நாலாகப்போது, நாலாகப்போதுன்ற என் தொணத்தொணப்பையும் தாங்கிக்கிட்டு நம்மவர் பகல் தூக்கம் முடிச்சுட்டுக் கிளம்பும் சமயம் ஒரு காஃபி கிடைச்சால் தேவலை என்ற எண்ணம் வரும்போதே.... போறவழியில் முரளி கடையில் ஆகட்டுமேன்னும் தோணுச்சு. அங்கே போனால் போனஸ் ஐட்டங்களா பஜ்ஜி வகைகள் வேற! முரளி கடை தயாரிப்பு இல்லை. வேற யாரோ, மக்கள்ஸ் வெறுங்காஃபி குடிக்க வேணாமேன்னு புதுசா ஆரம்பிச்சு இருக்காங்க.
இதைக் கவனிக்காமல் நம்மவர் போய் மூணு காஃபிக்கு சொல்லி அதை சீனிவாசன் வாங்கிட்டும் வந்துட்டார். பஜ்ஜி இருக்குன்னு சொல்லி இடப்பக்கம் காமிச்சதும், கண்ணில் ஒரு மின்னல்! போய் வாங்கிக்கச் சொன்னேன். அஞ்சு ரூபா ஒன்னு.
சம்ப்ரதாயம் அனுசரிச்சு இப்போ ஆனைக்கா போய்க்கிட்டு இருக்கோம். அகிலாவின் நினைப்புதான். அதான் எல்லோரும் கேம்ப் போயிட்டாங்களே! மண்டபத்துச் சிற்பங்களுக்காகவே கட்டாயம் போக வேணும்தான்...... இன்னும் முழுசாப் பார்த்து முடிக்கலை....
சந்நிதி இன்னும் திறக்கலை. ஆனா... இப்போ திறந்துருவாங்கன்னு சொன்னார் கேமெரா டிக்கெட் கவுண்ட்டரில் இருந்தவர். மெதுவாத்தான் திறக்கட்டும்னு கோவிலுக்குள் போனோம். மண்டபங்களில் பலர், அங்கங்கே மதியத் தூக்கத்தில்! இந்த வெயில் ஆளை அப்படியே அசத்தி வுட்டுருது............. ஸ்...ப்பா..........
ப்ரகாரம் சுத்திட்டு வரலாமான்னு காலடி எடுத்து வைக்கும் நொடி, சந்நிதி திறந்தாச்சுன்னு சொல்லிக்கிட்டே கோவில் ஊழியர் ஒருவர் கையில் சாவி குலுங்க எதிரில் வந்தார். தரிசனம் முடிச்சுக்கிட்டே போகலாமேன்னு ஜம்புகேஸ்வரரை நோக்கிப் போனோம்.
அர்ச்சனை டிக்கெட் வேணுமான்னு கேட்டார் உட்பிரகாரத்துலே இருந்த கோவில் ஊழியர். பேசாம தரிசன டிக்கெட் வாங்கிக்கலாமுன்னு சொன்னேன். வெறும் பத்து ரூபாய்தான்.அங்கே பெருமாளுக்கு இருநூத்தியம்பது, அம்பதுன்னு கொடுத்துட்டுப்போய் அரை நிமிசம் பார்க்கறோமே.... இங்கே பத்துலே பார்த்தால் என்னன்னுதான்.... மூலவர் சந்நிதியில் அந்த நேரத்தில் குருக்களைத்தவிர யாருமே இல்லைன்னாலும், இலவச தரிசனம் அந்த நவத்வார ஜன்னல் வழியாத்தான்.
