பெருமாளை ஸேவிச்ச திருப்தியோடு கிளம்பிப்போறோம். கடலும் கடலையொட்டியே போகும் ரயில்பாதையுமா வித்தியாசமான காட்சி!
அட! ன்னு அதிசயிக்கும்போதே அங்கங்கே கூட்டமா பலர் கடலைப் பார்த்தபடி நிக்கறாங்க.
'அது ஏன்? எதுக்குன்னு தெரிஞ்சுக்கலைன்னா நம்ம தலை வெடிச்சுடாதா?' வண்டியை ஓரங்கட்டலாமுன்னா நம்மைப்போல பலரும் வண்டியை நிறுத்திட்டு போயிருக்காங்க. ஒரு முன்னூறு மீட்டர் போனதும்தான் இடமே கிடைச்சது.
வண்டியை விட்டிறங்கி முன்னே பாயறார் 'நம்மவர்' ..... வேடிக்கை விரும்பி !
ரயில் தண்டவாளத்தைக் கடந்து அந்தாண்டை போகணும். டபுள் ட்ராக்தான். சனம் போய்க்கிட்டு இருக்கேன்னு நாங்களும் அப்படியே.... நல்லவேளை ரயில் ஒன்னும் வரலை அதுவரை.... கடற்கரை, மணல்னு பெருசாச் சொல்ல முடியாது.... பாறைகள் இருக்கு அங்கங்கே.... இடைக்கிடையே கொஞ்சம் புற்களுமா.... கடலின், முரட்டு அலைகள் கரைக்குப் பாய்ஞ்சு வந்து பாறைகளில் அடிச்சு மேலே எகுறுது!
அந்தப் பக்கம் நாம் போனவுடன், மெல்ல ஒரு 'தீவண்டி' நம்மைக் கடந்து போச்சு!
நிறைய கூட்டம் இருக்குமிடத்துக்கு பாறைகளுக்கிடையில் நடந்து போகமுடியலை என்னால். அதனால் 'நம்மவரையும்' போகவேணாமுன்னு தடுத்தேன் :-)
அங்கிருந்து திரும்பும் மக்களிடம் 'என்ன ஆச்சு'ன்னதுக்கு ஒரு படகு கவிழ்ந்து போச்சாம். கரைக்குப் பக்கம். ஆனால் பாறைகளும் தண்ணீரில் இருக்குன்றதால் விழுந்தவங்க எல்லாம் பாறையில் ஏறியாச்சு. இன்னொரு படகு போய் அவுங்களை மீட்டு வரும் என்று சொன்னதாக மஞ்சு வந்து சொன்னார். யாருக்கும் ஒன்னும் ஆகலை. முக்கியமா உயிர்ச்சேதம். நல்லவேளை கடவுள் காப்பாத்தினார்னு சொல்லித் தண்டவாளத்தைக் கடக்கப்போனால் இன்னொரு ரயில்.
ஸ்டேஷன் ரோடில் போய்க்கிட்டு இருக்கோமாம். தெரிஞ்ச பெயர்களான கொள்ளுப்பிட்டி, கோஹிலவத்தை (எல்லாம் அந்தக் காலத்தில் கேட்ட ரேடியோ சிலோன் உபயம்! ) போர்டு மாட்டிக்கிட்ட பஸ்கள் நமக்கு எதிரில்.
இன்னுமொரு முக்கிய சமாச்சாரம் கவனிச்சேன். சாலைப்பெயர்கள், அறிவிப்புகள், தகவல்கள் இப்படி இருப்பதில் முதலில் சிங்களத்திலும், ரெண்டாவது தமிழிலும், மூணாவதா இங்லிஷிலும் எழுதி இருக்காங்க.
