அச்சு அசலா அதே மாதிரி அப்படியே...ஆனால் அளவுதான் கொஞ்சம் சின்னது. கேள்விப்பட்டது முதல் ஒருநாளைக்குப் போகலாமுன்னு இருந்தேன். இங்கே தமிழ்நாட்டில் அமாவாசைக்கு முந்தின தினம்தான் தீபாவளின்னு நரகாசுரனை நினைச்சு(?) கொண்டாட்டம் முடிஞ்சுபோகுது. அதுக்காக அப்படியே இந்த அஞ்சுநாள் விழாவை விட்டுறமுடியுதா?
அமாவாசைக்கு ரெண்டு நாள் முன்னாலேயே தொடர் ஆரம்பிச்சுருது. பவுர்ணமி கழிஞ்சு பதிமூணாம்நாள் த்ரயோதசி. இதைத்தான் தனத்ரயோதசின்னு சொல்வாங்க. சுருக்கமாச் செல்லமாச் சொன்னால் தந்தேரஸ்.(எங்கியோ கேட்டமாதிரி இருக்குமே....... சமீபகாலத் திருவிழாவா மாறிக்கிட்டு இருக்கும் அக்ஷயத் திருதியைதான் இது)
ஆஹா............ இப்படி ஒன்னு இருக்கா... நம்மளைக் கவுக்க? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்ன்னு ஆம்பளைங்க அழாதீங்க. தீபாவளிச் செலவு அப்படியே அமுக்கிப்புடுமுன்னுதான் உங்களுக்கு அதிகமாக் கஷ்டம் கொடுக்கவேணாமுன்னு அக்ஷயத் திருதியை விழா(??)வை சித்திரை மாசத்துக்குன்னே வச்சுருக்கோம். தீவுளி முடிஞ்சு ஆறுமாசம் ஆகிருமே....நீங்கெல்லாம் பழசை மறந்து மீண்டும் தெம்பா வலம் வரத்தொடங்குவீங்க!
இன்னொன்னையும் சொல்லிக்கறேன். மாசாமாசம் ரெண்டு திருதியை வரும் தெரியுமா? அதையெல்லாம் பெருந்தன்மையா நாங்க விட்டுட்டோம் என்பதையும் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன். நிற்க.....
அஞ்சுநாள் கொண்டாட்டமானத் தீவுளித் தொடரில், முதல் நாள் புதுசா நகைநட்டு, புதுத்துணிகள் எல்லாம் வாங்கும் சம்பிரதாயத்தை முன்னிட்டு கிரி ட்ரேடிங் கம்பெனியில் போய் நூத்தியெம்பத்தியஞ்சு ரூபாய்கள் கொடுத்து அரை இஞ்சு அகல சரிகை(???) போட்ட எட்டுமுழ வேஷ்டி வாங்கியாச்சு.
இந்த (அவசர ஷாப்பிங் )சம்ப்ரதாயமெல்லாம் ஆண்களுக்காகவே நாங்க விட்டுக்கொடுத்துட்டோம்.
