Friday, June 14, 2013

பாலி நீ வாழி!

மனுசனைச் சும்மா இருக்க விடுதா விதி? ட்ராவல் எக்ஸ்போ என்ற பெயரில் கூப்பிட்டது. போனோம். சிங்கப்பூருக்கு ஸ்பெஷல் ஒன்னு போட்டுருந்தாங்க. கிட்டத்தட்ட 35 சதம் கழிவு. கண்டிஷன் என்னன்னா செப்டம்பருக்குள் போய் வந்துறணும். ரெண்டே வாரம் அதிக பட்சம். இன்னிக்கே டிக்கெட்டு வாங்கிறணும்.   இந்தக் கையிலே காசு  அந்தக் கையிலே டிக்கெட்.

ரெண்டு வாரம் சிங்கையில் எதுக்கு? விஷ் லிஸ்ட்டைக் கையில் எடுத்துப் பார்த்தால் பாலி வாவா என்றது. அங்கேயும் ரெண்டு வாரம் என்னத்துக்கு? நாலுநாள் போதாதா? பேசாம ஒன்னு செய்யலாம். போக வர ஒவ்வொன்னுன்னு ரெண்டு நாள் போக பாக்கி இருப்பதை மூணால் வகுத்து பாலி, மலேசியா சிங்கைன்னு நவ்வாலு ஓக்கேன்னு முடிவாச்சு.

இங்கே நியூஸியில் பொதுவா 'எங்க திருமணநாளுக்கு'  பொதுவிடுமுறை உண்டு!!!! மாட்சிமை தாங்கிய மஹாராணியின் பொறந்தநாள் அப்போ வருதே! அதையும் வீக் எண்டுகளையும் சேர்த்துக் கணக்குப் போட்டால் கோபாலால் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு 8 நாள் ஆஃபீஸைப் பிரிஞ்சு இருக்க முடியும். அவசர வேலைக்கு இருக்கவே இருக்கு ப்ளாக்பெர்ரி.

பாலிக்கு ஷார்ட் கட் நமக்கு சிங்கை வழிதான். இல்லைன்னா எங்கூரில் இருந்து சிட்னிக்குப்போய் அங்கிருந்து ஏர் ஏஷியா எடுக்கலாம். சிட்னி போக ஒரு நானூறாவது அழணுமே:( எங்கூருக்கு ஏர் ஏஷியா வர்றதில்லை. சிங்கை -பாலி-கே எல் -சிங்கைன்னு ஒரு முக்கோணத்தைத் தனியாக ஏர் ஏஷியாவில் புக் செஞ்சோம். அங்கங்கே தங்குமிடங்களை கோபால் தெரிவு செஞ்சார். சுதந்திரமா செயல்பட அப்பப்ப விட்டுருவேன்:-)

ஜூன் அஞ்சாம் தேதி சிங்கை இருந்தால் தேவலை. இல்லைன்னா மலேசியா பத்துமலை என்ற என் விருப்பத்தை மட்டும் மனசுலே வச்சுக்கிட்டு பயணத்திட்டம் தீட்டினார்.

சிம்பிளா ரெண்டே பெட்டிகளுடன்  சுபயோக சுப தினத்தில் வழக்கம்போல் சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் காலை 10.50க்குக் கிளம்பிப் போயாச்சு. விமானம்புறப்பட்ட இருவது இருவத்தியஞ்சு நிமிசத்தில் எங்கூர் சதர்ன் ஆல்ப்ஸ் தலையில் இட்லி மாவோடு ஜொலிச்சது. மலை கடந்து கடல் வந்த பத்தரை மணி நேர (போரிங்) பயணம்.


 தமிழ் படங்கள் பீட்ஸா, கண்ணா லட்டு தின்ன ஆசையா ? ஹிந்தியில் Ohmy God, Burfi..... லட்டு பர்ஃபி பீட்ஸான்னு எல்லாம் திங்கற சமாச்சாரமா இருக்கேன்னு தேடுனதில் ஹிமாவாரி கிடைச்சாள். ஜப்பான் படம்.


