Wednesday, April 11, 2012

வாங்க......... குதிக்கலாம்:-)))))

மனுசனுக்கு த்ரில் வேண்டி இருக்கே....... சரியா 24 வருசத்துக்கு முன்னாலே மகானுபாவர் ஒருத்தர் கண்டுபிடிச்ச விளையாட்டு. அப்படியே அட்ரினலின் சுரப்பி எக்குதப்பாச் சுரந்து, குடலெல்லாம் வாய்க்குள்ளெ வந்து வுழுந்துரணுமாம்!

AJ Hackett and Henry van Asch, என்ற ரெண்டு பேரும் கூட்டுச்சேர்ந்து 1988 நவம்பர் மாசம் தொடங்கிவச்சாங்க. நியூசியில் தெற்குத்தீவு குவீன்ஸ் டவுன் என்ற ஊரில் இருக்கும் கவராவ் நதியின் குறுக்காக் கட்டுன பாலத்துலே இருந்து குதிக்கணும். Kawarau Bridge Bungy கயித்தை இடுப்பிலே கட்டிக்கிட்டுத்தான்! 43 மீட்டர் சரேலுன்னு விழுந்து, கீழே ஓடும் நதியின் தண்ணீரைத் தொட்டுவரணும். சும்மாத் தண்ணீரைத் தொடல், தண்ணியைத் தொடாமல் கிட்டேப்போயிட்டு வருவது, இல்லைன்னா தண்ணிக்குள்ளே அப்படியே பாய்ஞ்சு முங்கி எழுந்து வருவது இப்படி பல ஆப்ஷன்ஸ் இருக்கு. உங்களுக்கு எது விருப்பமோ அதைத் தேர்ந்தெடுத்துக்கலாம்.

(இந்த 43 மீட்டரும் சில இடங்களில் 70, 80ன்னு நீண்டுப்போய்க்கிட்டே இருக்கு!)


இங்கே என்ன ஒரு ஸ்பெஷலுன்னா..... தனியாக் குதிக்கப் பயமா இருந்தா.... கூடவே ஒரு ஆள் உங்களைப் பிடிச்சுக்கிட்டே உங்களோடு சேர்ந்தே குதிப்பார். குதிக்கும்போது நீங்க அலறுவதையும் வீடியோவா எடுத்து உங்க கையிலே கொடுத்துருவாங்க. கூடவே ஒரு ஃபோட்டோ! உங்க வீரத்தை மெச்சி I DID ITன்னு ஒரு டீ ஷர்ட் கூடுதல் பரிசாக் கிடைக்கும். (இந்த வீரர் பஞ்ஜியில் குதிச்சாருப்பா! )

முதலில் உங்களுக்கு உடல்நலம் நல்லா இருக்கணும். இதயவியாதி, ரத்த அழுத்தம், காக்காவலிப்பு, ஆஸ்த்மா, நீரிழிவு இப்படி எதெது இருக்கப்டாதுன்னு பெரிய பட்டியலே ஒன்னு இருக்கு. முக்கியமா நீங்க கர்ப்பிணியா இருக்கக்கூடாது, கேட்டோ!

(High blood Pressure, Heart Conditions, Epilepsy, Pregnancy, Fragile Skin, Neurological Disorders, Bone Disorders/Dislocations, Diabetes, Asthma, Prosthetics, Panic/Anxiety Attacks, Recent Sprains/Muscular Injuries.)

குதிக்கப் பயன்படுத்தும் கயிறு மகா முக்கியம். பாதியில் புட்டுக்கிச்சுன்னா? பாதுகாப்புக்கு இங்கே நியூஸியில் முக்கியத்துவம் அதிகம் என்பதால் கூடுதல் கவனம் எடுத்து இந்தக் கயிறைத் திரிக்கிறாங்க!!!! கயிறு மேக்கிங் வீடியோ க்ளிப் ஒன்னு இங்கே உங்களுக்காக!

உங்க எடையைச் சரிபார்த்து அதுக்குத் தகுந்த கயிறாகத்தான் பயன்படுத்துவாங்க. காலோடு இந்தக் கயித்தைப் பிணைச்சு, உங்களை பாலத்தில் இதுக்காக நீட்டிக் கட்டி இருக்கும் ஸ்டேண்டில் கீழே ஓடும் நதிக்குப் புறமுதுகு காட்டி நிக்கவச்சு, பத்துலே ஆரம்பிச்சு கவுண்ட் டவுன் தொடங்கி ஸீரோ வந்ததும் ஒரே தள்ளு. இந்த வரியைத் தட்டச்சு செய்யும் நேரம்கூட ஆகாது. ரெண்டே வினாடியில் 43 மீட்டர் பறந்து இறங்குவீங்க! சில தைரியசாலிகள் தண்ணீரைப் பார்த்து நின்னு குதிப்பதும் உண்டு!

