Monday, January 10, 2022

அட ! இவ்ளோவா !!!! ( மார்ச் & ஏப்ரல் 2021 )

மற்ற நாடுகளைப்போல் கொரோனா பாதிப்பு ரொம்பவே அதிகமில்லை என்றாலும், அரசு எடுத்த துரித நடவடிக்கையால்  ஓரளவு கட்டுக்குள் கொண்டு வந்துருந்தாங்க.  லெவல் ஒன்னு முதல் நாலுன்னு வச்சுக்கிட்டு அப்பப்ப  லெவலுக்கு லெவல் தாவிக்கிட்டு இருந்தோம்.  பரமபதம் விளையாட்டேதான்.   என்ன ஒன்னு... ஏணியே இல்லாத பரமபதம்.  சின்னதும் பெருசுமா இருக்கும் பாம்புகளின் வாயிலே விழுந்துக்கிட்டே இருக்கணும்.
ஒரு லெவலில்  முழுசா வீடடங்கணும்.  சூப்பர் மார்கெட், மருந்துக்கடைக்குப் போகலாம்.   வீட்டுக்கொரு ஆள் மட்டும்.  இதுலே ஒரு கஷ்டம் என்னன்னா.... அந்த வீட்டுக்கொரு ஆள், கடைக்குள்ளே போனால்... தேவையில்லாத ஐட்டங்கள்,  நாம் வழக்கமா வாங்கும் ப்ராண்டை தவிர்த்து, ருசி இல்லாத ப்ராண்ட்ன்னு  கண்டதும்   வந்து சேரும்.   சனமோ....  Panic buyingலே இருக்கு. இவரும் அந்தக் கூட்டத்துலே கலந்துருவார். நாட்டு எல்லைகளை மூடிட்டதால் வெளியே இருந்து வரும் பொருட்கள் எல்லாம் தீர்ந்துபோய்  காலியா இருக்கும்  ஷெல்ஃபுகளோடுதான் சூப்பர்மார்கெட்டே .  இதுக்கிடையில்  யாரோ கொரோனா இருக்கும் ஆள் உள்ளே வந்துட்டுப் போயிருக்கார்னு கண்டுபிடிச்சால் அவ்ளோதான்.  சுத்தப்படுத்தறோமுன்னு  கடையை மூடி வச்சுருவாங்க. சாவு வீட்டைக் கழுவிவிட்டமாதிரின்னு சொல்லலாம்.

வெளிநாட்டில் இருக்கும் நியூஸி மக்கள், வீடு எப்படித் திரும்பறதுன்னு யோசிச்ச அரசு,  அவுங்க வந்தவுடன் ரெண்டு வாரத்துக்குத் தனிமைப்படுத்தி வைக்கன்னு  நிறைய ஃபைவ் ஸ்டார் ஹொட்டேல்களை ஏற்பாடு பண்ணிருச்சு. எல்லாம்  அரசு செலவில் வேற !   அரசுக்குன்னு ஏது காசு ? எல்லாம் நம்ம வரிப்பணம்தான்.  உள்ளே சகல வசதிகளும் இருந்தாலும்  சில வேலிதாண்டிய ஆடுகளும்  இருந்ததுதான் பிரச்சனை. போரடிக்குதேன்னு  யாருக்கும் தெரியாம ஊருக்குள் போறது, போற போக்கில் சூப்பர்மார்கெட் (அது மட்டும்தானே திறந்துருக்கு) உள்ளே போய்  எதாச்சும் வாங்கறதுன்னு....  போதுண்டா சாமி.  தப்பி ஓடி வந்த ஆடு, திரும்ப  ஹொட்டேலுக்குள் போகும்போது  வகையா அகப்பட்டுக்கும்.  உடனே அது போய் வந்த இடங்களையெல்லாம்  தீட்டு கழிக்கன்னு  மூடிவச்சுச் சுத்தம் செய்யணும், அங்கே வேலைபார்க்கும் எல்லாரையும் பிடிச்சு வச்சுப் பரிசோதிக்கணுமுன்னு ஏகப்பட்ட கலாட்டா. கூடவே செலவும்....

