Monday, April 16, 2012

அளவில் சிறுசு, செலவில் பெருசு!!!!

பெரிய 'புள்ளி' விஜயகாந்துக்குப் பிடிச்ச விஷயம் இது:-).
நாலு மில்லியன் சனம் இருக்கும் நாட்டுலே அஞ்சு மில்லியன் செல்லங்கள் இருக்குன்னு பத்திரிகை சேதி வந்ததும் ஆடிப்போயிட்டேன். இங்கே எங்களுக்கெல்லாம் ஆளுக்கு 12 ஆடுகள் என்ற கணக்கு இப்போ குறைஞ்சுக்கிட்டே வந்து, பத்துலே நிக்குது. நாப்பதே மில்லியன் ஆடுகள்தான் இருக்குன்னு சேதி.

தின்னு தீர்க்கவேண்டிய சமாச்சாரம் என்றதால் ஆட்டுக்கணக்கு இந்த ஆட்டையில் சேர்த்தியில்லை கேட்டோ:( மற்ற நாற்காலிகளும் இரு காலிகளும் காலில்லாதவைகளுமா கணக்கில் சேர்ந்திருக்கும் இதுலே, சுமார் 68 சதம் வீடுகளில் செல்லங்கள் ஒன்னோ, இல்லை அதுக்கு மேற்பட்டோ இருக்குதுகள்.

மியாவ் மட்டும் 1.4 மில்லியன். "பவ்பவ்" இதுலே நேர் சரிபாதியா ஏழே லட்சம்தானாம். செல்லப்பறவைகளா வீட்டுலே இருப்பவை அஞ்சு லட்சத்து இருபத்தேழாயிரம். முயல்கள் எம்பத்தியெட்டாயிரம், தொட்டி மீன்கள் 1.7 மில்லியன்

Cats: 1.4 million
Dogs: 700 000
Birds; 527 000
Rabbits: 88 000
Pet fish 1.7 million

எலி வகைகள், ஹாம்ஸ்ட்டர், கினிபிக், ஆமை, தவளை இப்படி வகைவகையா வளர்த்துக்கிட்டு இருக்குது சனம்.

ஸ்ப்பா....... கண்ணைக் கட்டுதே!!!!!!!!!

இந்தச் செல்லங்களை வச்சு ஏகப்பட்ட வியாபாரம் நடக்குது. மனுசன் கெட்டிக்காரன். எல்லாத்துலேயும் பணம் பார்த்துருவான்! இதுகளுக்கான சாப்பாடுகள், வெட் செலவு, இன்ஷூரன்ஸ், லீவுலே போகும்போது விட்டுட்டுப்போகும் பெட் மோட்டல்/ஹாஸ்டல் செலவு, ஹேர் கட், க்ரூமிங், விளையாட்டுப் பொம்மைகள், நாம் வேலைக்குப் போகும்போது அதுகள் வீட்டுலே போரடிச்சுக்கிட்டு கிடக்குமே என்ற எண்ணத்தில் பகலில் கொண்டுவிட்டுட்டு மாலை வரும்போது கூட்டிக்கிட்டு வர்றதுன்னு டே கேர் செண்டர் இப்படி நினைச்சுப்பார்க்கக்கூட முடியாத அளவில் எல்லா வசதிகளும் விருத்தி அடைஞ்சுக்கிட்டே போறதில் மக்கள் வருசத்துக்கு செலவழிக்கும் தொகை 1.6 பில்லியன்!!!!!!! இப்ப பெட்டுக்குன்னு தனி இடுகாடு, மின்சார மயானம் எல்லாம் வந்துருச்சு. ஒரு பத்துவருசமாவே இவைகள் இருக்குன்னாலும் இப்ப ரொம்ப பரவலா சனம் பயன்படுத்த ஆரமபிச்சுருக்கு!

