Tuesday, March 20, 2012

அதி'காரம்'

எல்லாம் இந்த வாஸ்கோட காமா... தீஸ்கோடா ராமான்னு கொண்டுவந்து கொடுத்த வினை. நிம்மதியா உடம்புக்கு கெடுதல் செய்யாத மிளகை வச்சுச் சமாளிச்சுக்கிட்டு இருந்தோம். மிளகாய்ச்செடி வந்து சேர்ந்த வருசம் சரியாத்தெரியலை. போர்த்துகீஸியரான இவர் மூணுமுறை1498, 1500, 1524 வருசங்களில் பாரதம் வந்துருக்கார். மொதவாட்டியே காரத்தைக் கொண்டுவந்துட்டாரான்னு தெரியலை. அதனால் நடுப்பயணத்தில் கொண்டுவந்துருக்கலாமுன்னு என் யூகம். (இவர் பிறந்த வருசமும் 1460 இல்லை 1469ன்னு ஒரு குழப்பமும் இருக்கு)
மிளகாயின் சரித்திரத்தைக் கவனிச்சால் அதுக்குக் கிட்டத்தட்ட பத்தாயிரம் வயசு!!!! நமக்குப் பரிச்சயமாகி வெறும் 600 வருசங்கள்தான் ஆகுது! தென் அமெரிக்கக் கண்டத்திலே விளைஞ்சு குமிஞ்சு இருந்ததை கொலம்பஸின் கடல்பயணத்தில் கூடவே போன ஒரு டாக்குட்டர்தான் கொண்டுவந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அறிமுகம் செஞ்சு வச்சுருக்கார். 1493 இல் கரீபியன் தீவுகளுக்குப்போய் வந்தப்பக் கையோடு பிடிச்சுக்கிட்டு வந்து ஸ்பெயின் நாட்டுலே நட்டுருக்கார்ப்பா.

இதோட மருத்துவ குணத்துக்காக ஸ்பெயின் & போர்ச்சுகல் நாடுகளில் சாமியார்கள் மடத்தில் பயிரிட்டு வளர்ந்துருக்காங்க. இந்த மாங்க்ஸ்க்கு (Monks)வேற வேலையே இல்லை போல! உ.பா. பீரை (Beer) முதல்முதலில் ஐரோப்பாவில் தயாரிச்சதுகூட இந்த சாமியார்கள் கூட்டம்தான். ஜெர்மெனி நாடுன்னு கேள்வி.

இந்தியாவில் காஷ்மீரி மிளகாய், குண்டு மிளகாய், ஜ்வாலா மிளகாய், காந்தாரி மிளகாய்ன்னு இப்போ பதினாலு வகைகள் பயிரிடறாங்க. காஷ்மீரி மிளகாய்க்கு அவ்வளவா காரம் இல்லை. ஆனால் கலர் மட்டும் அட்டகாசமான சிகப்பு. நிறத்துக்காகவே இதைக் கறிகளில் சேர்ப்பாங்க. ஆனால் இந்த காந்தாரி இருக்கா பாருங்க ... பேருக்கேத்த வகை. துரியோதனின் அம்மா போலவே அப்படி ஒரு உறைப்பு. சின்னதா இருக்கும் இதை ஒரு குழம்புக்கு ஒன்னு போட்டாலே முடியைப் பிச்சுக்கிட்டுப் போயிரும்!

தேஜ்பூர் மிளகாய்ன்னு மெக்ஸிகோ வகை ஒன்னு உலகிலேயே 'அதி(க)காரம் கொண்டதுன்னு சொல்றாங்க.

குஜராத், மகாராஷ்ட்ரா, ஆந்த்ரா, தமிழ்நாடு, கோவான்னு பல மாநிலங்களிலும் மிளகாய் விளைச்சல் சக்கைப்போடு போடுது. காலநிலை அதுக்கு ரொம்ப உகந்ததா இருப்பதே காரணம்.

அது போகட்டும். எப்படியோ மிளகாய் வந்து இங்கே நல்லா காலூணிருச்சு. இந்தியச் சமையலுன்னா கரம் மசாலா இல்லைன்னாலும் பரவாயில்லை மொளகாய் இருந்தே ஆகணுமுன்னு ஆகிக்கிடக்கு பாருங்க. நாக்குக்குக் காரம் வேண்டித்தான் கிடக்கு. மளிகை வாங்கணுமுன்னா உப்பு புளி .மொளகாய்ன்னுதானே ஆரம்பிக்கிறோம்.

