. தேவையான சொற்களை அக்கம்பக்கம் இரவல் வாங்கிக்கலாம். இப்படித்தான்  நகரம்,  நெகாரா ஆகி இருக்கு.

தேசிய மசூதின்னு சொல்றாங்க. பொதுவான  மசூதிகளுக்குரிய  வெங்காயக்கூம்பு இல்லையேன்னு  பார்த்தால் வேற ஸ்டைலில் இருக்கு.  குட்டைப்பாவாடையுடன் தட்டாமாலை சுற்றும் சிறுமியின்  உடை அலைஅலையாய் வட்டம்போடுவதைப்போல்!   அச்சச்சோ..... சாமி சமாச்சாரத்துக்கு   உவமானம் சரி இல்லையே.....  குடையை விரிக்கும்போது  ஜஸ்ட் அது  முழுசுமா விரிஞ்சு க்ளிக்குமுன் இருப்பதைப்போலன்னு  வச்சுக்கலாம். ஓக்கேயா?

கைகாட்டி சொன்ன திசையில் நடந்தோம்.  மசூதி வளாகத்தில்  முன்புறத் தோட்டத்தின்  ஒரு ஓரத்தில்  ஏகப்பட்ட ஓவியங்களை வரைஞ்சு விற்பனைக்கு வச்சிருந்த ஓவியர்  சின்ன  ஸ்டூலில் உக்கார்ந்தபடி எதிரில் இருக்கும் குட்டியூண்டு  ஓவிய ஸ்டேண்டில் ஏறக்குறைய முடிஞ்சபடத்துக்கு நகாசு வேலை செஞ்சுக்கிட்டு இருக்கார்.  விலை ஒன்னும் அவ்ளோ அதிகமில்லை.  20 ரிங்கிட் முதல்  ஆரம்பம். நமக்கு வேணுமான்னு யோசனை .  ஆனால் நின்னு ரசிக்க தடை ஏது?  ரசிச்சுப் பாராட்டி நாலு சொற்கள் சொன்னதும் ஓவியருக்கு  முகத்தில் சிரிப்பும் நிறைவும்.




முன்புறத்தோட்டத்தில் குட்டியா ஒரு  மண்டபமும் அருகில்  உருது மொழியில் எழுதுன ஒரு  சுவரமைப்பும்.  மசூதின்னு எழுதி இருக்கும் போல!  உசர நெடுநெடுன்னு  போகும் மினாரா!  73 மீட்டர் என்றார்கள். அம்மாடியோவ்!!!

 நட்சத்திர வடிவ அமைப்பில் செயற்கை நீரூற்று. கடந்தால்  மேலே போக படிக்கட்டுகள்.  காலடி முடிஞ்சதும் கண்ணெதிரே  அற்புதம்!  இஸ்லாமியரல்லாதார் கூட உள்ளே போய்ப் பார்க்கலாமாம்! அடிச்சது ப்ரைஸ் எனக்கு.


படிகளின் அருகில்  காலியா இருந்த  காலணி ஸ்டேண்டில்  செருப்புகளைக் கழட்டி வைக்கப்போனார் கோபால்.  சட்னு அங்கிருந்த அறிவிப்பைப் பார்த்துட்டு வேணாமுன்னேன்.

berhati-hati pencuri.

திருடர்கள் ஜாக்கிரதை!  எனக்கும் கொஞ்சம்(!)   பஹாஸா மலேயு  Bahasa Melayu தெரியும்லெ:-))))))))

பார்வையாளர்களுக்கு  உதவும்  வாலண்டியர்கள்   இருக்கைக்குப் பக்கத்தில்  ரெண்டு  ஸ்டேண்டுகளில்  காலணிகள் நிறைய இருக்கு. அங்கே வச்சுட்டு இந்தப்பக்கம் வந்தோம்.  பார்வை நேரங்கள் தகவல்  எல்லாம்  சௌகரியமா இருக்கு.

ஆண்களுக்கும் பெண்களுக்கும்  மேலே போட்டுக்க  ஒரு  உடை தர்றாங்க.  தர்றது என்ன......   அணிவிச்சே  விட்டுடறாங்க. என் துப்பட்டாவை  தலையில் அழகாச்சுத்தி விட்டதும்  கண்ணாடியைத் தேடுச்சு மனம்.  நெற்றியில்  பளிச் ன்னு  கந்தசாமி கோவில் விபூதியுடன்  கோபால்!


படிகளேறி மாடிக்குப்போனோம்.  ஹைய்யோ!!!!    கண்ணில் ஒத்திக்கிறாப்போல்  பளிச்!  ஒரு தூசி துரும்பு?  ஊஹூம்....  பேசாம அங்கப்ரதக்ஷணம் செய்யலாம்.  பெரிய ஸ்விம்மிங் பூல் போல செயற்கை தடாகங்கள். பளிச்சிடும் பளிங்குத்தரைகள்.  சிம்பிளா நிற்கும் துண்கள் இப்படி எதைச் சொல்ல எதை விட?

