Wednesday, August 28, 2013

வரம் தருவாய் முருகா .....(மலேசியப் பயணம் 11 )

வேரைப்பிடிச்சுத் தொங்கிக்கிட்டே எவ்ளோ நாள்தான் மலையேற முடியும்?  1920 ஆம் ஆண்டு,அங்கங்கே கொஞ்சம் வெட்டிச் சரியாக்கி மரப்படிகள் வச்சுக் கட்டுனாங்க. தைப்பூசம் களை கட்ட ஆரம்பிச்சது. இப்படியே  ஒரு பத்தொன்பது வருசம் ஓடுச்சு.  முருகனின் புகழ் பரவ ஆரம்பிச்சு உச்சத்துக்குப்போகும் நிலை பார்த்து, 1939 ஆம் ஆண்டு ராமசந்திர நாயுடு என்பவர், கெனிசன் ப்ரதர்ஸ் நிறுவனத்தோடு ஒரு ஒப்பந்தம் போட்டுக்கிட்டு ரெட்டைப் படிகள் வரிசை ஏற்பாடு செஞ்சார்.  தோட்டத்தொழிலாளிகள் அனைவரும் தோள்கொடுத்தாங்க. அவுங்களின் ஒரு நாள் சம்பளம் முருகனுக்குப் போச்சு. அந்தக் காலக்கட்டத்தில் ஒரு நாளைக்கு அரை ரிங்கிட்தான்  தினக்கூலி(யாம்)

கட்டி முடிச்சப்ப அது 272 படிகளா அமைஞ்சது.  அதிக அளவில் தைப்பூசத்துக்குக் காவடிகள் எடுத்துவர ஆரம்பிச்சாங்க. கட்டுப்படுத்த முடியாமல் போனபோது இன்னொரு வரிசைப்படிகளையும் காவடிக்குன்னே   1975 ஆம் ஆண்டு  கட்டிவிடும்படி ஆச்சு. இப்போ அழகான மூன்று வரிசைகள்.

பத்து  ஆற்றின் கரையில் இருந்து அலங்கரிச்ச காவடிகள் புறப்பட்டு வரும். தைப்பூசம் வரப்போகுதுன்னவுடனே  ஒரு செண்ட் காசுகளை சேகரிக்கத் தொடங்குவாங்களாம். திருவிழா சமயம்  படிகளில் வரிசையா  இடம்பிடிச்சு உக்காந்துருக்கும் பிச்சைக்காரர்களுக்கு  ஒவ்வொரு செண்ட் காசாப் போட்டுக்கிட்டுப் போறது சின்னப்பிள்ளைகளுக்கு பயங்கர அட்ராக்‌ஷனா இருந்துருக்கு.  நல்லவேளை இந்தக்காலத்தில்  பிச்சைக்காரர்கள் யாரும்  இப்படி  படிகளில்  உட்காருவதில்லை. ஓரளவு  நல்ல வாழ்க்கை அமைஞ்சுருக்கு போல!

ஆரம்ப காலங்களில் கார்த்திகை தீபம் சமயங்களில்  மாட்டுவண்டி நிறைய பப்பாளிக் காய்களை ஏத்திக்கிட்டு வந்து அதை நெடுகா, நீண்டவாக்கில்  ரெண்டா வகுந்து உள்ளே இருக்கும் விதைகளை நீக்கிட்டு , எண்ணெய்  ஊத்தி அகல்விளக்குகளா  தீபமேத்தி இருக்காங்க. வாவ்......  என்ன ஒரு  கவிதை!!!

திருத்தணியில் நடப்பதுபோல இங்கேயும்  படித்திருவிழா கூட ஆண்டுக்கு ஒரு முறை செய்யறாங்களாமே!!!!

இனம், மதம் இப்படி எந்தப் பாகுபாடும் இல்லாம  எல்லோருமே மலையேறி வரலாம்.  எல்லாமும், எல்லாருக்கும் என்பது எனக்கு ரொம்பவே பிடிச்சுப்போச்சு.  காலணி கூடப் போட்டுக்கிட்டே போகலாம்.  சந்நிதிக்குள் போகுமுன் வெளியே கழட்டினால் போதும். குரங்கன்ஸ் கூட  செருப்பு திருடத் தெரியாத  அப்பாவிகள். மூலவரைப் படம் எடுக்கக்கூட எந்த ஒரு தடையும் இல்லை. கெமெரா சார்ஜ்? மூச்! அப்படி ஒன்னு இருப்பதே இங்கத்து மக்களுக்குத் தெரியாது போல!

தினமும் காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை கோவில் திறந்துருக்கு.  காலையில் கொஞ்சம் சீக்கிரமா மலையேறிட்டால் அவ்வளவாகக் களைப்பு தெரியாது. இடையில் நடை அடைக்கிறாங்களா என்ன? கே ஆர் எஸ் சொல்றாரே! 