ரெண்டாம் நாளான சதுர்த்தசிக்கு எல்லாமே க்ருஷ்ணார்ப்பணம். பிறந்த வீட்டு சீர் வரணுமே. வந்துச்சுப் பதிவர் வீட்டில் இருந்து. நாமெல்லாம் ஒரு குடும்பமுன்னு சொல்லிக்கிட்டே இருக்கேனே....அதற்குரிய பலன்:-)
உடுப்பி கிருஷ்ணரின் படம்,நல்லெண்ணை, மீரா சீயக்காய்ப் பொடி, கங்கா தீர்த்தம்,நெய்விளக்குப் போட மண் அகல், அதுக்குத் திரி, அதுக்குண்டான நெய், அஞ்சு சுத்துச் சீர் முறுக்கு, அதிரசம், மைசூர்பா, லட்டு, பாதுஷா, இனிப்புத் தேன்குழல், மிக்சர், காராசேவு, அட்டையில் எம் எஸ் அம்மாவின் படம் போட்ட திருவிளக்குப் பூஜைக்கான சுலோகங்கள் அச்சிட்ட புத்தகம், காற்றினிலே வரும் கீதம் என்று சாமிப்பாட்டுகள் பாடும் சி.டி, தீபாவளி மருந்துன்னு லேகியம்ன்னுப் பண்டிகைக்கான எல்லாச் சமாச்சாரமும் உள்ளப் பரிசுப் பொதி. (எல்லாமுன்னு சொன்னதால் நகை, புதுத்துணிகள் இருக்குமோன்னு தேடிப் பார்க்கப்பிடாது)
துளித்துளிக் கங்கையைக் குளிக்கும் நீரில் விட்டு கங்காஸ்நானம் செஞ்சு புதுசு உடுத்திப் பூஜை செஞ்சுப் பண்டிகையைக் கொண்டாடிட்டு, மாலையில் பத்மநாபனைச் சேவிச்சுட்டு, அண்ணன் வீட்டுக்குப் போனோம். பாரம்பரிய உடையில் கோபால் பளிச்சுன்னு இருந்தாரா.... என் கண்ணே பட்டுருக்கும்போல. பட்டாஸ் வெடிக்கும்போது பறந்துவந்தத் தீப்பொறிச் சரியா வேட்டிச் சரிகையில் ஒட்டி ஒளிர்ந்து பத்து பைசாப் பொத்தல் ( இப்ப ஏது? ச்சும்மா ரைமுக்காகப் பத்துப் பைசான்னு சொல்றேன்)
மூணாம் நாள் லக்ஷ்மி பூஜை. இதுவரையிலும் பார்க்காத ஒன்னைப் பார்த்துடலாமுன்னு கூகுளிச்சுட்டுக் கோவிலை நோக்கிப் போறோம். உத்தண்டி என்னும் திவ்யஸ்தலத்தில் கடற்கரைக்குச் சமீபமாக் கிழக்கு நோக்கி 'அந்த ஜெகந்நாதனைப் போலவே' இங்கும் இருக்காராம். கிழக்குக் கடற்கரைச்சாலையில் சுங்கச் சாவடியைக் கடந்து கொஞ்ச தூரம் போகணும். 45 ரூபாய் கொடுத்துக் கடந்தபின் வழியில் ஒருவரிடம் விசாரிச்சால்....... இன்னும் கொஞ்ச தூரத்தில் மீன்கடைகள் இருக்கும் அங்கே லெஃப்ட் திரும்புங்கன்னார். திரும்பிக் கிழக்கு நோக்கிய தெருவில் போனால் கோயிலுக்கு வழிகாட்டும் அறிவிப்பு ஒன்னு இருக்கு. 'ரைட்டு'ன்னு போய்ச் சேர்ந்தோம். பூரி ஜெகந்நாதர் ஆலயம்.
அசல்
நகல்
காலணிகள் வைக்க கம்பி ஷெல்ஃப். பக்கத்துலேயே (அபாய) அறிவிப்பு. புகைப்படங்கள் எடுக்க அனுமதி இல்லை.
(அதுக்காக விடமுடியுமா? ஆண்டவரிடம் கேட்டேன் ரெண்டு தந்தார். சுலேகா.காமில் உஷா சூர்யமணி என்பவர் அழகான படங்களுடன் எழுதி இருக்கார். அவரைத் தொடர்பு கொள்ள முடியலை. மூணு படங்கள் சுட்டேன். பிரச்சனை என்றால் தூக்கிடலாம். உஷாவுக்கு என் நன்றி.)
