Tuesday, February 21, 2012

ஞானக்கண் ஒன்று இருந்திடும் போதினிலே..... (நேற்றையப் பதிவின் தொடர்ச்சி.)

ஒரு 11 வயசுப் பையன் Bபென் செஞ்சுவச்ச டிஸைந்தான் மாஸ்டர் பீஸ்ன்னு நினைக்கிறேன். செஞ்ச விவரம் தகவல் பலகையில். எங்க கதீட்ரலைச் செஞ்சு வச்சுருக்கார். தகவலில் 'உள்ளே பாரு உள்ளே பாரு'ன்னதும் உள்ளே பார்த்தேன். ஓட்டைக் கண்ணுக்கு ஒன்னுமே தெரியலை. மகளைப் பார்க்கச் சொன்னேன். அதுக்குள்ளே 'நிறையப்பேர்' வரிசையில் நின்னுட்டாங்க. எல்லோரும் போனதும் நான் இன்னொருக்கப் பார்க்கலாமுன்னு குனிஞ்சப்பதான் ஐடியா வந்துச்சு. ஊனக்கண்ணில் தெரியாதது ஞானக்கண்ணில் தெரியாதா? மூணாவது கண்ணை உள்ளே அனுப்பினேன். சூப்பர்! ஆனால்.... சோகம்:(
போன வருசம் இதே சமயம் நடந்த நிலநடுக்க அழிவு உள்ளே அப்படியே இருக்கு. அன்னைக்குப் பூட்டுன கோவிலை இதுவரைக்கும் பொதுமக்களுக்காகத் திறந்து காமிக்கலை. மீட்புப்பணிக்கு உள்ளே போன காவல்துறையினர் எடுத்த படங்களைத்தான் எங்களுக்குக் காமிச்சுக்கிட்டு இருக்காங்க. போலீஸ் ஃபோட்டோக்ராஃபர்ஸ் எடுத்த படங்களைத் தொகுத்து
அவுங்களே ஒரு புத்தகம் வெளியிட்டு இருக்காங்க. என்ன ஏது எப்படி இருந்துச்சுன்னு தெரிஞ்சுக்கும் ஆர்வத்தில் இதை வாங்காத வீடுகளே இந்த ஊரில் இருக்குமான்றது சந்தேகம்தான்.
உள்ளே பார்த்தால்.................

தோட்டத்தின் புல்வெளிகளைப் பாழாக்காமல் பரவலா நல்ல இடைவெளி விட்டு அங்கெ ஒன்னு இங்கெ ஒன்னுன்னு அலங்காரக் காட்சிகளை வச்சுருப்பதால் சனக்கூட்டம் சட்ன்னு கண்ணுக்குப் படலை. ஆனாலும் நாலுபேருக்கு மேல் இருந்தால் கூட்டம் என்ற கொள்கையின் படி.... தோட்டம் முழுசும் கூட்டம்தான்.
முறுக்கு மரம் ஒன்னு முறுக்கிக்கிட்டே பிரமாண்டமா நிக்குது. பேசாம இதுக்கு மாப்பிள்ளை மரமுன்னு பேர் வச்சுடலாம். பெரிய மரங்களுக்குப் பக்கத்தில் நிக்கும்போதுதான்..... மனுசன் எவ்ளோ சின்னவன்னு புரியுது! பெரிய புல்வெளி ஒன்னில் இசை நிகழ்ச்சிக்காக சின்னதா ஒரு மேடை அமைச்சுருந்தாங்க. பாட்டுக்கேக்க ஒரு கூட்டம் ஆல்ரெடி கூடி இருக்கு. பாடகர்கள் கிதார்களை ட்யூன் பண்ணிக்கிட்டும் ஸ்ருதி எத்தனை கட்டைன்னும் பார்த்துக்கிட்டு மேடைக்குப்பின்னால் நின்னுக்கிட்டு இருந்தாங்க.(ஷண்முகி மாமி நீங்க எத்தனை கட்டை?....ம்ம்ம்ஹும்....அஞ்சு) புல்வெளியின் ஒரு பக்கத்தில் மூணு கழிப்பறைகள்.
எனக்கு நியூஸியில் பிடிச்ச விஷயம் இந்த ஏற்பாடுகள்தான். எத்தனை சின்னக்கூட்டமா இருந்தாலும் பொது நிகழ்ச்சின்னதும் மக்களின் இயற்கை அழைப்புக்கு ஏற்பாடு செஞ்சுட்டுதான் மறுவேலை. வீடு கட்ட, இல்லே இடிக்கன்னு எதா இருந்தாலும் பணியாட்களுக்கான கழிப்பறை ஒன்னு கொண்டுவந்து வச்சுட்டுத்தான் வேலையை ஆரம்பிப்பாங்க. அதான் ஊர் நல்லா சுத்தமா இருக்கு. மகளிடம் நல்ல ஏற்பாடுன்னு சொல்லிக்கிட்டே அந்தப் பகுதியைக்கடந்து போறோம், கண்முன்னே.......