மார்ச் மாசம்  சிவராத்ரி பண்டிகை. இப்ப சில வருஷங்களா, நம்ம வீட்டிலும் சின்ன அளவில் சிவராத்ரி கொண்டாடுறோம். ஜோதிர்லிங்கம் ஒன்னு  வச்சுருக்கேன். ச்சும்மா  விட்டுவைக்க முடியுமோ ? நம்ம நந்தி பகவான்வேற  நம்மாண்டை பத்து வருஷமா இருக்கார். சண்டிகர் வாழ்க்கையில் நம்மோடு ஒட்டிக்கிட்டவர். லெவல் அனுசரிச்சு கோவிலும், நம்ம சநாதன தர்ம சபாவும்  திறக்கறதும் மூடறதுமா அதொருபக்கம்.  சான்ஸ் கிடைச்சாப் போய் கும்பிட்டுக்கணும் என்ற லெவலில் நாங்க.  இல்லைன்னா.... வீட்டுலேயே கொண்டாடிக்குவோம்.
  
போனவருஷம்  (2020 )கொரோனா  வந்த சூட்டோடயே ஆன்லைன்  கொண்டாட்டங்களும் பூஜை புனஸ்காரங்களும்  ஆரம்பமாயிருச்சுல்லே!    Zoom Zoomனு  சாமி கும்பிட்டுக்கிட்டு இருந்தோம்.

சிவராத்ரி முடிஞ்ச கையோடு நம்ம ஃபிஜி தென்னிந்திய ஐக்கிய சங்கம், மாரியம்மன் கோவில் ஒன்னு கட்டும் மும்முரத்தில் இருந்தவங்களுக்கு, நண்பர் ஒருவர், தன்னுடைய பண்ணை நிலத்தின் ஒரு பகுதியில் கோவில் கட்டிக்கச் சொல்லிட்டார். தாற்காலிகமாகத்தான்.  தனி நிலம்  அமைஞ்சதும்  கோவிலை இடம் மாற்றிக்கணும்.  அதுக்கான பூமி பூஜைக்குப் போயிட்டு வந்தோம்.  நம்ம ஊர் எல்லையைத் தாண்டி அடுத்த சிற்றூரில் இருக்கு இந்தப் பண்ணை. நம்ம வீட்டில் இருந்து ஒரு 22.5 கிமீ தூரம். இங்கெல்லாம் இது ஒரு தூரமே இல்லை. புதுசாப் போட்டுருக்கற ஹைவேயில் போனால் 21 நிமிஷப்பயணம்தான்.
நம்மவர் பூமிப் பூஜைக்காக  வாழ்த்து தயாரிச்சார் :-)  நம்ம பண்டிட் வந்து  தீவளர்த்துப் பூஜையை நல்லபடி நடத்திக் கொடுத்தார். 
 

இதுக்கிடையில்  நம்ம வீட்டுக் கன்ஸர்வேட்டரியைக் கொஞ்சம் வேறமாதிரி  மாத்தியமைக்கலாமுன்னு ஜனவரி பொறந்த கையோடு ஏற்பாடு பண்ணி இருந்தோம். பழசின் ஸன் ரூஃப் இந்தப் பதினைஞ்சு வருஷத்தில்  ஆலங்கட்டி மழைகளால்  ஓட்டை விழுந்து ஒழுக ஆரம்பிச்சுருந்தது.  மார்ச் மூணாம் வாரம்னு சொல்லி, 24 ஆம் தேதி வேலையை ஆரம்பிச்சாங்க. மூணுநாள் வேலை என்றதால் 26க்கு முடிஞ்சுருமுன்னு எண்ணம்.   30 ஆம் தேதி நமக்கு முக்கியமான ஒருநாளாகப் போகுது.  'நம்மவருக்கு' கண்ணில்  IOL பொருத்தறாங்க.  அதுவும் நாலு வாரம் தொடர்ந்து சொட்டு மருந்து போட்டால்  ஆச்சு, இல்லை ?  நினைப்பெல்லாம் பொழைப்பைக் கெடுக்கப்போகுதுன்னு அப்போத் தெரியலையே..............
உகாதியும் விஷுவும் ஒரே நாளில். சந்திரனும் சூரியனும் ஒன்னாவே  வந்துருக்காங்க. பாம்பு அடங்கி இருந்த நாளில் கொஞ்சம் சிம்பிளா  நம்ம கேரளா க்ளப் விஷுக் கொண்டாட்டம் நடத்திக்கிட்டோம். ச்சும்மா ஒரு மூணு நாளுக்கு முன்னாலேயே....  அது பரவாயில்லை.... வரப்போகும் வருஷத்துக்கான வரவேற்புதான், இல்லையோ ! எப்பவும் ஈஸ்டர் பண்டிகையையும் விஷுவையும் கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும்சேர்த்தேக் கொண்டாடுவதுதான் எங்க கேரளா க்ளப் மரபு :-)
 
