Wednesday, July 13, 2005

அந்நியர்!!!!

நேத்து வச்ச சாப்பாடு அப்படியே இருக்கு. என்ன ஆச்சு இதுங்களுக்கு?
ஏன் சாப்புடவே இல்லை?

" ஏண்டா பசங்களா, பசியில்லையா? இல்லே , இந்த சாப்பாடு பிடிக்கலையா?"

" எங்களுக்கு பசி இருக்கு. ஆனாலும் சாப்புடமாட்டோம்"


" அதான், ஏன்னு கேக்கறேனில்லே"

" எங்களுக்கு உன்மேலே கோவம்!"

" ஏண்டா? நான் என்ன செஞ்சேன்?"

" எங்களைக் கேவலப்படுத்திட்டே"

'ஓ'வென்று அழுதுகொண்டே இருக்குதுகள்.

"சரி.சரி. அழுகையை நிறுத்துங்க. நான் எப்ப உங்களைக் கேவலப்படுத்தினேன்?"

" நேத்து மனித மிருகம்னு எழுதுனயே."

" அதுக்கு?"

"அப்படி எங்க மிருகவர்க்கத்தைக் கேவலமா எழுதுனதை ஆட்சேபிக்கிறோம். நாங்க என்ன
'மனிதனை'ப்போல தரக்குறைவான வார்த்தைகளை எப்பவாவது பேசியிருக்கோமா? கிட்டத்தட்ட உன் வாழ்க்கை
முழுசும் ஏதாவது ஒரு மிருகத்தோடதானே இருந்திருக்கே. ஒருநாள், வேணாம் ஒரேஒருதடவை ஒரு சொல்,
குறைஞ்சபட்சம் ச்சீன்னு சொல்லியிருப்போமா?"

விசும்பல் தொடருகிறது.

" என்னடா செய்யறது. யாரோ ஒரு கழிசடை அசிங்கமா பின்னூட்டம் போட்டுடுச்சு. ஏற்கெனவே பலபேரோட பதிவு
களிலே வேலையைக் காமிச்சுக்கிட்டு இருந்துச்சு. பொழுது போகலை போல இருக்கு. ரெண்டு மாசத்துக்கு முந்திகூட
நம்ம பதிவுலே ஒண்ணு போட்டது. என்ன இழவுடா இதுன்னு நினைச்சுக்கிட்டு அதை அழிச்சேன். அதுக்கப்புறம்
ஏதோ பேய், பிசாசு அதோட உடம்புலே பூந்துடுச்சோ என்னவோ, தன்னைமிஞ்ச ஆளில்லைன்னு அநேகமா எல்லோரோட
பதிவுகளிலேயும் போய் ஆட ஆரம்பிச்சுடுச்சு."

" ஸ்டாப், ஸ்டாப். இப்ப எதுக்கு பேய் பிசாசுகளை வம்புக்கு இழுக்கறே?"

" தப்புதான். அதுசரி, நான் மிருகமுன்னு எழுதுனது உங்களுக்கு எப்படித்தெரியும்? "

" நீதான் எப்பவும் டொக் டொக்குன்னு எதாவது தட்டிக்கிட்டே இருக்கியே, கம்ப்யூட்டர் முன்னாடி உக்காந்துக்கிட்டு.
மனுஷன்களுக்கு அந்நியன் இருக்கறாப்பல எங்களுக்கும் அந்நியர்னு ஒரு ஸைபர் தலைவர் இருக்கார். மிருகங்களான
எங்களுக்குத்தான் பொட்டி தட்டத் தெரியாதே தவிர, அந்நியருக்கு இதெல்லாம் தண்ணிபட்ட பாடு. அவர்தான் எங்ககிட்டே
இதைப் பத்திச் சொன்னது. 'ஏ மிருகங்களா, உங்களுக்கு எவ்வளவு கேவலம் நடந்து போச்சு பாத்தீங்களா? கம்ப்யூட்டர்னு
சொல்றதைக் கண்ணுலே பாத்தது மட்டும்தான் நீங்க. உங்களுக்கெல்லாம் அதுலெ டொக் டொக்குன்னு தட்டச்சு செய்யற
தெல்லாம் தெரியாது. ஒருத்தன் தட்டச்சு செய்யறதுமட்டுமில்லாம அசிங்க அசிங்கமாவும் ஆபாசமாவும் தட்டச்சு
செஞ்சு அனுப்பிவிட்டுக்கிட்டு இருக்கான். உங்களுக்குக் கோபம் வந்தா வள் னு மேலே பாஞ்சுடுவீங்க. போரடிச்சா,
ஒரு மூலையிலே படுத்துத் தூங்கிருவீங்க.