இப்படி ஒரு கைகாட்டி. அடக்கடவுளே இதுவுமா காட்சிக்குன்னு போய்ப் பார்த்தால்..... எங்க ஊரு மக்கள்ஸ்க்கு நகைச்சுவை உணர்ச்சி ரொம்பவே அதிகம் என்பதும் துன்பத்திலும் சிரிப்போம் என்பதும் உண்மையாச்சு:-)

நம்ம ஹென்றி அதாங்க..... க்ரஹாம் ஹென்றி, ஆல்ப்ளாக்ஸ் ரக்பி குழுவின் பயிற்சியாளர் டாய்லெட்டில் உக்கார்ந்துருக்கார். உலகக்கோப்பையை நியூஸிக்கு ஜெயிச்சுக் கொடுத்தவர். இப்ப இவர் வெறும் ஹென்றி இல்லை. ஸர் பட்டம் கொடுத்து கௌரவிச்சுருக்கு அரசு. ஸர் க்ரஹாம் ஹென்றி.
ரெண்டாவது கழிப்பறையில் இந்த ஊரின் கஷ்மீர் பகுதியில் நிலநடுக்கம் காரணம் ப்ளம்பிங் சேதமடைஞ்ச ஒரு வீட்டம்மா. இந்த நிலையிலும் வீட்டுத்தோட்டத்தை அழகாப் பராமரிச்சு வச்சுருக்காங்க. பொதுவா கழிப்பறை என்ற இடத்தை ஏனோ தானோன்னு விடாம, உண்மைக்குமே நாம் கொஞ்சம் அலங்கரிச்சு வைக்கணும். சின்னதா ரெண்டு செடிகளோ, இல்லை பூச்சாடியோ வச்சு கெட்ட மணத்தைபோக்க ஏர் ஃப்ர்ஷ்னர், நல்ல மணத்துக்கு ரெண்டு நாப்தலீன் உருண்டைகள், இப்படிப்போட்டு வச்சால் மனசுக்கு ரிலாக்ஸா இருக்கும்.
மூணாவதா பழைய காலத்து லாங் ட்ராப். பார்த்தாலே நடுங்கும்விதமா ...... ரிமோட் ஏரியாக்களில் இன்னும் சில இப்படி இருக்கும். ஆனால் கழிப்பறை இல்லாமல் மட்டும் இருக்கவே இருக்காது. (கழிப்பறையின் அவசியம் இன்னும் நம்ம நாட்டு மக்களுக்குப் புரியலையேன்னு நினைக்கும்போது மனசுக்குக் கஷ்டமாத்தான் இருக்கு. வந்தா வந்த இடத்தில்ன்னு..... ப்ச்)
இந்தப் பக்கம் ரெண்டு மூணு ரெயிண்டீர் வகை மான்கள் நின்னுக்கிட்டு. இருக்கு. ஓடிட்டா யார் போய் புடிச்சாறது? அதுவும் தோட்டத்துலே இருக்கும் செடிகளில் வாய் வச்சுட்டா..... எச்சில் ஆகிடாது? நல்லவேளை பட்டிக்குள்ளே நிக்குந்துங்க. அலங்கார வளைவுக்கு அங்கொரு தாற்காலிக அமைப்பு. உள்ளூர் நர்ஸரியின் உபயம்.மெண்டல் ஆர்ட்


என்வைரொன்'மெண்ட்டல்' ஆர்ட்ன்னு கூந்தல்பனையின் மட்டைகளை வச்சு ஒன்னு, ஒன்னும் புரியலை. அப்ப இது மாடர்ன் ஆர்ட்:-) பெரிய பந்துபோல ஒன்னு வச்சு அதுலே இங்கே ஒரு வகைச்செடியின் நல்ல பாசிமணி போல் இருக்கும் ஆரஞ்சுக் காய்களை ( a kind of berry) குண்டூசி வச்சுக் குத்தி வச்சுருக்கு, டிஸைனைப்பார்த்தால் தென் அமெரிக்காவோன்னு தோணல். பக்கத்துலே அந்தக் காய்கள் கொத்து ஒன்னு கிடக்கு. கொஞ்சம் ஊசியும் வச்சுருந்தால் என்ன? நாமும் நம்ம பங்குக்கு ஒரு நாட்டையோ தீவையோ உண்டாக்கி இருக்கலாமுல்லெ?

