Thursday, July 29, 2010

இப்படிக் கூடவா??? அட ராமா!!!!........................(தாய்லாந்து பயணம் பகுதி 9)

அறைக்குள் வந்தால்....குளிச்சு முடிச்சு ஜம்முன்னு ரெடியாகி இருக்கார் கோபால். இண்டியன் செட்டில்மெண்ட்ன்னு ஒரு இடம் இருக்கு. அங்கே போகலாமுன்னு அவருக்கு ஒரு எண்ணம். போகட்டும் அவர் 'ஆசை'யை ஏன் கெடுப்பானேன்னு அடுத்த ஷிஃப்ட் ஊர்சுத்தலுக்குத் தயாரானேன். (கால்லே சக்கரம்தான் போங்க)

டாக்ஸியில் போயிறலாம். ரொம்பப் பக்கத்துலேதான் இருக்கு. மிஞ்சிமிஞ்சிப்போனா ஒரு நாப்பது பத் ஆகுமாம். போக்குவரத்து வரிசையில் மாட்டி, நின்னு நின்னு போனதும் டபுளா எம்பது. அதுவும் ஒரு சிக்னல்கிட்டே நின்னப்பவே நாம் இறங்க வேண்டியதா ஆனது. இதைக் கடந்தால் ஊர்ந்துதான் போகணுமாம். வேணாம்...நடந்தே போகலாமுன்னு இறங்கிக்கிட்டோம்.
எங்கே பார்த்தாலும் நடைபாதைக் கடைகள். மனுசர் நடக்க பாதையே இல்லை. தள்ளும் முள்ளுமாப் போறோம். அரேபியக் கடைகள், பர்தா போட்ட பெண்கள், ஹூக்கா பிடிக்கும் ஆட்கள் இப்படி ஜேஜேன்னு............ கூட்டம். பாண்டி பஸாருக்கு வந்துட்டேனோன்னு ஒரு மயக்கம். யானை பொம்மைகளையும் படங்களையும் சுவரில் தொங்கவிடும் சித்திரத்துணிகளையும் (எல்லாம் யானையோ யானை) பார்த்தால்தான் இது வேற ஊருன்னு தெளியும். ரெஸின்லே செஞ்ச கருடனையும், ஒரு பச்சைப் புள்ளையாரையும் கொலுவுக்காக வாங்கிக்கிட்டு நடையைக் கட்டுனா..... பழவண்டிகள். சுத்தமா நறுக்கி அழகா அடுக்கி வச்ச மாம்பழத்துண்டுகள், பலாச்சுளைகள் மற்றும் ரம்புதான், மங்குஸ்தான், பேரீச்சைன்னு இருக்கு. மாவும் பலாவும் நம்ம ச்சாய்ஸ். அடுத்து ஒரு இளநீரை வாங்கிக் குடிச்சேன். தேங்காய் வழுக்கலை அறையில் போய்த்தான் தின்னணும். இன்னும் கொஞ்சம் வேடிக்கை பார்த்து நடந்தப்ப தோஸா கிங் கண்ணுலே பட்டுச்சு. ராச்சாப்பாடு அங்கே முடிஞ்சது. அளவுக்கு மீறிய பணிவுடன் பரிமாறினாங்க.

டாட்டு போட்டுவிடும் கடைகள், கலைப்பொருட்கள். பஞ்சடைச்ச விலங்குகள் இப்படி ஏராளம். நடந்து நடந்து 'நானா' ரயில்நிலையத்துக்கு வந்துருந்தோம். பேசாம பறக்கும் ரயிலில் பறக்கலாமுன்னு படியேறி ரயில் நிலையம் போனோம்.

தானியங்கி இயந்திரத்தில் பயணச்சீட்டு ரெண்டு, நாற்பதே பத். நானாவில் இருந்து ரெண்டாவது நிலையம் சிட் லோம்( Chit lom). தானியங்கிப் படியேறி நடைமேடைக்குப் போனால் படுசுத்தமான நிலையம். மூணே நிமிசத்தில் நம்ம சிட்லோமுக்கு வந்தாச்சு. நம்ம ஹொட்டேல் முற்றத்தில் முடியும் மேம்பாலம் வழியா இறங்கி அறைக்குப்போனோம்.

