பாப்பாவின் முழுப்பெயர் Te Papa Tongarewa. வருசத்தில் முன்னூத்தி அறுபத்தியஞ்சு நாளும் திறந்துருக்கும். காலை 10 முதல் மாலை 6 வரை! இங்கேயெல்லாம் லேட் நைட் ஷாப்பிங் என்று வாரம் ஒரு குறிப்பிட்ட நாளில் கடைகண்ணிகளை இரவு 9வரை திறந்துவைப்பது ஒரு வழக்கம். அதே போல பாப்பாவுக்கும் வியாழன் லேட் நைட் 9 வரை உண்டு!
நியூஸியின் நேஷனல் ம்யூஸியம் இந்த டெ பாப்பா. இதைக் கட்டி முடிக்கவே நாலு வருசமாச்சு ! முப்பத்தி ஆறாயிரம் சதுர மீட்டர் பரப்பு. சுருக்கமாச் சொன்னால் ரக்பி விளையாட்டுக்கான மைதானங்கள் மூணு அமைக்கலாம்! எங்கூர் தேசிய விளையாட்டு ரக்பி என்பதால் இப்படிச் சொன்னால்தான் எங்களுக்குச் சட்னு புரியுமாம்:-))))
கட்டிடம் கட்டப் பயன்படுத்திய ஸ்டீல் கம்பிகளை ஒன்னோடொன்னு இணைச்சு ஒரே கம்பியா ஆக்கினால்.... வெலிங்டனில் இருந்து அண்டை நாடு அஸ்ட்ராலியா ஸிட்னி வரை போகுமாம்.
பாப்பா நிக்கும் இடம் ஏறக்கொறைய அஞ்சேகால் ஏக்கர். இது போதாதுன்னு அக்கம்பக்கம் இருக்கும் துறைமுகப்பகுதியில் இருந்தும், சிட்டிக் கவுன்ஸில் இடத்தில் இருந்தும் லீஸுக்கு கொஞ்சம் இடம் எடுத்துருக்கு பாப்பா!
நிலநடுக்கத்துக்கு ரொம்பவே பிடிச்ச ஊரென்பதால் தாங்கிக்க மட்டும் நூத்தம்பது ஷாக் அப்ஸார்பர்கள் வச்சுருக்காங்க. எந்தப்பக்கம் ஆடுனாலும் கட்டிடம் அரை மீட்டர் நகரும் வரை ப்ரச்சனை இல்லை ! இருநூத்தியம்பது வருசத்துக்கொருமுறை வரும்(!) நிலநடுக்கம் என்றால் ஜூஜுபி! இதே ஐநூறு வருசத்துக்கொருமுறைன்னா.....சின்னதா ரிப்பேர் பண்ணவேண்டி இருக்கு. இதுவே ரெண்டாயிரம் வருசத்துக்கொரு முறை வரும் பூகம்பம் என்றால்..... அப்பக்கூட உள்ளே இருக்கும் பொருட்களுக்கோ, மனிதர்களுக்கோ ஒன்னுமே ஆகாது. ஆனால்.... சம்பவம் நடந்துமுடிஞ்ச பின்னால் உள்ளே இருக்கும் பொருட்களை வெளியே எடுத்து வச்சுட்டுப் புதுக் கட்டிடம் கட்ட வேண்டி இருக்குமாம்! (என்னா பில்டப்பா!!!)
நியூஸியின் தேசிய மொழிகள் மூணு என்றாலும் ரெண்டு மொழிகளில் மட்டுமே எல்லா விளக்கங்களும் போட்டு வச்சுருக்காங்க. அவை இங்லீஷ், மவொரி. அப்ப மூணாவது? இது காது கேட்காதோருக்கான ஸைன் லேங்குவேஜ். ம்யூஸியத்தின் கைடுகள் சிலர் இவர்களுக்கு விளக்கிச் சொல்ல இருக்காங்க என்பதும் குறிப்பிட்டுச் சொல்லணும்தான்.