ஆரஞ்ச்பெர்ரி

தோட்டத்தில் வழக்கம்போல் வருசாவருசம் அலங்கரிச்சு வைக்கும் பாத்திகள் இந்த வருசம் குறைவுதான். மயில் நீரூற்றுலே தண்ணீர் பொங்கிவந்துக்கிட்டு இருக்கு. நல்லவேளை நிலநடுக்கத்தில் பழுதாகலை. இதுக்கும் மயிலுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லைன்னாலும் மயில்போல நாலு பறவைச்சிற்பங்களை அதில் வச்சுருக்காங்க. சரியாச்சொன்னா இந்த நீரூற்றுக்கு வயசு 101. அப்போ பார்லிமெண்ட் அங்கமா இருந்த ஹானரபிள் J T Peacock என்றவர் ஊரை அழகுபடுத்தும் திட்டத்துக்காக இங்கிலாந்துலே இருந்து இங்கே கொண்டுவந்து வச்சார். அதான் அவர் பெயரால் பீகாக் ஃபவுண்டெய்ன். ஒரு காலத்துலே கலர்ஃபுல்லா அடிச்சுவச்ச நிறங்களைக் காணோம். அதைப்பற்றிக் கவலைப்பட நேரமில்லாத நடந்துபோன நிகழ்வுகளின் மௌன சாட்சிகளான வாத்துகளும், கடல்புறாக்களும் அங்கங்கே இடம்பிடிச்சு உக்கார்ந்திருந்தன,
பீகாக் பவுண்டெய்ன்

இப்ப நாம் தோட்டத்தின் மெயின் கேட்டுக்கு வந்துருந்தோம். சுற்றுலாப்பயணிகள் பயன்படுத்தும் வாசல் அது. தொட்டடுத்து மியூஸியம் இருப்பதால் அங்கே போய்ப் பார்த்துட்டு இங்கேயும் எட்டிப் பார்ப்பாங்க. நாம்தான் உள்ளூர்வாசிகளாச்சே.....புழக்கடை வழிகள் ரெண்டில், ஒன்னில் வந்திருந்தோம்.
கச்சேரி களை கட்டியாச்சு

அநேகமா எல்லாத்தையும் பார்த்துட்டோமுன்னுதான் நினைப்பு. கிட்டத்தட்ட ஒன்னரைமணி நேரம் நடந்துருக்கோமே! தகவல் நிலையத்தில் ப்ரோஷர் வாங்கியாந்திருக்கலாம். திரும்பிப்போகும் வழியில் பாட்டுக்கச்சேரி களைகட்டி இருந்துச்சு. வரவேற்பூ குளத்தில் ஆறு மக்களுடன் ஒரு இளம்தாய். முதல் பிரசவமாத்தான் இருக்கணும். கண்ணும் கருத்துமாப் புள்ளைகளைக் கவனிக்குது. சின்னதுகள் சொன்ன பேச்சைக் கேக்காம தாயை விட்டு மறுபக்கம் ஓடுவதும் கொஞ்சதூரம் போய் சட்ன்னுத் திரும்பிப்பார்த்து லபோதிபோன்னு தாயை நோக்கி ஓடியாறதுமா...ஜாலியா இருக்குதுங்க.
இளம்தாய்

தகவல் அலுவலகத்தின் வாசலிலேயே மலர்க்காட்சி விவரங்கள் வச்சுருந்தாங்க. மொத்தம் 12 டிஸ்ப்ளே! கண்ணை ஓட்டிட்டு எல்லாம் பார்த்துட்டோமேன்னு ........

