Tuesday, July 28, 2020

இலையே மலராய்...........

ரொம்ப வருஷமா அந்தத் தெருவில் போறப்பெல்லாம் கண்ணுலே விழுந்துக்கிட்டு இருந்தது  ஒரு செடி. வாசல் ஃபென்ஸ் பக்கத்திலே கட்டைச்சுவரையொட்டி..... அந்த வீட்டைக் கடக்கும்போதெல்லாம்  அதுக்கு என்ன பெயரோன்னு நினைப்பேன்.
போன வருஷம்தான் ஒரு நாள் அந்தப் பக்கம் போகும்போது,  வண்டியை நிறுத்தச் சொல்லி  ஒரு படம் க்ளிக்கினேன்.  கார்டன் சென்டருக்குப் போகும்போது அதைக் காமிச்சுக் கேக்கணுமுன்னு  எண்ணம்.  வேறேதோ வாங்க  ஒரு பெரிய ஹார்ட்வேர் கடைக்குப் போயிருந்தோம்.

எனக்கு  ஹார்ட்வேர் கடைகள் ரொம்பவே பிடிக்கும் ! கத்தி, சுத்தின்னு  இல்லாம  க்ராஃப்ட்,  லைட்டிங்ஸ், செடிகள், பூந்தொட்டிகள்,  வாட்டர் ஃபௌன்டெய்ன் இப்படி நிறைய  இருக்கும். நம்ம வீட்டு  வாழைமரம் கூட இந்தக் கடையில்தான் வாங்கினோம். ஆச்சு 15  வருஷம் !
எப்பப் போனாலும் செடிகள் பகுதியில் ஒரு சுத்து சுத்தாம வரமாட்டேன்.  அன்றைக்கும் அதே போல் சுத்தப் போனால்  நான் தேடும் செடி  வச்சுருக்காங்க.    அப்பதான் அதுக்கு என்ன பெயர்ன்னே தெரிஞ்சது.  Leucadendron.   இதுலே பெருசும் சிறுசுமா ரெண்டு வகை  இருந்துச்சு. நான் சின்ன சைஸ் ஒன்னு வாங்கினேன். எல்லாம் இது போதும். நாலைஞ்சு நிறங்களில்  உண்டுன்னாலும்,  ஒவ்வொன்னா சேகரிக்கலாம். மொதல்லே இது ஒழுங்கா வருதான்னு பார்க்கலாம். 
நாம் வாங்கியது Leucadendron Harvest NZ. லேசான மஞ்சள் (க்ரீம் கலர்) போன வருஷம் செப்டம்பரில் வாங்கியது.  ஆச்சே பத்து மாசம். கொஞ்சம் பெருசா வளர்ந்துருக்கு.  கட் ஃப்ளவர், பொக்கே வகைகளில் வச்சு அலங்கரிக்கலாமாம். தென் ஆப்ரிக்கா  சமாச்சாரம் !


மொட்டு வரும்போது அசப்பில் கொஞ்சம்  நம்ம  மனோரஞ்சிதம் போல....... ஆனால் அதைப்போல கீழே பார்க்காமல்  மேல் நோக்கிப் பார்க்குது !
Leucadendron என்றது குடும்பப்பெயர் போல !   இதுலே ஏகப்பட்ட வகைகள்.
ப்ரோட்டீயா செடிகளும் இந்தக் குடும்பம்தானாம்! 




17 comments:

நெல்லைத் தமிழன் said...

செடிகளின் படங்கள் அருமை. நான் இப்போதுதான், கற்பூரவல்லி, துளசி, ரோஜா என்று ஆரம்பித்திருக்கிறேன்.

Abinaya said...

nice sir.

ராமலக்ஷ்மி said...

மிக அழகு.

Anuprem said...

Leucadendron- அழகாய் இருக்கிறது

வெங்கட் நாகராஜ் said...

நல்ல தகவல்கள். எனக்கும் பால்கனியில் செடிகள் வைத்து வளர்க்க ஆசை உண்டு. பார்க்கலாம் எப்போது செயல்படுத்துவேன் என! :)

kannan said...

நல்வாழ்த்துகள்

மாதேவி said...

அழகு. வீட்டுத்தோட்டம் மனதுக்கு மகிழ்ச்சி.

Jayakumar Chandrasekaran said...

https://www.youtube.com/watch?v=sn4eryjFHVo&t=29s

Jayakumar

Jayakumar Chandrasekaran said...

Nothing to blog?

துளசி கோபால் said...

வாங்க நெல்லைத் தமிழன்,

செடிகள் நன்றாக வளரட்டும் !

துளசி கோபால் said...

வாங்க அபிநயா,

நன்றி !

துளசி கோபால் said...

வாங்க ராமலக்ஷ்மி,

நன்றிப்பா !

துளசி கோபால் said...

வாங்க அனு ப்ரேம்,

நன்றீஸ் !

துளசி கோபால் said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

ரோஷ்ணி கையால் ஒரு செடியைக் கொண்டு வந்து பால்கனியில் வையுங்க. வளர்ற பிள்ளையின் கையால் வாங்கினால் அமோகமா வளரும்!

துளசி கோபால் said...

வாங்க கண்ணன்,

நன்றி !

துளசி கோபால் said...

வாங்க மாதேவி,

வீட்டுத்தோட்டம் மகிழ்ச்சியே என்றாலும், குளிர்காலத்தில் அங்கே நின்னு ஒரு வேலையும் செய்ய முடியறதில்லையேப்பா....

துளசி கோபால் said...

வாங்க ஜயகுமார்,

கொரோனா எல்லோரையும் முடக்கிப் போட்டுருச்சே... இந்த வெள்ளி முதல் மறுபடி ஆரம்பிக்கும் எண்ணம். முதலில் வாரம் ஒன்னுன்னு தொடங்கணும்.

வருகைக்கு நன்றி !