உள்ளேசுத்திக்காட்டி விளக்கம் சொல்ல கைடட் டூர் கூட இருக்கு. ஒரு மணி நேரம் . இதுக்குக் காசு ஆளுக்கு 14 டாலர். வெளிநாட்டு ஆட்களுக்கு வெவ்வேற மொழிகளிலும் பேசி சுத்திக்காட்டுவாங்க. இப்போதைக்கு, ஃப்ரெஞ்ச், ஜெர்மன், ஸ்பானிஷ், மாண்டெரின், கூடவே மவொரி மொழி பேசும் வழிகாட்டிகள் இருக்காங்க. ஆனால் முன்கூட்டி ஏற்பாடு செஞ்சுக்கணும். ஆடியோ கைடும் வச்சுருக்காங்க. இதுக்கும் ஒரு சார்ஜ் இருக்கு.
நாம் தங்கி இருந்த ட்ராவல் லாட்ஜ்லே இருந்து ஒரு கிமீ தூரத்தில் இருக்கும் டெ பாப்பாவுக்கு பொடிநடையில் நடந்து வந்துருக்கலாம். காரில் வந்ததால் ஒன்வே சிஸ்டத்தால் கொஞ்சூண்டு சுத்துபடியா ஆச்சு:(
ம்யூஸியம் உள்ளே போய் பார்க்க காசு செலவில்லை. முற்றிலும் இலவசம்! ஆனால் கார் பார்க்குக்குக் காசு உண்டு! வண்டியை உள்ளே கொண்டு நிறுத்திட்டு தானியங்கி எந்திரத்தில் டிக்கெட் அட்டையை எடுத்துக்கிட்டுப்போய் வண்டி டேஷ் போர்டில் வச்சுட்டு வந்துரணும். அப்படியே செஞ்சோம்.
முன்வாசல் முற்றத்துலேயே சரித்திரம் ஆரம்பிச்சுருது! ஒரு புறம் மூணு பெரிய பாறைக் கற்கள்! இதுலே ரெண்டு, எழுபத்தியஞ்சாயிரம் வருசங்களுக்கு முன்னே நம்ம எரிமலைகளில் ஒன்னு வெடிச்சப்ப பூமிக்குள்ளில் இருந்து பொங்கி வெளியே வீசப்பட்ட எரிமலைக்குழம்பு உருவாக்கியவை . இன்னொன்னு கொஞ்சம் வயசில் மூத்தது. முன்னூத்தியம்பது மில்லியன் வயசான க்ரானைட் கல். நியூஸி நதியில் கிடைச்சது.
இந்த வருசம் ஏர் நியூஸிலேண்ட் பறக்க ஆரம்பிச்ச எழுபத்தியஞ்சாவது வருசம். விமானஓட்டி உக்காருமிடத்தை கொண்டு வந்து வச்சுருக்காங்க. நல்ல கூட்டம்தான் உள்ளே போய்ப் பார்க்க!
ஃபோயர் உள்ளே நட்டநடுவா ஒரு பெரிய உருண்டைக்கல். பாப்பா சமாச்சாரங்களில் ரொம்பவே வயசில் மூத்தது! 1.4 பில்லியன் வருசம்!!!! தென் ஆஃப்ரிகா வில் இருந்து வந்துருக்கு! எடை அவ்ளோ அதிகம் இல்லை! 790 கிலோதான்! உருண்டைக்கல்லின் விட்டம் 82 செமீ. ஜெர்மனி நாடு உருண்டை பிடிச்சுக் கொடுத்துருக்கு. கல் சுத்தும் அமைப்பின் பீடம் இண்டியன் க்ரீன் க்ரானைட். ஒரு ஐநூறு லிட்டர் கொள்ளளவு தொட்டியின் தண்ணீரின் உதவியால் கல் சுத்துது. உள்ளே வரும் பிள்ளைகள் முதல்லே போய்த் தொடுவது இந்தக் கல்பந்துதான் என்பதால் பயன்படுத்தும் தண்ணீரில் கிருமிநாசினி போட்டுச் சுத்தமா வச்சுருக்காங்க.