ஸ்பெஷல் தரிசனத்துக்குன்னு ஒரு வழி வச்சுடறாங்களே.... அதன் வழியாப்போனால் தூரக்கே குருக்கள், சந்நிதிச் சுவர்களில் கொட்டி இருக்கும் விபூதியையெல்லாம் விரலால் வழிச்சு அடுத்த கையில் சேகரிச்சுக்கிட்டு இருந்தார். நம்மைப் பார்த்துட்டு, இந்தப் பக்கம் வாங்கன்னுட்டு, தலையைக் குனிஞ்சு சந்நிதிக்குள்ளே போனவர், கையில் இருந்த விபூதியை பூஜைத் தாம்பாளத்தில் போட்டுட்டு, உள்ளே வந்து இந்தப்பக்கம் நில்லுங்கன்னார். தீபாராதனை ஆச்சு. தாம்பாளத்தில் இருந்த 'அந்த விபூதி' நம் உள்ளங்கையில் விழுந்தது. எனெக்கென்னமோ.... அதை நெற்றியில் இட்டுக்கத் தோணலை..... பார்க்காம இருந்தால் தெரிஞ்சுருக்காது. கண்ணாலே பார்த்துட்ட அவஸ்த்தை. என்னமோ போங்க.
முதலில் அம்மனைக் கும்பிட்டுக்கணும். வழக்கம்போல் அட்டகாசமா ஜொலிச்சுக்கிட்டு சிரிச்ச முகத்தோடு அகிலாண்டேஸ்வரி. நிம்மதியா சேவிக்க முடிஞ்சது. ஏகாந்த தரிசனம்தான். குருக்கள் கூட இல்லை!
பிரகாரம் சுத்தப் போனோம். போனமுறை பார்த்த சுத்தம் இப்போ இல்லை... ப்ச்.....
108 சிவலிங்கங்கள் வரிசையில் பின்னம்பக்கத்துச் சுவர்களில் சனம் தங்கள் பெயர், இனிஷியல்ஸ் எல்லாம் எழுதி வச்சு அசிங்கப்படுத்தி இருக்கு:-( அந்த உயரத்தில் சுவத்துலே எழுதணுமுன்னா... சிவலிங்கங்கள் இருக்கும் மேடையிலேயே கால் வச்சு ஏறி நின்னால்தான் முடியும்..... எரிச்சல் எனக்கு.... இப்படி எழுதிவச்சவங்க எல்லாம் நரகத்துக்கே போகட்டும்........... அசிங்கம் பண்ணவா வேலை மெனெக்கெட்டு கோவிலுக்கு வர்றாங்க............. ச்சே......
சுத்தல் முடிஞ்சு முன்பக்கம் வந்தால் புறப்பாடோ இல்லை நகர்வலம் முடிஞ்சதோ தெரியலை.... புள்ளையாரும், முருகனும் குடும்பத்துடன் அவரவர் வாகனங்கள் உக்கார்ந்துருந்தாங்க.
மண்டபத்துத் தூண்களில் இருக்கும் சிற்பங்களைப் பார்த்துக்கிட்டே அங்கங்கே க்ளிக்ஸ். விஸ்வாமித்திரர்.... கையில் குழந்தையுடன் மேனகை!
உள்ளே இன்னும் நல்ல சிற்பங்கள் இருக்கலாம். சனம் இன்னும் தூணைச்சுத்தித் தூங்கிக்கிட்டு இருக்கே....
இந்த மூணுகால் உருவம் யாருன்னு தெரியலை..... :-( வால் வேற இருக்கு!!!
இந்த மாதிரி குழப்பம் வேணாமுன்னு ஒருசில சிற்பங்களில் யாரோ பெயர் எழுதி வச்சுட்டுப்போயிருக்காங்க........
சரஸ்வதி, லக்ஷ்மி, துர்கைன்னு முப்பெரும்தேவிகள் தனித்தனியாக....
கோவிலைப்பத்தி இந்த முறை அதிகம் எழுதலை. போனமுறை எழுதுன அதே கோவில் கதைதான் இப்பவும் என்பதால்...........
ஆனைக்கோவில் அகிலாவை இங்கே வாசிக்கலாம்.
இடுப்புக்கூடையிலெ சின்னப்புள்ளையை வச்சுக்கிட்டு, வலக்கையிலே மூத்தவனைப் பிடிச்சுக்கிட்டு எங்கே கிளம்பிட்டாங்க?
