Thursday, October 15, 2009

உடை(ரை)யாடல் (நுணலும் தன் வாயால்.....)

"ஏம்மா எதாவது ஃபோன்கள் வந்துச்சா?"

"வராம? அதுபாட்டுக்கு நிறைய வந்துக்கிட்டுத்தான் இருக்கு."

"என்ன சமாச்சாரம்?"


"எல்லாம் தீவாளிக்குத் துணி எடுத்தாச்சான்னு கேட்டுக்கிட்டே இருக்காங்க.

"அதுக்கு நீ என்ன சொன்னே?"

"எடுக்கணும். நாளைக்கு நீங்க ஊர்லே இருந்து வந்ததும் போகலாமுன்னு இருக்கேன்னேன்"

"நான் வர்றவரை நீ எதுக்குக் காத்துக்கிட்டு இருக்கணும்? நீயே உன் தோழிகள் யார்கூடவாவது போய் உனக்கு வேணுங்கறதை வாங்கிக்கோ."

"அதெப்படி? கடைக்குக் கூடவே வந்து , நான் வாங்குற அயிட்டத்தைப் பார்த்து இது என்னத்துக்கு? எனக்குப் பிடிக்கலை'' இப்படி எதாவது துஸ்க்குச் சொல்லிக்கிட்டேப் பக்கத்துலே நின்னாத்தானே எனக்கும் ஷாப்பிங் செஞ்சமாதிரி இருக்கும்?"

"அதுக்குத்தானே நான் இருக்கேன்:-)"

"சரி. பார்க்கிறேன். எனக்கும் ஒரு சால்வார்கமீஸுக்குத் துப்பட்டா வேணும்.

ரெண்டு நாள் கழித்து:

"தீபாவளிக்குத் துணி வாங்கியாச்சு. இனி என்னென்ன வாங்கணுமுன்னு ஒரு லிஸ்ட் போட்டுரும்மா "

"என்னது? தீவாளிக்குத் துணி ............வாங்கியாச்சா? எப்போ?"

"அதான் தோழிகூடக் கடைக்குப் போயிருந்தேன்னு சொன்னியேம்மா!"

"ஆமாம். ரெண்டு மூணு சால்வார் கமீஸ் துணிகளும் ரெண்டு புடவையும்தான் வாங்குனேன். நீங்கதான் அதைப் பார்க்கவே இல்லையே(-: "

"நேரம் எங்கே இருந்துச்சு? வந்ததுலே இருந்து ஒரே பிஸி. எங்கே அதையெல்லாம் கொண்டு வா...."

" ரொம்ப சிம்பிளா எடுத்துட்டே போல இருக்கே. என்ன புடவை இது?
நல்லா க்ராண்டா ஒரு பட்டுப்பொடவை வாங்கிக்கிட்டு இருக்கலாமுல்லே?"

"அப்டீங்கறீங்க? இருந்துட்டுப் போகட்டுமே. இது என்னமோ வல்கலம் புடவையாம் சிலுக்குதானாம் ."

"இல்லெம்மா.....இன்னும் இதைவிட நல்லா க்ராண்டா ஒரு பட்டுப்பொடவை வாங்கிக்கிட்டு இருக்கலாமுல்லே?"

" எதுக்கு அதெல்லாம்? "

" முப்பத்தியஞ்சு வருசத்துக்குப் பிறகு தமிழ்நாட்டுலே தீபாவளி கொண்டாடப்போறே. நல்லதாத்தான் வாங்கிக்கயேன். கிளம்பு. நான் கூடவந்து எடுத்துத்தர்றேன் "

" இருங்க. எனக்கு ஒரு துப்பட்டா வாங்கிக்கணும். தேடிக்கிட்டே இருக்கேன். மேட்சிங்காக் கிடைக்கமாட்டேங்குது. இன்னிக்கு அந்த கமீஸைக் கையோடு எடுத்துக்கிட்டு வரப்போறேன். தி.நகர்லே பயங்கரக்கூட்டமாம். நாம வேணுமுன்னா எக்மோராண்டை, அல்சாமாலுக்குப் போகலாம்"

" போகும் வழியிலே அந்தக் காட்டன் இந்தியான்னு ஒரு கடை இருக்குல்லே அங்கே ஒரு அரைக்கைச் சட்டை எடுத்துக்கறேன். முழுக்கை போட முடியல. சென்னை வெய்யில் ஆளைத் தீய்ச்சுருது."

