Friday, June 21, 2024

தீவுத் திடல் மாதிரி இருக்குல்லே ? (அலாஸ்கா பயணத்தொடர்...... பாகம் 5 )

இங்கெ இருக்கும்  லோகல் டூர் கம்பெனிகள் ஒன்னுவிடாமக் கூட்டிப்போய்க் காமிக்கும் குட்டித்தீவு இந்த  க்ரான்வில் தீவு.  எப்படிப் பார்த்தாலும்  கூடிவந்தால் நாப்பது ஏக்கர் பரப்பு. சரியான அளவைத் தெரிஞ்சுக்க வலை வீசுனால் ஆளாளுக்கு 35, 37, 38, 39 னு சொல்லிக்கிட்டு இருக்காங்க.  
முந்தி தொழிற்பேட்டையா இருந்த இடத்தை,  நகரின் வீட்டுவசதி வாரியம் வாங்கிப்போட்டுருச்சு.  இப்போ பெரிய மார்கெட், தியேட்டர், சின்னச் சின்ன கொல்லன் பட்டறைகள், தொழில்கள்.....   துடைப்பக்கட்டை கம்பெனி கூட இருக்குன்னா பாருங்க !

'ஒரு நாள் முழுக்க வேணுமுன்னாலும் சுத்திப்பார்க்க  ஏராளமான சமாச்சாரம் இருக்கு இங்கே !  ஆனால் உங்களுக்கு ஒரு  ஒன்னேகால் மணி நேரம் தர்றேன். சுத்திப்பார்த்துட்டு, சாப்டவேணுமுன்னாலும்  சாப்ட்டுவாங்க. எக்கச்சக்கமா ரெஸ்ட்டாரண்டுகள் இருக்கு'ன்னு சொல்லி நம்மை இறக்கிவிட்டார் கைடு. 
வண்டியை இங்கே நிறுத்த முடியாது. வெளியில்  போய் நிறுத்திட்டு அப்பாலிக்கா வரேன்னார். பார்க்கிங் சார்ஜ் ரொம்ப அதிகமோ என்னவோ.....  
இறக்கிவிட்ட இடத்தை அடையாளம் வச்சுக்கணும் இல்லே ? க்ளிக் க்ளிக்....



பழைய ஃபேக்டரி  ஷெட்களையே  கடைகளா மாத்திட்டாங்க போல.....   அதுபாட்டுக்கு நீள நீளமா  கிடக்கு.

ட்ரங்கு பொட்டிமேலே உக்கார்ந்துருக்கும் சூனியக்காரியும் அவள் பூனையும் சூப்பர், விலையைத்தவிர !


கண்ணாடிப்பொருட்கள் அழகோ அழகு. க்ளிக்  க்ளிக் போதும்.

ஓசைப்படாமல் ரகசிய சேதி சொல்லும் கற்கள் ! டக்னு பார்த்தால்  சிவலிங்கம்னு தோணுச்சே..... எனக்கு மட்டும்தானா ? 








வேடிக்கை பார்த்துக்கிட்டே நடந்து போறோம்.  பப்ளிக் மார்கெட்னு ஒன்னு.
சட்னு உள்ளே நுழைஞ்சால்....மீன்களாக் கொட்டி  வச்சுருக்காங்க. சால்மன் மீன்கள்தான் இந்தப் பக்கம் ஸ்பெஷலாம் ! இருக்கட்டும். 

அடுத்த பகுதியில் பழங்கள் !  கண் முதலில் போனது மாம்பழத்தாண்டைதான் ! ஹைய்யோ.... எத்தனை வகை!!!!  ஆனாலும் நம்மூர் சக்கரைக்கட்டி பார்த்துட்டு விடமுடியுதா ?  விலைதான் கொஞ்சம் பயங்கரம் ! ஷுகர்  மேங்கோ ! பவுண்டு (வெறும் 454 கிராம். அரைக்கிலோகூட இல்லை ) பனிரெண்டு டாலர் !  இதுக்குமேல் வரிகள் தனியாகச் சேர்க்கிறாங்க.

கனடியன் காசு எங்க காசைவிட கொஞ்சூண்டு பலமா இருக்கு.  ஒரு டாலருக்கு, நாங்க 1.20 $ கொடுக்கணும். இன்னொன்ணு.... இவுங்க டாலர் நோட்டுகளும், எங்க டாலர் நோட்டுகளும் ஒரே மாதிரி கலரில்தான்.  எங்களைப்போலவே அவுங்களும்  மாட்சிமைதாங்கிய ப்ரிட்டிஷ் அரசாட்சியைச் சேர்ந்தவர்களே !  (ஆஸியிலும் எல்லாம் இப்படியே! நாங்க மூவரும் ஒரு வகையில் ஒன்னு ! நாட்டின் தலைமை கவர்னர் ஜெனெரல்தான் ! )

அடுத்த ஜன்மம் இல்லை என்பதால் துணிஞ்சு ரெண்டே ரெண்டு குட்டி மாம்பழம் வாங்கினோம். மற்றபடி பழங்கள் வகை எல்லாம் தனித்தனியாகவும், கலந்துகட்டியுமா   டப்பாக்களில்  கூறு கட்டி வச்சுருக்காங்க.  நம்ம ஊரில் இருப்பவைகள்தானேன்னு அலட்சியமாக் கடந்து போனோம்.