தைப்பூசம் விழா சமயத்தில்  ஒரு படிக்கட்டு , காவடிகளுக்குன்னே ஒதுக்கிருவாங்க.  வெறும் காவடியும் பால்குடமுன்னாலும் கூடப் பரவாயில்லை. உடம்பு முழுசும் வேல் குத்திக்கிட்டு கூண்டு போல் இருக்கும் பெரிய காவடியும் தூக்கி மலையேறும் பக்தர்களைப் படத்தில் பார்க்கும்போதே... எனக்கு மனசெல்லாம் சிலிர்த்துப்போகுது.  பக்தின்றதே பெரிய போதையா இருக்கு(ம்) போல!!!!!

போன திருவிழாக் காட்சிகளை இங்கே படங்களாப் புடிச்சுப் போட்டுருக்கார் ஒரு புண்ணியவான். அவருக்கு நன்றி சொல்லிக்கிறேன். விருப்பம் இருந்தால் க்ளிக்கிப் பார்த்துட்டு அவருக்கும் அங்கே ஒரு நன்றி போட்டீங்கன்னா நல்லது

ஆரம்பநாட்களில்  ஒருநாள் விழாவா இருந்த தைப்பூசத் திருவிழா, இப்ப ஏழுநாள் கொண்டாட்டமா ஆகிப்போச்சு. கடைகளும் வேடிக்கை விநோதங்களுமா  எக்கச்சக்கமான  கூட்டம் அம்மும் பெரிய திருவிழா இது. இந்த 2013 தைப்பூசத்துக்கு  16 லட்சம்பேர் கூடி இருந்தாங்களாம்.

தைப்பூசத் திருவிழாவில் அரசாங்கப் பிரதிநியாகக் கலந்துகொள்ள பிரதமரே வருகிறார்.  மதம் என்பது  இங்கே தடையே இல்லை பாருங்களேன்!  இந்த வருசம் பிரதமர் நஜீப் அவர்கள் ஊரில் இல்லை என்பதால் துணைப்பிரதமர்  மொய்தீர்,  விழாவில் கலந்து கொண்டாராம்.

கோலாலம்பூர் மஹா மாரியம்மன் கோவிலில் இருந்து  தைப்பூசத்துக்கு முதல்நாள்  மாலை , முழு அலங்காரத்துடன் தயாரா இருக்கும் வெள்ளிரதத்தில்  முருகன் குடும்பசமேதரா ஏறினதும்  நடு ராத்திரி 12 மணிக்குப் புறப்படும் ரதம், இந்த 13 கிலோமீட்டர் தூரமும் பக்தர்கள் புடை சூழ, மேளதாளங்கள் ஒலிக்க   பத்துமலைக்கு மறுநாள் காலை பத்துமணிக்கு வந்து சேர்ந்துருமாம். வழி நெடுக தண்ணீர் பந்தலும், பக்தர்களுக்கு  பிரசாத விநியோகங்களுமா  ஜேஜேன்னு  இருக்குமாம். நினைக்கும்போதே.... ஒருமுறை சான்ஸ் கிடைக்காதான்ற .... நப்பாசை.

தமிழர்கள் மட்டுமில்லாமல்  மலேய்களும் சீனர்களும் கூட அலகு குத்திக்கிட்டுக் காவடிகளைச் சுமந்து வந்து  முருகனை வழிபடறாங்க! விதவிதமான அலங்காரக் காவடிகளைப் பார்த்து ரசிக்கவே ஒரு கூட்டம் வருதாமே!


காவடிகளுக்கு  மயிற்பீலிகளால் அலங்காரம் செஞ்சு தர அதிகபட்சமா அஞ்சாயிரம் ரிங்கிட்  ஆகுதாம். சிம்பிள் அலங்காரமுள்ள சின்னக் காவடிகள் நூறு ரிங்கிட்டுக்குக்  கிடைச்சுருமுன்னு சொன்னார்  அலங்காரத்தொழிலில் பலகாலமா ஈடுபட்டிருக்கும் அன்பர். முந்தியெல்லாம் மயிற்பீலிகள் மலிவாக் கிடைச்சது. அம்பத்தி ஏழு சென்ட்தான். இப்ப ஒவ்வொன்னும் ஒரு வெள்ளின்னு விலை ஏறிப்போச்சுன்னு காரணம் சொல்றாங்க. மயில்  பீலி கனமே இல்லைன்னாலும் அலங்கரிச்ச காவடிகள் சிலசமயம் நூறு கிலோ எடை வந்துருமாமே!

 அம்மாடியோவ்....  அதையும் சுமந்து 272 படிகள் ஏறணுமுனால்......  அந்த முருகந்தான்  சக்தி கொடுப்பான் போல!

