Monday, March 12, 2012

இந்தியாவைக் காணோம்............

இந்த ஊரில் நூத்தியம்பது மனித இனங்கள் இருக்குன்னு ஒரு சமயம் நகரத்தந்தையுடன் பேசிக்கிட்டு இருந்தப்பச் சொன்னார். எல்லா இனங்களும் சேர்ந்து கொண்டாடும் விதமா கல்ச்சர் கலோர் (Culture Galore) என்ற பெயரில் ஒரு விழா, மார்ச் மாச முன் பாதியில் எதாவது ஒரு சனிக்கிழமைகளில் கடந்த 12 வருசமா நடந்துக்கிட்டு இருக்கு. இங்கத்து கோடைகாலம் ஃபிப்ரவரியோடு முடிஞ்சுரும். மிச்சம்மீதி இருக்கும் வெயிலை எதுக்குப் பாழாக்கணும்?

நம்மூர் நூலகமும், சிட்டிக்கவுன்ஸிலும், ரேஸ் ரிலேஷன்ஸ் அலுவலகமும், எத்னிக் கவுன்ஸிலும் ஒன்னு சேர்ந்து நடத்தும் விழா. உலகின் பலவேறு பகுதிகளில் இருந்தும் வந்து இங்கே வாழ்க்கை நடத்தும் மக்கள் தங்கள் கலை, கலாச்சாரம், உணவு, உடை, விளையாட்டு இப்படி இருக்கும் சமாச்சாரங்களை மற்ற இனங்களுக்கு எடுத்துக்காட்ட இதை விட வேற நல்ல சந்தர்ப்பம் கிடைக்குமா?
ஊருக்குள்ளில் அஞ்சு ஹெக்டேர் அளவில் இருக்கும் ஒரு விளையாட்டுத் திடலில் நடப்பதால் பார்க்கிங், ஸ்டால்ஸ், மேடை நிகழ்ச்சிகள் எல்லாத்துக்கும் வசதிதான். (நம்ம பக்கத்துப் பேட்டை என்பதால் கூடுதல் மகிழ்ச்சி.அஞ்சே நிமிச ட்ரைவ்) பொதுமக்களுக்கும் நுழைவுக்கட்டணம், பார்க்கிங் சார்ஜ் இப்படி ஒன்னும் இல்லை. முற்றிலும் இலவசம்.
மேடை நிகழ்ச்சிகளுக்கு தயாரிப்புச் செலவா ஒரு குழுவிற்கு 100 டாலர் மான்யமும் கொடுக்கறாங்க பத்து நிமிசத்துக்கு மேற்படாமல் இருக்கணும்.
மதியம் 12 முதல் நாலுமணி வரை நடக்கும் விழா என்பதால் ஒரு சுத்துச் சுத்திப் பார்த்துட்டு அங்கேயே ஸ்டால்களில் விற்பனைக்கு இருக்கும் சாப்பாடுகளில் பிடிச்ச ஐட்டங்களை வாங்கிக்கிட்டு மேடைக்கு முன்னால் உக்கார்ந்துக்கிட்டால் ஆடலுடன் பாடலைக்கேட்டு ரசிச்சுக்கிட்டே உணவை உள்ளே தள்ளலாம்.
ஒரு பனிரெண்டரைக்குப் போய்ச்சேர்ந்தோம். கூடாரங்களும் மக்கள் கூட்டமுமா கலகலன்னு இருக்கு. பார்க்கிங் வார்டன் வரும் வண்டிகளின் எண்களைப் பதிஞ்சுக்கிட்டே சக்கரநாற்காலியில் இங்கும் அங்குமா பரபரப்பாப் போய்க்கிட்டு இருந்தார்.

