Friday, March 02, 2012

'வேணு'வை எங்கே தொலைத்தாய் 'கோபாலா'?.

அசந்து தூங்கிட்டேன்போல. கண் விழிக்கும்போது மணி ஏழரை. ராத்திரியெல்லாம் சரியாத் தூக்கம் வராமப் புரண்டுக்கிட்டே இருந்தேன். எல்லாம் பசிதான். தாளமுடியாத ஒரு கட்டத்தில் எழுந்து நாலு பிஸ்கெட்டைப் பிச்சுப் போட்டுக்கிட்டு ரெண்டு க்ளாஸ் தண்ணி அடிச்சதும் வயிறு கொஞ்சம் சமாதானமாச்சு.

கல்யாணவீட்டுலே இருந்து வரும்போதே ..... அறைக்குப்போய் புளியோதரையை வெட்டணுமுன்னு நினைப்பு. நம்ம மோட்டலுக்குள்ளே வண்டியைத் திருப்பும் இடத்தில்தான் லிட்டில் இண்டியா என்னும் ரெஸ்ட்டாரண்ட் இருக்கு. மத்தியானம் பார்த்துவச்சுக்கிட்டதுதான். (பழைய க்ரிக்கெட்காரர் 'க்ளெண் டர்னர்' யாருக்காவது நினைவிருக்கா? அவர் ஒரு பஞ்சாபியைத்தான் கலியாணம் கட்டினார். அவுங்க பெயர் சுகிந்தர் கௌர். இங்கே வந்து டனேடின் என்ற ஊரில் செட்டிலானாங்க. அங்கே ஒரு ஃபிஷ் அண்ட் சிப் கடையை ஆரம்பிச்சு நடத்திக்கிட்டு இருந்த சமயம் சுகியின் தாயும் தந்தையும் மகளைப்பார்க்க நியூசி வந்தாங்க. அப்பதான் இந்தக் கடையில் சில இந்தியச் சாப்பாட்டையும் செஞ்சு வித்துப்பார்க்கலாமுன்னு ஐடியா வந்துருக்கு. ஊர் ஜனங்களுக்குப் புது ருசி பிடிச்சுப்போய் கடையில் கூட்டம் வர ஆரம்பிச்சது. ஒத்தை அடுப்பை வச்சு மாரடிக்காம பெரிய அளவில் நடத்தலாமேன்னு 1991 இல் அவுங்க குடும்பம் ஆரம்பிச்சதுதான் இந்த இண்டியன் ரெஸ்ட்டாரண்ட். அப்புறம் இந்த 21 வருசங்களில் இது 13 கிளைகள் பரப்பி முக்கிய ஊர்களில் இடம்பிடிச்சுருக்கு. எங்கூர்லேயே மூணு. அதுலே ஒன்னு நிலநடுக்கத்தில் போயிருச்சு:( இந்த சுகி(ந்தர் கௌர்) டர்னர் ஒன்பது வருசங்கள் (மூணுமுறை) டனேடின் மேயரா இருந்தாங்க. நியூஸியில் மேயரான முதல் இந்தியர் என்ற பெருமை இவுங்களுக்குத்தான்.) அங்கே போய் எதாவது சாப்பிட்டுக்கலாமான்னா..... நம்ம அதிர்ஷ்டம் பாருங்க .... சாத்தி இருக்கு. மணி இரவு ஒன்பதரைதான். இங்கெல்லாம் கொஞ்சம் சீக்கிரமாவே மூடிருவாங்க போல:(

மூடுன கதவைப் பார்த்ததும் பசி சட்ன்னு அடங்கிருச்சு. மறுநாள் சீக்கிரமாக் கிளம்பிடலாமுன்னு திட்டம். காலை எட்டுக்குப் போனால் சரியா இருக்கும். அரக்கப்பரக்க எழுந்து பல்லைத் தேய்ச்சுட்டு நேத்து மோட்டல்காரர் கொடுத்த பாலை மைக்ரோவேவில் சூடாக்கி ஆளுக்குப் பாதின்னு குடிச்சுட்டு அறையைக் காலி செஞ்சுட்டுப் புறப்பட்டோம். ஊர் இன்னும் விழிக்கலை.
அதிகாலை டிமரு