அலங்காரக் கல் தூண்
நுழைவாசலுக்கு நேரா கல்லால் ஆன ஸ்தம்பம், அதுக்குப்பின்னே மேலேறும் படிக்கட்டுகள். முதல்லே இடது பக்கம் இருக்கும் சந்நிதிகளைப் பார்த்துக்கலாம். தோட்டத்துக்குள்ளே போகும் சின்னப் பாதை. வலது பக்கம் கனேஷ். அரசமரத்தடி கனேஷ்.(தட்டச்சுப்பிழை இல்லை) அவருக்கு நேரே தோட்டத்தில் ஒரு மரம். மேடை கட்டி வச்சுருக்கு. மேடையில் ஒரு தாவணி போட்ட பெண் முழங்காலை மடிச்சு உக்கார்ந்துருக்காள். அவள் தலையில் ஒரு பூந்தொட்டி. அதுக்குள்ளே நான்!
பார்க்கிங் ஏரியா
துளசி தரிசனம் செஞ்சுட்டு வலப்பக்கம் திரும்பினால் காசி விஸ்வநாதர். அவருக்கு எதிரில் மரத்தடி மேடையில் பார்க்கிங் ஏரியா ஃபார் கடவுள்ஸ். வாகனங்கள் எல்லாம் நின்னு பேசிக்கிட்டு இருக்காங்க.
கோவிலைச் சுத்தி மெத்து மெத்துன்னு அழகான புல்தரை. நல்ல பராமரிப்பு. திரும்பி கனேஷைக் கடந்து முன் முற்றத்துக்கு வந்தோம். கல் ஸ்தம்பம் கொள்ளை அழகு. பராமரிப்பு வேலை நடந்துக்கிட்டு இருக்கு. ஆளுயர அலங்கார மேடையில் ஆமை. முதுகில் மத்தாக மந்தார மலை. அதைச் சுற்றிக் கயிறுபோல் கிடக்கும் வாசுகி. மலையின் உச்சியில் தாமரை. பாற்கடல் கடையும் ஸீன். கூர்மாவதாரம் எடுத்தது அப்போதான்.
'உச்சியில் எதுக்குத் தாமரைப்பூ?' கேள்வியின் நாயகனின் கேள்வி.
அதுலேதான் மஹாலக்ஷ்மி உதிச்சு வந்தாள். பாற்கடலைக் கடையும்போது அமிர்தகலசம் வருமுன்பு வலம்புரிச் சங்கு, காமதேனு, கற்பக விருட்சம் இப்படி அபூர்வமான பொருட்கள் பலவும் (மொத்தம் 14 ன்னு சொல்வாங்க) வந்துச்சு. (பதில் சொல்லத் தெரியாதா நாயகிக்கு?)
நல்ல அகலமான படிகள் ஏறிப்போனோம். அழகான சந்நிதி. உள்ளே சின்னதா மண்டபம். கருவறையில் மூன்று திருஉருவங்கள். முதலில் வெளுத்த நிறத்தில் பலராமன், அடுத்து ரோஜா நிறத்தில் சுபத்திரை, மூன்றாவதாக கருமை நிறக் கண்ணன்.
அதுயார் யார்ன்னு கோபால் கேட்டுக்கிட்டே இருந்தார். ரெண்டு பக்கமும் பலராமன், கிருஷ்ணன் என்று தெரிந்தாலும் நடுவில் சுபத்திரைதானோன்னு ஒரு சின்ன சந்தேகம்.
திரு உருவங்கள் எல்லாம் மரச் சிற்பங்கள்தான். எங்கூர் ஹரே க்ருஷ்ணாவிலும் வச்சுருக்கோம் பூரி ஜாக்கர்நாட். கிறிஸ்மஸ் சமயம் பரேடில் ரதயாத்ராவையும் சேர்த்துக்குவோம்.
தீபாராதனை காமிச்சு நம் நெற்றியில் சந்தனம் தீற்றினார் பண்டிட்.
அவரையே கேட்டால் ஆச்சு.... 'பண்டிட்ஜி, பீச் மே கௌன் ஹை?'
