இது தமிழ்ப் பாட்டும்மா......ன்னு வியப்போடு கவனிக்கிறார் கோபால். பாண்ட் வாத்திய இசைக்குழு அடிச்சு முழக்க மேடையில் ஏழெட்டுத் தலைப்பாகைகள் டுர்ர்ர்ர்ர்ர்ர்ர் டுர்ர்ர்ர்ன்னு வட்டம்போட்டுச் சுழன்று ஆடிக்கிட்டே இருக்காங்க. சட்னு என்ன பாட்டுன்னு நினைவுக்கு வரலைன்னு விட்டுற முடியுதா...... கூடவே ஹம் பண்ணிக் கண்டு புடிச்சுட்டேன்:-))))
மறுநாள் பயணம் புறப்படும் களேபரத்தின் இடையிலும் இங்கே வந்தாகவேண்டிய நிர்பந்தம்(?). ஜூலையில் நடக்குமுன்னு தெரிஞ்சாலும் எப்போ என்ன தேதின்னு யாதொரு விளம்பரமும் தகவலும் இல்லை. உள்ளூர் சமாச்சாரங்கள் எங்கேபோனால் தெரியும? இந்த வகையில் நம்ம சென்னை ஹிண்டு பேப்பரை அடிச்சுக்க ஆளில்லை. இங்கே வந்ததும் ஹிண்டுவையே தொடர்ந்தோம். ஆனால்............ அது டில்லி பதிப்பு:( மேலும் சென்னைப் பதிப்பில் இருப்பதுபோல் கலைநிகழ்ச்சிகள் தகவல்கள் ஏதும் இல்லை.
ஊருக்குள்ளே என்னதான் நடக்குதுன்னு தெரியாட்டாத் தலை வெடிச்சுடாதா? இதுக்காகவே ஒவ்வொரு தினசரியா மாத்தி மாத்தி வாங்கிப் பார்த்துக்கிட்டு இருக்கோம். நடந்து முடிஞ்ச நிகழ்ச்சிகளைத்தான் போட்டு விமரிசனம் செஞ்சுக்கிட்டு இருக்குதுங்க இந்த தினசரிகள். ஒரே முடிவு..... என்ன ஆனாலும் சென்னையை மிஞ்சமுடியாது!!!!
மாம்பழத்திருவிழா இந்த வீக் எண்டுலே நடக்குதுன்னு சின்னதா ஒரு போஸ்டர் வரும்வழியில் பார்த்தேன்னு கோபால் சொன்னார். இது ஹரியானா மாநிலத்தின் திருவிழாவாம். போச்சுறா....... இதைவிட்டா அடுத்த வருசம் போகச் சான்ஸ் இல்லை. அதான் இங்கே இருக்கமாட்டோமே!
போனவாரம் போய்வந்த அதே யாதவேந்திரா தோட்டத்துக்குப் பகல் சாப்பாட்டுக்கு அப்புறம் கிளம்பினோம். ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்ன்னு அப்படியே 'அந்த பீமாதேவி' கோவிலையும் பார்த்துக்கணும். (தனிப்பதிவு பின்னே ஒரு நாளில் போடணும்)
அழகுக்கு அலங்காரம் செய்ததுபோல் மொத்தத் தோட்டமும் வண்ணவண்ண துணிகளாலும், அடிக்கவரும் ஆரஞ்சு நிறச் சாமந்திப் பூக்களாலும் நிரம்பி வழிஞ்சது. அதென்னவோ இந்தப் பக்கங்களில் கோவில்களிலும் இந்த சாமந்தி மட்டுமே. பூந்தோட்டம் ஊர்பூராவும் இருந்து என்ன பயன்? பாவம் சாமி.
மாம்பழத் திருவிழாவை ஹரியானா மாநிலத்தின் சுற்றுலாப் பிரிவும், வேளாண்மைப்பிரிவும் சேர்ந்து நடத்துது. இது பத்தொன்பதாம் வருசம். மாநிலத்தின் சின்னம் மயில். அங்கங்கே மலரலங்காரத்தில் நிற்கும் மயில்கள். வண்ணவண்ண உடைகளில் நடமாடும் மயில்களும் ஏராளம். நுழைவுச்சீட்டுக்கு அதே 20 ரூபாய்கள். அங்கங்கே ரங்கோலிகள் போட்டு வச்சுருக்காங்க. போட்டி நடக்குதாம். அழகான வர்ணங்களா இருக்கேன்னு அருகில் போனால்...... எல்லாம் அரிசி!!!
