Tuesday, August 26, 2014

ஆத்தோடு போன தங்க்ஸ்க்கு டாடா காட்டிய ரங்க்ஸ்! (மினித்தொடர்: பகுதி 2 )

வெள்ளைக்காரர் வீடுகளில் பூரிக்கட்டை இருக்குமா? எதுக்கு சந்தேகம்? இருக்கு இருக்கு.  பெயர்தான் வேற !  ரோலிங் பின்.  நம்மைப்போல பூரி, அப்பளம் போடலைன்னாலும், பேஸ்ட்ரி செய்ய மாவைத் திரட்டி எடுக்க இது அவுங்களுக்கும் வேண்டித்தானிருக்கு.   சமீபகாலமாக, மார்பிள் பளிங்குக்கல்லில் வருதுன்னு  மக்கள்ஸ்க்குச் சொல்லிக்கறேன். பயங்கர கனம்,கேட்டோ!

எதோரு வேலையா சின்னப்படகில் ஏறி போறாங்க வீட்டம்மணி. அவுங்க பெயர் எல்லன்.  திடீர்னு காட்டாற்று வெள்ளம் வந்து படகை அடிச்சுக்கிட்டுப் போகுது! கத்திக் கதறிக்கூச்சல் போட்டுக்கிட்டே  போறாங்க. கரையில் நின்ன  வீட்டய்யா .....  'குட் பை எல்லன். குட் பை. ஐ வில் மீட் யூ இன் ஹெவன்' ன்னு  கவிதை பாடறார்,  கலைஞர்.    இந்த  ஊர் ஜெரால்டின் இருக்கு பாருங்க, இது  ஆதிநாட்களில் இருந்தே கலைஞர்களால் நிரம்பிய கிராமம்.  ப்ராச்சீன்! கவிதை, ஓவியம், அபூர்வ ரோமங்களைக்கொண்டு அலங்காரப்பின்னல், நெசவு போன்ற  அருங்கலையைப் போற்றி வளர்க்கும் மக்கள் நிறைஞ்ச ஊர்தான் இப்பவும்.

சமீபத்திய கணக்கின்படி ஊரின் மக்கள் தொகை அதிகபட்சமா ரெண்டாயிரத்து முன்னூறு! குட்டியான டவுன்.  இதுக்கு ஒரு டவுன் கவுன்ஸில்.  இங்கே ரெண்டு   ம்யூஸியம், (வின்டேஜ் கார்கள்,மெஷினரிகளுக்கானது இதில் ஒன்னு) ஒரு சில சர்ச்சுகள், ஷாப்பிங் செண்ட்டர், சூப்பர் மார்கெட்,  லைப்ரரி, பொட்டிக்கடைகளா  ஒரு சில டெய்ரி,  பெட்ரோல் ஸ்டேஷன், மார்கெட் ஏரியா,  டவுன்வரை வந்து போகும் பொதுமக்கள் வசதிக்கான பொதுக்கழிப்பறை,  ஊரைப்பற்றிய  இன்ஃபோ தரும்  தகவல் நிலையம்   இப்படி எல்லாம் பரிபூரணம்.  ஊரைக்கடந்து பயணிக்கும் மக்கள்ஸ்க்கு ஒரு சின்ன ப்ரேக்  எடுத்துக்கும் இடம்.



ஆற்றுப் பாலம் கடந்து ஊருக்குள்ளே  நுழைஞ்ச நாமும்  அஞ்சு மினிட் காலார நடக்கலாமுன்னு இறங்குனோம். ம்யூஸியத்தை நம்ம  ஜெரால்டீன் ஹிஸ்ட்டாரிகல் சொஸைட்டி டவுன் கவுன்ஸில் போர்டு கட்டிடத்தில்  நடத்துது.  இலவசம்தான்.  வந்து பாருங்க. நீங்களாப் பார்த்து எதேனும் கொடுத்தீங்கன்னா ....... பாராட்டி வாங்கிக்குவோம்  என்று போர்டு வச்சுருந்தாங்க.


 முழுக்க முழுக்கத் தன்னார்வலர்களால்  நடத்தப்படும் வகை. தினமும் ஒரு சிலமணி நேரம்  சமூகசேவையா இதைச் செஞ்சுக்கிட்டு இருக்காங்க ஊர் மக்கள்.


