Monday, October 12, 2009

ஆடல் காணீரோ.................

ரெண்டு மூணுமுறை எப்படியோ தவறவிட்டுட்டேன். இந்தமுறை 'உன்னைவிட மாட்டேன்'ன்னு முன்பதிவுக்காகத் தொலைபேசிக்கலாமுன்னா..... தொடர்பே கிடைக்கலை. முன்வைத்த 'காலை' பின் வைப்பேனோ? நாரத கான சபாவுக்கு நேரில் ஆஜர். எதானாலும் முன்வரிசை டிக்கெட்தான் எடுக்கப்போறேன். முடிவோட போனால்....கவுண்டரில் ஆளே இல்லை. ஆஃபீஸுக்குப் பாய்ஞ்சேன்.

"தொலை பேசிக் கெட்டுக்கிடக்கா என்ன?"

" இல்லையேம்மா.... முதலில் உங்க 'கால்' உள்ளே போயிட்டு அங்கே இருந்துதான் இங்கே வரும். பொதுவா அங்கே யாரும் இருக்கமாட்டாங்க காலை வேளைகளில்.... இப்போக்கூட ஒருத்தர் கூப்புட்டாரே... என்னிக்கு டிக்கெட் வேணும்? யாரோட ப்ரோக்ராம்?"

"சனிக்கிழமை நிகழ்ச்சிக்கு முன்பதிவு செய்யணும். நர்த்தகி.........."
('தடக்' பழம் நழுவிப் பாலில் விழுந்தது.)

"அன்னிக்கு ஆல் ஆர் வெல்கம் தாம்மா."

டாக்டர் எஸ் ராமநாதன் அவர்களின் நினைவுக்காக அவர்கள் குடும்பம் நடத்தும் நிகழ்ச்சி(யாம்). எனக்கு இப்போப் பிரச்சனை என்னன்னா.... முதல்வரிசையில் போய் உக்காரணும். யார் தலையும் மறைக்கவே கூடாது! (படமெடுக்க பேஜாராப் போயிருதே)

சீக்கிரமாவேக் கிளம்பிப் போனோம். மீ த ஃபர்ஸ்ட்...அரங்கில் நுழையும் முதல்நபருக்கு ஏதாவது ப்ரைஸ் உண்டா?

டாக்டர் ரகுராமே நமக்கப்புறம்தான் வந்தாரோ? (பெயரை அப்புறம் விசாரிச்சுக்கிட்டேன், அவரிடமே) சரியா ஆறு பத்துக்கு ரகுராம் அவர்கள் மைக்கைப் பிடிச்சு மேடையில் போட்டுருந்த ரெண்டு நாற்காலிகளுக்கானச் சிறப்பு விருந்தினர்களை அழைத்தார். வழக்கமாக அக்டோபர் ரெண்டாம்தேதி நடக்கும் இந்த நினைவுநாள் விழா, தவிர்க்கமுடியாத சிலகாரணங்களால் இன்றைக்கு (மூணாம் தேதி) நடத்தப்படுகிறதுன்னும் சொன்னார். இவரும் ராமநாதன் அவர்களின் மருமகந்தானாம். (அட! அப்ப நம்ம கீதா பென்னட் வந்துருப்பாங்களோன்னு ....) போன வருசம் பாரதி மூவர் என்ற தீம். சுப்ரமண்ய பாரதி, கோபாலகிருஷ்ண பாரதி, சுத்தானந்த பாரதின்னு மூன்று பாரதிகளின் பாடல்களைக் கொண்டே நிகழ்ச்சி நடந்ததாம். இந்த வருஷம் சிவன் மூவர். பாபநாசம் சிவன், நீலகண்டன் சிவன், ராமசாமி சிவன். இவர்களுடைய பாடல்களைக் கொண்ட நாட்டிய நிகழ்ச்சி. (மூவரில் முதல்வர் பெயர்தான் எனக்குத் தெரியும். மற்றவர்களைப் பற்றி? இனிமேல்தான் தெரிஞ்சுக்கணும்) முதலில் பேச வந்தவர் நாரதகான சபா செகரட்டரி திரு கிருஷ்ணசாமி.