மக்களுக்கு விளக்கிச் சொல்ல அங்கங்கே  கைடுகள். எல்லோருமே இங்கே தன்னார்வலர்களாம்.  இறைவனுக்கு சேவை செஞ்சால் புண்ணியம்.  நமக்கு உதவியவர்  ஸுரிலா. நியூஸிக்கு வந்துருக்காராம்.  ரொம்ப ஸ்நேகிதமான பேச்சும் பார்வையும்.  கிறைஸ்ட்சர்ச்சுக்கு வரலையாம். வரும்போது தகவல் சொல்லுங்கன்னு  விலாசமும் ஃபோன் நம்பரும் கொடுக்குமளவுக்கு  'கூட்டாளி'யாயிட்டொம்:-)


முன்னே சொன்ன   வட்டக்குடைக் கீழே  பெரிய வட்டமான கூடம். இதுதான்  மெயின் ப்ரேயர் ஹால். கருவறைன்னு வச்சுக்கலாம்.  இதுக்குள்ளே போக இஸ்லாமியர்களுக்கு மட்டுமே அனுமதி. ஆனால் சங்கிலித் தடுப்பில் நின்னு பார்க்க தடை ஒன்னுமில்லை.


ஷாண்டிலியர்களும்,  வண்ணக் கண்ணாடிகளும் ,அழகான  கார்பெட்டுமா  கண்ணைப்பறிக்குது ! விதானத்தைத் தாங்கிப்பிடிக்கும்  பிரமாண்டமான வட்டத்தூண்கள். அதில் ஆள் உசரத்துக்கு  டிஸைன் உள்ள வேலைப்பாடுன்னு அசல் தர்பார் !

இவ்ளோ பரந்த வெளி ஹாலில் சூடு ஒரு பிரச்சனையே இல்லை. காத்து அப்படியே அள்ளிக்கிட்டுப்போகுது. ஆனாலும்  நெடுக  ஃபேன்கள்  நிக்குது.

எனக்கு அதிகம் வியப்பைத் தந்ததுன்னா... அது,  அந்த சுத்தம்தான். உடனே மனசுக்குள் ஒரு குறுகுறு.....  ஏன் நம்ம ஹிந்துக்கோவில்களில் இப்படி ஒரு சுத்தத்தைப் பேணுவதில்லை?  ஒருவேளை கோவிலுக்குள் ஆயிரத்தெட்டு சந்நிதிகளை வச்சுக்கிட்டு அததுக்குத் தனித்தனியா எண்ணெய் விளக்கு, பூமாலைகள். விபூதி, குங்குமம் தீர்த்தமுன்னு  இருப்பதாலா? நாமும்  கையில் கிடைச்ச  விபூதி பிரசாதங்களை நெற்றியில் இட்ட மீதத்தை   தூண்களில் கொட்டி வச்சுட்டு வர்றதாலா?  அங்கங்கே கிண்ணங்களை வச்சு இருந்தாலும்  அங்கே கொண்டுபோய்ப் போட சோம்பும் மனசுக்கு  ஆதரவா?  இதுமட்டுமில்லாம கோவில் ப்ரசாதங்களை அதுவும்  ஆயிரம் தடா நெய்யொழுகும்  அக்காரவடிசலைத் தின்ன கையோடு தூணில் துடைச்சுகலைன்னா , எங்கே கோவிலுக்கு வந்த புண்ணியம் கிடைக்காமப் போயிடுமோ என்ற பயமா?

மொத்தம் பதிமூணு ஏக்கர் பரப்பில் கட்டி இருக்காங்க  இந்த மசூதியை.  இந்த இடத்தின் ஒரு பகுதி  முதலில் ஒரு  சர்ச்சுக்குச் சொந்தமானதாம். அதையும்   வாங்கிதான் கட்ட ஆரம்பிச்சதே!  மாடியில் கருவறையைச் சுற்றியும்  அப்படியே நாலாபக்கமும் விரிந்து பரந்து போகும்   பகுதிகள் அனைத்துமே பக்தர்கள் வழிபாட்டுக்குப் பொருத்தமான முறையிலேயே அமைக்கப்பட்டிருக்கு.  விதானத்தைத் தூக்கிப்பிடிக்கும் தூண்களின் அமைப்புகள் அபாரம்.

ஒரு விசேஷம் என்றால்....பதினைஞ்சாயிரம் நபர்கள்  இருந்து வழி பாடு நடத்தலாமாம்.  மாடியிலும் கீழேயுமாய் இடம் ஹோ ன்னு இருக்கு!   போனவாரம்  ரம்ஜான் பண்டிகைக்கு மசூதி நிறைஞ்சு வழிஞ்சுருக்கும், இல்லே???

