Monday, June 10, 2019

பொன்னம்பல வானேஸ்வரர் கோவில் (பயணத்தொடர், பகுதி 102 )

த்ராவிடர் கட்டடக்கலையில் முழுக்க முழுக்கக் கல்லால் கட்டிய  கோவில்!  பொன்னம்பல வானேஸ்வரம் கோவில் என்று பெயர்.  மூலவர் வானேஸ்வரர்!  சிவன்!
அந்தோணியார் கோவிலில் இருந்து கிளம்பிய ரெண்டாவது நிமிட்  சிவன் கோவில் வளாகத்துக்குள் நுழைஞ்சாச்சு!
அஞ்சுநிலை ராஜகோபுரம் அழகு!  உயரமான கருங்கல் மதில்சுவர்களும், கோவில்மணிக்கான அமைப்பும் அருமை!
கோவிலுக்கு வயசு 162 !  ப்ரிட்டிஷார் ஆட்சி நடந்துக்கிட்டு இருக்கும் காலக்கட்டம். பொன்னம்பல முதலியார் என்ற  உள்ளூர் கோடீஸ்வரர்,  ஹிந்து சனங்கள்  வழிபடக் கோவில் ஒன்னு கட்டலாமேன்னு  ஒரு இடம் கொடுத்துருக்கார்.  சின்ன அளவுலே ஒரு சிவன் கோவில் கட்டி இருக்காங்க. இது 1857 இல்!
காலப்போக்கில் ( 1905 இல் ) தகப்பனிடம் இருந்து கோவில் மகன் நிர்வாகத்தின் கீழ் வந்துருக்கு! கோவிலை இன்னும் கொஞ்சம் நல்லபடியாப் புதுப்பிச்சுக் கட்டணும் என்ற எண்ணத்தில்  மகன் பொன்னம்பலம் ராமநாதன் தமிழ்நாட்டில் இருந்து சிறந்த சிற்பக்கலைஞர்களையும்,  பரம்பரையாகக் கோவில்கட்டும்  தொழிலில் ஈடுபட்டிருந்த கலைஞர்களையும்  கலந்தாலோசிச்சு, அவுங்களை இலங்கைக்கு வரவழைச்சு இந்தக் கோவிலைக் கட்டி இருக்கார். இவர் சிறந்த பக்திமான். சுதந்திரப் போராட்ட காலத்தில் இவரைத் தெரியாத ஆட்களே இல்லை என்னும் வகையில் முக்கியப் பங்கு வகித்துள்ளார். சட்ட வல்லுநர். அட்டர்னி ஜெனரலாகவும்  இருந்தவர்.  1915 களில் நடந்த சிங்களர் முஸ்லீம் போராட்ட சமயம் பிரிட்டிஷ் அரசு முக்கியமான பல சிங்களத் தலைவர்களைக் கைது செய்தப்ப, அரசுக்கு எதிரா வாதம் செஞ்சு பல தலைவர்களின்  விடுதலைக்குக் காரணமா இருந்துருக்கார்.  அப்படி  விடுதலை செய்யப்பட்டத் தலைவர்களில் ஒருவரான ஸேனநாயகே அவர்கள்தான்,  பின்னாளில் சுதந்திர இலங்கையின் முதல் பிரதமர் என்பதும் ஒரு சுவாரஸியமான சேதி!
கோவிலுக்குத் தேவையான கருங்கல் பாளங்களை, இங்கே இலங்கையிலேயே இருக்கும்  Veyangoda என்ற ஊரில் இருந்து வெட்டியெடுத்துக்கொண்டு வந்தாங்களாம்.
கோவில்களுக்கான கட்டுமான விதிகள், சிற்பசாஸ்த்திரம் மற்றும் பூஜை புனஸ்காரங்களுக்கான  ஆகம விதிகள் இப்படி எல்லாமும் அமைஞ்ச கோவில் இது. அச்சு அசல் தமிழ்நாட்டுக்கோவில்களில் இருப்பதைப்போல்தான் உணர்ந்தேன்.வெளிநாட்டினரின் ஆட்சிகாலம், உள்நாட்டுப்போர் என்று இருந்ததில் நிறைய இந்துக்கோவில்கள்  அழிஞ்சே போச்சுன்னும், தப்பிப்பிழைச்சவைகளில் முக்கியமானது இதுன்னும் சொல்றாங்க.மூலவர் வானேஸ்வரர் தவிர  அம்பாள், புள்ளையார், முருகன்,பைரவர், நவகிரகங்கள்னு  சிவன் கோவிலுக்குரிய சந்நிதிகள் நிறையவே இருக்கு. கூடவே ஒரு சந்நிதியில் பெருமாள் இருக்கார்!