இங்கே நியூஸிக்கு வந்த புதுசுலே பச்ச மிளகாய், வெள்ளைப்பூண்டு தேடித்தேடி நகரத்துக்கு வெளியில் கொஞ்சம் போனால் பக்கத்தூருலே கிடைக்குதுன்னு விவரம் சேகரிச்சோம். பூண்டு பதினைஞ்சு டாலர் கிலோன்னு ஒரு இடத்தில் கிடைச்சது. மிளகாய்க்கு இன்னும் ஒரு பத்துகிலோ மீட்டர் பயணம் செஞ்சு ஹாட் ஹவுஸ் விளைச்சல் இடத்துக்குப் போனோம். தண்ணீரில் வச்சு (Hydroponics)வளர்க்கறாங்க. நியூஸியில் சூப் டின்கள் தயாரிக்கும் கம்பெனிக்கு மொத்தமா வித்துருவாங்களாம்.

மிளகாய் வாங்க வந்துருக்கோமுன்னதும் நீங்களே பறிச்சுக்கணுமுன்னு கண்டிஷன் போட்டார் உடமையாளர். கிடைச்சது பாக்கியமுன்னு நாலுகைகளால் பரபரன்னு மூணு கிலோ அறுவடை செஞ்சோம். கிலோ இருவது டாலர் மேனிக்குக் கொடுத்தார். வருசத்துக்கு போதுமுன்னு கழுவித் துடைச்சு ஃப்ரீஸரில் வச்சுக்கிட்டேன்.

அதுக்கப்புறம் சில வருசங்கள் தொடர்ச்சியா அவரோடு ஒரு வியாபாரம். ஒரு சமயம் பேசிக்கிட்டே மிளகாய் எடுக்கும்போது, 'இண்டியன்ஸ் எப்படித்தான் மிளகாய் தின்னறீங்களோ? காரம் நாக்குலே எரியாதா?'ன்னார். நம்மாளு, இதெல்லாம் ஜுஜுபி.... நாங்க பச்சையாக்கூடக் கடிச்சுக்கிட்டு சோறு திம்போமுன்னு மிதப்பாச் சொல்லிக்கிட்டே ஒரு மிளகாயை எடுத்து அந்த ஆளுக்குக் கடுப்பத்தறேன்னு வீரமா வாயில் வச்சு ஒரு நறுக். கரகரன்னு பற்கள் அரைக்க அரைக்க அந்த ஆளுக்குக் கண் நட்டுக்கிச்சு. நம்மாளுக்குக் கண்ணுலே மளமளன்னு தண்ணீர் ஊற்று. ஐயோ ன்னு கத்த அவர் தன்மானம் இடங்கொடுக்கலை. பதறிப்போன நாந்தான் ஓடிப்போய் வண்டிக்குள் இருந்த கோக் பாட்டிலை தூக்கியாந்தேன். அப்புறம் வீட்டுக்கு வர்ற வழியெல்லாம் நான் பாட, அவர் கேக்க, மகள் முழிக்கன்னு ......

அதுக்குப்பிறகு அங்கே இங்கேன்னு இன்னும் சிலர் மிளகாய் வியாபாரம் தொடங்குனாங்க. விலையும் கொஞ்சம் கொஞ்சமா இறங்கிக்கிட்டே போச்சு. கடைசியா வாங்குனது கிலோ பனிரெண்டு கோடை முடியும் சமயம் சனிக்கிழமை பேப்பரில் கண்ணு வச்சுக்கிட்டே இருந்தால் எப்பவாவது விளம்பரம் வரும். பிக் யுவர் ஓன். உனக்கு வேணுமுன்னா நீ பறிச்சுக்கிட்டுக் காசைக்கொடு.