'பல்ராம் ஷுபத்ரா ஔர் க்ருஷ்ணா. உன்கோப் பூரா பரிவார்'.
மண்டபத்தின் கிண்ணக்கூரையில் மதுபாணி வகை ஓவியங்கள். எல்லாமே ஸ்ரீகிருஷ்ணனின் லீலைகள். வெளியே வந்து வெராந்தாவில் நின்னால் கண்ணெதிரே கடல். அடடா....என்ன அழகு! வலது பக்கம் பச்சைப்பசேல் புல்வெளி. இடதுபுறம் அட்டகாசமான ஒரு பங்களா. நீச்சல் குளத்தோடு அமர்க்களமா இருக்கு. அச்சச்சோ..... கோவில் பக்கத்துக் கட்டிடமா? கொஞ்சம் தர்ம சங்கடமா இருக்குமோ?
மேலே கருவறையைச் சுற்றி விஸ்தாரமான வெராண்டா. வலம்வரலாம். மூன்று பக்கச் சுவர்களிலும் வராக அவதார மூர்த்தி, ஹிரண்யனை மடியில் வைத்து வயிற்றைக் கிழிக்கும் நரசிம்ஹன், உலகளந்த பெருமாள் சிலைகள் பதிச்சுருக்கு.
கீழே இறங்கி வந்தோம். கீழ்த்தளத்தில் ஒரு தியான மண்டபம். நாலு புறமும் கண்ணாடிச் சன்னல்கள் உள்ள குட்டி அறை (இது கருவறைக்கு நேர் கீழே அமைஞ்சுருக்கு)மேடையில் கிருஷ்ணரின் திரு உருவம். பூஜைக்கான பொருட்கள் கலசம் என்று நிரம்பி இருக்கு. கதவுக்கு முன் சின்னதா ஒரு கல் குத்துவிளக்கு. அழகோ அழகு. அதன் தண்டில் வாசுகி சுற்றி இருந்தாள். (செதுக்கல்தான்) அங்கே கொஞ்சநேரம் அமர்ந்து தியானிக்க முடிஞ்சது. நல்ல அமைதியான இடம். இங்கேயும் மேல் விதானத்தில் அலங்காரப் படுதா. சுவர்களில் அழகான ஓவியங்கள். ராம லக்ஷ்மணர்கள், ஹனுமான், சீதை அக்னிப்பிரவேசம் செய்வதுன்னு ராமாயணக்காட்சிகள் இருந்துச்சு.
தோட்டத்தின் கோடியில் இடதிலும் வலதிலுமாக ரெண்டு சந்நிதிகள். இடதில் மா விமலா என்று எழுதி வச்சுருக்காங்க. கம்பிக்குப் பின்னால் பெண் உருவத்தில் சாமி. தாயாரா இருக்குமோ? வலது பக்கம் லக்ஷ்மி. இருவருக்கும் வட இந்தியச் சாயலில் முகங்கள். கோயில் முகப்புக்கு வந்து சேர்ந்தோம். விஸ்தாரமான நான்கு புறமும் திறந்த ஒரு மண்டபம். யக்ஞ சாலையாம். கரிப் புகையெல்லாம் இல்லை.பளிச் ன்னு இருக்கு. நமக்கு இடதுபக்க மூலையில் ஒரு சின்ன அறை. எட்டிப்பார்த்தால் நவகிரகங்கள். தலையைத் திருப்பாமல் ஒரே வரிசையில் கிழக்கு பார்த்து உக்கார்ந்துருக்காங்க. புது தினுசா இருக்கு. இதுபோல் இதுவரை பார்த்ததே இல்லை. எப்படி இருந்தாலும் ஒருவரை ஒருவர் பார்க்கமாட்டாங்க. அதானே முக்கியம்? :-)
சின்னதா ஒரு தொட்டியில் சில அல்லிச்செடிகள், அழகான செடிகள், புல் தரைகள்னு அம்சமா இருக்கு இந்தக் கோவில். கூட்டம் கிடையாது அஞ்சாறுபேர் மட்டும் இருந்தாங்க.