பூக்களும் செடிகளும் விற்பனைக்கு ! நம்ம சக்கூலண்ட்,  கல் குடைஞ்ச கிண்ணத்தில் ! விலையைப் பார்த்தீங்களோ !!!  நம்மாண்டை இருக்கு,  அந்தக் குழிச்ச கல்லைத்தவிர ! 

சந்தடிசாக்குலே.... 'நம் வீட்டு சக்கூலண்டுகளுக்கு எல்லாம் என்ன விலை வருமுன்னு கணக்குப்போட்டுப் பாருங்க. அப்பதான் நம்ம செடிகளின் அருமை உங்களுக்குத் தெரியும்' நம்மவராண்டை சொன்னேன். பொழுதன்னிக்கும் எதுக்குமா செடிம்பார்.

புளியம்பழம்............ ச்ச்ச்ச்.....
பாம்புத்தோல் பழம்...... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..... (பாலிப் பயணத்துலே தின்னு பார்த்தாச் !)
சொடக்குத்தக்காளி...........  நம்ம வீட்டுலே செடி இருக்கு:-)
மளிகைசாமான்.............
இவ்ளோ கடைகள் இருக்கே.... நமக்கொரு சின்னக் கத்தி வாங்கிக்கலாமுன்னு பார்த்தா..... அதைத்தவிர வேறென்னன்னவோ இருக்கு.






மற்ற கட்டடங்களில்  வழக்கமான கடைகள்தான்.  நேரம் ஆகிருச்சுன்னு நம்மை இறக்குன இடத்துக்குப் போனால் பஸ் இன்னும் வரலை. 

 கொஞ்சதூரத்துலே   ஒரு ரெஸ்ட்டாரண்ட். 'Dockside' னு பெயர்.  ஃபயர்பிட்டில் தீ !  அங்கெபோய் உக்கார்ந்தோம். குளிருக்கு இதம்!
நம்ம பஸ் மக்களும் திரும்பி வந்துக்கிட்டு இருந்தாங்க. பஸ்ஸும் வந்துருச்சு. ச்சலோ !    

தொடரும்........... :-)



12 comments:

said...

// துடைப்பக்கட்டை கம்பெனி கூட இருக்குன்னா பாருங்க  //

ஹா..  ஹா..  ஹா...

said...

இறக்கி விட்ட இடத்தை அடையாளம் வச்சுக்க க்ளிக் கிளி நல்ல ஐடியா..   இங்கே எப்படியோ, சில இடங்களில் திரும்ப வந்து பார்க்கும்போது எல்லா இடமும் அதே போல ஒரே மாதிரி இருப்பது மாதிரி தோன்றும்!

said...

மீன்கள் கொட்டி வச்சிருக்குன்னு சொல்லி அந்தப் படத்தை போதாததற்கு ஸ்பெஷல் காரணம் ஏதாவது உண்டோ?!!

said...

அனைத்தும் சிறப்பு. தொடரட்டும் பயணம்.

said...

அருமை நன்றி

said...

வாங்க ஸ்ரீராம்,

அதுக்குத்தான் க்ராஸ் செக் பண்ணிக்கறதுபோல இந்தப்பக்கமும் ஒரு க்ளிக் பண்ணிக்கணும்.

மீன்களைப் பார்த்தும் க்ளிக்கணுமுன்னு தோணலை. சட்னு நகர்ந்துட்டேன்.

துடைப்பக்கட்டை...ஹாஹா

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

வருகைக்கும் கருத்திற்கும் மிகவும் நன்றி !

said...

வாங்க விஸ்வநாத்,

மிகவும் நன்றி !

said...

மர கைவினைப் பொருட்கள் நன்றாக இருக்கின்றன.

அந்த செடி.......காப்பி செடியோ ?

said...

கைவினைப் பொருட்களும் கலைநுணுக்கமும் அற்புதம். நீங்கள் குறிப்பிடுவது போல விலைதான் எக்கச்சக்கம். வாங்குவாரும் உளரே! செடிகள் பற்றிக் குறிப்பிட்டிருப்பதும் உண்மை. நானும் இப்படிதான் கடையில் விற்கும் செடிகளின் விலையோடு வீட்டில் குட்டிப்போட்டு வளர்க்கும் செடிகளை ஒப்பிட்டு மனசைத் தேற்றிக்கொள்வேன். :)

said...

வாங்க மாதேவி,

ஆஹா.... காப்பிச் செடியேதான் !

said...

வாங்க கீதமஞ்சரி,

நலம்தானே ? ரொம்ப நாளாச்சே உங்களைப்பார்த்து !!!!

நாம் அதிகமா செலவு செய்யறதில்லைன்னு ரங்ஸ்களுக்கு வேறெப்படி காண்பிக்கறதாம் !!!

ஹிஹி.....