பழைய காலத்து டெலிஃபோன் ஸ்விட்ச் போர்டு இருக்கு.  1903 ஆண்டு முதல் 1987 வரைக்கும் இது பயன்பட்டுருக்கு. அப்புறம்தான்  ஆட்டோ எக்ஸ்சேஞ்ச்  ஆகி இருக்கு!  கொஞ்சம் பழைய காலத்து மரச்சாமான்கள், குழந்தைகளுக்கான உடுப்பு, ப்ராம் இப்படி கொஞ்சூண்டு பார்க்கலாம்.

 மேலே: வெண்ணை கடைஞ்செடுக்கும்  பெட்டி !!


 அப்பதான், ஆத்துலே அடிச்சுக்கிட்டுப்போன தங்ஸ்  விவரம் பார்த்தேன்.

தண்ணீரில் அடிச்சுக்கிட்டுப் போனதைவிட, எனக்கு பயமா இருந்த  ஒரு சமாச்சாரமுன்னா.... காட்டுப் பன்றிகள்  கரையோரமா ஏராளமா மேய்ஞ்சுக்கிட்டு இருந்ததுதான். மூணு பெரிய சுழிகளைத் தாண்டி நாலு மைல் தூரம் வரை  படகு வேகம்பிடிச்சு தண்ணீரில் அடிச்சுக்கிட்டு வந்துருந்துச்சு அதுக்குள்ளே! முழுகிருவோமோன்னு  கூடவே ஒரு பயமும்.  தண்ணிக்கு மேலே நீண்டுருந்த மரக்கிளை ஒன்னை கபால்னு பிடிச்சுக்கிட்டு மரத்தில் தொத்தி ஏறிக்கிட்டேன்.   நல்லவேளையா வெய்யில் காய்ஞ்சுக்கிட்டு இருந்துச்சு. முழுசும் தொப்பலா நனைஞ்சு கிடந்த ஈர உடுப்பை மெள்ளக் கழட்டி மரத்துலேயே லேசா  காயப்போட்டு மீண்டும் உடுத்திகிட்டு ............


ஒருவழியா மெல்ல நடந்து வீட்டுக்குள் வந்து சேர்ந்தேன்.  பூரிக் கட்டை எங்கேன்னு தேடி எடுத்தது அப்போதான்:-)

எல்லன் எழுதிவச்ச குறிப்பும் அங்கே இருந்துச்சு!

மலைச்சரிவு நிலத்தில் இருக்கும் பண்ணைகளில் மேயும் ஆடுகள், மாடுகள் எல்லாம் பார்த்துக்கிட்டே ஏரி நோக்கிப்போகும் சாலையில் போறோம். 89 கி மீ  போகணும், இந்த ஜெரால்டீனில் இருந்து.  செல்லம் போல்  அழகான முகத்தை வச்சுக்கிட்டு  மேயும்  அல்பாகாக்கள்   ஒரு இடத்தில்.   எல்லாம்  சின்ன உருவமா இருக்கும் பெருசுகள்!  ஃபிஃப்டி கேஜி தாஜ்மஹால்கள்!  சராசரியா  50  -55 கிலோ எடைகள்தானாம்!

பெருநாட்டு சமாச்சாரம். Andes  மலைச்சரிவுகளில் வாழும் இனம்.   சட்னு பார்க்க   Llama போலவே இருந்தாலும்,  லாமாவை விட சின்ன சைஸ் & அழகு முகம். உடம்பில் இருக்கும் ரோமம், பட்டு போல் அவ்ளோ  மிருது!  ரோமங்களோடு உள்ள   கால்கள், சட்னு பார்த்தால் குட்டித்தூண்களா இருக்கு:-)   ரோமத்துக்குச் சாயம் ஏற்றும் வேலை நமக்கு மிச்சம். இயற்கையாகவே 52 நிறங்கள் அமைஞ்சவைகள்.  குளிர்கால உடைகள் செஞ்சுக்கலாம்.  இங்கே  ஸ்பெஷாலிட்டிக் கடைகளில் விக்கறாங்க. ஆனால் விலை அதிகம்.  நியூஸி ஆட்டு ரோம உடைகளைப்போல் மூணு மடங்கு விலை கொடுக்கணும். சும்மாச் சொல்லக்கூடாது....  தொட்டுப் பார்க்கும்போது  ஸில்க்கா இருக்கு!






மலைப்பாதையில் போய்  அடுத்த பக்கம் இறங்கும்போதே  ஏரி   பளிச்ன்னு காட்சி கொடுக்குது. ஊருக்கு நுழைஞ்சு  தங்குமிடம் போய்ச் சேர்ந்தோம். அறைச் சாவியுடன், ஒரு பால் பாட்டிலும் எடுத்துக் கையில் கொடுத்தாங்க.  நாம் தங்கப்போகும் இடம்  கொஞ்சம் உயரமான  பகுதி. லேக் வ்யூ வேணுமுன்னா மேலே போகணும்தானே?

