Friday, July 02, 2010

பள்ளிக்கூடத்தைப் பதினைஞ்சு நாளுக்குப் பூட்டலாமா?


ஏன்? எதுக்கு?

எதுக்குன்னா,
சிங்கிள் டீச்சர் பள்ளிக்கூடமா இருக்கே! வேற வழி?


பயணம் வாய்ச்சுருக்கு. யானைகளின் நாட்டுக்குப் போறேன். அப்படியே நம் பழம்பெருமையைப் பறைசாற்றும் பக்கத்து தேசத்துக்கும்.

இணைய வசதிகள் எல்லாம் எப்படி இருக்குமோ? அதுக்கு நேரமும் கிடைக்குமோன்னு தெரியலை.

போய்வந்து விவரம் சொல்றேன்.

இப்போதைக்கு செலவு வாங்கிக்கவா?

வணக்கம்.

படம்: நம்ம முத்திரை மோதிரங்கள்:-)))


காலநிலை: இன்றைக்குக் காற்றில் ஈரப்பதம் 91% அப்படியே இட்லிப் பானைக்குள்ளே உக்கார்ந்தமாதிரி இருக்கு:(

58 comments:

said...

எனக்கு ரெண்டு யானை பார்சேல்!!

said...

ஆஹா..... வாருமைய்யா வகுப்புத் தலைவரே!

பூட்டணுமுன்னா முதல் ஆளா வந்துருவீரா:-))))))))))))

திரும்பி வரும்வரை வகுப்பறைக்குச் சேதம் ஏதும் வராம அப்பப்ப வந்து கவனிச்சுட்டுப்போங்க.

ரெண்டு யானையைக் கட்டித் தீனி போடணும்,ஆமா.....

அனுபவம் இருக்குன்னு நினைக்கிறேன்:-))))))

said...

பத்திரமா போயிட்டுவாங்க..கோகியும் ஜிக்குஜூவும் தேட ஆரம்பிக்கிறதுக்குள்ளாற வந்துடுவீங்கல்ல :-)))

said...

நல்லா போயிட்டு எஞ்சாய் செஞ்சு நிறைய்ய குறிப்புக்களோட வாங்க டீச்சர்.

கோபால் சாரையும் கேட்டதாச் சொல்லுங்க

said...

டீச்சர் கேரளாவுக்கா போறீங்க?
பத்திரமாப் போய்ட்டு வாங்க..

அங்க யானையெல்லாம் சீப்பாக் கிடைக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன். வரும்போது முடிஞ்சா யானை வாங்கிட்டு வாங்க.. யானை பற்றி நீங்க படிவெழுதி ரொம்ப நாளாச்சு..

said...

எங்கேங்க? தாய்லாந்துக்கா?

அப்படியானால் அங்கே யானைகள் அழகழகாய் படம் வரையும் காட்சியெல்லாம் பார்த்து வாங்க:)!

said...

safe journey teacher

said...

தங்கள் பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்.

said...

keralaavaa

appol kaanaam pinne.

said...

நேப்பாளமும் மியான்மருமா? முத்திரை மோதிரத்தில் “மியா”வைப் பார்த்ததும் அதுதான் ஞாபகம் வருகிறது.

said...

புறப்படும்போது அபசகுனமாக எங்கே என்று கேக்கக் கூடாது. நேப்பாள் மற்றும் ”மியா”ன்மரா இருக்கும் என்று நினைக்கிறேன்.

said...

திரும்பிவரும் போது சுவையான பாடங்கள் நிச்சயம் இருக்குமென்பதால் ஓக்கே.

said...

வாங்க அமைதிச்சாரல்.

கோகி எனக்காக வெயிட்டிங் 'வைகுண்டத்தில்'

ஜிக்குஜூ.....சமர்த்து. வரும்வரை பொறுமை காப்பான்.

said...

வாங்க புதுகைத்தென்றல்.

விசாரிப்புக்கு நன்றி கோபால் சார்பில்.

வந்து எழுதணுமான்னு யோசனையா....

said...

வாங்க ரிஷான்.

கேரளாவுக்கு இல்லைப்பா. அங்கேயும் யானை இப்பெல்லாம் சீப்பாவா கிடைக்குது?

said...

வாங்க ராமலக்ஷ்மி.

கரீட்டாக் கண்டுபிடிச்சீங்க!!!1

யானை வரைவதெல்லாம் இப்பக் கொஞ்ச வருசமாதான் இருக்குபோல.

முந்தி போனப்பச் சுற்றுலா ரொம்ப முன்னேறி இருக்கலை. அது ஆச்சு 25 வருசம்.

said...

வாங்க எல் கே.

நன்றி

said...