நாம் தங்கிய மோட்டல்
டிமருவில் கோடைகாலக் கொண்டாட்டம்


இங்கே மோட்டல்களில் நாமே சமைச்சுக்கும் வசதிகள் இருக்கு. மைக்ரோவேவ், மின்சார அடுப்பு, நாலைஞ்சு சமையல் பாத்திரங்கள், கத்தி, ஸ்பூன், ஃபோர்க், தட்டு, டப்ளர், காஃபி மக், ப்ரெட் டோஸ்ட்டர், எலெக்ட்ரிக் கெட்டில் இப்படி பேஸிக் அயிட்டங்கள் இருக்கும். பயன்படுத்திய பாத்திரங்களைக் கழுவி வைக்கத் தேவையான ஸோப், ஸ்பாஞ்ச், கிச்சன் டவல் இப்படி சகலமும். அவசரத்துக்குன்னு கொஞ்சம் காஃபித்தூள், டீத்தூள், சக்கரை வச்சுருப்பாங்க.
உள்நாட்டுப் பயணம் போகும்போது காரில் லக்கேஜோடு லக்கேஜா நமக்கு வேண்டிய அரிசி, மசாலா, பருப்புன்னு மளிகைச் சாமான்களைக் கொஞ்சம் எடுத்துக்கிட்டுப் போனால் அந்தந்த ஊர்களில் இருக்கும் சூப்பர்மார்கெட்டுகளில் ப்ரெஷ் காய்கறிகளையும் உறைஞ்ச காய்களையும், தயிரையும் வாங்கிக்கிட்டு வயிறு வாடாமல் பயணத்தை அனுபவிக்கலாம். இதுக்குன்னே சின்னதா ஒரு ரைஸ் குக்கர் வாங்கி வச்சுருக்கேன். பக்கத்து நாடான அஸ்ட்ராலியா போனாலும் கையோடு குக்கரை எடுத்துக்கிட்டுப் போவேன்.

பொதுவா சனி ஞாயிறுகளில் வேலை நேரம் பத்துமணிக்கு என்றதால் சாலையில் போக்குவரத்து ஒன்னும் இல்லை. போற வழியில் எங்காவது சூப்பர்மார்கெட் திறந்துருந்தால் ப்ரேக்ஃபாஸ்ட்டுக்கு எதாவது வாங்கிக்கணும். சூப்பர்மார்கெட்டுகளும் பெரிய கடைகளும் நாடு முழுசும் செயின் ஸ்டோர் வகையில் இருக்கு. அந்தந்த ஊருக்குன்னு ஸ்பெஷலா கிடைக்கும் சமாச்சாரங்கள் என்று ஒன்னும் கிடையாது இங்கே. நாடு முழுக்க ஒரே சாமான்கள். ஒரே விலை.

நூறு கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் சாலை. ஊர்கள் இடையில் வரும்போது மட்டும் அந்த எல்லைக்குள் அம்பது கிமீ வேகம். மாடுகள் எல்லாம் வெள்ளெனவே எழுந்து ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டுக்கிட்டு இருக்குதுகள். ரங்கிட்டாடா நதிப்பாலமும் ரக்கியா நதிப்பாலமும் ரொம்ப நீளமா இருக்கு! அகலமான நதிகள். ஆனா...இப்போ தண்ணி கொஞ்சமா ஒரு பக்கம் ஓடிக்கிட்டு இருக்கு. ட்ரௌட் வகை நன்னீர் மீன்கள் நிறைய இந்த ஆறுகளில் கிடைக்கும்.
தூரத்துலே ' எங்க கைலாசம்' (மவுண்ட் குக்)கண்ணில் பட்டுச்சு. கோடைகாலம் என்றபடியால் மலைமுகட்டில் மட்டும் கொஞ்சம் பனி. மவொரி மக்களுக்கு இது புனிதமான மலை.