ஆரம்ப வரவேற்பு பொய்க்கால் குதிரை. நமக்காகக் கொஞ்சம் ஆடிக் காமிச்சாங்க. சுற்றுலாத்துறை சின்னதா ஒரு ஸ்டால் போட்டுவச்சு விவரங்கள் கொடுத்துச்சு. பக்கத்துலேயே சிலபல மாம்பழ வகைகள். அட்டைப் பெட்டிகளில் போட்டுவச்சு விற்பனை. அஞ்சரை முதல் ஆறுகிலோ எடையாம். விலை 150 ரூபாய் முதல் 200 வரை. அல்ஃபோன்ஸா மாம்பழத்தை முதல்முறையாப் பார்த்தேன். எப்பவும் டின்னில் மாம்பழக்கூழ் வாங்கித்தான் பழக்கம். ரொம்பச் சின்னதா இருக்கு. மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்றது இதுதான்!!!
ராசாத்தி காத்திருந்தாள்...... ராசாவும் வந்து சேர்ந்தான்.....ராகத்தோடே பாடி வந்தான்
அடுத்த பகுதிக்குப் படி இறங்கிப்போனோம். நீரோடைகளில் சலசலன்னு தண்ணீர், செயற்கை நீரூற்றுகளில் பீறிட்டு அடிக்கும் நீர்வீழ்ச்சிகள். ரெண்டு பக்கத்துப் புல்வெளிகளிலும் புதுசா முளைச்சிருக்கும் ப்ரமாண்டமான கூடாரங்கள். கலைநிகழ்ச்சிகள் எல்லாம் சேர்ந்து ஒரே கலகலன்னு இருக்கு. பெரிய மேடை ஒன்னு அமைச்சு ஆட்டம் பாட்டம். தமிழ்ப் பாட்டுகளாவே அடிக்கடி வாசிச்சுக்கிட்டு இருந்தாங்க. எப்படி? இங்கே இருந்து அங்கேயா ? இல்லை அங்கே இருந்துதான் இங்கேயா? இசைமூலம் பார்க்கக்கூடாதோ? பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்கானக் கட்டுரைப்போட்டி, ஸ்லோகன் போட்டி நடத்தி முடிச்சு அதுக்கான பரிசுகளை இங்கே இடைக்கிடையேக் கூப்பிட்டுக் கொடுத்துக்கிட்டு இருக்காங்க.
முகத்தில் சித்திரம் வரைதல் போட்டிக்குத் தயாரா வந்த ஒரு உள்ளூர் பள்ளிக்கூடத்து (செயிண்ட் விவேகானந்த் மில்லினியம் ஸ்கூல், பிஞ்ஜோர், ஹரியானா ) மாணவமாணவியரைப் பார்த்துப் பேசிக்கிட்டு இருந்தேன். ஒவ்வொரு முகத்துக்கும் வரைய ஒருவர், முகம் கொடுக்க ஒருவருன்னு ரெவ்வெண்டு பேர். புலிகளைக் காப்பாற்றணும். புகை பிடிக்காதே, ஆண்குழந்தை பெண்குழந்தை பேதமில்லை, நிற வெறி கூடாது, சமாதானம் வேணும் (????? இந்தியா பாகிஸ்தான் சமாதானம்தான். வேறென்ன?)
முகமெல்லாம் மெஸெஜ் சொல்லுது!!!