முந்தியெல்லாம் SPCA வில் பூனைக்குட்டி, நாய்க்குட்டி எல்லாம் இலவசமாவே கிடைக்கும். இப்ப என்னன்னா..... குறைஞ்சபட்சம் 75 டாலர் பூனைக்குட்டிக்கு!! வம்சவிருத்தியை தடுக்க, வயித்துலே இருக்கும் புழுப்பூச்சியை விரட்டன்னு எல்லா 'முக்கிய' சமாச்சாரங்களையும் செஞ்சு முடிச்சுட்டு நமக்குக் கொடுக்கறாங்க. இதுலே நடமாட்டத்தை கவனிக்க மைக்ரோ சிப் வைக்கணுமுன்னா அதுக்குத் தனிக் கட்டணம். நாய்க்குட்டின்னா மூணாம் வாய்ப்பாடை நினைவு வச்சுக்குங்க. வீட்டுக்குக் கூட்டியாரும்போதே செலவு ஆரம்பிச்சுரும். வச்சுக்கொண்டு வரும் கூண்டு, படுக்கை, சாப்பாட்டுப் பாத்திரம், விளையாட்டு பொம்மைன்னு கைக்குழந்தைக்கான அத்தனையும் வாங்கித்தான் ஆகணும். இதுக்கு மட்டும் பூனைன்னா 180 நாய்ன்னா 290 வரை ஆகுதாம்.

அனிமேட்ஸ் என்ற பெயரில் கடை( செயின்ஸ்டோர்ஸ்) ஒன்னு நாடு முழுசும் இருக்கு. எஸ் பி ஸி ஏ விலிருந்து பூனைக்குட்டிகளையும் நாய்க்குட்டிகளையும் கொண்டுவந்து விக்கறாங்க. இங்கேபோய் வாங்குனோமுன்னா பூனைக்கு 180, நாய்க்கு 600ன்னு கொடுக்கணும். ஒரு மாச பெட் இன்ஷூரன்ஸோடு கிடைக்கும். நல்ல ஜாதின்னு அதுக்கு இன்னும் விலை கூடுதல். நம்ம பக்கத்துவீட்டு ஆலி, மஃப்பின் எல்லாம் 1300 அப்போ!

பெரிய பெரிய பெட் ஃபுட் கம்பெனிகள் பூந்து விளையாடறாங்க.766 மில்லியன் வியாபாரமாம்! சூப்பர்மார்கெட் போனோமுன்னா நாலைஞ்சு வரிசை பெட் சாப்பாடுகளும்,மற்ற தேவையான பொருட்களுமாவே குவிஞ்சு கிடக்கு. நமக்கு இத்தனை வகை கிடையாது.

பெட் இன்ஷூரன்ஸ் கம்பெனிகள் ஒரு பக்கம் கொழிக்குதுங்க. நாய்க்கு 438, பூனைக்கு 219ன்னு வருசத்துக்கு ப்ரிமியம் கட்டணும். விபத்து, உடல்நலக்குறைவு, சர்ஜரின்னா நாய்க்கு ஒன்பதாயிரம்,. பூனைக்கு எட்டாயிரம் காப்பீடு தொகை கிடைக்கும். ஒருவேளை நமக்கு உடம்பு சரி இல்லாமப்போய் நாம் ஆஸ்பத்திரி வாசம் செஞ்சால் இதுகளைக் கவனிக்க யார் இருக்கா? அப்போ ஹாஸ்டல் சார்ஜ்க்கு 500 டாலர்வரை கிடைக்குமாம். பெட்ஸ் காணாமப் போயிட்டா கண்டுபிடித்துக் கொடுப்பவருக்கு இனாம் என்றெல்லாம் விளம்பரம் கொடுப்போமுல்லெ? அதுக்கு 500 டாலர் தருவாங்களாம்.
இப்படி இருந்த நான் எப்படி ஆகிட்டேன்,பாருங்க!!!!
சீவிமுடிச்சுச் சிங்காரிச்சு அனுப்பும் க்ரூமிங் கம்பெனிகள் நாய்களுக்கு கலரிங் பண்ணிவிட ஆரமபிச்சுருக்காங்க. இப்பெல்லாம் பூனைகளும் வந்து குளிப்பாட்டிக்குதாம். கூடவே கழுத்து முடியை மட்டும் விட்டுட்டு உடலெல்லாம் ட்ரிம் பண்ணிக்கிட்டு லயன்லுக் விடுதுங்களாம். (கலி முத்திப்போச்சு!)
வெலிங்க்டன் நகரில் பல்லு தேய்ச்சுவிட பத்து டாலர், காதுக்குள்ளே குரும்பி எடுக்க பதினைஞ்சு, ஹாட் ஆயில் மஸாஜ் முப்பதுன்னு க்ரூமிங் சர்வீஸ் ஒன்னு பணம் பார்த்துக்கிட்டு இருக்காங்க! அடடா.... நம்ம கோகி இருந்தப்ப பல்லு தேச்சுவிடக் கொண்டு போயிருக்கலாமோ!

நாய்களுக்கு ஷூ. குளிர் கோட்டுன்னு இன்னொரு வியாபாரம் கொழிக்குது.

