Thursday, October 01, 2009

கோயம்பேடு என்னும் திவ்யதேசத்துக்குப் போனேன்.

நம்ம பொன்ஸ்க்கு கல்யாணம் நடந்துச்சுப் பாருங்க, அப்ப அந்த ஹாலுக்குப் போகும் வழியில் ஒரு கோவில் மதில் சுவத்தைக் கடந்து போனோம். கொஞ்சம் பெரிய கோவிலாகத்தான் இருக்கும்போல. ஏற்கெனவே ரிஸப்ஷனுக்கு லேட். வழிதெரியாம இங்கேயும் அங்கேயுமா அலைஞ்சு, நாலைஞ்சுமுறை மலர்வனத்துக்கிட்டே எங்கேன்னு கேட்டுக்கிட்டேப் போய் சேர்ந்தது தனிக் கதை. வரும்போது பார்க்கலாமுன்னா மறுபடி லேட். இந்நேரம் கோவில் நடை அடைச்சுருப்பாங்க. இந்த முறை கோவில் நமக்கில்லை.

நம்ம கயலும் இந்தக் கோவிலைப் பற்றிக் குறிப்பிட்டு, அங்கே போய்வந்தேன்னு ஒரு பதிவில் எழுதி இருந்தாங்க. சரியா ரெண்டு வாரத்துக்கு முன்னால் இன்னொரு ச்சான்ஸ் கிடைச்சது. தோழி வீட்டுக்குப் போறோம். அங்கேதான் அதே ஏரியாவில்....... வழக்கம்போல் இந்த முறையும் வழிதவறி அங்கே இங்கேன்னு விசாரிச்சு(தோழிக்கு இந்தக் கோவில் தெரியாதாம்)போயிட்டோம்.
ஸ்ரீ குறுங்காலீஸ்வரர் கோவில். அம்பாள் பெயர் தர்மசம்வர்த்தினி. கோவிலுக்கு முன்னால் திருக்குளத்தையொட்டி ஒரு பதினாறுகால் மண்டபம். ஒரு தூணுக்கு மட்டும் எக்ஸ்ட்ரா வெளிச்சம் போட்டுக் குட்டியா ஒரு சந்நிதி. தூணில் இருக்கார் சரபேஸ்வரர். எனக்கு இந்தப் பெயரே புதுமையா இருந்துச்சு. அவர் சந்நிதியில் காலடியில் ஒரு பைரவர் நல்ல உறக்கத்தில். மண்டபத்திலும் ஒரு ஏழெட்டுப்பேர் உறக்கம்.
சரபேஸ்வர் & பைரவர்

மனுஷ்யர்கள் சிலர் சந்நிதி முன் உக்காந்து கண்ணைமூடித் தியானத்தில் இருந்தனர். சரபேஸ்வரருக்கு மலர் அலங்காரம். உண்மையில் எப்படி இருப்பார்ன்னு தெரியலை. (அப்புறம் கோவில் மதில் சுவரில் இருந்த படங்களைப் பார்த்துத் தெரிஞ்சுக்கிட்டேன்)

கோபாவேசமாக இருந்த நரசிம்ஹரைக் கட்டித் தழுவி அவர் கோபத்தைத் தணிக்கிறார் சரபேஸ்வரர். அச்சச்சோ.....வால் வேற இருக்கு! pets இருந்தா BP ஏறாதுன்றது நிஜம்தான்)

மண்டபத்துக்குப் பக்கம் கொட்டாய் போட்டு கல்லை உடைச்சு வேலை நடந்துக்கிட்டு இருக்கு.விசாரிச்சேன். புதுசா ராஜகோபுரம் கட்டப்போறாங்க நம்ம குறுங்காலீஸ்வரருக்கு. அன்னிக்கு மாளய அமாவாசை. மறுநாள் நவராத்ரி ஆரம்பிக்கப்போகுது. தினப்படி நிகழ்ச்சிகளுக்கான அறிவிப்பு பெரிய அளவில்.

பிரதான வாசலுக்கு நேரா அறம் வளர்த்தநாயகியின் சந்நிதி.மணி ஓசை ஒலிக்குதேன்னு அங்கே பாய்ஞ்சோம். சுமாரான கூட்டம். இளைஞர் ஒருவர் ரொம்ப அருமையா அம்மன்மேல் 'பதிகம்'(சரியான பதமா?) பாடிக்கிட்டு இருந்தார். எனெக்கென்னமோ சேந்தன் அமுதன் ஞாபகம் வந்துச்சு.