ஆஷ்பர்ட்டன் நகர் கவுண்ட்டவுன் சூப்பர்மார்கெட்டில் க்ரீம் பன், வாழைப்பழம், சனிக்கிழமை பேப்பர்( வாரம் ஒருநாள்தான் தினசரி வாங்குவோம். மற்ற நாட்களில் இலவசப்பேப்பர் வீட்டு மெயில் பாக்ஸ்க்கு வந்துரும்) வாங்கினோம். காரில் இருந்தபடியே காலை உணவை முழுங்கிட்டு வீட்டை நோக்கி வண்டியை விரட்டுனதில் பத்தேகாலுக்கு வாசலை மிதிச்சாச்சு.

புழக்கடையில் குருவிகள் கூட்டம் ப்ரெட் எங்கேன்னு கேட்டுக் கூச்சல் போடுதுங்க. ரொட்டித்துண்டுகளைக் கிள்ளித் தூவிட்டு குளிச்சுட்டு ஒரு நல்ல காஃபி. உயிர் வந்துச்சு.

இன்னிக்கு நம்ம ஸ்வாமிநாராயண் கோவிலில் சாமிச்சிலைகளை பிரதிஷ்டை செய்யறாங்க. மூணுநாள் விழா. அழைப்பிதழ் அனுப்பி இருந்தாங்க. நேற்று 'ஜல்யாத்ரா' கடலுக்குள்ளே படகுலே போய் கடலம்மாவுக்குப் பூஜை செஞ்சு அபிஷேகத்துக்குத் தண்ணீர் கொண்டு வருவாங்களாம். நாம்தான் கல்யாணத்துக்குப் போறோமேன்னு படகு சவாரிக்குப் பெயர் கொடுக்கலை.

இன்று காலை ஒன்பதுமுதல் பனிரெண்டரை வரை சாமிகள் நிர்மாணம். அந்தத் தெரு முழுசும் ரெண்டு பக்கமும் வண்டிகள் நிறுத்தியிருக்கு. பயங்கரக்கூட்டம்தான் போல! கோவில் வாசலில் என்னை இறங்கச் சொல்லிட்டு எப்படியும் தனியாத்தான் இருக்கப்போறே. அதனால் நீ போய்க்கிட்டே இருன்னார். அதுசரி., அதுவரை கூடவே இருக்கேன்னு சொன்னதும் அடுத்த தெரு முனையில் வண்டியை நிறுத்திட்டு வந்தார் கோபால்.

வழக்கமா ஒரே வாசலில் நுழைஞ்சு நீயாரோ நான் யாரோன்னு இருக்கணும். இன்னிக்கு வாசலே தனித்தனியா ஆகிப்போச்சு.! பெண்கள் பக்கவாட்டு வழியில் நுழைஞ்சு சாப்பாட்டுக்கூடம் கதவு வழியா உள்ளே போகணுமாம். கூடத்தில் எட்டிப்பார்த்தேன். ஸ்வாமி சிலைகள் அலங்காரமா நிக்க மக்கள் கூட்டம் அலைமோதுது. இனங்களைப் பிரிக்கும் லக்ஷ்மண ரேகா! பிரசங்கம் நடந்துக்கிட்டு இருந்துச்சு.
போனவாரம் ஆக்லாந்து நகரின் ஸ்வாமிநாராயண் கோவில் கட்டி பத்து வருசமானதுக்கு ஒரு விழா நடத்துனாங்க. அந்த விழாவை நடத்திவச்சுட்டு அப்படியே எங்கூர் புதுக்கோவிலுக்கு ஸ்வாமி சிலைகள் பிரதிஷ்டை செய்ய தீட்சை வாங்கி அம்பது வருசமான சாது த்யாகவல்லப்ஜி தலைமையில் ஏழு சாதுக்கள் வந்துருக்காங்க.
முதியசாது த்யாகவல்லப்ஜி


வரும் திங்கள் செவ்வாய் இரண்டு தினங்களில் இந்த ஊரிலேயே தங்கப்போகும் சாதுக்களை நமக்கு விருப்பமானால் நம்ம வீட்டில் அவர்களை வரவழைத்து ஆசிகள் பெற்றுக் கொள்ளலாமாம். ஐயோ!!!!! பெண்கள் எல்லோரும் முன்னுக்கே வரக்கூடாது என்ற இவுங்க சட்டதிட்டங்களுக்கு நம்மாலே சமாளிக்க முடியாது.