இன்னிக்கு ஏகப்பட்ட நடை. கால்கள் கெஞ்சுது. நாளைக்கும் நீண்டநாள் என்ற நினைப்போடு உறங்கி மறுநாள் காலை ஒரு ஒன்பதே முக்காலுக்கு ஆற அமரக் கிளம்பினேன். மூணு நாளில் ரெகுலர் கஸ்டமரா ஆகி இருக்கேன் பிரம்மனுக்கு. நின்னு பார்த்து சேவிச்சுட்டு கொஞ்ச தூரத்தில் நிற்கும் டுக் டுக் ஓட்டுனரிடம், 'க்ராண்ட் பேலஸ்' க்கு என்ன சார்ஜ்ன்னா..... முப்பது பத். நெசமாவா? ஆமாம். வாங்கன்னார். வண்டியில் போகும்போது..............

"இங்கே பக்கத்துலே ஒரு நகைக்கடை இருக்கு. ஒரு பத்து நிமிஷம் அங்கே நிறுத்தறேன். நீங்க நகை வாங்கணுமுன்னா வாங்கிக்கலாம். நல்ல கடை விலையும் நல்ல மலிவு"

" எனக்கு நகை ஒன்னும் வாங்க வேண்டாம். நேரா க்ராண்ட் பேலஸ் போயிருங்க"

சடார்ன்னு கைகூப்பி வணங்கி 'ஒரு பத்து நிமிசம் நின்னுட்டுப் போயிடலாம். எனக்கு இலவசமா அஞ்சு லிட்டர் பெட்ரோல் கிடைக்கும்' னு சொல்லி ஒரு கூப்பானை/ வவுச்சர் காமிச்சார்.

போயிட்டுப்போகுது. நகையைப் பார்க்கக் கசக்குதான்னு நினைச்சு சரின்னேன்:(
நகைக்கடை வாசலில் பாரம்பரிய உடையில் அழகான இளம்பெண்கள்,சரவணா ஸ்டோர்ஸில் வாசலில் நின்னு வரவேற்பதைப்போல! கையில் கல்கண்டு தட்டு மட்டும் மிஸ்ஸிங்

கடைக்குள் காலடி வச்சதும் 'நளினி' என்ற விற்பனையாளர் நவரத்திங்கள் பாலீஷ் பண்ணுவதையும், நகைகளில் கல் பதிப்பதையும் காமிச்சு விளக்கிட்டு ஷோரூம் கொண்டு போனாங்க. 'வேடிக்கை மட்டும்' பார்த்துட்டு வெளியே வந்துட்டேன். ஒரு சஃபையர் நெக்லேஸ் ரொம்ப நல்லா இருந்துச்சு. கோபாலைக் கூட்டிட்டுவந்து காமிக்கணும். மகளுக்கு வாங்கலாம், பிறந்தநாள் பரிசாக. கடை 'அஞ்சு மணி' வரை திறந்திருக்குமாம்.

பெட்ரோல் கூப்பான் கிடைச்சதான்னா..... கிடைச்சுருச்சுன்னு காமிச்சார். எங்கெங்கோ சுத்தி வளைச்சு க்ராண்ட் பேலஸை நோக்கிப்போகும் வழியில் ஒரு வாய்க்காலையொட்டின தெருவில் திரும்பினோம். ஓட்டுனருக்கு செல்லில் ஒரு அழைப்பு. பேசிக்கிட்டே ஓட்டறார். ரெண்டு பக்கமும் கடைகள் உள்ள அகலமான வீதி. 'டுக்டுக் இருக்கைகளை மாத்திக்கணும் இப்பத்தான் கொண்டுவரச்சொல்லி இருக்காங்க. இது என்னோட கூட்டாளி. இவர் வண்டியில் ஏறிக்குங்க. க்ராண்ட் பேலஸில் கொண்டு விட்டுருவார். உள்ளே பார்த்து முடிச்சதும் உங்களை ஹொட்டேலில் கொண்டு விட்டுருவார்னு இன்னொரு வண்டிக்கு மாறவேண்டியதாப் போயிருச்சு.
டுக்டுக்....கொஞ்சம் உஷாரா ரெண்டு பேரையும் ஒரு க்ளிக் பண்ணி வச்சுக்கிட்டேன்.