இன்னொரு படிகளைக்கடந்து இறங்கிப்போனால்...... உணவுக் கடைகள் ஒரு பக்கமும், பசங்க விளையாட பொம்மை ரயில் ராட்டின வகையறாக்கள் ஒரு பக்கம். பொம்மலாட்டம் ஒன்னு ஜோராய் நடக்குது. இன்னொரு பக்கம் கைவினைப் பொருட்கள் விற்கும் கடைகள். வரப்போகும் நவராத்ரிக் கொலுவுக்கு வைக்க ஏதும் தேறுதான்னு (அதாவது கோபாலின் பர்ஸுக்குத் தொந்திரவு கொடுக்காததா......தேடினேன். ) பார்த்தால் அவ்வளவா ஒன்னும் சரிப்படலை. பாங்ரா ஜோடிகள் வேணும் எனக்கு.
பாரு பாரு நல்லாப் பாரு பயாஸ்கோப்புப் படத்தைப்பாரு.....
நீலமும் மஞ்சளும் பர்ப்பிளுமா கிராமிய உடைகளில் பேண்டு வாத்தியக் கோஷ்டி, உயர்ந்த மனிதர்கள், பேக் பைப் வாசிக்கும் போலீஸ் பேண்ட், கொட்டும் முரசுன்னு ஒரு பக்கம் விழாவைத் துவக்கி வைக்கப்போகும் ஹரியான அரசு முக்கிய காரியதரிசிக்காகக் காத்திருந்தாலும் நமக்கும் வாசிச்சுக்கிட்டு இருந்தாங்க.
மாம்பழங்களைத் தரம்வாரியாகப் பிரிச்சு அடுக்கி வச்சக் கண்காட்சிப் பகுதியைத் திறந்துவைக்க வரும் அமைச்சர் வெட்ட, ரிப்பன் இல்லையேன்னு கடைசி நிமிசப் பரபரப்பில் அவசரமா ஒருத்தர் நுழைவு வாசலில் ரிப்பன் கட்டிக்கிட்டு இருந்தார். பள்ளிக்கூடப் பசங்கள் பேண்ட் ஒன்னும், மலர்தூவி வரவேற்க பெண்குழந்தைகளின் வரிசை ஒன்னும் ஓய்ஞ்சுபோய் நின்னுக்கிட்டுருந்தாங்க ஒரு பக்கம்.
எள்ளுதான் எண்ணெய்க்குக் காயுது. எலிப்புழுக்கை ஏன் கூடக் காயணுமுன்னு நாங்க வேடிக்கை பார்க்க இன்னொரு பக்கம் போய் கலையரங்கக் கூடாரத்துலே மின்விசிறிக்கு எதிரில் போய் உக்கார்ந்துருந்தோம். மேஜிக் ஷோ போல எல்லா இருக்கைகளுக்கும் உறை போட்டு ரொம்ப நீட்டா ஆக்குச்சு ஒரு குழு. தலைகள் வந்து பேசப் போறாங்களாம்.
ரோஜாக்கள் எல்லாம் வரிசைகட்டிக் காத்திருக்கு விஐபி கைபிடிக்க!
திடீர்னு........ இசை முழக்கம். திறந்திடு சீஸேம்............
நாமும் உள்ளெ போனோம். வகைவகையா மேசை மேசையா அணிவகுத்து ஒவ்வொரு வகையிலும் முதல் ரெண்டு இடங்கள் வாங்குனது கொஞ்சம் நறுக்கி வச்சுருக்கு. அதுலே அடைஅடையா மொச்சக்கொட்டை சைஸுலே ஈப்பட்டாளம்:( சின்ன அளக்கும் கருவி ( நியூஸியில் மீன் நீளம் அளப்பது போல ஒன்னு. எதோ கணக்கு இருக்கு. 6 செ.மீ? அதுக்கும் குறைவா பிடிபட்ட மீனின் நீளமுன்னா அதை மறுபடித் தண்ணியில் விட்டுறணும்) வச்சுக்கிட்டு ஒரு குழு தட்டுத்தட்டா வச்சிருக்கும் மேஜை மேஜையாப்போய் இன்னும் 'அளந்துகிட்டே இருக்காங்க. மொத்தம் 3500 தட்டுகள் பதிவு செய்யப்பட்டு இருக்காம்.