கயிறின் ஆட்டம் முடிஞ்சதும் தலைகீழாத் தொங்கும் உங்களை அங்கே ஒரு ஓரமாக் காத்திருக்கும் படகும் அதிலுள்ள ஆட்களும் வந்து ஏந்தி இறக்கிக் கட்டுகளை அவிழ்த்து கரைக்குக் கொண்டுபோய் விடுவாங்க. அங்கே தயாரா இருக்கும் கார் உங்களைப் பாலத்து ஆஃபீசுக்குக் கொண்டுவந்து விட்டுரும்.

இதுக்கெல்லாம் கட்டணம் வெறும் 180 நியூஸி டாலர்கள்தான். குடும்பமாக் குதிக்கணுமுன்னா ஸ்பெஷல் டிஸ்கவுண்ட் உண்டு:-)

த்ரில்லை விடவேணாமுன்னு போய்ப் 'பார்க்க ' நினைச்சால் பார்வையாளர்களுக்கும் ஒரு இடம் ஒதுக்கி இருக்காங்க. அடுத்தவன் அலறுவதைக் கண்டு ரசிச்சுட்டு வரலாம் என்னை மாதிரி:-)))))

வனுவாட்டூ Vanuatu என்ற தீவுதான் இந்த ஆட்டத்துக்கு முன்னோடி. இதுக்கு அங்கே ஒரு பழங்கதைகூட இருக்கு. ஒரு புருஷன் பெண்டாட்டி இருந்தாங்க. அந்த ஆள் எப்பவும் மனைவியை அடிச்சுத் துன்புறுத்துவார். அடி தாங்காம மனைவி ஓடிப்போய் எங்கியாவது ஒளிஞ்சுக்குவாங்க. இவர் எப்படியாவது மனைவியைத் தேடிப்பிடிச்சுக் கொண்டுவந்து , திரும்ப அடி உதைன்னு ஆரம்பிப்பார். இப்படியே போன வாழ்க்கையில் மனம் வெறுத்துப்போன மனைவி ஒரு நாள் அடி வாங்கிட்டு ஓடுன வேகத்தில் ஒரு பிரமாண்டமான ஆலமரத்துலே சரசரன்னு ஏறிப்போய் உச்சானிக்கிளையில் நின்னுக்கிட்டாங்க.

தேடிக்கிட்டே வந்த கணவர்.... ஆலமரத்துலே இருந்த மனைவியைப் பார்த்துட்டு, 'இருடீ உன்னை' 'ன்னு மரத்துலே ஏறிப்போறார். 'யோவ் சரியான ஆமபிளையா இருந்தா என்னை வந்து பிடி பார்க்கலா'முன்னு மனைவி கூவ, இவர் மனைவி இருக்கும் மரக்கிளையில் பரபரன்னு ஏறிப்போய் மனைவியைப் பிடிச்சு இழுக்கும்போது சரேலுன்னு அந்தம்மா குதிச்சுடறாங்க. கூடவே இந்தாளும் கீழே விழறார். அப்போதான் தெரியுது, மனைவி தன்னுடைய கால்களை ஆலம்விழுதுகளில் நல்லாக் கட்டி வச்சு வச்சுருந்ததால் அப்படியே தொங்கிச் சமாளிச்சுப் பிழைச்சுக்கறாங்க. இது தெரியாம அவ்வளோ உசரத்தில் இருந்து விழுந்த ஆள் பரலோகம் போய்ச் சேர்ந்தார்.