இதே தரைதளத்தில் ஒரு பக்கம் கேஃபே, ஒரு நினைவுப்பொருட்கள் விற்கும் கடை, எந்தெந்த இடத்தில் என்னென்ன என்ற ம்யூஸியம் பற்றிய தகவல்கள் எல்லாம் வச்சுருக்காங்க. ரெஸ்ட் ரூம்களும் இருக்கு! மொத்தம் ஆறடுக்கு மாடி! நினைவுப்பொருள் கடையில் ஸர் பீட்டர் ஜாக்ஸனின் சினிமா லார்ட் ஆஃப் த் ரிங்ஸ், ஹாபிட் சமாச்சாரங்கள் பார்த்தா வாங்கறமாதிரி இல்லை விலை:(
ரெண்டாவது தளம் போறோம். Waharoa என்ற பகுதியின் மவொரி குழுவினர் செதுக்கி வச்சுருக்கும் மரச்சிற்பம். இதுக்கே வயசு 109 ஆகி இருக்கு! இன்ஃபோ டெஸ்க் இங்கே தான். நல்வரவு சொல்லி, பாப்பாவின் தகவல்கள் அடங்கிய வரைபடத்தைக் கொடுத்தாங்க. கூடவே சொன்னது 'எஞ்சாய்'. அதுக்குத்தானே வந்துருக்கோம்!
இதைத் தொட்டடுத்த பகுதியிலேயே கட்டில்போல இருக்கைகளைப்போட்டு சுவரில் ஒரு டிவியும் வச்சு எங்கூரைக் காமிச்சுக்கிட்டு இருந்தாங்க. எனக்கான வரவேற்பு!!!! நிலநடுக்கத்தால் மனம் சோர்ந்து போன எங்களை நாடே தைரியம் சொல்லி உற்சாகப்படுத்தியிருக்கு! இது எங்களுக்கு அப்ப தேவையான ஒன்றுதான். 176 பேர் மரணம் என்பது இன்னும்கூட ஜீரணிக்க முடியாத சேதிதான்.
இந்த தளத்திலேயே மலையும் கடலும் என்ற தலைப்பில் காட்சிகள் ஆரம்பிச்சுருது. இயற்கைக் காடுகளில் நடக்கலாம். இதுக்குள்ளே 1400 வகை மரம்,செடிகள் இருக்குன்னா பாருங்க! அங்கங்கே வனப்பறவைகளும் அவற்றின் வீடுகளும்! Bபுஷ் சிட்டி. வனத்தின் தனிமையையும், காட்டொலிகளுமாய் இயற்கையோடு இணைஞ்சு ... மரப்பாலத்தில் நடந்து போகலாம்! நாம் நினைப்பதுபோல் அமைதியான வாழ்க்கை என்ற சமாச்சாரம் காட்டுயிர்களுக்கு இல்லை:( வாழ்க்கையே ஒரு போராட்டம்தான் நொடிக்கு நொடி! உணவுச் சங்கிலியில் சிக்கித்தானே ஆகணும், இல்லையோ! இதுக்கிடையில் சந்ததியைப் பெருக்கும் வேலையும் இருக்கே! சக்தியுள்ளது பிழைக்கும். மனுசனில்தான் மூளையுள்ளது முன்னுக்கு வந்துருது:-)
இதுலே ஒன்னு மட்டும் புள்ளை வளர்க்க சோம்பல்படும் ஜாதி. குயிலம்மா....அடுத்தவன் வீட்டில் ரகசியமாப் பெத்துப் போடுவதுடன் சரி. நல்ல வேளை இது ஒரே ஒரு முட்டைதான் இடுமாம்.
அடுத்த பக்கம் கடல். கடலில் வசிக்கும் ஜீவன்கள். அவைகளை நம்பி வாழ்க்கையை அமைச்சுக்கிட்ட பறவைகள்.
நம்மூரில் எதையும் தொடாமப் பாருன்னு சொல்லிக்கிட்டு இருந்தால் இங்கே தொட்டுப்பார்ன்னு சொல்லியே நிறைய சமாச்சாரம்! குழந்தைகளுக்குன்னே நேச்சர் ஸ்பேஸ் டிஸ்கவரி செண்ட்டர் கூட இருக்கு!
