டேட் லைனில் இருப்பது இப்படி ஒரு வசதி. அதிலும் இப்ப டே லைட் ஸேவிங்ஸ் வேற இருக்கா........ முந்திரிக்கொட்டைகள்தான் நாங்க.
போனவருசம் உகாதி புஷ்கரில்! அந்த வைகுண்டநாதன் கையேந்தி பவன் விருந்து வச்சான்.
இந்த வருசம் மெனு இப்படி.
ரைஸ்குக்கர் பாதாம் ஹல்வா, பலாப்பிஞ்சு கறி, ஓலன், சப்பாத்தி , மெதுவடை, ரவாலட்டு.
கடைசி இரண்டு அயிட்டங்கள் உள்ளூர் தோழி (ஆந்திரா) கொண்டுவந்து கொடுத்தாங்க.
நேத்து இந்தியன் கடைக்குப் போனப்ப நம்ம 'எம் டி ஆர் பாதாம் ஃபீஸ்ட்'
கண்ணில் பட்டது. தேவையான எல்லாப் பொருட்களும் இருன்தால் ஆறு நிமிசத்தில் செஞ்சுறலாம்.
இப்பெல்லாம் ரைஸ் குக்கர் பரிசோதனைகள் நடப்பதால் இதுவும் இப்படியே.
இனிப்பில்லாத கோவா உங்க ஊரில் கிடைச்சால் விசேஷம். இல்லைன்னா என்னோட ட்ரிக் சொல்லிடறேன்.
ஒரு கப் பால்பவுடரை லேசாப் பால் தெளித்துப் பிசைந்து உருண்டையா உருட்டி நீராவியில் அஞ்சு நிமிசம் வச்சு எடுங்க.
ஒரு பாக்கெட் பாதாம் ஃபீஸ்ட் பவுடர், உதிர்த்த கோவா உருண்டை, அரைக் கப் பால் சேர்த்து ஒரு நான்ஸ்டிக் ரைஸ்குக்கர் பாத்திரத்தில் போட்டு குக்கரை ஆன் செஞ்சுருங்க. மரக்கரண்டியால் அப்பப்பக் கிளறிக்கிட்டே இருக்கணும். மூணு நிமிஷம் ஆனதும் கால் கப் நெய் சேர்க்கணும். இப்ப கீப் வார்ம் செட்டிங்கே போதும். மூணு நிமிசம் கிளறுனதும் ஹல்வா தயார்!
அனைவருக்கும் உகாதிப் பண்டிகைக்கான இனிய வாழ்த்து(க்)கள்.
PINகுறிப்பு: பாதாம் ஹல்வாவுக்கே உரிய இளம் மஞ்சள் நிறம் மிஸ்ஸிங்:( அடுத்த முறை ரெண்டு சொட்டு ஃபுட் கலர் மஞ்சள் நிறம் சேர்க்கணும்.
PIN குறிப்பு 2: இந்த இனிப்பின் பெயரை மாத்திட்டேன். தின்னு பார்த்த பின்தான் தெரிஞ்சது, இது பாதாம் ஹல்வா இல்லை! பாதாம் திரட்டிப்பால்:-))))))
Friday, March 23, 2012
ஊருலகத்துக்கு முன்னே உகாதி கொண்டாட்டம்
Posted by துளசி கோபால் at 3/23/2012 02:46:00 PM
Labels: அனுபவம்
Subscribe to:
Post Comments (Atom)
38 comments:
thanks for the recipe.happy ugadhi :)
சுடச் சுட ஹல்வா... வாவ்....
அனைவருக்கும் உகாதி தின நல்வாழ்த்துகள்.....
படத்தை பார்க்கையிலேயே
ருசி தெரிந்த்து
படத்துடன் பகிர்வு மிக மிக அருமை
புது வருட நல்வாழ்த்துக்கள்
படத்தை பார்க்கையிலேயே
ருசி தெரிந்த்து
படத்துடன் பகிர்வு மிக மிக அருமை
புது வருட நல்வாழ்த்துக்கள்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் துளசியக்கா..
அல்வாவோ தெரட்டிப்பாலோ,.. இனிப்பா இருக்குது இல்லே. அப்ப சரி, நானும் ஒரு துண்டு எடுத்துக்கிட்டேன் :-)
தேங்காய் சட்டினியைப் பார்த்தால் தேங்காய் அதிகம் உணவில் சேர்க்காதிங்க, நல்லது கிடையாது என்று சொல்லத் தோன்றுகிறது, ரத்ததில் கொளுப்பு கூடிவிடும்
டீச்சர் நீங்க எப்போதும் போடும் உணவு படங்களை பார்த்தால் உங்கள் சமையலை ஒரு முறை சாப்பிட ஆசையா இருக்கு, நீங்க
சென்னை வரும்போது உங்களை பார்த்தால் அது நடக்காது. நீங்க இருக்கும் ஊருக்கு நாங்க வந்தால் தான் நடக்கும். பார்க்கலாம். அந்த கொடுப்பினை இருக்கா என.