கோஷ்டத்திலும், தூண்களிலும் இருக்கும் கடவுளர் உருவங்களுக்குக் க்ரீடம் செஞ்சு சூட்டி இருக்காங்க. பூச்சரங்கள் கட்டுவதுதான்  வேற முறையில்.  மீட்டருக்கு ஒரு பூ..... தூரம் தூரமா இடைவெளிவிட்டு .....    ஹாஹா....நாம்  போன வாசல் இல்லாமல் இன்னொரு வாசலும் கோவிலுக்கு வலப்புறம் இருக்கு.  வெள்ளி நிறத்து அழகான நுழைவு வாசலில்  பார்வதி பரமேஸ்வரன் தம்பதிகள், பிள்ளைகளான புள்ளையார், முருகனோடு தங்கமாக் காட்சி கொடுக்கறாங்க. அதன் வழியாக் கொஞ்சம் படிகள் ஏறி   வளாகத்துக்குள் நுழைஞ்சவுடனே  ரெட்டைச்சந்நிதிகளா  கோவில் அரசமரத்தடியில்  நாகத்தம்புரானும், சந்தான கோபாலரும் தரிசனம் தர்றாங்க.இந்தாண்டை ஒரு மேடையில்  சனைச்சரனின் வாஹனம்!
வளாகமும், கோவிலும், தோட்டமும் நல்ல சுத்தம்தான்!  நல்ல பராமரிப்பும் கூட !
இலங்கைக்குப் போகும் பயணிகள்  தவறவிடக்கூடாத கோவில் இது!
காலை அஞ்சு முதல் பகல் பனிரெண்டு, மாலை அஞ்சுமுதல் எட்டரை வரை கோவில் திறந்துருக்கும். அஞ்சுகால பூஜைகளும் உண்டு!
உச்சிகால பூஜை முடிஞ்சு கோவில் நடை அடைக்கும் நேரம் ஆனதால் நாமும் அங்கிருந்து கிளம்பினோம்.

தொடரும்...........  :-)

PINகுறிப்பு:   இலங்கை நண்பர்கள் கவனத்திற்கு...... இது  ஒரு வெளிநாட்டுப்பயணியின் பார்வையில் எழுதப்படும் பயணப்பதிவுகளே!  பதிவுகளில் எதாவது தகவல் பிழை இருப்பின் தயவுகூர்ந்து சுட்டிக் காட்டுங்கள்.  திருத்திக் கொள்ளலாம்.  

16 comments:

said...

அழகான கோவிலாகத் தெரிகிறது.

கோபுரங்களும் சிற்பங்களும் வெகு அழகு. அதிலும் தங்க வண்ணச் சிலைகள்!

தொடர்கிறேன்.

said...

கோயிலுக்குத் தேவையான பாளங்கள் இலங்கையிலிருந்து வந்தது என்ற செய்தி வியப்பினைத் தந்தது.

said...

பல்வேறு செய்திகளுடன் ஆலய தரிசனம்.... அருமை...

said...

வாய்ப்பு இருந்தால் பொன்னம்பலம் இராமநாதன் அவர்களைப் பற்றி தேடி படித்துப் பாருங்கள். மிக மிக ஆச்சரியமான மனிதர். அப்போதைய சூழலில் அவரின் அறிவும் திறமையும் நம்ப முடியாத ஆச்சரியமாக இருக்கும். இன்றைய முக்கால் வாசி சிங்களத்தலைவர்கள் அனைவரும் அவரிடம் கற்றவர்கள். அவரால் வளர்ந்தவர்கள்.

said...

அருமை சிறப்பு நன்றி

said...

பொன்னம்பல வானேஸ்வரம் கோவில் ...வெகு அழகு

இரண்டாம் படம் தத்ருப காட்சி ரசித்தேன் ...

said...

அழகாகவும்,அருமையாகவும் எழுதிறீங்க டீச்சர். நான் இலங்கை பயணத்திலிருந்து தொடர்கிறேன். உங்க பதிவுகளில் படங்கதான் சூப்ப்ப்ப்பர் டீச்சர்.
இக்கோவிலுக்கு முன்னால்தான் என் மாமியார் வீடு இருக்கு..

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

அச்சு அசல் நம்மூர்க் கோவில்கள் போலவேதான்! எனக்கும் ரொம்பப்பிடிச்சு இருந்தது!

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

எனக்குமே! இந்தியா போலவேதான். ஆனால் பசுமை அதிகம்!

said...

வாங்க துரை செல்வராஜூ,

ரசித்தமைக்கு நன்றி !

said...

வாங்க ஜோதிஜி.


அவரைப்பற்றி ஓரளவு வாசித்து வியப்படைந்தேன் ! அருமையான மனிதர்!

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க அனுப்ரேம்.

எனக்கும் அந்தப் படம் ரொம்பவே பிடிச்சது! தாயும் குழந்தையும்.... அழகோ அழகு!

said...

வாங்க ப்ரியசகி,

ஆஹா.... இலங்கை மருமகளா நீங்க !!!! பேஷ் பேஷ் !!!

said...

என் சொந்த இடமே யாழ்ப்பாணம் டீச்சர். அங்கும் போனீங்களா?

said...

கோவில் முழுவதுமே கருங்கல்லால் கட்டியது என்பது சிறப்பு.