ஒரு இடத்தில் பெயிண்ட் செஞ்ச ஈஸ்டர் எக் மாதிரி ஒரு வகை. ஊறுகாய் போடும் மாங்காய்! நமக்குத்தெரிஞ்ச எல்லா ஹிந்தி சினிமாப்பேருலேயும் மாம்பழ வகைகள் வந்தாச்சு. பாவம் அவுங்கதான் என்ன செய்வாங்க....புதுசுபுதுசாக் கண்டுபிடிச்சுக்கிட்டே இருந்தால் எப்படி? குண்டா பெருசா இருக்கும் ஒரு வகைக்கு 'சுமோ'ன்னு பெயராம். சிகப்பா இருப்பது ரெட் லிப்ஸ். ஒரு வகைக்கு நொண்டின்னு பெயர். 'லங்டா'வாம். 'ஓம்கார்' படத்துலே சயீஃப் அலிகானுக்கு இந்தப் பெயர்தான்! வெவ்வேற கம்பெனிகளின் மாம்பழத் தயாரிப்புகள் உள்பிரகாரத்துலே வரிசைகட்டி நிக்க, வேடிக்கை பார்த்ததோடு சரி.
தோட்டம் முழுசும் காவல்துறை அதி கவனமா நடமாட, ஏகே 47 ஏராளமுன்னார் கோபால்:-)))) மக்கள் மகிழ்ச்சியோடு மாம்பழப் பெட்டிகளைச் சுமந்துக்கிட்டு போனாங்க. மொத்தக் கூட்டத்துலேயும் மாம்பழக் கண்காட்சிக்குப் போயிட்டு ஒத்தை மாம்பழம்கூட வாங்காம வந்தவங்க, உங்களுக்குத் தெரிஞ்ச ஒரே ஒரு குடும்பம்தானாம்:(
நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்..... அவள் மாம்பழம் வேண்டுமென்றாள்......(நானா மசிவேன்? நேரமில்லை தின்னு தீர்க்க...) நீ கேட்டாலும் வாங்கமாட்டேன், நாளை பயணம் இருக்குதென்றேன்.
நின்னு நின்னு கால் ஒரே வலி. செத்த உக்காந்துக்கலாமா?
நாளைக்கு மாம்பழம் தின்னும் போட்டி இருக்காம். பேசாம அதுக்குப் பெயர் கொடுத்துருக்கலாமோ?
PIN குறிப்பு: பயணத்தொடர் வரப்போகுது. அதுவரை மாம்பழம் பார்த்துக்கிட்டு இருங்க.
மேஜிக் ஷோ: நேற்று, இந்தப் பதிவுக்கான படங்களை வலைஏத்தி, பதிவில் போட்டு எடிட் பண்ணுமுன் ப்ரிவியூ பார்க்க சொடுக்குனா...... மந்திரமாயம் போட்டாப்போல தானே பப்ளிஷ் ஆயிருச்சு. போதாக்குறைக்குப் பொன்னம்மான்னு அதுவே தமிழ்மணத்திலும் சேர்த்துவச்சுருச்சு. நல்லவேளை ஓட்டுப்போடுவதொன்னுதான் பாக்கி:-)
(ஒருவேளை இலைக்கடியில் ரொக்கம் எதிர்பார்த்துச்சோ என்னமோ!)
கலாட்டா கல்யாணம்.
ரீடரிலும் போட்டுவச்சவங்களுக்கும் ஒரு Free view கிடைச்சுருச்சு. இடுகையைத் தூக்கிட்டேன்.
அதன் புத்தம் புதிய காப்பி இதோ...இதுதான்.
குழறுபடிக்கு யார் காரணமோ? மன்னிச்சுடலாமா?
காலநிலை: போனவாரம் அடிச்சுப் பெய்ஞ்ச மழையால் வெய்யில் குறைஞ்சுருக்காம்! பொழுதுவிடிஞ்சதும் 33 டிகிரி வீட்டுக்குள்ளே.
மழையில் என்ன செய்யறதுன்னு புரியாம டெலிபோன் ஒயரைத் தெரு நாய் கடிச்சு வச்சு, தொலைபேசி வேலை செய்யலை!
Friday, July 16, 2010
அமிர்த யோகம் வெள்ளிக்கிழமை கண்ணாளா..........