அந்த 'ஜல்யாத்ரா'வுக்கே ஆண்களுக்கு, பெண்களுக்குன்னு ரெண்டு தனித் தனிப்படகுகள். பெண்கள் படகை ஓட்டுனது(ம்) பெண்ணான்னு விசாரிக்கணும்.

சரியா பனிரெண்டே முக்காலுக்கு பிரஸாதம் பரிமாறல். சாப்பாட்டுக்கூடம் பெண்களுக்காகவும் கட்டிடத்தின் புழக்கடைப்பகுதியில் பந்தல் போட்டு ஆண்களுக்காகவும் உணவு ஏற்பாடு. கருவறை ஹாலில் பூஜைகள் முடிஞ்சபிறகு பெண்களோ ஆண்களோ எல்லோரும் போய் மூர்த்திகளைப்பார்க்கலாம். படங்கள் எடுக்கவும் தடை ஏதும் இல்லை. பூஜை சமயத்தில் மட்டுமே லக்ஷ்மண ரேகா. ஆரம்பகாலத்தில் செய்த நியமங்களை விடாமல் காப்பாத்திக்கிட்டே இருக்காங்க போல. போகட்டும் அவரவர் நியாயங்கள்.
கோவிலே இல்லாத ஊருக்கு ஒரு கோவில் வந்துருக்கு. அதுக்காக சந்தோஷப்படாம....... குற்றம் கண்டுபிடிச்சுக்கிட்டே இருக்கணுமா?

அழகா அஞ்சு மாடங்களில் சின்னச்சின்ன சந்நிதிகள். முதலில் ராமனும் சீதையும் அவர்கள் காலடியில் ஹனுமனும்.
அடுத்து ராதையும் க்ருஷ்ணனும். அபிநயித்துக்கொண்டிருந்த க்ருஷ்ணனிடம்,
;பாஸூரி கஹா(ங்)?' என்று கேட்டேன். பதில் ஒன்னும் சொல்லம மௌனமா இருந்தான்:-)))) காக்கா....ஊஷ்.....
நடுநாயகமா நாராயணனும் நரனும்.
நான்காவதில் ஸ்வாமிநாராயண் இயக்கத்தின் இந்த BAPS ( Bochasanwasi Shri Akshar Purushottam Swaminarayan Sanstha) பிரிவின் ஆரம்பகாலத் தலைவர்கள் முதல் தற்போதைய தலைவர் வரை உள்ள சாதுக்கள். (1907 -2012) நால்வர்.
அஞ்சாவது பரமசிவனும் பார்வதியும் பிள்ளையாரும். கார்த்திகேயனைக் காணோம்:(
சிவன் மனுஷ்யரூபத்தில்! ரொம்ப அழகான திருமுகம். இங்கே பிரதிஷ்ட்டை செய்த மூர்த்தங்களிலேயே அபார அழகு முகம் இந்த சிவனுக்குத்தான்.!
நாட்டுலே எல்லா விசேஷங்களுக்கும் கேக் வெட்டும் சம்ப்ரதாயம் அனுசரிச்சு இங்கேயும் ப்ரதிஷ்ட்டைக்கான கேக் செஞ்சு ரெடியா இருக்கு. அன்னக்கூட் உற்சவத்துக்கு வைப்பதுபோல் மூர்த்திகளுக்கு முன் விதவிதமான இனிப்பு வகைகளின் கொலு!
மறுநாள் ஞாயிறு பக்திபஜனை விழா. உள்ளூர் பள்ளிக்கூட ஹாலில் ஏற்பாடு. மாலை நாலரை முதல். சாதுக்களில் ஒருவர் தப்லாவும் இன்னொருவர் பாட்டுமா ஜமாய்ச்சுட்டாங்க. ரெண்டுபேரும் ஐ டி ஆட்கள். வந்த சாதுக்கள் அனைவருமே டாக்டர், எஞ்சிநீயர், விஞ்ஞானி என்று மெத்தப் படித்தவர்கள். அஞ்ஞானத்தைவிட்டு மெய்ஞானம் தேடிவந்தவங்க!
பக குங்குரூ பாந்த் மீரா நாச்சி ரே (Pag ghungaroo baandh meera nachi re nachi re) என்ற மீரா பஜன் பாடல்தான் மாஸ்டர் பீஸ்! பெண் இயற்றிய பாடலாச்சேன்னு ...எப்படின்னு...நினைச்சேன்:-) நல்லவேளை ஸ்வாமி சிலைகளில் பெண் சாமிகளுக்கு சம இடம் இருக்கு:-)