ஆனா கெட்ட 'மனிதன்' மட்டும் மூளையை உபயோகிச்சு யார்யாரை எப்படி நாஸ்தி செய்யலாமுன்னு திட்டம் போட்டு
இருக்கற கொஞ்ச நஞ்ச அறிவையும் பாழாக்கிக்கிடுவான். நல்லவேளையா உங்களிலே ஒருத்தர் பேரை போட்டுக்காம
மனிதன்ற பேருலேயே அசிங்கம் பண்ணிக்கிட்டு, அதே பேருலே ப்லொக் ம் பதிஞ்சு வச்சிருக்கான்.

அன்னானிமஸ் பின்னூட்டம் வேணாமுன்னு பலரும் தூக்கிட்டதாலே ப்லொக்கர் ஆகிகிட்டான் போல. மனிதன்
செய்யற கெடுதல்களை மனுஷராலே நிறுத்தமுடியாம அவஸ்தைப் படறதை நான் பாத்துக்கிட்டுத்தான் இருக்கேன்.
நீங்க போய் உங்க எஜமானியம்மாகிட்டே சொல்லுங்க. அவுங்க சரின்னு சொன்னா இதை நிறுத்த நான் வழி காமிக்கறேன்'னு
போய்ச் சொல்லுங்கன்னார்."

" கேக்கவே சந்தோஷமா இருக்குடா. அப்படி என்னதான் செய்வாராம் உங்க அந்நியர்?"

"நாங்க போய்க் கேட்டுட்டு வர்றோம்"

இதுங்க போனபிறகு நான் இதைப் பத்தி யோசிச்சுக்கிட்டு இருந்தேன். உனக்கு எப்படி மிருகபாஷை தெரியுமுன்னு
கேக்கறீங்கதானே? அதுங்க சொன்னமாதிரி ஏறக்குறைய மிருகங்களோடவேதான் இத்தனை வயசுவரைக்கும் இருந்துக்கிட்டிருக்கேன்.
எப்பவும் அதுங்ககூடப் பேசிப்பேசி அப்படியே கத்துக்கிட்டதுதான். இவ்வளவு எதுக்கு? அதுங்களுக்கேக்கூட தமிழ்
நல்லாத்தெரியும். எல்லாம் ஒருத்தர்கிட்டே இருந்து ஒருத்தர் கத்துக்கறதுதானே? கொஞ்சம் இருங்க, அதுங்க வருது.
முகத்துலே சிரிப்பாணியா இருக்கு!

" வாங்கடா. என்ன சொன்னார் தலைவர்?"

" மயிலே மயிலே இறகு போடு. திருடனாப் பாத்துத் திருந்தணும் இப்படியெல்லாம் சொல்லிக்கிட்டு இருந்தா ஒண்ணூம்
நடக்காதாம். எச்சி துப்பறது, காரை நிறுத்தாமப்போறது, சரியான சுத்தபத்தமான சாப்பாடு தராம ஏமாத்தறது இதெல்லாம்
மனுச உலகத் தப்புங்களாம். சைபர் உலகத்துலே தப்போட அளவுகோலுங்க வேறயாம். மனசாலே, தட்டச்சாலே அசிங்க அசிங்கமா
அழுக்குக் காமெண்ட்ஸ் போடறது மகாப் பெரிய பாவமாம். அதனாலே கழுமரம் ஏத்தறதுதான் சரியானதாம். அப்பத்தான் உயிர் உடனே
போகாதாம். செஞ்சதையெல்லாம் சிந்திச்சுப் பார்க்க நிறைய நேரம் இருக்குமாம்."