இந்தியாவில் இருந்து மயிற்பீலி இறக்குமதியாகுது. எனக்கு  மயிற்பீலி ரொம்ப ஆசை. எங்கூருக்குள்ளே கொண்டுவர  அனுமதி இல்லை:( அதனால் க்ளிக் க்ளிக் மட்டுமே!
பத்துமலையின் மொத்த கோவில்களையும் பொறுப்பேத்து நடத்துவது ஸ்ரீ மகாமாரியம்மன் தேவஸ்தானம்தான்.  நான் முதல்முறை (2003)கே எல் வந்தப்ப முருகன் மட்டும் குகைக்குள்ளே தனியா நின்னு இருந்தார்.  தனியா நிக்கறவனிடம் என்ன பேச்சுன்னு பேசாமப்போயிட்டேன்:-)  இப்ப என்னன்னா பெரிய குடும்பியா சுற்றம் சூழ!!!

நம்மாட்கள் எல்லோரும்   பக்தர்களை வந்து கண்டுக்கிட்டதும் கையில் உள்ள ஒரு தேங்காய் மூடியைத் தட்டிக்கிட்டுப்போய் ஒரத்தில் உள்ளதை முடிஞ்சவரை பல்லால்  சுரண்டித் தின்னுட்டு,      பல்லுக்கு எட்டாத நிலை வந்ததும் தூக்கிப்போட்டுட்டு வேறொரு பக்தரை வழிமறிப்பதுமா இருப்பதைப் பார்த்துட்டு, நம்ம பையில் இருக்கும் தேங்காய் மூடியை உடைச்சே கொடுக்கச் சொல்லி கோபாலிடம் சொன்னேன்.  தேங்காய்ச்சில்லா  இருந்தால் திங்க சுலபமா இருக்காது?

அதேபோல்  உடைச்சுக் கொடுத்தார்.  பயபுள்ளைக்கு அப்படித் தின்னத் தெரியலை! கையில் எடுத்துப் பார்த்துட்டு, வேணாமுன்னு சொல்லிட்டுப் போகுது.  பழக்க தோஷம்!!!
கீழே போகலாமுன்னு  எந்திருச்சு வந்தோம்.  இந்த மேல் குகையின்  உட்புறச்சுவர் ஓரங்களிலும் தகப்பன்சாமி காட்சி தர்றார். நடராஜரின் பொன்னம்பலம் விமானம் இன்னொரு புறம்.  உத்துப் பார்த்தால் குகையின் மேல்கூரையை ஒட்டி சிலபல வௌவால்கள் தலைகீழ்த் தவம். சுண்ணாம்புப் பாறைகள்  அப்படியே கீழிறங்கி வருது.

நினைவுப்பொருட்கள்  கடையில் முருகர் குவிஞ்சு கிடக்கார்.  200 ரிங்கிட் முதல்  விலை மேலே போகுது. அடிவாரத்தில் பார்த்துக்கலாமுன்னு படி இறங்க ஆரம்பிச்சோம்.  எண்ணி பதினாலே நிமிசத்தில் கீழே வந்தாச்சு.   வழியிலேயே இருட்டுக் குகை ஒன்னு இருக்கு. பழம்தின்னி வௌவால்களும் இன்னும் சிலபல மிருகங்களும் இருக்காம்.  வனத்துறை பாதுகாக்கும் இடம் என்பதால் போகலை.  குறிப்பிட்ட எண்ணிக்கையில்  சிலநாட்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி உண்டாம்.

மேலே முருகனின் குகைகளைத் தவிர இந்த மலையில்  இன்னும் சிறுசும் பெருசுமா பதினெட்டு குகைகள் இருக்குன்னும் அடிவாரத்தில்   ராமாயணக்குகை என்பதில்  ராமாயணக் காட்சிகளையும், வள்ளுவர் கோட்டம் என்பதில் குறள் சொல்லும் சேதிகளைக் காட்சிப்படுத்தி இருக்காங்கன்னும்  இன்னும் கலைக்கூடம் ஒன்னும் இருக்குன்னு  அப்புறமாக் கேள்விப்பட்டேன். (நெவர்  மைண்ட்.நெக்ஸ்ட் டைம் (இதுதான் எங்க கிவி ஆட்டிட்யூட்!)
ஆனாலும் வால் ரொம்பத்தான் நீளம்:-)))தங்க முருகனுக்கு இடப்புறம்  இன்னொரு சந்நிதி  சனீஸ்வரனுக்கு. மூலவராக சனி இருக்க, அவர் முன்னே மண்டபத்தில்  நவகிரகங்கள் இருக்காங்க.  சுவரில் நவகிரக ஸ்தோத்திரங்கள் எழுதி வச்சுருக்காங்க.