மூத்த ஸாது மேடையில் இருக்கையில் அமர்ந்திருந்தார். இந்தக் கோவில் சம்பந்தமான விஷயங்களில் ஆதரவுடன் 'நிதி' அளித்த மக்களை, தனித்தனியாகப் பெயர் சொல்லி மேடைக்கு அழைத்து மூத்தவர் கையால் மலர்க்கொத்து கொடுத்து மரியாதை செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. திடீர்னு நம்ம 'கோபால் bhai பெயர் வந்ததும் திகைச்சுப் போயிட்டேன். பெரியவரின் ஆசிகள் நம்ம கோபால் ,மூலம் துள்சி Bhenனுக்கு வந்து இப்போ உங்களுக்கெல்லாம் விநியோகிக்கப்படுகிறது.

ஆரத்தி முடிஞ்சு மஹா பிரஸாதமா சாப்பாடு. நேத்து சாமிக்கு வச்சுருந்த இனிப்புகளும் கேக்கும், காரவகைகளும் துணைக்கு வர பூரி, சன்னா மசாலா, சாதம், பருப்பு, பப்படம், ஸாலட்! வேணாமுன்னு சொல்லப்பிடாது சாமி கொடுக்கும் சாப்பாட்டை, இல்லையா?
கட்டுச்சோறில் ஆரம்பிச்சது கடவுள் போட்ட சாப்பாட்டில் வந்து முடிஞ்சது.

அனைவருக்கும் நீங்கள் ' நம்பும்' இறைவனின் அருள் கிடைக்கட்டும்.

என்றும் அன்புடன்,
துளசி
.

32 comments:

said...

ஆசியை பெற்றுக் கொண்டோம்.

said...

உங்கள் மூலம் கிடைத்த துறவியின் ஆசிகளை பெற்று மகிழ்ந்தேன். ரஸமான நடையில் அனுபவங்களை விவரித்திருந்ததை ரசித்து மகிழ்ந்தேன். வேணுவைத் தொலைத்த கோபாலன், சிவன் மற்றும் பிற புகைப்படங்களைக் கண்டும் மகிழ்ந்தேன். இத்தனை மகிழ்வை நல்கிய துளசி டீச்சருக்கு நன்றி!

said...

ஆஹா... கட்டுசாதத்தில் ஆரம்பித்து கடவுளின் பிரசாதம்... :)))

சுவையான தகவல்கள்....

said...

உங்க பக்கத்தில் உட்கார்ந்து கதை கேட்கிற மாதிரி இருக்கு படிக்க. செம எழுத்து டீச்சர் !

படங்கள் அட்டகாசம் ! வாழ்க்கையை உங்களை மாதிரி தான் டீச்சர் மகிழ்வா அனுபவிச்சு வாழணும் !

said...

//குளிச்சுட்டு ஒரு நல்ல காஃபி. உயிர் வந்துச்சு.//

எனக்கே நிம்மதியாக இருந்தது,மேடம்.

//துள்சி Bhenனுக்கு வந்து இப்போ உங்களுக்கெல்லாம் விநியோகிக்கப்படுகிறது.//

ஆசிகளுக்கு நன்றி மேடம்.

அருமையாக இருந்தது உங்க பயணக்கட்டுரை.படங்களெல்லாம் பிரமாதம்.

said...