உள்ளுர் இந்தியன் கடைகளில் ஃபிஜியில் இருந்து காய்கறிகள் வரும்போது பச்சைமிளகாயும் சிலசமயம் வரும். எப்பவாவது இறக்குமதியாகும் காய்களில் ஒரு புழு பூச்சி இருந்தால் ஒட்டுமொத்த இறக்குமதியையும் அழிச்சுட்டு அப்படியே இனி காய்கறிகள் வரக்கூடாதுன்னு தடை போட்டுருவாங்க. இறக்குமதி வியாபாரம் செய்யும் கம்பெனிகள் அஞ்சாறுமாசம் கழிச்சு மறுபடி அரசாங்கத்திடம் கெஞ்சிக் கூத்தாடி எல்லா நிபந்தனைகளுக்கும் ஆமாஞ்சாமின்னு தலையாட்டிட்டு பல பரிசோதனைகளுக்கு ஈடு கொடுத்து மறுபடி காய்கறிகளைக் கொண்டுவருவாங்க. எப்போ கிடைக்கும் எப்போ கிடைக்காதுன்ற நிலையாமை இருந்ததால் விலையை ரொம்பவும் கவனிக்காமல் கொஞ்சம் வாங்கியாந்துக்குவோம்.

சீனர்கள் இங்கே குடியேறிய பின்னே அவுங்க நடத்தும் கடைகளில் பச்சைமிளகாய், சிகப்பு மிளகாய், இன்னும் அவுங்க சாப்பாட்டு சமாச்சாரமெல்லாம் உறையவச்சதா கிடைக்க ஆரம்பிச்சது. நல்ல தரமான பேக்கிங், சுத்தமான பொருட்கள். பருப்புவகைகள் அரிசின்னு நாங்களும் சீனக்கடைகளையே நம்பி இருந்தோம். இந்தியக்கடைகள் ஒன்னு ரெண்டு முளைச்சது அதுக்கப்புறம்தான்.

ஒரு ஏழெட்டு வருசமுந்தி உறையவச்ச காய்கறிகள் இந்தியாவில் இருந்து வர ஆரம்பிச்சது. இந்தியக்கடைகளில் இறக்குமதி செஞ்சாங்க. ப்ரோஸன் பராத்தா, ரொட்டின்னு ஆரம்பிச்சுக் காய்கறிகள் (முருங்கைக்காய் கூட!) கிடைச்சது. முக்கியமா பஞ்சாப், தில்லி கம்பெனிகள். தெற்கேன்னா கேரளா. ஏற்கெனவே அமீரகத்துக்கு அனுப்பிக்கிட்டு இருந்தாங்கதானே! அப்படியே கொஞ்சம் இங்கேயும்.......
இப்போ ஃப்ரொஸன் பச்சைமிளகாய், துருவிய தேங்காய் வர ஆரம்பிச்சுருக்கு.

ரெடி டு ஈட் வகைகளில் நம்ம MTR வகைகள் உட்பட பலதும் கடைகளில் இடம் பிடிச்சாச்சு. இதிலும் கேரளாவில் இருந்து நிறைய வருது. தமிழ்நாட்டு வகைகளோ, தயாரிப்புகளோ ஒன்னும் இல்லை ஒரு சில மசாலாப் பொடிகளைத் தவிர. சக்தி மசாலா புளியோதரைப்பொடி, எலுமிச்சை சாதப்பொடின்னு பார்த்துட்டு ஆசையா வாங்கிவந்தேன். த்ராபை:( வாயில் வைக்க வழங்கலை:( செய்முறை விளக்கம்கூட சரியாத்தரலை. என்னவோ போங்க.....

ஒரு நாள் உள்ளூர் காய்கறிக் கடை ஒன்னில் பச்சைமிளகாயைப் பார்த்தேன். என்னதான் உறைஞ்ச மிளகாயை வச்சுச் சமைச்சாலும் ஃப்ரெஷ் மிளகாய்க்குன்னு ஒரு வாசம் இருக்கே அதை எப்பவாவது அனுபவிக்கலாமுன்னு ஆசையா மிளகாயைக் கையில் எடுத்தப்பத்தான் எனக்குள்ளே இருந்த விவசாயி உறங்கி முழிச்சது.... சீச்சீ.... அந்த மிளகாய் ஒரே புளிப்பு கீழே போடுன்னு குரல்! விவசாயிதான்.... டாலர் 1.95 Each மிளகாய். குடும்பம் வெளங்குனாப்பொலதான்.....
நம்மூட்டு மிளகாய்

