Friday, April 27, 2012

ஹரே க்ருஸ்னா.... ஹரே க்ருஸ்னா

நியூஸியை விட்டுப்போய்க் கிட்டத்தட்ட ஒரு வருசம் ஆனநிலையில் வீடு திரும்புனமாதிரி ஒரு ஆசுவாசம் கிடைக்குமுன்னு எதிர்பார்க்கவே இல்லை. இந்தியாவாச்சே. உச்சரிப்பு திருத்தமா இருக்குமுன்னு நினைச்சதுகூட பொய்த்துப் போயிருச்சு. அதே வழவழா குரலில்,

 "ஜயா ஜய கௌராசந்தா.....ஆரட்டிக்கி ஷோபா.....
ஜா...........னா விடாடாவானே...ஜகமன லோபா....."
 jaya jaya gorâcânder âratiko s'obhâ 
jâhnavî-tatha-vane jaga-mano-lobhâ 

வெள்ளைக்காரர் யாரோ சொல்லிக் கொடுத்துருக்காங்க போல! எத்தனை எத்தனை வங்காளிகள் இதுலே இருக்காங்க. யாராவது சரியாச் சொல்லிக் கொடுத்துருக்கப்டாதோ? இந்தப்பாட்டே பெங்காலியில்தானே இருக்கு! இந்தக்கோவில் முழுக்க காவியுடன் சுற்றிவரும் சந்நியாசிகள் இந்தியர்களாத்தானே இருக்காங்க!

 செக்டர் 36 லே கோவில் அமைஞ்சுருக்கு. பெரிய வளாகமாத்தான் தோணுது. கேட்டில் நுழைஞ்சால் வலது பக்கம் காலணிகளைக் காப்பாற்றிவைக்க ஒரு இடம். யாருமே இதைச் சட்டை செய்யாம கோவில் நுழைவு வாசலில் கடாசிட்டுப்போயிருக்காங்க. கண்ணனைக் காணும் துடிப்பில் மெய்மறந்த அவசரக்கோலம்!
முன் ஹால் கொஞ்சம் சின்னது. ஒரு பக்கம் சாமி சம்பந்தமுள்ள சாமான்கள் விற்பனை. அதுக்கு எதிர்ப்பக்கம் ஒரு கவுண்ட்டர் மாதிரி சமாச்சாரம். கோவில் ஹாலுக்குள் காலடி வைக்கும் கதவின் நிலையில் 901கண்ணாடியில் வரைந்த யானைகள்! பிரமாண்டமான ஹால். கண்ணுக்கு நேரா ஹாலின் அகலத்தையொட்டியே வரிசையான சந்நிதிகள். இடப்பக்கக் கோடியில் சைதன்யா மகாப்பிரபு தன்னை மறந்த நிலையில் பஜனையில் ஈடுபட்டு ஆடறார். வலது பக்கக்கோடியில் நரசிம்ஹம், மடியில் ஹிரண்யன். எதிரில் ஒரு பக்கம் கைவணங்கி நிற்கும் ப்ரஹ்லாதன்.

நடுச்சந்நிதியில் கண்ணா கருமை நிறக் கண்ணான்னு ஒரு காலை முன்வைத்து ஒய்யாரமாச் சாய்ந்த ஒரு நிலையில் குழலூதும் கண்ணனும், நீ வாசி நான் கேக்கறேன்னு நிற்கும் ராதையும்.. கீழே உள்ள படிபோன்ற அமைப்பில் 'குருமார்'களின் சின்னச்சிலைகள். அட்டகாசமா உயிரோட்டத்தோடு இருக்கு. (எங்கூர்லே படங்கள்தான் வச்சுருப்பாங்க.)
உலோகத்தால் ஆன கண்ணனும் ராதையுமா பக்கத்துலே பசுமாடு நிக்க உற்சவமூர்த்திகளைப்போல சிலைகள் கொஞ்சம் பெரிய சைஸில் இருக்கு இங்கே நமக்கிடது பக்கம் தனியா ஒரு மண்டபத்தில் மௌனசாட்சியாக உக்காந்து கவனிக்கும் பிரபுபாதர். அவருக்கு நேரெதிரா இந்தப் பக்கம் துள்ஸி மஹாராணி, அவளுக்கான சின்ன தோட்டத்தின் செட்டப்பில். சந்நிதிகளைச்சுற்றி வந்து வணங்க வழி அமைச்சு வச்சுருக்காங்க. எண்ணிக்கைகளை மனசில் வச்சுச் சுத்திவரும் மக்களைப்பார்க்க முடிஞ்சது.
ஹாலின் கடைசியில் சந்நிதியைப் பார்க்கும் வண்ணம் ஒரு வரிசை இருக்கைகள். முழங்கால் நோவும் மக்கள் மனமார வாழ்த்துவாங்க. வாழ்த்தினேன். ஒரு பக்கம் ஏழெட்டுப் பெண்கள்  'ஹரே க்ருஸ்னா மந்த்ரம் ' சொல்லிக்கிட்டே பூரி திரட்டுறாங்கன்னு, கிட்டே போய்ப் பார்த்தால் சந்தனம் இழைச்சுக்கிட்டு இருக்காங்க. சில குட்டிப்பசங்களும் சேவையில் கலந்தாச்சு.
கோவிலுக்குப் பின்புறம் சமையலறை, ஸ்டோர் அறைகள், கழுவித்தேய்ச்ச பாத்திரபண்டங்கள் எல்லாம் பாதுகாப்பா இருக்கு. நாங்க போனது ஒரு சனிக்கிழமை. ஏழுமணிக்கு ஆரத்தி ஆரம்பிச்சது. அதுவரை கூட்டமில்லாமல் இருந்த ஹாலில் சரசரன்னு மக்கள் வந்து சேர்ந்துக்கிட்டே இருந்தாங்க. பூஜைகள் முடிஞ்சதும் வெளியே வந்தப்பக் கவுண்ட்டரில் நறுக்கிய பழத்துண்டுகளைப் பிரசாதமா கொடுத்துக்கிட்டு இருந்தாங்க. நல்ல ஏற்பாடு.