ரெண்டு பெட் ரூம், ஹால் , கிச்சன்  அண்ட் பாத்ரூம்னு அருமையா இருக்கு!  சரிவான பாதையில்  வண்டிகளை,  அறைக்குப் பக்கம் கொண்டு வந்துடலாம்.
அடுக்களையிலும் நமக்கு ஆக்கித்தின்ன பாத்திரங்கள், கரண்டிகள், சாப்பிடும் தட்டுகள், க்ளாஸ் டம்ப்ளர்கள்,  காஃபி குடிக்க  கப்ஸ்,  கெட்டில்  வசதிகள் எல்லாமும் இருக்கும்தான்.  சட்னு காஃபி, டீ போட்டுக்கும் வகையில்  அதுக்குண்டான பொருட்களையும்  தயாரா வச்சுருப்பாங்க, இங்கெல்லாம்.
அதுக்காக போய் இறங்குனவுடன்  சமைக்க போரடிக்காதா?


 அடுத்த வேளைக்கான கட்டுசோறு,  சிறு தீனிகள், காஃபி , சக்கரை &  நாம் வீட்டில் வழக்கமா காஃபி குடிக்கும் மக், நம்ம சாப்பாட்டுத் தட்டுகள் இப்படி  பழகுன சமாச்சாரங்கள்  எல்லாம் ரொம்ப சிஸ்டமேட்டிக்காக் கொண்டு போயிருவேன். எல்லாத்தையும்  ஒரு கார்ட்ட்டனில் வச்சால் கார் சுமந்துக்கிட்டு வந்துரும்.  மைக்ரோவேவில் பால் காய்ச்ச ஒரு  பாத்திரம் மட்டும் கட்டாயம் வேணும். பச்சைப்பால் காஃபி.... யக்:(

தொடரும் .........:-)



4 comments:

said...

ஆஹா.பயணமா. எல்லென் தப்பிப் பிழைச்சாங்களே.அதுவே பெரிய விஷயம். ஜெரால்டின் அழகான ஊரா இருக்கே,.தங்குமிடமும் சூப்பர் அரேஞ்ச்மெண்ட். தலகாணி கொண்டுவரலையா>** குட்டி ல்லாமாக்கள் அழகா இருக்கு. இதுதான் அல்பாகா கோட் டுக்குக் காரணமா. பொண்ணு ஊரொஇல ப்ளேன்ல போறதால பாத்திரமெல்லாம் எடுத்துப் போக முடியாது.உங்க அரேஞ்ச்மெண்ட் சூப்பர் துளசி. முன் பதிவைப் படிக்கப் போறேன்.

said...

வாங்க வல்லி. கூட்டமே இல்லாத சின்ன ஊர்கள் உண்மைக்குமே அழகுதான்ப்பா.

இங்கே, பொதுவாக் கார்ப்பயணம் என்பதால் சாமான்களை அள்ளிக்கிட்டுப்போறது நமக்கு சுலபம். வயிறு வாடாம இருக்கணுமே!

அண்டை நாட்டுக்கும் முந்தி ரைஸ் குக்கரை எடுத்துக்கிட்டுப்போவோம். இப்பதான் சில வருசங்களா, அங்கெபோயும் ஆக்கித் தின்னணுமான்னு சோம்பலாகிப் போச்சு:-)

அதுவுமில்லாமல் பெட்டியை ஸ்கேன் செய்யும்போது ரைஸ்குக்கரின் ஒயர் அவுங்களை பயமுறுத்திரும்:(

அல்பாகா முகம், ஃப்ரிஞ்ச் வச்சு முடிவெட்டிக்கிட்ட சிறுமியராட்டம் அழகா இருக்குப்பா!!!!

said...

இந்தக் கவிஞர்களே இப்பிடித்தான். இருந்த ஒரு தோசையைத் திங்காம காக்காவுக்குப் பிச்சிப் போட்டு காக்கை குருவி எங்கள் சாதின்னு பாடிக்கிட்டிருப்பாங்க.

படங்கள் எல்லாம் ரொம்ப அழகு. அந்த ஊருக்கெல்லாம் போய்ப் பாக்கனும்னு ஆசையாசையா இருக்கு.

said...

சிலசமயத்தில் பூரிக்கட்டையும் வேணும்போல்இருக்கிறது.:))

மிகவும் அழகாக இருக்கிறது.