கார்டன் கஃபே இருக்கே. காஃபி குடிக்கலாமான்னு மகள் கேட்டதால் உள்ளே நுழைஞ்சு வரிசையில் நின்னோம். புதுக்காப்பிக்கொட்டை அரைக்கும் வாசனை 'கம்'ன்னு தூக்குது.,. மணம் பிடிச்சுக்கிட்டே வரிசையில் முன்னேறி கவுண்டர் கிட்டே போகும்போது காஃபி வேணாம் ஐஸ்க்ரீம் வாங்கலாமான்னாள். நோ ஒர்ரீஸ்....வாட் எவர் யூ லைக்.......
கேஃபே வாசலில் கண்ணுக்கு ஒரு விருந்து


ரெண்டு ஐஸ்க்ரீம் (ராஸ்பெர்ரி வேணாம்) வாங்கிக்கிட்டு வரவேற்பூ பக்கத்தில் இருந்த பெஞ்சில் உக்கார்ந்து குளமெங்கும் நீந்தியோடிக் கும்மாளம் போடும் வாத்துகளைப் பார்த்து ரசிச்சுக்கிட்டே தின்னுட்டு நடை பாலத்தைக் கடந்து வீடுவந்து சேர்ந்தோம். பாலத்தின் கீழே ஓடும் நதியில் ஒரே வாத்துக்கூட்டம். ஏராளமான பெண்களுக்கு நடுவில் பச்சைக் கழுத்துடன் ரெண்டு கிருஷ்ணாஸ். ஜலக்ரீடை:-)))
கைப்பையில் இருந்த மலர்க்காட்சி விவரங்களை எடுத்து மேஜையின் வைக்கும்போது பார்க்கிறேன்..... அச்சச்சோ..... யானையை விட்டுட்டேனே:( அம்மாம் பெரிய உருவம் கண்ணில் படாத மர்மம் என்ன? மார்ச் நாலுவரை இருக்கு. இன்னொருநாள் போய் கண்டுகிட்டு வரணும்.


PIN குறிப்பு:
நாளை 22 ஃபிப்ரவரி, 185 உயிர்களைக் காவு வாங்கிய நிலநடுக்கத்தின் முதலாம் ஆண்டு நினைவுநாள். தோட்டத்தில் காலை பத்து மணிக்கு ஒரு நினைவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செஞ்சுருக்காங்க. நினைவுச்சின்னம் ஒன்னும் திறந்து வைக்கப்போறாங்க. விபத்தில் உயிரிழந்த அனைத்து மக்களுக்கும் நகர மக்களின் இரங்கல்கள்:(


42 comments:

said...

உங்கூர் அழகை நாங்களும் ஞானக்கண்ணால பார்த்துக்கிட்டோம்..

ஆமா,.. இத்தனை வருஷமாச்சே, இன்னும் அந்த வில்லை நீங்க கீழே வைக்கலையா?.. நல்லாத்தான் இருக்கு கோதண்டராமி போஸ் :-))))))

said...

மிக அழகான படங்கள்.சிறப்பான தகவல்கள்.மிக்க நன்றி நாங்களும் ரசிக்க பதிவிட்டதற்கு.

//கழிப்பறையின் அவசியம் இன்னும் நம்ம நாட்டு மக்களுக்குப் புரியலையேன்னு நினைக்கும்போது மனசுக்குக் கஷ்டமாத்தான் இருக்கு.//

வருத்தம் தரும் விஷயம் தான் மேடம்.

said...

வாங்க அமைதிச்சாரல்.

த்ரேதா யுகத்தில் ராமன் பூமியில் விட்டுப்போன (கோ)தண்டத்தை அன்னிக்குத்தான் பார்த்தேன். அது இதுதானான்னு சம்சயம். எதுக்கும் நாண் பூட்டிப் பார்க்கலாமுன்னா..... அதுலே பாதியைக் காணோம்.

இனி ராமன் திரும்பிவந்ததும்தான் விசாரிக்கணும்:-)))) மூணு நாள் இருக்கு!

said...

மாப்பிள்ளை மரம் - பெயரும், மரமும் நல்லாருக்கு.

கையில வில்லைப் பார்த்ததும் நானும் அமைதிஅக்கா போலவே நினைச்சேன். ஆனா, ஒருவேளை இது மகளுக்காக வச்சுக் காத்திருக்கும் வில்லோன்னு டவுட்...

நடுவுல போற ரெண்டுபேர் மட்டும் ‘கிருஷ்னாஸ்”னு எப்படிக் கண்டுபிடிச்சீங்க?

