Tuesday, June 11, 2024

50

அந்தக் காலங்களில்  கல்யாணம் எல்லாம் சுருங்கியது அஞ்சு நாள் கொண்டாட்டமாம் !  கலிகாலத்தில்  அரைநாளாச் சுருங்கிப்போனது உங்களுக்குத் தெரியாதா என்ன ? 
நம்ம  ஐம்பதாம் திருமணநாளை எப்படிக் கொண்டாடலாமுன்னு யோசிச்சதில்  ஒரு பயணம் போய் விழாவை ஆரம்பிக்கலாமுன்னு தோணுச்சு.   எல்லாம் ஒரு மூணு வாரங்களுக்கு முன்பிருந்தே தொடங்கியாச்சு.

முதல் வாழ்த்துச் சொல்லியது யாருன்னா...... நம்ம ஏர்நியூஸிலாந்துதான் !  பயணம் போய்க்கிட்டு இருக்கோம்.  (பயணத்தொடர்  வரும் என்று சொல்லிக்கறேன் !) முப்பத்திமூணாயிரம் அடி உயரத்தில் பறந்துக்கிட்டு இருக்கோம்.  ஸ்டூவர்ட் ஒருத்தர் கொஞ்சம் பழத்துண்டுகள், ஒரு சின்னப்பேக் சாக்லெட், ஒரு வாழ்த்துஅட்டைன்னு கொண்டுவந்து நமக்கு நீட்டிக்கிட்டே  'ஹேப்பி கோல்டன் வெட்டிங் அனிவர்ஸரி'ன்னு சொல்றார் !  திடுக்னு ஆச்சு எனக்கு ! கொஞ்சம் மகிழ்ச்சியாகவும் இருந்துச்சுதான்! 

சில பல க்ளிக்ஸ் ஆச்சு.  வாழ்த்து அட்டையில்  மொத்த Crew members  கையெழுத்துப் போட்டுருக்காங்க.   அம்பது வருஷத்தைத் தள்ளியதின்  ரகசியம் என்னன்னு கேட்டதுக்கு, நான் என் வழக்கமான பதிலைச் சொன்னேன். " நாளுக்கு மூணே மூணு சண்டை !"   நமக்கு அப்ப ஒன்னு இப்ப ஒன்னுன்னு எப்பவும் இல்லை, கேட்டோ! 

பயணம் முடிச்சுத் திரும்பி வந்ததும்,  கேட்டரிங் நடத்தும் நம்ம நண்பர் செந்திலிடம்,  மெனுவைப் பேசி முடிவு செஞ்சுட்டு, நண்பர்களுக்கு அழைப்பு அனுப்பினேன்.  எங்கூர் வழக்கப்படி வீக்கெண்ட் வேணுமே !  ஒரு சனிக்கிழமை சரியாச்சு. 
மணநாள் ஜூன் மாசம் அஞ்சாம் தேதி. இந்த முறை புதன்கிழமையில் வருது.   நம்ம சநாதன் சபாவில் ஒரு சின்ன விழா வச்சுக்கலாம்முன்னு  எங்க ஃபிஜி பண்டிட்டோடு ஆலோசனை செய்ததும்,   ஜூன் நாலாம் தேதி செவ்வாய்க்கிழமை நடத்திக்கலாமுன்னு சொன்னார்.  செவ்வாய்களில் சபாவில் ராமாயண வாசிப்பு உண்டு.  கூடவே நம்ம மஹாபாரதமும் இருக்கட்டுமே ! 
சபாவின் தன்னார்வலர்களே  விருந்து சமையல் பொறுப்பை ஏத்துக்கிட்டதால்,  நம்ம வகையில் கொஞ்சம் பிரஸாதங்களை நண்பர் செந்தில் செஞ்சு கொடுத்தார்.  கேஸரியும், சுண்டலும்தான்.  முட்டையில்லாத கேக்  ஏற்பாடு செஞ்சோம்.  இப்போ ஒரு ரெண்டரை மாசத்துக்கு முன் பேரனின் முதலாவது பிறந்த நாளுக்குக் கேக் வாங்கின அதே கடையில்தான்! 
விழா நல்ல முறையில் நடந்தது. 




மறுநாள் புதன், நம்ம நாள் ! காலையில்  நம்ம ஊர் ஸ்வாமிநாராயண் மந்திர்,  ஹரே க்ருஷ்ணா கோவில் தரிசனங்கள் ஆச்சு. அப்படியே  ஒரு இண்டியன்  ரெஸ்ட்டாரண்டில் பகலுக்குச் சின்னதா ஒரு லஞ்ச். கொஞ்சம் இனிப்பும் வாங்கிக்கிட்டோம். தற்செயலா நம்மை அங்கே சந்தித்த ஹரே க்ருஷ்ணா நண்பர் நம்மைக் க்ளிக்கிக்கொடுத்தார் ! 
சாயங்காலம் நமக்கு யோகா வகுப்பு. விசேஷ தினங்களில் Food Yoga நடத்திக்குவோம் என்பதால் அதுவும் ஆச்சு !  நம்ம யோகா மக்களும் சில ஐட்டங்களைக் கொண்டு வந்துருந்தாங்க. 