Posted by துளசி கோபால் at 7/16/2010 02:17:00 AM
Labels: அனுபவம் mango mela
Subscribe to:
Post Comments (Atom)
30 comments:
சார் வந்தப்ப மாம்பழம் தான் திரும்ப வாங்கி சாப்பிட்டாங்க நினைவிருக்கு:)
விடாம நீங்களும் விழாவை சிறப்பிச்சிருக்கீங்க..
வடுவூர் குமார் has left a new comment on your post "அமிர்த யோகம் வெள்ளிக்கிழமை கண்ணாளா..........":
அந்த ரெட் லிப்ஸ் மாம்பழம் - கொல்லுது.
படமெல்லாம் 2 தடவை வருது? ஏதாவது விஷயமா?
வாங்க கயலு.
இனி வரும்போது ஊஞ்சலில் உக்கார்ந்து மாம்பழம் தின்னணும்.
தினம் ஒரு தட்டுன்னாலும் 3500 தட்டு ஒரு பத்துவருசத்துக்கு வருமே.
அதான் கண்ணால் தின்னுட்டு வந்தேன்.
வாங்க குமார்.
நீங்கள் நேற்று அனுப்பிய பின்னூட்டத்தை காப்பி & பேஸ்ட் பண்ணி இங்கே வெளியிட்டுருக்கேன்.
ஒரே மேஜிக்தான் போங்க!
சுவையான விழாதான்..
//மழையில் என்ன செய்யறதுன்னு புரியாம டெலிபோன் ஒயரைத் தெரு நாய் கடிச்சு வச்சு, தொலைபேசி வேலை செய்யலை!//
சந்தோஷத்துல தலைகால் புரியலையோ என்னவோ :-))
ஆகா டீச்சர், பாபாஜி, பல்ராம்நாயுடு எல்லாம் வந்திருந்தாகளா:-))))))))))
மாம்பழங்களின் படங்கள் எல்லாமே அருமை. ஆனால் நம்மூர் ஈ ஒண்ணு அங்கேயும் வந்து விருந்து சாப்பிடுதே
வாங்க அமைதிச்சாரல்.
நாயின் சந்தோஷம்.....நாங்க ஊருக்குப் போனதுக்காக இருக்கலாம்:-))))
வாங்க அபி அப்பா.
பல்ராம் நாயுடுவைப் பார்க்கலை. எங்கே பார்த்தாலும் பாபாஜிக்கள்தான்.
வாங்க பிரகாசம்.
நம்மூருன்னா சொல்றீங்க?
தினம் சப்பாத்தியும் நெய்யுமாச் சாப்பிட்டுக் கொழுத்து பெரிய சைஸா இருந்துச்சே, மொச்சைக்கொட்டை அளவில்!
இது கொஞ்சம் அஞ்சாத ஈ. மற்றவர்கள் பறந்தபின்னும் இது புறமுதுகு காட்டாமல் உக்கார்ந்து இருந்துச்சு.
மூனாவது படத்துல இருக்கும் மாம்பழம் தக்குடுவுக்கு...:)
படங்கள் சூப்பர். வெள்ளைக்கலர்ல கூட மாங்காய் இருக்கு
அடடா என்ன அழகு. அருகே சென்று பாருன்னு பாட வேண்டி இருக்கே. இத்தனை மாம்பழத்துல ஒண்ணு கூடவா வாங்காம வந்தீங்க..
என்ன கலர்!!
படங்கள் அத்தனையும் பிரமாதம். அந்தக் குழந்தைகளும் அப்படியே. கலர் அடிச்சுகிட்டுப் பொறுமையா உட்கார்ந்திருக்கே.
ஆகக் கூடி ஒரே மஜாதான்.:)
பாட்டும் கூத்துமாக இருக்கவே பொறந்திருக்காங்களோ.
பாட்டுகள் எல்லாம் அங்கேயிருந்து இங்க வந்ததுதான். இளைய ராஜா சார் வந்தாட்டு இங்கேயிருந்து அங்க போயிருக்குன்னு யாரோசொன்னாங்க.
கோபால் சாருக்கு தலப்பா பொருத்தமாவே இருக்கு.:)கூடவே நீங்களும் நின்னிருக்கணும்.