அசப்புலே பார்த்தால் அசல் கன்யாகுமரி, காந்திமதி போல நம்ம தர்ம சம்வர்த்தினி. பிரமிக்க வைக்கும் அலங்காரம். அவசரமா எங்கியோ புறப்பட்டதுபோல இடது பாதம் கொஞ்சம் முன்னோக்கி இருக்கு. தீபாராதனை முடிஞ்சதும், அர்ச்சகர்கிட்டே உள்ளே ஸ்வாமி லக்ஷ்மியான்னு (அசட்டுத்தனமாக்) கேட்டேன். (கருவறை வாசலுக்கு மேல் கஜலக்ஷ்மி கட் அவுட் இருந்துச்சுப்பா) இல்லையாம். கட் அவுட் யாரோ வரைஞ்சு வச்சுருக்காங்களாம். இருக்கட்டும் சாமிகளுக்குள் பேதம் ஏது?

கருவறையைச் சுற்றி வலம் வந்தோம். ரொம்பப் பழைய கோவிலா இருக்கணும். கட்டிட அமைப்பே கதை சொல்லுது. சுத்திமுடிச்சு இன்னொருக்கா அம்மாவைப் பார்க்கப் பார்வையை உள்ளே செலுத்தித் திரும்பினால், சின்னதா ஒரு பல்லக்கில் வெண்பட்டு உடுத்திப் புறப்படத்தயாராத் தனியா இருக்கார் அன்னை உற்சவமூர்த்தியாக. கிட்டக் குனிஞ்சுப் பார்க்க வாய்ச்சது.

வெளியே வரும்போது நமக்கு வலது பக்கம் நவகிரகங்கள். எட்டிப் பார்த்தால் ஒரு ஆச்சரியம். அடுக்கடுக்கான மேடை. உச்சியில் ஏழு குதிரை பூட்டுன தேரில் சூரியன் தன் தேவிகளுடன். அடுத்த படியில் மற்ற எட்டுப்பேரும். இதுவரை இப்படிப் பார்த்ததே இல்லை. ஆஹா.....

அம்பாளுக்கு இடதுபுறம் அடுத்த சந்நிதியில் நம்ம குறுங்காலீஸ்வரர். லிங்க ரூபத்தில் காட்சியளிக்கிறார். இவரை வலம் வந்தப்பக் கருவறைக்குப் பின்புறமும் பக்கச் சுவர்களிலும் அழகிய திருவுருவங்களாக ஞானேஸ்வர தக்ஷிணாமூர்த்தி, சங்குசக்ரதாரியாக மகாவிஷ்ணு. அவருக்கு நேரெதிரா உள்பிரகாரத்தில் மகாலக்ஷ்மி, பக்கத்துலே அந்த 'நால்வர்', விஷ்ணு துர்கை, ஞான சரஸ்வதி தொட்டடுத்து நாகர்மேடை. பிரகாரசுவற்றில் எல்லாம் சுதர்சன அஷ்டகம்,துர்கா சூக்தம், சிவப்புராணம்(சின்னதா ஒரு பகுதி) ஸங்காஷ்ட நாஸன கணேச ஸ்தோத்திரம் சலவைக்கல்லில் பொறிச்சு வச்சுருக்கு. ரெண்டு நிமிசம் நின்னு படிச்சால் புண்ணியம். தேடிக்கிட்டேன்.

அர்ச்சகரிடம் தலவரலாறு என்னன்னு விசாரிச்சால் வெளியே படம் இருக்குன்னார்! அலுவலக அறைக்குப்போனால் அங்கே யாருமில்லை. அதுக்குள்ளே நாயகி, மேளதாளம் முழங்க வெளிப்பிரகாரத்தைச் சுற்றிவந்து முன்னால் நின்னு பல்லக்குக் குலுங்க ஆடி நமக்கெல்லாம் அருள் செஞ்சாங்க. சேவிச்சுக்கிட்டோம். அப்புறம் அதிகாரியைத் தேடிப்பிடிச்சு கோவில்கதை சொல்லுங்கன்னேன். அவர் இங்கே பொறுப்பேத்து ரெண்டு நாள்தான் ஆச்சாம். 'நான் புதுசு. எனக்குத் தெரியலை. அர்ச்சகர்கிட்டே கேளுங்களேன்'ன்னார். (இந்த விளையாட்டுக்கு நானில்லை. கூகுளாண்டவர்கிட்டே கேட்டுக்கலாமுன்னு இருந்துட்டேன்.) படம் இருக்காமே. அதைப் படம் எடுத்துக்கவான்னு விண்ணப்பிச்சதுக்குச் சரின்னுட்டார். நம்ம காரியம் ஆச்சு:-)

