Wednesday, June 19, 2013

நாலுநாள் அம்பானிகள் (பாலி பயணத்தொடர் 3)


கள்ளிப்ரியர்களுக்காக.......  சின்ன இடத்துலே இத்தனை வகைகளான்னு  வியப்புதான். செக்கின் பண்ண கையோடு   இதைத் தேடிப்போகலாமுன்னா  மணி ரெண்டாகுது. சாப்பிடலாமுன்னு  சொல்லிட்டார் கோபால். இந்த டெர்மினலில் நம்ம சாப்பாடு கிடைக்காது. போகட்டும் ராத்திரி முதல் தொடங்குவதை இப்பவே ஆரம்பிச்சால் என்ன தப்பு?

சாப்பாடு ஆச்சு. நான் வேற எதாவது  வாங்கிக்கலைன்னு  இவருக்கு மனக்குறை. ஐஸ்க்ரீம் தேடுனா... கிடைக்கலை!!! உண்மையில் இது உலகமகா அதிசயம்தான். இத்தனாம் பெரிய  ஏர்ப்போர்ட்டில் ஒரு ஐஸ்க்ரீம் கிடைகலையே:(


காக்டெஸ் கார்டனுக்குப்போகும் வழி கொஞ்சம் ட்ரிக்கியா இருக்கு. கண்டு பிடிக்க முடியாமல் நாலுமுறை ஏர்ப்போர்ட்டில் குறுக்கும் நெடுக்குமாப் போனபிறகொரு மாடிப்படியாண்டை   கண்ணில் பட்டது. எஸ்கலேட்டரில் ஏறிப்போய் அம்பு காட்டிய இன்னொரு மாடிக்குப்  படியேறிப்போனா  அடடா..................





நூறு வகைக்கு மேல் வச்சுருக்காங்க. ஆசியா, அமெரிக்கா, ஆஃப்ரிகா என்று உலகநாடுகள்  பலதும் இருக்கு:-) ட்ராகன் ட்ரீ, ப்ரிக்லி டவரிங் காக்டெஸ், பேரல் காக்டெஸ்ன்னு ஏராளமான வகைகள். நடைபாதையில் மட்டும் நடக்கவும். மரத்தில் ஏறாதீர்கள்(!!) என்ற அறிவிப்பு வேற:-)))))  இங்கேயே ஒரு ஒயின் பாரும் ரெஸ்ட்டாரண்டும் கூடுதல் வசதிக்கு!



ஒவ்வொன்னாய் ரசிச்சுப் பார்த்துக்  க்ளிக்கி...நேரம் போவதே தெரியலை. அடிக்கும் வெயிலுக்கு  அப்பப்ப வந்து நிழலில் கொஞ்சம் நிற்கலாம். பந்தல் போட்டு வச்சுருக்காங்க. உக்கார்ந்து ரசிக்க அங்கங்கே பெஞ்சுகள் வேற!  இடம்கூட ஒரு ஆயிரம் சதுரமீட்டர்கள்தான் இருக்கும். இடையிடையே பாதிரி மரங்கள். (Plumeria - Frangipani )ப்ராங்கிபாணின்னு  சொல்வோமே அவை!  ஆமாம்.... பெரியமரங்களா இருக்கே... எப்படி மாடித்தரையில் வச்சு வளர்க்குறாங்கன்னு வியப்புதான்.
















இதேபோல் ஒரு மொட்டு சிகப்பு நிறத்தில்  (மேலே உள்ள படம்)இங்கே  முதல்முறையா  நம்மூட்டுக்  கள்ளியிலும் வந்தது. முழுசா மலர்ந்தால்  என்ன நிறமோன்னு ஆசைஆசையாக் காத்திருந்தேன்.  திடீர்னு வந்த  ஃப்ராஸ்ட்டுலே  மொட்டு அப்படியே கருகிப்போச்சு:(


நேரமாகுதுன்னு  நம்ம கேட்டுக்குப் போனோம்.  ஃப்ளைட்  'டிலே' ஆகுது. அங்கிருந்து வந்தால் தான் இங்கிருந்து போக முடியும்!  இலவச இணையம் இருந்துச்சுன்னு கொஞ்சநேரம் மெயில் பார்த்துட்டு  மகளுக்கும் தோழிக்கும் மடல்கள் அனுப்பினேன். இந்த முறை பயணத்துலே  நம்ம மடிக்கணினி வேணாமுன்னு  முடிவு பண்ணி இருந்தோம்.