இன்னொருமுறை நாங்கள் போனது ஒரு ஞாயிறு. ஏழுமணிக்கு ஆரத்தின்னு ஒரு ஆறரைக்குப்போய்ச் சேர்ந்தால் கோவிலின் சின்ன ஹால் ஒன்றில் பெண்கள் மட்டுமே இருந்து பஜனை பாடிக்கிட்டு இருந்தாங்க. பெரிய ஹாலில் துள்சி மஹாராணிக்குப் பூஜை நடந்துக்கிட்டே இருக்கு. அது முடிஞ்சதும் மூலவருக்கு ஆரத்தி எடுத்தாங்க. அதே வழவழாப்பாட்டு.

 துளசி வச்சுருந்த ஒரு செயற்கைத் தோட்டத்தில் சின்னதா ஒரு மேடைபோன்ற அமைப்பில் பட்டுத்துணி போட்டு அலங்கரிச்ச பீடத்தில் உற்சவமூர்த்திகளைச் சுமந்து கொண்டு வந்து வச்சுட்டு அங்கேயும் ஆரத்தி எடுத்தாங்க. எல்லாம் ஒரே சமயத்தில் களேபரமா நடக்குது. நல்ல கூட்டம். ஆடறவங்க ஆடிக்கிட்டே இருந்தாங்க. பாடறவங்களும் பாடிக்கிட்டே................
விக்கிரஹங்களுக்கு ஆடை ஆபரணங்கள் எல்லாம் அருமையாப் போட்டு அலங்கரிச்சு இருந்தாங்க.

சாமி கும்பிடும் விஷயத்தை ரொம்ப எளிய முறையில் ஆக்குனதுக்கே இந்த ஹரே க்ருஷ்ணா இயக்கத்தைப் பாராட்டலாம். நாலே வரிகள் யாருவேணுமுன்னாலும் எப்ப வேணுமுன்னாலும் சொல்லலாம். அவ்ளோதான். இதுவே கூட்டத்தை ஈர்க்குதோ என்னவோ?

பெங்களூரு ஹரே கிருஷ்ணா கோவிலை, பிரமாண்டமாக் கட்டி அதை பக்கா வியாபார ஸ்தலம் ஆக்குனது போல இங்கே இதுவரை ஒன்னும் செய்யலை. நாங்களும் வேற கோவில்கள் இல்லாததால் கடந்த 22 வருசமா எங்கூரு ஹரே கிருஷ்ணா கோவிலுக்கே போய் பழக்கப்பட்டுட்டதால் இங்கே பூஜை முறைகள் எல்லாம் புதுசா இல்லாம 'பேக் ஹோம்' போனமாதிரி ஒரு திருப்தியாக்கூட இருந்ததென்னவோ உண்மை.