இந்த கணவன் பெயர் தமாலி. இவருடைய ஆவி அங்கேயே சுத்துதுன்னு காலப்போக்கில் ஒரு நம்பிக்கை உருவாகிப்போய் இப்போ அந்ததீவில் மரக்குச்சிகள், கழிகள் எல்லாம் வச்சு 30 மீட்டர் உயரமா கோபுரமாட்டம் ஒன்னு கட்டி வச்சு, செடிகொடிகளைக் காலில் கட்டிக்கிட்டு குதிப்பது சம்ப்ரதாயமான திருவிழா ஆகிக்கிடக்கு. குதிச்சவங்க அத்தனைபேரும் அன்னிக்கு இரவு அந்தக் கோபுரத்தடியிலேயே தூங்கணும். அப்பதான் தமாலியின் ஆவிக்கு ஆத்ம திருப்தி ஏற்படும். முழுக்க முழுக்க ஆண்களே பங்கெடுக்கும் வீரவிளையாட்டு!!! இந்த கோபுரம் கட்டவே பத்துநாள் எடுத்துக்குவாங்களாம். பனிரெண்டு பகுதிகளா வெவ்வேற உயரத்தில் அங்கங்கே மேடை வச்சுக்கட்டி, கடைசிநாள் அவரவர் உடல்சக்திக்கு ஏற்ற உயரத்தில் நின்னு குதிப்பாங்களாம். வாலிபப் பசங்க, வயசுக்கு வந்தாச்சுன்னு இங்கே குதிச்சு நிரூபிக்கணும்!!!!
குதிக்குமுன் ஸ்பீச் கொடுப்பது பாடுவது, நடனமாடுவதுன்னு பல விஷயங்கள் காலப்போக்கில் டெவலப் ஆகி இருக்கு! கலாச்சாரத் திருவிழா!


இதை அப்படியே நியூஸி வெர்ஷனா மாத்தி இப்போ, நியூசியின் வெவ்வேற ஊர்களில் இருக்கும் பாலங்களில் இருந்து குதிக்கும்விதமா சக்கைப்போடு போடுது இந்த வியாபார விளையாட்டு. அதானே.... இதுக்குன்னு தெற்குத்தீவுக்கு வரணுமா என்ன? சரியான இட அமைப்பு, ஆறு, பாலமில்லாத ஊர் மக்களை எப்படி வளைச்சுப்பிடிக்கன்னு உக்காந்து யோசிச்சதில் தண்ணீருக்கு பதிலா ட்ராம்போலின் மீது குதிக்கலாமேன்னு தோணி இருக்கு. சின்னப்பிள்ளைங்களும் பயப்படாம ஆடும்விதமா செஞ்சுருக்காங்க. இந்தப்படம் நியூஸியில்

இந்தியாவில் கூட ஸிரக்பூர் (பஞ்சாப்) ஒரு ஷாப்பிங் மாலில் பார்த்தேன்.மேலே உள்ள படம்
கொஞ்சம் கொஞ்சமா இதுலே புது விளையாட்டுகள் வந்துக்கிட்டே இருக்கு. பெரிய பப்பிள் செஞ்சு அதுக்குள்ளே நின்னு உருண்டு வந்து ஆடுனதுலே சின்ன மாற்றம் கொண்டுவந்து கொஞ்சம் மீடியம் சைஸ் பப்பிள்களைத் தண்ணீரில் மிதக்கவிட்டு அதுலே ஆடணுமாம்.
எங்க கோடைவிடுமுறை சமயத்தில் மாலுக்குள் இப்படி ஒன்னு பார்த்தேன். ஒரு தாற்காலிக நீச்சல்குளம். அதுலே ஒரு நாலைஞ்சு குமிழ்கள். பார்க்க பப்பிள் ராப் போல இருக்கு ஸிப் வச்சுருக்காங்க. அதுக்குள்ளே பிள்ளை நுழைஞ்சதும் ஸிப்பை மூடிட்டு உள்ளேக் காத்து நிரப்பிடறாங்க. தள்ளிவிட்டால் தண்ணியில் போய் மிதக்குது. பசங்க பேலன்ஸ் பண்ணுவதும், நடந்து பாக்கறதும் சும்மா உள்ளே உருளுறதுமா இருக்குதுங்க. அஞ்சு நிமிச ஆட்டத்துக்குப் பத்து டாலர் கட்டணம். இடையிலே நிப்பாட்டிக்கணுமுன்னா ரெண்டு கைகளையும் T போலக் காமிச்சால் போதும்.


வீடுகளில் பசங்க பிறந்தநாள் விழா போல எதாச்சும் பார்ட்டிகள் கொண்டாட்டங்களுக்குக்கூட ஏற்பாடு பண்ணிக்கலாமாம்.
வீட்டுலே நீச்சல் குளம் இல்லைன்னா....அவுங்களே ஒரு தாற்காலிக குளம் கொண்டுவந்துருவாங்களாம்.
மனுசனுக்கு எப்படியெல்லாம் புதுப்புது விளையாட்டு வேண்டி இருக்கு பாருங்களேன்!

26 comments:

said...