அங்கேயும் ஒரு கும்பிடு போட்டுட்டு அடுத்துள்ள சின்ன வணிக வளாகத்துக்குள் நுழைஞ்சோம். புத்தகக்கடை ஒன்னு கண்ணில்பட்டது.  வழக்கமான 'ஆன்மீக'புத்தகங்களுக்கிடையில் பத்துமலை என்றதைப் பார்த்து  சரித்திரம் தெரிஞ்சுக்கலாமுன்னு வாங்கினோம்.  ஜெயபக்தி ட்ரஸ்ட் போட்டுருக்கும் souvenir வகை. முதல் பத்துபக்கங்களில்  டடோ (Dato)ஸ்ரீ சாமிவேலு அவர்கள்,(மலேசிய இந்தியக் காங்ரெஸின் தலைவர்)   ஸ்ரீ மஹாமாரியம்மன் தேவஸ்தானத் தலைவர் நடராஜா  அவர்கள், பதிப்பாளர்  ஜெயபக்தி ட்ரஸ்ட்  ஆகியோரின் வாழ்த்துரை, முன்னுரைகளுடன், முருகன் பெருமைகளும், தலவரலாறுமாக இருக்க மீதி உள்ள எழுபத்தி இரண்டு பக்கங்களும் படங்களே!  அதிலும் ராமாயணக்குகை, கலைக்கூடம், வள்ளுவர் கோட்டம் பற்றியவைகளே அதிகம்.  நேரில் பார்க்கவில்லையே என்ற மனக்குறை  தீர்ந்ததுன்னே சொல்லலாம்.

புத்தகத்தின் தலைப்புதான்..... எனக்குக் கொஞ்சம்.......   பத்துமலை என்று தமிழிலும், Batu Caves என்று ஆங்கிலத்திலும்.  போயிட்டுப்போகுது போங்க.


கடையில் விற்பனையாளரா இருக்கும் இளைஞர் , யாழ்பாணத்துக்காரர். வந்து மூணு மாசம் ஆச்சாம். உறவினர் மூலம் இந்த வேலை கிடைச்சதுன்னார்.

இன்னும் சிலபல நினைவுப்பொருட்கள் கடைகளும்,  ரெடிமேட் உடைகளும்  கைவினைப்பொருட்களும்  விற்கும்  கடைகளும் இருக்கு. கூடவே சில உணவுக்கடைகளும். தாகமா இருக்கேன்னு ஆளுக்கொரு இளநீர்.  அஞ்சு விலை என்றாலும்  ஃப்ரிட்ஜுக்குள் வைத்திருந்ததால்  ஆறு என்றார் கடைக்காரர்.

இப்பெல்லாம் தினமுமே குறைஞ்சது மூவாயிரம் பேர் பது குகைகளுக்கும், முருகன் தரிசனத்துக்கும் வந்து போறாங்களாம். அதுவும் வார இறுதின்னால் இன்னும்  கொஞ்சம் கூடுதலாம். மலேசிய அரசு, இந்த இடத்தை மேம்படுத்தி  அலங்கார விளக்குகளும்  அடிப்படை வசதிகளும் அமைக்க சுற்றுலாத்துறையின் மூலம்  3.6 மில்லியன் ரிங்கிட்டுகள்  செலவு செய்துகொள்ள  பிரதமரே அனுமதி   கொடுத்தாருன்னு  கோவில் நிர்வாகம் அறிக்கையில் சொல்லி இருக்காங்க.  அடிவாரத்துலே இருக்கும் 16 ஏக்கர்  இடமும் அப்பழுக்கின்றி ஜொலிப்பது பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு.

இதுக்குப்பின் இன்னுமொரு 4.6 மில்லியன் ரிங்கெட் அரசு ஒதுக்கித் தந்ததை வாங்கிய தேவஸ்தானம் பத்துமலை அடிவாரத்துலேயே ஒரு பள்ளிக்கூடம் கட்டி விட்டுருக்கு. கல்விதான் கடவுள் என்பது ரொம்பச் சரி. கல்வி கிடைச்சாலே மக்கள்  மேன்மையடைஞ்சுருவாங்க.  எல்லோருக்கும் கல்வி வேண்டும், முருகா.

முருகனை  நம்ம வீட்டுக்குக்கொண்டு போகணும். சில கடைகளில் விசாரிச்சப்போ... சரிவரலை.  என்னவோ தோணலுடன் கண்ணில் பட்ட இன்னொரு கடைக்குள் சட்னு நுழைஞ்சேன். அங்கெல்லெ நமக்காகக் காத்துக்கிட்டு இருக்கான், அப்ப எப்படி வேற கடைகள் சரியாகும்?

நெடுந்தொலைவு பயணப்படும் முருகனை நல்லபடி  பேக் பண்ணிக் கொடுத்தார் கடைக்காரர். என் கேபின் பேக் இனி முருகனுக்கே!