வாங்க நன்மனம்.

நன்றி. மீண்டும் வருக.

said...

வாங்க ராம்ஜி_யாஹு.

அல்லல்லோ. இது கொறச்சு புறத்தேயானு.

said...

வாங்க பிரகாசம்.

நேப்பாளம் லிஸ்ட்லே ரொம்ப நாளா இருக்கு. கிடைக்குதான்னு பார்க்கணும்.

இப்போ விஜயம் செய்வது தாய்லாந்தும் கம்போடியாவும்.

said...

வாங்க முரளிகண்ணன்.

நம்ம கானா பிரபா எல்லாத்தையும் பிரிச்சு மேய்ஞ்சு புத்தகம் போட்டுருக்கார். இப்போதைக்கு அவருடைய பயணப்பதிவுகளைத்தான் வழிகாட்டியா எடுத்துருக்கேன்.

தப்பித்தவறி எதையாவது சொல்லாம விட்டாரான்னு பார்த்து.....கிடைச்சால் சொல்லலாம். நம்ம வேலை மிச்சம்:-))))

said...

/ சிங்கிள் டீச்சர் பள்ளிக்கூடமா இருக்கே! வேற வழி?//

நல்லதா ஒரு தாலாட்டு பாட்டு பாடினீங்கன்னா பசங்க எல்லாம் தூங்கிபோயிருவாங்க..
நீங்க வர்றவரைக்கும் தூங்கிக்கினே இருப்பாக இல்லயா !!
ஒரு பாட்டு படிச்சுட்டு போங்க
சுப்பு ரத்தினம்.

said...

போயிட்டு வந்து பயணக்கதையை எழுதுங்க டீச்சர் நாங்கள் ஆவலோடு உங்களுக்காக காத்திருப்போம் டீச்சர்.

said...

//நம்ம முத்திரை மோதிரங்கள்:// suuuuper...:)

said...

யானைய கட்டி தீனி போடமுடியாது, அதனால தந்தங்கள் மட்டும் பார்சேல்ல்ல்

said...

வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.

15 நாளுக்கு ஒரே தூக்கமா? அப்போ மற்ற பதிவுகள் எல்லாம் படிக்க வேணாமா அவுங்க?

லீவை நல்லா எஞ்சாய் பண்ணிட்டு புத்துணர்ச்சியோடு மீண்டும் வகுப்புக்கு வரணும் எல்லோரும்.

முடியாதுன்னு சொன்னா ஆயிரம் பதிவுகளை இந்த லீவில் படிச்சு சிறு குறிப்பு வரைகன்னு ஹோம் ஒர்க் கொடுத்துட்டுப்போகணும்:-))))

said...

வாங்க சுமதி.

யாரும் அடிக்க வரலைன்னா எழுதறேன்:-))))

said...

வாங்க தக்குடு.

கோட்டையின் நுழைவு வாசலில் காமிச்சால்தான் அனுமதி:-))))

said...

வாங்க இளா.

அச்சச்சோ...... வீரப்பியாக்கிட்டீங்களா என்னை:-))))

said...

போகுமிடம் சரியாகக் கணித்து சொன்ன எனக்கு மட்டும் ஏதாவது ஸ்பெஷலா வாங்கி வரணும், ஆமா!

said...

பத்திரமாகப் போய் வாருங்கள். கம்போடியாவில் Angkor Wat கோயிலையும் பார்த்து வாருங்கள்.
அந்த ஆலயம் பற்றிய இணைப்பு இங்கே.
http://www.molon.de/galleries/Cambodia/Angkor/AngkorWat/

said...

நானே கேட்கணுமுன்னு நினைச்சேன் வேற என்ன லீவு தான் ;))

அப்போ எங்களுக்கு அடுத்த கரும்பு ரெடி ;))

said...

Madam
Cambodia la etho kovil famousame?Appa miss panama ungala parthutu vara sonnanga.Adutha vaaram IndiA poranga appa ;-(

Anonymous said...

தாய்லாந்து பயணமா. அடுத்த பயண பதிவுகளுக்கு காத்திருக்கோம்.

said...

அரசியல் தலைவ்ர்களுக்கு உண்டானது போல விமான நிலையம் வரைக்கும் கூட்டம் வந்துடப்போகுது. அன்புக்கூட்டம் வழியுது.

புகைப்படம் ரொம்ப புடுச்சுருந்தது.

said...

ராமலக்ஷ்மி,

பெண்களூருக்கு ரெண்டு உயிருள்ள யானை பார்ஸேல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்

பண்ணிடவா?:-))))

said...

வாங்க பிரகாசம்.