தென் துருவத்தின் கடலில் (Ross Sea )இருந்து உயிரோடு பிடிபட்ட ராக்ஷஸ ஸ்க்விட் (THE COLOSSAL SQUID) இங்கே கண்ணாடிப் பொட்டியில்! சரித்திரம் படைச்ச கணவாய்! 495 கிலோ கனம்! 10 மீட்டர் நீளம்!
நீலத்திமிங்கிலத்தின் நெஞ்சுக்குள்ளேயும் போய் இதயக்கனி யார்னு பார்க்கலாம்!
காட்சிப்பொருட்களின் முழுவிவரமும் பிள்ளைகளுக்கு இங்கே கணினி மூலம். தாமாய் தாமாய் புரிந்து கொள்ளும் விதத்தில். விளக்கப் புத்தகங்களும் வகைவகையாய். இருந்து வாசிக்க இருக்கைகள். வரைந்து படிக்க மேஜைகள்!
குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன்..... ஆராய்ச்சி இன்னும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கு.
காணாமப் போன குடும்பத்தைக் கண்டுபிடிச்சுத் தருவதில் நாங்க கில்லாடிகள்:-))))
இன்னொரு பகுதியில் எங்களுக்குன்னே பல சமாச்சாரங்கள். பூகம்பம் வரும்போது எப்படி இருக்கும் என்பதை 'நேரில்' உணர்ந்துகொள்ளலாம். சின்னதா ஒரு அறை(வீடு) அதுக்குள்ளே போறோம். நிலநடுக்கம் வந்துருது. வீடும் பல திசைகளில் தரையோடு ஆடுது. கூடவே நாமும்.....
எனெக்கென்னவோ இது ரொம்ப சுமாராத்தான் இருக்கு. இதைவிட ஆட்டம் கண்டவங்க நாங்க. ஒரு ஊர் என்றது நகர மையத்துலே இருந்து பல திசைகளிலும் வளர்ந்து வருவதை எல்லோரும் பார்த்திருப்போம். ஆனால் நகர மையம் முழுசும் அழிஞ்சுபோய், நம் கண் முன்னே புது நகர மையம் உருவாகும் சேதி புதுசில்லையோ! கொடுமையும் புதுமையுமான அனுபவம் எங்க கிறைஸ்ட்சர்ச் நகர மக்களுக்குக் கிடைச்சிருக்கே இதை எந்தக் கணக்கில் சேர்க்க? க்ளாஸிக் சிட்டி காணாமப் போய் இப்போ மாடர்ன் சிட்டி . மொத்த சரித்திரமும்போயே போச்:(
இதுலே நாங்க நகர்ந்துக்கிட்டே இருக்கோமாம்!
மாடிக்குப்போறோம். ரத்தம், நிலம், நெருப்பு என்ற தீம்.
வெறும் மலைகளும் காடுகளும் கொஞ்சூண்டு மவொரி இனமக்களும் இருந்த ஒரு இடம் எப்படி நியூஸிலேண்ட் ஆச்சுன்னு சொல்றாங்க. எல்லாம் சமீபத்தில் நடந்தவை (ஒன்லி 175 வருசம்) என்பதால் எல்லாத்துக்கும் ஆவணங்கள் பக்காவா இருக்கு!
1642 இப்படி ஒரு இடம் பஸிபிக் சமுத்திரத்தில் ச்சும்மாக்கிடக்குன்னு தெரியவருது. இதுக்கு ஒரு 400 வருசங்களுக்கு முன்புதான் Polynesians இங்கே வந்து செட்டில் ஆகி புது வாழ்க்கைமுறையில் மவொரிகளா வாழ்ந்துக்கிட்டு இருக்காங்க. கண்ணில் பட்டதை வெள்ளைக்காரன் ச்சும்மா விடுவானோ? கொஞ்சம் கொஞ்சமா இங்கே வந்து ஏற்கெனவே இருந்த மக்களுடன் சண்டை எல்லாம் போட்டு அப்புறம் சமாதானமாகி 1840 லே ப்ரிட்டன் மஹாராணி, உள்ளுர் மவொரி மன்னருடனும், அவருடைய சிற்றரசர்களுடனும் (குழுத்தலைவர்கள்!) ஒப்பந்தம் போட்டுக்கிட்டாங்க.
