பாதங்கள் தொழ கண்களை அனுப்பினேன். ஹைய்யோ!!!! மூச்சு நின்னு போகும் ஒரு அழகு! அந்தப் பளிங்குப் பாதங்களில் வண்ண நட்சத்திரச் சிதறல்களுடன், ஜொலிக்கும் கொலுசு !
நம்மூரில் கிருஷ்ண ஜெயந்தி விழாவுக்கான ஏற்பாடுகள் கோவிலில் நடந்துகிட்டு இருக்கு. ஆக மொத்தம் இந்த கிறைஸ்ட்சர்ச் மாநகரத்துக்கு, இருப்பதே ஒரே ஒரு இந்துக்கோவில்தான்(இப்போதைக்கு) என்பதால் எந்தப் பண்டிகையா இருந்தாலும் நாங்கள் ரொம்ப மெனெக்கெடாம கோவிலிலேயே கொண்டாடிருவோம்.
ஸ்ரீ ஸ்வாமிநாராயண் மந்திர். முழுக்க முழுக்க குஜராத் மாநில மக்கள்தான் கோவில் நிர்வாகம் என்றாலும், உள்ளூர் மக்களையும் அந்தக் கூட்டத்தில் சேர்த்துக்கிட்டாங்க. என்ன ஒன்னு, மொழிதான் குஜராத்தியா இருக்கும். ஹிந்தியும் பலர் பேசுவதால் நமக்கு பிரச்சனை இல்லை. கூடுதலா ஒரு மொழியைக் கத்துக்கிட்டால் நல்லதுதானே?
இந்தமுறை கண்ணன், இந்தியாவில் பிறக்கும் நாளே, இங்கே நியூஸியிலும் பிறந்துட்டான்:-) விசேஷங்களை, வீக் எண்டுக்கு நேர்ந்துவிடும் மக்கள்ஸ் நாங்க. இன்று அதுவும் வீக் எண்டாக அமையவே ரொம்பத் திருப்திதான். ஞாயிறு!
வழக்கம் போல் சனிக்கிழமை மாலை கோவிலுக்குப் போனால், முந்தினநாளான இந்திய சுதந்திர தினத்தை ராதை கொண்டாடிக்கிட்டு இருக்காள்!
மறுநாளைக்கான அலங்காரங்கள், உறிகள் கட்டித் தூக்குவது எல்லாம் எங்கூர் சம்ப்ரதாயப்படி!
க்ருஷ்ணகனையா லாலுக்கி ஜே என்ற கோஷத்துடன் மறுநாள் ஞாயிறு மாலை கொண்டாட்டங்கள், சின்னக்கண்ணன்களுடைய நாட்டியம்,
கோலாட்டாத்துடன் அமர்க்களம். புதுக்கோயில் வந்த இந்த மூணு வருசத்தில் க்ருஷ்ண ஜன்மாஷ்டமிக்கு இவ்ளோ கூட்டம் முதல்முறையா வந்திருந்தது. 350 பேர்! வாவ்!!! குஜராத் மக்கள் ஒரு 20% இருந்தால் அதிகம். அப்ப மற்றவர்கள்? நேபால் துடங்கி ஆந்திரா வரைன்னு சொல்லிக்கலாம்:-) ஒருசில வெள்ளையரும் உண்டு.
இத்தனை கூட்டத்தைக் கோவில் எதிர்பார்க்கலையாக்கும்,கேட்டோ! செஞ்சு வச்சுருந்த பிரசாதங்களை எல்லோருக்கும் கிடைக்கும் வண்ணம் கிள்ளிக்கொடுக்க வேண்டியதாச்சு:-) பரவாயில்லை. வழக்கமான டின்னர், இன்றைக்கு ப்ரசாத விளம்பல் ஆனால் என்ன? சகலரும் பகிர்ந்துண்ண வேணுமா இல்லையா? மகிழ்வோடு வீடு வந்தோம்.
இன்றைக்குக் காலையில் நம்ம வீட்டில் பண்டிகையை வழக்கத்தை விட ரொம்ப சிம்பிளாக் கொண்டாடினோம். குசேலர் ஸ்டைல்! அவனுக்கு அவல்தான் பிடிக்கும்! பாலில் ஊறவச்ச அவல் இனிப்புப் பலகாரம், உப்புப் பலகாரமாக ஆலு பொஹே! கூடவே கொஞ்சம் பழங்கள்.
எதுக்குக் கவலைப்படறே? இதுவே அதிகம் என்று சொன்னான், என் மாயக்கண்ணன்:-)
அனைவருக்கும் க்ரிஷ்பாப்பா பொறந்த நாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

13 comments:
நேர்த்தியான அலங்காரம். அழகு அள்ளுகிறது:).
