சஃபாரி ஷட்டில் ஓடிக்கிட்டு இருக்கே... அதுலே முதல்லே ஏறிப்போய் ஒரு சுத்து சுத்தி வந்தோமுன்னா எதெது எங்கெங்கேன்னு புரிஞ்சுரும். அப்புறமா ஒவ்வொன்னாப் பார்க்கலாமுன்னு முடிவு செஞ்சேன். இதோ இன்னும் ரெண்டு நிமிட்லே வண்டி வந்துருமுன்னு சொன்னதில் அதுக்கான ஸ்டாப்பிங் போகும் கேட்டுக்குப் பக்கத்துலே ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டுக்கிட்டு இருந்துச்சு ஒரு Iguana (Rhinoceros) உடும்பு. அந்த குடும்பத்து மக்கள் ரெண்டு பேர் வெய்யில் காய்ஞ்சுக்கிட்டு ஹாயா இருந்தாங்க.
அதுக்குள்ளே ஷட்டில் வந்துருச்சு. இது ஒட்டச்சிவிங்கி.அதுலே ஏறி ஊர்ந்து போனோம். இன்னொன்னு வரிக்குதிரை. நிறைய மரங்கள் அடர்ந்த சாலை. இங்கே அது இருக்கு இங்கே இது இருக்குன்னு ரன்னிங் கமெண்ட்ரி கொடுத்துக்கிட்டே வண்டியை ஓட்டுனாங்க ட்ரைவரம்மா. மொத்தமே அஞ்சு ஸ்டாப்பிங்ஸ்தான். எங்கே வேணுமுன்னாலும் இறங்கிக்கிட்டு மறுபடி வேற ஷட்டிலில் ஏறிப்போய் பார்க்கலாம்.
ஒரு பெரிய மாந்தோப்பைக் கடந்து போனோம். நீர்நிலை இருக்கும் பகுதிக்கு அப்பால் ரெண்டு மூணு ஒட்டைச்சிவிங்கி தலைதூக்கிப் பார்த்ததுகள். எங்களைத்தவிர மற்ற எல்லோரும் இறங்கி ஆஃப்ரிக்க வனங்களுக்குள் போனாங்க. இதுதான் கடைசி நிறுத்தம். திரும்பி புறப்பட்ட மெயின் வாசலுக்கே வந்தோம். மொத்த சவாரியும் ஒரு 20 நிமிடங்கள்தான்.
இங்கே விலங்கு ஷோக்கள் மொத்தம் ஒரு நாளைக்கு 12. அதுலே நாளுக்கு மூணு முறை, ரெண்டு முறைன்னு இருப்பதைப் பார்த்து வச்சுக்கிட்டால் ஒருவழியா எல்லாத்தையும் கவர் செஞ்சுடலாம். காலை 10 மணி முதல் மாலை 3.30 வரைதான் ஷோ டைம்.
வயசான முத்தச்சன் முத்தச்சி ரெண்டு பேரை முதலில் போய்ப் பார்த்து வணக்கம் போட்டுக்கலாம் 150 வயசுன்னு DNA Test சொல்லுது. இப்போ. சாப்பாட்டு நேரம். ( GIANT GALAPAGOS TORTOISEஏ) ஹெர்ரியட் Harriet என்ற பெயர். இந்த வகை ஆமைகளுக்கு உலகம் முழுசுமே ஒரே பெயர்தான் போல! ஒரு ஆறுவருசத்துக்கு முந்தி இதே பெயரில் இருந்த ஒரு முத்தச்சி 175 வயசுலே ஹார்ட் அட்டாக்லே போயிருச்சு:(
ரெண்டு பேர் இருக்காங்க இப்போ. சின்னக்கால்களை வளைச்சு நகர்ந்துவந்து ஒரு தட்டில் காய்கறித்துண்டுகள், இலைதழையால் நிரப்பி இருக்கும் உணவை ரசிச்சு(!!) சாப்பிட்டாங்க. செம்பருத்திப்பூ தின்ன ரொம்ப ஆசையாம்!