ஸ்வாமிக்கு குசலவபுரீஸ்வரர் என்ற பெயரும் இருக்கு. லவனும் குசனும்(நமக்கெல்லாம் லவகுசான்னதும் சட்னு யாருன்னு புரிஞ்சுருது. தமிழ்சினிமா உபயம். இங்கே மாத்தி யோசின்னு குசலவன்னதும் இரட்டையரில் யார் மூத்தவர்னு மனசுலே ஒரு பிறாண்டல்) வந்து வணங்கிய ஈஸ்வரனாம்.


அரசன் சென்ற ரதம் பூமியில் புதைஞ்சு கிடந்த லிங்கத்தின்மேல் அழுந்தி, லிங்கம் குறுகிவிட்டதாம். அதனால் இவர் குறுங்கால் ஈஸ்வரன் ஆனாராம்.

ஒரு இடத்தில் ரெட்டையர்கள் பூஜிக்கும் படம் வரைஞ்சு இருந்துச்சு. வலப்பக்கம் தனியா ரெண்டு சந்நிதிகள். அண்ணாமலையார், குமாரஸ்தலமுன்னு சுப்ரமணியர். கோயிலில் பசுக்கள், கன்றுகள் இருக்கு. ஆனாலும் வியக்கத்தக்க வகையில் வெளிப்பிரகாரம் நல்லசுத்தமாவே இருக்கு. (அதுவும் இந்த ஏரியாவில்ன்னு சொன்னது கோபால்)

ஸ்ரீ ராமர் அனுப்பிய அஸ்வமேத யாகத்துக்கான குதிரையை, குசனும் லவனும் பிடிச்சு இரும்புவேலிக்குள் அடைச்சு வச்சுட்டாங்களாம். ( கோ= வேந்தன்) கோ அனுப்பிய குதிரைகளை (அயம்= இரும்பு)அயத்தினால் செஞ்ச பேடில் (பேடு = வேலி) அடைச்ச இடமாம் . கோயம்பேடு!

(அயோத்தியில் இருந்து வெளியேற்றப்பட்டக் கர்ப்பிணி சீதையை வால்மீகி முனிவர் தன் ஆசிரமத்துலே வச்சுக் காப்பாத்துனார்னு தெரியும். ஆனால் அவரோட ஆசிரமம் நம்ம பேட்டையிலா இருந்துச்சு? இப்படியெல்லாம் குண்டக்க மண்டக்கன்னுக் கேக்கப்பிடாது. கூத்தாடுன மனசுக்கு ஒரு அடி வச்சேன்)

எது எப்படின்னாலும் கோவில் ரொம்பப் பழசுன்றதை மறுக்க முடியாது. தமிழக அரசு, ராஜகோபுரத் திருப்பணிக்கு 81 லட்சம் கொடுக்குதாம். அப்ப மீதி? மக்கள் கைங்கர்யத்தால் நிறைவேறணும். வாசலில் அறிவிப்பு வச்சுருக்கு. (மன்னர்கள் அளித்த மானியமெல்லாம் ஸ்வாஹா....)

தோழி வீட்டுக்குப் போய்ச்சேர்ந்ததும் கோவில் இருக்கும் விவரம் சொன்னால்........'ஆஆஆஆஆஆ'ன்னு கேக்கறாங்க. கோவில் உள்ள விவரமே நியூஸி மக்கள் சொல்லித்தான் தெரியுதாம்:-)

இன்னொருநாள் அண்ணியிடம் தொலைபேசும்போது
தலைகொள்ளாப் பெருமையுடன் அளந்துக்கிட்டு இருந்தேன்.

"ஆமாம் பக்கத்துலேயே பெருமாள் கோவில் இருக்கே, அங்கே போகலையா?"

"ஙே ........................"

39 comments:

Anonymous said...

//ஙே ........................"//

பல்பு வாங்கினீங்களா!!!

said...

ரெண்டு கோயிலும் பத்தி தானே நானும் சொன்னேன்.. :) துளசிக்கு மறதியா? கண்ணுவச்சிட்டேனோ?

said...