 குழந்தைகுட்டிகளுடன் இருக்கும் ஹிமாவாரியின் ஆயுசு இனி 7 நாட்கள் மட்டுமே. கெடு வச்சுட்டாங்க. அதுக்குள்ளே அவளை யாராவது பவுண்டிலே இருந்து கொண்டு போவாங்களா? திக் திக் என்னும் மனசோடு பார்த்தேன். ஹப்பாடா..... கடைசியில் எல்லாம் சுகமே! அவளை உலகை விட்டு அனுப்பும் வேலையை செய்யும் உத்யோகஸ்தரே வீட்டுக்குக் கூட்டிப் போயிட்டார். ஆமாம்.... என்னென்னவோ படங்களைக் காப்பி பண்ணும் தமிழ்சினிமா இதையெல்லாம் ஏன் கண்டுக்க மாட்டேங்குது? ஹிமாவாரி ஃபாரின்லே டூயட் பாடி ஆட மாட்டேன்னா 'லொள்'வாள்? என்னவோ போங்க.

மேற்கு நோக்கிப் பயணத்துலே ஒரு வசதி நேரம் மிச்சம். மாலை அஞ்சரைக்கு சிங்கையைத் தொட்டோம். மழை! மறுநாள் மாலை பாலி ஃப்ளைட்டு. ஸ்டாப் ஓவர் என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மலிவு விலையில் ஹொட்டேல் கொடுத்துச்சு. கூடவே ட்ரான்ஸ்பர்ஸ் உண்டு. எதுக்கு விடுவானேன்? ஆனால் காத்திருக்கணுமுன்னு கவுண்ட்டர் பொண்ணு சொன்னதால் ஒரு இடத்தில் குழுமி இருந்த கூட்டத்தில் கலந்தோம். எங்க ஊரில் இருந்து இதே ஃப்ளைட்டில் மூணு லேடீஸ் வந்துருந்தாங்க. இதே ட்ராவல் எக்ஸ்போ ஸ்பெஷல் டிக்கெட். ரெண்டு நாள் சிங்கையில் தங்கிட்டு வியட்நாம் போறாங்களாம். வியட்நாம் கோபால் ஞாபகத்துக்கு வந்தார். கூடவே சாருவும்:-)))) வியட்நாம் கோபால் நம்மையும் வா வான்னு கூப்பிட்டு இருக்கார். பார்க்கலாம், அமையுதான்னு! நமக்கு நெருங்கிய எழுத்தாளர் தோழியின் சகோ அவர். 

 ஜாலியா மூணு பெண்கள் லேடீஸ் அவுட்! பேச்சும் சிரிப்புமா இருந்தவர்களைப் பார்த்த நம்ம கோபால் ஹஸ்பெண்ட் கூட இல்லைன்னா எவ்ளோ குக்ஷி பாரேன்னார். ஏன்? இருக்காதா? ன்னு ஏக்கமாக் கேட்டேன்:-))))) எனக்கு இப்படித் தோழிகளோடு போகணுமுன்னா விடுவீங்களா? ஏன் விடாம? நீதான் போகமாட்டேன்னார்! நெசமாவா!!!!!

திரும்பி வந்து மூணு நாள் தங்கும்போது நண்பர்களைச் சந்திக்க முடிவு. இப்ப சந்திப்பு ஒன் டு ஒன் என்று சீனுவோடு மட்டும். கொஞ்சநேரம் ஏர்ப்போர்ட்லேயே காத்திருந்து மினி பஸ்க்காரர் வந்து க்ஞாஞா ஞாஞ்ஞான்னு விசாரிச்சது புரிஞ்சதும் எழுந்து போனோம். ஹொட்டேல் க்ராண்ட் ச்சான்ஸ்லர் என்று சொன்னாராம்! எங்கூர் ஹொட்டேல் க்ராண்ட் ச்சான்ஸ்லர் (அஞ்சு ஸ்டார்) நிலநடுக்கத்தில் போயிருச்சு. அதான் இந்தப்பெயரில் ஒரு பாசத்தோடு இங்கே இடம் போட்டோம். மேலும் இது நம்ம சீனு வீட்டாண்டை அதே பேட்டையில் இருக்கு. சிங்கை லிட்டில் இண்டியா செராங்கூன் ரோடு. சமீபத்தில் வந்ததுதான். நம்ம வீரமாகாளியம்மன் கோவிலுக்கு ஜஸ்ட் பின்பக்கம். சூப்பர் லொகேஷன்

ஹொட்டேலுக்குப்போய்ச் சேர்ந்தோம். மூணு ஸ்டாராம்! 328 அறைகளாம். டாய்லெட் பேப்பருக்குப் பதிலா ஸேண்ட் பேப்பர் போல ஒன்னு! ஸ்டார் மூணு இல்லை , ஒன்னுன்னு தோணுச்சு! போகட்டும்.....