அப்ப முந்தின நாளு 'விரதம்' இருந்தது மறுநாளைக்கு மஹா பிரசாதம் வாங்கிக்கத்தானா!!.. என்னே அவன் திருவிளையாடல்.

மூர்த்திகள் அழகு கொஞ்சுது.. அருமையான படங்கள்.

said...

ப்ரதிஷ்டை கேக்.. கேள்விபட்டதே இல்லையே..கோயிலயே வெட்டிசாப்பிடரதா....

said...

ஆசிகளை நாங்களும் வாங்கிக் கொண்டோம்...
கட்டுசாதத்திலிருந்து மஹா பிரசாதம்....கடவுளின் லீலை தான்.

கடவுளின் திருவுருவங்கள் அழகாக இருந்தது....எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி டீச்சர்.

said...

// அடுத்து ராதையும் க்ருஷ்ணனும். அபிநயித்துக்கொண்டிருந்த க்ருஷ்ணனிடம்,
;பாஸூரி கஹா(ங்)?' என்று கேட்டேன். பதில் ஒன்னும் சொல்லம மௌனமா இருந்தான்:-)))) காக்கா....ஊஷ்...//

உத்துப்பாத்தா, அது நிசமால்லே கோபாலும் துளசியுமா மாதிரி அல்ல இருக்கு ..
பான்ஸி டிரஸ் போட்டுகிட்டு அப்படியே ராதையும் கிருஷணனுமாய் ஆயிட்டீக போல இருக்கே !!

அடடா !! என்ன கண் கொள்ளா காட்சி !!

என் கண்ணே போட்டுடும் போல இருக்கே !! அவசரத்துலே பான்ஸுரியை மறந்துட்டீக போல ...

மீனாட்சி பாட்டி.

பின் குறிப்பு. க்ருஷ்ணர் குழல் ஊதுகிறார்போல வீட்டில் வைத்துக்கொள்ளக்கூடாது என்று சொல்லி
பலர் வீடுகளில் இந்த பான்சுரி இல்லாத ராதை கிருஷ்ணன் நான் பாத்திருக்கேன்.

said...

வெஙகட்டின் ப்ளாக்கில் நீங்க எனக்காக தந்த தகவலைக் குறிச்சுக்கிட்டேன். மிக்க நன்றி. நீங்க சுயதம்பட்டம்னு அடக்கமா சொல்க்கிறது என்னைப் போல ஆளுங்களுக்கு அனுபவப் பொக்கிஷம். முடிஞ்சவரை சீக்கிரமா வாங்கிக் படிச்சுட்டு மறுபடி பேசறேன். என் இதய நன்றி தங்களுக்கு!

said...

இனங்களைப் பிரிக்கும் லக்ஷ்மண் ரேகா....என் ரசிப்பில் முதலிடம்...

பிரதிஷ்டை கேக்....வித்தியாசமாய் இருக்கிறது..

said...

கோவிலே இல்லாத ஊருக்கு ஒரு கோவில் வந்துருக்கு. அதுக்காக சந்தோஷப்படாம....... குற்றம் கண்டுபிடிச்சுக்கிட்டே இருக்கணுமா?//

கோவிலே இல்லாத ஊருக்கு கோவில் வந்து இருப்பது மகிழ்ச்சியான விஷ்யம்தான்.

எல்லோரும் வாழ நீங்கள் வாழ்த்திய வாழ்த்துக்கு நன்றி.

said...

ராதா கிருஷ்ணா சிலையில் நீங்க வேய்ங்குழலைத் தேடுறீங்க. அப்படியே கொஞ்சம் ராதையின் முகத்தைப் பாருங்க. கண்கள் ஒரு பக்கமா பாக்குதே! :)

சிவன் பார்வதி கொள்ளை அழகு. அந்தப் புன்னகையும் கருணையும். அடடா! சங்ககாலத்துல சிவனுக்குத் தமிழ்நாட்டில் என்ன பேர் தெரியுமா? பிறவா யாக்கைப் பெரியோன். நுதழ்விழியானும் வழக்கிலிருந்த பெயர்தான்.