கோயம்பேடுன்னால் காய்கறிகள்தான் கொட்டிக் கிடக்குமுன்னு நெனச்சேன்.
அதுக்குள்ள போய் இவ்ளோ புராணக்கதைங்களை வாரிட்டு வண்ட்டீங்களே!!!டீச்சர்ன்னா டீச்சர்தான்.

said...

//...."ஆமாம் பக்கத்துலேயே பெருமாள் கோவில் இருக்கே, அங்கே போகலையா?"

"ஙே ........................"
////

Got the input for one more post

:-))

said...

அங்க இருதயாலீஸ்வரர் கோவிலும் ,வைத்தியநாத சுவாமி கோவிலும் இருக்குப்பா.
பூசலார் இதயத்தில் கட்டிய கோவில் உண்மையாகவே உருவான இடம்.

பெருமாள் கோவில் எல்லாக் கோவிலையும் ஒரே நாளில் பூர்த்தி செய்யலாம்.

said...

கோயம்பேடு புராணம் அருமை, கேள்விப்பட்டது இல்லை, சென்னை பாசையில் ஒரு ஊர் என்றே நினைத்திருந்தேன்.

அப்படி ஒரு கோவில் சென்னையில் இருந்த போது அறிந்திருந்ததே இல்லை.

அடுத்தமுறைதான் முயற்சிக்கனும்.

படங்களும் தகவல்களும் நன்று !

said...

\\'ஆஆஆஆஆஆ'ன்னு கேக்கறாங்க. கோவில் உள்ள விவரமே நியூஸி மக்கள் சொல்லித்தான் தெரியுதாம்:-)\\\

நோட் பண்ணிக்கிட்டேன் ;)))

\\"ஙே ........................"\\

;)))

said...

We love your blog! It makes us laugh everytime when we read it. You have a very good writing style.Keeeeeep writing!

Anonymous said...

ஸ்வாதி நட்சத்திர்த்தில் உதித்த நரசிம்மரின் சீற்றம் தணிக்க சிவன்
சரபேஸ்வரராக வந்ததாக கதை படித்திருக்கிறேன்.

பின்குறிப்பு: இது உங்களுக்குப்போட்டேன். எப்படியோ கயல்விழிமுத்தக்காவுக்கு போயிடுச்சு :)

said...

ஆஆஆஆஆஆஆ நானும் அப்படிதான் டீச்சர், எனக்கு கோவில் இருக்கறதே தெரியாது. பஸ் ஏறப் போனதோட சரி. நல்ல விளக்கங்கள். நன்றி டீச்சர். சீக்கிறம் பொருமாள் கோவில் கட்டுரையும் போடுங்க, இல்லனா நம்ம வெங்கி கோவிக்கும். நன்றி டீச்சர்.

said...

குசன் மூத்தவர்.

//ரெண்டு நிமிசம் நின்னு படிச்சால் புண்ணியம்// இவ்வளவு ஸ்லோகத்தை நீங்க ரெண்டு நிமிஷம் படிச்சா புண்ணியம். உங்க பதிவைப் படிச்சா எங்களுக்கு எவ்வளவு புண்ணியம்?

:-)

Anonymous said...

kikikiki haiyoo haiyoo

said...

இந்தக்கோவிலுக்குப் போயிட்டு வாங்க என்று தஞசாவூரிலே எங்க வீட்டு எதித்த வீட்டு பாட்டி
சொல்லிக்கிட்டே இருப்பாங்க..

நாங்க தஞ்சைக்கு ப்போகும்பொழுதெல்லாம் போயிட்டு வந்தீங்களா அப்படின்னு கேட்பாக..

1994 லேந்து நாங்களும் போவணும்னு தான் நினைச்சுகிட்டே இருக்கிறோம்.

சரபேஸ்வரரும் தர்மஸம்வர்த்தினையும் இன்னும் அப்பாயின்ட்மென்ட் தரவில்லை !!!

நினைவு படுத்திய துளசி மேடத்துக்கு உளமார்ந்த நன்றி.

அடுத்த வாரம் போயிட்டு வர்ரோம்.

மீனாட்சி பாட்டி.

said...

//"ஙே ........................"//

:))))

said...