வெளியே வந்து திரும்பக் கிழக்குக் கடற்கரைச்சாலைக்கு வந்து சேர்ந்தோம். நாப்பத்தியஞ்சு ரூபாய் சுங்கம் கட்டிட்டு அதை நியாயப்படுத்த வேணாமா? இன்னும் கொஞ்சதூரம் (பதினைஞ்சு கிலோமீட்டர் இருக்கும்)போனால் திருவிடந்தை ஆதிவராகன் இருக்கார். கோபால் இதுவரை பார்த்ததே இல்லைன்னு அங்கேயும் போனோம். (இந்தக் கோவிலைப்பற்றி ஏற்கெனவே எழுதியாச்சு) உள்பிரகாரத்தில் நமக்கு வலது புறம் ரங்கநாதர் சந்நிதி. சுவரோரம் பள்ளி கொண்டிருக்கார். ரொம்ப அழகான உற்சவர்.
ஞாயிற்றுக்கிழமை, தீபாவளி சமயம், மாலைநேரம் இப்படி எல்லாம் ஒன்னு சேர்ந்துருச்சு. கோவிலில் பயங்கரக்கூட்டம். இத்தனைபேருக்காக் கல்யாணக் கனவு? ஆனால் எல்லார் கழுத்திலும் மாலை இல்லையே.... சிலபேர் கொஞ்சம் வயசானவங்களாவும் இருக்காங்க.
ஒருவேளை......கல்யாணம் கல்யாணமுன்னு அலைஞ்சு, இப்போ இப்படிப்பட்ட வாழ்க்கைத் துணையைக் கொடுத்துட்டியேன்னு சாமிகிட்டே சண்டைபோட வந்தவங்களாவும் இருக்கலாம்.
வரிசை எங்கே இருந்து ஆரம்பிக்குதுன்னு நான் ஆராயும் சமயம், கோபால் விடுவிடுன்னு கோவிலுக்குள்ளே நுழைஞ்சு போய்க்கிட்டே இருக்கார். பின்னாலேயே துரத்திக்கிட்டு ஓடினால் நாங்க போய் நின்ன இடம் கருவறைக்கு முன்னால். திவ்யமான அலங்காரம். ஆதி வராஹப் பெருமாள், இடது தொடையில் லக்ஷ்மியைத் தாங்கிக்கொண்டிருக்கும் மூலவர். வராஹத்தின் கொம்புப்பல் தங்கமா ஜொலிக்குது.
ஒருவிதக் குற்ற உணர்வோடு தரிசனம் ஆச்சு. இந்தப் பக்கம் நித்யகல்யாணப் பெருமாள் மாப்பிள்ளையா தினம் ஜொலிச்சுக்கிட்டே நிற்கிறார். சட்னு கிளம்பி வெளியில் வந்துட்டோம். 'என்ன இப்படிப் பண்ணிட்டீங்களே'ன்னா.... 'எனெக்கெப்படித் தெரியும்? உன்னைக் கூப்பிட்டுப்போய் தரிசனம் பண்ணிவச்சேனா இல்லையா'ன்றார்! 'ஆனாலும் நீங்க செஞ்சது சரியில்லை'ன்னு குற்றப் பத்திரிக்கை வாசிச்சுக்கிட்டே (எப்போதும்போல்) வீடுவந்தோம்.
சதங்கா கேட்டுக்கிட்டபடி தீபாவளி 2009 சிறப்புப் பதிவுக்கான இடுகை(யாகவும்) இது. இன்னும் ரெண்டு நாள் விழா பாக்கி இருக்கு.
அடுத்த இடுகையில் தொடரும்.