அரண்மனையை நெருங்கறோமுன்னு அரசர் அரசியின் படங்கள் கட்டியம் கூறுது. எங்கே பார்த்தாலும் விதவிதமான போஸ்களில் காட்சி கொடுக்கறாங்க. கோட்டை வாசலுக்குப் போய்ச் சேர்ந்தாச்சு. மணி 11.10. ரெண்டு மணிக்கு வந்து பிக்கப் பண்ணறேன்னு சொன்ன காங்( ஓட்டுனர் பெயர்)கிடம் மூணரைக்கு வந்தால் போதுமுன்னு சொல்லி திருப்பி அனுப்பிட்டேன்.
அடடா.... இன்னும் முக்காமணி நேரம்தானே இருக்கு. பனிரெண்டுக்கு பூஜை நேரம். பிக்குகள் எல்லாம் பூஜைக்கு வந்துருவாங்க. ஆனா ஒரு மணிக்குத் திறந்துவாங்க. அதுவரை நீங்க வெய்யில் நிக்கவேணாமேன்னு 'அன்போடு' சொன்ன கோட்டைவாசல் பணியாளர் ஒருவர், எனக்கு ஒன்னே முக்கால் மணி நேரம் போக்க ஒரு ஐடியாவை எடுத்துவிட்டார்.

ஓரமா நின்னுருந்த டுக்டுக்காரரைக் கூப்பிட்டு, பக்கத்துலே இருக்கும் ரெண்டு மூணு புத்தர் கோவில்களுக்குக் கொண்டுபோய்க் காமிச்சுட்டு சரியா ஒரு மணிக்கு இங்கே கொண்டுவந்துறணுமுன்னு 'ஆர்டர்' போட்டுட்டு என்னிடம் திரும்பி, வெறும் 20 பத் மட்டுமே கொடுங்க. கூடுதலாக் கொடுக்கவேணாமுன்னு 'பரிவோடு' சொன்னவர் 'இந்தக் கோவில்களுக்குப் போகும் வழியில் லீலான்னு ஒரு நகைக்கடை இருக்கு. பாங்காக் நகரிலே சிறந்ததும் விலை மலிவானதும் இது மட்டும்தான். அதையும் ஒரு பார்வை பார்த்துட்டு வாங்க'ன்னார்.

அட! சுற்றுலாப்பயணிகளுக்கு இவ்வளவு பரிவும் பாசமுமான்னு புல்லரிச்சுப் போயிட்டேன்.

இந்தக்கோவிலை ஏற்கெனவே பார்த்திருக்கோமேன்னு நினைக்கும்போதே, 'ஆமாம். வா வா' ன்னு அமைதியாக் கூப்பிடறார் அந்த நிற்கும் புத்தர். வேற ஒரு வாசல்வழியா இப்போ நுழைஞ்சுருக்கேன். வாழை இலைபோட்ட சாப்பாடு ஒருத்தருக்கு!!!!
நின்னு நிதானமா இன்னொருக்கப் பார்த்துக்கிட்டே மெல்ல வேறொரு வழிக்கு போயிருக்கேன் போல!. அங்கே ராணுவ உடை மாதிரி ஒன்னு போட்ட உருவச்சிலை. ஒரு கையில் உருவிய வாள். மற்றொன்னில் கூஜாக்குடுவை. காலருகே சேவல்கள்.ஸ்ட்ரா வச்ச இளநீர்கள். சிலைக்குப்பின்னால் இருக்கும் இன்னொரு சந்நிதி. த்வார பாலகராய் துப்பாக்கி ஏந்தி அமர்ந்திருக்கும் வீரர், தூணில் சுத்துன பாம்பு, ஊதுபத்தி ஏற்றி வழிபடும் பக்தர்கள், பக்கத்து அரசமர மேடையில் அமர்ந்து கதைபேசும் ஆட்கள் இப்படி...............
யார் என்ன ஏதுன்ற விவரத்தை அந்த மரத்தடி ஆட்களிடம் கேட்டால்.......'பர்மாவுடன் நடந்த யுத்தத்தில் நாட்டைக் காப்பாத்துன அரசர்' என்றதைத்தவிர வேறொரு தகவலும் கிடைக்கலை.