மசூதியைக் கட்ட ஆரம்பிச்சு முடிச்சது 1965 வது  ஆண்டு.  அப்போ பிரதமராக இருந்த  (இவர்தான்  முதல் பிரதமரும் கூட!)  டுன்கு அப்துல் ரெஹ்மான் அவர்களின் பெயரை மசூதிக்குச் சூட்டவே எல்லோரும் விரும்பி இருக்காங்க. மலேயாவின் சுதந்திரம்  1957 இல் கிடைச்சது. அதுக்காக முன்னின்று பாடுபட்டவர் இவர்.  ஆனால்......  தன் பெயரை வச்சுக்க அவர் அனுமதி கொடுக்கலை.  மக்கள் ஒற்றுமையா அமைதியான முறையில்  சுதந்திரத்தைப் பெற உதவி செஞ்சதை நினைவுகூர்ந்து,  இது  தேசிய மசூதியாக(வே)   இருக்கணும் என்றார்.  (அச்சச்சோ..... எப்படிப்பட்ட சான்ஸ்! இப்படி வேணாமுன்னலாமோ? என்ன அரசியல்வாதியோ போங்க!!!!  ஒருமுறை தமிழ்நாட்டை எட்டிப் பார்த்திருக்கக்கூடாது?    அப்படிப் பார்த்திருந்தாலும் என்ன பயன்? அது வருசம்  1965 என்பதை நாம் நல்லா நினைவில் வச்சுக்கணும்)


வெளியே இந்த அழகான  கட்டிடத்தைச் சுற்றிவர செயற்கை நீர் ஊற்றுகளும்   அலங்காரமான   நடைபாதைகளுடன் தோட்டங்களும்  செடி கொடிகளுமாக  ஒரே அட்டகாசம்தான் போங்க.  ஒரு முறை நேரில் பார்த்துத்தான் ஆகணும்  என்ற வகை! எவ்வளவு நேரம் வேணுமென்றாலும்  நின்னு பார்த்து ரசிக்கலாம்தான்.  அதான் பகல் 12 வரை  அனுமதி உண்டே!

இங்கே ஒரு புண்ணியவான் எடுத்த வீடியோவைப் பாருங்க. அவருக்கு எம் நன்றிகள்.  (பயணங்களில்  நான் அவ்வளவாக வீடியோ க்ளிப்பிங்க்ஸ் எடுப்பதில்லை. என்னதான் ரெண்டு பேட்டரிகள் கைவசமிருந்தாலுமே  ரொம்பத்தேவையான இடத்தில்  பேட்டரி காலி ஆகி  என்னைத் தவிக்க விட்டுருமோ என்ற பயம்தான். அப்படியும் நடந்துருக்கு என்பதால், நான் ஒரு  சூடு பட்ட  ம்யாவ்!)


மலேசியாவின் தேசிய மதம் இஸ்லாம் என்றாலும் கூட அவர்கள் மற்ற மதத்தினரை எந்த ஒரு கட்டுப்பாட்டுக்குள்ளும்  வைக்கவில்லை.  அவரவர்  மதத்தைத் தொடர்ந்து கொள்ளும் சுதந்திரத்திலும்  தலையிடவில்லை.  இந்த மசூதியை வந்து பார்த்த  பல்வேறு இஸ்லாமிய நாட்டவர்கள்  மசூதியின் கூரை   பாரம்பரியமாக  இல்லை என்று  சொன்னதையும்  மனதில் கொள்ளவில்லை.   மாடர்ன் மலேசியா என்ற பெயர்  உண்மையில்  வெகு பொருத்தமே!

பொதுப்பணித்துறை கட்டிட நிபுணர்கள் மூவர் சேர்ந்து செய்து கொடுத்த ஐடியாவாம். திட்டத்தை முழுமையா நிறைவேற்ற  பிரிட்டிஷ்  கட்டிடக்கலை வல்லுனர்கள்  சிலர் உதவி இருக்காங்க.

ஆமாம்..... இவ்வளவு  அருமையான  கோவிலா என்று வாய் பிளந்த நிலையில்  இஸ்லாம் மதம் அப்படி என்னதான் போதிக்கிறதுன்னு  அங்கே விசாரிச்சதில்  அஞ்சு  அடிப்படையான  கொள்கைகளைத்தான் சொன்னாங்க. அந்த அஞ்சு தூண்கள்:


கடவுள் நம்பிக்கை

ப்ரார்த்தனைகள்/வழிபாடு

தானதருமம்

உண்ணா நோன்பு

புண்ணியத் தலங்களுக்கு  யாத்திரை



அட ராமா !   இது எல்லாமும்  எல்லா மதத்திலும் குறிப்பாக (எனக்குத் தெரியுமுன்னு நான் நினைச்சுக்கிட்டு இருக்கும்  ஹிந்து மதத்திலும் ) இருக்குதானே?  பின்னே எதுக்கு இப்படி அடிச்சுக்கறோமுன்னு  மனசு நொந்ததும் உண்மையே:(