Wednesday, October 21, 2009
Beech mein kaun hai
Posted by துளசி கோபால் at 10/21/2009 03:32:00 PM
Labels: அனுபவம், தீபாவளி 2009, பூரி ஜெகந்நாதர்
Subscribe to:
Post Comments (Atom)
30 comments:
ஆஹா, சென்னைல இருந்தா வல்லிம்மா கிட்ட நல்ல வசூல் இருக்கும் போல இருக்கே. :)
வாங்க சின்ன அம்மிணி.
மாய்ஞ்சு மாய்ஞ்சு பதிவு எழுதி இருக்கேன். ஆனா.... ஃப்ரீ மட்டும் கண்ணுலே படுதே:-)))))))
ஹைதையில் தான் பூரி ஜெகன்னாதர் கோவில் மாதிரி இருக்குன்னு கேள்வி பட்டிருக்கேன். நீங்க சொல்லியிருப்பது எங்கே?
பதிவு சூப்பர்.
தீபாவளி வாழ்த்துக்கள் கிடைச்சுது டீச்சர். பலகாரங்களை கண்ணுலேயே காமிக்க மாட்டேங்கறீங்களே...இந்த முறுக்கை மட்டும் காட்டினா ஒத்துகொள்ள முடியாது.
போட்டோவில் அசலை விட நகல் தான் நல்லா இருக்கு.
மிக நல்ல பதிவு. கிழக்கு கடற்கரை சாலையில் பல முறை பயணித்தும் நான் ஜெகன்னாதர் கோவிலுக்குப் போனதில்லை. மறுமுறை செல்லும் போது அவசியம் செல்கின்றேன். நன்றி.
சீர் வரிசை அபாரம்.
சென்னையில இருக்குறவங்களுக்கு கூட இந்த மாதிரி கோவில் இருப்பது தெரியுமான்னு சந்தேகம் தான் டீச்சர்.
//மாய்ஞ்சு மாய்ஞ்சு பதிவு எழுதி இருக்கேன். ஆனா.... ஃப்ரீ மட்டும் கண்ணுலே படுதே:-)))))))//
:))))
Calm and peaceful temple.
Thanks for rekindling the good old memories.
வாங்க புதுகைத் தென்றல்.
சென்னைக் கிழக்குக் கடற்கரைச் சாலையில்தான் இருக்கு.
நன்றிப்பா.
வாங்க சிந்து.
பலகாரங்களைச் 'சுடவில்லை':-)
எப்பவுமே நகலுக்குத்தான் மதிப்பு அதிகம். கலிகாலம் இல்லையா?
வாங்க பித்தனின் வாக்கு.
கட்டாயம் போய்ப் பாருங்க. நல்ல அமைதியான இடம்.
வாங்க நான் ஆதவன்.
இன்னும் நாலைஞ்சு கோவில்கள் இந்தச் சாலையிலேயே இருக்கு. அதுலே நம்ம ச்சாய்ஸ் ரெண்டோ மூணோ தேறும். போயிட்டால் ஆச்சு.
ஊருக்கு வெளியே இருப்பதால் மக்கள் சுணங்குறாங்களோ என்னவோ!
வாங்க நன்மனம்.
ரொம்ப நல்ல பராமரிப்பு. அதுவே ஒரு அழகா இருக்கு.
அடடா,நானும் தான் மூணு தடவை போயிட்டு வந்தேன். பதிவு போடத்தோணிச்சா:)))
துளசின்னா துளசிதான்.
நெல்லை உபசாரம்னு சும்மாவா சொன்னங்க. அங்க வாங்கி இங்க கொடுக்கிறது என்னம்மா பெரிசு.
உங்க ஊருக்கு நாங்க வரோம். அங்க நீங்க வாங்கிக் கொடுங்க.:)
உத்தண்டி-ன்னு பஸ்ஸிலே போர்டுதான் பாத்திருக்கேன். அதுக்கு இந்தண்டி அந்தண்டி போனதில்லை. இந்தக் கலக்கு
கலக்குறீங்களே!!!