இன்னும் கொஞ்சம் படங்களை ஃபேஸ்புக் ஆல்பத்தில் போட்டுருக்கேன். அதுக்கான சுட்டி இது .
திருவானைக்கா
இன்னொரு கோவிலுக்கும் போய்வரணுமுன்னு நினைச்சு அங்கே போனால்.... கொஞ்சம்கூட எதிர்பார்க்காத இன்ப அதிர்ச்சி !!!
தொடரும்................ :-)

22 comments:
//அதுக்கான சுட்டி இது// காணோமே!
தெளிவாய், அழகாய், சுவாரஸ்யமாய் புகைப்படங்கள்.
// போய் வாங்கிக்கச் சொன்னேன்// ஹாஹாஹா.
//இப்படி எழுதிவச்சவங்க எல்லாம் நரகத்துக்கே போகட்டும்//இல்லை பசித்தப்புலி திங்கட்டும்.
//சுவர்களில் சனம் தங்கள் பெயர், இனிஷியல்ஸ் எல்லாம் எழுதி வச்சு // வரலாற்றுல ஒரு இடம்பிடித்துவிட எல்லாருக்கும் ஆசைதான்.
// புள்ளையாரும், முருகனும் குடும்பத்துடன் அவரவர் வாகனங்கள் உக்கார்ந்துருந்தாங்க//
இந்த வரிக்கு மேல இருக்குற படத்துல / சிற்பத்துல / கல்வெட்டுல, அது தெலுங்கு எழுத்துக்களா டீச்சர் ? possible to read ?
சிற்பங்கள் அருமையாக இருக்கு.
அழகான படங்கள்...ஸ்ரீரெங்கம் சென்ற அளவு இங்கு வருவது இல்லை....பல நாள் முன்பு சென்றது....அடுத்த முறை ஆணைக் கோவில் செல்ல வேண்டும்...
ஆணைக்கோவில் அகிலாவையும் உங்க முந்தைய பதிவிற்கு சென்று பார்த்தாச்சு...அருமை..
வாங்க இமா.
சுட்டி காணோமா? காக்கா ஊஷ்............ ஆகிருச்சா?
அச்சச்சோ..... இப்போ ஒருக்காப் பாருங்க, ப்ளீஸ் ....
வாங்க ஸ்ரீராம்.
வருகைக்கும், 'கருத்திற்கும்' நன்றி.
வாங்க விஸ்வநாத்.
சரித்திரம் இவுங்களே எழுதிக்கிட்டாத்தான் இடம் பிடிக்க முடியும் :-)
தெலுகு எழுத்துதான். கோவிலில் பிரகாரச் சுவற்றில் நிறைய எழுத்துக்கள் செதுக்கி இருக்காங்க. கல்வெட்டு மொழி வாசிக்கத் தெரிஞ்சால்.... சரித்திரம் புரியும். ஒன்னும் தெரியாத ஊனக்கண்ணால் உத்துக் கவனிச்சப்ப அங்கங்கே தமிழ் எழுத்துகள் கண்ணில் பட்டன. பழங்காலத்தமிழ் இப்படி இருக்கோ என்னமோ!
வாங்க குமார்.
உண்மை. இதுக்காகவே இன்னொரு முறை போகணும்:-)
வாங்க அனுராதா ப்ரேம்குமார்.
கட்டாயம் பார்க்கவேண்டிய கோவில் இது! பஞ்ச பூதத் தலங்களில் ஒன்னு!
அடுத்தமுறை விட்டுவிட வேண்டாம்!
திருவானைக்கா எனக்கு மிகவும் பிடித்த கோயில். அகிலாண்டேசுவரியின் அழகைச் சொல்ல முடியுமா! ஆகாகா!
கோயில் தூணில் உள்ள திருநீற்றை எடுத்து தாம்பாளத்தில்.... இதே போல திருப்பரங்குன்றத்தில் உடைக்காத பன்னீர் பாட்டிலை எடுத்துக் கொடுத்து அபிஷேகத் தீர்த்தம்னு ஒரு பூசாரி சொன்னாரு. முருகன் பக்கத்துல நின்னுக்கிட்டே தப்புப் பண்றியேன்னு மனசுக்குள்ள சிரிச்சிக்கிட்டேன். ஒருவேளை இவங்கதான் உண்மையான நாத்திகர்கள் (கடவுள் நம்பிக்கையற்றவர்கள்) போல.