//கழிப்பறையின் அவசியம் இன்னும் நம்ம நாட்டு மக்களுக்குப் புரியலையேன்னு //
நேத்தோ முந்தாநாளோ படிச்சேன்... ஒரு மத்திய அமைச்சர் சொல்லிருக்கார். “டெல்லியில கழிப்பறை வசதி இல்லாத இடத்தில், பெண்களே கழிவறை வேண்டுமெனக் கேட்காமல், மொபைல் ஃபோன் வேண்டும் என்பதில்தான் ஆர்வம் காட்டுகின்றனராம்”. பழகிப்போச்சு போல!!

said...

தகவல்களும் படங்களும் சுவாரஸ்யம். முறுக்கிப் பிழிஞ்ச மரமும், சிலுசிலு ஓடையில்நீந்தும் வாத்துகளும் அழகு.
குண்டு குண்டாய் வண்ணப்பூக்கள் கண்ணுக்கு நல்ல விருந்து.

/விபத்தில் உயிரிழந்த அனைத்து மக்களுக்கும்/

எங்களது அஞ்சலிகளும்.

said...

Very good photoes and details, as usual.

Thulasi Madam: Pl. send your mail ID to me (snehamohankumar@yahoo.co.in)

said...

@ஹூஸைனம்மா,

//நடுவுல போற ரெண்டுபேர் மட்டும் ‘கிருஷ்னாஸ்”னு எப்படிக் கண்டுபிடிச்சீங்க?//

கோபிகைகள் அரண் மாதிரி புடைசூழ்ந்திருக்க ஸேஃபா இருக்கறதுலேர்ந்தே தெரியலையா.. ;-)

said...

//எத்தனை சின்னக்கூட்டமா இருந்தாலும் பொது நிகழ்ச்சின்னதும் மக்களின் இயற்கை அழைப்புக்கு ஏற்பாடு செஞ்சுட்டுதான் மறுவேலை. வீடு கட்ட, இல்லே இடிக்கன்னு எதா இருந்தாலும் பணியாட்களுக்கான கழிப்பறை ஒன்னு கொண்டுவந்து வச்சுட்டுத்தான் வேலையை ஆரம்பிப்பாங்க.//

சொல்ல விட்டுப்போனது..

இங்கேயும் அப்பார்ட்மெண்ட் கட்டும் வேலை ஆரம்பிக்கும்போது முதல் வேலையா ரெண்டு மூணு கழிப்பறைகள், குளியலறைகள்(சுமாரான க்வாலிட்டியில்) கட்டிட்டுத்தான் வேலையை ஆரம்பிப்பாங்க. அவங்க தங்கிக்கறதுக்கும் தற்காலிக குடியிருப்புகளை கட்டிக்குவாங்க. வேலை முடிஞ்சு பொட்டியைக் கட்டறப்ப இடிச்சுட்டுப் போயிருவாங்க.

பொது நிகழ்ச்சிகள்ல ஏற்பாடு செஞ்சுக்கறதுன்னா நடத்துறவங்க ஃபைனான்ஸ் ஹெல்த்தைப் பொறுத்தது.

said...

அழகிய படங்கள்... அதை விட அழகான விவரங்கள்....

//கழிப்பறையின் அவசியம் இன்னும் நம்ம நாட்டு மக்களுக்குப் புரியலையேன்னு நினைக்கும்போது மனசுக்குக் கஷ்டமாத்தான் இருக்கு.//

கஷ்டம்தான்...

said...

உங்கள் அனுபவம் எங்களுக்கும் ஏற்பட்டது...

நான் ரொம்ப ரசிச்ச விஷயங்கள்....மாப்பிள்ளை முறுக்கு மரம், ஷண்முகி மாமி எத்தனை கட்டை, ரெண்டு கிருஷ்ணாஸ்..

said...

அழகான படங்கள் அருமையான விவரிப்பு .
அந்த ட்வின் க்றிஷ்ணாசும் கோபிகையரும் ஆஹா அழகு .

said...

பார்த்தேன்
ரசித்தேன்
வந்து பார்க்க நினைத்தேன்
தொலைவினை நினைத்து நான் மலைத்தேன் :)

அழகு அள்ளிக்கிட்டு போகுது.

சங்க இலக்கியங்களில் இயற்கை அழகை விளக்கியிருக்கிற மாதிரி நீங்க விளக்கியிருக்கீங்க. நம்மூரும் முந்தி இப்பிடி இருந்துச்சாம் :)

ஆகையினால உங்களுக்கு வாத்தைப்பாடினியார்னு பட்டம் கொடுக்கலாம்னு நெனைக்கிறேன். என்ன சொல்றீங்க? :)

said...