குதிக்கறது பத்தி விரிவா பதிவு. :))

ஆஷிஷும் ஒரு வாட்டி ஹைதையில் இந்த மாதிரி தொங்கி இருக்காப்ல

said...

அப்பப்பா... எப்படிதான் அந்த மாதிரித் தலைகீழாக் குதிக்கிறாங்களோ? பார்த்தாலே எனக்கு குடல் வாய்க்கு வந்திடும்போல இருக்கு. பஸ் ஒரு பள்ளத்தில் ஏறி இறங்கினாலே வயிறு கலங்கிப்போற ஆள் நான். இதையெல்லாம் படிச்சிதான் ரசிக்கணும். தீவுக்கலாச்சாரமும், அதற்கான கதையும் அருமையா இருக்கு. அட்வெஞ்சர் அட்வெஞ்சர்னு ஓடிகிட்டிருக்கிற மக்களுக்கு எல்லாமே கொஞ்ச நாளில் த்ரில் விட்டுப்போயிடுது. புதுசா தேட ஆரம்பிச்சிடுறாங்க. அழகா படத்தோட நிறைய தகவல் கொடுத்திருக்கீங்க. நன்றி மேடம்.

said...

குதிக்கறதே பார்த்தாலே அடி வயித்துல இருந்து எல்லாம் மேலே வர மாதிரி இருக்குது. அப்பாடி.......தைரியசாலிங்க தான்.

தில்லியில் மால்களில் பசங்க தொங்கிப் பார்த்திருக்கிறேன். பொண்ணுங்க கயித்து மேல நடந்து குறிப்பிட்ட தூரம் வரை போறாங்க. பெரிய பாலில் சின்ன பசங்களை விட்டு உருட்டி விடறாங்க...... எல்லாத்துக்குமே தைரியம் தான்.

said...

த்ரில்லுக்காக மனுசன் உயிரையும் விடத் தயாராகிறான்.

said...

விஜிபியிலும் இந்த ட்ராம்போலினை ஒருக்கா பார்த்தேன். பையர் நல்லா எஞ்சாய் செஞ்சார்.

உங்களோட சேர்ந்து நாங்களும் 'பார்த்துக்கிட்டோம்' :-)

said...

பழம் நழுவிப் பாலில் விழுந்து ...இல்லை இல்லை...குடல் எழுந்து வாயில் வந்து...அய்யோடா

said...

விளையாட்டுக்கான மூல கதை ! !!!அருமை !

said...

ஆஹா.என்ன ஒரு த்ரில் பதிவு!!ஆசையிருக்கு. ம்ஹூம் . :)
இத்தனை விளையாட்டுகளும் ஒரு ஐம்பது வருடங்கள் முன்னால் வந்திருக்கக் கூடாதோ.

said...

இரண்டொரு வாரத்திற்கு முன்னால் இங்கே இப்படி கயிறு கட்டித் தொங்கிய போது, கயிறு அறுந்து போய் ஒருவர் மரணம் அடைந்தார். நிறைய மால்களில் இந்த மாதிரி வீர விளையாட்டுகள் வசதிகள் இருக்கு! ஆனா இங்கே அத்தனை பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை. உயிருக்கு விலை மதிப்பும் இல்லை.

இறந்த மனிதரின் குடும்பத்துக்கு ஒரு லட்சமோ என்னமோ மால் உரிமையாளர்கள் கொடுத்தார்கள்.. அதன் பிறகு எல்லோரும் மறந்து விட்டார்கள்!

விளையாட்டு எப்படி வந்தது என்பதற்கான விளக்கம் அருமை! அந்த மாதிரி மனைவியை அடிக்கிற ஆளுங்களை நிச்சயம் தள்ளி விடலாம்! தப்பேயில்லை!

said...

குதிக்கிற விளையாட்டின் பின்னணிக் கதையும் திருவிழாத் தகவல்களும் புதுசா தெரிஞ்சுக்கிறோம்.

T மாதிரி கையை நீட்டுமா குழந்தைகள் எனத் தெரியவில்லை. குமிழுக்குள் கும்மாளம் போடுகின்றன(பெரிது படுத்திப் பார்த்தேன்) :)!

வெங்கட் சொல்லியிருப்பது சரி. இங்கே பாதுகாப்பு ஏற்பாடுகள் பெயரளவிலேயே:(! கவனத்துடன் இருப்பதில்லை.

said...

த்ரிலுக்காக மனிதர்கள் எப்படி எல்லாம் விபரீத விளையாட்டுகளில் ஈடு படுகின்றனர்.!

said...