எப்பவும் யோகா வகுப்பு முடிஞ்சதும், அதே வளாகத்தில் இருக்கும் நம்ம புள்ளையார் கோவிலுக்குப் போவோம். அதே  போல் இன்றும் !   புள்ளையார் & பண்டிட்  ஆசிகள் கிடைத்தன !

சனிக்கிழமை விழாவிற்கு 120 லட்சியம், 100 நிச்சியம்  என்றபடியே  நடந்தது.  இங்கெல்லாம்  ஹாலில்  மக்கள் கூட லிமிட்  உண்டு. பாதுகாப்புக் காரணங்களுக்காக, அதற்கு மேல்  அழைக்கக்கூடாது. 

விழாவின் மொத்தப் பொறுப்பையும் நம்ம யோகா குழுவினரே ஏத்துக்கிட்டாங்க.  மகளோடு பேசி....ஏதோ  ஏற்பாடுகள் நடந்துருக்கு !  விவரம் ஒன்னும் எங்க ரெண்டு பேருக்கும் தெரியாது.   ஹால் அலங்காரத்துக்கு எந்த  ஈவன்ட் ஆர்கனைஸ்ரையும் கூப்பிடலை. ஃபோட்டோக்ராஃபருக்கும் சொல்லலை. எல்லாம் தமக்குத்தாமே ! 

https://www.facebook.com/1309695969/videos/838429328180597/

https://www.facebook.com/1309695969/videos/1193657654962117/

மராத்தி ஸ்டைலில் ஒரு கல்யாணமே பண்ணிவச்சுட்டாங்க எங்களுக்கு !
வந்திருந்த விருந்தினர் அனைவரும் ரசிக்கும்படி நிகழ்ச்சிகளும், விருந்தும் அமைஞ்சுருச்சு !
இவ்வளவு சொல்லிட்டு மெனுவைச் சொல்லலைன்னா எப்படி ? 



Naan, Kushka,  Kadai Paneer, Gopi Manchurian, Kofta Curry,  Veg Pasta with white Sauce,  Raita, Yum yum Fry,  Sweet Bread Halwa, Bhoondhi Laddu, Tea, Soft Drinks, Corn, Potato Chips. 

இப்படி ஒரு அருமையான நண்பர்கள் அமைய என்ன தவம் செய்தோமோ !!!

நடத்திக்கொடுத்த எம்பெருமாளுக்கு 🙏🙏🙏🙏🙏


12 comments:

said...

மகிழ்ச்சியான நாளை சிறப்பாக கொண்டாடி இருக்கிறீர்கள்.  இனிய திருமண வாழ்த்துகள்.  நமஸ்காரம்.

said...

வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்! இன்று போல் என்றும் வாழ்க. உங்கள் வாசகர் கடந்த 10 வருடங்களாக

said...

50 - மனம் நிறைந்த வாழ்த்துகள். வரும் எல்லா நாட்களும் சிறப்பாக அமைந்திட எம்பெருமானின் பூரண அருள் கிடைக்கட்டும்.

said...

வாழ்த்துகள்
வாழ்க வளமுடன், நலமுடன்.

said...

வாங்க ஸ்ரீராம்,

வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி! எங்கள் அன்பும் ஆசிகளும் இத்துடன் ~

said...

வாங்க தெய்வா,

உங்க வாழ்த்து பார்த்து ரொம்பவே மகிழ்ச்சிப்பா !

எங்கள் அன்பும் ஆசிகளும் இத்துடன் !

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

தங்கள் அன்புக்கு எங்கள் அன்பும் ஆசிகளும் ! நல்லா இருங்க !

said...

வாங்க விஸ்வநாத்,

மிகவும் நன்றி ! எங்கள் அன்பும் ஆசிகளும் இத்துடன் !

said...

ரொம்ப சந்தோஷம். 50 வருடங்கள் நிறைய பயணங்களுடன் கூடிய நெடிய பயணம். உங்கள் மனதுக்குப் பிடித்தமாதிரி எல்லாக் கோவில் தரிசனங்களுக்கும் போய்ட்டு வந்திருக்கீங்க (கூட்டிட்டுப் போயிருக்கார்). வாழ்க்கைப் பயணத்தில் தொடர்ந்து செல்ல என்னுடைய ப்ரார்த்தனைகள்.

said...

இனிய 50 திருமணநாள் வாழ்த்துகள் இறையருளால் இனிய இல்லறம் பலகாலம் தொடர வாழ்த்துகள்.
வாழ்க நலமுடன் .

said...

வாங்க நெல்லைத் தமிழன்,

உங்கள் ப்ரார்த்தனைகளுக்கு நன்றி !

பயணங்கள் முடிவதில்லை தானே ?

said...

வாங்க மாதேவி,

வாழ்த்துகளுக்கு நன்றிப்பா !