 நம்ம சனிக்கிழமை கோவில் வழக்கத்தை விடவேணாமேன்னு மூணாவது முறையாப் போனபோது, ஆரத்தி எடுக்கும் சமயத்துக்கு முன்னே வந்தவங்க எல்லோரும் அங்கங்கே குழுவா இருந்தாங்க. கூட்டம் கொஞ்சம் கொஞ்சமா வந்து சேர ஆரம்பிச்சு அம்மாம் பெரிய ஹாலில் ஜனத்திரள்! திரைவிலகும் சமயம் ஒரு நாட்டாமை வந்து 'எங்களிடம்' ஆண்கள் எல்லோரும் இந்தப்பக்கம் பெண்கள் அந்தப்பக்கமுன்னு சொன்னதும் எனக்குக் கொஞ்சம் கடுப்பானதென்னவோ நிஜம். போய் கண்ணனையும் ராதையையும் பிரிச்சுவச்சுட்டு அப்புறம் எங்களிடம் வந்து சொல்லுன்னு ....... கூவ ஆசை இருந்துச்சு. ஒவ்வொரு இடத்துக்கும் ஒவ்வொரு விதிகள். இது இந்தியா ஆச்சே! நியூஸியா எல்லோரும் அடங்கி இருக்க? இவ்வளோ கூட்டமான இடத்தில் தலை திருகிப்போன ஆள் எவராவது வந்து சில்மிஷம் பண்ணால்...... வேணாம் வம்பு. ஆனால் மனசில் மட்டும் 'கண்ணனையும் ராதையையும்' ' பிரிக்க இடம் கொடுக்கக்கூடாதுன்னு தோணிப்போச்சு.


 இனிமே இங்கே வரவே கூடாதுன்னு எரிச்சல். கோபம் அடங்கி நிதானமா யோசிச்சால்.... எதுக்கோ பயந்து எதையோ செய்யாமப் போனமாதிரின்னு ஒரு பழமொழி வரும்பாருங்க..... ச்சீச்சீ வேணாம். கோவிலில் உக்கார்ந்துக்கிட்டுச் சொல்றதா இது....யக்:(  மூட்டைப்பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்துனது போல ன்னு வச்சுக்கலாமா?

பிரச்சனைன்னு வந்துட்டா எப்படி அதுக்குத் தீர்வுன்னு யோசிக்கணுமா இல்லையா? யோசிச்சேன். சனியையும் விடமுடியாது, பிரிந்தும் உக்காரமுடியாது.....

ஏழு மணி ஆரத்திக்கு ஒரு அரைமணி, முக்கால்மணி முன் போகணும். அப்போ சந்நிதி திறந்துதான் இருக்கும் சேர்ந்து இருந்து சாமி கும்பிடலாம். . ஏழுமணிக்கு ஒரு பத்து நிமிசம் இருக்கும்போது மறுபடி திரை போட்டுட்டு சங்கு ஊதி ஆரத்திக்காக திரை திறக்கும்போது கிளம்பி வந்துடலாம். இது எப்படி இருக்கு? கண்ணனையும் ராதையையும் பிரிச்ச பாவத்துக்கு அவுங்களை ஏன் ஆளாக்கணும்?

ஒன்னுரெண்டு சனிகள் இப்படிச் செஞ்சேன். எல்லோரும் பக்திப்பரவசத்தில் ஆடும்போது ' விருட்' ன்னு கிளம்பறதும் கொஞ்சம் என்னமோ போல இருக்கேன்னு ..... சனிகளில் நம்ம பஞ்ச்குலா பாலாஜியிடமே சரணடைஞ்சேன். அநேகமாக ஏகாந்த ஸேவையே கிடைச்சுரும். சில நாட்களில் சண்டிகர் முருகன் கோவிலில் இருக்கும் பெருமாள் முன்னே சனிக்கிழமைகளில் நடக்கும் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம பாராயணத்தில் கலந்துக்கறதும் உண்டு.

 ஊர்திரும்பினபிறகு பார்த்தால் நிலநடுக்கத்தில் உள்ளுர் இஸ்கான் கோவிலே இடிஞ்சு விழுந்துட்டதால்..... சனிக்கிழமைகள் இனி வீட்டோடுன்னு ஆன சமயம் ஸ்வாமி நாராயண் வந்து அபயம் கொடுத்துருக்கார். ஆனாலும் அந்த இயக்கத்தில் ந்ருஸிம்ஹ ஜயந்தி எல்லாம் கொண்டாடுவதில்லை:(
சென்னைக்கோவில் கட்டும் சமயம்
இன்னிக்கு தினமலரில் சென்னை இஸ்கான் கோவில் குடமுழுக்கு செய்து திறந்துட்டாங்கன்னு பார்த்தேன். நல்ல அழகா பெருசாத்தான் கட்டிக்கிட்டு இருந்தாங்க. சென்னை வாழ்க்கையில் ஒரு முறை போய் வந்தோம். பக்கத்துலே பழைய கட்டிடத்தில் கோவில் நடக்குது. வழக்கம்போல் ஸ்ரீபிரபுபாதா அவர்களின் உருவச்சிலை இருந்தாலும் மெயின் சந்நிதியில் மூணு மாடங்களில் நடுவில் கௌராநித்தாய் (டபுள் சிலைகள்) வலதுபக்கம் பூரி ஜகன்நாத், பல்தேவ் & சுபத்ரான்னு அண்ணன்தங்கச்சி, இடதுபக்கம் ருக்மிணி சத்யபாமா சமேதராய் கிருஷ்ணன்! இதுவரை ருக்மிணியையும் சத்யபாமாவையும் ஒருசேர எங்கேயும் பார்க்கலையே  ' நான்' னு யோசனைதான்.
சென்னையில்
நம்ம க்ருஷ், ருக்மிணி சத்யபாமாவுடன்
ஸ்ரீ கௌராநித்தாய்
அண்ணன்களும் தங்கையும்