பட்டைபட்டையாத் தொங்கும் மயிற்பீலிகளை அடுக்கிட்டால் நம்ம காவடி ரெடி. எழுத்துக்கலை கைகூடிவர , வரம் தருவாய் முருகா.......

நூற்றி இருபத்தியஞ்சுன்னு  இருந்தவர் நியூஸி வரும் ஆசையில் சட்னு எம்பதுக்கு இறங்கி வந்தார்.  நம்ம  ஜிராவின் ஆசை இப்படி நிறைவேறுச்சு:-)(நம்ம வீட்டுக்குள் வந்ததும் அண்ணன் பக்கத்தில் இடம் புடிச்சார். அவுங்க குடும்பக்கார்னர் அங்கேதான் இருக்கு)

மணி  பனிரெண்டரை ஆச்சே, திரும்பிப் போக என்ன டெக்ஸின்னு பார்த்தால்  ரெண்டும் கலந்த ஒன்ணு நமக்கு.  முப்பத்தியஞ்சுக்கு  செண்ட்ரல், பேரம் சரியாச்சு.

பார்வையில் இருந்து தப்ப முடியாதவனிடம், போயிட்டு வரேண்டான்னு  சொல்லிட்டு  வண்டி ஏறினோம்.

தொடரும்...............:-)

PIN குறிப்பு:  பத்துமலையில் எடுத்த படங்கள் எல்லாவற்றையும் எடிட்செய்யாமல் கூகுள் ப்ளஸ் ஆல்பத்தில் போட்டுருக்கேன். நேரம் இருப்பவர்கள் பார்க்கலாம்,

https://plus.google.com/u/0/photos/106551900495801732302/albums/5914700996316280753

கோவில் வரலாறு , இன்னும் மற்ற சில தகவல்கள் எல்லாம் கோவிலின் வலைப்பக்கத்துலே இருந்தும், நாம் வாங்கின புத்தகத்துலே இருந்தும், இன்னும் சில மலேசியத் தோழியரிடமிருந்தும் தெரிந்து கொண்டதே!  அவர்கள் அனைவருக்கும் துளசிதளத்தின் நன்றி.
15 comments:

said...

படங்கள் அனைத்தும் அருமை !!! . விளக்கங்களும் அதைவிட அருமை . நன்றி

said...

காவடி எடுத்த (புடிச்ச) டீச்சருக்கொரு அரோகரா!:)

காவடியை வலத் தோளில் புடிக்கணும் டீச்சர்:)
ஆடும் போது வேணும்-ன்னா தோள் மாத்தி ஆடலாம்! நீங்க ஆடனீங்க-ன்னு கற்பனை பண்ணிக்குறேன்:)

//என் கேபின் பேக் இனி முருகனுக்கே!//

My Backpack எப்போதும் முருகனுக்கே!:)

விமான நிலையங்களில் தான் கடினம்! Hand Luggage Screen பண்ணுறவர் கிட்ட பக்குவமா எடுத்துச் சொல்லி, அவனைப் பத்திரமாக் கூட்டிப் போவேன், ஒவ்வொரு முறையும்:)
------

மிகவும் களையான முருகனாக் குடுத்து இருக்காரு, கடைக்காரர் ஒங்களுக்கு!

நான் அம்மா-அப்பாவுடன் போன போது..
கண்ணாடிக் குமிழுக்குள் சிரிக்கும் முருகனை, தோழனுக்காக வாங்கினேனா?

மொத்த கடையும் புரட்டிப் போட்டுட்டேன்:))
சில முருகனுக்கு மூக்கு சப்பையா இருக்கு! சில முருகன் சரியாப் பட்டை அடிக்காம இருக்கான்...
அப்படி இப்படி -ன்னு, Iphone-இல் zoom பண்ணிப் பாத்து, அந்த முருகான சிற்பத்தைப் புடிச்சேன்!

யாருக்குச் சார், இப்படிப் பாத்துப் பாத்து வாங்குறீங்க?-ன்னு அவர் கேட்டே புட்டாரு:)
--------

ஒங்க முருகனும் ரொம்ப களையா இருக்கான் டீச்சர், esp இடுப்பு:)
தோள் அகன்று தான் இருக்கு! சின்ன மாலை போடலாமே? அதென்ன பக்கத்துல அண்ணனுக்கு மட்டும் மாலை? என்னவனுக்கு எங்கே? எங்கே? எங்கே? :))

//நூற்றி இருபத்தியஞ்சுன்னு இருந்தவர் நியூஸி வரும் ஆசையில் சட்னு எம்பதுக்கு இறங்கி வந்தார்//

125 -> 80
டீச்சர் -ன்னா விலை குறையுது, மார்க்கு கூடுது:)

//நம்ம ஜிராவின் ஆசை இப்படி நிறைவேறுச்சு:-)//

மிக்க மகிழ்ச்சி:))

அடியவர் இச்சையில்
எவை எவை உற்றன
அவை தருவித்து அருள் பெருமாளே!

said...