வெளியே வந்து உடுப்பை அவிழ்த்துக் கொடுக்கும்போது  'எப்படி இருந்தது' என்று கேட்ட  வாலண்டியர் தோழியிடம்,  ' உங்க மசூதி சொர்கம் போல இருக்கு.  இந்த உடுப்பும் கருப்புலே இருந்திருந்தால்  எனக்கு இன்னும்கூடுதல் மகிழ்ச்சி கிடைச்சிருக்கும். என் நெடுநாள் ஆசை புர்க்கா அணிஞ்சு பார்க்கணும் என்பது' என்றதுடன், பார்வையாளர் பதிவேட்டில்,  மசூதியைப்பற்றிய என் கருத்தை  நியூஸி நாட்டின் சார்பாக பதிஞ்சுட்டுதான் வந்தேன்:-)

 சுற்றுலா போகும்போது  நாம் நமது நாட்டின் பிரதிநிதிகளாவே  அடுத்த நாட்டிற்குள்  நுழைகிறோம் என்பதை நினைவில் வச்சுக்கணும். நாம் செய்யும் சிறு தவறுகள் கூட  நமது நாட்டின் பெயருக்கு இழுக்கு,  இல்லையோ?

அடுத்த இடத்துக்குப்போக  டெக்ஸி  கிடைக்குதான்னு பார்க்கணும்.  வாங்க.

தொடரும்.......:-)





36 comments:

said...

மாடர்ன் மலேசியா மசூதியை அருமையாக காட்சிப்படுத்தியதற்கு நன்றிகள்..

//கண்ணில் ஒத்திக்கிறாப்போல் பளிச்! ஒரு தூசி துரும்பு? ஊஹூம்.... பேசாம அங்கப்ரதக்ஷணம் செய்யலாம்.//

அங்கப்பிரதட்சணம் செய்ய ஈரம் , சொத சொத சேறு இல்லையே..!

said...

ஆயிரமாவது பதிவுக்கு
வாழ்த்துரைத்து சிறப்பித்தமைக்கு
மனம் நிறைந்த இனிய
அன்பு நன்றிகள் ..!

நான் பதிவுலகம் வரும் முன் தங்களின் அத்தனை பதிவுகளையும் ஒன்றுவிடாமல் படித்திருக்கிறேன் ..

இப்போதும் தவறவிடுவதில்லை ..!

தங்களின் வாழ்த்துகள் நிறைவளித்தன.. நன்றிகள்..

said...

http://jaghamani.blogspot.com/2013/08/blog-post_14.html

சௌபாக்கியம் அருளும்
கோவிந்த ரூபிணி"

பாருங்கள்..!!

said...

இத்தனை சுத்தம்.எப்படித்தான் சுத்தம் செய்கிறார்களோ.நியூசியிலிருந்து போன இரண்டு இந்துப் பறவைகளாக உங்களை நான் பார்க்கவில்லை. மத நல்லிணக்கத்துக்கு உதாரணமாகத் தான் பார்த்தேன்.அந்த அல்லா மாலிக் நன்மைகளையும் உங்களுக்கு அருளட்டும். எல்லாவித

said...

ஹைய்யோ.. எதைச்சொல்ல எதைவிட. அத்தனையும் அருமை.

said...

நம் இந்து கோவில்களை மட்டும் சுத்தமாக ஏன் வைக்க முடிவதில்லை? இது ஒவ்வொரு முறை கோவிலுக்குப் போகும்போதும் மனதில் தோன்றும் ஆதங்கம். கோவில்களே இப்படியென்றால் மற்ற இடங்களைப் பற்றி சொல்லவே வேண்டாம்.

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

உங்கள் 'ஆயிரத்துக்கு' இங்கேயும் வாழ்த்து சொல்லிக்கறேன்.

ஈரமே வேணாமேப்பா. ஜில்லுன்னு பளிங்குத்தரையில் உருள ஆரம்பித்தால் அந்த மழமழப்புக்குக் கடைசில் தானே போய் நிக்காதா என்ன நம்ம உடம்பு!!!!

said...

வாங்க வல்லி.

ஏம்ப்பா.... அதென்ன இந்துப்பறவை? பறவைகளுக்கு ஜாதி மதமுண்டோ?

இல்லைன்னா நாங்க ரெண்டு பேரும் கருட முகமா இருக்கோமோ:-)))))

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

சிரமதானம் செய்ய எவ்ளோ பேர் இருக்கோம்.

கோவில்கள் பயன்படுத்திக்கலாமே!

said...

வாங்க அமைதிச்சாரல்.

