Thursday, February 02, 2012

கப்பல் உடைஞ்சுருச்சுப்பா (கப்பல் மினித்தொடர் நிறைவுப்பகுதி)

பக்கத்து நாட்டுக்குப் பஞ்சுன்னால் ஆகாது:( அதுவும் சாமி விளக்குக்குத் திரியாப்போடும் பஞ்சு ஆகவே ஆகாதாம். அதுலே பூச்சிகளின் சின்ன முட்டைகள் ஒட்டிப் பிடிச்சிருக்குமாம். நாட்டுக்குள்ளே விட்டால் புழுப்பூச்சி பெருகி நாட்டுத் தோட்டங்கள் எல்லாம் பாழ் ஆகிடுமோன்னு பயம். இதுதான் ப(ய)யோ செக்யூரிட்டி. அத்தப்பார்த்து இங்கே நியூஸியிலும் சிலபல பொருட்களுக்குத் தடை. பத்து ரூபாத் திரியைக் கொண்டுவந்தால் இங்கே ஃப்யூமிகேட் பண்ணறோமுன்னு சொல்லி 150 டாலர் வாங்கிருவாங்க.

நாட்டுக்குள்ளே கொண்டுவரக்கூடாத பட்டியல் ஒன்னு ஏற்கெனவே நமக்கு அனுப்பி இருந்ததால் இந்தியாவில் இருந்து சாமான்களைப் பேக் செய்யும்போது கவனமாத்தான் இருந்தோம். நம்ம பேக்கர்ஸ் & மூவர்ஸ் ஏஜெண்டும் பேக் செய்யவந்த ஆட்களும் பார்த்துப்பார்த்துதான் சாமான்களைப் பொதிஞ்சாங்க. ஆனாலும் மொத்த லிஸ்டையும் ஒரு காப்பி
நியூஸி MAF பிரிவுக்கு அனுப்பணும். அதுலே ஒரு அஞ்சு பொதியைப் பிரிச்சுப் பார்க்கணுமாம். ஒரு பொதிக்கு 100 டாலர் வீதம் சார்ஜ் கட்டணும். வந்து பரிசோதிக்கும் ஆப்பீஸருக்கு வந்து போகும் நேரத்துக்கு மணிக்கு இவ்வளவுன்னு ஒரு தொகை..

பூஜா ஐட்டம்ஸ்ன்னு மூணு பெட்டிகள், செயற்கை மலர்கள் ஒரு பொட்டி, ஒரு கோத்ரெஜ் பீரோ! பார்க்கும்போது ஊர் ஞாபகம் வரட்டுமுன்னு வாங்கியாந்தது. (இந்த அலமாரி என்னமேரிக் கிடக்குமுன்னு பார்க்க அவுங்களுக்குமட்டும் ஆசை இருக்காதா?)

ஆப்பீஸரம்மா.... பரக் பரக்ன்னு பொட்டிகளை மூடி இருக்கும் பேக்கிங்கைக் கிழிச்சாங்க. பூஜா ஐட்டம்ஸ் முழுசும் சாமி விக்கிரகங்கள். உலோக ஐட்டம். பூச்சிபொட்டு குடி இருக்க வாய்ப்பில்லை! நம்ம பசங்களுக்கு என்னால் ஆன தாஜ்மஹாலுன்னு ஒரு பளிங்கு நினைவுச்சின்னம் வாங்கி வந்துருந்தோம். அதுலே பசங்க நினைவா படங்கள் வச்சு தோட்டத்தில் பிரதிஷ்ட்டை பண்ணனும். பொருத்தமான இடம் பார்த்துக்கிட்டு இருக்கோம். அலமாரி நிக்குது ஆறடி உசரத்துக்கு. அதையும் திறந்தா.... இரும்பு. ஒன்னும் சொல்றதுக்கில்லை. ஆர்ட்டிஃபீஷியல் ஃப்ளவர்ஸ்.... எல்லாம் இங்கே இருந்து இந்தியாவுக்கு வந்துட்டுத் திரும்பி வந்ததுதான். ஆனாலும் ஒரு முறை நாட்டைவிட்டு வெளியேறிட்டா...மறுபடி வரும்போது , அந்த நாட்டிலே இருந்து புதுசா வர்றது போலத்தானாம். அல்மோஸ்ட் ரியலா இருக்கும் பூக்கள். 'இங்கே வாங்குனதா? எங்கே?' ன்னு (ஆர்வமா) கேட்டுக்கிட்டுப் போய்ச் சேர்ந்தாங்க:)