கொமொடோ ட்ராகன்ஸ் நாக்கை நீட்டிக்கிட்டே நடைபோட்டு கிட்டு இருந்துச்சு இன்னொரு பக்கம்
கெமெரோன் என்ற முதலையைப் பார்த்து எனக்கு பயமே வரலை! எனக்குப் பிடிச்ச இன்னொரு விஷயம் இங்கே எல்லோருக்கும் பெயர் வச்சுருக்காங்க. நிறைய இளவயசு ஆட்கள் வேலை செய்யறாங்க. அங்கங்கே சில குழந்தைகளைக் கையில் வச்சுக்கிட்டு நமக்கும் தொட்டுப்பார்க்க அனுமதிக்கிறாங்க. குழந்தைகளைத் தொடக் கசக்குதா என்ன?
பறவைகளுக்கான இடத்துக்குள்ளே நுழைஞ்சோம். நல்ல ட்ராப்பிக்கல் ரெயின் ஃபாரஸ்ட் மாதிரி இருக்கு. வகைவகையான கிளிகள். ஒன்னு வெள்ளை மூக்குள்ள கருப்புக்கிளி! இன்னொருக்கா வரலாமுன்னு நடையைப்போட்டோம்.
கேட்டைத் திறந்தால்..... கங்காரு இனங்கள் உள்ள பகுதிக்கு வந்துருந்தோம். மனுசப்பயல்களைப் பார்த்துப்பழகி இருக்குதுங்க. நம்மைச் சட்டையே செய்யாமல் அதுகள் பாட்டுக்கு ஆற அமர ஓய்வெடுக்குதுங்க. முதுகைச் சொறிஞ்சு விட்டால் சுகமா இருக்குபோல! கிறக்கத்தோடு கண்ணை மூடிக்கிட்டு அனுபவிக்குதுங்க. இதா.... போயிட்டுத் திரும்ப வர்றேன்னேன்.
மரத்துலே நான் இருக்கேன் கண்டுபிடி பார்க்கலாம் என்ற அறிவிப்போடு சில மரங்கள். தலையைத் தூக்கிப் பார்த்தால் மரத்துக்கொன்னா ஒரு சின்ன மூட்டை! நமக்குப் பின்பக்கம் காமிச்சுக்கிட்டு...... ஹாஹா
சியாம், சாபூ, பிம்போ என்ற கேர்ள்ஸ் நமக்காக இன்னொரு இடத்தில் காத்திருக்காங்க. பத்தரைக்கு அவுங்களுக்கு நாம் ஊட்டிவிடலாம்! பெரிய கூட்டம் அங்கேதான். நாம்போய்ச்சேரும்போது டூஸ் அண்ட் டோண்ட்ஸ் சொல்லிக்கிட்டு இருந்தாங்க.
உள்ளங்கையிலே பழத்தை வச்சுக்குங்க. தானே எடுத்துக்குவார். பழம் கைதவறி கீழே விழுந்தால் அப்படியே வீட்டுருங்க.குனிஞ்சு எடுக்க வேண்டாம். அவரே எடுத்துக்குவார்........
மூணு பேருக்கும் பெயர் போட்டத் தனித்தனி இடம் பென்ஸ் கட்டைக்குப்பின்னால் வந்து நின்னாங்க. ஒவ்வொருத்தருக்கும் முன்னால் ஒரு ஆறடி இடம்விட்டு டோர் மேட் போல ஒரு துண்டு கால்மிதியடி. சனம் மூணு வரிசையில் நிக்குது. சின்னப்பிள்ளைகள் கூட்டம்தான் அதிகம்.
பழவகைகளைத் துண்டம் போட்டு வாளிகளில் வச்சுருக்காங்க. ஒவ்வொருத்தருக்கும் ஒரு துண்டு விநியோகம் செஞ்சதும் ஆவல், பயம் என்ற உணர்ச்சிக் கலவைகள் நிறைஞ்ச முகங்கள் கண்கொள்ளாக் காட்சி. வரிசையாப்போய் அந்த டோர்மேட்லே நின்னு உள்ளங்கையை நீட்டணும்.
பெரிய பயில்வானுக்கு ஒரு பொரி ! பாவம் பெண்கள். பொறுமையா ஒவ்வொன்னா எடுத்து வாயில் போட்டுக்கறாங்க.
மொத்தம் பனிரெண்டு ஏக்கர் இடம் இவுங்களுக்கு ஒதுக்கி இருக்காங்க. நீர்வீழ்ச்சியோடு ஒரு செயற்கைக்குளம். அதன் கரையில் புள்ளையார்! நல்ல பிரமாண்ட சைஸ்!