வளைச்சு வளைச்சு எடுத்த 72 படங்களில் எதைப்போட எதை விடன்னே எனக்கும் தெரியலைப்பா!

கண்ணைக் குத்தும் சுத்தம்!!!!

said...

துளசி பீவீ அருமை!! உடை கச்சிதம் . நம் கோவில்கள் சில இப்போது ஆங்காங்கே கோவிலைசுத்தமா வைத்திருக்குபடி போர்டு வெச்சு கேக்கறாங்க. ஆனா அதெல்லாம் நாமா யோசிச்சு செய்யணும் அப்போ தான் சுத்தபத்தம் எல்லாம் :(

said...

ஹை..துளசிம்மா பர்தாவில் சூப்பர்..படங்கள் பலேபலே..

said...

அப்பா.... எத்தனை சுத்தம்.... இங்கே குப்பையாக்க மனசு வருமா.....

நம் ஊரில் கோவில் மட்டுமல்ல, எல்லா இடங்களையுமே அசிங்கமாக்க மட்டுமே நமக்கு சுதந்திரம் கிடைத்தது போல நடந்துகொள்கிறோம்.....

மொத்தமா எல்லோரும் மாறணும்.....

said...

சுற்றுலா போகும்போது நாம் நமது நாட்டின் பிரதிநிதிகளாவே அடுத்த நாட்டிற்குள் நுழைகிறோம் என்பதை நினைவில் வச்சுக்கணும். நாம் செய்யும் சிறு தவறுகள் கூட நமது நாட்டின் பெயருக்கு இழுக்கு, இல்லையோ?//

உண்மை,நீங்கள் சொல்வது. எல்லோரும் உணர்ந்து நடந்து கொண்டால் நன்மைதான்.
படங்கள் எல்லாம் அருமை.

said...

வாங்க சசி கலா.

நான் சின்னக் குழந்தையா இருந்தப்ப(!!) பக்கத்து வீட்டு முஸ்லீம் அக்கா என்னை ஜமீலான்னு கூப்பிடுவாங்களாம். குழந்தைகள் இல்லாத அந்த வீட்டுக்கு நாந்தான் செல்லமாம். பெரியக்கா சொல்லிக்கேட்டது.

சுத்தமா வச்சுக்கணும் என்ற எண்ணம் ஏன் வரலை என்பதுதான் என் ஆதங்கமும்:(

said...

வாங்க ஸாதிகா.

மசூதிக்குள் காலடி வச்சதும் உங்களை நினைச்சேன்ப்பா. உங்க மெக்கா;மதீனா யாத்திரை படிச்சதுமுதல் அதுவும் அந்தஊரில் இருக்கும் சுழன்று மறையும் குடைகள் எல்லாம் பார்த்ததும், முஸ்லீம் அல்லாதோரை ஊருக்குள் போய்ப்பார்க்கவும் விடமாட்டாங்க என்றதும் மனசின் மூலையில் கொஞ்சம் வலி.

இங்கே 'நான்-முஸ்லீமுக்கு' விஸிட்டிங் டைம் பார்த்ததும் சட்னு உங்க ஞாபகம் வந்துருச்சு.

கருவறை முன் கண் மூடி, கை கூப்பி கடவுளைத் தொழுதுட்டு அப்படியே தெரிஞ்சும் தெரியாமலும் யாருக்காவது துன்பம் தந்திருந்தால் அவர்களிடமும் மான்சீகமாக மன்னிப்புக் கேட்டுக்கிட்டேன்.

மதங்கள் வேறானால் என்ன? மனிதம் ஒன்றுதான் இல்லையோ?

said...

ஸாதிகா, இன்னொன்னு பிடிச்சது இங்கே என்னன்னா.. பெண்களுக்கு மட்டுமில்லாம ஆண்களுக்கும் விசேஷ உடுப்பு போட்டுவிட்டதுதான்!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

உண்மை. உண்மை. அந்த மாற்றம் எப்போ என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி:(

said...

வாங்க கோமதி அரசு.

பாய்ண்ட்டைப் பிடிச்சதுக்கும் ரசனைக்கும் நன்றீஸ்.

said...

நீங்களும் - கோபால் சாரும்
Purple Purdah வில் செம அழகு:)

படைச்சோன் படைச்சோன் எங்கள படைச்சோன்
அல்லா, எங்கள் அல்லா, அல்லாஹூ அல்லா!

இப்படித் தான் அம்மா-அப்பாவையும் கேலி செய்தேன்,
ரெண்டு பேரும் looked so different in this costume at the Masjid!

//அச்சச்சோ..... சாமி சமாச்சாரத்துக்கு உவமானம் சரி இல்லையே.....//

அல்ல! அல்ல!
நீங்க முன்பு சொன்ன உவமையே சரி!
அல்லா! அல்லா!
அவருக்கும் அதுவே பிடிக்கும்!