டீச்சருக்கும் மற்றும் அனைவருக்கும் உகாதிப் தின வாழ்த்துக்கள்.
ஹல்வாவோ, திரட்டிப்பாலோ நான் ஒரு இனிப்பு ப்ரியை. அதனால் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டேன்....சூப்பர் டீச்சர்.
அனைவருக்கும் யுகாதி தின நல்வாழ்த்துகள்.
Happy telugu new year for your and your family
அனைவருக்கும் யுகாதி நல்வாழ்த்துகள்:)!
பாதாம் திரட்டிப் பாலுக்கு நன்றி!!!
ஆஹா!பார்க்கையில் நாவில் நீர் ஊறுது![வாழ்த்துக்கள்]
இனிய யுகாதித் திருநாள் வாழ்த்துகள்..
பலாப் பிஞ்சு ஓலன் ம்ம்ம்ம். கொஞ்சம் அனுப்புங்கப்பா.
பாதம் ஹல்வா நானும் செய்தேன்.
குங்குமப்பூ நிறைய இருந்தது. அதனால் கலரும் வந்துவிட்டது.
யுகாதி வாழ்த்துகள் துளசி.
ஹாப்பி யுகாதி உங்க வலைப்பூவின் மூலமா எல்லோருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.
பாதாம் திரட்டிப்பால் ஸ்வீட்டாதானே இருக்கும்? :-)
யுகாதி என்ற சொல்லை பிரித்துப் பார்த்தால் யுக ஆதி என்று வரும்.
இந்த யுகம் துவங்கி எத்தனை வருடங்கள் ஆகின்றன என்ற கணக்கு வருகிறதாம்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் உங்கள் வலை நோக்கி வரும் நேயர் அலைக்கும்
எங்கள் யுகாதி வாழ்த்துக்கள்.
அது சரி. இந்த படத்துலே ஏன் பெருமாள் ஒரு 15 பர் சென்ட் அந்தப்பக்கமா திரும்பி நிற்கறாரு !!
வழக்கமா, பெருமாளும் தாயாருமே ஒரே ஆங்கிள்ளே தானே பாத்துட்டு இருப்பாக !!
வருச ஆரம்புத்துலேயே தாரத்துட்ட கோவிச்சுக்கலாமா !!
பெருமாள்ட்ட ஒரு வார்த்தை சொல்லிப்போடுங்க...
மீனாட்சி பாட்டி.
http://menakasury.blogspot.com
பெரிய இடத்து விவகாரமாச்சே.. எப்படிக் கேக்கன்னு நான் தயங்கிட்டே இருந்தேன். மீனாட்சியம்மா கேட்டுட்டாங்க.
புது வருஷக் கொண்டாட்டத்துக்கு தாரம் பட்டுப்புடவை, வைர அட்டிகை கேக்கறது சகஜம்தான். இதுக்கெல்லாம் கோச்சுக்கலாமா. பெரியவர் கிட்ட எடுத்துச் சொல்லுங்க :-))
வாங்க ராஜி.
அன்புக்கு நன்றி.
வாங்க வெங்கட் நாகராஜ்.
வாழ்த்துக்கும் ஹல்வாவை ரசித்தமைக்கும் நன்றிகள்.
வாங்க ரமணி.
ருசி நல்லாத்தேன் இருந்துச்சு:-) வாழ்த்துகளுக்கு நன்றி.
வாங்க அமைதிச்சாரல்.
'துண்டு'போடவரலைன்றதுக்காக இப்படியா:-))))))
குடிபடவா கொண்டாடியாச்சா? இனிய வாழ்த்து(க்)கள்.
வாங்க கோவியாரே.
சட்னி அரைக்கவே இல்லையே!!!!!!
ஆனால் ஓலனுக்குத் தே.பால் ஊத்தணும். அப்பத்தான் அது ஓலன். கொஞ்சமா ஊத்தினேன், கேட்டோ:-)
வாங்க மோகன் குமார்.
எப்போ வர்றீங்களோ அப்போ விருந்தும் பதிவர் மாநாடும் நடத்திடலாம். நோ ஒர்ரீஸ்.