' கணேஷ் 'க்கு குட் டே சொல்லுங்கன்னு போட்டு அவருடைய மகிமையை எழுதி வச்சுருக்காங்க. யானைப்பகுதியில் அங்கங்கே யானைகளின் குணங்கள், தோல் கால் வால் அமைப்பு இப்படி சின்னச்சின்னத் தகவல்கள்.. பிள்ளைகளுக்கு நாம் ஒன்னையும் விளக்க வேண்டாம்.
இந்தப்பகுதிக்குப் போட்டுருந்த கேட் எனக்கு ரொம்பவே பிடிச்சுப்போச்சு:-) என்ன குறைன்னா.... கன்னிமாடமால்லே இருக்கு! ஒரு பையன் இருக்கப்டாதோ?
அப்படியே யானைப்பொருட்கள் கடைக்குள்ளே நுழைஞ்சோம். ஒவ்வொரு முக்கிய பகுதிக்குள்ளூம் ஒரு நினைவுப்பொருட்கள் கடை வச்சுருக்காங்க. வியாபார நோக்கும் சைடு பை சைடா நடக்கட்டுமே! இதுலே பாருங்க நாம் அப்பதான் ஒரு சமாச்சாரத்தை நல்லா ரசிச்சு மனம் குழைஞ்சு போயிருப்போம். அப்பப் பார்த்து இந்தக் கடைக்குள்ளே நுழையும்படியான பாதை! இளகிய மனசு எதாவது வாங்கச் சொல்லும்! ஆசையை ஒழிக்கணுமுன்னு நான் ஒரு புத்தர் வாங்கினேன்:-)))))
எதுத்தாப்லே ஒரு பகுதியில் ரெட் பேண்டா நாலைஞ்சு. மரத்தில் ஏறி கிளைகளில் அங்கே இங்கேன்னு நடந்துக்கிட்டே இருக்குதுங்க. நின்னு ஒரு போஸ் கொடுத்துட்டாலும்.............. கடைசியில் தூக்கம் வந்துருச்சுன்னு ஒன்னு கிளையிலேயே படுத்துருச்சு:-)))) நம்ம ஜிகேயைவிடக் கொஞ்சம் பெருசு! ஆயுட்காலம் எட்டுவருசம்தானாம்:( இதுக்குக் கையிலே ஆறு விரல்கள்! ரெண்டு கட்டை விரல் இருப்பதால் மூங்கில் புதரில் நல்ல பிடிமானம் இருக்குமாம்!
இதுக்குப் பக்கத்துலே கொஞ்சதூரத்தில் இருந்த டைகர் டெம்பிளுக்குப் போனோம். நுழைவாசலில் ரெண்டு சிங்க பொம்மைகள் இருக்கு. நம்ம கம்போடியா அங்கோர்வாட் டிஸைன்லே செஞ்சுருக்காங்களாம். மொத்தம் பத்து புலிகள் . கண்ணில் பட்ட ஒருத்தர் மட்டும் நல்ல உறக்கத்தில். பகல் ரெண்டு மணிக்கு இங்கே ஷோ இருக்குன்னு அறிவிப்பு போட்டுருக்கு. அப்புறமா வரணும்.
தொடரும்................:-))))

14 comments:
அருமையான பகிர்வு. 150 வயசு பெரியவங்க இரண்டு பேருக்கும் ஒரு வணக்கம்:)!
அந்த வெள்ளை புலி thoonguvathu கொள்ளை அழகு.பிள்ளையார் எப்படி அங்கே வந்தாரு.
யானைகளுக்கான பலம் என்றாலும் எவ்ளோ பிரெஷா இருக்கு .எங்க ஊரு கொளஞ்சியப்பர் கோவில் நெறைய மான்,மயில்,முயலாம் இருக்கு,அதுக்கு இது போல் நாம் உணவு கொடுக்கலாம்.அங்கே விற்கும் காய்கறிகள் கடையில் மீந்து போன முதல் காய்கள்.அந்த விலங்குகள் கூண்டுக்கு வெளியே காய்கறி சிதரல்கல்னு ஒரே அசுத்தமாக இருக்கும்.ஹ்ம்ம்.