மகளிடம் புலம்பினால்..... 'நான் மிளகாய்ச்செடி ஒன்னு வாங்கி வீட்டில் வச்சுருக்கேன். ஆறெழு மிளகாய் வந்துருக்கு'ன்னாள். இத்தைப் பார்றா...... என்ன விலை அந்தச் செடி? அதிகமில்லை, ஒன்னு ஏழு டாலர்(தானாம்) ஜாலபெனோ Jalapeno வகை. நல்ல கரும்பச்சை நிறத்தில் காய்கள். கொஞ்சம் தடியா ஸாலிடா இருக்கு. அதி'காரம்' உள்ளவை.
ஏழான்னு யோசிச்ச ஒரு நாளில் பூச்செடிகள் வாங்க ஒரு கார்டன் செண்டருக்குப்போனபோது அங்கே ஆறு ஜாலபெனோ மிளகாய்ச்செடிகள் நாலரைக்கு ஆப்ட்டது. வாங்கியாந்து நட்டேன். அப்புறம் சண்டே மார்கெட் சந்தையில் சில்லி பெப்பர் செடிகள் ரெண்டும் ஒரு எக் ப்ளாண்ட் (நம்ம கத்தரிக்காய்தாங்க)செடியும் ஒவ்வோர் டாலர் மேனிக்குக் கிடைச்சது.
வெளியே

உள்ளே

தொட்டிகளில் நட்டு, கரிசனமும் கவனிப்புமா இருந்து உள்ளே வெளியே, வெளியே உள்ளேன்னு காலநிலைக்குத் தகுந்தாப்போல ஆட்டம் எல்லாம் ஆடி அறுவடையும் செஞ்சாச்சு. முதல் கொய்த்து கழிஞ்ஞு. ஒரு செடியில் பத்து பதினைஞ்சு மிளகாய்கள் தேறும். அந்த சில்லிபெப்பர் செடிகளில் கொஞ்சம் பெருசா இருக்கும் காய்களைப் பார்த்ததும் பஜ்ஜி பஜ்ஜின்னு பஜனை செய்ய ஆரம்பிச்சார் நம்மாள். கத்தரிக்காயும் ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு காய்ச்சது!

MTR போண்டா பஜ்ஜிமாவு கிடைச்சது. அதுலே தோய்ச்சுத் தோய்ச்சு கத்தரி, மிளகாய்ன்னு போட்டுக் கொடுத்தேன்.


கோடை முடிஞ்சு ஒரு மாசம் ஆகப்போகுதுன்னாலும் கன்ஸர்வேட்டரியில் இருப்பதால் இன்னொரு கொய்த்துக்குக் காய்கள் கிடைக்கும் என்று இருக்கேன்.
தோழி சொன்னாங்க..... பச்சை விரலாம்.

எனக்கே தெரியாமல் எனக்குள்ளே ஒரு விவசாயி இருக்கார்ப்பா!

32 comments:

said...

விவசாயிக்கு சக விவசாயியின் வாழ்த்துகள் :-))

நாம சேத்துல கை வெச்சாத்தான் நம்ம ஊட்டுல இருக்கறவங்க சோத்துல கை வைக்க முடியுமாக்கும். எங்கூட்லயும் கறுப்பு, பச்சைன்னு ரெண்டு விதமான மிளகாய் வளர்க்கிறேன். ஒரு காய்ஞ்ச மிளகாய் வத்தலைக் கிள்ளிப்போட்டா கொஞ்ச நாளுக்கப்புறம் மொளகா நாத்து ரெடி. அப்றம் தேவைக்கேற்ப நட்டுக்க வேண்டியதுதான்.

அந்தக்காலத்துல களை பறிக்கிறப்ப நாத்து நடறப்பல்லாம் தெம்மாங்கு பாடுவாங்களாமே.. இப்ப அதுக்குப்பதிலா எஃப் எம்மை பாடச் சொல்லிட்டாப் போச்சு. இசை கேட்டா செடிகள் நல்ல விளைச்சலைக் கொடுக்குமாம்.

said...

மிளகாய் பற்றிய தகவல்கள் அருமை.

said...