ஒருவழியா நம்ம பொருட்கள் நல்லபடியா வந்து சேர்ந்துச்சுன்னு நிம்மதிப் பெருமூச்சு விட்டோம். அன்னிக்குக் காலை செய்தியில் 236 மீட்டர் நீளமான சரக்குக்கப்பல் ஒன்னு 1368 கண்டெய்னர்களோடு பயணப்பட்டுக்கிட்டு இருந்தது, தவறுதலாக் கரைக்குச் சமீபமா வந்து கடற்பாறையில் இடிச்சுத் தரைதட்டி நிக்குதுன்னு காமிச்சாங்க.

அறுபதுகளில், விவரம் தெரிஞ்ச வயசுலே இருந்த சென்னைவாசிகளுக்கு இப்போ ஒரு கொசுவத்தி ஏத்தலாம். 1966 வது ஆண்டு, நவம்பர் மாசம் அடிச்ச புயலில் மாட்டிக்கிட்டு மெரீனா கடற்கரையில் ஒரு கப்பல் வந்து தரைதட்டி நின்னு போச்சு. கப்பல் பெயர் S.S. Stamatis இதுவும் ஒரு கிரேக்க நாட்டுக்கப்பல்தான். அதைப்பார்க்க ஊரே திரண்டு போச்சு. அப்பெல்லாம் மெரினாக் கடற்கரை சமாதிகள் ஒன்னும் இல்லாம மணல் நிறைந்த பீச்சா மட்டுமே இருந்துச்சு. இப்போ வரிசை கட்டி நிற்கும் சிலைகள் கூட, அப்போ இல்லைன்னா பாருங்க. பதிவர் சந்திப்பு ஸ்பெஷல் காந்தித்தாத்தாவும், உழைப்பாளர் சிற்பமும் விதிவிலக்கு:-) ஜனங்கள் வந்து பார்த்து ஆனந்தமும் அதிசயமும் அடைய இந்தக் கப்பல்தான் உதவுச்சுன்னும் சொல்லலாம். அப்புறம் கேஸ் நடந்து அதைப்பிரிச்சு எடுக்க தீர்ப்பாகி ஏலம் விட்டு அப்புறப்படுத்த இருபது வருசங்களுக்கு மேல் ஆகிப்போச்சு. அதுக்குள்ளே சமாதிகள் சில வந்துருச்சு. மக்கள்ஸ்க்குப் புது வேடிக்கை கிடைச்சதும் பழையதை விட்டுட்டாங்க. இப்பக்கூட அந்தக் கப்பலின் keel அங்கேயே கிடக்குன்னு கேல்விப்பட்டேன்.

நியூஸியில் வடக்குத்தீவின் கிழக்குக்கரையோரம் Tauranga என்ற ஊருக்குப் பக்கத்திலேதான் ரெனா (RENA) தரைதட்டி நின்னுச்சு. 3351 கண்டெய்னர்கள் ஏத்திக்கிட்டுப் போகும் அளவுக்கு இது பெரிய சரக்குக் கப்பல். விபத்து நடந்த சமயம் இதுலே 1368 கண்டெய்னர்களும், 1700 டன் ஹெவி ஆயில், 200 டன் மரீன் டீஸல் நிரம்பி இருக்கு. கேப்டனோடு சேர்த்து 20 ஆட்கள் கப்பலில் வேலை செய்யறாங்க. ரொம்ப வேகமாப் போகாம நிதானமா மணிக்கு 17 நாட்டிகல் மைல் வேகம்தான். (தரைக் கணக்குலே 19.56 மைல் வேகம்)
சம்பவம் நடந்த அன்னிக்கு கப்பலின் கேப்டனுக்கு ஹேப்பி பர்த்டே! 43 வயசு! கொண்டாட்டம் நடந்துக்கிட்டு இருக்கு. பார்ட்டியில் எல்லாருமே கலந்துக்கிட்டாங்க போல. பாறைகளுக்கு சமீபமாப் போகுமுன்னேயே குறிப்பிட்ட தூரத்தில் எச்சரிக்கை மணி அடிச்சுருக்குமே! இது மாடர்ன் மெஷீன்கள், கருவிகள் எல்லாம் இருக்கும் கப்பல்தான். குஷியில் இருந்தவங்க யாருமே கவனிக்கலை. எது எப்படி இருந்தாலும் ஒருத்தர் கண்டிப்பா ட்யூட்டியில் இருந்துருக்க வேணாமா? என்னவோ போங்க. யாருக்கும் நேரம் சரியில்லை:(