"ஆமாமாம். வாங்கிக்குங்க"

" அஞ்சே நிமிசத்துலே செலக்ஷன் ஆகிருச்சு எனக்கு. இந்த மூணு சட்டையிலே எது நல்லா இருக்கு பாரு."

" மூணையுமே எடுத்துக்குங்க"

" எதுக்கும்மா அனாவசியமா?"

" அது இல்லீங்க. இன்னிக்கு நான் கொஞ்சம் தயாளுவா இருக்கேன். அதான்...

"சட்னு மூணு எடுத்துக்கோன்னு சொல்லிட்டே.... என்ன ஆகப்போகுதோ?"

" அதெல்லாம் ஒன்னும் ஆகாதுங்க. ஜெனரஸா இருந்தாத் தப்பா?"

அல்சா மால்க்குப் போனால் அங்கொரு கடையில் இருக்கும் விற்பனைப்பெண், ' துப்பட்டா இருக்குங்க. ஒரு அஞ்சு நிமிசம் உக்காருங்க. நான் கொடோனுக்குப்போய் எடுத்தாறேன்' .

அசரீரி ஒலிக்குது. "சீக்கிரம் போயிட்டுவா. நீங்க உக்காருங்க"

"நாலுக்கு எட்டு (அடிகள்)லே எங்கே இருந்து குரல் வருது?"

"வீடியோ கேமெரா இருக்குங்க. நான் மேலே மாடியிலே இருக்கேன்."

"போச்சுடா! ட்ரயல் ரூமுலேயும் கேமெரா வச்சுருக்கீங்களா?"

" அதெல்லாம் இல்லெம்மா. இங்கே ட்ரயல் ரூமே இல்லை."

விற்பனைப்பெண் ரெண்டு துப்பட்டாக்களுடன் வேகமாத் திரும்பவந்து, 'இது ரெண்டும் சரியா இருக்கு. எது எடுத்துக்கறீங்க?'

"ஏங்க இது ரெண்டும் மேட்ச்சே ஆகலையே. வேற கலரால்லே இருக்கு."

"அது துணியைச் சிங்கிளாப் போட்டுப் பாருங்க ரொம்பக் கரீட்டா இருக்கும்"

" கொஞ்சம்கூட மேட்சே இல்லை. எனக்கு வேணாம்"

" இல்லேம்மா அது அது மேட்சிங் கலர்தான். நல்லப் பாருங்க" (சொன்னது அசரீரி)

" இவ்வளவு மோசமாவா என் கண்ணுக்குக் கலர் தெரியலை? இது கொஞ்சம்கூட மேட்சிங் இல்லை. வேணாங்க. ரொம்ப தேங்ஸ்."

"இதைவிட மேட்சிங் எப்படீ கிடைக்கும். நல்லாப் பாருங்க. விலைவேணுமுன்னாக் கொறைச்சுத்தாரேன்"

"நீங்க என்ன சொல்றீங்க? இதுவா மேட்சிங் கலர்? ஏங்க.... எப்படி இதுதான்னு சாதிக்கிறாங்க பாருங்க! "

"போகட்டும் விடு. கஸ்டமர்கிட்டே எப்படியாவது வித்துருன்னு முதலாளிகள் சொல்றதுதான்..... வா. வேற இடத்துலே பார்க்கலாம்."

" பக்கத்துலேயே அடுத்த கட்டிடத்துலே தோழி சொன்ன ஒரு கடை இருக்குங்க."


"ஆயியே.... க்யா ச்சாஹியே ஆப்கோ? நயா டிஜைன்ஸ் பஹூத் ஹை ஹமாரா பாஸ் "

" காலி, ஏக் துப்பட்டாச் சாஹியே. மிலேகா?"

"காலி துப்பட்டா நஹி ஹை. யே செட்க்கோ தேக்கியே. ஸப் நயா டிஜைன்ஸ்"

"சிந்தெடிக்வாலா நஹி ச்சாஹியே. குச் காட்டன் ஹை க்யா?"

"பஹூத் பஹூத்.....யே ஸப் காட்டன் ஹை. பூராக்கி பூரா நயா டிஜைன்ஸ்"

"இதெல்லாம் நல்லா மாடர்னா இருக்கேம்மா. இதுலே ரெண்டு மூணு எடுத்துக்கோ....இரு, நான் செலக்ட்பண்ணித் தர்றேன்"

"கட்டாயம் வேணுமான்னு இருக்குங்க....இப்பத்தானே கொஞ்சம் எடுத்தேன் அதையே இன்னும் தைக்கக் கொடுக்கலை."

"எல்லாத்தையும் சேர்த்து ஒன்னாவேக் கொடுத்துறலாம். யே ஸப் பேக் கீஜியே. ஏம்மா...பிடிச்சிருக்குதானே?"

" சரி. உங்க இஷ்டம்"

" இன்னும் துப்பட்டா வாங்கலையேம்மா. வேற கடையைப் பார்க்கலாமா? "

" பரவாயில்லைங்க. இப்போ வீட்டுக்கேப் போகலாம். இன்னொருநாள் துப்பட்டா வாங்குனா ஆச்சு"

(மனசுக்குள், ஒன்னு ரெண்டு.....ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அஞ்சு(தான்) ஆச்சு இதுவரை.)

வீட்டுக்குத் திரும்பிவரும் வழியில்

"ஒருவழியாத் துணிமணி ஆச்சு. இன்னும் வேறென்ன வாங்கணும்?"

"சரியாப் போச்சு. உங்க ஆசைதான் இன்னும் நிறைவேறலை!"

எனக்கொன்னும் ஆசைன்னு இல்லையேம்மா.. என்னன்னு சொல்லேன்?

"அதாங்க கிராண்டா எனக்கொருப் பட்டுப்புடவை வாங்கித்தரணுமுன்னு சொல்லிக்கிட்டே இருந்தீங்களே அந்த ஆசைதான்!"

" ம்..."

" ஏங்க பட்டுப்பொடவைக்கு நாளைக்கு வேணுமுன்னாப் போகலாமா? அப்படியே கையோட ஒரு துப்பட்டா வாங்கியாறனும்.


"தி நகர் கூட்டம் பார்த்து உங்களுக்குப் பயமா இருக்குமேங்க. பேசாமக் காஞ்சீவரம் போயிறலாமா?"

"பயமா? எனக்கா? .........அப்ப.............துப்பட்டா?"

"அது அப்படியே இருந்துட்டுப் போகட்டும். காரணமே இல்லாமக் கடைக்குப்போனா நல்லாவா இருக்கும்? இரையும் வேணும்தானே? "அனைவருக்கும் இனிய தீபாவலி(?) க்கான வாழ்த்து(க்)கள்.

36 comments:

said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

said...

கல்யாணமாகி முப்பது வருஷத்துக்கு மேல ஆனாத்தான் வாங்கிக்கோன்னு ரங்ஸ் எல்லாம் சொல்வாங்க போலிருக்கு :)

தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

said...

ஆகா!

அட, நம்ம கோபால் சாரா!?

கலக்கல்!

said...

ஆகா ஒரு மூனு சட்டையக் கொடுத்து, அஞ்சு சுடியும், ஒரு பட்டுப் புடவையும் சுட்டுடிங்களே. பாவம் கோபால் சார். நல்லவேளை அவரு வேட்டி கேக்கலை, கேட்டா அதுக்கு என்ன பட்ஜெட் வச்சுருக்கிங்க. பர்ச்சேஸ் அருமை. ஆனா எனக்கு கடை கடையா சுத்தறது பிடிக்காது. ஆனா எங்க மன்னி தண்ணிக்கேன், பிஸ்கட் பேக்கட் எல்லாம் ஒரு கூடையில போட்டு என்னையும் அலைய வச்சுருவாங்க.

said...

//"அதெப்படி? கடைக்குக் கூடவே வந்து , நான் வாங்குற அயிட்டத்தைப் பார்த்து இது என்னத்துக்கு? எனக்குப் பிடிக்கலை'' இப்படி எதாவது துஸ்க்குச் சொல்லிக்கிட்டேப் பக்கத்துலே நின்னாத்தானே எனக்கும் ஷாப்பிங் செஞ்சமாதிரி இருக்கும்?"//

அது !!!! கலக்கிட்டீங்க ... இந்த டச் போதும் உங்க பதிவில் :))) எல்லோர் வாழ்விலும் இது தானே :))

said...

iniya deepavali vazhthukkal

subbu rathinam
meenakshi paatti.

said...

டீச்சருக்கும் கோபால்ஜிக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

நீங்க கிராபிக்ஸ்ம் பண்ண ஆரம்பிச்சிட்டீங்களா?

said...

இது நுணலும் வாயால் கெட்ட மாதிரி இல்லையா. லாபகரமா இல்ல நடக்குது:)

ஒஹொ!!! கோபால் சாரப் பத்திச் சொல்றீங்களோ.
நிறைய சாய்ஸ் இருக்குப்பா.
வஸ்த்ரகலா

அனு,
ஸ்ரீஉங்ஆர்,
இன்னும் இப்படி போகுது.
கலக்கு சந்திரிணி:))

said...

தீபாவளி நல்வாழ்த்துக்கள் டீச்சர் ;)

போட்டோ சூப்பரு ;)

said...

நல்ல கலெக்ஷனோ தீபாவளிக்கு??? காஞ்சிபுரம் போயிட்டு வந்தாச்சா??? :))))))))))))) அம்பி கிட்டே வஸ்த்ரகலா மயில்கழுத்துக் கலரிலே கேட்டிருக்கேன். எப்போ வருதோ! :))))))))))))

said...

அன்பின் துளசி

அருமையான பர்ச்சேஸ் = தீபாவளி பர்சேஸ் அனுபவம்

சூப்பரா எழுதி இருக்கீங்க

பிலேடட் தீபாவளி நல்வாழ்த்துகள்

said...

1 துப்பட்டா =ஆறு மாச கலெக்ஷன். இந்த வருஷ சிறந்த பர்ச்சேஸ் உமன் விருது நிச்சயமா உங்களுக்குதான்.


பர்ச்சேஸுக்கு முந்தைய அண்ணா போட்டோ நல்லா இருக்கு:)))


திவாளி வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க பிரியமுடன் வசந்த்.

நன்றி. உங்களுக்கும் இனிய வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க சின்ன அம்மிணி.

//கல்யாணமாகி முப்பது வருஷத்துக்கு மேல ஆனாத்தான் வாங்கிக்கோன்னு ரங்ஸ் எல்லாம் சொல்வாங்க போலிருக்கு :)//

சில ..... களைப் பழக்க ரொம்ப நாள் எடுக்கும். ஆனாலும் வருசக்கணக்கா முக்கியம்? எண்ட் ரிஸல்ட் பார்க்கணும். வெற்றி நமதே:-)

said...

வாங்க அத்திவெட்டிக் கவிஞரே.

கோபால் சார் கலங்கி இப்போத் தெளிஞ்சுட்டார்:-)))))

said...

வாங்க பித்தனின் வாக்கு.

ஹூம்...உங்க வாக்கு பலிக்கலை.
வேட்டி கேட்டுட்டார்! வாங்கவேண்டியதாப் போயிருச்சு:-)

said...

வாங்க சதங்கா.

அன்று முதல் இதே தான்!

இதை ரொம்ப அழகா பெரியவுங்க சொல்லிட்டாங்க....

வீட்டுக்கு வீடு வாசப்படி(யாம்)

said...

வாங்க மீனாட்சி அக்கா & சுப்பு ரத்தினம்.

நன்றி.
உங்கள் இருவருக்கும் இனிய வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க சிந்து.

நானாவது......க்ராஃபிக்ஸாவது......

எல்லாம் மகளின் உபயம்:-)

said...

வாங்க வல்லி.

நுணலுக்கு நஷ்டமும், அதன் தங்க்ஸ்க்கு லாபமுமா இருக்கு.

கூட்டிக்கழிச்சுப் பார்த்தால் எல்லாம் சரியாவே இருக்கும்:-))))

said...

வாங்க கோபி.

நன்றி. உங்களுக்கும் இனிய வாழ்த்து(க்)கள்!

said...

வாங்க கீதா.

அதெல்லாம் உள்ளூர் காஞ்சீபுரம் போயிட்டு வந்தாச்சு.

வஸ்த்ரகலா எல்லாம் ஆசை இல்லை.

ரொம்ப கனமா இருக்கு.

அப்புறம் இப்ப இருக்கும் உடம்பு சைஸுக்குக் கட்டிண்டாலும்.......

அம்பி அனுப்பியபின் சொல்லுங்க. வந்து நேரில்(கட்டிப்) பார்த்துட்டு ஒரேஒரு ஃபோட்டோ மட்டும் எடுத்தால் ஆச்சு:-))))

said...

வாங்க சீனா.

நெவர் டூ லேட்:-)))))

விடப்போறதில்லை. இதெல்லாம் 5 நாள் கொண்டாட்டம்!

said...

வாங்க ஐம்கூல்.

ஆமாம்....இப்படி இருந்தவர்...... பர்ச்சேஸுக்குப் பின் எப்படி ஆவார்ன்னு தெரியாதேப்பா:-))))

இனிய வாழ்த்து(க்)கள்.

said...

தீபாவளி ஷாப்பிங்க்ன்னா இப்படியல்லோ பண்ணனும். உலகத்தில் வேறு யாரும் இப்படி ஷாப்பிருக்க மாட்டாங்க. ஜோடின்னா ஜோடி சூப்பர் ஜோடி.

உங்க சாமானெல்லாம் பின்னாடி டெம்போவில் வர, கோபாலுக்கு மூணு அரைக் கைசட்டையை கையிலேயே எடுத்து வந்துடீர்களாக்கும்?

துப்பட்டா...துப்பட்டா...கோபாலுக்கு அப்பட்டா..அப்பட்டானு வராதது ஆச்சரியம்!!!!

said...

//"சரியாப் போச்சு. உங்க ஆசைதான் இன்னும் நிறைவேறலை!"

எனக்கொன்னும் ஆசைன்னு இல்லையேம்மா.. என்னன்னு சொல்லேன்?

"அதாங்க கிராண்டா எனக்கொருப் பட்டுப்புடவை வாங்கித்தரணுமுன்னு சொல்லிக்கிட்டே இருந்தீங்களே அந்த ஆசைதான்!"//

‘பக்’ அப்டீன்னு சிரிச்சிட்டேன்!!!
’கொக்குக்கு குறி’ நு சொல்வாங்களே!

said...

நுணல் தன் வாயால் கெடலை. வாயால் வாரிக் கொண்டு வந்தது.

said...

டீச்சர்!தீபாவளியெல்லாம் முடிஞ்சு வாரேன்!

துஸ்க்,வஸ்தரகலா இன்னும் நிறைய கத்துக்க இருக்கும் போல இருக்கே:)

said...

:)

said...

வாங்க நானானி.

உங்களைப்போல் ஒரே கடை 'ராசி' இல்லை எனக்கு:-)))))

மூனு சட்டைகளுக்கு ஒரு பை கூட என்னத்துக்கு? ரெண்டுநாள் கழிச்சு வாங்குன வேஷ்டியை அப்படியே ஹேண்ட்பேக்லே வச்சுக் கொண்டாந்துட்டேன்:-)

நீங்க என்ன நினைச்சுக்கிட்டாலும் சரி...... கோபாலில் ஆசையை என்னாலே நிறைவேத்தாம இருக்கவேமுடியாது!

said...

வாங்க ராஜ நடராஜன்.

தீவுளி முடிஞ்சுவந்து கத்துக்கிட்டாலும் இதெல்லாம் அடுத்தத் தீவுளிக்குச் செல்லாது:-)

அப்போ இன்னும் என்னென்னவோ புதுசுகள் (பழைய சரக்குன்னாலும் புதுப் பெயர்களோடு) வந்துரும்!

said...

வாங்க அமித்து அம்மா.

பிரசவம் முடிஞ்சகையோடு வந்துட்டீங்க!
புதுப்பாப்பாவுக்கு ஆசிகள்.

said...

கோபால் சார்!
அடுத்த வருட தீபாவளி சமயம் புத்தராட்டம் இருந்துடுங்கோ. ‘ஆசையே துன்பங்களுக்கெல்லாம் காரணம்’

said...

enga veetu ammani parava illai.. oru podavai and oru chudithan keppa

said...

வாங்க நானானி.

அதெப்படி? நுணல் ஒருதடவையில் பாடம் படிக்காது:-))))))

கெட்ட குடியே கெடும்!

said...

வாங்க எல் கே.

ஐயோ.... இதெல்லாம் 35 வருச பாக்கியாக்கும்:-)