//இந்தியாவில் காஷ்மீரி மிளகாய், குண்டு மிளகாய், ஜ்வாலா மிளகாய், காந்தாரி மிளகாய்ன்னு இப்போ பதினாலு வகைகள் பயிரிடறாங்க. காஷ்மீரி மிளகாய்க்கு அவ்வளவா காரம் இல்லை. ஆனால் கலர் மட்டும் அட்டகாசமான சிகப்பு. நிறத்துக்காகவே இதைக் கறிகளில் சேர்ப்பாங்க. ஆனால் இந்த காந்தாரி இருக்கா பாருங்க ... பேருக்கேத்த வகை. துரியோதனின் அம்மா போலவே அப்படி ஒரு உறைப்பு. சின்னதா இருக்கும் இதை ஒரு குழம்புக்கு ஒன்னு போட்டாலே முடியைப் பிச்சுக்கிட்டுப் போயிரும்!//

துரியோதனின் அம்மா காந்தாரியையா சொல்கிறீர்கள் ?
அவர்கள் பதி பக்திக்கு, புத்ர வாத்ஸல்யத்திற்கும் பெயர் எடுத்தவர் ஆயிற்றே !!
கணவனுக்குக் கண் தெரியாதபொழுது தான் மட்டும் பார்ப்பது சரியா என எண்ணித்
தன் கண்களை வாழ் நாள் முழுவதும் கட்டி ஒரு தடவை, ஒரே தடவை தன் மகனைப்
பார்த்த காரணத்தினால், தன் மகனையே இழந்த கதை ஆயிற்றே !!

கருணையின் உரு காந்தாரியா நீங்கள் சொல்வது ? இருக்கவே இருக்காது. மறந்து போய் இருக்கலாம்.
ஒரு வேளை எங்க ஊட்டு அடங்காப்பிடாரியா இருக்குமோ ? (என் செல்ல நாத்தனார்)
தெரியவில்லை. கலியாணத்திற்க்கு முன்னாடி அவங்க செல்லப்பேரு ம் காந்தாரியாம்.

உள்ளமெலாமிளகாயோ உன் பெயரும் சுரைக்காயோ என்ற
கண்ணதாசனின் பாடலைக் கேளுங்கள்.

மிளகாய் ஒரு வலி நிவாரணி. இதயம் கனத்திருக்கும்போது இரண்டு சொட்டு
மிளகாய் நீரை கண்களிலே விட்டுக்கொள்ளுங்கள். மனசில் இருக்கும் கனம் எல்லாம்
நீராகக் கொட்டிப்போய், லேசாகிவிடும்.
எப்படி என் வைத்தியம் !!

.
மீனாட்சி பாட்டி.
http://vazhvuneri.blogspot.com

said...

கட்டாயம் நல்ல விவசாயிதான் நீங்க.
நல்ல அறுவடைக்கு வாழ்த்துகள் பா.
எங்கவீட்லயும் குட்டிக் கார மிளகாய் வச்சிருக்கார். அதுதான் வானத்தைப் பார்க்குமே அந்த மிளகாய். ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா உச்சிமண்டையே எரிஞ்சுடும்.

said...

அதி காரம்தான் ..தோழி சொன்னது போல் அழகான பச்சை விரல்கள்..

said...

மிளகாயின் கதையும் தெரிந்து கொண்டேன்.
விவசாயிக்கு வாழ்த்துகள். இப்ப பஜ்ஜிய பார்த்ததும் எனக்கு பஜ்ஜி சாப்பிடும் ஆசை வந்து விட்டதே....

said...

மிளகாய் பற்றிய தகவல்கள் அருமை...பஜ்ஜியை பார்த்ததும் ஆசை வந்துடுச்சு.

said...

எங்கப்பா பக்கத்துல பச்சைமிளகாய் வச்சிக்கடிப்பாங்க..
இங்க தில்லியில் எல்லாக்கடையிலும் குடுப்பாங்க தானே.. முள்ளங்கிகேரட் பச்சமிளகாய்.. மகள் கேப்பா உங்கப்பா சாப்பிடராங்க நீ சாப்பிடமாட்டியான்னு நானும் வீரமா ஒரே ஒரு கடி கடிச்சு வைப்பேன்..:)

said...

டீச்சர் பஜ்ஜி கடை ஆரம்பிச்சிடுங்க...சூப்பரு ;-)

said...

பச்சை மிளகாய்.... வாவ்...

நான் வெறுமனே சாப்பிடுவேனே.... :) இப்படிதான் ஹரியானா காரர்கள் சொல்வார்கள்....