ஆசையை கிளப்புறீங்களே!! துள்சி!!
நித்தியகல்யாண பெருமாள், மகனுக்காக போகச்சொல்லி சொன்னார்கள். ஆனா பெருமாளிடமிருந்து இன்விடேஷன் வரலையே!!!
// இப்படிப்பட்ட வாழ்க்கைத் துணையைக் கொடுத்துட்டியேன்னு சாமிகிட்டே சண்டைபோட வந்தவங்களாவும்//
நல்ல வேளை...நீங்க அப்படிப் போகலை.
//அதையெல்லாம் பெருந்தன்மையா நாங்க விட்டுட்டோம்//
பெண்களின் பெருந்தன்மைக்கு வானமே எல்லை:)). ஆனாலும் வட இந்தியாவில் செய்வதைப்போல் ஒரு பாக்கெட் உப்பாவது வாங்கலாம்.மார்வாடிக்காரர்கள் புது துடைப்பம் வாங்குவார்கள். லட்சுமி பூஜை அன்று அதற்கு பூஜையும் செய்வார்கள்.இந்த இரண்டிலும் லட்சுமி இருப்பதாக ஐதீகம்.
//நூத்தியெம்பத்தியஞ்சு ரூபாய்கள் கொடுத்து அரை இஞ்சு அகல சரிகை(???) போட்ட எட்டுமுழ வேஷ்டி வாங்கியாச்சு//
கொஞ்சம் காஸ்ட்லியோ:)))
//தீபாவளிச் செலவு அப்படியே அமுக்கிப்புடுமுன்னுதான் உங்களுக்கு அதிகமாக் கஷ்டம் கொடுக்கவேணாமுன்னு அக்ஷயத் திருதியை விழா(??)வை சித்திரை மாசத்துக்குன்னே வச்சுருக்கோம். தீவுளி முடிஞ்சு ஆறுமாசம் ஆகிருமே....நீங்கெல்லாம் பழசை மறந்து மீண்டும் தெம்பா வலம் வரத்தொடங்குவீங்க!//
மனநாடி நல்லாத்தான் இருக்குது:)
//உடுப்பி கிருஷ்ணரின் படம்,நல்லெண்ணை, மீரா சீயக்காய்ப் பொடி, கங்கா தீர்த்தம்,நெய்விளக்குப் போட மண் அகல், அதுக்குத் திரி, அதுக்குண்டான நெய், அஞ்சு சுத்துச் சீர் முறுக்கு, அதிரசம், மைசூர்பா, லட்டு, பாதுஷா, இனிப்புத் தேன்குழல், மிக்சர், காராசேவு, அட்டையில் எம் எஸ் அம்மாவின் படம் போட்ட திருவிளக்குப் பூஜைக்கான சுலோகங்கள் அச்சிட்ட புத்தகம், காற்றினிலே வரும் கீதம் என்று சாமிப்பாட்டுகள் பாடும் சி.டி, தீபாவளி மருந்துன்னு லேகியம்ன்னுப் பண்டிகைக்கான எல்லாச் சமாச்சாரமும் உள்ளப் பரிசுப் பொதி. (எல்லாமுன்னு சொன்னதால் நகை, புதுத்துணிகள் இருக்குமோன்னு தேடிப் பார்க்கப்பிடாது)//
அஞ்சு சுத்து சீர்முறுக்கு சுத்தின அழகு நேர்த்தியோ நேர்த்தி!
அசலுக்குப் போயிருக்கிறேன்.நகலை இப்பத்தான் பார்க்கிறேன்!
எழுத்தாளர்களில் பயணம் மணியன்,குடும்பக் கதைகள் லட்சுமி,வரலாறு கல்கி,விஞ்ஞானம் சுஜாதா வரிசையில் கோயில்கள் துளசி டீச்சர்.
டீச்சர்..