ரெண்டு நாளைக்குப் பிறகுதான் விபரீதம் தெரியவந்துச்சு. பறக்க முடியாதபடி கருப்பா எண்ணெய்ப்பிசுக்கு படிஞ்ச பறவைகள் கரை ஓரம் ஒதுங்கி நின்னுருக்கு. ஐயோ.... கப்பல் அடிப்பக்கம் விரிசல்விட்டு எண்ணெய் கசிய ஆரம்பிச்சுருக்கு. அதுக்குள்ளே கப்பலின் கேப்டனை கைது பண்ணிட்டாங்க. கேஸ் புக் பண்ணியாச்சு. அலையில் அடிச்சுக்கிட்டு வந்த எண்ணெய் அங்கங்கே கடற்கரை மண்ணில் கோலிகுண்டுகளா உருண்டு கிடக்கு. பெரிய க்ளீனிங் அப் இருக்கேன்னு 'கான்ஸர்வேஷன்' பிரிவுலே இருந்து வாலண்டியர்கள் வேணுமுன்னு அறிவிப்பு வந்துச்சு. சொன்னால் நம்ப மாட்டீங்க..... இருபதாயிரம் பேர் 'நாங்க வந்து உதவத் தயார்'ன்னு சொல்லி இருக்காங்க.

அவ்ளோபேரை எங்கே எப்படித் தங்க வைப்பது, ஆக்கிப்போடுவதுன்னு ஒரு ரெண்டாயிரம் பேரை மட்டும் கூப்பிட்டு அவுங்களுக்கு மேலே போட்டுக்க ஓவரால், கைக்கு க்ளவுஸ், காலுக்கு கம்பூட்ஸ் எல்லாம் கொடுத்து கடற்கரையைச் சுத்தம் பண்ண ஆரம்பிச்சாங்க.

தரை தட்டுன கப்பல் ஒரு பக்கமா சாய ஆரம்பிச்சு அதுலே அடுக்கி வச்சுருந்த கண்டெயினர்கள் எல்லாம் தண்ணியிலே தொப் தொப்ன்னு விழுந்து அண்டாத்தண்ணியிலே தீப்பெட்டி போல மிதக்குது ஒரு பக்கம். ஒரு முன்னூத்திச்சொச்சம் இப்படி விழுந்து தண்ணியிலே அடிச்சுக்கிட்டுத் தானே பயணப்பட்டுப்போகுது. பின்னாலேயே துரத்திக்கிட்டுப்போய் அவைகளைப் பிடிச்சுவர ஒரு ரெக்கவரி கம்பெனி பாடுபடுது. அதுலே சிலது தண்ணீரின் அழுத்ததால் பிச்சுக்கிச்சு போல! பால்பவுடர் பாக்கெட்டுகள், மரக்கட்டைகள், ப்ளாஸ்டிக் சாமான்கள், காகிதங்கள்ன்னு மிதந்து வந்து கரையெல்லாம் குப்பை ஆக்கிருச்சு. சில கண்டெயினர்களை அப்படியே அலை அடிச்சுவந்து கரையில் ஒதுக்கிருச்சு.
ரெனாவில் சாமான்களை அனுப்பினவர்கள் எல்லாம்' லபோதிபோ'ன்னு வயித்துலே அடிச்சுக்கணும். என்னதான் இன்ஷூரன்ஸ் பணம் தரேன்னு சொன்னாலும் சில பொருட்கள் காசு கொடுத்தாலும் கிடைக்குமா? இடப்பெயர்ச்சிக்கு குடும்பத்துப் பொருட்களை அஸ்ட்ராலியாவுக்கு அனுப்புன ஒரு குடும்பம் அப்படியே மனசொடிஞ்சு போயிட்டாங்க. ஆறேழு தலைமுறையா இருக்கும் ஃபோட்டோ ஆல்பங்கள், நினைவுகள் எல்லாம் போச்சு. இன்னொருத்தர் தனது ஓய்வு நேரப்பொழுதுபோக்கா ஒன்பது வருசமா ஒரு மோட்டர்சைக்கிளை உருவாக்கி இருந்தார். அவ்ளோ உழைப்பும் போச்சு. கோபால் கம்பெனியில் கூட மூணு கண்டெயினர்கள் நிறைய ஸ்பெஷல் கேபிள்ஸ் அனுப்பி இருந்தாங்க. கண்டெயினர்கள் மீட்டெடுக்கப்பட்டாலும் எல்லாத்துலேயும் உப்புத்தண்ணீர் நுழைஞ்சு மொத்தமும் வீணாப்போச்சு:(

