Tuesday, August 23, 2016

ஹிஸ்டரி ரிப்பீட்ஸ் அகெய்ன்

பகலில் வீடு தங்காமச் சுத்திக்கிட்டு இருக்கானேன்னு  கவலை ஒரு பக்கம்.  அதே சமயம் 'வெட்' கடுதாசி அனுப்பறார்...   "ஆகஸ்ட் வந்தாச்சு. அழைச்சுக்கிட்டு வா "
உபாயங்கள் பலதும் யோசிக்கத்தான் வேணும். அடுத்த மாசம் பயணம் ஒன்னு இருப்பதால்  குறைஞ்சது ஒரு மாசத்துக்கு முன்னால் ஊசி போட்டு இருந்தால்தான் கேட் ஹொட்டேலில் இடம் கிடைக்கும். பொருத்தமான நாள் என்னன்னு பார்த்ததில் செவ்வாய் 23, நாள் நக்ஷத்திரம் எல்லாம் சரின்னு கணிச்சேன்.

கூண்டு மகள் வீட்டில். கடன் வாங்கிப்போனால் திருப்பித்தர வேணாமோ?  வாட்ஸப்பில் சேதி அனுப்பினேன்.  இப்பெல்லாம் குடும்பத்துடன்  உறவே அதன்மூலம் தான் .  என்றைக்கு என்னன்னு கேட்டுக்கிட்டுத்  திங்கள்   மாலை பாட்டுப் பயிற்சிக்குப் போகும்போது  கொண்டு வரேன்னு சொன்னாள்.

இதுக்கிடையில், சண்டே சந்தைக்குப் போயிட்டு வீடு திரும்பும் வழியில்,  'கூண்டை நாமே எடுத்துக்கிட்டுப் போயிடலாம்' என்றார் நம்மவர். வலம் போகாமல் இடம் வந்தால் ஆச்சு. எல்லாம் நன்மைக்கே என்பது ரொம்பச்சரி!

திங்கள் காலை வழக்கமா 'அதிகாலை ஏழரை'க்குக் கண் முழிச்சுப் பார்த்தால்.....   சமீபத்திய வழக்கத்துக்கு மாறாக வீடு தங்கி இருக்கு. ஆஹா.....  ப்ரேக்ஃபாஸ்ட் எடுத்துக் கொடுத்துட்டுப் பூனை மாதிரி சத்தமில்லாமல் நடந்து போய்  வெளியே தோட்டத்துக்குப் போகும்  வழியில் உள்ள பூனைக் கதவைப் பூட்டி வச்சேன். சில சமயம் ஆங்காரமாத் தலையால் முட்டித் திறக்கும் இதுகள். ப்ளாஸ்டிக் கதவுதானே....  உடைஞ்சு போச்சுன்னால் அதுக்கு ஒரு நாப்பது அழணும்.  ஒரு செடி இருக்கும் தொட்டியைக் கதவாண்டை வச்சுக் காபந்து பண்ணினேன். நோ ஆக்ஸெஸ் :-)
நம்மவரை எழுப்பி, 'ஆள் இங்கே இருக்கு. வெட்டுக்கு ஃபோன் செஞ்சு நேரம் கிடைச்சால் இன்றைக்கே முடிச்சுடலாம்' என்றேன்.  இன்னொரு அறைக்குப்போய்,  எங்களுக்குக் கேக்காத  சப்தத்தில்   பேசி முடிச்சவர் ஒன்பதே முக்காலென்று சொன்னார்.  ஆஹா... நோ ஒர்ரீஸ்.

என்ன ஆகுதுன்னு புரியாம ஒரு யோசனையில் குட்டிபோட்ட பூனை போல இங்கும் அங்குமா.....   ப்ச். பாவம் இல்லே?
'இவன் வேலையை முடிச்சுட்டே  நான் வேலைக்குப் போறேன்'னு  சொன்னது நிம்மதியா இருந்துச்சு.  ஒன்பதரைக்கு  ரெடி ஆகிட்டேன். நீங்க போய்  கூண்டை எடுத்து வையுங்கன்னு  சொல்லிட்டு,  'அஜ்ஜுக்குட்டி, வாடாச்  செல்லமு'ன்னு  கூப்பிடும்போதே  மாஸ்டர் பெட் ரூமுக்கு ஓடிப்போய் கட்டிலுக்கடியில் ஒளிஞ்சுக்கிட்டான். குரலில் இருந்த அதீத  அன்பு, காட்டிக் கொடுத்துருச்சு போல !

எங்க ரெண்டுபேருக்கும் சண்டையை மூட்டிவிடத்தான்  இதெல்லாம் நடந்தாறது.  பெரிய குச்சியைக் கட்டிலுக்கடியில் விட்டுத் துழாவினதும்  இங்கேயும் அங்கேயுமா குச்சிக்குத் தப்பிக்கிட்டு இருக்கானே தவிர வெளியே வரும் அடையாளம் இல்லை.

நான் போய் கேட் டோரைத் திறப்பதுபோல் 'நடிச்ச'வுடன் கதவு சத்தம் கேட்டுப் பாய்ஞ்சு வந்தான். ஒரே அமுக். தூக்கிப்போய் கூண்டுக்குள் போட்டாச் :-)
அப்புறம்?   வண்டியைக் கிளப்பிக்கிட்டு வெட் க்ளினிக் போயிட்டோம். வீல்சேர் பார்க்கிங்தான் இருந்துச்சு. பரவாயில்லை. முழங்கால் வலி இருக்கே. நொண்டிக்கிட்டே போய் ஜஸ்டிஃபை பண்ணிடலாம்:-)

அங்கே நாம் வழக்கமா (!!)  உக்காரும் இடத்தில்  ஒரு பாக்ஸர் அம்மாகூட வந்துருக்கான். நாங்க  இந்தாண்டை போய் உக்கார்ந்தோம்.  உள்ளே டாக்டர் ஒரு எமர்ஜென்ஸி கேஸ் பார்த்துகிட்டு இருக்காராம்.

பத்து நிமிட் வெயிட்டிங். இன்னொரு  பேட்டையில் வீடு மாறினவங்க விளம்பரம் கொடுத்துருக்காங்க.  புது இடம் பிடிக்காமல் பழைய இடத்தை நோக்கிப் புனிதப்பயணம் போயிருச்சாம் அவுங்க ம்யாவ்.  இன்னொருத்தர்  கண்டுபிடிச்சுத் தகவல் சொன்னால் 200$ தர்றாங்களாம்.
அசப்புலே நம்மாள் மாதிரி இருக்கு படத்துலே!  பேசாமக் கை மாத்தலமான்னு.....    போச்சே   200...........


எமர்ஜென்ஸி வெளியே வந்ததும் பாக்ஸ்ர் போனார். அப்புறம் நாங்க.  அந்த பாக்ஸர் இருக்கானே....  ச்சும்மாச் சொல்லக்கூடாது. செம!  நம்மைப் பார்த்த விநாடி  அட்டென்ஷனில் நின்னவன்,  அப்படிக்கப்படியே நின்னான், உள்ளே போகும் வரை! பெடிக்ரீ..........   அதுக்குள்ள குணவிசேஷம்!



இன்னொரு அறைக் கதவு வழியா தெரிஞ்சது என்னவா இருக்குமுன்னு மண்டைக்குடைச்சல் எனக்கு. ரோபோ கேட்?

அப்புறம் நாங்க போனதும்.... வெட்டின் வரவேற்பு. கூண்டில் இருந்து தூக்கி  டேபிளில் வச்சதும்.... இந்தப் பூனையும்.....   என்ற போஸ் & ஆக்‌ஷன்.
எடைதான் போன வருசத்தை விட குறைஞ்சு போயிருக்கு.  28 கிராம்.....   4.32 லே இருந்து இப்போ 4.04   :-(
மற்றபடி பல், நகம், கண், தோல், வால் எல்லாம் ஃபைன்.  ஃப்ளீ மருந்து  வீட்டில் வாங்கி வச்சதைக் கொண்டு போயிருந்தோம். அதைப் பேக்கில் இருந்து எடுத்ததும், வீட்டை விட்டு ஓடிருவான். ஆனால் அங்கே...........   குறவன் போல் ........ அதைப்போட்டு விட்டார்.   வயித்துப் பூச்சி புழுவுக்கு வாயில் மாத்திரை. போட்டதும் தலையை ஆட்டிக்கிட்டே தண்ணியில்லாமல் முழுங்கினான்.



கட்டக் கடைசியா  ஊசி.  போட்டு முடிச்சு ரெக்கார்ட் புக்கில்  எல்லா விவரங்களும் எழுதி  வெட் கையெழுத்துப் போட்டதும் அவருக்கு டாடா பைபை.

 வெளியே வந்து  பில்தொகையைக் கட்டிட்டு வீடு வந்து, உள்ளே கொண்டுபோய் கூண்டைத் திறந்தேன்.

புலி வெளியில் வந்தது :-) 






நான் போய் பூனைக்கதவைத் திறந்து வச்சேன். என்ன டெக்னிக்ன்னு பக்கத்துலே வந்து நின்னு பார்த்தான். புரிஞ்சுருக்குமோ?
எப்படியோ இந்த வருஷப் பரீக்ஷை முடிஞ்சது.....


போனவருசம் எப்படிப்போச்சுன்னு பார்க்காதவர்களுக்காக....



நெக்ஸ்ட் இயர் ஹிஸ்டரி வில் ரிப்பீட் அகெய்ன் வித் டிஃபரண்ட் ஸினாரியோ!

சுபம் :-)

9 comments:

said...

சுபம்... :)

பயண ஏற்பாடுகள் எந்த அளவில் இருக்கு? தில்லி எப்போது வருகிறீர்கள். பிறகு மின்னஞ்சல் செய்கிறேன்.

said...

பாவம்! ஊசி போட்டு படுத்துகிறீர்களே டீச்சர்...:)

பயணத்தில் ரங்கன் உண்டா??

said...

பூனை ஒன்றை மருத்துவரிடம் கூட்டிச் செல்வதை அழகான பதிவாக மாற்ற உங்களால்தான் முடியும் டீச்சர்.

வீட்டில் அடாவடி செய்யும் குழந்தைகள் வெளியிடங்களில் அடக்கமாக இருப்பது தெரிந்ததுதானே.

அப்புறம் அந்த பாக்சர் ஏன் நின்னுக்கிட்டே இருந்தது? என்ன காரணம்?

said...

பாவம் வாயில்லாத ஜீவனால் வாயுள்ள ஜீவன்கள் படும் அவஸ்தை

said...

அட ப்ரமாதம் ரஜ்ஜு கலக்கல் :)

said...

இளைச்சி தான் போயிருக்கான்.பாவம். ஒரு வகையில் என்னைவிடக் கொடுத்துவைத்தவன்.
பறக்க வேண்டாம்.

said...

அருமையான எழுத்து நடை .. ரொம்ப சுவாரசியமா சொல்லிருக்கீங்க

said...

படங்களுடன் கூடிய அழகான பதிவு.

said...

வாங்க நண்பர்களே!

பின்னூட்டிய அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்! ம்யாவ்....ம்யாவ்...