ஆயிரத்து முன்னூறுபேருக்கு நிகழ்ச்சிக்கான அழைப்பும் விவரமும் போயிருக்கு. ஆனால்.......வந்திருக்கும் எங்கள் எண்ணிக்கை? துயரம் ததும்பும் குரலில் அவர் இதைச் சொன்னப்பத் திரும்பிப்பார்த்து அரங்கு எவ்வளவு நிரம்பியிருக்குன்னு சோதிக்க எனக்கு மனோதைரியம் வரலை(-:

நல்ல நிகழ்ச்சிகளுக்கு ஏன் மக்கள் வர்றதில்லை? டிசம்பர் ஜனவரி மட்டுமே பாட்டுக்கும் நடனத்துக்கும் சீஸன்னு எப்படித் தோணிப்போச்சு? இங்கே ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யணுமுன்னா, என்னதான் சுருக்கமாச் செஞ்சாலும் ஒரு இருபதினாயிரம் ரூபாய்கள் செலவாகும். இந்தச் செலவை நிகழ்ச்சி நடத்துபவர்களே செஞ்சு, ரசிகர்களுக்கு முற்றிலும் இலவச அனுமதி கொடுத்து வரவேற்கறாங்க.

(இதென்னவோ உண்மைதான். இப்போ இந்த நாலுமாசங்களில் நான் காசு கொடுத்துப் பார்த்த ஒரே நிகழ்ச்சி 'சாக்லேட் கிருஷ்ணா' மட்டுமே. நமக்கு நேரமும் ஆர்வமும் இருந்தால் ஏகப்பட்ட நிகழ்ச்சிகளை (பிரபலங்கள் பங்கேற்கும் நிகழ்வுகள்கூட) இலவசமாவே பார்த்தும் கேட்டும் அனுபவிக்க முடியும். இந்தக் கணக்கில் சென்னைவாசிகள் உண்மையிலேயேக் கொடுத்துவைத்தவர்கள்தான். (எனக்கு(ம்) நேரம் சிலசமயம் கொஞ்சம் டைட் என்றாலும், விட்டதைப் பிடிக்க வந்திருக்கேனேன்னு, விடாமப்போறேன்)

இவர் பேசப்பேசப் பேசாம இங்கே ஒரு மெம்பர்ஷிப் வாங்கிக்கலாமான்னு உணர்ச்சிவசப்பட்டதென்னவோ உண்மை.

அடுத்ததாக முக்கிய விருந்தாளி 1987 இல் வாக்கேயக்காரர்கள் அறக்கட்டளை ஆரம்பிச்சதைப் பற்றியும் அங்கே ராகங்கள் ஸ்ருதிகள் பற்றிய விளக்கவுரைகள் (இதுவரை 22 ஸ்ருதிகள் பற்றிய டெமோ நடந்துருக்காம்) மற்றும் இன்னபிற இசை நுணுக்கங்கள் பற்றிய விவாதங்களில் கலந்துகொண்டு மூழ்கிமுத்தெடுக்க இசைக்கலைஞர்களும், முக்கியமாக இசையைக் கற்றுகொள்ளும் வித்தியார்த்திகளும் பங்கேற்கணுமுன்னு தன்னுடைய ஆதங்கத்தைச் சொன்னார். இன்னிக்கு என்னவோ 'க்ரீவன்ஸஸ் டே'யாப் போச்சு!
நர்த்தகிக்குப் பொன்னாடை போர்த்திக் கௌரவிச்சார். மதுரைக்காரரான நர்த்தகியின் குரு தஞ்சை கிட்டப்பாப்பிள்ளை அவர்களிடம், குருகுலவாசமாகவே இருந்து நடனம் பயின்றவர் இவர். ஆஹா.... மதுரைக்காரருக்கு (திருவிளை) ஆடல் கைவந்த கலை இல்லையோ? கலைமாமணி விருது இவரைத்தேடி வந்தது ரெண்டு வருசம் முன்பு. பலவெளிநாடுகளில் நடனநிகழ்ச்சிகளை வெற்றிகரமாகத் தந்தவர்.
தங்கச் சரிகையும் வெள்ளைப் பட்டுமாப் ' பளிச்'ன்னு வந்து நின்ன நர்த்தகிக்குக் நல்ல களையான முகம். அலங்காரமும் தேவைக்கு அதிகமா இல்லாம நடுத்தரமா இருந்துச்சு. இவர் ஆண்டாள் கொண்டை போட்டுருந்தால் இன்னும் ரொம்ப நல்லா இருந்துருக்குமுன்னு மனசுக்குள்ளே எனக்கு ஒரு தோணல். தோழி சக்தியின் அறிவிப்புகளுடன் நடனம் தொடங்குச்சு. (சிகப்புக் கரையில் சரிகையுடன் சக்தியின் புடவையின் ஓரம் மட்டும் திரையினூடாகத் தெரிஞ்சது.)