இந்த நக்கடா எல்லாம் இல்லாம குறைஞ்சபட்சம் பூனைக்கு 500, நாய்க்கு 1000 டாலர்கள் வருசத்துக்கு செலவு ஆகுதாம். இதுலே வெட்னரி க்ளினிக் செலவு சேராது கேட்டோ!
பக்கத்து வீட்டுலே இருந்து வேலி கடந்துவரும் ரஜ்ஜூ ( ராஜலக்ஷ்மியின் செல்லப்பெயர்!) கொஞ்சநேரம் நம்மகூடவே இருந்துட்டு அரைக் கப் பால் குடிச்சுட்டுப் போயிடறான். அவனாலே உங்களுக்கு செலவு ஒன்னும் இல்லைன்னதுக்கு, அதான் 'பெரிய உருவம், பெரிய செலவா நீ இருக்கியே, என்கிறார் கோபால்:-)

அடுத்த ஜென்மா உனக்கு இருக்குன்னு ஆண்டவன் நிர்பந்திச்சால்..... நியூஸிலே பிறக்க வைன்னு நானும் பதில் கண்டிஷன் போடுவேன் கேட்டோ:-))))

22 comments:

said...

உங்க நாட்டில் விலங்காகப் பிறந்தாலும் ராஜ மரியாதை.

நல்ல நாடு.

said...

புள்ளி விவரங்கள் மிரட்டுகின்றன!

சீவி முடிச்ச நாய் நல்ல அழகு என்பதையும் ஒத்துக்க வேண்டியிருக்கே:)!

said...

அடுத்த ஜென்மா உனக்கு இருக்குன்னு ஆண்டவன் நிர்பந்திச்சால்..... நியூஸிலே பிறக்க வைன்னு நானும் பதில் கண்டிஷன் போடுவேன் கேட்டோ:-))))//

அடுத்த ஜென்மத்தில் துளசியா! அல்லது என்ன ஜென்மம் என்று சொல்லவில்லையே!

said...

விஜய்காந்த் ரேஞ்சுக்கு புள்ளி விபரங்கள் சூப்பரா தந்திருக்கீங்க டீச்சர்....

செல்லங்களுக்கு கலரிங் எல்லாம் செஞ்சு விடறாங்களா!!

said...

டீச்சர் நலமா?

குரும்பி தமிழில் மறந்து போன வார்த்தை.அக்கடா திரைப்படங்களால் பிரபலம்.அது என்ன நக்கடா?

said...

கொஞ்சநேரம் நம்மகூடவே இருந்துட்டு அரைக் கப் பால் குடிச்சுட்டுப் போயிடறான். அவனாலே உங்களுக்கு செலவு ஒன்னும் இல்லைன்னதுக்கு, அதான் 'பெரிய உருவம், பெரிய செலவா நீ இருக்கியே, என்கிறார் கோபால்:-)
//:)

துளசிஅம்மாகிட்டே அப்பவே கேட்கணும் என்று நினைத்த ஒரு கேள்வி பூனை என்றால் விருப்பமோ?வலைப்பூ பேஸ்புக் புரஃபைல் போட்டோவில் பூனையார் இருக்கின்றார்??

இப்ப பக்கத்துவீட்டு பூனைக்கு தினம் அரைகப் பால...

உங்களுக்கொன்று தெரியுமோ?பூனைக்காகவே ஒருத்தர் பில்கா எழுதுகிறார்.அவரை பூஸ் பூஸம்மா மியாவ் என்றுதான் அழைப்போம்

said...

ஆ......அடுத்த ஜன்மாவா. நானும் வரேன்பா.
பெட் ஆவா. பெண்ணாவ்ஆஆ:)

said...

புள்ளி விவரம் கொடுத்து கலக்குறீங்க டீச்சர்....

நேற்று தான் என் செல்லச் செல்வங்கள் படித்து முடித்தேன். இன்று பார்த்தால் இங்கேயும் செல்லங்கள்! ரசித்தேன்.

said...

வாங்க கோவியாரே!

எல்லா விலங்கும் இங்கே இல்லை என்பதால், இருக்கும் சில வகைகளுக்கு மரியாதைதான் போங்க:-))))

said...

வாங்க ராமலக்ஷ்மி.

சிங்காரிப்புக்குன்னு ஒரு அழகு இருக்கேப்பா:-)))))

நம்ம கோகி இருந்த காலத்தில் இந்த சர்வீஸ்கள் எல்லாம் இல்லை:(

வெட்னரி க்ளினிக்கில் முடிவெட்டி விடுவாங்க. தனிச்சார்ஜ்.

said...