லீலாவை எட்டிப் பார்த்துட்டு நகரின் பல்வேறு இடங்களுக்கு 'உலா' போய்க்கிட்டே இருக்கேன். அடிக்கும் வெயிலுக்கு டுக்டுக் பயணத்தில் வரும் காத்து இதமா இருக்கு. திடீர்னு மணி பார்த்தால் ஒன்னு ஆகப்போகுது. இன்னொரு ஒரே ஒரு இடம் மட்டும் கூட்டிப்போய்க் காமிக்கிறேன்னு சொல்லிக் கெஞ்ச ஆரம்பிச்ச டுக்டுக்வாலாவிடம் 'இந்த நிமிசமே அரண்மனை போகணும்'னு கொஞ்சம் கடுமையாச் சொன்னவுடன்.............. அடுத்த பதினைஞ்சாவது நிமிசம் அரண்மனை வாசலில் நுழைய முடிஞ்சது.
நுழைவுக் கட்டணம் 350 பத். வாசலில் நிற்கும் கைடு சுற்றிக்காட்ட 300 கேட்டார். வேணாமுன்னு மறுத்துட்டு உள்ளே போனால் 'எங்கே பார்த்தாலும்' ஏகப்பட்டக் கூட்டம்.

அடக் கூட்டுக் களவாணிகளா!!!! நாம் நகை வாங்கினால் கிடைக்கும் கமிஷனுக்கும், பார்வையிட்டால் வரும் அஞ்சு லிட்டர் பெட்ரோலுக்கும் நமக்கு பல்பு கொடுத்துருக்குதுங்க பாருங்க:(


முக்கிய PIN குறிப்பு: பார்வையாளர் நேரம் காலை 8.30 முதல் பகல் 3.30 வரை. வாசலில் கிடைக்கும் போலித் தகவல்களைக் கண்டு ஏமாற வேண்டாம்.


தொடரும்..........................:-))))

23 comments:

said...

"அடக் கூட்டுக் களவாணிகளா!!!! நாம் நகை வாங்கினால் கிடைக்கும் கமிஷனுக்கும், பார்வையிட்டால் வரும் அஞ்சு லிட்டர் பெட்ரோலுக்கும் நமக்கு பல்பு கொடுத்துருக்குதுங்க பாருங்க:("

ம்ம்ம் எங்கயோ, எப்போவோ அவங்களும், நாமளும் ஒரே தண்ணி குடிச்சிருக்கோம் :-))))

said...

//நாம் நகை வாங்கினால் கிடைக்கும் கமிஷனுக்கும், பார்வையிட்டால் வரும் அஞ்சு லிட்டர் பெட்ரோலுக்கும் நமக்கு பல்பு கொடுத்துருக்குதுங்க பாருங்க:(//

எல்லா நாடுகள்லயும் பல்புவியாபாரம் பிரம்மாதமா நடக்குது போலிருக்கு :-))))

said...

ஆகா...இப்படி ஒரு டீரீக் பண்ணி பல்பு கொடுக்கறாங்களா!!!!

said...

அடப்பாவமே..:(

said...

விழிப்புடன் இருந்தால் கூட எப்படியோ ஒரு வகையில் ஏமாற்றிவிடுகிறார்கள், இது எல்லா சுற்றுலாத்தலங்களிலும் நடக்கிறது டீச்சர்:(((

said...

பதிவை திருப்பி திருப்பி படிச்சும், என்ன ஏமாத்திட்டாங்கன்னு எனக்கு புரியவே இல்லை, யாராவது சொல்லுங்களேன்! :(

said...

Avoid taking Tuktuk in BKK. Most will take advantage of our ignorance. Lucky that, we avoided their guidance during our trip to BKK. They misguided telling that the palace is closed due to some ceremony and will be open after 2:00PM. We did not believe and on reaching the gate found that it was open.

Avoid tuktuks as far as possible and dont think abt taking one in late evenings.

said...

டீச்சரையே ஏமாத்திட்டானா அந்த படவா டிரைவரு..!

சூப்பர் டிரைவர் அண்ணாச்சி.. நீவிர் வாழ்க..!

நகைக்கடைக்குள்ள போயிட்டும் எதுவுமே வாங்காம வெளில வந்த முதல் தாய்க்குலமே..! வாழ்க..!

said...

வாங்க டாடி அப்பா.

கோண்டுவானா லேண்ட் சமயமாக இருக்கும்!!!!

said...

வாங்க அமைதிச்சாரல்.

லிட்டருக்கு 60ன்னாலும் 300 பத் லாபம் ஆச்சே. முதலில் இது புரியலை. அப்புறம் நானும் கொஞ்சம் தேறிட்டேன். நம்ம ப்ளானில் இல்லாத பல இடங்களையும் சுத்திப் பார்த்துக்கிட்டே போகலாமே.

said...

வாங்க கோபி.

சொல்றதைச் சொல்லிட்டேன். நீங்க போகும்போது கவனமா இருந்துக்குங்க!

said...