வாங்க ராம்வி.

எது முக்கியமுன்னு சனங்களுக்குத் தெரியலையேப்பா:(((((

said...

வாங்க ஹுஸைனம்மா.

வாத்தாண்டை விசாரிச்சேன். அப்ப மல்லார்ட்கேர்ள் சொல்லுது,
'மல்லார்ட் பாய்ஸ் அழகாப் பச்சைவண்ணக் கழுத்தோடு மின்னுவாங்க. அதுக்காக பொண்ணுங்க கலர் இல்லைன்றதை ஒத்துக்கமாட்டோம். அழகை ஆம்பிளைமாதிரி வெளிக்காட்டாம அருமையாப் போற்றி இறக்கைக்குள் ஒளிச்சு வச்சுக்குவொமுல்லெ!'

மக'வில்
சரிப்படாதுன்னு ...... வேணுமுன்னா Gகதை வச்சுக்கலாம்:-))))

said...

வாங்க ராமலக்ஷ்மி.

அஞ்சலிகளுக்கு நன்றிகள். இன்னிக்குக் காலையில் இருந்தே ரொம்ப எமோஷனலா இருக்கு ஊரே!

கவர்னர் ஜெனெரல், பிரதமர், ஆளுங்கட்சி எதிர்க்கட்சி தலைவர்கள், முப்படை தலைமைகள் இப்படி
எல்லோரும் வந்து குவிஞ்சுட்டாங்க. மெமொரியல் சர்வீஸ் நடந்துச்சு:(

said...

வாங்க மோகன் குமார்.

ரசிப்புக்கு நன்றி.

மடல் ஒன்னு அனுப்பி இருக்கேன்.

said...

வாங்க அமைதிச்சாரல்.

வகுப்புலே கவனமா இருந்து கேள்வி கேக்கும் மக்களுக்கு உதவி செய்து, சிறப்பு மாணவி என்ற பட்டத்தை அடைஞ்சதுக்கு பாராட்டுகள்.

மும்பை கொஞ்சம் தேவலைதான் போல! (தாராவியைத் தவிர்த்து)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

கஷ்டத்தை இன்னும் உணரலைன்னு நினைச்சால் இன்னும் கஷ்டமாப் போயிருது!

said...

வாங்க பாசமலர்.

ஷண்முகியை யாரும் கவனிக்கலையேன்னு இருந்தேன்.....

கூர்ந்த வாசிப்புக்கு நன்றி:-))))))

said...

வாங்க ஏஞ்சலீன்.

அழகை ரசிச்சதோடு பாராட்டி இருக்கீங்க பாருங்க..... அங்கெ..... நிக்கறீங்க:-))))

said...

வாங்க ஜீரா.

வாத்தை(யும்)பாடி...நீ யார் ன்னு கேட்டால் என்ன சொல்றது:-))))

உலகம் சுருங்கிப்போச்சாம். இப்பெல்லாம் 'தொலைவு' ஒரு பிரச்சனையே இல்லை(யாம்)

ஜனவரி மாதம் நல்லது!

said...

ஷண்முகியை மறக்க முடியுமா. நினைக்கறவங்களையும் பாராட்டணும்.:)இதென்ன ராமி போஸ்?
கோபால் ஊருக்குப் போட்டால் ஊரைக் காக்கும் லக்ஷ்மணன்னு வச்சுக்கலாம்;)
இரண்டு கிருஷ்ணனா....தாங்குமா.ஆட்டம்!!!
கழிப்பறை சொல்லாமல் விடறதே நல்லது:( அத்தனை பூக்களும் என்ன அழ்குப்பா. இவ்வளவு படங்களையும் எடுத்து பகிர்ந்து கொண்டதற்கு நன்னிங்கோவ்.

said...

வாங்க வல்லி.

கொஞ்சநேரம் 'வில்லி'யா இருக்கலாமுன்னா..... விடமாட்டீங்க போல:-))))

கோபிகைகள் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி கிருஷ்ணன்களின் எண்ணிக்கை இருந்ததாமே 'க்ரீடிக்கும் போது'!!!!

said...

Arumaiyaa irukku.

said...

வாங்க ஓலை.

வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

said...

படங்களும் அதற்கான உங்கள் கமெண்ட்டுகளும் பிரமாதம் மேடம். மிகவும் ரசித்தேன்.