சரவண பவ குகனே (மத்யமாவதி ராகம்,ஆதிதாளம்) அபிநயத்தில் சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளிவந்தத் தீச்சுவாலைகள் குளத்தில் விழுந்து தாமரைப்பூக்களாக ஆச்சு. அப்போது அலர்ந்த ஆறு பூக்களில் ஆறு குழந்தைகள், கார்த்திகைப்பெண்கள் அறுவர் குழந்தைகளை எடுத்து உச்சிமோந்துக் கொஞ்சித் தாலாட்டுகின்றனர். எல்லாம் அந்த மேடையிலேயே நடக்குது. பார்க்கப் பார்க்கப் பரவசம் என்றது இதைத்தான்.
முருகன் சிறுவனா இருந்து ஒளவையிடம் சுட்ட பழம் வேணுமா சுடாத பழம் வேணுமான்னு கேட்டதை நான் 'நேரில்' பார்த்துருக்கேன்னு சொன்னா நம்பணும். கண்களில் மங்கும் பார்வையுடன், பசியால் வாடித் தள்ளாடி நடக்கும் ஔவை, குறும்புக்காரச் சிறுவன், பாட்டிக்குப் பழம்வேணும் என்றதும் கிளையைப் பிடித்து உலுக்கிப் பழங்களைச் 'சரசர'வென விழவைக்கும் லாகவம், பாட்டி, கீழே பொறுக்கிய பழத்தினை மண்ணை ஊதி ஊதித் தின்னும் பாவம் எல்லாம் ஹைய்யோ.... நானும் மரத்தடியில் நிக்கிறேனே!!! கொஞ்சம் விட்டுருந்தால் நானே கீழே பழம் பொறுக்கக் குனிஞ்சுருப்பேன்!! நொடிக்கு நொடி எப்படி அந்த முகபாவம் மாறுதுன்றதே அதிசயமா இருக்கு!

வாவா கலைமா(னே)தே............ தாமரைப்பூவில் அமர்ந்து வீணை மீட்டும் கலைவாணியாக..... அடடா..... பலவருசங்களாப் பயின்ற பரதத்தை, அதன் பண்பட்ட நிலையில் காண எனக்கும் ஒரு சந்தர்ப்பம் அமைஞ்சது பாருங்க. ப்ராக்டீஸ் மேக்ஸ் பெர்ஃபெக்ட்ன்னு சொன்னாலும் தன்னை அந்த நடனக்கலைக்கே அர்ப்பணம் செய்துட்டாங்கன்னுதான் தோணுது.
ஹம்சத்வனி ராகம். அநேகமா நம்ம எல்லோருக்கும் தெரிஞ்ச ஒரு பாட்டு. என்ன தவம் செய்தனை..................... யசோதா...............'அவனே' வந்து தன் அமுதவாயால் 'அம்மா'ன்னு அருமையாக் கூப்பிட்டுருக்கான். உலகில் யாருக்காவது இப்படிப்பட்ட அனுபவம் கிடைச்சுருக்குமா? அந்தப் பரவச நிலையில் அவள் என்னெல்லாம் உணர்ந்திருப்பாள்? குழந்தை கண்ணனின் குறும்புகள், அக்கம்பக்கத்தார் வந்து இவனைப்பற்றி ஓயாது 'கோள்' சொல்லும்போது(ம்) கோபிப்பதுபோல் காமிச்சுக்கும் தாயின் பெருமை இப்படிச் சொல்லிக்கிட்டே போகலாம்.