மிளகாய்க் கதை, விவசாயி ஆனது எல்லாம் படித்தேன்... சுவையோ சுவை... ஹரியானாவில் ரொட்டிக்கு பச்சைமிளகாய்/வெங்காயம் கடித்து சாப்பிடுவார்கள். அவர்களுக்கு சப்ஜியே வேண்டாம்.... :)

said...

பச்சை விரல்களுக்குப் பாராட்டுக்கள்..

said...

வணக்கம் துளசி:

அதீக கார மிளகாய் பற்றி ஒரு செய்தி, எங்களூர் பக்கத்திலிருந்து:

ஸ்கார்பியன்

நாங்கள் எல்லாம் மிளகாய் பைத்தியம்; எமது மாநிலத்து மக்களில் பெரும்பாலோரும் அப்படியே. நாங்கள் அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிடும் ஹேட்ச் மிளகாய் பற்றி:

http://hatchnmgreenchile.com/

1984 லிருந்து முடிந்த போதெல்லாம் நாங்கள் விரும்பி சாப்பிடும் மெக்ஸிக்கன் உணவகம்:

டூரேன்ஸ் - இங்கே கிடைக்கும் சமைக்கப்பட்ட பச்சை அல்லது சிகப்பு மிளகாய், பூரீதோஸ் அல்லது எது மேலும் கொட்டிக் கொடுக்கப்படும்; உலக மாந்தர்கள் அனைவரும் ஒரு தடவையாவது சாப்பிடாவிட்டால் புண்ணியமில்லை.

இன்னொன்று jalapeño என்பதை ஹாலபேன்யோ என உச்சரிக்க வேண்டும். ஸ்பேனிஷ் மொழி மற்றும் பல ஐரோப்பிய மொழிகளில் ja ஹ.

மிளகாய் பஜ்ஜிக்கு வழியில்லை இங்கே, கொலேஸ்ரால் அதிகமாய் வழியறதால்..

அன்புடன்
வாசன், விஜி (தற்போது தமிழகத்தில்)

said...

அருமை.மிளகாய்க்கு நல்ல காரமும் அதே சமயம் அதில்லாமல் நமக்கு எல்லாம் (எனக்கு) சமையல் இல்லை.உங்க ஊரில் அறுவடையை முடிச்சாச்சு. அது தான் எங்கட ஊரில்(அமெரிக்காவில்) நேற்று தான் எங்களுக்கு ஸ்ப்ரிங் ஆரம்பம். இனிமேல் நாட்டு நட்டு எப்ப அறுவைடை செய்ய. உங்க வீட்டு மிளகாயும், பஜ்ஜியும் பார்த்ததும் அப்படியே எடுத்து சாப்பிடனும் போல் இருக்குங்க. சூப்பர்.
நானும் வைன் டொமேட்டோ,கத்தரிக்காய்,பச்சைமிளகாய், பேசில்,தோச அவக்காய் எல்லாம் வாங்கி வந்திருக்கேன். நாளை மறுநாள் தான் விதை போடவேண்டும். நல்ல பதிவு.

said...

இருந்தாலும் நம்ம ஊரு காரம் போல் வருமா. நம்ம ஊரு குழம்பு பார்த்தாலே உங்க கண்களில் தண்ணீர் வந்துவிடுமே.

மிளகாய்கள் அப்படியே மயக்குகின்றனவே.

முந்திக்கொண்டு எனது மிளகாயை திருடிவிட்டீர்களே :))))) அப்புறம் ஒரு தடவை தருகின்றேன்.

said...

அதென்ன மிளகாய் மேல் இம்புட்டு கோபம்[காரம்].வயிறு காந்தினால் ஒரு 'ஜெலூசில்' அம்புட்டுதான்!

said...

நல்ல பதிவு நாங்களும் பிரான்ஸ் வந்த ஆரம்பத்தில் சிலோன் மரக்கறிக்கும் வீரகேசரி பேப்பருக்கும் தவமிருந்தது நினைவுக்கு வருது..!!

said...

வாங்க அமைதிச்சாரல்.