(நெவர் மைண்ட்.நெக்ஸ்ட் டைம் (இதுதான் எங்க கிவி ஆட்டிட்யூட்!)

கிவிப்பழம் போல் அருமைமையான ஆட்டிட்யூட்..!

பாஸிட்டிவ் அப்ரோச்..

வாழ்த்துகள்..!

said...

ஆகா! வாவ்! முருகா முருகா! முழு தரிசனம். அருமை. தங்களின் பதிவுக்கு நன்றி.

said...

சூப்பர் முருகன் துளசி. என்னமா இருக்கார். விட்டுட்டு வரவும் மனசு வந்ததோ.
உங்க வீட்டில இருக்கிற முருகன் . கூடவே அப்பாரும் இருக்காரே ,. அவர் எப்ப வந்தார். அமைப்பா இருக்கு.பார்த்துக் கிட்டே இருக்கலாம் போல இருக்கு.

said...

ஏதோ பழைய ஞாபகங்களில், இன்பமாத் தூங்கப் போயிட்டேன் டீச்சர்;
அதான், காலை மீண்டு வந்து, மீண்டும்!:)

தைப்பூசக் காவடிகள்: அந்தப் பழனிக்கே போட்டி-ன்னா, அது பத்துமலை தான்:))

//பப்பாளிக் காய்களை ஏத்திக்கிட்டு வந்து அதை நெடுகா, நீண்டவாக்கில் ரெண்டா வகுந்து உள்ளே இருக்கும் விதைகளை நீக்கிட்டு, எண்ணெய் ஊத்தி அகல்விளக்குகளா தீபமேத்தி இருக்காங்க//

இன்னும் கிராமங்களில் உண்டு!
எங்க வாழைப்பந்தலில் பப்பாளி, பனங்காய் ரெண்டிலும் ஏத்துவோம்!
= பப்பாளி நீள விளக்கு
= பனங்காய் குட விளக்கு (ஐயப்ப சீசனில் தேங்காய் விளக்கு போல)

//காலையில் கொஞ்சம் சீக்கிரமா மலையேறிட்டால் அவ்வளவாகக் களைப்பு தெரியாது. இடையில் நடை அடைக்கிறாங்களா என்ன? கே ஆர் எஸ் சொல்றாரே! //

ஹிஹி
நான் போனது 2009இல்! இப்போ எப்படியோ?
அதான் வேல் வழிபாடே தூக்கிட்டு, ஆகமப் பிரகாரம் சிலையா வச்சிட்டாங்களே:)

ஆனாலும் குகையின் அழகையும் மாத்த முடியாது!
குகனின் அழகையும் மாத்த முடியாது!!

said...

//தைப்பூசத் திருவிழாவில் அரசாங்கப் பிரதிநியாகக் கலந்துகொள்ள பிரதமரே வருகிறார்.
இந்த வருசம் பிரதமர் நஜீப் அவர்கள் ஊரில் இல்லை என்பதால் துணைப்பிரதமர் மொய்தீர், விழாவில் கலந்து கொண்டாராம்//

இந்த நல்ல வழக்கம், திருப்பதி-திருமலையிலும் உண்டு!
ஆந்திர முதல்வர், ஒவ்வொரு பிரம்மோற்சவக் கொடியேற்றத்தின் போதும், பட்டுத் துணி கொண்டு வந்து சமர்பிக்கும் வழக்கம்!

//திருத்தணியில் நடப்பதுபோல இங்கேயும் படித்திருவிழா கூட ஆண்டுக்கு ஒரு முறை செய்யறாங்களாமே!!!!//

இதை ஆரம்பிச்சி வச்சது எங்க வள்ளிமலை சுவாமிகள்!

வெள்ளைக் காரத் துரைக்கு எதுக்கு லைன்-ல நின்னு Happy New Year சொல்லணும்?
தணிகை மலைத் துரைக்குச் சொல்லுவோம் -ன்னு ஆரம்பிச்சாரு! பத்திக்கிச்சு:)

தணிகை மலைப் பெருந் "துரையே" வா வா வா!
தயா நிதியே, தர்ம "துரையே", வா வா வா!
http://muruganarul.blogspot.com/2013/06/thanigai.html

இராமாயணக் குகை, கலைக் கூடம் போயிருக்கலாமே டீச்சர்!
நல்லாத் தான் இருக்கும்! இன்னும் நிறைய குகை இருக்கு! அம்மா-அப்பாவை உட்கார வச்சிட்டு, நான் மட்டும் போயிட்டு வந்தேன்!:)

அந்த யாழ்ப்பாணப் பையனை ஒன்னு கேட்கட்டுமா?:)
ஏன்-ப்பா, இளநியை எதுக்குப்பா Fridgeல்ல வச்சி விக்குற?:))

said...