ரைஸ்குக்கர் எல்லா எடத்துக்கும் கொண்டு போறீங்களா? நெதர்லாந்துல இருந்த வரைக்கும் அங்கயே தஞ்சாவூர் பொன்னியரிசி கெடைச்சது. அதுனால பொங்கித் திங்குற பிரச்சனை இல்லை. ஒரு வருசத்துக்கு முன்னாடி லண்டனுக்கு ஒரு குட்டிப் பயணம். பாக்கெட்லயே அரிசி வருது. அப்படியே தண்ணியில பாக்கெட்டோட போட்டுக் கொதிக்க வெச்சா சோறாயிருது. பாக்கெட்டப் பிரிச்சிக் கொட்டிக்க வேண்டியதுதான். நல்லாவேயிருக்கு. புதுக்கடலூர்ல(நியூ சி லாண்ட்) அதெல்லாம் கெடைக்கனுமே?

லக்‌ஷ்மண் ரேகா பத்திச் சொன்னீங்க. ம்ம்ம்.. அது பத்தி ஒரு பதிவு எழுதனும். :)

said...

வாங்க ஜோதிஜி.

பெற்றுக் கொண்டதற்கு நன்றிகள்.

said...

வாங்க கணேஷ்.

ரசித்து மகிழ்ந்தமைக்கு இனிய நன்றிகள்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

சோற்றில் ஆரம்பிச்சால் சோற்றில்தான் முடிக்கணும்.

ஓருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்..... பாட்டி அன்றே சொல்லிவச்சுட்டாங்க:-)

said...

வாங்க மோகன் குமார்.

நான் அடிப்படையில் ஒரு கதை சொல்லி. அதான் ஆரம்பிச்சா....நிறுத்தமுடியலை:-)

வாழ்க்கையே ஒரு கதைதான். நெடுங்கதை கேட்டோ!!!!

said...

வாங்க ராம்வி.

நன்றிகளுக்கு என் நன்றிகள்.

பயணம் நல்லது. கூடவே வருவது அதனிலும் நல்லது.

said...

வாங்க அமைதிச்சாரல்.

அருமை தெரிஞ்சு உண்ண அவன் ஆடிய ஆட்டம்:-)))))

ஆனாலும் இருநாளைக்கு(சேர்த்து) ஏல இயலவில்லைப்பா:-))))

said...

வாங்க கயலு.

மறுநாள் சத்சங்கம் பஜன் நிகழ்ச்சியில் கேக்குத் துண்டங்கள் விநியோகம் ஆச்சு.

கேக்குலே ஸ்வாமிநாராயண் கோவில் பட ஐஸிங் அருமையா இருந்துச்சு. எல்லாம் எக்லெஸ் கேக்.

நம்ம ஹரே க்ருஷ்ணாவில்கூட பொழுதன்னிக்கும் கேக்தான்.ஸ்ரீகிருஷ்ண ஜயந்திக்கு ஹேப்பி பர்த் டே கேக் கூட உண்டு.

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

எல்லாம் 'அவன் ' செயல் இல்லையோ!!!!

ஆசிகளைப் பெற்றுக்கொண்டதற்கு நன்றி.

said...

வாங்க மீனாட்சி அக்கா!
அவ்ளவு அழகாவா இருக்கோம்? நெசமாவாச் சொல்றீங்க:-))))))

அவசரத்துலே குழலைக்கோட்டை விட்டுட்டாராமே!!

இந்த வாரம் போனபோது வெள்ளை நிற உடுப்பில் எல்லோரும் இருந்தாங்க. கையில் தங்க நிறத்தில் குழலும்.

வீட்டுலே குழல் வச்சால் ஏன் ஆகாதுன்னு சொல்றாங்கன்னு புரியலை. நம்ம வீட்டில் குழலோடுத்தான் கிருஷ்ணனும் க்ருஷ்ணப்பிள்ளையாரும் இருக்காங்க.

said...

கணேஷ்,

அவசரமே இல்லை. முடிஞ்சபோது முடிச்சுட்டு எழுதுங்க.

said...

வாங்க பாசமலர்.