எங்களை இங்கே இருக்கவிட்டால்.... உங்க நாட்டுக்கான பாதுகாப்பை (? யாரிடம் இருந்து?) நாங்க வழங்குவோம்!
நாலாவது தளத்தில் எட்டு மீட்டர் உயரம் அளவில் இந்த ஒப்பந்தத்தை நகல் எடுத்து மவொரி, இங்லிஷ் மொழிகளில் போட்டு வச்சுருக்காங்க. மவொரிகளுக்கு மொழிபெயர்த்து எழுதிக் கையெழுத்து வாங்கினதில், சில உண்மைகளை எழுதாமல் மறைச்சுட்டாங்கன்ற குற்றச்சாட்டு இன்னும் தொடர்ந்துகிட்டே இருக்கு என்பதும் ஒரு விவகாரம்!
இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்க நமக்குத் தெரியாதா என்ன?
எத்தனை விதமான செடிகள், காய்கறிகள், மிருகங்கள் எல்லாம் எப்பப்போ எப்படி யாரால் வந்துச்சுன்னு தெரிஞ்சுக்கலாம்.
ஆட்டுக்கார நாடான நியூஸிக்கு ஆடுகளைக்கொண்டு வந்த புண்ணியத்தைக் கட்டிக்கிட்டவர் கேப்டன் ஜேம்ஸ் குக். காலக்கட்டம் 1773-1777 வருசங்களில். இப்ப நாட்டுக்கு பணம் சம்பாரிச்சுக் கொடுப்பவைகளில் ஆடுகளுக்கு முக்கிய இடம். ஆடில்லாமல் நாடில்லை!!!!
1982லே ஆளுக்கு 22 ஆடு வச்சுருந்த நாட்டில் இப்போ ஆட்டெண்ணிக்கை குறைஞ்சு போச்சுன்னு அஞ்சுநாளைக்கு முன்னாலே தகவல் உள்ளுர் தினசரியில் வந்துருக்கு. இப்போ எங்களுக்கு ஆளுக்கு ஆறாடுகள்தான்:(
ஆட்டுக்காரர்கள் எல்லாம் மாட்டுக்காரர்களா மாறிக்கிட்டு வரும் அதேசமயம், நாட்டின் ஜனத்தொகை கூடிக்கிட்டுப் போறதும் ஒரு காரணம்!
ஆகாயம் எங்கள் தந்தை, பூமி எங்கள் தாய் என்று வாழும் மவொரி இனத்து சடங்குகள் சிலவற்றைக் கவனிச்சுப் பார்த்தால் நம்ம பழக்கத்தில் உள்ளவைகளைப் போலவே இருக்கு! இந்த மரப்பாத்திரத்தைப் பார்த்தீங்களா? ரொம்பவே அழகா இருக்குல்லே! என்னமாதிரி வேலைப்பாடு! இதுலே என்ன போட்டு வைப்பாங்க?
நஞ்சு போட்டு வைக்கும் பாத்திரம்! குழந்தை பிறந்தவுடன் தொப்புள் கொடியை அறுத்ததும் வெளிவரும் நஞ்சுக்கொடியை (Placenta) இதுலே வச்சுத்தான் மண்ணில் புதைக்கிறாங்க. மாதாவின் வயிற்றில் இருந்து வந்தது மண்மாதாவுக்கே திரும்பிப்போகணும் என்பதுதான். மவொரி சொல்லான Whenua வுக்கு பூமி, நஞ்சுக்கொடி என்ற ரெண்டு பொருள் இருக்கு!
இங்கே நிலத்திலிருந்து கிடைக்கும் பச்சை நிறக் கல்லுக்கு ஒரு தெய்வீகசக்தி உண்டுன்னு நம்பறாங்க. 150 மில்லியன் வருசங்களுக்கு முன்பு உருவான இந்தப் பச்சைக் கல் ஒரு வகையான ஜேட் தான்.