நில அதிர்வில் உண்டான விபத்துகளில் உயிரிழந்த மக்களுக்கு என் அஞ்சலிகளும்!

said...

நில அதிர்வில் உண்டான விபத்துகளில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலிகளாக ஒவ்வொரு மலர்களும் ....

said...

தங்கள் பெயரில் "அது அந்த காலம்" என்ற தொடரினை "இவள் புதியவள்" என்ற இதழில் கண்டேன். அது நீங்க தானே!

said...

வாங்க கீதமஞ்சரி.

துயரில் ஆதரவு தந்தமைக்கு நன்ரி.

உங்க ஊர் நிதிமந்திரி பதவி எனக்குத் துண்டுன்னு தோளில் இருந்து எடுத்துக் கடாசிட்டாரே! இப்ப அதுதான் எங்கூர் டிவிக்குத் தீனி. நிலநடுக்கத்துக்கு நேத்தெல்லாம் சோககீதம் பாடினோம்.

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

அஞ்சலி செலுத்தும் வகையில் நேத்துப் பள்ளிக்கூடப்பிள்ளைகளும் அந்தந்தப் பேட்டை மக்களும் சேர்ந்து போக்குவரத்தை சீர்படுத்த பயன்படுத்தும் ட்ராஃபிக் கோன்களில் பூக்களைச் செருகிவச்சு ஊர் முழுக்க பூவே பூ!!!!!

அஞ்சலிகளுக்கு நன்றி.

said...

வாங்க பத்மா.

அது அடியேள்தான்:-)

சிலசமயம் ஏதோ நானே பத்திரிகையைக் காண்ட்ராக்ட் எடுத்துக்கிட்ட மாதிரி மூணு ஆர்ட்டிகிள்ஸ் போட்டுருவாங்க.

இன்ப அதிர்ச்சியா இருக்கும்.

கவனிப்புக்கு நன்றி.

said...

உங்க விவரிப்பில் எல்லாவற்றையுமே ரசிச்சேன் டீச்சர்.

கழிப்பறையின் அவசியத்தை நம்ம ஊர் மக்கள் எப்பத் தான் தெரிஞ்சுக்க போறாங்களோ....:(

said...

இத்தனை அழகான காட்சிகைள பார்த்து ரசித்ததோடல்லாமல் , பதிவர்களுட்ன் பகிர்ந்து கொள்ள, எத்தனை புகைப்படங்கள், எவ்வளவு நீள பதிவுகள்!

உங்கள் எழுத்தார்வம் வியப்புக்குரியது.

ரொம்ப நன்றிங்க. ந்யூஸியில் அழகை, பார்க்கவும் , உங்கள் பதிவை படிக்கவும் அலுப்பே இல்லை.

said...

வளவளனு எத்தனை விவரங்கள் :)
nice.
கூட்டு இரங்கலில் நானும் சேர்ந்து கொள்கிறேன்.

said...

oops....


வெளி 'விவகார' மந்திரியை நிதிமந்திரின்னு சொல்லிப்புட்டேனே:(

எப்பவும் காசைப்பற்றியே நினைக்கிறேனோ:-)))))

said...

வாங்க கோவை2தில்லி.

உங்கூர்ப்பெண்கள் என்ன சொன்னாங்கன்னு ஹூஸைனம்மா பின்னூட்டம் பாருங்க!!

ரெண்டு கை போதுமா தலையில் அடிச்சுக்க:(

said...

வாங்க வெற்றிமகள்.

'எதைச்சொல்ல எதைவிட'ன்னு குழம்புவதே காரணம்!

said...

வாங்க அப்பாதுரை.

'வழவழ'ன்னு வாசிக்கமுடியுமுன்னு நினைச்சேன். ஆனால்..... இப்படி *ள*ளவா ஆச்சோ:-)))))

இரங்கலில் பங்குபெற்றமைக்கு நன்றிகள்.

said...

http://pudugaithendral.blogspot.in/2012/02/blog-post_26.html

விருது பெற அழைக்கிறேன்

said...

வாங்க புதுகைத் தென்றல்.

ஆஹா....... கசக்குமா????

மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள்.

said...

வாத்துக்கூட்டத்துடன் நீராடி மகிழ்ந்தோம்.

எனது அஞ்சலிகள்.

said...

வாங்க மாதேவி.

அஞ்சலிகளுக்கு நன்றிப்பா.