 சட்னு ரெடியாகி சீனுவை தரிசிக்க ஓடினோம். கோவிலுக்குள் நுழைஞ்சால் கூட்டம்! வசந்த உத்ஸவம் நடக்குதாம். மொத்தம் 11 நாட்களில் இன்னிக்கு அஞ்சாம் நாள். தவழ்ந்த க்ருஷ்ணர் அலங்காரம். குட்டி மண்டபத்தில் இருந்து சேவை சாதிக்கிறார். தொட்டடுத்து மேடையில் கலைநிகழ்ச்சிகள். இன்றைக்கு பாட்டும் நடனமுமா ரெண்டு நிகழ்வுகள் இருக்கு.

 சீனுவின் தரிசனம் வழக்கம்போல் அமோகம். கோவிலை ஒரு சுற்று வந்து புள்ளையார் முருகன் வைஷ்ணவி, நரசிம்ஹர், சுதர்சனர், தாயார் மஹாலக்ஷ்மி நம்ம ஆண்டாளம்மா எல்லோரையும் வணங்கி ஆண்டாள் ஸ்பெஷலா தூமணிமாடத்து பாடி மனம் நெகிழ்ந்து , ஆஞ்சநேயரைச் சுற்றிவந்து வணங்கி மீண்டும் மூலவரிடம் போய் நின்னு குசலவிசாரிப்புகளில் இருக்கும்போது பாட்டுக்கச்சேரி ஆரம்பிச்சது. முதல் பாட்டு ஸ்ரீமன் நாராயணா......

 சாந்தி முரளி உள்ளூர்க்காரர். நல்லாதான் பாடுனாங்க. சொன்னதைக்கேள் கண்ணான்னு யசோதை பாடினதா ஒரு பாட்டு. நம்ம ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் பாட்டாம்! நான் இதுவரை கேட்டதே இல்லையாக்கும்! சொன்னதைக்கேள் கோவிந்தா, சொன்னதைக்கேள் கோபாலா, மாதவா, மதுசூதனான்னு பலவிதமாப்பாடி சொன்னதைக்கேள் முரளின்னு தன் கணவர் முரளி இருந்த திசை பார்த்து முடிச்சாங்க:-)

இதுக்குள்ளே சுடச்சுட வெண்பொங்கல், முருங்கைக்காய் சாம்பார், தயிர் சாதம் ,கேஸரின்னு பிரஸாதம் ரெடி. எல்லாம் அமிர்தம். உள்ளே தள்ளிக்கிட்டே அடுத்த நிகழ்ச்சிக்குக் காத்திருந்தோம். நல்லவேளையா நாற்காலிகள் போட்டு வச்சுருந்ததால் முழங்கால் முட்டி தப்பிச்சது..


 காயத்ரி ஸ்ரீராம் நடனம். சென்னை க்ருஷ்ண கான சபாவில் ஆடி புகழ் பெற்றவராம். நிமிர்ந்து உட்கார்ந்தேன். ரொம்பவும் எளிமையான அலங்காரத்தில் நடனமணி. 'க்ருஷ்ணா நரஜன்ம பந்தாக......  ' புரந்தரதாஸா ! ஹரே க்ருஷ்ணா பஜன், விஷமக்காரக் கண்ணன் (தோழியின் பேரன் நினைப்பு வந்தது) ஆசை முகம் மறந்து போச்சே.... நந்த கோபாலா.... ஸ்ரீ நாரதகான லோலா(இதுவும் ஊத்துக்காடு!) எல்லாமே கண்ணன் பாட்டுகள். முகபாவம் அட்டகாசம். மாஸ்டர் பீஸாக கீதோபதேசம். குருக்ஷேத்ரம். கிருஷ்ணனும் அர்ஜுனனுமா மாறி மாறி..... ஹைய்யோ!!!! விஸ்வரூபம் காமிச்சபோது அசந்துதான் போனேன்! அர்ஜுனனின் பணிவு அருமை!