உண்மைதான் ,ஜொலிக்கும் கொலுசு கண்ணை அள்ளுகிறது !
இதைப் போலவே ஜோககாளியும்,காதலிக்கு இன்று கொலுசு அணிவித்து அழகு பார்த்து இருக்கிறான் >>>http://www.jokkaali.in/2014/08/blog-post_18.html
காதலியின் அந்த காலணிக்கு,இந்த காலணி சரியா போச்சு !
ம்ம்ம்ம்ம், அந்தக் கொலுசு தங்கம் இல்லை, ஐம்பொன் என ஒரு நகைக்கடையிலும் கூறினார்கள். அணிந்திருந்த என் உறவுப் பெண்மணியும் சொன்னார். தங்கத்தை இடுப்பிற்குக் கீழ் அணியக் கூடாது என்பது எழுதப்படாத விதி! :)))))
நாங்களும் படிக்கிறதை எப்படிக் காட்டிக்கிறது? :)))
புகைப்படங்கள் அனைத்தும் அருமையாக இருக்கிறது.
வாங்க ராமலக்ஷ்மி.
உண்மைதாங்க. ரொம்ப அக்கறை எடுத்துக் கவனமா அலங்கரிக்கிறாங்க கோவிலில்.
தினமும் கடவுளர் சிலைகளுக்கு ஆடை, ஆபரணங்கள் எல்லாம் அருமையாக மாற்றி அலங்கரிப்பதற்கு எவ்ளோ பொறுமை வேணும்!!!!
இந்த அர்ப்பணிப்புக்கு நான் எப்போதும் தலை வணங்குகிறேன்.
வாங்க பகவான் ஜி.
தீனிக்கு தானி சரிபோயிந்தி:-))))
வாங்க கீதா.
கைவிரல் காயம் ஆறிவிட்டதா?
கொலுசு, தங்கத்தில் 'செஞ்சது'ன்னு நான் எங்கே சொன்னேன்?
மகளுக்கும் இது போல் ஒன்னு வாங்கினோம் ஒரு பயணத்தில்.
ஆமாம்.... தங்கத்துக்கு மட்டும் இப்படி என்ன ஒரு ஸ்பெஷல்? விலை கூடுதல் என்பதாலா?
பல ஆசிய நாடுகளில் தங்கக்கொலுசு போடறாங்களேப்பா. ஆனால்... ஒரு காலில்தான் போட்டுக்கறாங்க. நானும் சிங்கையில் ஒரு ஜோடி மகளுக்கு வாங்கியிருக்கேன். அதென்னமோ ஒரு காலில் மட்டும் போட்டால் நல்லா இல்லைன்னு எனக்கொரு தோணல்.
படிக்கறீங்க என்பதே எனக்கு மகிழ்ச்சிதான்:-)
வாங்க கில்லர்ஜீ.
வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.
மீண்டும் வருக.
கண்ணனும் ராதையும் நெஞ்சை அள்ளுகிறார்கள் .
நம்மூர் தில்லகேணியில் செப்டம்பர் 16 தான் கிருஷ்ண ஜெயந்தி . அதனால் நம்ம வீட்டில் செப் 16 தான் கிருஷ்ணன் வரான் !!.
ஸ்வாமி நாராயணன் கோவிலே அழகு. அதில் சிவபார்வதி ராதை கிருஷ்ணன் எல்லோரும் சூப்பர் அலங்காரத்தில் ஜொலிக்கிறார்கள். இரண்டி ஜயந்தி கிருஷ்ணருக்கு. இப்போ ஒண்ணும் அடுத்தமாதம் இன்னோன்றும். உங்கா கோலங்களும்,அவல் உபசாரமும் அற்புதம்.கால் கொலுசு மிக அழகும்மா.
அழகு அள்ளிக்கொண்டே போகிறது. அருமையோஅருமை.
கொஞ்ச நாளா எட்டிப்பாக்காததுக்கு மன்னிச்சிருங்க டீச்சர்.
கிருஷ்ணய்யா அழகு. நம்மூர்லதான் கோயில்கள்ள ஆகமம் தீட்டு அது இதுன்னு பாப்போம் போல. பாருங்க.. அவங்க நல்ல பாலிஸ்டர் டிரஸ் எல்லாம் மாட்டி.. அந்த வானவிற்கொலுசு அட்டகாசம். நகப்பூச்சு பளிங்குச் சிலைக்கு பொருத்தம்.
கிருஷ்ண ஜயந்தி உலகத்தில் அமைதியையும் சமாதானத்தையும் நேர்மையையும் வளமையையும் இனிமையையும் கொண்டு வரட்டும்.
Post a Comment