சின்னப்பிள்ளைகளை  ஈஸ்டருக்கான முட்டைகளை அலங்கரிக்கும் போட்டியில் கலந்துக்க வச்சுப் பரிசுகள் கொடுத்தோம். நீதிபதி யார்னு தனியாச் சொல்ல வேணாம்தானே ? :-) 

அன்றைக்கே... நம்ம தமிழ்ச்சங்கத்திலும் சித்திரை புதுவருஷக்கொண்டாட்டம் வச்சுருந்தாங்க. இந்த ரெண்டு சங்கங்களும் நாம் முன்னின்று ஆரம்பிச்சதே ! இதைத்தவிர ஊரின் மிகப்பெரிய  சங்கமான, இண்டியன் சோஷியல் & கல்ச்சுரல் க்ளப்பை ஆரம்பிச்சதும் நாம்தான். இந்த ஊரில் முதல்முதலாக் குடியேறின  தென்இந்தியர் (குறிப்பாத் தமிழ்நாடு ) நாம் என்பதால்  எல்லாத்துலேயும்  நம்ம கைங்கர்யம் இருக்கு :-)  ஆச்சு கால் நூற்றாண்டுக்கும் மேலே.... நல்லபடி நடந்துக்கிட்டு இருக்குன்றதே ஒரு மனத்திருப்திதான்.  சமூகத்துக்கு சேவை செய்யலைன்னு.... யாரும்   சொல்லமாட்டாங்கதானே ? 



அசல் விஷு உகாதி நாளில் நம்ம வீட்டில் வழக்கம்போல் கணிகண்டு,  பாலடைப்ரதமனோடு கூடியொரு ஆஹோஷம். விஷேச அலங்காரமாய் நிறபரையும் நிலவிளக்கும் கூடாதெ, மண்ணுருளியைப் பொன்னுருளியாக்கி :-)




 
மறுநாளே தமிழ்வருஷப்பொறப்பு.... சித்திரை ஒன்னு ! அடுத்தடுத்துப் பண்டிகைன்னா..... சிம்பிளாத்தான் விருந்து  சமைக்கணும். எடுத்துக்கட்டிச் செஞ்சால் தின்னு தீர்க்கப் பெருமாளால் ஆகுமோ ?  போளி செஞ்சு, சோளம்  அவிச்சேன். வீட்டு வெத்தலையோடு தாம்பூலம் தந்து வருஷப்பொறப்புக்கு வரவேற்பு ஆச்சு :-)

தொடர்ந்து வந்த சனிக்கிழமை, நம்ம புள்ளையார் கோவில் சத்சங்கத்தில் தமிழ்ப்புத்தாண்டு !  பண்டிட் வெலிங்டன் நகரில் இருந்து வந்துருந்தார்.