ஒரு பக்கம் முழுசும் சாப்பாடுகள். இரான், எகிப்து, சீனா, தென் ஆஃப்ரிகா, ஜப்பான், கொரியா, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்துன்னு வகைவகையா. இந்தியாவுக்கு ஒதுக்கப்பட்ட இடம் காலியா அம்போன்னு கிடந்துச்சு. கடந்த சிலவருசங்களா இந்தியன் க்ளப் செயல்படாம முடங்கிக் கிடக்காம். தலைமை சரி இல்லை. கவுன்ஸில் கொடுக்கும் 'நிதி உதவியை எதாவது ஒரு ரூபத்தில் தானே அமுக்கணும்' என்ற அட்டூழியம்தான் காரணமாம். இந்த க்ளப்பை ஆரம்பிச்சவர் ( எல்லாம் நம்ம கோபால்தான்) மனசொடைஞ்சு வெத்து இடத்தைப் பார்த்தப்ப எனக்கு ரொம்பப் பாவமா இருந்துச்சு:(
ஒரு ஆறுதலான விஷயம் கோபியோ ( GOPIO : GLOBAL ORGANIZATION OF PEOPLE OF INDIAN ORIGIN)ஸ்டால் போட்டுருக்காங்க. அதே சமோஸா, பகோரா, நான், பட்டர் சிக்கன்,தால் மக்கானி, ரோகன் ஜோஷ், மட்டர் பனீர், மேங்கோ லஸ்ஸி வகைகள். இந்தியான்னாவே 'இந்த சாப்பாடு'ன்னு ஆகி கிடக்கு:(
எகிப்து நாட்டு ஸ்டாலில் உணவு வகைகள் ஏராளம். அதுலே நம்மூர் 'ஜாங்கிரிக்கு ஒன்னுவிட்ட தங்கை பேத்தி' மாதிரி ஒன்னு. அதுக்கு 'மெஷபெக்'ன்னு பெயர்!
இரான் ஸ்டாலில் கேசரி மாதிரி ரவையில் செஞ்சது ஒன்னும், இன்னும் ரெண்டு இனிப்புகளும் செஞ்சு வச்சு இலவசமா உபசரிச்சுக்கிட்டு இருந்தாங்க. கூடவே சின்ன கண்ணாடிக் கப்பில் சாயா! அந்தக் கெட்டில் ரொம்ப அழகா இருந்துச்சு. கையில் எடுத்து ரசித்தபோது, 'அழகா இருக்கா'ன்னு கேட்டுட்டு சவூதி அரேபியாவில் வாங்குனதுன்னாங்க:-)
ஜப்பான் பாரம்பரிய உடைகளில் சில சிறுசுகள் பசங்களுக்குப் போரடிக்காமல் இருக்க ராக் க்ளேய்ம்பிங், ஒரு வகையான Bபஞ்சி ஜம்பிங், இப்படி சில. காவல்துறை, நூலகம், ரேடியோ ஒலிபரப்பு இப்படி வழக்கமான கம்யூனிட்டி சேவைகளுக்கான கூடாரங்கள்.
மவோரிகளுக்கும் பிரிட்டிஷ்காரர்களுக்கும் நடந்த ஒப்பந்தத்தின் விளக்கம், போஸ்டர்கள், புத்தகங்கள் இவையெல்லாம் ஒரு மேசை, இந்த ஊருக்குக் குடியேறும் நபர்களுக்கான விவரம் அடங்கிய எத்னிக் மைக்ரண்ட்ஸ் செண்டர் விபரங்கள் ஒரு மேசை, யுனைட்டட் நேஷன்ஸ் அசோஸியேஷன்ஸ் ஆஃப் நியூஸிலேண்ட், கிறைஸ்ட்சர்ச் மல்ட்டி கல்ச்சுரல் கவுன்ஸில் இப்படி ஒவ்வொன்னும் ஒரு மேசை போட்டு விவரங்களை அடுக்கி வச்சு விளக்கிச் சொல்ல ரெவ்வெண்டு ஆட்களுடன் ஒரு பெரிய கூடாரத்துலே இருந்தாங்க.