//இந்த மேல் குகையின் உட்புறச்சுவர் ஓரங்களிலும் தகப்பன்சாமி//

முருகனின் உபதேசத்தைச் சிவபெருமான் மட்டுமா கேட்டாரு?
நானும் தான் கேட்டேன்:))))

இதோ படம்: My muruga telling his father advice, and to me too:)

சிவனார் மனங் குளிர
உபதேச மந்திரம்
"இரு செவி மீதிலும்" பகர் குருநாதா!

said...

பத்துமலையான் குடிகொண்டு ஜொலிக்கின்றான் துளசியின் இல்லத்தில்.

யாழ்ப்பாணம் உங்களை பிடிக்கின்றது:) எங்கள் ஊர்ஆட்கள் பலரும் இங்கு வேலைக்காக செல்கின்றார்கள்.

காவடி எடுக்கும் உங்கள் படம் நன்றாக இருக்கின்றது.

said...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

[[காவடி எடுத்த (புடிச்ச) டீச்சருக்கொரு அரோகரா!:)

காவடியை வலத் தோளில் புடிக்கணும் டீச்சர்:)
ஆடும் போது வேணும்-ன்னா தோள் மாத்தி ஆடலாம்! நீங்க ஆடனீங்க-ன்னு கற்பனை பண்ணிக்குறேன்:)]]

இது சரியான தகவல் அல்ல! எந்த தோளிலும் எடுக்கலாம்; நம்மால எடுக்கமுடியாட்டி அதுக்கு கூலிக்கு ஆள் வெச்சு எடுக்கலாம். மலை ஏற முடியாவிட்டால் டோலியில் போகலமாம்; கூடவே காவ்டியையும் எடுத்துக்கலாம்.
adjustment and பரிகாரம் பெயர் தான் நாம் மதம்; எவனும் வரும் வசூலை விட மாட்டான். one day cricket மாதிரி இப்ப rules (ஹி! ஹி! ஆகமவிதிகள் படி) மாதீடாங்க போலிருக்கு.


said...

//இது சரியான தகவல் அல்ல! எந்த தோளிலும் எடுக்கலாம்; நம்மால எடுக்கமுடியாட்டி அதுக்கு கூலிக்கு ஆள் வெச்சு எடுக்கலாம்.
adjustment and பரிகாரம் பெயர் தான் நாம் மதம்//

ஹிஹி
என்ன நம்பள்கி இப்பிடி ஓட்டறீங்க?:)

காவடியைத் தானே எடுத்தாத் தான் நேர்த்தி; Subcontract எல்லாம் வுடக் கூடாது:)))

காவடிப் பூசையில், தோள்ல ஏத்தும் போது, பூசாரி, வலது தோள்-ல்ல ஏத்தி வைப்பாரு (மங்களகரமா)!
அப்பாலிக்கா, சுமந்து செல்லும் போது, வசதிக்கும்/அசதிக்கும் மாத்திக்கலாம்!

பழனிப் பாத யாத்திரையில் கிராமவாசிகளோடு போனாத் தெரியும்!
ஒவ்வொரு தங்கலிலும் எறக்கி வைக்கும் போதும் சூடம் காட்டித் தான் எறக்கி வைப்பாங்க!
மறு நாள் மறுபடி ஏத்தும் போதும், சூடம் காட்டித் தான் ஏத்துவாங்க!!

ஆனா, இப்பல்லாம் மக்கள் மாறீடறாங்க!
முருகனிடத்தில் அன்பு போயி, ஆடம்பரம் வந்துருச்சி;
ஏதோ பாவத்துக்குச் செய்யுற பரிகாரம் போல Deal பேச, வேண்டுதல்-ன்னு ஆயிருச்சி:) சிலரு அதைக் கூட, கஷ்டப்படாம, காசா உண்டியல்ல போட்டுறேன் -ன்னு வேண்டிக்குறாங்க:))

ஆனா, காவடி வேறு, முருகன் வேறல்ல!
*முருகனே = காவடி!
*காவடியே = முருகன்!

காவு(ம்) + தடி= காவடி
சங்கத் தமிழில் காவடி = இங்கே!

said...

அழகு கொஞ்சுது.. முருகு என்றாலே அழகுன்னுதானே பொருள்.

//கார்த்திகை தீபம் சமயங்களில் மாட்டுவண்டி நிறைய பப்பாளிக் காய்களை ஏத்திக்கிட்டு வந்து அதை நெடுகா, நீண்டவாக்கில் ரெண்டா வகுந்து உள்ளே இருக்கும் விதைகளை நீக்கிட்டு , எண்ணெய் ஊத்தி அகல்விளக்குகளா தீபமேத்தி இருக்காங்க. வாவ்...... என்ன ஒரு கவிதை!!!//

காட்சியைக் கற்பனை செஞ்சு பார்க்கும்போதே அசத்துது. ஆமா,.. இது இன்னும் பிரார்த்தனை லிஸ்டில் வரலையா!!

said...