சும்மா வேடிக்கையில்  கொஞ்சநேரம் போச்சு. மூணரைக்கு வரவேண்டியது நாலே முக்காலுக்கு  வந்து, பயணிகள் இறங்குன அடுத்த நிமிசமே  நம்மை  உள்ளே போக விட்டாங்க. விமானத்தை சுத்தம் பண்ணும் வேலையெல்லாம் இல்லை. என்னதான் மலிவு விலை டிக்கெட்டுன்னாலும் இப்படியா!!!

நல்லவேளை துடைப்பத்தைக் கையில் கொடுத்து அவுங்கவுங்க உட்காரும் இடத்தைச் சுத்தம் செஞ்சுக்கோங்கன்னு சொல்லலை!

பாலிப் பயணம் இப்போதான் ஆரம்பிக்குது:-) நேத்து நாம் வந்த வழியாகவே திரும்பிப் போறோம். ரெண்டரை மணிநேரப்பயணம்.  இன்னும் கொஞ்சூண்டு போனால்  அஸ்ட்ராலியாவே வந்துரும்!  அந்த நாட்டு மக்களுக்கு  ரொம்பவேபிடிச்ச இடம் பாலி என்பதால்  எப்பவும் ஆஸி டூரிஸ்டுகள்  பாலியில் ஏராளம். என்கூட  நூலகத்தில் வேலை செய்த ஒரு  தோழி ஒருத்தர் இங்கே நியூஸியில்  குளிர்காலம் ஆரம்பிச்சதும் ஆறுமாசம் பாலித்தீவுக்குப் போயிருவாங்க.

ரொம்பவே விலை மலிவான இருப்பிடங்கள் எல்லாம் சின்ன ஊர்களில் கிடைக்குமாம்.  நியூஸியில் ஒரு மாசத்துக்குச் செலவாகும் பணத்தில்  பாலியில் தாராளமாக மூணு மாசங்கள் தங்கிடலாமுன்னு சொல்வாங்க.  அங்கேயும்  சின்னப்பிள்ளைகளுக்கு  ஆங்கிலம் பேசச் சொல்லித்தருவதும் கதை வாசித்துப்பழகச் சொல்லிக்கொடுப்பதுமா நேரம் போயிரும். எங்க நூலகத்தில்  இனி வேணாமுன்னு  கழிச்சுக் கட்டும்  புத்தகங்களை ஒரு மூட்டை அவர்கள் வசம் கொடுத்தனுப்புவோம். எங்கள் நூலகம் முற்றிலும் குழந்தைகளுக்கானது என்பதால்  பிரச்சனையே இல்லை:-)

'துளசி' வாசிக்க  ஆரம்பிச்சுருந்தேன்.  கண்ணனின் பிறப்பும் கோகுல வாழ்க்கையுமா 'கதை' போகுது.  வேற பொழுதுபோக்கு சமாச்சாரம் ஒன்னும் இந்த விமானத்தில் கிடையாது. 'கொடுக்கற காசுக்கு  இருக்க இடம் கொடுத்ததே அதிகம் ' என்றார் கோபால். அவர் என்ன வாசிக்கிறாருன்னு எட்டிப் பார்த்தேன்.  அமலா பாலுக்கு ஸ்பானிஷ் தெரியுமாம்:-)))))))

ஓளா (olah ) ன்னு மொத்த யூனிட்டும் சொல்லிக்கிட்டே இருந்துச்சாம்.  ஹாய்ன்னு அதுக்கு பொருளாம்.  நம்ம மக்களுக்கு  புதுப்புது சமாச்சாரங்களைச் சொல்லுவதில்  சினிமா சங்கதிகளை எழுதும்  'எழுத்தாளர்'கள் ரொம்பவே மெனெக்கெடறாங்க. புத்தக விற்பனை முக்கியம் இல்லையோ????  மக்களுக்கும்  நாட்டின் பல பிரச்சனைகளைப்பற்றி இப்போ என்ன கவலை வேண்டி இருக்கு?  சினிமாவே  கதின்னு  கிடக்கறாங்களே. குமுதம் ஒவ்வொரு காலக்கட்டத்துக்கும்  ஒருத்தரை பிடிச்சு வச்சுக்கும். முந்தி ஒரு காலத்துலே  வீணை காயத்ரி! இப்போ  அமலா பால். நாளை ...வேற யாராவது....