எண்ணையில் அகப்பட்டுக்கிட்ட பறவைகளையும், ப்ளூ பெங்குவின்கள், கடல்சிங்கங்கள், பெரிய டால்ஃபின் மீன்கள் எல்லாத்தையும் கரைக்குக் கொண்டுவந்து உடம்பைத் துடைச்செடுத்து, அழுக்கில்லாத தண்ணீரில் வச்சுக் காப்பாத்தி ஆகாரம் கொடுத்துன்னு இன்னொரு பக்கம் வேலைகள் மளமளன்னு நடந்துக்கிட்டே இருக்கு. பெரிய பெரிய செயற்கைக் குளங்கள் வச்சு ஜரூரா வேலை செய்யுது கான்ஸர்வேஷன் பிரிவு.

கப்பலில் இருக்கும் எண்ணெய்களைப் பம்ப் செஞ்சு வெளியே இடம் மாற்றும் பணி ஒரு பக்கம். ராட்சஸ க்ரேன்கள் வச்சு கண்டெயினர்களைக் காப்பாத்தும் வேலை ஒரு பக்கம். காலநிலை சரி இல்லை, கடல் கொந்தளிப்பு, மழை போன்ற காரணங்களால் வேலை நடப்பதில் காலதாமதம்.

சின்ன நாடான எங்களுக்கு இவ்வளவு மன அழுத்தம் தரக்கூடிய சம்பவம் தேவையா? தினமும் டிவிக்கு செமதீனி. பிரதமர் முதல் சாதாரண பார்லிமெண்ட் அங்கத்தினர் வரை கட்சி வேறுபாடில்லாமப் போய்ப் பார்த்து க்ளீனிங் அப் ஆட்களுக்கான உடுப்பைப் போட்டுக்கிட்டு அவுங்க பங்குக்கு மணலில் வந்து நிக்கும் எண்ணெய்க் கசடுகளையும் இறந்து போன பறவைகளையும், கரை ஒதுங்கிய கப்பல் குப்பைகளையும் பொறுக்கிப்போட்டு, கெமெராவுக்கும் போஸ் கொடுத்துட்டுக் கடமையை ஆற்றிக்கிட்டே இருக்காங்க.
கேப்டனையும் முதல் அதிகாரியையும் தவிர்த்து மற்ற கப்பல் பணியாளர்களை அவுங்கவுங்க ஊருக்கு அனுப்பியாச்சு. நிறைய பிலிப்பீனோக்கள் இருந்தாங்களாம். நாட்டையும் சுற்றுப்புற அழகையும் நாசமாக்கிட்டாங்கன்னு ஊர்மக்கள் கொலைவெறியில் இருக்காங்க. கையில் அம்புட்டா அவ்ளோதான்.