மாய்ஞ்சு மாய்ஞ்சு எழுதியிருக்கும் இந்தப் பதிவு ஹைகிளாஸ்..!
தலைப்பை மட்டும் ஏன் இப்படி வைச்சுட்டீங்க..?
வாங்க வல்லி.
பதிவராகுமுன் போய் வந்துருப்பீங்க. அதனால் மனசு பரபரத்து இருந்துருக்கச் சான்ஸே இல்லை:-))))
நியூஸி வாங்க. எங்கூர் ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸில் எல்லாம் வாங்கிறலாம்.
என்ன ஒன்னு...கடையின் பெயர்தான் KFC ன்னு இருக்கும்.
(Krishna fresh chocoltes):-))))))
வாங்க நானானி.
இதென்ன இன்விடேஷன் வரலைன்னு சொல்லிட்டீங்க?
இந்த இடுகையே ஒரு இன்விடேஷந்தான். சாமி இப்படித்தான் அழைப்பார்.
நேரில் வந்தெல்லாம் இன்வைட் பண்ண மட்டாராம். ரொம்ப பிஸி அவர்!
வாங்க ஐம்கூல்.
துடைப்பம் ரொம்பவே முக்கியமான பொருள். இல்லேன்னா வீடும் ஊரும் நாறிடாதா?
வேட்டி காஸ்ட்லியாப் போச்சு. அடுத்தமுறை சரிகை(?) இல்லாம வாங்கிக்கலாம். அம்பதுக்குள்ளே அடங்குதான்னு பார்க்கணும்:-)
வாங்க ராஜ நடராஜன்.
//மனநாடி...//
அதெல்லாம் நல்லாவே நாடி புடிச்சுப் பார்த்துருவோம்:-))))
சீர்முறுக்கு பார்க்கதான் நல்லா இருக்கு. ஆனால் வாயில் போட்டால் 'கடக்' இன்னும் கொஞ்சம் வெண்ணை சேர்த்துருக்கலாம். தேங்காய் எண்ணையில் சுடலை. வேற என்னவோ மணம்(-:
அசலையே பார்த்த அதிர்ஷ்டக்காரரா ?? பேஷ் பேஷ்
கோயில்...துளசியா? இதெல்லாம் கொஞ்சம் ஓவர். பிரியா கல்யாணராமன்(குமுதம்) கோச்சுக்கப்போறார்:-)))))
வாங்க உண்மைத் தமிழன்.
ஹிந்தியில் தலைப்பு வச்சால் ஏதோ விலக்கு உண்டாமே!
ஹிந்தி எழுத்துப் படிக்கத் தெரியாதவங்களுக்காகத்தான் 'ஹிந்த்லீஷ்' லே எழுதிட்டேன்.
ஒரிஜனல் கோயில் உண்மையில் பீச்(beach)லேதான் இருக்கு.
கடைசி வரியில் கொடுத்தாலும் அதிர்ச்சி அதிர்ச்சி தான் :))) கொஞ்சம் லேட்டா வந்திட்டேன் மன்னிக்கணும்.
//என்ன ஒன்னு...கடையின் பெயர்தான் KFC ன்னு இருக்கும்.
(Krishna fresh chocoltes):-))))))//
நகைச்'சுவை'த்தேன் ..... கலக்கீட்டீங்க.
Miga Arumai Thulasi Madam...Indruthan ungal Blog arimugam kidaithathu(thanks to Valli Madam). Nerla poi partha mathiri iruku.. intha murai dec 25 utthandhi polamnu iruken
LK
http://lksthoughts.blogspot.com/2009/12/blog-post.html
வாங்க சதங்கா.
நானும் பழிக்குப் பழின்னு லேட்டா வந்து பதில் சொல்றேன்:-)))))
வாங்க எல் கே.
வல்லி மேடத்துக்கு 'கடன்' பட்டுட்டேன்:-)))))
அடிக்கடி வந்து போகணும்,ஆமா!
Post a Comment