நாலாகப்போது, நாலாகப்போதுன்ற என் தொணத்தொணப்பையும் தாங்கிக்கிட்டு நம்மவர் பகல் தூக்கம் முடிச்சுட்டுக் கிளம்பும் சமயம் ஒரு காஃபி கிடைச்சால் தேவலை என்ற எண்ணம் வரும்போதே.... போறவழியில் முரளி கடையில் ஆகட்டுமேன்னும் தோணுச்சு. அங்கே போனால் போனஸ் ஐட்டங்களா பஜ்ஜி வகைகள் வேற! முரளி கடை தயாரிப்பு இல்லை. வேற யாரோ, மக்கள்ஸ் வெறுங்காஃபி குடிக்க வேணாமேன்னு புதுசா ஆரம்பிச்சு இருக்காங்க.
இதைக் கவனிக்காமல் நம்மவர் போய் மூணு காஃபிக்கு சொல்லி அதை சீனிவாசன் வாங்கிட்டும் வந்துட்டார். பஜ்ஜி இருக்குன்னு சொல்லி இடப்பக்கம் காமிச்சதும், கண்ணில் ஒரு மின்னல்! போய் வாங்கிக்கச் சொன்னேன். அஞ்சு ரூபா ஒன்னு.
சம்ப்ரதாயம் அனுசரிச்சு இப்போ ஆனைக்கா போய்க்கிட்டு இருக்கோம். அகிலாவின் நினைப்புதான். அதான் எல்லோரும் கேம்ப் போயிட்டாங்களே! மண்டபத்துச் சிற்பங்களுக்காகவே கட்டாயம் போக வேணும்தான்...... இன்னும் முழுசாப் பார்த்து முடிக்கலை....
சந்நிதி இன்னும் திறக்கலை. ஆனா... இப்போ திறந்துருவாங்கன்னு சொன்னார் கேமெரா டிக்கெட் கவுண்ட்டரில் இருந்தவர். மெதுவாத்தான் திறக்கட்டும்னு கோவிலுக்குள் போனோம். மண்டபங்களில் பலர், அங்கங்கே மதியத் தூக்கத்தில்! இந்த வெயில் ஆளை அப்படியே அசத்தி வுட்டுருது............. ஸ்...ப்பா..........
ப்ரகாரம் சுத்திட்டு வரலாமான்னு காலடி எடுத்து வைக்கும் நொடி, சந்நிதி திறந்தாச்சுன்னு சொல்லிக்கிட்டே கோவில் ஊழியர் ஒருவர் கையில் சாவி குலுங்க எதிரில் வந்தார். தரிசனம் முடிச்சுக்கிட்டே போகலாமேன்னு ஜம்புகேஸ்வரரை நோக்கிப் போனோம்.
அர்ச்சனை டிக்கெட் வேணுமான்னு கேட்டார் உட்பிரகாரத்துலே இருந்த கோவில் ஊழியர். பேசாம தரிசன டிக்கெட் வாங்கிக்கலாமுன்னு சொன்னேன். வெறும் பத்து ரூபாய்தான்.அங்கே பெருமாளுக்கு இருநூத்தியம்பது, அம்பதுன்னு கொடுத்துட்டுப்போய் அரை நிமிசம் பார்க்கறோமே.... இங்கே பத்துலே பார்த்தால் என்னன்னுதான்.... மூலவர் சந்நிதியில் அந்த நேரத்தில் குருக்களைத்தவிர யாருமே இல்லைன்னாலும், இலவச தரிசனம் அந்த நவத்வார ஜன்னல் வழியாத்தான்.
ஸ்பெஷல் தரிசனத்துக்குன்னு ஒரு வழி வச்சுடறாங்களே.... அதன் வழியாப்போனால் தூரக்கே குருக்கள், சந்நிதிச் சுவர்களில் கொட்டி இருக்கும் விபூதியையெல்லாம் விரலால் வழிச்சு அடுத்த கையில் சேகரிச்சுக்கிட்டு இருந்தார். நம்மைப் பார்த்துட்டு, இந்தப் பக்கம் வாங்கன்னுட்டு, தலையைக் குனிஞ்சு சந்நிதிக்குள்ளே போனவர், கையில் இருந்த விபூதியை பூஜைத் தாம்பாளத்தில் போட்டுட்டு, உள்ளே வந்து இந்தப்பக்கம் நில்லுங்கன்னார். தீபாராதனை ஆச்சு. தாம்பாளத்தில் இருந்த 'அந்த விபூதி' நம் உள்ளங்கையில் விழுந்தது. எனெக்கென்னமோ.... அதை நெற்றியில் இட்டுக்கத் தோணலை..... பார்க்காம இருந்தால் தெரிஞ்சுருக்காது. கண்ணாலே பார்த்துட்ட அவஸ்த்தை. என்னமோ போங்க.