வழக்கத்தில் இல்லாத வழக்கமா ஸ்ரீராமநவமி, ரொம்பத் தாமதமா வந்தது இந்த வருஷம் . எனக்கு ரொம்பவே பிடிச்ச பண்டிகை இது. ப்ரஸாதம் செய்ய மெனெக்கெடவே வேணாம். நீர்மோரும் பானகமும் போதும் நம்ம ராமருக்கு ! நம்ம  நெருங்கிய தோழி மருத்துவர்  பத்மா அரவிந்தின் அன்பளிப்பான ஸ்ரீ ராமர் & கோவுக்கு உபச்சாரம் ஆச்சு. எதிர்பாராத விதமா நம்ம எழுத்தாளர் தோழி வித்யா சுப்ரமணியம் அவர்களின்  திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவனும், ஸ்ரீ குருவாயூரப்பனும்   ஸ்பெஷல் வருகை புரிந்தனர் !  ஹைய்யோ ! பூஜை அறையே  இன்னிக்குப் பிரகாசமா இருந்தது !
அடுத்த நாளே நம்ம மாரியம்மன் கோவில் கட்டி முடிச்சு ஆரம்ப விழாவா நாலு நாட்கள் கொண்டாட்டம்.  கோவில்னு சொன்னதும் ப்ரமாண்டமாக் கற்பனை பண்ணிக்க வேணாம். ஒரு பூஜை அறை மாதிரிதான்.   அம்மன் வந்து உக்கார ஒரு இடம் ! இனி அவளே பார்த்துக்குவாள் இல்லையோ !  முதல்நாள்   தீவளர்த்து ஹோமம் பண்ணிக் கோவிலின் கருவறையை ரெடி ஆக்கினோம். மறுநாள் கொடியேற்றம். அதுக்கடுத்தநாள் கிரகங்கள் அலங்கரிச்சு வச்சோம். கடைசிநாள் அம்மன் பிரதிஷ்டை, கூழ் ஊற்றுதல் எல்லாம் அமோகமா நடந்தது.  ஆக்லாந்து நகரில் இருந்து பூசாரி ஐயா வந்து நடத்திக்கொடுத்தார் !


வட இந்தியர்களுக்கான  ஹனுமன் ஜயந்தியும்  சித்திரை மாசத்தில்தான்.  தமிழ்நாட்டுலே நாம் மார்கழி மாச மூல நட்சத்திர நாளில் கொண்டாடறோம். நம்ம ஆஞ்சிக்கு எத்தனைமுறை கொண்டாடினால் என்னன்னு நம்ம வீட்டிலும்  சுமாராக் கொண்டாடினோம்.


இப்படி மார்ச் & ஏப்ரல் மாசங்கள் ஓடியே போச்சு !






































10 comments:

said...

அருமை நன்றி

said...

சிறப்பான விழாக்கள்.

said...

அது செரி. துளசி அம்மா வீட்ல எல்லா நாட்களும் அமோகம் தான்.
எத்தனை அழகான படங்கள் துளசி.!!

இந்த பாசிடிவ் எனர்கி இருக்கும் போது நோயும் நொடியும்
அண்டாது. அதுதான் நிச்சயம்.
மாரியம்மா மஞ்சள் கலர் கோவிலில் மின்னுகிறாள்.
நூஸியின்
ஆகச் சிறந்த தம்பதியருக்கு நல வாழ்த்துகள்.

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி!

said...

வாங்க மாதேவி,

நன்றிப்பா !

said...

வாங்க வல்லி,

உங்கள் அன்புக்கும் ஆசிகளுக்கும் நன்றி !

said...

அருமை...

said...

கொண்டாட்டங்கள் அனைத்தும் சிறப்பு. படங்கள் ரசிக்கும்படியாக இருந்தன. பாராட்டுகளும் வாழ்த்துகளும். கொண்டாட்டங்கள் தொடரட்டும்.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

வருகைக்கு நன்றி !

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

ரசனைக்கும் கருத்துக்கும் நன்றி. என்னதான் அநேகமா எல்லோருடைய வாழ்க்கையையும் இந்தக் கொரோனா , திருப்பிப்போட்டாலும் நாமும் எதையும் விடாம இருக்கக் கத்துக்கிட்டோம் இல்லை !!!!