வாங்க கயலு.

நமக்கு நேரம் பிரச்சனை இல்லைன்னா....ஊர் சுத்திப்பார்க்க இது(வும்) ஒரு எளிய வழி:-)))))

said...

வாங்க சுமதி.

ஏமாத்து வேலை நடக்குதுன்னாலும் இதில் பெட்ரோல் எப்படி வந்துச்சுன்னு தெரியலைப்பா!!!!

said...

வாங்க பொற்கொடி.

இவ்வளோ அப்பாவியா நீங்க!!!!!!!

பெட்ரோலுக்காக நம்மை இழுத்துக்கிட்டுப்போறாங்கப்பா:-))))

உலகநாடுகள் கவனமே பெட்ரோலுக்குப் பின்னால் ஓடுதே! நாமும் கொஞ்சம் ஓடணும் போல!!!!

said...

வாங்க அரவிந்த்.

நீங்க சொன்னது ரொம்பச் சரி. கொஞ்சம் ரிஸ்க்தான் போல. பகல் நேரம் என்பதால் சமாளிக்கலாம். நான்வேற ஒவ்வொரு டுக்டுக் ட்ரைவரையும் படம் புடிச்சு வச்சுக்கிட்டேன். முன் ஜாக்கிரதையாம்!!!! ஆனால் கேமெராவைப் பிடுங்கிக்கிட்டு ஓடுனா????

said...

வாங்க உண்மைத்தமிழன்.

இப்படிக்கூட ஒரு மாணவருக்கு மகிழ்ச்சி கிடைக்குதா????? பேஷ் பேஷ்!!!!!

நகைக்கடை எல்லாம் சொல்லி வச்சாப்போல 4 மணிக்கு மூடிடறாங்க. இதுக்குத்தான் மாலை அஞ்சு ஆயிருச்சுன்னா டுக்டுக் சார்ஜ் எல்லாம் ஏறிடுது.

நமக்கு வேணும் என்பது இல்லைன்னுதான் வாங்காம வர்ந்தேன்:-))))))

said...

காலம்தான். ஏமாறாம இருக்க என்ன வழி! நம்ம ஊரு தெரிஞ்ச ட்ரைவர், உங்களுக்கும் தெரிஞ்சவர்தான், ஏதோ துணிக்கடைக்குப் போகச்சொன்னா, இந்தக் கடையில் முதல்ல பாருங்கம்மா ,அப்புறம் அங்க போகலாம்னு சத்தாய்ச்சார். படு எரிச்சலோட உள்ள போனாட்டுதான் தெரிந்தது.வெளிநாட்டுல இருந்து வரவங்களை இங்க அழைத்து வருவதற்கு இவருக்கும் கமிஷன் உண்டுன்னு:((

said...

ரொம்ப நல்ல எழுதியிருக்கீங்க. எந்த ஊருக்கு போகிறோமோ அதை www.virtualtourist.com-ல் தேடினால் என்ன மாதிரிtourist trapsகள் இருக்கும் என்று சொல்லிவிடுகிறார்கள். பாங்காக்கில் எனக்கு அது பேருதவியாய் இருந்தது. அப்படி இடுந்தும் ஒரு டாக்சிகார 100 தாய் பட் வங்கிக் கொண்டு தரவே இல்லை என சாதித்து விட்டார். சந்தோஷ மனநிலையை சிறிய தொகைக்காக கெடுத்துக் கொள்ள விரும்பாமல், மறுபடியும் பணம் கொடுத்துவிட்டு இறங்கி விட்டேன்.

said...

"அடராமா" :)

said...

வாங்க வல்லி.

எல்லாம் பணம் படுத்தும் பாடு!!!!!

said...

வாங்க ரிஷபன்மீனா.

எதையும் தெரிஞ்சுக்காமப் போவதில் இருக்கும் த்ரில் தனி!

ஒரு காலத்துலே அப்படியே கிளம்பிப்போய்ப் பார்ப்பதுதான் வழக்கம். இப்பத்தான் எல்லாத்தும் 'வலை வீசிட்டுப் போறோம்'

ஒருவிதத்தில் நல்லதுன்னாலும்....

கிடைக்கும் அனுபவத்தின் தரம் கொஞ்சம் குறைவுதான்னு எனக்குத் தோணுது.

said...

வாங்க மாதேவி.

நன்றிப்பா.

said...

வாங்க மாதேவி.

நன்றிப்பா.