அலங்காரச்சாமான்கள், நகைநட்டுகள் கொஞ்சம் துணிமணிகள் இப்படி எகிப்து நாட்டுப்பொருட்கள் இருந்துச்சு. மொத்ததுலேயும் எகிப்தியர்கள்தான் நல்ல ஆக்டிவா இருக்காங்க போல!
மினி ஆப்பம்
இந்தோனேஷியாவுக்கான கூடாரப்பகுதியில் மினி ஆப்பம் போல ஒன்னு அடுக்கிவச்சுத் தின்னு பார்க்கச் சொன்னாங்க. அரிசி மாவுதானாம். பக்கத்துலே ஒரு சின்னக்கண்ணாடி டம்ப்ளரில் தேங்காய்ப்பால். இதை எடுத்து அதில் தொட்டு வாயில் போட்டுக்கணுமாம்! ம்ம்ம்ம் இருக்கட்டும்
ஷெட்லேண்ட் சொஸைட்டியில் கொம்பு ஆப்ட்டது. மனிதனும் மிருகமும் சேர்ந்த கலவை! இந்த மாச 'பிட்'க்கு அனுப்பி இருக்கலாம்:-)))
மவொரிகள் கலையான ஃப்ளாக்ஸ் செடியின் ஓலைகளைப் பின்னுதல், சேண்ட் ஸ்டோனில் சிற்பம் செதுக்குவது எல்லாம் முதல்முறையா இங்கே காட்சிக்கு வந்துருக்கு. சின்னக் கற்களை வச்சு செதுக்கி எடுக்க ஒரு ஒர்க்ஷாப் போல பயிற்சி கொடுத்துக்கிட்டு இருந்தாங்க. மணல்துகள் கண்களில் தெறிக்காமல் இருக்க பாதுகாப்புக் கவசம் போட்டுக்கிட்டுப் பசங்க இழைச்சுப்பார்த்துக்கிட்டு இருந்தாங்க.
ஓலை முடைதல் இன்னொரு ஷெட்டில். அங்கேயே ஸோப் கட்டிகளில் வளைவு நெளிவுகளோடு மவொரி கலை அம்சங்களைச் செதுக்கச் சொல்லிக் கொடுத்துக்கிட்டு இருந்தார் ஒருத்தர். நம்ம கோல டிஸைன்களைப்போலத்தான் மவொரி கலைகளில் வளைவும் நெளிவுகளும் ஏராளம். கேமெராப் பார்த்தவுடன், ஐயோ மேக்கப் போட்டுக்கலையேன்னு கவலைப்பட்டார்.:-))))
காதுக்குள்ளே பழக்கப்பட்ட இசை விழுந்ததும் என்ன ஏதுன்னு பாய்ஞ்சேன். மேடையில் ரெண்டு பெண்கள் 'கதக்' ஆடிக்கிட்டு இருந்தாங்க. இங்கே தெரிஞ்சவங்க ஒருத்தர் நடத்தும் கதக் பள்ளியின் மாணவிகள். அநேகமா பள்ளியின் மொத்த மாணவிகளுமே அவ்ளோதான்!
தாய்லாந்து, சமோவா, பிலிப்பைன்ஸ், நடனங்கள் நடந்து முடிஞ்சதும் உள்ளூர் பரதநாட்டியப்பள்ளியின் மாணவிகள் டீச்சருடன் சேர்ந்து 'ஆடிக்கொண்டார், அந்த வேடிக்கை காணக் கண்' ஆயிரம் வேண்டாமோ'க்கு ஆடுனாங்க. நிகழ்ச்சி அறிவிப்பாளர் பார்வையாளர்களுக்கு இந்தக் கலையின் பெயரை 'பர தன டியம்' என்று சொல்லிக்கொடுக்க ஜனம் அதை ரிப்பீட் செஞ்சது. சுக்குமி ளகுதி ப்பிலி !!!!! லாடின் அமெரிக்கா, நடனம் சொல்லிக்கொடுக்கும் பள்ளிப்பிள்ளைகள் கோ ரைட் கோ லெஃப்ட்ன்னு ஸ்டெப்ஸ் போட்டுக் காமிச்சாங்க. பெரியவர்கள் மூணு ஜோடி ஸம்பா, ச்ச ச்ச ச்ச ஆடுனாங்க.
சமோவா குழு