வாங்க கோமதி அரசு.

நல்ல கேள்வி. ஒரு துளசி இருந்து பதிவர்களைப் படுத்தியது போதாதா?

கட்டாயம் பூனைப்பிறவிதான். அதுலேயும் எங்க கோகியைத்தான் கல்யாணம் கட்டுவேன்:-)

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

குழந்தைகளுக்கு பர்த்டே பார்ட்டின்னா அந்தக் குழந்தைக்கு என்ன கலர் விருப்பமோ அப்படிச் செஞ்சுருவாங்களாம். ட்ரீட்!!!!

சீனாவில் நாய்க்குட்டிகளை பாண்டாக்கரடி போல கலரிங் பண்ணிவிடறாங்க!!!!

said...

வாங்க ராஜ நடராஜன்.

நலமா? ரொம்ப நாளைக்கு ரொம்ப நாளு இந்தப்பக்கம்!!!!!

நக்கடா...அலட்டல் என்ற பொருளில் வருது:-)

said...

வாங்க ஸாதிகா.

நான் நாயாத்தான் இருன்தேன். ஃபிஜி போனபிறகுதான் பூனையாகவும் ஆனேன். இங்கே நியூஸி வந்தபிறகு பூனைதான் காலநிலைக்குக் கட்டுப்படி:-))))

நாய் என்றால் காலநிலையைக் கணக்கில் எடுக்காம தினமும் 2 நேரம் வாக் கொண்டு போகணும். நானே குளிரில் அடிமைப்பெண் எம்ஜிஆரா இருக்கும்போது இதுக்குன்னு வாக் எப்படி போக?

//உங்களுக்கொன்று தெரியுமோ?பூனைக்காகவே ஒருத்தர் பில்கா எழுதுகிறார்.அவரை பூஸ் பூஸம்மா மியாவ் என்றுதான் அழைப்போம்//

ஆஹா...புதுத்தகவல். விரிவா ஒரு பதிவு எழுதுங்க. காத்திருக்கேன்.

said...

வாங்க வல்லி.

பூனையாவே வாங்களேன். நாம் ஜாலியா சுத்தலாம்:-)))))

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

ஆஹா..... நாலுவரி தலையில் தட்டியோ குட்டியோ எழுதுங்க ப்ளீஸ்!

said...

http://gokisha.blogspot.in/search/label/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B8%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%3A%29///

இதனை கிளிக் செய்து பாருங்க துளசிம்மா.

said...

கலரிங் செஞ்சப்புறம் டாகர் ஜொலிக்கறார் :-))

வெறும் கலரிங் மட்டுந்தானா?.. உடம்புல அங்கங்க ரிங் மாட்டிக்கிற இஸ்டைலு உங்கூர்ல கிடையாதா?.. போகட்டும் ஒத்தைக் காதுலயாவது மாட்டி விட்ருக்கலாம்:-)))

said...

செல்லங்கள் எல்லாம் மிக அழகாக இருக்கின்றார்கள்.

உற்சாகமாக இருப்பதற்காக இவர்களுக்கான ரீவி சனலும் ஆரம்பித்துள்ளார்களாம்.நல்ல செய்திதான்.

ஊரிலிருந்தபோது (ரீட்டா) அல்சேசன், (ஜொனி) பெமரேரியன் என்நேரமும் நம்மை சுற்றியே வருவார்கள்.:)

இப்போது பிளட் வாழ்க்கை :(

said...

சுட்டிக்கு நன்றி ஸாதிகா.

பூஸ் நல்லா இருக்கார்:-))))

said...

வாங்க அமைதிச்சாரல்.

இங்கே மனுசனுக்கே ரிங்ஸ் போதலை:-)))))

நம்ம ஆலி ஒரு சமயம் முடிவெட்டிக்கிட்டு இளைச்சுப்போய் வந்தான். சம்மர் அடிச்சு விட்டுட்டாங்க.

நல்ல கலைஞரிடம் அழகுபடுத்திக்கிட்டா அழகு கூடும்தான்!

said...

வாங்க மாதேவி.

செல்லங்களுடன் வாழ்ந்த வாழ்க்கையை மறக்கவே முடியாது இல்லை!!!!!

ரீட்டாவும், ஜொனியும் இப்போ எங்கே எப்படி இருக்காங்க?