அஞ்சறைப்பொட்டியில் இருந்த மிளகாய் விதைகளைத் தூவிவிட்டதில் கொல்லுன்னு முளைச்ச நாத்துகளை எடுத்து நட்டால் செடி மட்டும் உசரமா இருக்கே தவிர நோ மிளகாய்:(

நீரோட்டம் இருக்கட்டுமுன்னு சிங்கத்தை முடுக்கிவிட்டுருக்கேன்:-))))

said...

வாங்க சமுத்ரா.

வருகைக்கும் அருமைன்னதுக்கும் நன்றிகள்.

said...

வாங்க மீனாட்சி அக்கா.

தன் பிள்ளைகளுக்கு மட்டும் அருமையா இருந்துட்டுப் பங்காளி புள்ளைகளை கவனிக்கலை பாருங்க இந்த காந்தாரி:(

ஆனா.... நீங்க சொல்றாப்போல வீட்டுவீட்டுக்கு ஒரு காந்தாரி இருக்கத்தான் செய்யுது. முன்னொரு காலத்துலே நம்மூட்டுக்கு நானாக இருந்தேன். சரியான ராக்ஷசி.

said...

வாங்க வல்லி.

உங்க வீட்டுலே பச்சைவிரலர் இருக்காரேப்பா::))))

said...

வாங்க பாசமலர்.

நன்றி நன்றி.

ஆனால் அழகில்லாத பச்சைவிரல்கள்:)

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

சட்டுப்புட்டுன்னு எண்ணெய்ச் சட்டியை அடுப்பில் ஏத்துங்க. ஒரு கை இட்லிமாவு இருந்தால்கூடப் போதும். கொஞ்சம் கடலைமாவு, மிளகாய்த்தூள், பெருங்காயம் சேர்த்தால் சூப்பர் பஜ்ஜி கிடைச்சுரும்.

said...

வாங்க மேனகா.

சமையல் ராணியே, புறப்பட்டு வாங்க. பஜ்ஜி போட்டுறலாம்:-)))))

said...

வாங்க கயலு.

ஆஹா..... உங்க வீரமே தனி! இந்த விஷயத்தில் நான் மகா கோழை:-)))

said...

வாங்க கோபி.

நானே கடை போட்டு, நானே போணி பண்ணி நானே வாங்கித் தின்னணும்:(

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

வெறும் வெங்காயம் பச்சமிளகாய் கடிச்சுக்கிட்டு வறட்டு ரொட்டி தின்றதைப் பார்த்தால் பாவமாத்தான் இருக்கும். கொஞ்சூண்டு பருப்பு இருந்தால் தேவலை!

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

பாராட்டுகளுக்கு நன்றிப்பா.

said...

வாங்க வாசன் & விஜி.

ஆஹா..... தமிழகப்பயணமா!!!!

மிளகாய்த் தகவல்களுக்கு நன்றி. அப்ப்ப்பா...... என்ன காரம்! தேள் கொட்டுனாப்போல விறுவிறுங்குதே!!!!!இங்கே நமக்குத் தெரிஞ்ச ஒரு ஐரோப்பியப் பாட்டி, ஜெயாவைக்கூட யயான்னுதான் கூப்பிடறாங்க.

said...

வாங்க விஜி.

விவசாயத்தில் வெற்றி பெற வாழ்த்துகின்றேன்.

எங்களுக்குத்தான் இந்த முறை சம்மர் பொய்த்துவிட்டது. மூணுமாசக் கோடையில் ஒரு நாள் கூட 25 தாண்டலை:(

மழையும் குளிருமாப் போயிருச்சு.

பிழைச்சுக்கிடந்தால் அடுத்த கோடைக்கு ஒரு ப்ளான்ட்டர் பாக்ஸ் போட்டுக்கணும்.

said...

வாங்க மாதேவி.

அதென்னமோ காரமே ஆகறதில்லைப்பா. நம்ம ஊட்டுலே மகள் கூட காரமா சாப்பிட்டுருவாள்!

நான்தான்.... மென்குடல்காரி:-)

said...

வாங்க பத்மா.

ஊஹூம்..... இரக்கம் காட்டுங்க. அரக்க வைத்தியம் செஞ்சுக்க முடியாது:-))))))))))))

said...

வாங்க காட்டான்.

இப்போ இலங்கை மளிகை சாமான்கள் இங்கே கூடக் கிடைக்குது,மோர்மிளகாய்
உட்பட.

வருகைக்கு நன்றி.