அங்கோர்வாட் போகணுமுன்னு வெகுகாலமா ஒரு கனவு. நிறைய அதைப்பற்றிப் படிச்சுப் படங்கள் பார்த்துப்பார்த்துப் பெருமூச்சு விட்டுருக்கேன்.

இப்போ கடவுள் அருளால் தருணம் வாய்ச்சுருக்கு. அங்கே போவதே குறிப்பாக இதுக்கு மட்டும்தான். அப்படியே நேரம் இருந்தால் அங்கிட்டும் இங்குட்டுமாக் கண்ணை ஓட்டணும்:-)

சுட்டிக்கு நன்றி.

said...

வாங்க கோபி.

பிறந்தநாள் பையருக்கு இனிய வாழ்த்து(க்)கள்.

யானை கொண்டுவரும் கரும்பு பகிர்ந்தளிக்கப்படும்:-)))

said...

வாங்க விஜி.

அங்கோர்வாட் என்ற கோயில் படு பிரசித்தம். இது இல்லாமல் எக்கச்சக்கக் கோவில்கள் அங்கே இருக்கு. கிடைக்கும்வரை பார்த்துத் தரிசனம் செஞ்சுக்கணும்.

அப்பா இந்தியா போனபிறகும் துளசிதளத்தைத் தொடரணுமுன்னு கேட்டுக்கறேன்.

said...

வாங்க சின்ன அம்மிணி.

தாய்லாந்து பதிவுகள் ஏற்கெனவே ஒரு நாலைஞ்சு வந்துருக்கேப்பா.

புதுசா எதாவது ஆப்டுமான்னு பார்க்கணும்.

கம்போடியா......நம்ம கானாபிரபா பிரிச்சு மேய்ஞ்சாச்சு:-))))

said...

வாங்க ஜோதிஜி.

பொதுவா ஓசைப்படாமப் போயிட்டுவந்துதான் எழுதுவேன்.

இந்தமுறைதான் அங்கே யாராவது நம்மாட்கள் இருந்தால் பதிவர் சந்திப்பு நடத்தலாம் என்ற ஆவல்.

அதுவும் பலிக்குது!!!!!!!

டெல்லி ஏர்ப்போர்ட்லே டென் தவுஸண்ட்வாலாக்குத் தடையாம்:-)))))))

said...

@துளசி கோபால் said...

//ஆமாம். இந்த வாவுபலி சந்தை எங்கே நடக்குது?//

வாவுப‌லி ச‌ந்தை ஒவ்வொரு வ‌ருட‌மும் ஆடி மாத‌த்தில் க‌ன்னியாகும‌ரி மாவ‌ட்ட‌த்தில் உள்ள‌ குழித்துறையில் ந‌டைபெறும். அது முழுக்க‌ முழுக்க‌ ம‌ர‌ம் ம‌ற்றும் செடிக‌ளின் க‌ண்காட்சி. "ஆடிவெள்ளி" அன்று அங்கு சிற‌ப்பாக‌ இருக்கும். அந்த‌ நாளில் க‌ன்னியாகும‌ரி மாவ‌ட்ட‌ம் முழுவ‌தும் உள்ள‌ ப‌ள்ளிக‌ளுக்கு லேக்க‌ல் விடுமுறை விடுவார்க‌ள்.... ஆடி மாத‌ம் முழுவ‌தும் இந்த‌ க‌ண்காட்சி ந‌டைபெறும்... முடிந்தால் ஒருமுறை சென்று பாருங்க‌ள்...

-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-

என் த‌ள‌த்தில் தான் ப‌தில் எழுத‌ வேண்டும் என்று நினைத்தேன்..ப‌தில் எழுதுவ‌த‌ற்கு தாம‌த‌ம் ஆகி விட்ட‌தால் நீங்க‌ள் வ‌ந்து ப‌டிப்பீர்க‌ளோ என்று தான் உங்க‌ள் த‌ள‌த்திலும் கொடுத்தேன்... ந‌ன்றி

said...

ஆனை கட்டித் தீனி:))? தாங்காதுங்க.

நல்லபடியா போய்வந்து பதிவுகள் தாருங்க. அதுவே போதும்:)!

said...

அன்பு துளசி,
நல்லபடியாப் போய்விட்டு வாங்க.
யானை மேல ஏற முடியுமானா ஏறி ஒரு படம் எடுத்துக்கணும் என் சார்பா.நல்ல தரிசனம் கிடைக்கணும்னு நான் வேண்டிக்கறேன்.பத்ரமாப் போயிட்டுவாங்க.

said...

வாங்க நாடோடி.

தகவலுக்கு நன்றி.

said...

வாங்க வல்லி.

நன்றி.

ஆமாம்.....யானைக்கு ஒரு கொடுமையை என் உடம்பால் செய்யணுமா!!!!!!!!!!!!

said...