இவ்வளவு கலாட்டாவில் சாய்ஞ்சுக்கிட்டே போன கப்பலில் விரிசல் வந்து இதோ அதோன்னு மூணு மாசமா எங்களுக்கெல்லாம் இரத்த அழுத்தத்தை ஏத்திட்டு, இந்த ஜனவரி 6க்கு ரெண்டாப் பிளந்து விழுந்துருச்சு. ரெண்டு துண்டுக்கும் இடையில் முப்பது மீட்டர் இடைவெளி இப்போ.
கடலில் கனகாலத்துக்குக் கிடக்கப்போகும் ரெனாவை வச்சுக் காசு பார்க்க ஒரு சுற்றுலாக் கம்பெனி கையைத்தீட்டிக்கிட்டு இருக்காம். முழுகிப் பார்க்கும் ஆர்வம் உள்ளவர்களைக் கூட்டிட்டுப் போய் கடலில் மூழ்கியதைப் போய்ப் பார்த்துவர ஏற்பாடாம்.
படம்: 17 பேரை காவு வாங்கின சுற்றுலாக்கப்பல் Costa Concordia


இனி எந்தக் காலத்தில் எல்லாத்தையும் சுத்தம் செஞ்சு கப்பலைப்பிரிச்சு எடுப்பாங்களோ? கடவுளுக்குத்தான் வெளிச்சம். இந்த நிலையில் சுற்றுலாக் கப்பல் costa concordia ஒன்னு சரிஞ்சு விழுந்து பதினேழு மக்களைக் காவு வாங்கி இருக்கு இத்தாலியில். கப்பல்களுக்குக் கேடுகாலம் போல:(

கெட்டதுலே ஒரு நல்லதுன்னு பார்த்தா 'நம்ம' ரெனாவால் உயிர்ச்சேதம் ஒன்னும் இல்லை. வெறும் பொருட்சேதமே!

மினித்தொடர் நிறைந்தது.


39 comments:

said...

தமிழ்மணத்தில் 'அளி'க்க முடியலை. நண்பர்கள் யாராவது தயவு செய்து உதவுங்க.

said...

ஆறேழு தலைமுறையா இருக்கும் ஃபோட்டோ ஆல்பங்கள், நினைவுகள் எல்லாம் போச்சு. இன்னொருத்தர் தனது ஓய்வு நேரப்பொழுதுபோக்கா ஒன்பது வருசமா ஒரு மோட்டர்சைக்கிளை உருவாக்கி இருந்தார். அவ்ளோ உழைப்பும் போச்சு. கோபால் கம்பெனியில் கூட மூணு கண்டெயினர்கள் நிறைய ஸ்பெஷல் கேபிள்ஸ் அனுப்பி இருந்தாங்க. கண்டெயினர்கள் மீட்டெடுக்கப்பட்டாலும் எல்லாத்துலேயும் உப்புத்தண்ணீர் நுழைஞ்சு மொத்தமும் வீணாப்போச்சு:(


படிக்கும் போது மனது கஷ்டமாய் இருக்கிறது. பிறந்த நாள் கொண்டாட்டம் எவ்வளவு பேருக்கு மனதுக்கு சங்கடத்தை கொடுத்து விட்டது.

கடவுளுக்கு நன்றி.
பொருள் இழப்பு மட்டும், உயிரிழப்பு இல்லை என்று அறியும் போது கடவுளுக்கு நன்றி சொல்லத்தோன்றுகிறது.

உங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

said...

அருமையான நினைவுக்கடலில் தத்தளித்த நிகழ்வுகளை அழகாகப் பகிர்ந்திருக்கீங்க. தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இந்தக்காலத்திலும் சரக்கு மற்றும் பயணிகள் கப்பல்கள் கவிழ்வதும் சேதங்கள் உருவாவதும் கடல்வாழ் உயிர்கள் பாதிக்கப்படுவதும் வருத்தமான விஷயம்.

விடுபட்டிருந்த மற்றவற்றையும் இப்போதுதான் படித்தேன். சுவை குறையாமல் எழுதியது பாராட்டுக்குரியது.

said...

மிகவும் வருத்தம் தரும் நிகழ்வு.இந்த எண்ணை கசிவினால் சுற்றுச்சூழலுக்கு நிறைய கேடு ஏற்படுமே?

//பெரிய பெரிய செயற்கைக் குளங்கள் வச்சு ஜரூரா வேலை செய்யுது கான்ஸர்வேஷன் பிரிவு.//

வாயில்ல ஜீவங்களை பாதுகாப்பது சிறப்பான விஷயம்.

said...

அப்படியே நம்ம டைட்டானிக்கைப் பார்த்தாப்ல இருக்கு. கொஞ்ச நாளு முந்தி மும்பையின் ஜூஹு பகுதியில் கூட ரெண்டு கப்பல்கள் ஒவ்வொண்ணாக் கரை தட்டி, எண்ணெய்யெல்லாம் சிந்தி கடற்கரை மொத்தமும் பாழாச்சு.

said...

