Saturday, September 24, 2016

பொறந்தநாள்... இன்று பிறந்தநாள்......

பனிரெண்டு வருசம் ஓடியே போச்சு. நல்லா எழுதினேனா....  நிறைவா எழுதினேனான்னு  நீங்கதான் சொல்லணும். ஆனால்....  நிறைய எழுதி இருக்கேன் என்றுதான் தோணுது :-)
முக்கால்வாசியும்   நீண்ண்ண்ட பதிவுகளாத்தான் இருக்கு.  தொடங்குனா நிறுத்த முடியாத  கஷ்டம் ஒன்னு இருக்கே :-)
இந்த நாளோடு இன்னும் ஒரு நாளையும் முடிச்சுப்போட்டுதான் வச்சுருக்கேன்.  நம்ம கோபாலின் பிறந்தநாளும் இன்றுதான்!

துளசிதளத்தின்  பிறந்தநாளையும், நம்மவரின் பிறந்த நாளையும் கொண்டாடும்போது   நம்ம  பாரதியாரின் அப்பாவாகக் கொஞ்சநாள் 'இருந்த' பாரதிமணி ஐயாவின் பிறந்தநாளையும் இப்பக் கூடவே சேர்த்துக்கிடறது வழக்கமாப் போயிருக்கு:-)

முப்பெரும்விழா!

வழக்கம்போல்    தங்கள் அனைவரது அன்பையும் வாழ்த்துகளையும் வேண்டி இங்கே மூவர் அணி நிற்பது உங்கள் மனக்கண்களுக்குத் தெரியுதுதானே?


19 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

பிறந்தநாள் வாழ்த்துக்களை கோபால் சாரிடம் சொல்லிடுங்க டீச்சர். 12 வருஷங்கள் தொடர்ந்து எழுதிவரும் உங்களுக்கும் வாழ்த்துக்களும், வணக்கங்களும்.


பாரதிமணி சாருக்கும் எனது வாழ்த்துக்களும், வணக்கங்களும்

Unknown said...

கோபால் அவர்களுக்கு எங்கள் பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.!!!
துளசிதளம் பல்லாயிரம் பதிவுகள் பதிய வாழ்த்துகிறோம்.
உங்கள் எழுத்துப்பணி பல்லாயிரம் ஆண்டு தொடர வாழ்த்தி வணங்குகிறோம்.

நெல்லைத் தமிழன் said...

வாழ்த்துக்கள். பாரதி மணி ஐயாவுடன் சேர்ந்து பார்ப்பதற்கு மிக்க மகிழ்ச்சி. எங்கேயும் கோவில் போகணும்னா உங்க பக்கத்தை ஒரு எட்டு எட்டிப் பார்க்கும்படிச் செய்திருக்கிறீர்களே (ரெஃபெரென்ஸுக்கு). அதுவே உங்கள் பதிவு 'நிறைவு' என்பதைச் சொல்லும். வளர்க..

ராமலக்ஷ்மி said...

முப்பெரும் விழாவில் கலந்து கொள்கிறோம்:).
மனமார்ந்த நல்வாழ்த்துகள்!!!

விஸ்வநாத் said...

வாழ்த்தமுடியாதுன்னா என்ன இப்போ ?
வணங்குகிறேன்.

G.Ragavan said...

கோபால் சாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

பன்னிரண்டாண்டு பதிவுலக வாழ்க்கைக்கு வாழ்த்துகள். அடுத்த பன்னிரண்டில் மீண்டும் வாழ்த்துவேன்.

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் மல்லாண்ட திண் தோள் மணிவண்ணன் சேவடியின் திருக்காப்பால் நீங்கள் வாழ்வாங்கு வாழ்க!

skirubas said...

மூவரணிக்கு வாழ்த்துக்கள்
மேன்மேலும் வளமோடு வாழ இறையருள் வேண்டுகிறேன்
god bless you all thulasi ma

அது ஒரு கனாக் காலம் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

M0HAM3D said...

valttukkal

M0HAM3D said...

thanks

M0HAM3D said...

பிறந்தநாள் வாழ்த்துக்களை கோபால் சாரிடம் சொல்லிடுங்க டீச்சர். 12 வருஷங்கள் தொடர்ந்து எழுதிவரும் உங்களுக்கும் வாழ்த்துக்களும், வணக்கங்களும்.

தி.தமிழ் இளங்கோ said...

வாழ்த்துகள்.

sury siva said...

கோபால் சார் பிறந்த நாள், இன்று என்னை அந்த நாள், மயிலையில் 60 ஆவது பிறந்த நாள் வைபவத்தை நினைவு படுத்தியது. அன்று சாப்பிட்ட அக்கார வடிசல் இன்னும் இனிக்கிறது.

உங்களுக்கும் கோபால் சாருக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் ஆசிகள்.

சுப்பு தாத்தா.
மீனாக்ஷி பாட்டி.

வெங்கட் நாகராஜ் said...

மனம் நிறைந்த வாழ்த்துகள்..... மூவருக்கும் தான்!

G.M Balasubramaniam said...

நீங்கள் எழுதத்துவங்கி 12 ஆண்டுகள் ஆகிவிட்டதா மேலும் பல்லாண்டுகள் எழுத வேண்டுகிறேன் உங்கள் எழுத்தைவிட படங்களே என்னை ஈர்க்கிறது வாழ்த்துகள்

S.Muruganandam said...

மனம் கனிந்த இனிய நல்வாழ்த்துக்கள் மூவருக்கும்

Nanjil Kannan said...

Vazhthukkal :)

கிரி said...

வாழ்த்துகள். தொடர்ந்து எழுதி வருவது மகிழ்ச்சி :-)

Ranjani Narayanan said...

பல்சுவை விருந்தளிக்கும் உங்கள் தளத்திற்கும், உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் கோபால் சாருக்கும், பாரதி மணி சாருக்கும் நல்வாழ்த்துகள்!