பொதுவா தலையை(மூளையை) கழட்டி வச்சுட்டு வாசிக்கும் பழக்கம் நம்ம கோபாலுக்கு. இதுக்குன்னே இந்த ஆ.வி, குமுதம் வகைகளை விடாமல்  வாங்குவார்.  ஃபிஜிக்கும் நியூஸிக்கும் சந்தா கட்டி விமானத் தபாலில்  வாங்கும் வழக்கமெல்லாம் இருந்துச்சு.  நான் வேப்பிலை அடிச்சு அடிச்சு இப்போ  ஒரு பத்து  வருசமா சந்தா கட்டுவதை நிறுத்தியாச்சு. ஆனாலும் சிங்கை, சென்னை பயணங்களில்  கண்ணுலெ பட்டால்போதும் விடமாட்டார்.

எனக்கு(ம்) இந்தோனேஷியன் பாஷா ( Bahasa Indonesia) தெரியுமுன்னு சொன்னேன்.  சாம்பிள் வேணுமா?

 அண்டா!  (Anda)

திருதிருன்னு  முழிச்சார். இது ஹிந்தி அண்டா இல்லை. அங்ரேஜி அண்டான்னேன். கூடவே kursi ன்னேன். இது ஹிந்தி குர்ஸிதான். திருதிரு அதிகமாச்சு.

இக்கடச் சூடுன்னு காமிச்சதும்  பொட்டிச் சிரி!

Terima kasih ன்னேன்:-))))  தேங்க் யூ.

விமானத்தில்  ஆங்கிலத்தில் பத்து விநாடி  சொன்ன அறிவிப்புகளையெல்லாம்  மொழிபெயர்த்து பத்து நிமிசம்  இந்தோனேஷியன் மொழியில் சொல்லிக்கிட்டு இருந்தாங்க. கடைசிச் சொல்  தெரிமா காசி.

விமானம் விட்டு இறங்குனதும்  நேராப்போய் நிற்கவேண்டிய இடம் விஸா ஆன் அரைவல் ஆளுக்கு 25 அமெரிக்க டாலர்.  ரொம்ப சாதாரணமான விமானநிலையம்தான்.  ஆனால் கூட்டம் அம்முச்சு.  உடனடிச் செலவுக்கு  கொஞ்சம்  உள்ளூர்காசை மாத்தி எடுத்துக்கணும். வரிசையா ஏகப்பட்ட  கரன்ஸி எக்ஸ்சேஞ்ச் கவுண்டர்கள்.  நூறு டாலர் நோட்டுக்கு தனி ரேட். நூறு  ரூபா கூடுதல்.  250 க்கு 2.3 மில்லியன் கிடைச்சது!  கம்போடியாவில் நாம்   இன்ஸ்டண்ட் பில்லியனர் ஆனது எல்லாம் இப்போ ஜூஜுபி!  இனிமேல் நாம் அம்பானிகளாக்கும் கேட்டோ:-)))


பொட்டியை எடுத்துக்கிட்டு வெளியே வந்தால் முதலில் கண்ணில் பட்டது
Roti 'O. இருக்கட்டும். பசி  நேரம். எதுக்கு இப்போ ரொட்டியை  ஞாபகப்படுத்துறே......

ஏர்ப்போர்ட் ட்ரான்ஸ்ஃபர் சொல்லி வச்சுருந்தோம். ஆல் சீஸன்ஸ் ஆள் வந்து காத்திருந்தார்.  பெயர்  மேடி(Ma De)! எங்க நாட்டுலே ஒரு சினிமா ஹீரோ இந்தப்பெயரில் இருக்காருன்னதும் அவருக்கு ஏகப்பட்ட  மகிழ்ச்சி. அரைமணி  நேரத்துலே  ஹொட்டேலுக்கு வந்து சேர்ந்தோம். மூணு மாடி. நமக்கு மூணாவது மாடியில் இடம் !  ஆஹான்னு   வரவேற்பைத் தாண்டி முற்றத்துலே காலு வச்சால்  மாடிப்படி:(   மின்தூக்கி இல்லையாம். போச்சுடா.......   20 கிராம் எடை குறைவு  உறுதியாச்சு.