குட்டைப் பாவாடையுடன் தட்டாமாலை சுற்றும் சிறுமியின் உடை அலை அலையாய் வட்டம் போடுவதைப் போல்!

said...

//ஆனால் நின்னு ரசிக்க தடை ஏது? ரசிச்சுப் பாராட்டி நாலு சொற்கள் சொன்னதும் ஓவியருக்கு முகத்தில் சிரிப்பும் நிறைவும்//

சில நேரங்களில், ஓவியத்தை விட, பாராட்டும் போது, அவங்க முக ஓவியம் இன்னும் எழிலா இருக்கு டீச்சர்!

சில Coffee Shopகளில், காபி நல்லா இருக்கு -ன்னு சொல்லிட்டுத் தான் வருவேன்:) Filicori Italian Coffee!
நண்பர்கள், அந்தப் பொண்ணு கிட்ட வழியத் தானே சொல்ற? -ன்னு ஓட்டினாலும், விடாது சொல்வேன்:)

//Visiting Hours For Non Muslim//

இந்துக்கள் மட்டுமே அனுமதி!
தமிழி(லும்) அர்ச்சனை செய்யப்படும்!
- போன்ற பலகைகளுக்கு இது எவ்வளவோ மேல்!

தொழுகை தவிர்த்த இதர நேரங்களில், இசுலாமியர் அல்லாதார், மதிப்புடன் வரலாம் என்பதை மதிப்புடன் சொல்லும் பலகை!

//Fountains//

அது எந்தக் கோயிலா இருந்தாலும், தண்ணி "குளு குளு"-ன்னு தங்கியிருக்கும் ஆலயமே அழகு தான்!

said...

//ஏன் நம்ம ஹிந்துக் கோவில்களில் இப்படி ஒரு சுத்தத்தைப் பேணுவதில்லை?//

நல்ல கேள்வி டீச்சர்!

ஒரு வயதான வாடும் பிச்சைக் காரரிடம் சென்று:
"ஏன் சாப்பிடவில்லை"? -ன்னு கேளுங்க!

என்ன சொல்லுவாரு?
"சாப்பாடு கிடைக்க வழி இல்லை; அதான் சாப்பிடவில்லை"!

அதே தான், (நம்) இந்துக் கோயில்களுக்கும்!
சுத்தம் பேண வேண்டும் -ன்னு நினைப்பதில்லை! அதான் சுத்தம் பேணுவதில்லை:( Simple!

காசுல மட்டுமே கவனம்!

* 100 ரூபா குடுத்தா, பெருமாள் முன்னாடி நாம உட்காரலாம்!
* 1000 ரூபா குடுத்தா, நிக்குற பெருமாளே நம்ம முன்னாடி உட்காருவாரு!

வடபழனிக் கோவிலை எடுத்துக்குங்க! ஓரளவு சுத்தம் தான்! ஆனா..
* தரும தரிசனம் = 100 மீட்டர் தள்ளி முருகன்
* 50 Rs Ticket = 10 மீட்டர் தள்ளி முருகன்
* 200 Ts Ticket = 1 மீட்டர் கிட்டக்க முருகன்! கட்டியே புடிச்சிக்கலாம்!

இப்படி டைப் டைப்பாத் திட்டமெல்லாம் நல்லா யோசிக்கறோம்!
ஆனால், "சுத்தம்" மட்டும் யோசிக்க நேரமே இல்ல!

* திருநீற்றை ஈரமாக்கி வைச்சா, அவர்களே லேசாத் தொட்டு இட்டுக்கலாம்; ஈரமான நீறு தான் முறையும் கூட

* மலர்கள் = எம்பெருமானுக்கு மட்டுமே உரியன!
எதுக்குச் சிந்தி, வழியெல்லாம் மிதிபடணும்?
பாவம், அதுங்க ஒரு நாள் ஆயுசை, அவன் கிட்டயே, அழகாக் கழிக்கட்டுமே!

(திருமலையில் இன்ணிக்கும் எவ்வளவு பெரிய VVIP க்கும் மாலை கிடையாது; வெறும் வஸ்திரம்/ லட்டு மட்டுமே! இராமானுசர் செய்த சட்டம் = திருமலைக் கோயில் ஒழுகு:
திருமலை மலர்கள் எம்பெருமானுக்கு மட்டுமே உரியவை
அவற்றின் அழகு மட்டுமே, பக்தர்கள் கண்ணுக்கு உரியவை)

பிரசாதம் உட்கார்ந்து உண்ண, சிறு மேடைகள்!
அதன் மேல் எளிதாக மாற்ற, காகித விரிப்புக்கள்!

எண்ணெய் விளக்குகளின் கீழே, வெட்டிய வட்டமான வாழை மட்டைகள்!