PIN குறிப்பு: ஸ்ரீ நரசிம்ம ஜயந்தி மகோத்ஸவம் மும்பையில் நடக்குதாம். சென்னை இஸ்கான் குடமுழுக்கு இப்படி வாசிச்சதும் முக்கால்வாசி எழுதி ட்ராஃப்டில் போட்டுவச்சுருந்ததை இன்னிக்கு முடிச்சு வெளியிடுகிறேன். இன்னிக்கு உடையவர் ஜயந்தியும் சேர்ந்துருக்கு, கேட்டோ!!!!!

15 comments:

said...

Super pathivu teacher

said...

Super pathivu teacher

said...

நல்லதொரு பகிர்வு.

உயிர்ப்போடு இருந்தது ஒவ்வொரு சிலைகளும். இந்த ஜிகுஜிகு ட்ரெஸ் தானே வடகத்திய கலாசாரம்......

said...

ஜிலுஜிலு உடைகளும், ஆபரணங்களுமா நம்ம கண்ணு முன்னாடி தத்ரூபமா நிக்கிற மாதிரியே தோணுது, இதான் வடக்கேயுள்ள சிலைகளின் விசேஷம்,..

அதுவும் இந்தக் கோயிலில் அந்த மயிலாட்டமும், க்ளோசப்பும் அபாரம் போங்க..

said...

கண்ணன் ராதை நடனத்தை தர்பூசணி மேல் உட்கார்ந்து மெய்மறந்து பார்க்கும் படம் அழகு.

கண்ணன் ராதையை பிரிக்கலாமோ
அது நல்லாயில்லையே!

said...

நேத்திக்கு நம்ம வீட்ல ஸ்ரீரமானுஜ ஜயந்தி கொண்டாடியாச்சு.
கிருஷ்ணருக்க்குத்தான் எத்தனை பேரோட போஸ் கொடுக்கவேண்டி இருக்குப்பா:)
நேத்திக்கு விஜய் டிவில துளசி மஹாத்மியம் சொல்லி முடிச்சாங்க,.
அவளுக்குப் பெருமைதான். அதற்கு முன் ஒரு லட்ச வருஷம் தபஸ் செய்திருக்கிறாள். பின்ன கிருஷ்ணன் தோளில் மாலையாகத் தவம் தான் செய்யணும். நல்ல படங்கள் துளசி.

said...

நல்ல படங்கள். ISKCON கோவில்களில் ஆரத்தி கேட்டு இருக்கிறேன்... வழவழ... :)

நல்ல பகிர்வுக்கு நன்றி டீச்சர்.

said...

நல்ல பகிர்வு. அலங்காரங்கள் பிரமாதமாக இருக்கின்றன.

சென்னைக்கோவில் ரிவியில் பார்த்தேன்.அருமை.

said...

வாங்க சுபாஷிணி.

வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றிகள்.

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

உங்கூர் இர்வின் ரோடு(பாபா கரக் சிங் மார்க்) கோவிலிலும் மற்ற கோவில்களிலும் கூட யூனிஃபாரம் போட்டமாதிரி ஒரே துணியில் எல்லா சிலைகளுக்கும் ஜிகுஜிகு ட்ரெஸ் தைச்சுப் போட்டுடறாங்களே!

said...

வானக அமைதிச்சாரல்.

பட்டெல்லாம் நம்ம பக்கத்துக் கோவில்களில்தான்ப்பா.
நீலக் கண்ணன் பாழ்நெற்றியோடு இருந்ததுதான் மனசுக்குக் கொஞ்சம் பேஜாராப்போச்சு.

said...

வாங்க கோமதி அரசு.

அது கொடுத்து வச்ச கிளி:-))))

said...

வாங்க வல்லி.

ஓம் நமோ நாராயணா!!!!!

கண்ணன் ஃபுல்டைம் பிஸிப்பா:)))

அதானே....துளசின்னா சும்மாவா?????

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

பாட்டுதான் வழவழாவே தவிர சாமிக்கு அலங்காரங்கள் படு சிரத்தையாச் செஞ்சுடறாங்களே!!!

said...

வாங்க மாதேவி.

ஆஹா.... டிவியில் ஸேவை சாதிச்சுட்டாரா????

இனிய அனுபவம்!!!!