இடமும் வலமும் பாதங்கள் தூக்கி ஆடும் 'நடராஜனின்' நிலை, நர்த்தகிக்குத் தண்ணீர்பட்ட பாடு போல! தடுமாற்றம் கொஞ்சமும் இல்லாமல் நிறைய நேரம் அசையாமல் நிற்க முடியுதே!

நடனம் முடிஞ்சதும் மேடையைவிட்டுக் கீழே வந்த நர்த்தகியை ரசிகர்களின் சின்னக்கூட்டம் பிடிச்சுவச்சுக்கிட்டது. எனக்கும் ஒரே ஒரு வார்த்தை மட்டும் சொன்னால் போதும் என்றிருந்தது. சொல்லிட்டேன்.
'அற்புதம்'

வீடு திரும்புனதும் இனிய நிகழ்வுகளை அசைபோட்டுக்கிட்டே ஒரு மின்னஞ்சல் அனுப்புனேன். உடனே அன்பாக ஒரு பதிலும் வந்துச்சு. ஒரு நாள் அவுங்க ரெண்டுபேரையும் சந்திச்சு அவுங்க நடத்தும் நடனப்பள்ளியைப் பற்றியும் விசாரிச்சுக்கிட்டு வந்து எழுதலாமுன்னு இருக்கேன். சென்னைவாழ்க்கையை அனுபவிக்காமல் விடறதில்லை என்றதுதான் இப்போதைய கொள்கை:-))))

நிறையப் படங்கள் எடுத்துட்டோம். மனசுக்கு நிறைவா இருந்தவைகளை உங்களுக்காக ஒரு ஆல்பத்தில் போட்டுருக்கேன்.


ஒரு அஞ்சரை நிமிட நடனத்தை' யூ ட்யூபில்' வலையேத்தலாமுன்னு மெனெக்கெட்டதில் அரைநாள் போயிருச்சு. பலன் பூஜ்யம்(-:

33 comments:

Anonymous said...

உங்கள் கொள்கை வாழ்க. யார் கொ.ப.செ. ன்னு தெரிஞ்சுக்கலாமா :)

said...

சின்ன அம்மிணி அவங்களே தான் கொ ப செ. ஆல் இன் ஆல்:)
அப்பப்போ அவங்களோட ரங்ஸ் கிட்ட கொடுத்துடுவாங்க. அவரும் போட்டோ பிடிச்சு, உதவி எல்லாம் செய்வாரு.:)


இருந்தாலும் துளசியோட முயற்சிகளைக் கண்டிப்பாச் சொல்லணும்.

சிரமம் இருந்தாலும் முயற்சிகளைக் கைவிடறதில்லை.
அதனால தலைவிக்கு வாழ்த்துகள் சொல்லணும் நாம.

said...

மழை வரதுக்கு முன்னே நிறைய் புரோக்ராம்களை முடித்து விடுங்கள்....

said...

எந்த ஊருக்கு போனாலும் டீச்சரை அடிச்சிக்க ஆளே இல்ல ;))

கலக்குறிங்க டீச்சர்;)

நன்றாக தொகுத்து வழங்கியிருக்கிங்க ;)

said...

நேற்று உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி துளசி அம்மா..இதழ் படித்தீர்களா?

said...

"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" - என்ற கொள்கையா தொல்சி...
நடத்துங்க...நடத்துங்க...

said...

//யார் கொ.ப.செ. ன்னு தெரிஞ்சுக்கலாமா//

என்ன சின பிள்ள தனமா ஒரு கேள்வி..? 'கொலு வைத்த கோமான்' எங்கள் கோபால் சார் தான். :))

said...

நடனத்தை அருமையா கவர் பண்ணிட்டீங்க. பக்க வாத்யகாரர்கள் பேர் எல்லாம் போட்டு இருக்கலாம் இல்ல..? :)


தொட்டனை தூறும் ஞானி வீட்டு கேணி பத்தி அடுத்த பதிவில் வருமா? :p

said...

நன்றாக தொகுத்து எழுதிருக்கிங்க.

said...

கடைசி வரை நர்த்தகி பெயரைக் குறிப்பிடவில்லை என நினைக்கின்றேன். படத்தைப் பார்த்தால் இவர் நர்த்தகி நடராஜ் என நினைக்கின்றேன், சாதனைகள் பல புரிந்த அவரின் சாதனைகளுக்கு இந்த பதிவும் ஒரு சாதனைதான். டீச்சரின் பதிவு இல்லையா?

said...