தொட்டுப்பார். உனக்கும் பூமித்தாய்க்கும் உள்ள உறவும் உணர்வும் புரியும்! ஆமாம்... பாதி இங்கெ இருக்கு அப்ப மீதி எங்கெ இருக்கு? கல் கிடைக்கும் ஹோகிடிகா என்ற ஊரில்தான்.
மவொரி மக்கள் பயன்படுத்துவது சந்திரக் கேலண்டர்தான். நிலாதான் சரி. கண்முன்னால் வளர்ச்சியையும் தேய்வதையும் காமிக்கும். சூரியன்.... ப்ச். பொழுது விடிஞ்சு பொழுது போறது மட்டும்தானே? அதுவும் முக்கால்வாசி நாள் இருக்கற இடம்கூடத் தெரியாதே:(
மீன் பிடிக்கும் கொக்கி, வாழ்க்கையின் வளத்தைக் குறிக்கும் சின்னம்! நல்லா இருங்க என்ற ஆசி வழங்கணுமுன்னா இந்த கொக்கியை அன்பளிப்பாக் கொடுப்பாங்க. வளமோடு வாழ்க!
சொன்னா நம்ப மாட்டீங்க.....ஸ்டேட்டஸ் சிம்பலா இங்கே இருப்பது என்னன்னு பார்த்தால்..... ஹைய்யோ!!!! என் க்ருஷ்ணா.... உன்னுடைய மயில்தானா!!!!! 1843 லே இங்கிலாந்துலே இருந்து கொண்டு வந்த மயில்கள்! உயர்குடி தலைவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியுமாம்! நல்லா இருக்கா இந்த ட்ரெஸ்?
காடுகள் திருத்தப்பட்டு நாடான கதைகள் எல்லாமே விவரமாகக் கண்முன்!
இன்னொரு பகுதியில் இங்கே எதுக்காக நாட்டுக்குள் நுழையும் பொருட்களுக்குத் தீவிரக் கண்காணிப்புன்னு சொல்லுது. முக்கியமாக பழங்கள் காய்கறிகள் இவை வந்து சேர்வதற்குள் எப்படிக் கெட்டுப்போய் அதனால் சுத்தமான தீவு நாட்டில் கிருமிகள் பரவி இயற்கை வளத்தைக் கெடுக்குதுன்னு காண்பிக்கும் இடத்தில் மரப்பொட்டிக்குள் நெற்றியில் பொட்டு வச்ச பெண் தலை! என்ன சொல்ல வர்றாங்க? இப்படி அநியாயம் செய்வது இந்தியர்கள் என்றா? இதென்னடா நமக்கு வந்த சோதனை.... ஙே..........
மூணு நிலை பார்த்தாச்சு. மீதி மூணு அடுத்த பதிவில் பார்க்கலாம். பாப்பா ஒன்றில் அடங்குவாளா என்ன :-)))))
தொடரும்:-)

8 comments:
படங்களும், விளக்கங்களும், தகவல்களும் அசர வைக்கின்றன அம்மா... யப்பா...!
அங்கல்லாம் ஊருக்கு ஊர் கட்டாயமா ஒரு அருங்காட்சியகம் இருக்குமோ?
பாப்பா பெரிய பாப்பாதான்.
நிலநடுக்கத்தைத் தாங்கி நிக்குற மாதிரி இப்படியொரு கட்டிடம் இருக்குன்னு நெனச்சா வியப்பாதான் இருக்கு. மத்த கட்டிடங்கள விட இதுக்குச் செலவு கூட ஆகும்னு நெனைக்கிறேன். இனிமே எல்லாரும் இது மாதிரியாக் கட்டிக்க வேண்டியதுதான்.
வெள்ளைக்காரன் யாரத்தான் ஏமாத்தல. ஏமாத்திட்டான்னு சொல்றோம். ஆனா வலியதே பிழைக்கும்னு உலகநியதியையும் ஒத்துக்கிறோம். அந்த ஆண்டவந்தான் எதாச்சும் எளியாருக்குச் செய்யனும்.
