Wednesday, November 10, 2004

தீபாவளி வாழ்த்துக்கள்!!!

அனைவருக்கும் எங்கள் அன்பான தீபாவளி வாழ்த்துக்கள்!!!


அனைவருக்கும் எங்கள் அன்பான தீபாவளி வாழ்த்துக்கள்!!!

இந்த தீபாவளிக்கு நான் பார்க்கப் போகும் திரைப்படம் 'பறக்கும் பாவை!!!!'(புத்தம் புதிய காப்பி)
இன்றுதான் வந்து சேர்ந்தது!( கணவர் மலேசியாவிலிருந்து வாங்கிவந்தார்!)

எம்.ஜி.ஆர் & சரோஜாதேவி, மற்றும் பலர் நடித்தது!

திரைப்படப் பாடல்களிலே மோசமான அர்த்தம் வரும்படியெல்லாம் இப்போது பலபாடல்கள் வந்து
கொண்டிருக்கின்றன. சமூகச் சீரழிவுக்கு இவையும் ஒரு காரணமே!

இந்தப் 'பறக்கும் பாவை'யில் பாட்டுகள் எல்லாம் அருமை. கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பாடல்கள்.

'கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா, நாம் கையோடு கை சேர்த்துக் கொள்ளலாமா?'

ஆஹா! காதலனும் காதலியும் பெற்றோரை நாள் பார்க்கச் சொல்லிக் கேட்கிறார்கள்!

( ஓடிப்போய் கல்யாணம்தான் கட்டிக்கலாமா இல்லை!)

இசையும் நன்றாக இருக்கிறது. வார்த்தைகளை முழுங்கிவிடும் இரைச்சலான இசை இல்லை!

என்னதான் சொல்லுங்க, பழைய படங்கள் அதுவும் எம்.ஜி.ஆர். படங்கள் எப்போதும் அலுப்பதே இல்லை!

இந்த நாடு 'டேட் லைன்' ஆரம்பத்தில் இருப்பதால் நாளின் முதல் சூரியனும் எங்களுக்குத்தான்!

பண்டிகையைக் கொண்டாடும் முதல் ஆளும் நான் தானோ?



1 comments:

said...

நான் அமெரிக்காவில் இருப்பதால் நீண்ட நேரம் கொண்டாட முடியும் ;-) உங்களோடு ஆரம்பித்து, மேற்குக் கடற்கரை நண்பர்களோடு முடித்து, வாரயிறுதியிக்கும் நீட்டித்து... :))

தீபாவளி வாழ்த்துக்கள்!