கொழும்பு நகரின் முக்கிய பகுதிக்கு வந்துருக்கோமுன்னு மஞ்சு சொன்னார். கல்லி ஃபேஸ் என்ற இடமாம். ஒருபக்கம் துறைமுகம், (துரைமுகம்னு எழுதி இருக்காங்க? ) இன்னொருபக்கம் கோட்டைன்னு இருக்கு. ராணுவம் , இல்லை எதாவது தூதரகமோ என்னவோ 'நோ பொட்டாக்ராஃபி ஸைன்' கம்பி வேலியில் ! அப்புறம் பார்த்தால் இது அமெரிக்கத்தூதரகம்.
அதைக் கடந்து போய் கல்லிஃபேஸ் ஹொட்டேலில் வண்டியை நிறுத்தினார் மஞ்சு. ரெஸ்ட்ரூம் ஸ்டாப் :-) உள்ளே போறோம்..... ஃபைவ் ஸ்டார் ஹொட்டேலுக்கான கெடுபிடிகள் ஒன்னும் இல்லை. ஃபோயர்லே யாருமே இல்லை.
இந்தியாவில் என்னென்ன கூத்து பார்க்கிறோம்.... ஸ்கேன் பண்ணனும், பேக் செக் அது இதுன்னு....
நாங்க ரெஸ்ட் ரூம் தேடிப்போயிட்டுக் கொஞ்சம் ஹொட்டேலையும் சுத்திப் பார்த்தோம். வெராந்தாவுக்கு அடுத்து இருக்கும் ரெஸ்ட்டாரண்டுக்கே வெராந்தான்னு பெயர்! அட்டகாசமான ப்ரைவேட் பீச் ! விஷயம் தெரிஞ்சுருந்தா இங்கேயே வந்து தங்கி இருக்கலாம்.
தூரத்துலே கடலில் கட்டுமான வேலை நடக்குது. ஹார்பரை விரிவுபடுத்தறாங்க. சீனர்கள் இந்த வேலையைச் செய்யறாங்களாம். சீனா , இலங்கைக்கு ஏராளமான பொருளுதவி (கடன்தான் ) செஞ்சுக்கிட்டு இருக்காம். எல்லா முக்கிய வேலைகளையும் அவுங்க ஆட்களை வச்சே செய்யறாங்களாம். உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பில்லை.
கடைசியில் கடனைத் திருப்பித்தர முடியலைன்னா.... கந்துவட்டிக்காரனாட்டம் சீனா நடந்துக்கப்போகுதுன்னு..... கேள்வி...
CBD என்னும் நகரின் முக்கிய இடத்துக்குள்ளே நுழைஞ்சு சுத்திப் பார்த்துக்கிட்டு இருக்கோம். காரில் இருந்துதான்...... இறங்கும் எண்ணமெல்லாம் இல்லை..... பழைய பார்லிமென்ட் கட்டடம் இப்போ பார்லிமென்ட் செக்கரட்டேரியட் ஆஃபீஸா இருக்காம். கொஞ்ச தூரம் போனப்ப சாலைக்கு நடுவில் உச்சாணிக்கொம்பில் ஏறி உக்கார்ந்துருக்கு, ஒரு பௌத்த மதக் கட்டடம்.
'சம்போதி சைத்யா ஸ்தூபா'ன்னு பெயர் இருக்கும் புத்தர் கோவிலாம்! இதைப்போல வேறெங்கேயும் நாம் பார்த்ததே இல்லை! நடுத்தெருவில் உச்சாணிக்கொம்பில் !
Sambuddhatva jayanthi என்ற விழாவைக் கொண்டாடும் வகையில் இப்போ ஒரு அறுபத்துயிரண்டு வருஷங்களுக்கு முன்னேதான் கட்டி இருக்காங்க. இலங்கையின் புகழ்பெற்ற கட்டட நிபுணர் ஏ என் எஸ் குலசிங்கே என்றவர் வடிவமைச்ச கோவில். முழுக்க முழுக்க காங்க்ரீட் கட்டடம்தான். மேலே ஏறிப்போக 123 படிகள் இருக்காம்! ரெண்டு வளைவுகள் ஒன்னையொன்னு தொடும் இடத்தில் கோவில் எழும்பி நிக்குது! இதுக்கு அந்தாண்டை இன்னொரு டவர் போன்ற கட்டடமும் தெரியுது. ஒருவேளை அதுக்குள்ளே மின்தூக்கி வச்சுருக்கலாம். ரெண்டையும் இணைக்கும் ஒரு இரும்புப்பாலமும் தெரிஞ்சது! ச்சும்மாச் சொல்லக்கூடாது... இது ஒரு அற்புதமான அமைப்பு!
(ஏறிப்போய் பார்த்திருக்கலாமோன்னு இப்போத் தோணுது..... ப்ச்... )
இந்தக்கோவில் இருக்கும் சாலைக்கே சைத்தியா சாலைன்னு பெயர். கொழும்பு ஹார்பர்க்குப் போகும் ரோடு இது! இதன்வழியா அந்தாண்டை போனால் ஒரு லைட் ஹவுஸ். அதுக்கும் அந்தாண்டை ஒரு மணிக்கூண்டு (விமலதர்மா க்ளாக் டவர்)இப்படி இருக்கு. இதெல்லாம் கொழும்பு கோட்டைப் பகுதியாம். மஞ்சுதான் நம்ம டூரிஸ்ட் கைடும் கூட :-)
நல்ல சுத்தமா நீட்டா இருக்கு இடங்கள் எல்லாம். கட்டடங்களும் பழைய ப்ரிட்டிஷ் ஸ்டைல் கட்டடங்களே!
அடுத்த அஞ்சாறு நிமிட்டுலே சமீபத்தில் ரொம்பப் பேசப்பட்ட ஒரு இடத்துக்குப் போய்ச் சேர்ந்தோம்.
தொடரும்..... :-)
அட! ன்னு அதிசயிக்கும்போதே அங்கங்கே கூட்டமா பலர் கடலைப் பார்த்தபடி நிக்கறாங்க.
'அது ஏன்? எதுக்குன்னு தெரிஞ்சுக்கலைன்னா நம்ம தலை வெடிச்சுடாதா?' வண்டியை ஓரங்கட்டலாமுன்னா நம்மைப்போல பலரும் வண்டியை நிறுத்திட்டு போயிருக்காங்க. ஒரு முன்னூறு மீட்டர் போனதும்தான் இடமே கிடைச்சது.
வண்டியை விட்டிறங்கி முன்னே பாயறார் 'நம்மவர்' ..... வேடிக்கை விரும்பி !
ரயில் தண்டவாளத்தைக் கடந்து அந்தாண்டை போகணும். டபுள் ட்ராக்தான். சனம் போய்க்கிட்டு இருக்கேன்னு நாங்களும் அப்படியே.... நல்லவேளை ரயில் ஒன்னும் வரலை அதுவரை.... கடற்கரை, மணல்னு பெருசாச் சொல்ல முடியாது.... பாறைகள் இருக்கு அங்கங்கே.... இடைக்கிடையே கொஞ்சம் புற்களுமா.... கடலின், முரட்டு அலைகள் கரைக்குப் பாய்ஞ்சு வந்து பாறைகளில் அடிச்சு மேலே எகுறுது!
அந்தப் பக்கம் நாம் போனவுடன், மெல்ல ஒரு 'தீவண்டி' நம்மைக் கடந்து போச்சு!
நிறைய கூட்டம் இருக்குமிடத்துக்கு பாறைகளுக்கிடையில் நடந்து போகமுடியலை என்னால். அதனால் 'நம்மவரையும்' போகவேணாமுன்னு தடுத்தேன் :-)
அங்கிருந்து திரும்பும் மக்களிடம் 'என்ன ஆச்சு'ன்னதுக்கு ஒரு படகு கவிழ்ந்து போச்சாம். கரைக்குப் பக்கம். ஆனால் பாறைகளும் தண்ணீரில் இருக்குன்றதால் விழுந்தவங்க எல்லாம் பாறையில் ஏறியாச்சு. இன்னொரு படகு போய் அவுங்களை மீட்டு வரும் என்று சொன்னதாக மஞ்சு வந்து சொன்னார். யாருக்கும் ஒன்னும் ஆகலை. முக்கியமா உயிர்ச்சேதம். நல்லவேளை கடவுள் காப்பாத்தினார்னு சொல்லித் தண்டவாளத்தைக் கடக்கப்போனால் இன்னொரு ரயில்.
ஸ்டேஷன் ரோடில் போய்க்கிட்டு இருக்கோமாம். தெரிஞ்ச பெயர்களான கொள்ளுப்பிட்டி, கோஹிலவத்தை (எல்லாம் அந்தக் காலத்தில் கேட்ட ரேடியோ சிலோன் உபயம்! ) போர்டு மாட்டிக்கிட்ட பஸ்கள் நமக்கு எதிரில்.
இன்னுமொரு முக்கிய சமாச்சாரம் கவனிச்சேன். சாலைப்பெயர்கள், அறிவிப்புகள், தகவல்கள் இப்படி இருப்பதில் முதலில் சிங்களத்திலும், ரெண்டாவது தமிழிலும், மூணாவதா இங்லிஷிலும் எழுதி இருக்காங்க.
அதைக் கடந்து போய் கல்லிஃபேஸ் ஹொட்டேலில் வண்டியை நிறுத்தினார் மஞ்சு. ரெஸ்ட்ரூம் ஸ்டாப் :-) உள்ளே போறோம்..... ஃபைவ் ஸ்டார் ஹொட்டேலுக்கான கெடுபிடிகள் ஒன்னும் இல்லை. ஃபோயர்லே யாருமே இல்லை.
இந்தியாவில் என்னென்ன கூத்து பார்க்கிறோம்.... ஸ்கேன் பண்ணனும், பேக் செக் அது இதுன்னு....
நாங்க ரெஸ்ட் ரூம் தேடிப்போயிட்டுக் கொஞ்சம் ஹொட்டேலையும் சுத்திப் பார்த்தோம். வெராந்தாவுக்கு அடுத்து இருக்கும் ரெஸ்ட்டாரண்டுக்கே வெராந்தான்னு பெயர்! அட்டகாசமான ப்ரைவேட் பீச் ! விஷயம் தெரிஞ்சுருந்தா இங்கேயே வந்து தங்கி இருக்கலாம்.
தூரத்துலே கடலில் கட்டுமான வேலை நடக்குது. ஹார்பரை விரிவுபடுத்தறாங்க. சீனர்கள் இந்த வேலையைச் செய்யறாங்களாம். சீனா , இலங்கைக்கு ஏராளமான பொருளுதவி (கடன்தான் ) செஞ்சுக்கிட்டு இருக்காம். எல்லா முக்கிய வேலைகளையும் அவுங்க ஆட்களை வச்சே செய்யறாங்களாம். உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பில்லை.
CBD என்னும் நகரின் முக்கிய இடத்துக்குள்ளே நுழைஞ்சு சுத்திப் பார்த்துக்கிட்டு இருக்கோம். காரில் இருந்துதான்...... இறங்கும் எண்ணமெல்லாம் இல்லை..... பழைய பார்லிமென்ட் கட்டடம் இப்போ பார்லிமென்ட் செக்கரட்டேரியட் ஆஃபீஸா இருக்காம். கொஞ்ச தூரம் போனப்ப சாலைக்கு நடுவில் உச்சாணிக்கொம்பில் ஏறி உக்கார்ந்துருக்கு, ஒரு பௌத்த மதக் கட்டடம்.
'சம்போதி சைத்யா ஸ்தூபா'ன்னு பெயர் இருக்கும் புத்தர் கோவிலாம்! இதைப்போல வேறெங்கேயும் நாம் பார்த்ததே இல்லை! நடுத்தெருவில் உச்சாணிக்கொம்பில் !
Sambuddhatva jayanthi என்ற விழாவைக் கொண்டாடும் வகையில் இப்போ ஒரு அறுபத்துயிரண்டு வருஷங்களுக்கு முன்னேதான் கட்டி இருக்காங்க. இலங்கையின் புகழ்பெற்ற கட்டட நிபுணர் ஏ என் எஸ் குலசிங்கே என்றவர் வடிவமைச்ச கோவில். முழுக்க முழுக்க காங்க்ரீட் கட்டடம்தான். மேலே ஏறிப்போக 123 படிகள் இருக்காம்! ரெண்டு வளைவுகள் ஒன்னையொன்னு தொடும் இடத்தில் கோவில் எழும்பி நிக்குது! இதுக்கு அந்தாண்டை இன்னொரு டவர் போன்ற கட்டடமும் தெரியுது. ஒருவேளை அதுக்குள்ளே மின்தூக்கி வச்சுருக்கலாம். ரெண்டையும் இணைக்கும் ஒரு இரும்புப்பாலமும் தெரிஞ்சது! ச்சும்மாச் சொல்லக்கூடாது... இது ஒரு அற்புதமான அமைப்பு!
(ஏறிப்போய் பார்த்திருக்கலாமோன்னு இப்போத் தோணுது..... ப்ச்... )
நல்ல சுத்தமா நீட்டா இருக்கு இடங்கள் எல்லாம். கட்டடங்களும் பழைய ப்ரிட்டிஷ் ஸ்டைல் கட்டடங்களே!
அடுத்த அஞ்சாறு நிமிட்டுலே சமீபத்தில் ரொம்பப் பேசப்பட்ட ஒரு இடத்துக்குப் போய்ச் சேர்ந்தோம்.
தொடரும்..... :-)
12 comments:
கொழும்பு நகரின் முக்கிய பகுதிகளை நீங்க வண்டியிலேந்து பார்க்குற மாதரி ..நானும் உங்க படங்கள் வழி கண்டேன் ...
அருமை அனைத்தும் ...
ஓ... அந்த சர்ச்சுக்குப் போயிட்டீங்களா?
பிரிட்டிஷ் கட்டிடங்கள் இத்தனை வருடங்கள் இருக்கு. ஆனா அதற்கு அப்புறம் நாம கட்டின கட்டிடங்கள் பல்லிளிக்குதே... காரணம் என்னவாயிருக்கும்?
அருமை நன்றி
நடுத்தெருவில் உச்சாணிக்கொம்பில் புத்தர் கோயில்...வியப்பாக உள்ளது.
ஹோல்பேஸ்ஹோட்டல் அழகிய இடம்.
நாட்டை எப்போதோ சீனாவுக்கு வித்தாகிவிப்டது சராசரியாகப் பார்த்தால் ஒவ்வொருத்தரும் பல இலட்சம்ரூபா கடனாளிகள்தாம்:(
நூறாவது பதிவு அருமை அம்மா
வாங்க அனுப்ரேம்,
நேரக்குறைவு என்பதால் பலதும் போறபோக்கிலேதான் :-)
வாங்க நெல்லைத் தமிழன்.
அப்போ அந்தக் காலத்துலே லஞ்சம், ஊழல் எல்லாம் சட்டப்படி குற்றம்.
இப்போ.... எதெதுக்கு எவ்ளோன்னு பட்டியல் போட்டுட்டாங்க. அதான் பல்லிளிப்பு. ஒரு பத்து % தின்னால்கூடப் போகட்டுமுன்னு விடலாம். தொன்னூறு% தின்னால் எப்படி?
வாங்க விஸ்வநாத்,
நன்றி!
வாங்க ஜம்புலிங்கம் ஐயா.
எனக்கும் வியப்பே ! சாமி மேலே இருந்து பார்க்கிறார் என்பது உண்மை :-)
வாங்க மாதேவி.
அரசு செய்யும் சிலபல காரியங்கள் எல்லாம் மக்கள் தலையிலேதான் விடியுது.... ப்ச்...
வாங்க செந்தில்பிரசாத்,
மனம் நிறைந்த நன்றி.
Post a Comment