" அடப் பாவமே"

"பாவம் புண்ணியமெல்லாம் பாக்கக்கூடாதாம். பெண்குலத்தையே இழிவு செஞ்சவங்களாம் இவுங்க. ஒரு ஆணைத்
திட்டணுமுன்னாலும் அவசியமில்லாம அவுங்க வீட்டுலே இருக்கற மற்ற பெண்களையெல்லாம் கேவலப்படுத்துனவங்களாம்.
இன்னும் சொல்லப்போனா இதுவே குறைஞ்சபட்சத் தண்டனைதானாம்"

" என்னவோ போ. இந்தக் கழிசடையையும் ஒரு பெண்ஜென்மம்தானே பெத்துப் போட்டிருக்கும்?"

" ஆமாம். அது 'மனிதனு'க்குப் புரியலைபோல! என்ன மனுஷங்களோ? சரி, பேச்சை வளர்க்காம சீக்கிரமா
சாப்பாடு போடு. நேத்திருந்து சாப்புடாம பசி உயிர் போகுது"




15 comments:

said...

என்ன அக்கா...
(யாரும் பாக்காத) புதுப்படம் ஏதும் இன்னிக்கு மாட்டலியா!?

said...

இதுதான் இன்றையப் 'படம்'!

said...

துளசி, கிழி கிழினு கிழிச்சிட்டீங்க போங்க !

said...

தேங்ஸ் ரவியா

said...

துளசியக்கா,

உங்க செல்(ல)வங்க கிட்ட "மனிதன்"களைப் பற்றியெல்லாம் பேசி அதுங்களையும் "மனிதன்"கள் ஆக்கிட்டாதிங்க.

அதுங்களாவது இது போன்ற அசிங்கங்கள் ஏதும் செய்யத் தெரியாத மிருகங்களாகவே இருக்கட்டும்.

said...

நல்லாச் சொன்னீங்க போங்க.

அதுங்களுக்கு இருக்கற அறிவே தனி!

மாறுமுன்னு நினைக்கறீங்களா?

said...

//மாறுமுன்னு நினைக்கறீங்களா?//

யாரு??? :o(


இந்த வரி:

//என்னவோ போ. இந்தக் கழிசடையையும் ஒரு பெண்ஜென்மம்தானே பெத்துப் போட்டிருக்கும்?"

" ஆமாம். அது 'மனிதனு'க்குப் புரியலைபோல! //

..அது!!

said...

நன்றி ஷ்ரேயா.

said...

துளசி இதுநாள் வரை அனானிமஸ்களை கண்டு கொள்ளாமல் விடுவதே நல்லதென்று நினைத்திருந்தேன். பாருங்க உங்க பதிவ படிச்சா கண்டிப்பா அவருக்கு புத்தி வரும்

said...

நான் அறிந்த வரையில் நீங்கள் இவ்வளவு கடுமையான வார்த்தைகளைப் பிரயோகித்துப் பார்த்ததில்லை. எந்த அளவுக்கு நீங்கள் பாதிக்கப்பட்டிருப்பீர்கள் என உணர முடிகிறது.

கெடக்குது விடுங்க - உள்ளம் கேட்குமே படம் பார்த்தீங்களா? நான் பார்த்துட்டேன் - இன்றோ நாளையோ விமர்சனம் எழுதுகிறேன். (விளம்பரம்தான்)

said...

துளசி அக்கா, சிரிச்ச முகத்தோட இருக்கும் உங்க கிட்டே இருந்து இப்படி ஒரு தீர்ப்பா? வேண்டாமே அக்கா! நம்ம கிட்டேருந்து இப்படி ஒரு negative reactionஐ இந்த X partyயால் வரவழைக்க முடிந்தால் அப்போ Xக்கு தானே வெற்றி?