//கெக்கே பிக்குணி said...
//ரெண்டு நிமிசம் நின்னு படிச்சால் புண்ணியம்// உங்க பதிவைப் படிச்சா எங்களுக்கு எவ்வளவு புண்ணியம்?//

கெபி யக்கோவ்
பதிவை நின்னு படிக்கணும்! அப்ப தான் புண்ணியம்! எழுஞ்சி நில்லுங்க! :)

//ஙே//

டீச்சர்,
ங் எப்படி தமிழ்மணத்துக்குச் சொந்தமோ, அது போல ஙே துளசிதளத்துக்குச் சொந்தம்! காப்புரிமை வாங்கி வச்சிக்கோங்க! :)

said...

//நம்ம தர்ம சம்வர்த்தினி. பிரமிக்க வைக்கும் அலங்காரம். தீபாராதனை முடிஞ்சதும், அர்ச்சகர்கிட்டே உள்ளே ஸ்வாமி லக்ஷ்மியான்னு (அசட்டுத்தனமாக்) கேட்டேன்//

ஹா ஹா ஹா! பார்வதி-ன்னாலே வீரம் தானே! வீரலட்சுமி-ன்னு நீங்க கேட்டது கரீட் தான் டீச்சர்! ;)

தர்ம சம்வர்த்தினி = அறம் வளர்த்த நாயகி! இதே பேர் தான் திருவையாற்றிலும் அம்பாளுக்கு!

said...

//ஸ்ரீ ராமர் அனுப்பிய அஸ்வமேத யாகத்துக்கான குதிரையை, குசனும் லவனும் பிடிச்சு இரும்புவேலிக்குள் அடைச்சு வச்சுட்டாங்களாம்//

ஹிஹி!
உங்களுக்கு இன்னொரு பதிவு போட நானே ஒரு பின்னூட்டம் எடுத்துக் கொடுக்கிறேன்!

இதே போல இன்னொரு லவ குச கோயிலும் சென்னையில் இருக்கு! லவ குசர்கள் முருகனை வழிபட்டது!

முருகனுக்கும் வள்ளிக்கும் அழகான கல்யாண கோலத்தில், கைபிடிச்சி நிற்கும் உயிரோட்டமான, வெட்கம் கொஞ்சம் திருவுருவம்!

சிறுவாபுரி, சின்னாம்பேடு-ன்னு இடம் பேரு! சென்னை-கும்மிடிப்பூண்டி ரோட்டில்! வாழைமரங்கள் பசேல்-ன்னு கொஞ்சும் ஊரு! ஜாலியாச் சுத்திட்டு வாங்க! :)
இது கோயம்பேடு! அது சின்னாம்பேடு!

said...

//ஆமாம் பக்கத்துலேயே பெருமாள் கோவில் இருக்கே, அங்கே போகலையா?"

"ஙே ........................"//

வைகுண்டவாசப் பெருமாள் கோயிலைச் சொல்றீகளா டீச்சர்?
ஙே ஙே :))

said...

தாமதமான பதில்களுக்கு மாப்பு ப்ளீஸ்.

said...

வாங்க சின்ன அம்மிணி.

இல்லையா பின்னே? அதுவும் எனர்ஜி ஸேவர்:-)

said...

வாங்க கயலு.

வயசாகுதுல்லே? அதான்......

ஒருவேளை நிஜமாவே கண்ணு வச்சுட்டீங்களா? அச்சச்சோ!!!

said...

வாங்க நானானி.

சமைக்காமல் தப்பிக்க என்னென்ன கோல்மால் செய்யணுமோ அத்தனையும் செய்வேன். அதான் காய்கறிகளை ஓரம்கட்டிட்டுத் தாண்டிப்போனேன்:-)

said...

வாங்க நன்மனம்.

இதுக்குப் பெயர் கோ(ர்)த்து வாங்குவது:-))))

said...

வாங்க வல்லி.

பூசலாரின் கோயில் உண்மையில் எதுன்றதே பூசலாகிரும்போல இருக்கேப்பா!

திருவான்மியூர், அப்புறமும் சிலபல இடங்கள்னு சேதி வருதே!

said...

வாங்க கோவியாரே.

நானும் அப்படித்தான் நினைச்சுக்கிட்டு இருந்தேன், இங்கே போகும்வரை!

said...

வாங்க கோபி.

தெரியாத சேதிகள் உலகளவு:-)))))

said...

வாங்க சந்தியா.

முதல் வரவா?
நலமா?

ஆதரவுக்கு நன்றி.

மீண்டும் வரணும்,ஆமா!

said...

வாங்க சின்ன அம்மிணி.