சீனப்பிள்ளைகள் மார்ஷியல் ஆர்ட் செஞ்சு காமிச்சாங்க. பிள்ளைகளின் தந்தை இங்கே இந்தக் கலையைச் சொல்லிக்கொடுக்கும் பள்ளி நடத்தறார். பள்ளி பள்ளின்னா ரெகுலர் பள்ளிக்கூடம் இல்லை. வார இறுதிகளில் வகுப்பு நடத்தித்தான் மக்கள் அவுங்கவுங்க கலைகளை வளர்த்துக்கிட்டு இருக்காங்களாக்கும் கேட்டோ!
கொரியா


கலர்ஃபுல்லா கொரியன் நடனம். நம்ம ஹரே க்ருஷ்ணா பிள்ளைங்க மூவர் (சிஸ்டர்ஸ்) கோபிகைகளும் கிருஷ்ணாவுமா ஆடினாங்க. இந்தப் பிள்ளைகள் இந்த கல்ச்சுரல் விழாவைத் தவறவிட்டதே இல்லை. சீனியர் மோஸ்ட்:-))))

வயிறு கிள்ளுதே...பார்த்தவரை போதுமுன்னு 'சபை'யை விட்டு எழுந்து வந்தோம். இந்தியன் க்ளப் அடையாளமே இல்லை. தோழி இது ஹோலி சீஸனா இருக்கேன்னு மசாலா டப்பாவில் ஏழு கலர்ப்பொடிகளுடன் காத்திருந்தாங்க. நெற்றியில் நாமம் வாங்கிக்கிட்டு இவ்வளவு ஆர்ப்பாட்டம் நடக்கும் இடத்தில் 'இந்தியா காணாமப் போயிருச்சே'ன்ற கவலையுடன் வீட்டுக்குப் போய் சாப்பிட்டோம்.

25 comments:

said...

நான் இந்தியாவக் காணோம்னு பார்த்தவுடன் பயந்தே போயிட்டேன், நம்ம அரசியல்வாதிங்க யாருக்காச்சும் வித்துப்போட்டாங்களோன்னு.

said...

இந்தியாவைக் ‌காணோம்னு தலைப்பைப் பாத்ததும் என்னமோ ஏதோன்னு குழம்பிட்டே வந்தேன். கடைசில படிச்சதும் ஹா... ஹா... அழகான படங்களோட நாங்களும் ரசிச்சு அனுபவிக்கற மாதிரி நீங்க சொல்லியிருக்கற நடையழகுக்கு ஒரு சல்யூட்!

said...

தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_13.html

said...

/ஒன்னுவிட்ட தங்கை பேத்தி/

அழகா இருக்காங்க.

/மனிதனும் மிருகமும்/

நல்ல படம்:). போட்டிக்குதான் கப்புவையும் கோகியையும் அழைத்து வருவதாய் சொல்லியிருக்கிறீர்களே!

மினி ஆப்பம் இட்லி போலுள்ளது.

/வார இறுதிகளில் வகுப்பு நடத்தித்தான் மக்கள் அவுங்கவுங்க கலைகளை /

பாராட்டணும்.

இந்திய கலைகளைப் பயிற்றுவிக்க ஆசிரியர்கள் இல்லையோ?

said...

காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு... போட்டுடலாம்...

எங்க போனாலும் அடித்துக்கொள்வது, சுரண்டுவது என்பதே வேலையாகிப் போயிற்று.... :(

பிட் போட்டி படம் [:) அனுப்பினால் நிச்சயம் உங்களுக்குத் தான் பரிசு கேட்டோ!]

said...