பொரி பயில்வானின் கடைவாய்க்குக்கூட காணாது போலிருக்கே. ஒரு வேளை இது சிறுதீனியோ. நல்லவேளை ஒரு டம்ளர்ல பால் வெச்சு, ஸ்பூனால ஊட்டி விடச்சொல்லாம இருந்தாங்களே :-))
ஜோடியா இருக்கும் பெரியவங்களுக்கு நமஸ்காரம்.
வயசான ஜோடி.... என்ன அமைதியா போஸ் கொடுக்கறாங்க! ஒரு வணக்கத்தைப் போட்டுடுவோம்....
கடைசி ஃபோடோ சூப்பர்...:)
வாங்க ராமலக்ஷ்மி.
பெரியவங்க கூட ரெண்டு வெவ்வேற நிறத்துலே இருப்பதைக் கவனிச்சீங்களா!!!!
வாங்க விஜி.
யானைன்னதும் அவுங்களுக்கும் புள்ளையார் தெரிஞ்சுபோச்சு பாருங்க!!!!
பழங்களை செலக்ட் பண்ணி வாங்கறாங்க. கொள்முதலில் லஞ்ச லாவண்யம் இல்லை பாருங்க.
காய்கறி கொடுத்துட்டு அப்படியே இடத்தையும் சுத்தமாக்கக்கூடாதா?
சுத்தம் கடவுளுக்குப் பிடிக்கும்.
வாங்க அமைதிச்சாரல்.
நாளுக்கு ரெண்டு வேளை இது யானைகளின் டைம்பாஸ் :-)))
எரிச்சல் வந்து தலையில் தட்டாமப்பொறுமையா நின்னு வாங்கிக்குதுங்க செல்லமாட்டம்!!!!
நமஸ்காரத்தை ஜோடிப் பெரியவர்களுக்கு அனுப்பிடலாம்:-)
வாங்க வெங்கட் நாகராஜ்.
வணக்கம் அனுப்பிட்டேன்.
கடைசி போட்டோ? நன்றி நன்றி நன்றிதானாக்கும்:-))))
சிலதை பாத்துக்கிட்டேயிருந்தா அலுப்பேயிருக்காது. யானையும் ரயிலும் குரங்கும் அந்த வகை.
குரங்கு குறும்பு பண்ணும். ரயில் நிக்காம ஓடிரும்.
ஆனா யானைதான் நிக்கும். அசையும். கொடுத்ததை வாங்கிச் சாப்பிடும். தலையத் தொடும். நம்மள அங்கங்க தொட்டுப் பாக்கும்.
அந்தத் தும்பிக்கை ஒன்னு போதுமே.
அவ்வளவு அழகு. அவ்வளவு அழகு.
டீச்சரைப் பாத்தா மாணவர்களுக்கு மட்டுமல்ல, முதலைக்கும் நடுக்கம்தான்னு படத்தைப் பாத்தாலே தெரியுது. :)
முதலை அருகில் நீங்கள் நிற்கும் புகைப்படத்தை பார்த்துவிட்டு உங்கள் அருகில் இருபது நிஜ முதலை தானோ என்று ஒரு நிமிடம் பயந்து விட்டேன். படங்களுடன் கூடிய அருமையான பகிர்வு. நன்றி
படித்துப் பாருங்கள்
காவி நிறத்தில் ஒரு காதல்
seenuguru.blogspot.com/2012/06/blog-post_28.html
ஒட்டகச்சிவிங்கி, வரிக்குதிரை, உடும்பு, யானைங்க,முதலை எல்லாமே நல்லா இருந்தாலும் ஆமையை ஏன் எனக்குப் பிடிச்சு போச்சு. என்னைப்போல படு ஸ்லோவா இருக்கறதாலேயா :)
டிரைவரம்மா போட்டாவை நான் பார்க்க மிஸ் பண்ணிட்டேனோ
உங்க கூடவே கூட்டிப்போயி நல்ல சுத்திப்பாத்தோம் துள்சி
அனைவரும் அசத்தல் போஸ்தருகின்றார்கள்.
நம்ம தும்பிக்கையானுக்கும் முதலிடம்.
/கெமெரோன் என்ற முதலையைப் பார்த்து எனக்கு பயமே வரலை!/
ரொம்ப தைரியம்தான்!!!
பயணமும் படங்களும் அருமை
Post a Comment