Monday, July 20, 2020

வீட்டு(லே இருந்து ) வேலை...............

வணக்கம் நட்புகளே!

இந்தக் கொரோனா நாட்களில் எல்லோரும் எப்படி இருக்கீங்க ?

ஒரு விஷயம் உங்களோடு கேட்கலாமுன்னு இருக்கேன்.

நம்மில் பலர் இந்த Work From Home வகையில் இருப்பாங்க.

வெளியில் வேலைக்குன்னு போகாம வீட்டுலேயே ஹோம் மேனேஜரா இருக்கறவங்க வேற வகை. வருஷம் 365 நாட்களும் (லீப் வருஷமா இருந்தால் 366) வேலை வேலை வேலைதான். இதுக்குச் சம்பளம் எல்லாம் கிடையாது. தொலையட்டும்.    ஒரு நன்றி விசுவாசம்....  ஊஹூம்.......

போகட்டும், இப்போ பாய்ன்ட்டுக்கு வர்றேன்.

கொரோனா நாட்கள் எல்லாம் முடிஞ்சபிறகு.....

இந்த WFH என்பதை எத்தனை பேர் விரும்புவீங்க ?

ஆண்களைக் கணக்கில் எடுத்துக்கலை....  அவுங்களுக்கு எப்படியாவது வீட்டை விட்டுத் தொலைஞ்சால் போதுமுன்னுதான் இருக்கு என்பது 'அனுபவம்' :-)  விதிவிலக்காக இருப்பவர்கள், உங்கள்  கருத்து சொல்லுங்க....

பெண்கள் ஆஃபீஸ் வேலையையும் பார்த்துக்கிட்டு, வீட்டில் இருப்பதால் கூட எக்ஸ்ட்ரா வேலைகளையும் பார்த்துக்க வேண்டி இருக்கு. நம்ம சமூக அமைப்பு அப்படி.

அழுதாலும் பிள்ளை அவள்தான் பெறவேண்டும் வகை ....

இந்த WFH பற்றி மகளிடம் கேட்டேன். எஸ்ஸன்ஷியல் சர்வீஸ் வகையில் அவள் இருப்பதால் கொரோனா நாட்களில் வீட்டில் இருந்துதான் வேலை.
அவள் இதிலுள்ள சாதகம், பாதகங்களை ச் சொல்லி இருக்காள். அவள் சொன்னது இது.

Pros & Cons from her view.

Hi ma,

I like working from home, if I had a choice when everything gets back to 'normal' I would opt for 3 days at work and 2 days at home at least but that won't happen.

Pros of working from home:

- Comfortable clothes

- no need to get dressed if you don't want to, including makeup

- don't have to get up as early

- no need to find a park

- you can choose the temperature

- you can choose the lighting level

- not as noisy

- you can listen to anything you want or nothing at all

- can look out the window

- can open windows/doors for fresh air flow

- can take breaks when you need to, don't have to work around others (at work we need someone at our pod at all times)

- can sit outside for lunch and/or breaks

- easier to get some sunshine

- can diffuse oils or candles

- can be more flexible with hours

- can work extra after dinner or on weekends if you want to

- no need to pack lunch and snacks

- better work life balance

- no commute time to and from work

- save petrol

- can have a shower in your lunch break (I did today )

- Jupiter cuddles

Cons of working from home:

- no office banter

- no printer

- don't have access to everything on the systems (this hasn't been a problem so far though)

- using more electricity with computer and heating

- need to remember to get up often and walk around.(At office I would be walking to the printer all the time, etc)

That's all I can think of at the moment. Let me know if you want me to expand on anything.

உங்க கருத்துக்களைச் சொல்லுங்க.

என் கருத்து :  பெண்கள் வெளியே வேலைக்குப் போனால்தான் ஓரளவு  ரெஸ்ட் கிடைக்கும்.  வீடு திரும்பியபின்  விட்டுப்போனதையெல்லாம் செஞ்சு முடிக்கணும் என்றாலும்   குறைந்தபட்ச ஓய்வு வெளியில்தான் ! 

7 comments:

said...

வெளியில் வேலைக்குப் போனால்தான் ரெஸ்ட் கிடைக்கும் என்பது உண்மைதான். ஆண்கள் வேலைக்குன்னு வெளில போயிட்டு வந்தால்தானே வீட்டில் பெண்களுக்கு நிம்மதி. பொழுதன்னைக்கும் வீட்டிலேயே உட்கார்ந்திருந்தால்?

said...

flexible work timings,
casually can be dressed,
timely home food,
no need to give false smiles,
more concentration on work

I dont see any disadvantage - as I do work from home for last 3 years and will continue.

said...

பெண்களுக்கு தொல்லை கூடுதல்தான்...

said...

உண்மையில் வீட்டிலிருந்து வேலை என்பது கொடுமைதான். அண்மைய லாக் டவுனில் அண்ணா பிள்ளை வீட்டிலிருந்து அலுவலக வேலை செய்த போது பார்த்துக் கொண்டிருந்தேன். நேரம் காலம் கிடையாது. மதிய உணவு நேரத்திற்கு கூட குறிப்பிட்ட அவகாசம் இல்லை. ஈ மெயில், மீட்டிங்க், அப்டேட்டிங், பணியாளர்களை அழைத்து செய்து முடித்திருக்கும் அல்லது செய்யப்போகும் வேலை குறித்து ரிப்போர்ட் தயாரிப்பது, மறுபடியும் ஈ மெயில், மறுபடியும் மீட்டிங்.... இதில் மீட்டிங் இருப்பது தெரியாமல் லாக் டவுனில் நீண்ட நேரம் தூங்கிக் கொண்டிருந்த சக அலுவலக நண்பர்களை தட்டி எழுப்பி, "மீட்டிங் ல வந்து உட்காருப்பா.." என்று சொல்வது வரை செய்தார். (எதுவும் மிகையல்ல. அத்தனையும் நடந்தது). இதில் வீட்டிலிருந்த நாங்கள்... நோ டிவி, மீட்டிங் போகும் நேரம் நோ குக்கிங், நோ டாக்கிங் என மெழுகு பொம்மைகளாக வீற்றிருந்தது தனி கதை
மங்களகெளரி, மலேசியா

said...

//- you can choose the temperature//

இது அமெரிக்காவில் பெரும் பிரச்னை. இங்கும் அலுவலகங்களில் குளிர்ப்பதம் ஆண்களுக்கு ஏற்றவாறுதான். அநேக பெண்கள் காலடியில் ஒரு ஹீட்டரோ ஒரு வெப்ப மின்விசிறி போன்றதோ வைத்துக்கொண்டிருப்பார்கள். ஸ்வெட்டர் அணிந்தே இருப்பார்கள். :-(

said...

இரண்டிலும் +/- உண்டு. வீட்டிலிருந்து வேலை பார்க்கும்போது நேரம் காலம் இல்லாமல் எப்போது அழைக்கிறார்களோ அப்போதெல்லாம் வேலை பார்க்க வேண்டியிருக்கிறது! இப்போது வாரத்திற்கு ஒன்றிரண்டு நாட்கள் அலுவலகம். மற்ற நாட்கள் வீட்டிலிருந்து தான் வேலை!

said...

//பெண்கள் வெளியே வேலைக்குப் போனால்தான் ஓரளவு ரெஸ்ட் கிடைக்கும். //
I agree this point. At home we are full time engaged (at break time we need to do house hold works) but in office we will get leisure time.