தமிழ் மணத்துக்கு என்னாச்சு?.. அக்காவுக்கு எல்ப் செய்யலாம்ன்னா, லிஸ்டுல இல்லைங்குது. அக்காவுக்கே இப்படின்னா எங்க கதி.. அவ்வ்வ்வ்வ்வ்வ்.

said...

1ம் தேதி திருமங்கை ஆழ்வார் பற்றி பதிவு போட்டேன், 31ம் தேதி என்கிறது.

தமிழமணம் உங்கள் பதிவு லிஸ்டில் இல்லை என்கிறது.
நேற்றிலிருந்து தமிழமணத்தோடு போரடிப் பார்த்து விட்டேன். தமிழ்மணத்தில் அளிக்க முடியவில்லை.
உங்களுக்கும் அதே பிரச்சினை எனத் தெரிகிறது.

said...

படிக்கும் போதே கஷ்டமாக இருக்கிறது... உயிர்சேதம் இல்லாததால் ஒரு விதத்தில் நிம்மதி...

நினைவுகளாக வைத்திருப்பவையெல்லாம் விலை மதிப்பில்லாதவையாயிற்றே.... பாவம்...

வாக்களிப்பதில் இப்படித்தான் பிரச்சனையாகிறது... என் பதிவிலும் கூட...பட்டியலிலேயே இல்லை என்கிறது... கூகுளிலில் செய்திருக்கும் மாற்றங்களால் தானாம்...

said...

ஹை... உங்க இடுகையை தமிழ்மணத்துல இணைச்சுட்டேன். கத்துக் கொடுத்த நம்ம வந்தேமாதரம் சசிக்கு நன்றியைச் சொல்லிக்கிறேன் :-)

said...

பாத்தேனே!, நம்ப மெட்ராஸ்ல, 1969-70
ல, அந்த கப்பல பாத்தேனே.

உங்க நாட்டு மக்களின் சேவை மனப்பானமை பாராட்டுக்கு உரியது.

said...

நல்ல பகிர்வு....

தமிழ்மணத்தில் பிரச்சனை இல்லை... பிளாக்கர் இப்போது நம் எல்லோர் தளத்தின் முகவரியையும் மாற்றி விட்டது - www.xyz.blogspot.com என்பதில் இருந்து www.xyz.blogspot.in என்று எல்லாமே மாறிவிட்டது.

தமிழ்மணம் இந்தப் பிரச்சனையை சரி செய்து கொண்டு இருப்பதாகக் கேள்வி... :)

said...

வாங்க கோமதி அரசு.

உண்மைதாங்க. உயிர்ச்சேதம் வராமல் இருக்கும்வரை நிம்மதிதான்.

தமிழ்மணம் கூட ஒரு அறிவிப்பு போட்டுருக்காங்க பார்த்தீங்களா?

கூகுள் செஞ்சுக்கிட்டு இருக்கும் மாற்றங்களால் இப்படி எல்லாம் நடக்குதாம்.

said...

வாங்க கீதா.

அண்டை வீ(நா)ட்டுக்காரரா இருக்கீங்க!!!!! வருகைக்கு நன்றிகள்.

எந்த ஊரு? சிட்னி, ப்ரிஸ்பேன் என்றால் சொல்லுங்க. வரும்போது சந்திக்கலாம்.

said...

வாங்க ராம்வி.

வாயில்லா ஜீவன்கள் படும் அவஸ்தைதான் ரொம்பக் கொடுமை.

உதவி வர்றதுக்குள்ளே பல உயிர்கள் நஷ்டப்பட்டுப் போச்சு:(

said...

வாங்க அமைதிச்சாரல்.

கைம்மாறு எப்படி செய்யன்னு யோசிக்கிறேன்!!!!!!
உதவிக்கரம் உடனே நீட்டுனதுக்கு நன்றிப்பா.

உயிர்வாழத் தேவையான பொருட்களில் கணினியும் சேர்ந்துருச்சே:-)

said...

வாங்க கோவை2தில்லி.