இப்பெல்லாம் )கொஞ்சம் நல்லாவே சமைக்கிறேன் என்ற எண்ணம் வந்து ஆணவம் கூடிக்கிட்டு இருக்கு. இதுலே நீங்க வேற ஒரு டின் நெய் வார்த்துட்டீங்க:-)))))))
வாங்க கோபி.
உங்களுக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.
வாங்க ரோஷ்ணியம்மா.
எங்கம்மா அடிக்கடி சொல்வாங்க.....அவுங்க மேலே கொஞ்சம் சக்கரை தூவிட்டால் நான் அப்படியே தின்னுருவேனாம்.
நான் அப்படி ஒரு இனிப்புப் பிசாசு.
அதே போலத்தான் ஆச்சு. ஆனா சக்கரை தூவாமலே அவுங்களை முழுங்கிட்டேன் எனக்கு 11 வயசானபோது:(
போகட்டும் அதெல்லாம் பழங்கதை!
இப்பதான் இனிப்புக்குத் தடா போட்டுருக்காங்க டாக்குட்டர் அம்மா:(
வாங்க கார்த்திகேயனி.
நன்றி. உங்களுக்கும் எங்கள் அன்பான தெலுகு வருடப்பிறப்புக்கான வாழ்த்து(க்)கள்.
வாங்க ராமலக்ஷ்மி.
நன்றி & நன்றி.
வாங்க பத்மா.
இன்னும் பாதி அப்படியே இருக்கு. கூடச்சேர்ந்து ருசிக்க ஆள் கிடைக்கலை:-))))
வாங்க ராஜராஜேஸ்வரி.
உங்களுக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.
வாங்க வல்லி.
பலாப்பிஞ்சுக் கறி அனுப்பவா? இல்லை வெள்ளைப்பூசணி ஓலன் அனுப்பவா?
ரெண்டையும் ஒன்னாக் கலந்தால் நல்லா இருக்காதுப்பா:-)))))
சென்னையில் இருந்திருந்தால் நான்கூட பாதாம் ஹல்வா அழகான !குண்டு பல்ப் பாட்டிலில் வாங்கி இருப்பேன்!!
வாங்க ஆர்விஎஸ்.
அடடா..... வராதவங்க வந்துருக்கீங்க. எனக்குக் கையும் ஓடலை காலும் ஓடலை!
ஸ்வீட் இனிப்பாத்தான் இருந்தது. MTR அதுக்குக் குறை வைக்கலை.ஆனால் பாதாம் ஃபீஸ்ட்லே கொஞ்சம் பாதாமைக் கண்ணுலே காமிச்சுருக்கப்டாதோன்னு இருந்ததென்னவோ நிஜம்-))))
வாங்க மீனாட்சி அக்கா.
வருசம் பூராவும் கோச்சிக்கறப்ப வருசப்பிறப்புக்கு மாத்திரம் லீவான்னு கேக்கறார் 'பெருமாள்'
தினம் நாலைஞ்சுமுறை லேசான நில அதிர்ச்சி வந்துக்கிட்டே இருக்கேக்கா. அதான் லேமினேட்டட் பலகை என்பதால் நகர்ந்து நகர்ந்து போயிடறாங்க ரெண்டு பேரும்!
பேசாமக் கட்டிப்போட்டுடலாமா? :-)
வாங்க அமைதிச்சாரல்.
நடுக்கத்தின் வழியே திசை மாறிப் பார்க்கறாங்க!
நம்ம வீட்டுலே ஒரு மூணு பூனைகள் (கெட்டது பார்க்காதே, கேக்காதே, பேசாதே ) செட்டுலே .... ஒரு நாள் பலமான அதிர்ச்சியில், கேட்காதே மட்டும் மற்ற ரெண்டையும் விட்டு அரையடி விலகிப்போய் ஹேண்ட்ஸ் அப் மாதிரி நிக்குது:-)))))
உகாதிஸ்பெஷல் சூப்பரோ சூப்பர்.
ரசித்தேன். வருந்தினேன் பார்த்ததை சாப்பிட முடியலயேன்னு.
வாங்க ஸாதிகா.
நமக்கு எல்லா நாளும் புது நாளே!!!
இனிய உகாதி வாழ்த்து(க்)கள்.
வாங்க டாக்டர் பழனி கந்தசாமி.
வருத்தப்படாதீங்க. காலம் கெட்டுப்போச்சு. படத்துலே பார்த்தாலும் கொலஸ்ட்ரால் கூடிப்போகுமாம்:-))))
உகாதிப் பண்டிகை இனிய விருந்து. வாழ்த்துக்கள்.
எடுத்துக்கொண்டோம். சுவைத்தது.
நன்றி.
Post a Comment