'ஜாங்கிரிக்கு ஒன்னுவிட்ட தங்கை பேத்திக்கு பக்கத்துல நம்மூர் சோமாசிக்கு சித்தப்பா பொண்ணோட நாத்தனாரோட ஓர்ப்படியோட தங்கை மாதிரி ஒன்னு இருக்குதே அது பேர் என்ன?....

பொதுவாவே இந்திய எகிப்திய கலாச்சாரங்களுக்கிடையே நிறைய ஒத்துமை இருக்கற மாதிரியே தோணுது.

நம்ம இந்தியா சமோஸா, பகோரா, நான், பட்டர் சிக்கன்,தால் மக்கானி, ரோகன் ஜோஷ், மட்டர் பனீர், மேங்கோ லஸ்ஸி வகைகள்ல இருந்துருக்கு, பரத நாட்டியத்துல இருந்துருக்கு, இவ்ளோ ஏன்!! ஹோலியிலும் இருந்துருக்குது. என்ன ஒண்ணு, லேபிள்தான் ஒட்டிக்கலை :-)))

said...

மனிதனும் மிருகமும் சேர்ந்த கலவை ஜூப்பரா இருக்கு :-)

said...

துளசி மிரட்டறீங்களே கொம்போட..:)

said...

பல நாடுகளும் தங்களது தனித்துவத்தைக் காட்ட முனைகையில் அங்கே இந்தியாவைக் காணாமல் வருத்தமாகத்தான் இருக்கிறது.

சில வருடங்களாகவே பாரம்பரிய உணவுத்திருநாள் அன்று என் மகளின் புதிய பள்ளியில் இந்திய மாணவிகள் இந்திய உணவு வகைகளை எடுத்து வராமல் மற்ற நாட்டு உணவு வகைகளையே எடுத்துவருகிறார்களாம். இந்த முறையாவது கட்டாயம் இந்திய மாணவிகள் இந்திய உணவினை எடுத்து வருமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். இவ்வளவுக்கும் கிட்டத்தட்ட 50 இந்திய மாணவிகளாவது இருக்கிறார்களாம்.

வழக்கம்போல் சுவையான எழுத்து நடை. 'ஜாங்கிரிக்கு ஒன்னுவிட்ட தங்கை பேத்தி' மாதிரி இருந்த பலகாரத்தின் வர்ணனை படிச்ச சிரிப்படங்குறதுக்குள் அமைதிச்சாரலோட சோமாஸியோட சொந்தக்காரங்க வர்ணனை.

ஹோலிக் கொண்டாடப் போய் ஏமாந்ததும் பாவமா இருக்கு.

said...

இந்தியாவைக் காணோமா!!!!

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.....

நாங்களும் உங்க கூடவே வந்த மாதிரி இருந்தது....

கொம்போட சூப்பர் டீச்சர்.

said...

ஜாங்கிரிக்கு ஒன்னு இட்ட தங்கை பேத்தி..கொம்புடன் படம்...என் வோட்...
ஆப்பத்தைப் பார்த்து நானும் இட்லின்னுதான் நெனச்சேன்..

said...

ரசனையான பகிர்வு.
கலைநிகழ்ச்சிகள் பார்க்க நன்றாக இருக்கின்றன.

உங்கள் அடுத்த விசிட் சவூதிக்குத்தான் என நினைக்கின்றேன்.:))) கேத்தல் அவ்வளவு அழகாக இருக்கின்றது.

said...

வாங்க டாக்டர்.

அப்படி வித்தாலும் வியப்பே இல்லையாக்கும்!

said...

வாங்க கணேஷ்.