இணைக்க முடியலை என்பது எவ்ளோ மன உளைச்சல் தருதுன்னு பாருங்க!!!!!

விரைவில் சரியாகுமுன்னு நம்பலாம்.

said...

வாங்க வெற்றிமகள்.

ஆஹா..... ஸ்டமாட்டீஸ் பார்த்த சாட்சி கிடைச்சுருச்சு:-))))))

பொதுவா நியூஸி நாடும் மக்களும் கொஞ்சம் naive தான்.

சில நாட்டு மக்கள் இந்த குணத்தைத் தங்களுக்குச் சாதகமா பயன்படுத்திக்கறாங்க:(

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

அந்தந்த நாட்டுக்குன்னு தனியா அமைச்சுட்டாங்க போல! எனக்கு co.nz ன்னு வருது.

நல்லவேளையா நம்ம சசிகுமார்ர் வந்தேமாதரம் பதிவில் விளக்கம் கொடுத்து மாற்று ஏற்பாடுகள் சொல்லி இருக்கார்.

http://www.vandhemadharam.com/2012/02/url.html

said...

அன்புள்ள கோமதி அரசு,

வாழ்த்துகளுக்கு மனமார்ந்த நன்றி.

said...

இனிய பிறந்த நாளில் அன்புடன் நல்வாழ்த்துக்கள்.

மாதேவி.

said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

said...

வாங்க மாதேவி.

வாழ்த்துகளுக்கு நன்றி!

said...

வாங்க ஷர்புதீன்.

வாழ்த்துகளுக்கு நன்றி!

இன்று புதிதாய் பிறந்தேன்:-)))))))

said...

துளசீம்மா: என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளும்,வண்டி வண்டியாக ‘இலவச’ ஆசிகளும்! அமோகமாக இருக்கவேண்டும்!

said...

உங்க ஊரா இருந்ததால இவ்வளவாவது நடக்கிறது நம்ம ஊரை நினைச்சுப் பாருங்க.
நல்ல வேளை உயிர் சேதம் இல்லை.
என்னமோ ஆகிப் போச்சு உங்க ஊருக்கு.
தொலைபேசி என்ன ஆச்சுப்பா. உங்க நம்பர்ல யாரோ பேசறாங்க???

said...

Happy birthday teacher! Pl. have kesari on my behalf :D

said...

தமிழ்மணத்தில் 'அளி'க்க முடியலை. நண்பர்கள் யாராவது தயவு செய்து உதவுங்க.//

தமிழ்மண முகப்பு பக்கத்துலருக்கற பாக்ஸ்ல உங்க பதிவு விலாசத்த குடுங்க. அதுவே தேடி கண்டுபிடிச்சிரும். நம்ம விலாசத்தையெல்லாம் .காம் லருந்து .இன் அப்படீன்னு பளாகர மாத்திட்டதால வந்த பிரச்சினை இது. நம்மளுதெல்லாம் ஒசி தானே அதான் நம்மள கேக்காமயே மாத்திட்டான்:)) இருந்தாலும் உங்க பதிவதான் தேடி வந்து வாசிக்கிறாங்களே... பின்ன எதுக்கு கவலை? செளக்கியமா? ரொம்ப நாளாச்சி இங்க வந்து!!

said...

துளசி, உங்களுக்கு ஒரு விருது என் வலைத் தளத்தில்.

வாருங்கள், பெற்றுக் கொள்ளுங்கள்.

said...

டீச்சர், கப்பல் கவுந்த மாதிரி ஏன் கன்னத்துல கை வெச்சிருக்கன்னு கேக்குறதும் ரொம்பப் பழைய வழக்கம்.

அதுக்குக் காரணம் நல்ல நிலையில் இயங்கும் கப்பல் என்பதே ஒரு பெரிய சொத்து. அது ஏற்றிச் செல்லும் பொருள்களின் அளவும் நிறைய. இன்னைக்கும் கப்பலை விடப் பெரிய வண்டி சரக்கு ஏத்தீட்டுப் போக இல்லையே. கப்பல்தானே.

அதுனாலதான் கப்பல் தரை தட்டுவதும் கவிழ்வதும் அவ்வளவு பெரிய துயரங்கள்.

முந்தியெல்லாம் மரக்கப்பல்கள்தானே. யோசிச்சுப் பாருங்க. அதுலதான் மக்கள் உலகம் சுத்தியிருக்காங்க. உண்மையிலேயே துணிச்சல்காரங்கதான். அவங்களைப் பாராட்டாம இருக்க முடியலை.

இந்தத் தொடர் முடிஞ்சது. அடுத்த தொடர் எப்போ? :) நம்ம கதை நமக்கு ஆகனும்ல.

said...

ohhh ithaith than kappal kavintaa mathirnnu solvangala?.. nallayirukku

said...

அடுத்த தொடர் எப்போ? :)

said...

வாங்க பாரதி மணி ஐயா.

சொன்னா நாம்ப மாட்டீங்க..... முந்தாநேத்து உங்களைப் பார்த்தோம். முதலமைச்சராத்தான்:-)

நெருங்கிய உறவைத் திரையில் பார்க்கும்போது மனம் கொள்ளாத மகிழ்ச்சி!!!!!

உங்கள் ஆசிகளுக்கும் அன்புக்கும் மனமார்ந்த நன்றிகள்.

என்ன தவம் செய்தேன்.......

said...

வாங்க வல்லி.

மனித உயிர்ச்சேதம் இல்லைன்னு மகிழலாம்.

நீங்கள் போனில் கேட்ட வெள்ளைக்காரக் குரல்..... நம்ம அம்முவோடதுதான்:-)))))

said...

வாங்க பொற்கொடி.

கேசரி இல்லைப்பா.

அக்காரவடிசல்தான். அதுவும் தோழி காலங்கார்த்தாலே சுடச்சுட கொண்டுவந்து கொடுத்தாங்க. கூடவே ரோஜாப்பூங்கொத்தும் நம்ம பெருமாள் & தாயாருக்கு ரெண்டு மல்லிச்சர மாலையும்!

பெருமாள் பெரும் ஆள். தனக்கு வேணுங்கறதை யார் மூலமாவது சாதிச்சுக்குவார். என்ன சாமர்த்தியம் பாரேன்னு மாய்ஞ்சு போயிட்டேன்!

வாழ்த்துகளுக்கு நன்றிப்பா.

said...

வாங்க டிபிஆர் ஜோ!
வணக்கம். நலமா? ரிட்டயர்டு லைஃப் எப்படிப் போகுது?

நல்ல நாளாத்தான் பார்த்து வந்துருக்கீங்க!!!!!!

அப்படி யாரும் தேடிவந்து படிக்கிறாங்களா என்ன? இப்பவும் அப்பவும் அதே 1100 பேர்தான் வாரத்துக்கு:-)

நம்ம வந்தேமாதரம் சசி வழி காமிச்சுருக்கார்.

said...

கோமதி அரசு.

இப்படி விருது கொடுத்து விருந்து வச்சுட்டீங்களே!!!!!!!

மனமார்ந்த நன்றிகள்.

said...

வாங்க ஜீரா.

236 மீட்டர் நீளத்தை நினைச்சுக்கூடப் பார்க்க முடியலை. பிரமாண்டம். அதான் அப்படி எல்லாத்தையும் ஏத்திக்கிட்டுப்போகுது!

பாய்மரக் கப்பல் பயணம் படு த்ரில்லிங்கா இருந்துருக்கும். அஹோய்..... நிலம் தெரியுது!!!!!!

இந்த ஆபத்து மட்டும் இல்லைன்னா பேசாம ஒரு கப்பலை 'வாங்கி' வச்சுக்கலாம். உலகம் சுற்றிவரவும் அங்கங்கே பதிவர் சந்திப்பு நடத்தவும் ஜோரா இருக்கும்.

அடுத்த தொடர் ஒன்னு சிந்தனையில் உருவாகிக்கிட்டே இருக்கு. (ச்சும்மா ஒரு கெத்துதான்:-)))))

said...

வாங்க பித்தனின் வாக்கு.

ஊரே கன்னத்துலே கையை வச்சுக்கிட்டுத்தான் இருக்கு இப்போ!!!!!

லேசில் முடியும் காரியமாத் தெரியலை:(

said...

வாங்க கமல்.

அடுத்த தொடர்.......... ஆரம்பிச்சுடலாம். நோ ஒர்ரீஸ்:-)))))