உங்களுடன் நாங்களும் கண்டு களித்தோம்.

said...

மூன்று சிவன்களின் பாடல்களின் ஆடல்!! நல்ல கவித்துவமான ந​டை உங்களுக்கு!
இ​ணைப்பாக பு​கைப்படங்க​ளையும் ​​சேர்த்து அசத்தியிருக்கிறீர்கள்!
நர்த்தனத்​தை பார்த்த​தை பார்த்தபடி​யே எழுதியிருக்கிறீர்கள் ​(இது ​நொட்டை, இது ​சொத்​தை சமாச்சாரமில்லாமல்..)
ஆனால் சில சமயங்களில் நல்ல விமர்சனம் கூட க​லைக்கு ​தோதாகிறது!
அன்பும் வாழ்த்தும்!

said...

//பலவருசங்களாப் பயின்ற பரதத்தை, அதன் பண்பட்ட நிலையில் காண//

யாரையம்மா சொல்றீங்க? உங்களையா, அவங்களையா? :)

நீங்க இவ்ளோ ரசிக்கிறதை பார்த்தால் எனக்குக்கூட உங்ககிட்ட ஆடிக் காண்பிக்கணும்னு ஆசை வருது :) ஆனா, பாவம் நீங்க... அதனால விட்டுர்றேன் :)

said...

மக்கள்ஸ்,

மனக்குறையத் தீர்த்துட்டாங்க நம்ம நர்த்தகி.

அவுங்க அனுப்பிவச்ச படங்களில் ஆண்டாள் தலை அலங்காரத்தில் இருக்கும் படத்தை இந்த இடுகையில் சேர்த்துருக்கேன்.

நம்ம நர்த்தகிக்கு நன்றின்னு நம் அனைவரின் சார்பில் சொல்லிக்கறேன்.

said...

வாங்க சின்ன அம்மிணி.

ஐயம் வரலாமா? அதுவும் இப்படி!

ஹாஹா

said...

வாங்க வல்லி.

எங்க அப்பா குதிருக்குள் இல்லையாம்:-)))))

1 + 1

said...

வாங்க அமுதா கிருஷ்ணா.

அது என்னங்க 'மழை'?

அப்படின்னா என்ன?

சென்னையில் இருக்கா?

மாரியாத்தாளுக்குத் தீ மிதிச்ச மாதிரியில்லே கிடக்கு வந்த நாள் முதலா(-:

(பதிவர் சந்திப்புக்கு வந்துருந்துச்சே, அதைச் சொல்றீங்களா?)

said...

வாங்க கோபி.

கலக்குனாத்தானே 'தெளியும்':-)))))

said...

வாங்க தண்டோரா.

எதிர்பார்க்காத சந்திப்பு!

எனக்கும் மகிழ்ச்சிதான்.

இதழை இன்னும் சரியாக முழுசுமாக வாசிக்கலை.

கவிதைகளுக்குன்னு தனி நேரம் ஒதுக்கணும்.

மற்றபடி இதழில் பொருள் ஏராளம். நல்லா வந்துருக்கு.

அட்டையில் ரெண்டு (சமாச்சாரம்) எனக்காகவே:-))))

said...

வாங்க கிருஷ்ண பிரபு.

எல்லாம் அதது வர்றது வர்றபடின்னு அனுபவிச்சுடணும்.

இதைத்தான் 'கிருஷ்ணார்ப்பணம்' என்று சொல்வாங்களாம்:-)

said...

வாங்க அம்பி.

மகனர் வரிசைக்கு ஒன்னு.

அப்ப மகளிர் வரிசைக்கு?

said...

வாங்க மேனகா.

நன்றிப்பா. மீண்டும் வந்து ஆதரவா இருங்க.

said...

வாங்க பித்தனின் வாக்கு,
சொன்னதும் பலிச்சதது:-)

நர்த்தகியிடமிருந்து மடலும் அவர்களைப் பற்றிய கூடுதல் விவரங்களும் அவுங்க கைப்பட அனுப்பி இருக்காங்க.