கிட்டத்தட்ட இதே மாதிரியான கருப்புக்கல்லு மெக்காவுலயும் இருக்கு. ஆனா அது சொர்க்கத்தில் இருந்து கொண்டு வந்த கல்னு மதநம்பிக்கை.
அவ்வளவு பெரிய இதயம் முழுக்க ரத்தம் போகனும்னா எவ்வளவு ரத்தம் இருக்கும் நீலத்திமிங்கிலம் ஒடம்புல. அடேங்கப்பா. ஒலகத்தோட மிகப்பெரிய விலங்காச்சே!
படங்கள் அருமை! விளக்கங்கள் சூப்பர்! யம்மாடியோவ் இம்மாம் பெரிய பாப்பா.....நிறைய இருக்கு நேரமும் வேண்டும் இல்லையா? - துளசிதரன்.
கீதா: அமெரிக்காவுல கூட சான் ஹுஸே நகரில் இருக்கும் டெக் ம்யூசியத்தில் ஒரு அறை இருக்கும் அதில் நாம் உள் சென்று என்ன ரிச்டர் ஸ்கேல் என்றெல்லாம் பதிவு செய்தால் அதற்கேற்றாற் போல் நில நடுக்கம் வந்து நம்மை அதிர வைக்கும். கலிஃபோர்னியாவில் நிலநடுக்கம் நன்றாகவே வந்தது. ஆனால் எல்லாமே மரத்தினால் ஆனதால் அத்தனை இடிபாடுகள் இல்லை....
அசத்துது பாப்பா
வாங்க திண்டுக்கல் தனபாலன்.
பாப்பா சேகரித்து வைத்துள்ளவை அப்படி இருக்கே! அதுதான்..... நானும்....
வாங்க தருமி.
ரொம்பச் சின்ன ஊர் என்றால் அருங்காட்சியகம் இருக்காது. அடுத்துள்ள பெரிய ஊரோடு சேர்த்துருவாங்க.
ஆனால் வார் மெமோரியல் மட்டும் ஊரூருக்கு கட்டாயம் இருக்கும். அங்கிருந்து போருக்குப் போனவர் ஒரே ஒரு ஆளாக இருந்தாலும் சரி!
வாங்க ஜிரா.
சரித்திர ஆர்வம் அதிகமா இருந்தால் பாப்பாவுக்கே பத்து நாள் வேணும்!
//அந்த ஆண்டவந்தான் எதாச்சும் எளியாருக்குச் செய்யனும்.//
கொள்ளையடிச்சுக்கிட்டுப்போன இந்த ஆண்டவனும் கொஞ்சம் செஞ்சு வச்சுட்டுத்தான் போனான்.
மெக்கா கல் ப்ரமாண்டமானதாச்சே!
எதையும் நம்புனாத்தான் தெய்வம்.
நடுக்கம் தாங்கும் கட்டிடத்துக்கான செலவைக் கேட்டால் நாம் இன்னும் நடுங்கிடுவோம்!
ஊர் அமைச்ச காலத்துலே இந்த பூமி ப்ளேட் எல்லாம் யாருக்குத் தெரியும்? அதான் நேரா அது மேலேயே ஊரை எழுப்பிட்டாங்க.
வாங்க துளசிதரன்.
ஆஹா.... சான் ஹூஸே போய்த்தான் ஆகணும் போல இருக்கே இப்போ!
இப்ப கட்டும் கட்டிடங்களில் நிறைய மரம் உண்டு. 175 வருசங்களுக்கு முன் ஓமரு ஸ்டோன் என்னும் கற்களை வச்சுக் கட்டுனதுதான். அப்போ சிமெண்ட், காங்க்ரீட் எல்லாம் வந்துருக்கலையே! என்ன சாந்து போட்டாங்களோ. அவைதாம் இப்போ பொடிப்பொடி ஆகிப்போச்சு.
நம்ம வீடு செங்கல் கட்டிடம் என்றாலுமே உள்ளே முழுக்க முழுக்க ஒளிஞ்சுருப்பது மரம்தான்.
Post a Comment