முதலில் அம்மனைக் கும்பிட்டுக்கணும். வழக்கம்போல் அட்டகாசமா ஜொலிச்சுக்கிட்டு சிரிச்ச முகத்தோடு அகிலாண்டேஸ்வரி. நிம்மதியா சேவிக்க முடிஞ்சது. ஏகாந்த தரிசனம்தான். குருக்கள் கூட இல்லை!
பிரகாரம் சுத்தப் போனோம். போனமுறை பார்த்த சுத்தம் இப்போ இல்லை... ப்ச்.....
108 சிவலிங்கங்கள் வரிசையில் பின்னம்பக்கத்துச் சுவர்களில் சனம் தங்கள் பெயர், இனிஷியல்ஸ் எல்லாம் எழுதி வச்சு அசிங்கப்படுத்தி இருக்கு:-( அந்த உயரத்தில் சுவத்துலே எழுதணுமுன்னா... சிவலிங்கங்கள் இருக்கும் மேடையிலேயே கால் வச்சு ஏறி நின்னால்தான் முடியும்..... எரிச்சல் எனக்கு.... இப்படி எழுதிவச்சவங்க எல்லாம் நரகத்துக்கே போகட்டும்........... அசிங்கம் பண்ணவா வேலை மெனெக்கெட்டு கோவிலுக்கு வர்றாங்க............. ச்சே......
சுத்தல் முடிஞ்சு முன்பக்கம் வந்தால் புறப்பாடோ இல்லை நகர்வலம் முடிஞ்சதோ தெரியலை.... புள்ளையாரும், முருகனும் குடும்பத்துடன் அவரவர் வாகனங்கள் உக்கார்ந்துருந்தாங்க.
மண்டபத்துத் தூண்களில் இருக்கும் சிற்பங்களைப் பார்த்துக்கிட்டே அங்கங்கே க்ளிக்ஸ். விஸ்வாமித்திரர்.... கையில் குழந்தையுடன் மேனகை!
உள்ளே இன்னும் நல்ல சிற்பங்கள் இருக்கலாம். சனம் இன்னும் தூணைச்சுத்தித் தூங்கிக்கிட்டு இருக்கே....
இந்த மூணுகால் உருவம் யாருன்னு தெரியலை..... :-( வால் வேற இருக்கு!!!
இந்த மாதிரி குழப்பம் வேணாமுன்னு ஒருசில சிற்பங்களில் யாரோ பெயர் எழுதி வச்சுட்டுப்போயிருக்காங்க........
சரஸ்வதி, லக்ஷ்மி, துர்கைன்னு முப்பெரும்தேவிகள் தனித்தனியாக....
கோவிலைப்பத்தி இந்த முறை அதிகம் எழுதலை. போனமுறை எழுதுன அதே கோவில் கதைதான் இப்பவும் என்பதால்...........
ஆனைக்கோவில் அகிலாவை இங்கே வாசிக்கலாம்.
இடுப்புக்கூடையிலெ சின்னப்புள்ளையை வச்சுக்கிட்டு, வலக்கையிலே மூத்தவனைப் பிடிச்சுக்கிட்டு எங்கே கிளம்பிட்டாங்க?
இன்னும் கொஞ்சம் படங்களை ஃபேஸ்புக் ஆல்பத்தில் போட்டுருக்கேன். அதுக்கான சுட்டி இது .
திருவானைக்கா
இன்னொரு கோவிலுக்கும் போய்வரணுமுன்னு நினைச்சு அங்கே போனால்.... கொஞ்சம்கூட எதிர்பார்க்காத இன்ப அதிர்ச்சி !!!
தொடரும்................ :-)