வாங்கிய பட்டங்கள் இதுவரை 21.
இன்னும் நாலுதான் பாக்கி. வெள்ளிவிழா கொண்டாடப்போறோம் நாம்.

நம் அனைவரின் சார்பில் அவர்களுக்கு நன்றி.

said...

வாங்க மாதேவி.

நான் பெற்ற இன்பத்தை உங்களுக்காகத் தர வேணாமா?

அதான்........

கூடவே வருவதற்கு நன்றிப்பா

said...

வாங்க ஜெகநாதன்.

முதல்முறை வந்துருக்கீங்க போல!
நலமா?

அன்புக்கும் வாழ்த்துக்கும்,வருகைக்கும் நன்றி.

எங்கூர் தமிழ்ச்சங்கத்தில் பத்து வருசத்துக்கும் மேலாக கலை & கலாச்சார ஒருங்கிணைப்பாளரா இருந்த அனுபவம்தான் இப்படியெல்லாம் ரசிக்கவும் எழுதவும் உதவுது.
ஒவ்வொரு நிகழ்ச்சியையும் மேடை ஏற்றுவதற்குள் தாவு தீர்ந்துரும்.

இங்கே (சென்னையில்)நான் துரும்பெடுத்துப் போடாமல் நோகாமல் அனுபவிக்க முடியுது.

ஒரே ஒரு விநாடி, 'நம்மால் இப்படி மேடையில் செய்யமுடியுமா?'ன்னு நினைச்சாலே போதும்.

அருமைகளைத் தவிர வேறொன்னும் மனசுலே வராது.

said...

வாங்க கவிநயா.

யாமிருக்க பயம் ஏன்?

ம்ம்ம்ம்ம்ம் ஆரம்பமாகட்டும் கவிநயாவின் நடனம்!

said...

அம்பி,

கேணி விவரம் ஒரு இளவல் எழுதி இருக்கார் பாருங்க.
http://thittivaasal.blogspot.com/2009/10/blog-post.html

இளைஞர்களுக்கு வழி விடுதல் என்பது இதுதான்.

நான் எழுதி இருந்தால் அதன் தலைப்பு இப்படி.

'பாட்டி போட்ட ஆம்லெட்'

said...

போட்டோகிராபர் துளசி டீச்சருக்கு வாழ்த்துக்கள்...
கால் தூக்கி நிக்கும் போஸ் படம் ரொம்ப பிரமாதம்

முடிஞ்சவரை தப்பு இல்லாம எழுதி இருக்கின்றேன்...

said...

ஆகா ஆகா - சென்னை வாழ்க்கையினைப் பயனுள்ள முறையில் செலவழிக்கிறாப்லே இருக்கே - நன்று நன்று

துளசியின் ரசனை - துளசியின் ஆர்வம் - துளசியின் கடின உழைப்பு - இத்தனையும் உருவாக்கிய இடுகை இது

நன்று நன்று - நல்வாழ்த்துகள் துளசி

அங்கேயும் படங்கள் பார்த்தேன் - சூப்பர்

ஹாட்ஸ் ஆஃப் கோபால் ( துளசி?? )

said...

அருமையான ரிபோர்ட்.மார்கழி சீசன் தொடங்குகிறது ...நானும் என் இசை ஞானத்துக்கு ஒத்துவரும் கச்சேரிகளை விடாமல் அனுபவித்துவிடுவேன்...எந்த சபாவில் எந்த வரிசையில் நாம் இருவரும் ஒருவரை ஒருவர் அறியாமல் அமரப் போகிறோமோ....

said...

வாங்க ஜாக்கி.

நோ தப்பு அட் ஆல்:-))))))

கோபாலைப் பக்கத்துலே உக்காரவிடறதுதான் தப்பாப் போச்சு.

அது அவர் எடுத்த படம்தான்.

எல்லாத்துலேயும் பாதின்னு புகழிலும் பங்கு கொடுத்துட்டேன்:-)

said...

வாங்க சீனா.

ரங்கும் தங்கும் பப்பாதின்னு இருக்கோம்:-)

said...

வாங்க கோமா.
அப்படித்தான் ஆகும்போல!!!

பாருங்களேன், அன்னிக்கு நானானி வீட்டில் உங்களை 'மிஸ்' செஞ்சுட்டேனே(-: