Tuesday, October 03, 2006

லேடீஸ் டே அவுட்.ரொம்ப நாளா எங்கேயும் போகாத ஒரு உணர்வு. (கொலுவுக்குப் போய் வந்தது கணக்கில் சேர்த்தி இல்லை)


தோழியுடன் ஒரு ஊர்சுற்றல் முடிவாச்சு. பத்துமணிக்கு வந்துடறேன்னு சொல்லிஇருந்தாங்க.


சீக்கிரமா 'எட்டு மணிக்கெல்லாம் எழுந்து' , கோபாலகிருஷ்ணனுக்குப் 'பணிவிடைகள்' செஞ்சு, குளிச்சு, சாமி கும்பிட்டுட்டு அகஸ்மாத்தா ஜன்னலுக்கு வெளியெ பார்வையை ஓட்டுனாஒரு தெரிஞ்ச உருவம், தெருவிலெ நடைபாதையில். அப்ப யாரோ ஒரு அம்மா நம்ம வீட்டைக் கடந்துபோறாங்க. உருவம் பின் தொடந்து போறதைப் பார்த்ததும் வெளியே பாய்ஞ்சு போனென்.


'Ollie' ன்னு குரல் கொடுத்ததும் ஆலிவர் திரும்பிப் பார்த்தான். அந்த அம்மாவும் தன்னை யாரோ தொடர்ந்து வாராங்கன்னு தெரிஞ்சதும் குனிஞ்சு பார்த்துட்டு என்னை நோக்கி வந்தாங்க, கூடவேஆலிவரும். கிட்டே வந்தவுடன் என்னை நோக்கித் தாவினான் ஆலிவர். குறும்புக்காரன், என் முகத்தை ஒரே நக்கு! யக்.


அடுத்தவீட்டு வேலியோரம் நின்னு, 'ஜொனத்தன், காதரீன்'ன்னு தர்மக் கூச்சல் போட்டேன். ஊஹூம்.ஒரு அனக்கமும் இல்லை. வேறவழி இல்லாம அங்கே அவுங்க வீட்டுலெ கொண்டு விடலாமுன்னா காலிலெ செருப்பும் இல்லை. ஆலிவரோடு உள்ளெ வந்தேன் செருப்பைத் தேடி. கோபாலகிருஷ்ணனைப் பார்த்ததும் ஆலிவருக்கு பயங்கர சந்தோஷம். பாவம் இந்த ஆலிவர். எப்பவும் யாரைப் பார்த்தாலுமொருதுள்ளல், சந்தோஷம். ச்சின்னக் குழந்தைதானே? கோபால கிருஷ்ணனோ வயசானவன். அதிலும் நான் யாரையாவது தூக்கினாலோ, கொஞ்சினாலோ அவனுக்கு நெஞ்சே வெடிச்சிரும். அப்படி ஒரு ஆதிக்கம்.வெறி.


ஒருவழியா ஆலிவரைத் தூக்கிக்கிட்டு அவுங்க வீட்டுக்குப்போனா ஜொனத்தன் ஸ்கேட்போர்டு வச்சுக்கிட்டு அவுங்கவீட்டு 'டெக்'கை ஹதம் பண்னிக்கிட்டு இருக்கான். சரிதான், அப்ப என் கத்தல் கேட்டுருக்க ச்சான்ஸே இல்லை. என் கையிலே ஆலிவரைப் பார்த்ததும் ஒரு oops. அவ்ளோதான். ஆலியும் பெரிய ஆள். ஒண்ணும்தெரியாதமாதிரி கையிலே இருந்து குதிச்சு, என்னைத் திரும்பிக்கூடப் பார்க்காம அலட்டலா வீட்டுக்குள்ளே ஓடுது.


இது மூணாவது தடவை. எங்கே மஃப்பின் கதை ஆயிருமோன்னு எனக்கு உள்ளுக்குள்ளே ஒரு திக் திக்.தோழியும் வந்தாங்க. கொலு பார்த்துட்டுக் கொஞ்ச நேரம் அதைப் பத்திப் பேசுனோம். அவுங்க மலேசியாக்காரங்க.அவுங்க ச்சின்னப்புள்ளையா இருந்தப்ப , அங்கே மலேசியாவில் அவுங்க அம்மாவின் தோழிகள் வீட்டுக்கொலுவுக்குப் போனது, ஒம்போது நாளும் வகைவகையாச் சாப்புட்டது எல்லாம் கேட்டுட்டு, பிரசாதம் கொடுத்தேன்.இவுங்க கிறிஸ்துவர்கள்ன்னாலும் என்னைமாதிரி எண்ணம் இருக்கறவங்க, எல்லா மதமும் சம்மதமுன்னு.


நம்ம 'கலப்பையை' எப்படிப் புடிச்சு உழுவணுமுன்னு கொஞ்ச நேரம் வகுப்பு எடுத்தேன். கவனமாக் கேட்டுக்கிட்டாங்க. இவுங்க என்னோட தமிழ்வகுப்பு மாணவிதான் ஒரு காலத்துலே. இப்பக் கணினியிலே தமிழ் வகுப்பு.இதுக்குள்ளெ மணி 11 ஆயிருச்சு. கிளம்புனோம். பகல் சாப்பாடு அவுங்க வகையில். வீட்டுலெயே எதாவது செஞ்சுக்கலாமுன்னா கேட்டாத்தானே? அவுங்க வாங்கித் தர்ற டர்ன் வேற ரொம்ப நாளாத் தள்ளிப் போயிக்கிட்டு இருக்குன்னும், இன்னிக்கு அவுங்க வகைதான்னும் நிச்சயமா சொல்லிட்டாங்க. அதானே? நினைவிருந்தாச் சரி:-)


இங்கெ ஒரு ச்சைனீஸ் வெஜிடேரியன் சாப்பாட்டுக்கடை இருக்கு. நாங்க இதுவரை போனதே இல்லை. இத்தனைக்கும் அந்த ஓனர் நம்ம வீட்டுக்கு எதிர்வீட்டுக்காரர். அங்கே எல்லாமெ 100% வெஜிதான்னு அடிச்சுச் சொன்னாங்க.மொதல்லே எங்கே போகலாமுன்னு கேட்டாங்களா.... உங்க இஷ்டம் எங்கேன்னாலும் சரின்னுட்டேன். வாங்கித்தரும் புண்ணியவதிக்கு
ச்சாய்ஸ் தரலாம்தானே? :-)


வெஸ்ட் ஃபீல்டு மால். போய் சேர்ந்தோம். கூட்டமே இல்லை. என்னடா ஆச்சரியமா இருக்கே! பதினொன்னரைதானே ஆகுது. பசங்க தூங்கி எந்திரிக்க வேணாமா? இப்ப 2 வாரம் ஸ்கூல் ஹாலிடேஸ் ