Wednesday, July 08, 2015

ஒளிச்சு வைக்க முடியாத ஒரு லேண்ட் மார்க், திருச்சியில்! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 64)

கண்டதையும் வாங்கிக் குழந்தைக்குக் கொடுக்காதீங்க.  அன்பு இருந்தால் காசாக் கொடுங்க.  அவள் உடல்நலத்துக்கு எது உகந்ததோ அதை நாங்களே வாங்கித் தந்துருவோம்.  காசைக்கூட நாங்க கைநீட்டி வாங்கமாட்டோம். அதா...அந்தப் பொட்டியில் போட்டுருங்க.  இப்படி நம்ம நண்பர் வீட்டுக்கு நாம் போகும்போது  அவுங்க  சொன்னாங்கன்னா....  மனசுக்கு பேஜாராப் போயிறாது?  ஆனா....  எனக்கு அப்படிக் கொஞ்சம் கூடத்தோணலை.  நியாயம்தானேன்னு  பட்டது:-)   நம்ம சனம் சொன்னால் கேக்குமோ?செல்லக்குழந்தை  லெட்சுமி ,  சின்னச்சின்ன  கண்களால்  என்னைப் பார்த்துச் சிரிச்சாள்.   இந்தா உன் ஆளுக்குப் போடுன்னு ஒரு நல்ல தொகை எடுத்துக் கொடுத்தார் நம்ம கோபால். புண்ணியவான். நல்லா இருக்கணும்.மேலே போகலாமான்னு  கேட்ட கோபாலிடம் எஸ் சொன்னேன்! வெறும் மூணே ரூபாய்தான். போனமுறை (அதாச்சு கால் நூற்றாண்டு)  போனபோது  ஏறணுமா என்ற தயக்கம் துளி கூட இல்லை. இப்போ.... நம்ம முழங்கால் சமாச்சாரம் ஊர் அறிஞ்சதாச்சே!
417 படிகள் என்று நினைக்கும்போதே மலைப்பா இருக்கு. இப்படி   மலைச்சு நின்னால் மலைக்கோட்டையைப் பார்க்க முடியுமோ? மெள்ள மெள்ள  ஏற ஆரம்பிச்சேன்.  இளம்வயசு மக்கள்  சின்னச்சின்ன குழுக்களா  (மினிமம் 2 பேர்) பரபரன்னு படிகளில் ஏறிப்போய்க்கிட்டு இருந்தாங்க. அடடா....  இந்தச் சின்னவயசுலே என்ன ஒரு பக்தி............

முதலில் அம்மன் சந்நிதிக்குப்போய்  தரிசனம் முடிச்சுட்டு,  தாயுமானவரை தரிசிக்க அடுத்த நிலைக்குப் படி ஏறும்போதே....  சீக்கிரம் போங்க.  சந்நிதி மூடப்போறாங்கன்னு  கேட்ட குரல்,  கொஞ்சம் பதற்றத்தை உண்டாக்குச்சு.  கோவில் காலை 6 முதல் பகல் 12, மாலை 4 முதல் எட்டரை வரை மட்டும் திறந்திருக்கும். இப்பவே 12 ஆக மூணு நிமிட்தான் இருக்கு.  ஓடோடிப்போய்  தரிசனம் ஆச்சு.  நல்ல பெரிய சிவலிங்கம்!  சுயம்புவாம்!

சந்நிதி மூடினபிறகு  நிதானமா வெளியே மண்டபத்தில் இருக்கும் சித்திரங்களைப் பார்த்துக் க்ளிக்கிக்கிட்டு இருந்தேன். (கேமெரா டிக்கெட் கூட  வெறும் 20 ரூ தான்)  கீழே உள்ள அம்மன் மட்டுவார் குழலியின் விமானம் மேலே வந்து எட்டிப் பார்க்குது!

சிற்பங்களையெல்லாம் பார்க்கணுமுன்னு  நினைச்சப்பயே...   '12.30க்கு இந்த மண்டபங்களை அடைக்கணும்' என்று கோவில் பணியாளர் சொன்னதால்  கிட்டியவரை போதுமுன்னு நினைக்க வேண்டியதாப் போச்சு. ஆனாலும் நம்ம ரோஷ்ணியம்மா சொன்ன  அஞ்சு உடம்பு குரங்கைப் பார்க்கணுமுன்னு விசாரிச்சால்...' ஙே' ன்னுமுழிச்சார்:(சங்கர  'நாராயணர்' கையில்  சங்கு இருக்கவேணாமோ?  ஏன் சக்கரம்?

தாயுமானவரைப் பற்றி நமக்குத் தெரிஞ்சதை அளக்கலாமுன்னு பார்த்தால்.... அதுக்கு இடங்கொடுக்காம கோவில் சுவரிலேயே படக்கதை போட்டு வச்சுட்டாங்க.


அதுக்காக, நாம் சும்மா இருக்க முடியுமோ?  உச்சிப்பிள்ளையார் எதுக்கு இருக்கார்?  அவர் கதையைச் சொல்லித்தான் ஆகணும்:-)

த்ரேதாயுகம்.  ராமாயணம் நடந்த காலக்கட்டம். நம்ம ராமர், காட்டுக்குப்போய் சீதையைத் தொலைச்சுட்டு,  ராவணனோடு யுத்தம்  செஞ்சு அவனை அழிச்சு சீதையை மீட்டார்.  இந்த  சம்பவம் நடக்கும்போது, ராவணனின் தம்பி,  அண்ணனின் தகாத எண்ணம் (அயலான் மனைவி சமாச்சாரம்)  பிடிக்காமல், அண்ணனின் எதிரியோடு கூட்டு சேர்ந்துக்கறார். எல்லோருமாத் திரும்பி அயோத்யாவுக்கு வர்றாங்க.  முடி சூட்டும் விழாவும் நடக்குது.

விழாவுக்கு வந்து சிறப்பித்தவங்களுக்கு  ரிட்டன் கிஃப்டு  கொடுக்கும் சமயம்,  சூரிய குல அரசர்கள் பூஜித்து வந்த ரங்கவிமானத்தை  விபீஷணனுக்கு தாரை வார்த்துட்டார் ராமன். அவனும்  ரொம்பவே மகிழ்ச்சியோடு  அதை இலங்கைக்குக் கொண்டு போறான், கீழே எங்கேயும் வைக்கக்கூடாது என்ற நிபந்தனையோடு!

அநேகமா,  அவன் கிளம்புனதும், அயோத்யா  அரண்மனையில் சண்டை ஆரம்பிச்சுருக்கும். " நீங்க செஞ்சது நல்லா இருக்கா?  பரிசு கொடுக்கணுமுன்னாபொன்னும் பொருளுமாக் கைநிறையக் கொடுத்தனுப்பாம,  வழிவழியா நம்ம  முன்னோர்கள்  பூஜித்து வந்த  ரங்கவிமானத்தைத் தூக்கிக் கொடுக்கலாமா?  எப்பேர்ப்பட்ட தேவலோகத்து சமாச்சாரம். இனி அம்மான்னா வருமா? அய்யான்னா வருமா? "  பிடுங்கல் தொடங்கி இருக்கும்! (நானா இருந்தால்...... என்று  நினைச்சுப் பார்த்தேன்..ஹிஹி)

"கொடுத்தது கொடுத்ததுதான்.  அதைப்போய் இப்பத் திருப்பிக் கேட்டால் அல்பமா இருக்காதா?  இப்ப என்னை என்னா செய்யச் சொல்றே? " ( கோபால்)

அப்ப ஒன்னு செய்யலாம். என்னமோ பழமொழி சொல்வாங்களே... அதி ஏமிட்டி? ஆ...  சூழ்ச்சி  சேஸ்த்தாம்னு தேவர்களிடம்  சொல்லப்போக பக்காவா 'ஆபரேஷன் ரங்கவிமானம்'  உருவாச்சு.  தேவர்கள் சூழ்ச்சி செய்வதில் கில்லாடிகள் இல்லையோ!

'ஆபரேஷன் 'சொல்லுக்கு  நன்றி, அமைதிச்சாரல்!

கூப்பிடு அந்த சூரிய பகவானை. அப்படியே அந்தப் புள்ளையாரையும்! திட்டத்தைத் தெளிவு படுத்துனதும் ஓக்கேன்னு சொல்லிக் கிளம்புனாங்க ரெண்டு பேரும்.

திடீர்னு  இருட்டிக்கிட்டுப் பொழுது போய் சந்தியா நேரமாகுது. கண்ணை உசத்தி சூரியனைப் பார்க்கிறான் விபீஷணன்.  மேற்கே அஸ்தமிக்கும் கோலம் காட்டறான் சூரியன்.  அச்சச்சோ....   மாலை நேரத்து சந்தியாவந்தனம் செய்யணுமே....  கையில் இருக்கும் ரங்கவிமானத்தைக் கீழே வைக்கக்கூடாதுன்னு ஆக்ஞை இருக்கே என்ன செய்யலாமுன்னு சுத்தும் முத்தும் பார்க்க, அங்கே  ஒரு சின்னப்பையன் ஆத்துமணலில் (காவிரி ஆறு)  விளையாடிக்கிட்டு இருக்கான்.

"ஏ பையா, இங்கெ வா. இத்தைக் கொஞ்ச நேரம் பிடிச்சுக்கோ. அஞ்சே நிமிட்லே சந்தி செஞ்சுட்டு வாரேன். தப்பித்தவறிக் கீழே வச்சுறாதே"

"அய்ய... நாமாட்டேன். வூட்டுக்குப் போகணும். ஆத்தா வையும்"

"அதெல்லாம் வையாது ....  நான் பார்த்துக்கறேன்.  செத்தப் பிடி. அஞ்சே நிமிட்"

'ஊம்.... மாட்டேன்....'னு பையன் சொல்ல அவங்கிட்டே கெஞ்சிக் கூத்தாடி(!)  சம்மதிக்க  வைக்கிறான் விபீஷணன்.

பையன் சொல்றான்  'த பாரு, நான்  மூணு வாட்டி உன்னைக் கூப்புடுவேன். அதுக்குள்ள நீ வரலை...  நான் கீழே வச்சுட்டுப் போயிருவேன்'

"அதெல்லாம் அம்மாந்நேரம்  ஆவாது.   தோ... போனேன் வந்தேன்னு  வந்து வாங்கிக்கறேன்"

விபீஷணன், ஆத்துலே இறங்கி  கைகால் கழுவும்போதே,   சீக்கிரம் வாய்யா, சீக்கிரம் வாய்யான்னு மூணுதபா  மெல்லிசாக் கள்ளக்குரலில் ரகசியமாக் கூப்பிட்ட பையன்,  ரங்கவிமானத்தைக் கீழே வச்சுட்டு ஓடிட்டான்.

அவசர அவசரமா சந்தியா வந்தனம் செஞ்சு முடிச்சு  நாலே நிமிட்டுலே ஓடி வந்து பார்த்தா.......  விமானம் கீழே இருக்கு. சட்னு தூக்கி எடுக்கப் பார்த்தால் அது கல்குண்டாக் கனக்குது. கிளப்ப முடியலை:( அடப்பாவி,  சதிச்சயேன்னு  கண்ணை ஓட்டுனா.... பையன்  அந்தாலெ தூரமா ஓடிக்கிட்டு இருக்கான்.  அவனைத் துரத்திக்கிட்டே  போனால்...   பையன் சின்ன வயசுல்லே....  குடுகுடுன்னு ஓடிப்போய் மலைமேலே தாவி ஏறி  ராக் க்ளைம்பிங் செஞ்சு உச்சிக்குப் போயிட்டான்.

விபீஷணனால் அவ்ளோ சட்னு மலை ஏறிப்போக முடியலை.  அப்ப ஏது இந்தப் படிக்கட்டெல்லாம்?   கஷ்டப்பட்டு  மேலேறிப்போய், பையன் தலையில் நறுக் னு ஒரு குட்டு வச்சுக்  காதைப் பிடிச்சுத் திருகப் போறான்.  கையில் சிக்குச்சு யானைக் காது!  என்னடான்னு பார்த்தால் புள்ளையார்  நிக்கறார்.  அப்பப் பார்த்து சூரியன் பளிச்னு ஆகாசத்துலே  வந்து நிக்கறான். அநேகமா மணி ஒரு ரெண்டு ரெண்டரைதான் இருக்கும்:-)

அட ராமா.... இதெல்லாம்  இவுங்க வேலையா?  கைக்கு எட்டுனது, வாய்க்கு எட்டலை பாருன்னு  வெறுங்கையா தன் நாட்டுக்குப்போய்ச் சேர்ந்தான்.
விபீஷணன் குட்டியது,  ஒரு தழும்பா புள்ளையார்  மண்டையிலே  இப்பவும் இருக்காம்!

காவிரிக் கரையிலே விட்டுட்டு வந்த அந்த ரங்க விமானம்தான் இப்போ  நம்ம ரெங்கனின்  வீடு!

மேலே உச்சிப்பிள்ளையார் சந்நிதி  மட்டும் காலை 6 முதல் மாலை 8 வரை திறந்தேதான் இருக்கு. அங்கே போக தனியா ஒரு கட்டணம்  உண்டு.  டிக்கெட் விற்பனையில் இருந்தவர்,  போறீங்களாமான்னார்.   வேணாமுன்னு தலையை ஆட்டி வச்சேன். இங்கே  மலைக்கோட்டை வரை  ஏறும் படிகளை விட  புள்ளையார் படிகள் இன்னும் கொஞ்சம்  ஸ்டீப்பா இருக்கும். இங்கிருந்தே  புள்ளையாருக்கு ஒரு கும்பிடு.

திருச்சி என்றதும் மலைக்கோட்டையும் உச்சிப்பிள்ளையாரும்தான் சட்னு மனசுக்குள் வருவாங்க. அட்டகாசமான லேண்ட் மார்க்!  இந்த மலையே மூவாயிரத்து ஐநூறு  பில்லியன் வருசப்பழசுன்னு  ஆராய்ச்சி செய்து சொல்லி இருக்காங்க.  இதுலே கோவிலும் ஒரு ஆயிரம், ரெண்டாயிரம் வருசத்துக்கு முன்னே கட்டுனதாம்.  எப்படித்தான் மலையைத் துளைச்சு இப்படி எல்லாம் கட்டிப்போடும் ஐடியாக்கள் வந்துச்சோ!


அங்கங்கே இருந்த சாளரங்கள் வழியா  எட்டிப் பார்த்தேன். காட்சிகள்  அருமையோ அருமை!

மறுபடியும்  417 படிகள் இறங்கி வந்தோம்.  ஏறும்போது  25 நிமிட்.  இறங்கும்போது  வெறும் 18 நிமிட் தான். படி ஏறுவது கஷ்டம் என்றாலும்  வேடிக்கை பார்த்து நின்னு  நின்னு  போனேன்  பாருங்க. (ஸூட் கேஸில் டைகர் பாம் இருக்குன்னுதான் நினைக்கிறேன்)

கீழே  வந்து சேர்ந்தால் லெட்சுமி லஞ்சுக்குப் போயிருக்காப்லெ:-) சின்ன  சந்து மாதிரி  இருக்கும் தெருவைக் கடந்து எதுத்தவாடைக்குப்  போனோம்.  கோவில் கடைகளைக் கடந்து படிகள் இறங்கிப் போனால்  மூணுபக்கமும் தடுப்புக் கம்பிகளுக்கு   மத்தியில் நம்ம மாணிக்க விநாயகர் இருக்கார்.  ஸ்பெஷல் தரிசனத்துக்கு  டிக்கெட் எடுக்காதீங்கன்னு கோபாலிடம் கண்டிப்பாச் சொன்னேன். எல்லாம் போன முறை அனுபவம்தான் காரணம்:-)

 கில்லாடிப் புள்ளையார்   விவரம் இங்கே!


கடைகளைச் சும்மா ஒரு பார்வை பார்த்துட்டு, இந்த வாசலில் இருந்து  எதுத்தாப்லே இருக்கும் மலைக்கோட்டைக்குப்போகும் வாசலையும் உச்சியில் தெரியும் புள்ளையார் கோவிலையும் க்ளிக்கிட்டுக் கிளம்பிட்டோம்.


 இன்னும் பல்லவர் குகை எல்லாம்பார்க்கவே இல்லை.  அடுத்த பயணத்தில் ஒரு நாள் தாயுமானவருக்கு  இப்பவே  எடுத்து வச்சுட்டேன்!


சாப்பாட்டு நேரம் வந்தாச்சுன்னு சங்கீதாவுக்குப் போனோம்.  இது ஷ்ரீ சங்கீதா'ஸ்.   இதுலே சிந்தூர் ஹாலுக்குள்ளே,  ஷாங்காய் இட்லியும், சைனீஸ் பராத்தாவும்,  மசாலா ஆப்பமும்  கிடைக்குமாம்!  இங்கேயே துளசி ஏஸி டைனிங் இருக்குன்னாலும்  அங்கே இடமில்லை.  என்ன  அநியாயம் பாருங்க. துளசிக்கே  துளசியில் இடமில்லை(யாம்).

எனக்கு   ப்ளெயின் ஆப்பம் வித் தேங்காய்ப்பால், கோபாலுக்கு  சவுத் இண்டியன் ஸ்பெஷல் மீல்.  அப்படி  என்ன ஸ்பெஷலாம்? ஒன்னுமில்லை  ஒரு ரஸகுல்லா!  அதை நான் லபக்கிட்டேன்:-)


மீண்டும் அறைக்கு வந்து  ஒருமணி நேர ஓய்வு.   இன்றே இப்படம் கடைசி என்றதால்  மூணேகாலுக்கே கிளம்பிட்டோம்.  ரெங்கா....  தோ வரேன்டா.....

தொடரும்.......:-)PINகுறிப்பு:   சித்திர மண்டபத்துப் படங்களை அங்கங்கே போட்டுருக்கேன். கதைக்கும் இதுக்கும் சம்பந்தம்தேடவேண்டாம்:-)

42 comments:

said...

கோயிலுக்கு சென்றால் கூட இந்தளவு கவனிப்போமா என்று தெரியவில்லை... படங்கள் அனைத்தும் அருமை அம்மா...

said...

ஆற அமர சுத்தி காமிச்சுட்டீங்க .

said...

துளசியில் நாங்களும் சாப்பிட்டோம், பரவாயில்லை! ஆனால் ஒரிஜினல் சங்கீதாவில் அதான் பக்கத்திலேயே இருக்கே அங்கே ரொம்ப சுமார் தான்! :(

said...

அஞ்சு குரங்கு எங்க கண்ணிலேயும் படலை! நாங்க ஒரே டிக்கெட் தான் எடுத்து மேலே பிள்ளையார் வரை போய்ப் பார்த்தோம். உங்களுக்கு மட்டும் ஏன் தனியா உச்சிப் பிள்ளையாரைப் பார்க்கத் தனி டிக்கெட்டுனு சொன்னாங்க? புரியலை! அப்போப் போய்ப் பார்த்தது தான் உ.பி.யை அதுக்கப்புறமாவேக் கால் பிரச்னை ஜாஸ்தி ஆகி உடம்பின் சக்தி எல்லாம் செல்வாகிட்டது ! மருத்துவர் இனிமேலே மலையே ஏறாதீங்கனு நிபந்தனை விதிச்சிருக்கார். :)

said...

"லக்ஷ்மி" எங்க காமிராவிலும் இடம் பெற்றிருக்கிறாள். மாணிக்க விநாயகரை நான் எப்போவுமே காத்தாட விஸ்ராந்தியா இருந்து தான் பார்த்திருக்கேன். உங்களுக்கு ஏன் டிக்கெட்? புரியலையே!

said...

விழாக்காலங்களில் கூட்டம் இருக்கும். அப்போ நாங்க எந்தக் கோயிலுக்கும் செல்வதில்லை.

said...

ஓ.. துளசி கோபால் "சம்பாஷணை"..

//பரிசு கொடுக்கணுமுன்னா பொன்னும் பொருளுமாக் கைநிறையக் கொடுத்தனுப்பாம, வழிவழியா நம்ம முன்னோர்கள் பூஜித்து வந்த ரங்கவிமானத்தைத் தூக்கிக் கொடுக்கலாமா? இனி அம்மான்னா வருமா? அய்யான்னா வருமா? "

"கொடுத்தது கொடுத்ததுதான். அதைப்போய் இப்பத் திருப்பிக் கேட்டால் அல்பமா இருக்காதா? இப்ப என்னை என்னா செய்யச் சொல்றே? " ( கோபால்)//

இந்தத் "துளசி" ராமாயணம், "துளசி" ராமாயணம் -ன்னு சொல்லுறாகளே.. அது நீங்க எழுதுனது தானா டீச்சர்?:)
என்னவொரு கலக்கலான திரைக்கதை + உரையாடல்

--

தாயுமானவர் ஈசனை இன்றைக்கெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம்!
தாயும் ஆன அன்பு!
மனசு கரைஞ்சா தான், இப்படியெல்லாம் அன்பு செய்யத் தோனும்;
அவரைப் போய் "லிங்கமா" வச்சிட்டாங்களே-ன்னு பல முறை யோசிச்சிருக்கேன்.
அதே, "தாய் உருவத்தில்" ஈசனை வச்சிருந்தா தான் என்னவாம்?

திருச்சி, மலைக்கோட்டைப் படிக்கட்டுகள் = என் சிறு வயது, சறுக்கி விளையாடும் தலம்:)
அப்பா, தஞ்சைக்கு மாற்றலாயிருந்த போது, சென்னையில் எங்கள் படிப்பைக் கலைக்காம, அவரு மட்டும் தனியா இருந்தாரு;
வார இறுதிக்குச் சென்னை வந்துருவாரு;
ஆனா, நாங்க மாச இறுதிக்குத் தஞ்சை-திருச்சி போயீருவோம்:) எல்லா ஆண்டு-விடுமுறைக்கும்!

தஞ்சையை விட, திருச்சி தான், சின்னப் பையனாகிய எனக்கு இனிக்கும்:)
அதுவும், state highway, bhel, tiruverumbur வழியாப் போகாம,
ஆத்தோரமா.. கல்லணைச் சாலை வழியா, திருச்சி செல்லுதல் பெருஞ் சுகம்!
அதுவும் இரவில் செல்லும் போது, திருக்காட்டுப்பள்ளி/பூதலூர் படித்துறைகளில் நிறுத்திப் பார்த்தா..
காவிரி, திங்கள் ஒளியில் பளபள-ன்னு ஜொலிப்பா:)
அப்படியே, திருவையாறு கணேச அய்யர் கடையில வாங்குன அசோகா + வெங்காயப் பக்கோடா:)

கல்லணை-திருச்சி சாலை, அவ்ளோ நல்லா இல்லீன்னாலும், முடிவில் வரும் பாருங்க, திருவானைக்கா sideways கோயில்; அதன் வழியா நொழைஞ்சி அகிலாவைப் பார்க்கும் சுகமே சுகம், பரம சுகம்!
திருவையாறு அசோகா/பக்கோடா தீரும் முன்னரே, திருவானைக்கா பார்த்தசாரதி விலாஸ்.. சுடச்சுட நெய்த் தோசை:) நேரா LIC Guest House! அரங்கன்-ல்லாம் அடுத்த நாளைக்குத் தான்.. :)

said...

//ரெங்கா.... தோ வரேன்டா//

அதென்ன "ரங்கா"-வோ?:) "அரங்கா" தானே சரி?

"ரங்கம்"-ன்னா வண்ணம், சம்ஸ்கிருதத்தில்! அவருக்கு ஏது வண்ணம்? அட்டைக் கருப்பு:))
"அரங்கம்" என்பது, ஆற்றிடைத் திட்டு; சிலப்பதிகாரத்திலேயே வரும்! ஆற்றிடைப் பள்ளி கொண்டுள்ளதால், "அரங்கன்"

ஐயனே "அரங்கா" என்று அழைக்கின்றேன் - குலசேகராழ்வார் பாசுரம்!

மெய்-இல் வாழ்க்கையை மெய் எனக் கொள்ளும் - இவ்
வையம் தன்னொடு கூடுவது இல்லையாம்!
"ஐயனே, அரங்கா" என்று அழைக்கின்றேன்.....
மையல் கொண்டொழிந்தேன் என்தன் மாலுக்கே! = இது ஆழ்வார் திருமொழி!

இது தெரியாம, "ரெங்கா ரெங்கா ரெங்கா" -ன்னு கோபுரத்தில் Serial Light போட்டு வச்சிருப்பாய்ங்க:) அந்தக் கோபுரம் பேரே "ரெங்கா ரெங்கா கோபுரம்" -ன்னு ஆயிருச்சி; All this century koothu of some ppl who settled in Thiruvarangam:)

said...

அந்த Church Photo செம அழகு டீச்சர்,மலைக் கோட்டையில் இருந்து!
St Lourdes Church - போனீங்களோ?

மலைக்கோட்டை Magic நேரங்கள்-ன்னே ஒன்னு உண்டு!
= விடிகாலை (அல்லது) மாலை, பொழுது சாயும் நேரம்

திருச்சி-அரங்கம்.. விளக்கெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் மின்னி மின்னி வர,
சூரியன் சாயும் நேரத்தில், மலைக்கோட்டையில் இருந்து பார்த்தா, திருச்சி-திருவரங்கம் தான் பூலோக வைகுந்தம்:)
மலைக்கோட்டையில் இருந்து கீழே இறங்கினா, அந்தக் குறு குறு குறுக்குச் சந்துகள், வேற வைகுந்தம்:)
பெரும் தெப்பக் குளம் கூட உண்டு; நாயக்கர் ஆட்சியில், அரியநாத முதலியார் கட்டியது; இப்ப எப்படி இருக்கோ?
திருச்சித் தெருக்களில் நடப்பதே சுகம்! பாலத்தில் நடப்பது, அதை விடப் பெருஞ் சுகம்!

ஒங்க லட்சுமி யானைக்குட்டி, ரொம்ப அழகா இருக்கா!


said...

திருவையாறு கணேச ஐயர் ஹோட்டல் எல்லாம் இப்போ இல்லை! :( அதே போல் திருவானைக்காவில் பார்த்தசாரதி ஹோட்டலில் ஒரு காலத்தில் நல்லா இருந்திருக்கலாம். இப்போ ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப மோசம்! :(

said...

திருவையாறு கணேச ஐயர் ஹோட்டல் எல்லாம் இப்போ இல்லை! :( அதே போல் திருவானைக்காவில் பார்த்தசாரதி ஹோட்டலில் ஒரு காலத்தில் நல்லா இருந்திருக்கலாம். இப்போ ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப மோசம்! :(

கமென்ட் போச்சானு தெரியலை. எரர் காட்டிச்சு! :(

said...

//ஆத்தோரமா.. கல்லணைச் சாலை வழியா, திருச்சி செல்லுதல் பெருஞ் சுகம்!//

அப்படி நினைச்சு ஒரே ஒரு முறை கும்பகோணத்திலிருந்து கல்லணை மார்க்கமா திருச்சி வந்தப்போ இந்த மணல் லாரிகளால் பட்ட அவஸ்தை! சொல்ல முடியாது! வழியே இல்லாமால் அடைத்துக் கொண்டு நம்மையும் போக விடாமல், அவங்களும் போகாமல்! வாழ்க்கையே வெறுத்துப் போச்சு! ஆறரை மணிக்குக் கல்லணை ஆரம்பச் சாலையில் நுழைந்த நாங்கள் எட்டரை மணிக்குத் தான் கல்லணைக்கு அருகே வர முடிந்தது. வீட்டுக்கு வரச்சே ஒன்பது மணிக்கு மேல் ஆச்சு. இப்போல்லாம் அந்த வழியை விரும்புவதே இல்லை. காலையில் போகும்போது ஒரு மாதிரி (கவனிக்கவும் ஒரு மாதிரித் தான்) சமாளித்துப் போயிடலாம். ஆனால் திரும்பும்போது மாட்டினோம்! தொலைந்தோம்! :(

said...

கதை ரொம்பவே சூப்பர் கேட்டிருந்தாலும் உங்க வார்த்தைல கேக்கறதுக்கு சுவாரஸ்யமா இருக்குது...டீச்சர்ல...அதான்....

அதானே இந்த தேவர்கள் என்னமா மாய்மாலம் எல்லாம் பண்ணறாங்கப்பா...அவங்களுக்கு காரியம் ஆகணுமின்னா...ரொம்ப மோசம் தான்...

புகைப் படங்கள் அருமை (கீதா: நானும் கூட எங்க போனாலும் இந்த மூணாவது கண் இல்லாம போறதில்லை இப்ப அதுவும் ப்ளாக் ஆரம்பிச்சப்புறம் ஆனா பாருங்க பல நல்ல இடங்கள்ல அதுக்கு 144 போட்டுடறாங்க...)

பிள்ளையார் கோயிலுக்குத் தனி டிக்கெட்டா....நாங்க ஒரே டிக்கெட்லதானே போன நினைவு.....ம்ம் இப்ப புதுசு போல இது...

அருமையான நடையில் எங்களையும் அழைத்துச் சென்று விட்டீர்கள்....படியும் ஏறிட்டமே!!! ஹஹ்..ஹ

said...

உச்சிப் பிள்ளையார் கோவில் பிராகாரத்திலிருந்து, காவிரி ஆறின் பிரம்மாண்டத்தைப் பார்க்கமுடியும். திருவரங்கத்தைச் சுற்றி ஓடும் ஆற்றின் (பொதுவாக ஆற்று மணல்பகுதிகள்) பாதை ரொம்ப அருமையாக இருக்கும். தாயுமானவர் சன்னிதியைவிட்டு உச்சிப் பிள்ளையார் கோவிலுக்குப் போக ஆரம்பிக்கும் இடத்தில் பிரசாதக் கடையும் (பஞ்சாமிருதம்) உண்டு.

கீதா மாமி... அந்த நெய் தோசை ரொம்பக் குறையாக இல்லை. மாடர்ன் லுக், சுத்தம் இவற்றைப் பராமரித்தால் நன்றாக இருக்கும்.

said...

ஆஹா...
இந்த உச்சுப்புள்ளையார் கோவில்
படிகள் லே எத்தனை தரம்
ஏறிருப்போம் இறங்கிருப்போம் .

1962 முதல் 1968 வரை.

(நானும் ஊட்டுக்கிழவியும் )
அது சரி, அப்ப அது கிழவி இல்ல.
ஆனா....அந்த ஆனை அப்படியே கீதே...
சுப்பு தாத்தா.
www.subbuthathacomments.blogspot.com
www.subbuthatha72.blogspot.com

said...

//.நாங்க ஒரே டிக்கெட்லதானே போன நினைவு//

தில்லைக்காட்டு க்ராநிகல்ஸ் துளசி தரன் , அம்மா கரெக்ட் தான்.

அந்தக் காலத்துலே எங்களுக்கு எல்லாம் கூட அரை டிக்கட் தான்

நானும் எங்க ஊட்டுக்காரியும் கூட அரை டிக்கடுலே தான்
அடிக்கடி போய் இருக்கோம் இல்ல...

அதுலேயே ஒரு நாளைக்கு இரண்டு மூணு தரம் கூட போயிருக்கோம்.

எப்படி அப்படிங்கரீகளா !!
1960 காலத்து ரகசியம்.இப்ப சொல்ல முடியுமுங்களா ??

சுப்பு தாத்தா.

said...

திருச்சி ஒரு வித்தியாசமான ஊர். போன முறை போனப்போ சிக்னல் எல்லாம் மக்கள் ஒழுங்கா பாத்துப் போற மாதிரி இருந்துச்சு. திருச்சில கார் ஓட்டுனதுல்ல. சென்னைல ஓட்டிய பிறகு திருச்சில லேசாத்தான் இருக்கும்னு நெனைக்கிறேன்.

மலைக்கோட்டை ஒரு அருமையான எடம். அதச் சுத்தியிருக்கும் கடைகளும் ஜேஜேன்னு திரியும் கூட்டமும் ஒரு இலவசப் பொழுதுபோக்கு. மயில் மார்க் பூந்தி அடுத்த வாட்டி மறக்காம வாங்கிருங்க. நல்ல பெரிய பெரிய உருண்டைகளா மெத்து மெத்துன்னு இருக்கும்.

மலைக்கோட்டை தாயுமானவர் கோயில்ல வேண்டிக்கிட்டு நெறைய பேர் வாழப்பழம் கொடுப்பாங்களே. ஒரு வேளை அது மாலைல தான் கொடுப்பாங்களோ!

உச்சிப்பிள்ளையார் கோயில்ல காத்து அள்ளும். அங்கிருந்து பாத்தா அரங்கம், ஆனைக்கா, பிலோமினாஸ் சர்ச்சுன்னு எல்லாம் தெரியும். அகண்ட காவிரியும் அழகு.

லெட்சுமிக்கு எல்லாரும் திங்கக் கொடுக்கக்கூடாதுன்னு சொல்றது நல்லதுதான். நம்ம வயிறே நாலு நாள் நாலு எடத்துல தின்னா நாலு நாளுக்குப் படுத்துது. வாயில்லா லெட்சுமி என்ன செய்வா பாவம்.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

இன்னும் நல்லா கவனிக்கலையேன்னுதான் எனக்கு மனக்குறையாக்கும்!

said...

வாங்க சசி கலா.

போன நேரம் சரி இல்லைப்பா. ஆற அமர இன்னொருக்காப் போய்ப் பார்க்கணும். அஞ்சு குரங்கு விட்டுப்போச்சேன்னு இருக்கேன்:-)

said...

வாங்க கீதா.

துளசியில்தான் இடம் கிடைக்கலையேப்பா:(

கூட்டமெல்லாம் உச்சிக்குப்போகுதுன்னு அதுக்குத் தனி காண்ட்ராக்ட் விட்டுருக்காங்களோ என்னவோ! அதிகம் ஒன்னும் இல்லை ஒரு ரூபாய்ன்னு நினைவு.

மாணிக்க விநாயருக்கு இலவச தரிசனமே போதும்தான். போனமுறை அபிஷேகத்துக்குன்னு ஸ்பெஷல் டிக்கெட் போட்டுருந்தாங்க. நம்ம கோபால் அது மேலே போய் தாயுமானவரை தரிசிக்கன்னு நினைச்சுக்கிட்டு வாங்கிட்டார்:-) அவருக்குள்ள விமானத்துக்குத் தங்கத்தகடு போர்த்தி இருக்காங்க. செலவு அதிகம் செல்வப்பிள்ளையாருக்கு!

said...

வாங்க கே ஆர் எஸ்.

//இந்தத் "துளசி" ராமாயணம், "துளசி" ராமாயணம் -ன்னு சொல்லுறாகளே.. அது நீங்க எழுதுனது தானா டீச்சர்?:)//
ஆமாம். அது பழைய ஜென்மம் ஒன்றில் எழுதியது. இன்னும் இருக்கா என்ன?
ரங்கனுக்கு முன்னால் இருக்கும் 'அ' கொயட் லெட்டர் என்பதால் உங்க கண்ணுக்குப் புலனாகலை போல!
அதுசரி. ரங்கா கோபுரத்தில் ரங்காவுக்கு முன்னால் 'ஸ்ரீ' ' இருக்கே.... அதை வடமொழித் திணிப்புன்னு சொல்லலையா ? பாருங்க...நானே எடுத்துக்கொடுக்கறேன்:-))))

திருச்சியில் வேறெங்குமே போகலை. அந்த தேவாலயத்துக்கு அடுத்தமுறை கட்டாயம் போகணும். இன்னும் மலையைச் சுற்றி 11 புள்ளையார்கள் இருக்காங்களாமே, அவுங்களையும் கண்டுக்கணும்.

நீங்க சொல்லும் அந்த மேஜிக் நேரம் 1990 ஜனவரியில் லபிச்சது, ஒரு மாலை நேரத்தில்.
கீதாம்மா உங்களுக்குச் சரிக்குச்சரி பதில் சொல்லிக்கிட்டு இருக்காங்க. அங்கே பாருங்க:-))))

//ஒங்க லட்சுமி யானைக்குட்டி, ரொம்ப அழகா இருக்கா!//
ஆ.... அவள் லெட்சுமியாக்கும். இப்படி யானைக்கு(ம்) அடி சறுக்கிடுச்சே:-))))))))))))

said...

ஆஹா.... கீதா,

டேங்கீஸ் ! நான் அசோகாவையும் பார்க்கலை, நெய்த்தோசையையும் ருசிக்கலை. அப்புறமெங்கே பகோடா?

said...

@ கே ஆர் எஸ்,

ஆபரேஷன் ஆத்மலிங்கம்.... கோகர்னாவில் ! படக்கதை இதுலே:-)

http://thulasidhalam.blogspot.co.nz/2010/04/blog-post_23.html

said...

//கீதா மாமி... அந்த நெய் தோசை ரொம்பக் குறையாக இல்லை. மாடர்ன் லுக், சுத்தம் இவற்றைப் பராமரித்தால் நன்றாக இருக்கும்.//

நெல்லைத் தமிழன், ஒண்ணும் கேட்காதீங்க! நீங்க எப்போச் சாப்பிட்டீங்களோ தெரியலை! நாங்க கடந்த ஒரு வருஷத்துக்குள்ளே தான் பார்த்தசாரதி கடை நெய்த் தோசை (!!!) சாப்பிட்டிருக்கோம். சொதப்பலில் முதல் ரகம்! சாம்பார், சட்னி வகையறா அதுக்கு மேலே மோசம்!

துளசி,

அசோகா திருவையாறிலே இப்போக் கிடைப்பது அவ்வளவா நல்லா இல்லைனு கேள்வி! அதனால் வருத்தப்படாதீங்க. மதுரை போனால் மேலச் சித்திரை வீதி, வடக்குச் சித்திரை வீதி மூலையில் கோபு ஐயங்கார் கடையில் மத்தியானம் 2 அல்லது 3 மணியிலிருந்து கிடைக்கும் பஜ்ஜி, தவலை வடை, வெள்ளை அப்பம் வகையறாக்களைத் தவறாமல் ருசி பார்க்கவும். எனக்குத் தெரிஞ்சு இந்தக் கடையில் தான் அந்தக் காலத்திலே இருந்தே இரண்டு வகைச் சட்னிகள் அறிமுகம். வெறும் பச்சைமிளகாய், கொஞ்சூண்டு கொ.மல்லி வைத்து அரைத்துக் காரசாரமா பஜ்ஜிக்குக் கொடுப்பாங்க! அதைத் தவிரத் தேங்காய்ச் சட்னி, தக்காளிச் சட்னியும் உண்டு. இட்லி, தோசைக்குத் தக்காளிச் சட்னியை முதல் முதல் அறிமுகம் செய்து வைத்தது மதுரை தான்னு நினைக்கிறேன். :)))) திங்கட்கிழமையா இருந்தால் கோபு ஐயங்காருக்குப் போகாதீங்க. அன்னிக்கு வார விடுமுறை நாள். :)

said...

கோபு ஐயங்கார் கடை மசால் தோசையும் (மாலையில் தான் கிடைக்கும்) ரொம்பவே ஸ்பெஷலாக்கும். அப்புறமா ஜிரா கேட்டிருக்கும் தாயுமானவருக்கு வாழைத் தார் சமர்ப்பிப்பது என்பது காலை, மாலை இருவேளையும் உண்டு. கீழேயே சீட்டு வாங்கிக் கொண்டால் அவங்களே பழத்தாரையும் அர்ச்சனைக்கூடை சகிதம் மேலே கொண்டு வந்து சேர்த்துவிடுவார்கள். அங்கேயே விநியோகமும் செய்யச் சொல்வார்கள்.

said...

வாங்க துளசிதரன்.

கோவில்களில் கேமெரா சார்ஜ் ஒன்னு வசூலிச்சால் அவுங்களுக்கு ஒரு கூடுதல் வருமானம் ஆச்சு. எங்கே, எந்த இடத்தில் படம் எடுக்கக்கூடாது ன்னு சொல்லிட்டால் நாம் அனுசரிக்க மாட்டோமா என்ன? மூலவரை எடுக்கக்கூடாதுன்றது பொதுவான நியமம் நம்மஊரில். ஆனால் சிங்கையில் பாருங்க....ஜாம் ஜாமுன்னு போஸ் கொடுப்பார். நாமும் க்ளிக்கிக்கலாம். அங்கே ஒன்னும் கோவிலின் ஐஸ்வர்யம் பாழானதாத் தெரியலையே! நம்மூர்களில்தான் டிக்கெட் வாங்கினாலும் கூட பணியாளர்களின் நாட்டாமை இருக்கே.... அப்பப்பா.... நரிக்கு நாட்டாமை கொடுத்த மாதிரிதான்:-)
ஒரு சமயம் சென்னை காதிக்ராஃப்ட் லே இருக்கும் காந்தி சிலையைக் க்ளிக்க விடலை!!!
மேலே போக இப்ப சமீபத்துலேதான் டிக்கெட் வசூல் ஆரம்பமாகி இருக்கு போல. சாமியைப் பார்க்காம நேர மேலே போகும் கூட்டம்தான் அதிகம்:-)

said...

வாங்க நெல்லைத் தமிழன்.
//தாயுமானவர் சன்னிதியைவிட்டு உச்சிப் பிள்ளையார் கோவிலுக்குப் போக ஆரம்பிக்கும் இடத்தில் பிரசாதக் கடையும் (பஞ்சாமிருதம்) உண்டு. //
அப்படியா? ஒன்னும் என் கண்ணில்படலையே:( கோவில் மூடும் நேரம் என்பதால் அதையும் மூடிட்டாங்களோ என்னவோ? இல்லைன்னா அதை உ.பி பக்கத்துலே இடம் மாத்திட்டாங்க போல! மொத்தக்கூட்டமும் அங்கேதானே. நிதானமா தின்னுக்கிட்டே கடலையும் போடலாமே!

said...

வாங்க சுப்புரத்தினம் ஐயா.
ரொம்ப நாளைக்கு ரொம்பநாள்! மீனாட்சி அக்கா எப்படி இருக்காங்க?
60களில் அக்கா எப்படி கிழவியா இருந்துருக்க முடியும்? இப்பவே மிடுக்காத்தான் இருக்காங்க என் அக்கா, ஆமாம்.
ஒருநாளைக்கு ரெண்டுமூணுதரம் மலை ஏற்றமா? அதான் ஸ்லிம் ப்யூட்டியின் ரகசியமா!!!

said...

வாங்க ஜிரா.

உங்க திருச்சி வர்ணனை அத்தனையும் அழகோ அழகு!
ஆங்.... அந்த வாழைத்தார் பிரார்த்தனையை எழுத விட்டுப்போச்சு. தாயுமானவனை (Male நர்ஸ்!)வேண்டிக்கிட்டு நல்லபடி பிரஸவம் ஆனதும் வாழைத்தார் கொண்டுவந்து சமர்ப்பிக்கறாங்க. எங்களுக்கும் ரெவ்வெண்டு பழங்கள் கிடைச்சது. ரெண்டு பேர் கொடுத்தாங்க. நாந்தான் ஒரு செட் எடுத்து வச்சுக்கிட்டு, இன்னொரு செட்டை ஆளுக்கொன்னு தின்னோம். லெட்சுமிக்குக் கொடுக்கலாமான்னு பாகனைக் கேட்கலாமுன்னு எடுத்து வச்சேன். அப்புறம் லெட்சுமி லஞ்சுக்குப் போயிட்டதால் நம்ம சீனிவாஸனுக்குக் கொடுத்துட்டேன்.

said...

//ஆனால் சிங்கையில் பாருங்க....ஜாம் ஜாமுன்னு போஸ் கொடுப்பார். நாமும் க்ளிக்கிக்கலாம். அங்கே ஒன்னும் கோவிலின் ஐஸ்வர்யம் பாழானதாத் தெரியலையே! //

ஐஸ்வர்யத்துக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை துளசி. ஆகம முறைப்படி கட்டப்பட்ட கோயில்களில் கருவறையைப் படம் எடுக்க விடமாட்டார்கள். அதையும் மீறி இப்போது பல கோயில்களின் கருவறை வீடியோவாக எடுக்கப்பட்டுத் தொலைக்காட்சிகளில் வரத்தான் செய்கிறது. ஆனால் பெரிய கோயில்களில் இது கட்டாயமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. வெளிநாட்டுக் கோயில்களில் ஆகம முறைப்படி கட்டி இருப்பதாகத் தெரியவில்லை. இந்தியாவிலேயே தென்னாட்டில் முக்கியமாய்த் தமிழகத்தில் தான் ஆகம முறையிலான கோயில்கள் உள்ளன.

said...

வாங்க கீதா.

கோபு ஐயங்கார் கடையை ஞாபகம் வச்சுக்கறேன். எப்படியும் திருப்புல்லாணி, ராமேஸ்வரம்,தனுஷ்கோடி பயணம் ஒன்னு பாக்கி இருக்கு.

சட்னி வகையெல்லாம் நம்ம கோபாலுக்குத்தான், அதுவும் காரஞ்சாரமா! எனக்கு ஜஸ்ட் ப்ளெயினா தின்னால் போதும். திங்கள் லீவு... நோட்டட்:-)

வாழைத்தார் குறிப்பிட மறந்துபோச்சு. எங்களுக்கும் பழங்கள் கிடைச்சது.

said...

பாருங்க, மறந்தே போகுது! மேலக்கோபுர வாசலுக்கு எதிரே ஒரிஜினல் நாகப்பட்டினம் கடையில் அல்வா வாங்குங்க. காராச்சேவு அல்வா, மதியம் பனிரண்டு மணியிலிருந்து உ.கி.ம்சாலா ரொம்ப பிரபலம். அல்வா முன்னை மாதிரி ருசி இல்லைனாலும் பரவாயில்லை ரகம். :) அவங்க நம்ம சொந்தக்காரங்க தான்! ஆனால் பெரிய தலைமுறையில் இப்போ யாரும் இல்லை. சொன்னால் புரியாது! :)

said...

வாங்க கீதா.

சிங்கைக் கோவில்கள் ஆகம முறைப்படிதான் கட்டி இருக்காங்கன்னு நினைக்கிறேன். அடுத்தமுறை விசாரிச்சால் ஆச்சு.

ஆதிகாலத்தில் கோவில்கள் கட்டிய காலங்களில் இந்த கேமெரா சமாச்சாரமே கண்டு பிடிக்கப்படலையேப்பா!

போகட்டும், கோவில்களில் கருவறையில் கொஞ்சம் வெளிச்சம் போட்டு வைக்கப்டாதோ.... கருவறை என்றாலே இருட்டுதான் என்று பொருள் என்றாலுமே பளிச்ன்னு லைட் போட்டு வச்சால் சாமி வேணாமுன்னா சொல்வார்?

நம்ம தில்லக்கேணி பார்த்தஸாரதி எப்படிப் பளிச்சுன்னு காட்சி கொடுக்கறார்! நமக்கும் மனசு நிறைஞ்சு போகுதேப்பா. நாகை சௌந்திரராஜனும் ஜெகஜோதியா இருந்தார்.

காலத்துக்கேற்ப கொஞ்சம் மாற்றம் வந்தால் நல்லதுன்னு நினைக்கிறேன்.

திருப்பதியில்தான் ஆக மோசம். ரொம்ப தூரத்துலே பெருமாள். கண்ணை அங்கே அனுப்புமுன் கைபிடித்து இழுத்துக் கடாசிருவாங்க வல்லரக்கியர்.

said...

@ கீதா.

மதுரையில் இதையெல்லாம் தின்னு பார்க்கவே ஒரு ரெண்டுநாள் கூடுதலாத் தங்கணும் போல! செஞ்சுருவோம்:-)

நன்றீஸ்ப்பா.

said...

அட, நீங்க வேறே துளசி, காலை டிஃபனுக்குக் கோபு ஐயங்காருக்குப் போய் மெத்தென்ற இட்லி, சட்னி, சாம்பாரோடு ஸ்பெஷல் தோசை சாப்பிடுங்க மத்தியானம் அங்கே சாப்பாடெல்லாம் கிடையாது. தானப்ப முதலித் தெரு மாடர்ன் ரெஸ்டாரன்டில் சாப்பிடுங்க. சாப்பிடும்முன்னால் அபிடைசர் போல பனிரண்டு, பனிரண்டரைக்கு நாகப்பட்டினம் கடையிலே உ.கி. மசாலா வாங்கிச் சாப்பிடுங்க. அப்புறமா மத்தியானமா கோபு ஐயங்கார் கடையிலே சுமாரா 3, அல்லது நாலு மணிக்குள்ளாக பஜ்ஜி, வெள்ளை அப்பம்/காராவடை/தவலை வடை இதிலே ஏதோ ஒண்ணு இருக்கும். பஜ்ஜி தினமும் உண்டு. சாப்பிட்டுச் சூடான சுவையான ஃபில்டர் காஃபி குடிங்க. சாயந்திரமா கோபு ஐயங்காரிலேயே ஸ்பெஷல் மசால் தோசை சாப்பிடுங்க. முடிஞ்சது விஷயம். (ஹிஹிஹி, வயிறுக்கு நான் பொறுப்பில்லை; இல்லை; இல்லவே இல்லை) தங்க இடம் வேண்டுமா மேலகோபுர வாசலிலேயே பிர்லாவோட சத்திரத்தில் ஏசி நான் ஏசி அறைகள் நன்கு பராமரிக்கப்படுவதாய்ச் சொல்கிறார்கள். நாங்க தானப்ப முதலித் தெரு கதிர் பாலசில் அது 4 ஸ்டார் என்பதைப் பார்த்துட்டுத் தங்கிட்டு அவஸ்தைப் பட்டோம். அப்புறமாத் தான் இதைப் பத்திச் சொன்னாங்க. ஆகவே அங்கேயே தங்கினால் "திங்க" வசதி! எப்பூடி நம்ம டைம் டேபிள்??

நாகப்பட்டினம் கடை அல்வா, காராசேவை வாங்கி வைச்சுக்குங்க. வழி நடைக்கு ஆச்சு! இதெல்லாம் ஒரு பிரமாதமா நம்மை மாதிரி தீனி தின்னி குழுக்காரங்களுக்கு? நாங்க அல்வா, காராச்சேவை வாங்கித் தான் வைச்சுச் சாப்பிட்டுப்போம். வீட்டுக்கு எடுத்துட்டு வந்து கூடச் சாப்பிடலாமே!

said...

அல்வா மணம், காராசேவு மணம், உச்சிப்பிள்ளையார் க தை கலந்து கட்டிப் பூரண கதை. ரவி,ஜிரா ,கீதா மனசை மகிழ வைக்கிறார்கள். நன்றி துளசிமா.

said...

@கீதா,

ஒரே நாளில் இவ்வளவும் உள்ளே தள்ள முடியாதுப்பா. மூணு நாள் போதும். நமக்குத் தங்கல் எப்போதும் அந்த ராயல் கோர்ட் தான். அங்கேயே ஆஜராகிட்டு மூணு நாள் போய் வந்தால் சரியாகும்:-)

நாகப்பட்டினம் கடை அல்வா... நாகப்பட்டினத்திலும் கிடைக்கும்தானே? நமக்கு அங்கேயும் சிலகோவில்கள் பாக்கி இருக்கே!

said...

வாங்க வல்லி.

ஹைய்யோ!! திங்கறதுக்குன்னே மதுரைக்குப் போகணும் இனி. மாமனார் மாமியார் ரெண்டு பேரும் சாமிகிட்டே போயிட்டதால் போடி போகும் வாய்ப்புகள் இனி இல்லைன்னு நினைக்கிறேன்.

said...

//நாகப்பட்டினம் கடை அல்வா... நாகப்பட்டினத்திலும் கிடைக்கும்தானே? நமக்கு அங்கேயும் சிலகோவில்கள் பாக்கி இருக்கே!//

ம்ஹூம், இது ஒரிஜினல் நாகப்பட்டினம் அல்வாவாக்கும்! :) மதுரையில் தான் கிடைக்கும். :)

said...

ஹைய்யோ கீதா!

இப்படியா! வாங்கிடலாம்! அதை ஏன்விடுவானேன்:-)

நன்றீஸ்ப்பா.

said...

தோகை மயில் கொள்ளை அழகு. அருமையான கோணம்.

said...

பதிவு மாறிப் போச்சு:). பின்னூட்டம் இதற்கானது: http://thulasidhalam.blogspot.in/2015/07/blog-post_31.html