கதையை முழுக்கச் சொல்லப்பிடாதா?
எப்போன்றது சொல்லிட்டீங்க.

எப்படி, எந்த ரூபத்தில் வந்தார்?

said...

வாங்க பித்தனின் வாக்கு.

வெங்கி நம்மாளு. கோச்சுக்கல்லாம் மாட்டார்:-)

துளசியைக் கொண்டுவராதீங்கன்னு போர்டு போட்டவர்களிடமேத் துளிக் கோவம் காமிக்கலை(-:

said...

வாங்க கெக்கே பிக்குணி.

ஐயம் தெளிவித்தமைக்கு நன்றி.

குசர் குசர் குசர்

said...

வாங்க தூயா.

என்னாத்துக்கப்பா இம்மாம் சிரிப்பு???

பழமைபேசியோடு சேர்ந்து எல்லோரும் இஃகி இஃகின்னு ரொம்பக் கெட்டுப்போயிட்டோம்:-)))))

said...

வாங்க மீனாட்சி அக்கா.

கைடு வேணுமா? வரட்டா?

said...

வாங்க நான் ஆதவன்.

வருகைக்கு நன்றிப்பா.

(ஏம்ப்பா ஆதவா...சென்னைச்சூட்டைக் கொஞ்சம் குறைக்கப்படாதா?)

said...

வாங்க கே ஆர் எஸ்.

'ஙே' வுக்கு முந்தியே ஒரு எழுத்தாளர் (ராஜேந்திரகுமார்தானே?) காப்பிரைட் வாங்கிடலையா?

இல்லேன்னா........ இனி நான் தான்:-))))

அப்பாடா.... இதுவரை ரெண்டாச்சு!

ஆமாம். திருவையாறும் சிலமாசங்களுக்கு முன் போயிட்டுவந்தேன். பல கோவில்களில் அம்பாள் பெயர் என்னமாக் கொஞ்சுது!

கொடி இடை நாயகி, திருவுடை நாயகின்னு ஒரே அமர்க்களம் போங்க!

//வாழைமரங்கள் பசேல்-ன்னு கொஞ்சும் ஊரு!//
'வாழைப்பந்தல்'காரருக்கு வாழைமரங்கள் பிடிச்சிருக்கு:-)

கும்மிடிப்பூண்டியை லிஸ்டில் சேர்த்தாச்சு.

வைகுண்டவாசன் கோவிலில் புள்ளைத்தாய்ச்சி சீதையின் சிற்பம் இருக்காம்!

said...

//தீபாராதனை முடிஞ்சதும், அர்ச்சகர்கிட்டே உள்ளே ஸ்வாமி லக்ஷ்மியான்னு (அசட்டுத்தனமாக்) கேட்டேன்.//

உங்கள் ஒருவரால்தான் இப்படி ஹாஸ்யத்துடன் எழுத முடியும்.

நானும் பல தடவை இக்கோவிலில் படம் எடுக்க அனுமதி கேட்டு கிடைக்கவில்லை, உங்கள் பதிவில் அவற்றைப்பார்த்து மனம் மகிழ்ச்சியாக உள்ளது துளசி டீச்சர்.

said...

//வைகுண்டவாசன் கோவிலில் புள்ளைத்தாய்ச்சி சீதையின் சிற்பம் இருக்காம்!//

ஆம் மூலவர் உள்ள சீதாதேவி பிள்ளைத் தாய்ச்சி, வால்மீகி முனிவரும் உடன் தரிசனம் தருகின்றார். உற்சவர் சீதா தேவியும் கோடாலி முடிச்சு கொண்டையுடன் ஒரு அதிசய கோலத்தில் சேவை சாதிக்கின்றார்.

said...

புதிய தகவல். நன்றி.

said...

வாங்க கைலாஷி.

இன்னும் போக வாய்க்கலை. உங்க வர்ணனையை மூளையில் முடிச்சாப் போட்டு வச்சுருக்கேன்.

நம்ம கோவிலில் கருடசேவை பார்த்ததும் உங்க நினைவுதான் வந்தது.

said...

வாங்க ஜோதிஜி.

நாம் எழுதுவது கொஞ்சம்தான் என்றாலும் வரும் பின்னூட்டங்களில் புதிய தகவல்கள் நிறையக் கிடைச்சுருது.

தகவல்கள்தான் செல்வமாம்.

இன்ஃபர்மேஷன் இஸ் வெல்த். செந்தில் சொல்லிட்டார்:-)