 கண்ணுக்கும் செவிக்கும், நாவிற்கும் இனிய விருந்து வைத்த சீனுவுக்கு இன்னொரு முறை நன்றி கூறி குட்நைட் சொல்லிட்டுக் கிளம்பி அறைக்கு வந்து விழுந்தேன் படுக்கையில்.

22 comments:

said...

திருப்(ப)தியான பயணம்... வாழ்த்துக்கள்... நன்றி...

said...

'ஹிமாவாரி' வலை வீசுனா ஆப்டுவாளான்னு பார்க்கணும்.

shinchanனின் சகோதரி ஹிமாவாரியையும் எனக்குப் பிடிக்கும் :-))

said...

படங்கள் அருமை.., முக்கியமா அந்த வெண்பொங்கல், சாம்பார்..,

said...

கண்ணுக்கும் செவிக்கும், நாவிற்கும் இனிய விருந்து வைத்த அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

said...

Belated wishes, teacher!
Am following u silently.
Vietnam Gopal- Chithra's bro, right?
Why she is not writing nowadays,Still
I remember her Gopal bureau and school stories....

-Ezhilarasi Pazhanivel

said...

ரசித்தேன்.

said...

படங்களுடன் பதிவு அருமை
நாங்களும் உடன் பயணித்த உணர்வை பெற்றோம்
பகிர்வுக்கும் பயணங்கள் தொடரவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

said...

அட்டகாசம். இதுக்குதான காத்துக்கிட்டிருந்தோம்.

ஒரே கல்லில் மூன்று மாங்கா. சிங்கப்பூர், மலேசியா, பாலி. அடேங்கப்பா.

தொடர்ந்து படிக்க காத்திருக்கிறேன். :)

said...

இனிய பயணம்....

எங்களுக்கும் இனிதான பயணம் தான் உங்களுடனே!

ஹிமாவாரி வலையில் கிடைப்பாளா! எனக்கும் அதே கேள்வி. தேடுகிறேன்.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

திருப்தியான திருப்பதி:-)))))

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வாங்க அமைதிச்சாரல்.

வலையில் ட்ரெய்லர் மட்டும் தான் காட்டுகிறாள்:(

said...

வாங்க ராஜி.

சுவையும் அருமையே!
ரசனைக்கு நன்றி:-)

said...

வாங்க இராஜரஜேஸ்வரி.

பாராட்டுகளுக்கு இதயம் நிறைந்த நன்றி.

said...

வாங்க எழிலரசி பழனிவேல்.

யூகம் ரொம்பச் சரி!

சித்ரா, சிங்கை உள்ளுர் பத்திரிகையில் தொடர் எழுதறாங்க.

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

ரசிப்புக்கு நன்றிகள்.

said...

வாங்க ரமணி.

சுற்றுலாவில் பங்கு கொள்வதற்கும், வாழ்த்தியமைக்கும் என் இனிய நன்றிகள்.

இந்தப் பயணம் கொஞ்சம் வித்தியாசமாகவே இருந்தது.

said...

வாங்க ஜி ரா.

ஜஸ்ட் நவ்வாலு நாட்கள்தான்.

குராங்கன் லாஜூ பார்த்தபோதும் முருகனை தரிசித்தபோதும் உங்கள் நினைவு வந்தது உண்மை!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

இம்முறை பயணம் கொஞ்சம் வித்தியாசமான அனுபவம் தந்தது உண்மை.

ஹிமாவாரி, யூ ட்யூபில் ட்ரெய்லர் மட்டும் காமிக்கிறாள்:(

said...

ஓ கே.

said...

தர்சனம்,ஆடல்,பாடல்,விருந்து அமர்களம்.

said...

என் பார்வையில் மாட்சிமை தாங்கிய மகாராணி நீங்க தான்.

said...

தவழும் ஸ்ரீநி அருமை. தொடர்கிறோம்.