ராசாத்தி காத்திருந்தாள்...... ராசாவும் வந்து சேர்ந்தான்.....ராகத்தோடே பாடி வந்தான்
ஆத்தாடி....... மெட்டுக்கு பாட்டெல்லாம் வரும் போலிருக்கும்.
முண்டாசு கட்டினவரு தலைவரா?
இவ்வளவு வகையா மாம்பழத்தில் படங்கள் பார்க்கவே அருமையா இருக்கு டீச்சர்.
நாலைந்து வருடம் முன்னே பெங்களூர் லால் பாக்கில் ‘மாம்பழக் கண்காட்சி’ போயிருந்தேன். இதே போலதான் எத்தனை வெரைட்டிங்கறீங்க. எடுத்த படங்களும் கூட இருக்கு:)!
ம்ம் மொதநாளே லீவு லெட்டரோடு வந்திருக்கேன். தொடரை வந்து படிக்கிறேன், மறக்காம:)!!
Welcome back! Beautiful pictures.
வாங்க தக்குடு.
மூணாவது என்ன.... ரெட் லிப்ஸா? முழுசுமே உங்களுக்குத்தான்:-)))))
வாங்க சின்ன அம்மிணி.
நீலக்கலர் மாங்காய்கூட கொஞ்சநாளில் வந்துரும்!
வாங்க வல்லி.
நானும் கூடவே நின்னா கேமெரா உமனுக்கு என்ன செய்ய?
வேதான்னு ஒரு இசை அமைப்பாளர்(???) நினைவு இருக்கா? :-)))))))
வாங்க ஜோதிஜி.
அடி ஆத்தீ...........முண்டாசு கட்டிக்கிட்டு அங்கே ஏகப்பட்டபேர் இருக்காங்க!!!!!
மாந்தோப்பில் நிக்கறவரைப் பார்க்கலையா?
வாங்க சுமதி.
போட்டியில் கலந்துக்காத தோப்புகளும் ஏராளமா இருக்காம்! எல்லாரும் வந்துருந்தா ஒரு அஞ்சாயிரம் இருக்கலாம்.
வாங்க ராமலக்ஷ்மி.
லீவை நல்லா சந்தோஷமாக் கொண்டாடிட்டு வாங்க. நோ ஒர்ரீஸ்.
படங்களை அப்படியே விட்டுவச்சா..... பழம் அழுகிறாதா? வலை ஏத்துங்கப்பா.
வாங்க சந்தியா.
என்னடா நம்மை 'மிஸ்' பண்ணவங்களைக் காணோமேன்னு இருந்தேன்!
ஆரம்ப வரவேற்பு பொய்க்கால் குதிரை:)))
poi kaal kudiraid ance! romba nallaa irukkum!
அட்டகாசமான படங்கள் பகிர்வுக்கு நன்றி
ஈஸ்டர் எக்ஸ்,ரெட் லிப்ஸ் இரண்டும் ரொம்ப அழகாக இருக்கிறது.
பொம்மலாட்டம் ஜோர்.
வாங்க நரசிம்மரின் நாலாயிரம்.
முதல் வருகைக்கு நன்றி . நலமா?
பொய்க்கால் குதிரை டான்ஸ் நல்லாவே இருந்துச்சு:-)
வாங்க சதீஷ்குமார்.
வருகைக்கு நன்றி. இன்னும்கூட நிதானமா நின்னு எடுத்துருந்தா படங்கள் அருமையா வந்துருக்கும். நமக்குத்தான் எப்பவும் ஒரு ஓட்டம் இருக்கே! போற போக்குலே புடிச்சுக்கிட்டே போனதுதான்.
வாங்க மாதேவி.
எதையும் தின்னு பார்க்க முடியலைப்பா. அதுதான் பெரிய குறையாப் போச்சு:(
பொம்மலாட்டம் பொண்ணு இடுப்பை வெட்டி வெட்டி ஆடுனது பலே ஜோர். ரெண்டு நிமிசம் வீடியோ எடுத்தாலும் அவ்வளவா க்ளியர் இல்லை:(
Post a Comment