கண்ணைப்பறிக்கும் மஞ்சள் நிறத்தில் கொம்பு வச்ச சமாச்சாரமா இருக்கேன்னு ஒன்னு வாங்கியாந்தேன். உண்மையில் இது வெள்ளரிக்காய் குடும்பமாம். Cucumis metuliferus, horned melon. இதுக்கு இங்கத்துப்பெயர் kiwano. ஓ.... கிவிக்களுக்கு உள்ளதோன்னு நினைச்சேன்:-)
நறுக்கிப் பார்த்தால் உள்ளே அழகான பச்சை. அதில் வெள்ளரி விதைகள் போல ஏராளமா இருக்கு. அந்தப் பச்சை ஒரே கொழகொழ. ஸ்பூனால்தான் எடுத்து வாயில் போட்டுக்கணும். ருசி? சுத்தம். ஒன்னும் இல்லை! பழத்துக்குள்ளே 89% தண்ணீர்தானாம். சரியான பச்சைத்தண்ணி.
கொஞ்சம் அதிக விலைதான். ஆனால் வாங்கிட்டோமேன்னு தூக்கிப்போடாமல் கொஞ்சூண்டு சக்கரை சேர்த்து 'ஃப்ரூட் பல்ப், டேஸ்ட் பாருங்க' ன்னு மகளுக்கும், கோபாலுக்கும் கொஞ்சம் தள்ளிவிட்டதால் ரெண்டு ஸ்பூன் அளவோடு நான் தப்பிச்சேன்.
ஆமாம்.... இப்படி ரொம்ப சாதாரணமா இருக்கும் இதுக்கு ஏன் இவ்ளோ அழகும் நிறமும்? என்னமோ எதிரிகளிடம் இருந்து இதைப் பாதுகாக்கணுமேன்னு பழத்துக்கு மேல் கொம்புகள் வேற!
இயற்கையைப் புரிஞ்சுக்கவே முடியலையேப்பா:(
16 comments:
நல்ல பழமாயிருக்கே , ஒண்ணு வாங்கி அனுப்ப என்ன செலவாகும் ?
வாங்க பழனி கந்தசாமி ஐயா.
நல்லா இருக்கீங்களா?
அப்படி ஒன்னும் ரொம்ப செலவாகாது. அனுப்பினால் வரும்போது அழுகிப்போகச் சான்ஸ் இருக்கு.
இதுக்கு அவ்ளோ வொர்த் இல்லை:(
இன்னொன்னு.... இங்கே இருந்து நான் அனுப்பும் பார்ஸல்கள் எதுவுமே வீட்டுக்குப்போய்ச் சேர்வதில்லை.
இடையில் யாரோ அபேஸ் பண்ணிடறாங்க:(
பல அனுபவங்களுக்குப் பின் இந்திய தபால்துறையின் மீது இருந்த மதிப்பு போயே போச்:(
பார்க்க வித்தியாசமா இருக்கு பழம்... சத்து ஒண்ணுமே இல்லையா?
பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு டீச்சர்.. விதையை நட்டுப் பாருங்க.. அழகா வரும்னு தோணுது.
ஏதாவது முக்கிய சத்து அடங்கி இருக்குமோ......
நல்லா வண்ணமயமான பழத்துக்கு ருசி எதுக்குன்னு ஆண்டவன் நெனச்சான் போல ....health benefits எப்பிடி ?
சிறந்த பகிர்வு
தொடருங்கள்
கொம்புளதற்கு அஞ்சு முழம் இல்லையோ. இது ஏதோ அழகான ஸ்பேஸ் க்ராஃப்ட் மாதிரி இருக்கு. வண்ணமயமான ஏலியன்ஸ் போல பச்சை ஜூஸ் வேற.ஹெல்த் ஃபாக்டர் இருக்கான்னு பார்க்கணும்,. ஒரு வேளை குளிர்கால மருந்தாகக் கூட இருக்கலாம்.
வாங்க ஸ்கூல் பையன்.
வெறும் நீர்ச்சத்துதான் இருக்கு!
வாங்க ரிஷான்.
எல்லாம் இளம் விதைகள். அதனால் நட்டுப் பார்க்க ச்சான்ஸே இல்லையேப்பா:(
வாங்க அருணா செல்வம்.
அப்படி ஒன்னும் இல்லைன்னுதானே சொல்றாங்க:(
நம்மூரில் இதன் விற்பனையை அதிகரிக்கணுமுன்னா...... 'அதுக்கு' நல்லதுன்னு சொல்லி வச்சால் போதும். விற்பனை பிச்சுக்கிட்டுப்போயிரும்!
வாங்க சசி கலா.
அதான் நீர்ச்சத்து ஏறக்கொறைய 90% இருக்கே. அதுதான் ஹெல்த் பெனிஃபிட்!
வாங்க யாழ்பாவாணன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க வல்லி.
இது வெயில்கால சமாச்சாரம். அப்ப வாங்குனதை இப்ப எழுதி இருக்கேன்.
நீங்க சொன்னது நிஜம்தான்ப்பா. அழகா ஸ்பேஸ்க்ராஃப்ட் மாதிரித்தான் இருக்கு!
மேக்கப்போட்டஅழகி :) கோடைக்கு தாகத்துக்கு ஏற்றதாக இருக்கும்.
வெளிய முள்ளுவெள்ளரின்னு சொல்லலாம். உள்ள சட்டுன்னு பாக்க கர்நாடகாவுல கெடைக்கும் ஜூஜூ ஹன்னு மாதிரி இருக்கு. அதுக்குள்ள பேஷன் ஃப்ரூட் மாதிரி இருக்கும். புளிப்புத் தன்மையோட. கொஞ்சம் மொளகாப்பொடி போட்டுத் தருவாங்க. நல்லாருக்கும்.
ஆனா இது நீர்ப்பழம் போல. இதச் சாப்பிடவே நியூசிலாந்துக்கு ஒரு டிரிப் போடனும் போல :)
Post a Comment