அந்த மூனுகால் உருவம் என்னன்னு தெரியலையே. நானும் கவனிச்சதில்ல. யாரைக் கேட்டாத் தெரியும்னு தெரியலையே........
ஆனைக்கா போனபோதெல்லாம் மதியமாய் இருக்கும் அர்ச்சகர் ஒருவர் வேஷமணிந்து கோபூசை செய்வதைப் பார்த்து சிறிது நேரத்தில் ஜம்புகேஸ்வரரை தரிசித்துவருவதுதான் ரொடீன் வழக்கம் சிற்பங்களை எல்லாம் காணக் கொடுத்து வைக்கவில்லை அடுத்தமுறை சிற்பங்களையும் காண வேண்டும்
எனக்கும் பிடித்த கோவில்.... பல முறை சென்றதுண்டு....
பலமுறை சென்றுள்ளேன். உங்கள் மூலமாக இன்று அதிகமான சிற்பங்களை நுணுக்கமாகப் பார்க்கமுடிந்தது. நன்றி.
திருவானைக்காவில் போதி தர்மன் சிற்பம் பார்க்கவில்லையா? பிரகாரம் சுற்றி வரும் பொழுது ஒரு மண்டபத்தில் இரு தூண்களுக்கு இடையே நின்று ஐந்து கோபுரங்களையும் தரிசிப்போமே..அந்த தூணில்தான் இருக்கும்.
மூன்று கால் கொண்ட தெய்வம் ஜுரேஸ்வரர் எனப்படுவார்
வாங்க ஜிரா.
இவுங்களுக்கெல்லாம் சாமிகூடயே இருந்து ஒரு அலட்சியம் வந்துருது போல :-(
அந்த மூணு காலர் ஜுரஹரேஸ்வரராம். மலைக்கோட்டை தாயுமானவர் கோவிலில் நடராஜர் போஸில் மூணு கால்களோடு இருக்கும் ஓவியம் பார்த்தது, நம்ம பானுமதி பின்னூட்டத்தில் சொன்னபிறகுதான் நினைவுக்கு வந்துச்சு.
அந்தப் படம் இருக்கும் பதிவு இதோ :-)
http://thulasidhalam.blogspot.co.nz/2015/07/64.html
வாங்க ஜிஎம்பி ஐயா.
நானும் ஒரு நாப்பத்திநாலு வருசத்துக்கு முன்னே அர்ச்சகர் புடவை கட்டிக்கிட்டு இருந்ததைப் பார்த்துருக்கேன். சிகப்பு நிறப்புடவைன்னு நினைவு.
அடுத்தமுறை உச்சிகால பூஜைக்குப் போகணும். மூளையில் முடிச்சு :-)
வாங்க வெங்கட் நாகராஜ்.
எவ்ளோ பெரிய கோவில், இல்லை!!!!! அகிலா இருந்தால் இன்னும் அழகுதான் :-)
வாங்க ஜம்புலிங்கம் ஐயா.
இன்னும் ஏராளமான சிற்பங்கள் இருக்கே! நமக்குத்தான் நேரம் வாய்க்கணும்.....
வாங்க பானுமதி.
அடடா.... போதி தர்மரைக் கோட்டை விட்டுட்டேனே..... அடுத்த முறை கட்டாயம் பார்க்கவேணும்.
ஜுர ஹரேஸ்வரர்... ரொம்பச்சரி. நன்றிகள். மறந்து போயிட்டேன் ... :-( தாயுமானவஸ்வாமி கோவிலில் இளமையாக நின்னு ஆடிக்கிட்டு இருக்கார் :-)
http://thulasidhalam.blogspot.co.nz/2015/07/64.html
மீண்டும் ஆனைக்கா அழகிய தரிசனம்.
Post a Comment