சரிதான் .. பெரியமனுசனாகிட்டியா.. தைரியமா குடும்பத்துல குதிக்கவிரும்பறியா.. அப்ப இப்படி குதிச்சு பழகிக்கோன்னு ஆக்கிட்டாங்களா..

என்ன ஒரு புத்திசாலி பொண்டாட்டி..:))

said...

குதித்திடுவோம்:))

நின்றஇடத்தில் இருந்தே துள்ளிக் குதித்தால் சரிதானே :)))

said...

வாங்க புதுகைத் தென்றல்.

இளங்கன்று பயமறியாது:-)))))

said...

வாங்க கீதமஞ்சரி.

பஸ் சொன்னீங்க பாருங்க, அது எனக்கும்...உண்டு. ஆனால் ஒரு முறை லாஸ் ஏஞ்சலீஸில் நாட்ஸ் பெர்ரி ஃபார்மில் ஒரு ரோலர் கோஸ்டரில் மகளின் தொந்திரவால் போயிட்டு நெஜமாவே குடல் வாய்வரை வந்த ஃபீலிங்ப்பா:(

அதுவும் அப்போ எனக்கு ஒரு சர்ஜரி நடந்து அஞ்சு வாரங்கள்தான் ஆகி இருந்துச்சு.பெருமாள் காப்பாத்தினார்!

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் செஞ்சுருந்தா இப்படி சில சின்னத் த்ரில்களை அனுபவிக்கலாம். குழந்தைகளுக்கு பயம் இல்லை. நமக்குதான் திக் திக்!

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா!

உண்மையே. நேத்து பாருங்க இங்கே நியூசியில் ஸ்கேட் போர்டு போட்டியில் கலந்துக்கிட்ட 18 வயசு பையர், எக்குத்தப்பா விழுந்து பின் மண்டையில் அடி. ப்ச்..... பாவம்...போயே போயிட்டார் :((((

said...

வாங்க அமைதிச்சாரல்.

இப்போ இங்கே ட்ராம்போலினுக்குச் சுத்தி வலை மாதிரி ஒன்னு வந்துருக்கு. எகிறினாலும் உள்ளேயேதான் விழுவாங்க. இது நல்ல அமைப்புதான்.

said...

வாங்க பாசமலர்.

ஹாஹா..... அங்கே பிரியாணி தம்முலே கிடக்கு:-))))))

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

நல்ல கதைதான்:-)

எவ்ளோநாள்தான் அவுங்களும் பொறுப்பாங்க. கொலை செய்யும் அளவுக்குப்போகணுமுன்னா கொடுமையின் அளவைப்பார்க்கணும் இல்லே!!!!!

said...

வாங்க வல்லி.

நமக்குன்னு ஏதாவது விளையாட்டு இல்லாமலா போகும்? கிளம்பி வாங்க, ஒரு கை பார்க்கலாம்;-)))))

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

பாதுகாப்பு முக்கியம் என்ற உணர்வும் இல்லை, உயிருக்கு மதிப்பும் இல்லை:(

கூடுதல் மக்கள் தொகை இருப்பதால் உயிரின் அருமை புரிபடலையோ?

said...

வாங்க ராமலக்ஷ்மி.

அஞ்சே நிமிசம்தான். அநேகமாக் கையை டீயாக் காமிக்காதுதான்:-)))))

ஒருவேளை பந்து பங்ச்சர் ஆகி தண்ணீர் கசிய ஆரம்பிச்சால் கையைக் காட்டுவாங்கதான்.

அப்படியும் உடனே தண்ணீர் ரொம்பாது. அதனால் ஆபத்து இல்லைதான்;-)

said...

வாங்க ஸாதிகா.

வரவர த்ரிலுக்காக என்னதான் செய்யலை? பஞ்சி ஜம்ப் செஞ்சுக்கிட்டே கல்யாணம் செஞ்சுக்கறாங்க. பாராசூட்டில் இறங்கிக்கிட்டே கல்யாணம் முடிக்கிறாங்க.

இளசுகள் அசருவதில்லைப்பா!

said...

வாங்க கயலு.

பெண்களின் புத்திசாலித்தனத்துக்கு கேக்கணுமா!!!!!
அது PIN புத்தி. ஷார்ப்பா இருக்கும்:-)

said...

வாங்க மாதேவி.

அரை அடி உயரப் பலகையில் இருந்தும் குதிக்கலாம். நோ ஒர்ரீஸ்:-)))))