நல்ல வசதியான அறைதான். பெரிய பால்கனி இருக்கு.  சாப்பிடப்போகணும். வரவேற்பில் ஒரு  டிஸ்கவுண்ட்   வவுச்சர் ஆளுக்கு அம்பதாயிரம்  ரூபா கொடுத்துருந்தாங்க.  அது இருக்கட்டும் வெளியே  இந்த பத்மா ஏரியாவில் காலாற நடந்துபோய்  பார்க்கலாம்.வரும்வழியில் நிறைய கூட்டமும்  ரெஸ்ட்டாரண்டுமாக் கண்ணில்பட்டதே!

தேடித்தேடி இருட்டு அதிகமா இருந்த இடத்துலே நுழைஞ்சோம்.  ஃப்ரூட் லஸ்ஸி,  Bir Bintang உட்பட செலவு ரெண்டு லட்சம்.  பரவாயில்லை. ஹொட்டேல் அறைக்கே  ஒரு நாளைக்கு ஒன்பது லட்சத்துச் சொச்சம் ஆகுதே!

தொடரும்.......:-)




29 comments:

said...

ரசிக்க வைக்கும் படங்கள்... இந்தோனேஷியன் பாஷா-பேஷா இருக்கு... ஹிஹி...
20 கிராம் எடை தான் குறையுமா...? வாழ்த்துக்கள்...

said...

படங்கள் அருமை. அதற்கேற்றா வர்ணனை நேரில் பார்த்த உணர்வை ஏற்படுத்துச்சு

said...

அந்த பிங்க் நிற கள்ளி மிகப் புதுசு . barrel cactus சிலது bushy யா இருக்கு சிலது ஓட்டைகளோட இருக்கே அது கொஞ்சம் விளக்க முடியுமா .
தெரிமா காசி!! :)

said...

olah.. துள்சிக்கா,

//நல்லவேளை துடைப்பத்தைக் கையில் கொடுத்து அவுங்கவுங்க உட்காரும் இடத்தைச் சுத்தம் செஞ்சுக்கோங்கன்னு சொல்லலை!//

இனிமே நடந்தாலும் நடக்குமோ!!

அருமையான பயணம். தெரிமா காசி :-))

said...

பாலி பயணத்தொடர் படித்தேன். என்ன அருமையா எழுதுகிறீர்கள். மீதி எல்லாம் படிக்கணும் காக்டஸ், நம் ஊர் சப்பாத்தி கள்ளிதான். எவ்வளவு அழகான போட்டோக்கள் எத்தனை சித்திர விசித்ரம். திரும்பத் திரும்ப படிக்க வேணும் என்று தோன்றுகிறது.அன்புடன்

said...

லட்சம் செலவழிச்சு காபி குடிச்சேன், சாப்பிட்டேன்னு பாலி போனா சொல்லிக்கலாம் :))

said...

காக்டெஸ் தோட்டம் அழகாக இருக்கிறது.

பாலி ரசிக்க வருகின்றோம்.

said...

Kopi "O" மாதிரி Roti "O" வா? கடைக்காரார் சிங்கபூரியர் அல்லது மலேசியராக இருக்ககூடும்.

said...

காக்டஸ் அற்புதம். அந்த வழியா நடக்கணும்னு தோன்றியதே உங்களுக்கு.
ஒவ்வொண்ணும் ஒவ்வொரு அழகு.

''துளசி'' ரசிச்சுப் படிச்சீங்களா,.
அம்பானி ஆக வாய்ப்புக் கொடுத்த பாலிக்கு வாழ்த்துகள்

said...

அது ஓலா (Hola)

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

பலே பலே பேஷ் பேஷ்:-)

இந்த 20 கிராம் கூட உணவு உள்ளே போகுமுன்!!!!

said...

வாங்க ராஜி.

எல்லாம் கண்டது கண்டபடியே:-)

வருகைக்கு நன்றி.

said...

வாங்க சசி கலா.

இந்த பேரல் காக்டெஸ்லே முட்களோடு நீங்க பார்ப்பது ரியல். மற்ற (டார்க் ப்ரௌன் கலர்) போலி:-) ஸ்டீல் ஸ்கல்ப்ச்சர்! இதை அலங்காரத்துக்காக வச்சுருக்காங்க.

ஆமாம்..... இந்த வகைகளுக்கு இன்னொரு சுவாரசியமான பெயர் இருக்கே தெரியுமா?

மதர் இன் லாஸ் ஸ்டூல்!