[[[kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//இது சரியான தகவல் அல்ல! எந்த தோளிலும் எடுக்கலாம்; நம்மால எடுக்கமுடியாட்டி அதுக்கு கூலிக்கு ஆள் வெச்சு எடுக்கலாம்.
adjustment and பரிகாரம் பெயர் தான் நாம் மதம்//

ஹிஹி
என்ன நம்பள்கி இப்பிடி ஓட்டறீங்க?:)

காவடியைத் தானே எடுத்தாத் தான் நேர்த்தி; Subcontract எல்லாம் வுடக் கூடாது:)))]]]

rules இப்ப மாத்தீட்டாங்க என்று சொன்னது---நான் அமெரிக்காவில் வசிப்பதால்.

முருகன் அறுபடை வீடு முக்கியமா பழனி திருத்தணி திருப்போரூர் பாம்பன் சாமி (திருவான்மியூர்) கோவில்கள் பற்றி பல விஷயங்களில் நான் முழுவதும் அறிந்தவன்-authority மாதிரி.

என் கல்யாணம் முடிந்தவுடன் என் மனைவி எனக்கு ஒரு ஷாக் கொடுத்தா...

என் மனைவிக்கும் முருகனுக்கும் அவ்வளவு சம்பந்தம் இல்லை என்றாலும் அறுபடை வீட்டிலும் காவடி எடுக்க வேண்டியுள்ளேன் என்றாள். முருகனையும் செல்லமாக சபித்தேன்.

நான் சொல்வது நான் குழந்தையாக இருந்தபோது வேண்டுதல் என் அம்மா வேண்டுதல். பெரிய குடும்பம். என் தம்பி கைக் குழந்தை...என் காவடியை சுமந்தது ஒரு ஆத்தா. அப்ப என் தங்க சங்கிலி காணவில்லை.

இப்போ...காவடியை (2009) எல்லா மக்களும் விஞ்சில் ஏற்றி செல்லுகிறார்கள். எவனும் யானைப் பாதையை கூட உபயோயோகிபதைல்லை. நடக்க ஆசை படுபவர்கள் இதற்கு என்று ஆள் வைத்து முருகன் சன்னதி அருகே உள்ள பிள்ளையார் முன்பு இருந்து காவடி எடுக்கிர்ரார்கள்.

நாளும் கிழமையும் நலிந்தோர்க்கு இல்லை. என்று சொல்லி காணிக்கையை வாங்கிப் போட்டுக் கொண்டு adjustment செய்வது தானே எல்லா மதங்களிலும் நடக்கிறது.

விரிவாக என் அறுபடை வீடு மற்றும் என் ஆன்மீக உலா பற்றி எழுதுவேன். வாருங்கள்.

said...

திருபோரூர், பாம்பன் சாமி கோவில் அறுபடை வீடு இல்லை என்று யாரும் எழுத வேண்டாம். அது எனக்கு தெரியும். இந்த 4 கோவில்களைப் பற்றி நன்கு அறிந்தவன் என்று சொன்னேன்.

கல்யாணம் என் செலவு; அது பத்தாது என்று காவடி அறுபடை வீட்டில் என்ற வேண்டுதல் வேற! ஒரே டூரில் முடிக்கவில்லை. ஒரு இரண்டு வருடம் ஆனது. இந்த கடனை முடிக்க.

கற்பூரம் எடுத்தி தீபம் காட்டும் போது வலமிருந்து இடம் மூணு தடவை சுத்தினா இடமிருந்து வலம் மூணு தடவை சுத்தனும். நவக்கிரகம் சுத்தினா ஒத்தைப்படையில் சுத்தணும்.

சம்ப்ரதாயம் சாங்கியம் ஐதீகம் எல்லாம் நம்மளை அடக்கி ஆள ஒரு வழி-just to show their authority. என் மனைவிக்காக நான் கோவிலுக்கு செல்வேன். இப்பவும் செல்கிறேன்.

என் நண்பன் ஆண்மீகவாதி கேட்டான், "உனக்கு தான் சாமிய புடிக்காதே அப்புறம் ஏண்டா கோவிலுக்கு போறே?"

"எனக்கு என் மனைவியைப் புடிக்குமே."

விருப்பப்படாம மனைவியுடன் ஷாப்பிங் போறதில்லையா? அதுக்கு கோவிலுக்கு போறது பெட்டெர்!

said...

//"உனக்கு தான் புடிக்காதே அப்புறம் ஏண்டா கோவிலுக்கு போறே?"

"எனக்கு என் மனைவியைப் புடிக்குமே."//

Murugan-kku ungaLai romba pudikkume:)
Sooperu, nambaLki..
He likes this approach - cholla chonnaan:)