அவனின் இந்த கேவலமான, கூச வைக்கும் செயல்களுக்கு நிச்சயம் பின் விளைவுகள் இருக்கும். அது நம்ம ப்ளாகர் உலகின் ஒட்டு மொத்த intelligence மற்றும் postive/creative thinkingன் குறைப்பாக இருக்க வேண்டாமே!

said...

கணேஷ், சுரேஷ் & ரம்யா

உங்களுக்கெல்லாம் நன்றி!

'சாது மிரண்டால்' பழமொழின்னு நினைச்சுக்குங்க.
தேவையில்லாம ஒருத்தர் செய்யறது எத்தனைபேருக்கு மன உளைச்சல் கொடுத்திருக்குன்னு பார்த்தீங்கதானே?

சுரேஷ், '

உள்ளம் கேட்குமே' பாத்துட்டேன். லைலாவை அநியாயத்துக்குஅசடாக் காமிக்கணுமா? பல்லுலே 'ப்ரேஸஸ்' வேற.
டீச்சரோட கண்ணாடியை ஒளிச்சுவச்சுக்கறது நல்ல ஜோக்கோ இல்லையோ, சிரிப்பு வந்துருச்சு.

ரம்யா,

எப்படி இருக்கீங்க? உங்க கதையைப் படிச்சுட்டுப் பின்னூட்டம் இடப்பார்த்தா ஒண்ணுமே நடக்கலை. கதை அருமையா
இருந்தது. வாழ்த்துக்கள். குழந்தைகள் நல்லா இருக்காங்களா?

' தீர்ப்பு' என்னோடது இல்லே. அந்நியரோடதுன்னு 'பசங்க' சொன்னதைப் பாக்கலியா? அதுவும் படிக்காத பாமரன்னு
இருந்தாலும் பரவாயில்லே. இவுங்கெல்லாம் படிச்சு நல்ல வேலையில் இருந்து, கணினியில் எல்லாம் கையாளத்
தெரிஞ்சவுங்கதானே? சிலபேர் கஷ்டப்பட்டு உண்டாக்கியதை வச்சுக்கிட்டுத்தானே இப்பத் தமிழிலேயே சுலபமான
முறையில் தட்டச்சு செஞ்சு ஒரு நண்பர் கூட்டத்தை ஏற்படுத்தியிருக்கோம். அதை இப்படிப் பாழாக்கணுமா?
ஒருகுடம் பாலில் ஒருதுளி விஷம்.

said...

உங்க கோபம் நியாயமானது தான் அக்கா!

'அகத்தின் அழகு' கதையை சொல்றீங்கன்னு நினைக்கறேன். உங்களுக்கு பிடிச்ச அளவு bloggerrருக்கு அந்த கதை பிடிக்கலை. நானும் பத்து முறை upload செஞ்சேன். பத்து முறையும் சாப்பிட்டு ஏப்பம் விட்டிருச்சு!! :-)

உங்க அன்புக்கு நன்றி!

Anonymous said...

தூளசி அக்கா!.,

நீங்க, முத்தெல்லாம் மிதவாதிங்க லிஸ்ட்லன்னு நினைச்சேன். இப்படி நாலு பேரு பொங்கி எழனும்., எப்பவும் கத்துற எங்கள மாதிரி ஆளுகளவிட உங்க மாதிரி ஆளுக கத்துனா பயன் இருக்கும்னு நினைக்கிறேன்

said...

//அசிங்க அசிங்கமாஅழுக்குக் காமெண்ட்ஸ் போடறது மகாப் பெரிய பாவமாம். அதனாலே கழுமரம் ஏத்தறதுதான் சரியானதாம்.
அப்பத்தான் உயிர் உடனே போகாதாம். செஞ்சதையெல்லாம் சிந்திச்சுப் பார்க்க நிறைய நேரம் இருக்குமாம்."
//
ஆறுவது சினம் ! கூறுவது பாலா ! அறியாத அக்காவா தாங்கள் :)

ஆனாலும், உங்கள் மன உளைச்சல் எனக்குப் புரிகிறது, புரிய வேண்டியவங்களுக்கு புரிஞ்சா சரி தான் !!!

என்றென்றும் அன்புடன்
பாலா