ராமலக்ஷ்மி,

2008 ஏப்ரலில் பாங்காக் பதிவுகள் பல போட்டுருக்கு. அதைவிட புதுசா எதாவது பார்த்தால்தான் புதுப்பதிவுகள்:-)

இல்லைன்னா....ரிப்பீட்டேதான்.

said...

ஆகா அடுத்து தாய்லாலாந்,கம் போடியா.அழகிய இடங்களாச்சே காத்திருக்கோம்.

மகிழ்ச்சியாய் போய் வாங்க.

said...

நீங்க இப்ப ஊரை விட்டு போறதுக்கும் நான் மொதல் மொதலா உங்க பக்கத்துக்கு வந்ததுக்கும் சம்மந்தம் ஒண்ணும் இல்லியே... சும்மா கேட்டு வெச்சனுங்க டீச்சர்
(உங்களை பற்றி கேள்வி பட்டுள்ளேன்... முக்கியமாக உங்கள் தொடர் பயண கட்டுரைகள் பற்றி... இப்ப தான் இந்த பக்கம் வர்ற வாய்ப்பு கெடைச்சது...சூப்பர் பக்கம்)

said...

The week is not complete without reading your blog. We miss you and your blogs...

said...

முக்கிய அறிவிப்பு.

நாளைக்கு இஸ்கோலு தொறக்குது. எல்லாரும் கரீட்டா வந்து சேருங்க.

said...

வாங்க மாதேவி.

போயிட்டு வந்துட்டேன்ப்பா.

இனிமேல்தான் எழுத ஆரம்பிக்கணும்.

said...

வாங்க அப்பாவி தங்கமணி.

முதல்முறையா வந்துருக்கீங்க.....நான் இப்பப் பார்த்துப் பள்ளிக்கூடத்தை இழுத்து மூடிட்டுப்போயிருக்கேன்:(

நாளைமுதல் வகுப்பு ஆரம்பம். வந்துருங்க மறக்காமல்.

said...

வாங்க சந்தியா.

என்னை மிஸ் பண்ணீங்களா?

ஹைய்யோ.....so sweet......

எனக்கும் ஒன்னும் எழுதாம கை நடுக்கம் வந்துருச்சுன்னு சொன்னா நம்புவீங்களா? ;-)))):

said...

இந்தப் பள்ளிக்கூடத்துக்குத்தான் திறக்கும் நாளில் டீச்சரைப் பார்த்து அழாமல் வருவோம்.

அரை உலகம் சுற்றி வந்த வாலிபருக்கும் வாலிபிக்கும் வாழ்த்துக்கள்.

said...

போயிட்டு வந்தாச்சா டீச்சர்! நீங்க போனதிலே இருந்து மானிட்டர் கொத்தனார் இந்த பக்கம் வரவேயில்லை. அதனால நான் தான் மானிட்டரா இருந்து கவனிச்சுகிட்டேன். அடங்காதவங்க பேரை போர்டுல எழுதி வச்சுருக்கேன்.

1. தக்குடு- மிக மிக அடங்கவில்லை

2. ராமலெஷ்மி - அடங்கவில்லை

3. உனா தானா - மிகமிக மிக மிக அடங்கவேயில்லை

4. புதுகை தென்றல் - மி.மி.மி.அ.வி

5. அப்பாவிதங்கமணி- சேட்டை தாங்கலை

6. அபிஅப்பா - ரொம்ப நல்ல பிள்ளை (சாட்சி வல்லிம்மா)

said...

வாங்க பிரகாசம்.

இன்னிக்கு வகுப்புக்கு வரும் அனைவருக்கும் பழம்தான்:-))))

அரை உலகத்தை முழு உலகமா மாத்திக்கலாமே.

ஒரு முறை அரௌண்ட் த வொர்ல்ட் டிக்கெட் எடுத்து உலகை 'இடம்' வந்துருக்கேன்.

ஒரு வருடம் செல்லுபடியாகும் பயணச்சீட்டு. நேரமில்லாத காரணத்தால் 42 நாட்கள் மட்டுமே போய்வந்தோம்.

இதெல்லாம் பதிவராகும் காலத்துக்கு முன்:( 1999

said...

வாங்க அபி அப்பா.

நல்ல மாணவர்களை உருவாக்குவது டீச்சரின் கடமையல்லவா!!!!!!

(எனக்குத் தற்பெருமை 'அவ்வளவா'ப் பிடிக்காது)

ஆமாம்......வேலிக்கு ஓணான் சாட்சின்னு ஒரு பழமொழி நினைவுக்கு வந்து தொலைக்குதே....... என்ன செய்யலாம்?????