சில இடங்களைக் கூட்டிக் கொண்டே இருக்க, Automatic Vaccum Robot Spinners!
சத்தமில்லாம, தரையில், தாங்களே, சுத்திச் சுத்தி வரும்!

இன்னும் விதம் விதமா யோசிக்கலாம்!
ஆனா நாம தான் 200 Rs டிக்கெட் பத்தியே யோசிக்கறோமே!

தர்ம தரிசனம் தவிர்த்த..
எந்தத் தரிசனமும்...
அதர்ம தரிசனமே....

said...

//1. கடவுள் நம்பிக்கை
2. ப்ரார்த்தனைகள்/வழிபாடு
3. தானதருமம்
4. உண்ணா நோன்பு
5. புண்ணியத் தலங்களுக்கு யாத்திரை//

ஹா ஹா ஹா
இது தான் இஸ்லாம் -ன்னு சொன்னா..

இல்லையில்லை..
* இது நாங்க!
* நாங்க தான் இதை முதலில் சொன்னோம்!
-ன்னு இன்னொருத்தர் ஆரம்பிப்பாங்க! அப்பறம் கேட்கணுமா?:))

பெருமை பீற்றிக் கொள்ளல், சுய கெளரவங்கள், "தன் பிடித்தங்கள்" தான் இவற்றின் பின்னால் ஒளிஞ்சிக்கிட்டு இருக்கு!
= அவரவர் பிடித்தங்களைச் சுமக்க, அவரவர்க்கு ஒரு இறைவன்:)

For some ppl,
religion is first,
god only next:)

//சுற்றுலா போகும்போது நாம் நமது நாட்டின் பிரதிநிதிகளாவே அடுத்த நாட்டிற்குள் நுழைகிறோம் என்பதை நினைவில் வச்சுக்கணும்.
நாம் செய்யும் சிறு தவறுகள் கூட நமது நாட்டின் பெயருக்கு இழுக்கு, இல்லையோ?//

Very Nice!

said...

வியப்பூட்டும் மசூதி பற்றிய தகவல்களும் விநோதமான அனுபவங்களும்! உங்களுடன் சேர்ந்து நாங்களும் ரசித்தோம். பார்க்கும் இடங்களுக்கெல்லாம் அழைத்துப்போகின்றன படங்கள். பரவசம் தரும் புதிய அனுபவப்பகிர்வுக்கு நன்றி டீச்சர்.

said...

எங்கும் சுத்தம். பார்க்கவே அழகு.

said...

துளசிம்மா பின்னூட்டம் நெகிழ வைத்து விட்டது.

said...

அடுச்சுக்குறோம்ங்றது தப்பு

அடுச்சுக்க வைக்கிறாங்க என்பதே சரி.

எங்கேயாவது தமிழ் பெயர் பலகை இருக்கின்றதா?

said...

இந்தப் பதிவு ஒரு புதிய அனுபவத்தை கொடுத்தது.
நீங்கள் சொல்லும் சுத்தம் கேரளா கோவில்களில் பார்க்கலாம். நம்மூர் போல நிறைய சந்நிதிகள் கிடையாது. பிரசாதம் சந்தனம் மட்டுமே. அதுவும் வாழையிலையில் வைத்து தூக்கிப் போடுவார்கள். பணம் கேட்கவே மாட்டார்கள். அதேபோல ஒவ்வொருவருக்காக அர்ச்சனை செய்யவும் முடியாது. அவர்கள் கற்பூர ஆரத்தி செய்யும்போது சேவித்துக் கொள்ள வேண்டியது. அவ்வளவுதான்.
குருவாயூரில் கூட்டம் அதிகம் என்றாலும் கோவில் சுத்தமாகவே இருக்கிறது.

said...

இது கிட்டத்தட்ட மஸ்கட்டில் இருக்கும் பெரிய மசூதி போலவே இருக்கு.

said...

வாங்க கே ஆர் எஸ்.

ஹைய்யோ!!!!! உண்மையோ உண்மை.

திருமலையில் விவிஐபிக்கு மாலை கிடையாது என்பதெல்லாம் சரி. நாம்கூடத் தலையில் சூடிய பூவை சந்நிதிக்குப் போகு முன் எடுத்துடணும்தானே?

என்னுடைய வருத்தம் எல்லாம் அரைநொடி சாமியைப்பார்க்க விடாமல் கை பிடித்து இழுத்துக் கடாசும் அரக்கர்களைப் பற்றியே. நீங்க சொல்லும் விவிஐபிக்களுக்கு இந்த 'கரசேவை' உண்டா?

நேரப் பற்றாக்குறை காரணத்தினால் வெளிநாட்டு பாஸ்போர்ட் ஆசாமிக்களுக்கான கட்டணம் கட்டித்தான் சாமியை தரிசிக்கப்போனோம். அவன் பார்த்திருப்பான் என்றுதான் நினைக்கிறேன்.