நாங்க 'ஒரு மாதிரி' ன்னு காமிச்சுக்க என்னெல்லாம் செய்யறோமுன்னு பாருங்க:-))))

said...

வாங்க கோமதி அரசு.

குற்றம் பார்க்கில் கோவில் இல்லை:-))))

வருகைக்கு நன்றி.

said...

வாங்க ஜீரா.

குழலை யாராவது ஆட்டையப் போட்டுட்டாங்களோன்னு ராதாவின் கண்கள் கூட்டத்தில் தேடுகின்றன:-)))

புதுக்கடலூரிலும் ரெடிமேட் ரைஸ் கிடைக்குது. ஆனால் வெறுஞ்சோறு மட்டும் போதுமா? வெஞ்சனமும் இல்லே வேண்டி இருக்கு!

ரைஸ்குக்கருன்னா மார்ஜரீன் போட்டுத் தாளிச்சுக்கூட சமைச்சுடலாம். ஃப்ரைடுரைஸ்:-)

ஒருநாள் பைனாப்பிள் கேஸரி ரைஸ்குக்கரில் செஞ்சேன். சூப்பரா வந்துச்சு. அடிக்கடி கிண்டும் வேலையும் மிச்சம்.

said...

// ரைஸ்குக்கருன்னா மார்ஜரீன் போட்டுத் தாளிச்சுக்கூட சமைச்சுடலாம். ஃப்ரைடுரைஸ்:-) //

ஒங்களுக்கு இந்தச் சுவை பழகீருச்சு போல. எனக்குச் சிரமந்தான். மக்காச்சோள எண்ணெய்யே ஆகாது. நல்லெண்ணய்/சூரியகாந்தி எண்ணெய் எனக்குப் பிடித்தவை. வேற வழியே இல்லைன்னா, வெண்ணெய்ய வாங்கி உருக்கிக்கிறதுதான். :)

// ஒருநாள் பைனாப்பிள் கேஸரி ரைஸ்குக்கரில் செஞ்சேன். சூப்பரா வந்துச்சு. அடிக்கடி கிண்டும் வேலையும் மிச்சம். //

என்னது? ரைஸ்குக்கர்ல கேசரியா? அடிக்கடி கிண்டுறதுதானே கேசரியை 100% கேசரியாக்குது. :) வேல லேசுல முடியுதுன்னா நல்லதுதான்.

முந்தியெல்லாம் காய்கறிகள் அடுப்புலயே வெந்துச்சு. இப்போ... ரெண்டு பெரட்டு சட்டியில ஆனதும் மைக்ரோவேவ் அவன்ல வெச்சு எடுத்தா ஆயிருது. :) காலத்துக்கேத்த கடலயுருண்டைன்னு நெனைச்சிக்க வேண்டியதுதான். :)

said...

வேணு காணோம் என்பதும் நம்ம கண்ணுலதான் படும் :))

பதிவு அருமை

said...

தர்சனம் கிடைத்தது.

ஆசியும் பெற்றுக்கொண்டோம். மகிழ்ச்சி.

said...

ஜீரா,

இங்கே மார்ஜரீன் சூரியகாந்தி, கனோலா வெவ்வேற வகையில் கிடைக்குது. எது வாங்கினாலும் ஹார்ட் ஃபவுண்டேஷன் போடும் 'டிக்' இருக்கான்னு பார்த்துக்கணும்.

ஸோயா எண்ணெய் மட்டும்தான் எனக்குப் பிடிக்கறதே இல்லை. ஒரே மீன் வாசனை:(

ஒரே ஊர்லே கனகாலம் இருந்தால்.... நம்ம சுவையைக் கொஞ்சம் மாத்திக்கத்தான் வேண்டி இருக்கு.

said...

வாங்க புதுகைத்தென்றல்.

வேணு 'கண்முன்னாலேயே' இருக்கும்போது வேற என்ன நினைவு வரும்:-)))))

said...

வாங்க மாதேவி.

நமக்கெல்லாம் ஆசிகளை அள்ளி வழங்கிட்டாங்கப்பா புது சாமிகள்!