கள்ளி விருப்பம் என்றால் இங்கே பாருங்க.

http://thulasidhalam.blogspot.co.nz/2010/06/blog-post_16.html

said...

வாங்க அமைதிச்சாரல்

வருகைக்கும் கருத்துக்கும் தெரிமா காசி!

said...

வாங்க காமாட்சி.

வணக்கம். நலமா? முதல்முறையா நம்மூட்டுக்கு வந்துருக்கீங்க. நல்வரவு.

பயணக்கதைகள் பிடிக்குமா?நம்ம தளத்தில் கொட்டிக்கிடக்கு.

அப்படியே வீட்டுக்குள்ளே உலாத்தினால் கிடைக்கும்:-)

வருகைக்கு நன்றி.

மீண்டும் வருக.

said...

வாங்க புதுகைத்தென்றல்.

இதைவிட நாலே நாளில் ஏழு மில்லியனுக்கு மேலே செலவாயிடுச்சுப்பான்னு அலுப்பா (ஒரு அலட்டலோடு ) சொல்லிக்கலாமே:-)))))

said...

வாங்க மாதேவி.

கூடவே வருவதற்கு என் இனிய நன்றிகள்.

said...

வாங்க குமார்.

நிறைய மலாய் சொற்கள் அங்கே அவுங்க மொழியிலும் இருக்கு.

Selamat jalan :-))))

said...

வாங்க வல்லி.

கள்ளியை விடமுடியலையேப்பா:-)))

துளசியில் சின்னதா ஒன்னு ரெண்டு மாற்றம் இருந்தால் தேவலைன்னு தோணுச்சு. ஆனால்...எழுத்துச்சித்தர் எழுதுனதை விமரிசிக்க நான் யார்? கப்சுப்!

said...

வாங்க கொத்ஸ்.

டீச்சரைத் திருத்தணுமுன்னா வெல்லம்:-)))))

hola
olah

ரெண்டும் சரியே.

ஓலாவை, குமுதம் ஓளான்னு போட்டுருக்கு:(

29/5/2013 குமுதம் கிடைத்தால் பக்கம் 2 பார்க்கவும். .

said...

காக்டஸ் தோட்டம் மிக அழகு. Barrel cactus-யை Timothy cactus என்றும் சொல்வார்கள் போலும். லால்பாகில் அப்படிதான் எழுதி வைத்திருந்தார்கள்.

said...

இல்லையில்லை. சென்று சரிபார்த்ததில், பேரல் அண்ணாக்களுக்கு சற்று தள்ளி பின்னால் நிற்கிறார்களே அவங்கல்லாம் டிமோத்தி அக்காக்கள்:)!

said...

ம்ஹூம். ஒன்லி hola! :)

said...

ஒரு வாரம் லேப்டாப் கையில் இல்லை.. அதுக்குள்ள இத்தன பதிவுகள் பதிவுகள் விட்டுப் போச்சே.

தட்டில் வெறும் சோறு... என்ன சொல்றது? ஒங்களைப் பத்திதான் தெரியுமே!

ஒரு மணி நேரத்துல பாஷா இந்தோனேஷியா கத்துக்கிட்ட பாட்ஷாயினி நீங்கதான் :)

எனக்கும் நினைவுக்கு வருது. பாலியில் லட்ச லட்சமாத்தான் செலவழிச்சேன் :)

said...

வாங்க ராமலக்ஷ்மி.

காக்டெஸ் பெயர்களில் மட்டும்
மாமியார்கள் மேல் எவ்ளோ கோபம் பாருங்களேன்:-))))

said...

கொத்ஸ்,

வெற்றி உமதே!

said...

வாங்க ஜிரா.

ஒரு விதத்தில் ஒரு வார சந்நியாசம் நல்லாதான் இருக்குல்லே!!!!

said...

wow...எனக்கு மிகவும் பிடித்த கள்ளி...link-க்கு நன்றி...பாலி படங்கள் அனைத்தும் சூப்பர்...:)சில இடங்கள் பார்க்க நம்ம ஊர் மாதிரி இருக்கு...:)

said...

வாங்க அக்ஷயா கணேஷ்.

முதல் வருகைக்கு நன்றி.
மீண்டும் வருக.

கள்ளி விருப்பம் என்றால் இங்கே பாருங்க.

http://thulasidhalam.blogspot.co.nz/2010/06/blog-post_16.html