1997 இல் இந்திய சுதந்திரப் பொன்விழா சமயம் இந்தியன் க்ளப்பை ஆரம்பிச்சார் நம்ம கோபால். நல்லாத்தான் நடந்துக்கிட்டு இருந்துச்சு. நம்ம 'வாய்ஸ்' ஊருக்குள்ளே இருக்கணுமுல்லே! தலைமைகள் மாறி மாறி இப்ப தோலும் இல்லை சுளையும் இல்லை:(

போராட்டம் கொஞ்சம் செஞ்சு எதிர்ப்பைக் காமிச்சபிறகு அடுத்த மாசம் AGM வச்சுருக்கோமுன்னு தகவல் கொடுத்துருக்காங்க. பார்க்கலாம் மீட்டெடுக்க முடியுமான்னு.....

said...

வாங்க கீதமஞ்சரி.

உங்கள் அன்புக்கும் அறிமுகத்துக்கும் என் நன்றிகள்.

said...

வாங்க ராமலக்ஷ்மி.

நவகிரகங்கள் போல ஒரே இடத்தில் இருந்துக்கிட்டு வெவ்வேறு திசைபார்த்துக்கிட்டு 'ஒற்றுமை'யா இருக்கோம்.

பரதநாட்டியப்பள்ளி நடத்துறவங்க இலங்கைத் தமிழர். கதக் பள்ளி ஒரு மராத்தியர்.

தமிழ்ச்சங்கம்........ ஹூம்.... அது ஒரு பெரிய கதை! உண்மையில் நடந்தது என்னன்னு அப்பவே எழுதி ட்ராஃப்ட்லே வச்சுருக்கேன். இப்போதைக்குப் பொறுமை காத்தல் என் பணி.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.


ஒரேடியாக் காணாமப் போனால் பிரச்சனையே இல்லை. கூட இருந்து குழி பறிப்பதுதான் தொல்லை:(

said...

வாங்க அமைதிச்சாரல்.

பெரிய பெயர்கள் எல்லாம் சொன்னாங்க. மனசில் நிக்கலை. னெனுவை மட்டும் படம் எடுத்தாந்தேன்:-)

இந்தியா கண்ணிலும் வாயிலும்தான் இருக்கு. கருத்தில் இல்லை:(

said...

oops... னெனுவை மெனுன்னு வாசிங்கப்பா.

கீ போர்டுலே எழுத்தெல்லாம் தேய்ஞ்சே போச்சு. குன்ஸா தட்டச்சறேன்.

said...

வாங்க கயலு.

'நீ என்ன பெரிய கொம்பா?'ன்னு இனி யாரும் கேக்க மாட்டாங்க:-))))

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

தனியா எதுவும் அனுபவிக்கலாமா? அதான் எல்லோரையும் கூட்டிக்கிட்டு கும்பலாப்போறது:-))))

said...

வாங்க பாசமலர்.

ஒரே ஒரு டீஸ்பூன் மாவு எடுத்து எப்படி பொறுமையா ஊத்தி இருப்பாங்கன்னுதான்.....

இங்கே ஒரு குழிப்பணியாரச்சட்டி (எலெக்ட்ரிக்)பார்த்தேன். சின்னச்சின்னக் குழிகள். தேசலா இருந்துச்சு. ஒருவேளை அதுலே ஊத்தி இருக்கலாமோ என்னவோ!!!!

said...

வாங்க மாதேவி.

ஆஹா..... போயிருவோம்!!! தங்கமுலாம் பூசுனதை விடமுடியுமா:-))))))

said...

//இந்தக் கலையின் பெயரை 'பர தன டியம்' என்று சொல்லிக்கொடுக்க ஜனம் அதை ரிப்பீட் செஞ்சது. சுக்குமி ளகுதி ப்பிலி !!!!! //

:))

உங்க கெட்டப்பு(ம்) படு சூப்பர்

said...

வாங்க கோவியாரே.

வேசம் கட்டச் சான்ஸ் கிடைச்சால் விடமாட்டேனாக்கும்:-))))