இலவச தரிசனம்தான் வேணுமுன்னு முரண்டு பிடிச்சு மூணுநாள் வரிசையில் நிக்க நம்மாலே ஆகாது.

பேசாமப் பெருமாள் கோபுரத்தின் மேல் நின்னு நமக்கெல்லாம் இலவச தரிசனம் கொடுத்து,தேவஸ்தான கொள்ளையர்கள் தலையில் ஒன்னு போடப்படாதோ?

அடையார் அநந்த பத்மநாபனை (மட்டும்) இனி சேவிச்சால் போதுமுன்னு மனசு பக்குவப்பட்டுப்போச்சு. அவர் ஹாயாக்கிடக்க நான் ஜாலியா எவ்ளோ நேரம் வேணுமுன்னாலும் முன்னால் நின்னு ஸ்வயகாரியம் எல்லாம் பேசி வருவேனாக்கும், கேட்டோ:-)

said...

வாங்க கீத மஞ்சரி.

அவுங்களுக்கும் நமக்கும் அடிப்படை ஒன்னு என்றதில் எனக்குப் பரம சந்தோஷம்.

கூட வருவதற்கு நன்றிகள்.

said...

வாங்க மாதேவி.

கடவுள் = அன்பு என்பது போல, கடவுள்= சுத்தம் என்பதும் உண்மைதானே?

said...

ஸாதிகா,

ஒருமுறையாவது மசூதியை தரிசிக்கணும் என்ற ஆவலைத் தூண்டிவிட்டதே உங்கள் ஹஜ் பதிவுகள்தானே?

உங்களுக்குத்தான் நன்றி சொல்லணும்ப்பா.

said...

வாங்க கோதிஜி.

அப்டீங்கறீங்க???

தமிழர்கள் அதிகமுள்ள பகுதிகளிலும் குறிப்பாக லிட்டில் இந்தியா வில் நகைக்கடை, ரெஸ்ட்டாரன்ட்களிலும் தமிழிலும் பெயர்ப்பலகை இருக்கு.

வரும் பதிவுகளில் உங்களுக்காக கொஞ்சம் படங்களை இணைக்கிறேன்.

said...

வாங்க ரஞ்ஜனி.

கேரளாக் கோவில்கள் போலத்தான் ஸ்வாமி நாராயணன் கோவிலிலும், ஹரே க்ருஷ்ணா கோவிலும் எங்கூரில் இயங்குது. ஆர்த்தி சமயத்தில் அங்கே இல்லைன்னா அப்புறம் நாம் கையெடுத்துக் கும்பிட்டு வரவேண்டியதுதான்.

தனித்தனி அர்ச்சனைச் சீட்டுகள் சமாச்சாரம் வேணாம்தானே? பட்டர், விஷ்ணு சகஸ்ரநாமத்தில் ஒரு' கால் ஸ்லோகம்' அதிலும் முதல் வார்த்தையைச் சத்தமாகச் சொல்லி ஆரம்பிச்சு அடுத்த நாலு வார்த்தைகளை முணுமுணுப்பாகச் சொல்லி முடிச்சுக்குவார். தேவைதானா?

அதுக்கு நாமே ஒரு பத்து ஸ்லோகங்களை மனசுக்குள்ளே சொல்லிக் கும்பிடலாமே!

said...

வாங்க குமார்.

தில்லிப்பக்கம் சில மசூதிகளைப் பார்த்ததோடு சரி.
மஸ்கட் பக்கமெல்லாம் வந்ததே இல்லை.

சின்னவளா இருந்த சமயம், நம்ம வீட்டுக் கொல்லை மதில் சுவரில் ஏறிக் குதிச்சு பக்கத்துப் பள்ளிவாசலுக்குப் போயிட்டு வருவேன்.

பலநாட்களில் அங்கு யாருமே இருக்கமாட்டாங்க. உள்ளேயெல்லாம் போய்ப் பார்த்து சாமி இல்லையேன்னு அதிசயிச்சுத் திரும்பியது நினைவுக்கு வருது.

மேலும் அங்கே பள்ளிவாசலைச் சுற்றிதான் சவ அடக்கம் நடக்குமா..... சம்பவம் நடக்கும்போது மதில் சுவரில் ஏறி உக்கார்ந்து பார்ப்பேன். எப்படியாவது மரணித்தவர் முகம் தெரியாதான்னு .... ஆனால் பாயால் சுருட்டப்பட்ட உடல்தான் ...

அப்புறம் அங்கே எல்லா சமாதிகளின் மேலும் பூசணிக்கொடி படர்ந்து கிடக்கும்.மார்கழி மாசக் கோலத்துக்கு நம்ம வீட்டு வாசலுக்குப் பூ அங்கிருந்துதான் கொண்டு வருவேன்.

நல்லா ஹை ஜம்ப் பண்ணுவேனாக்கும்:-)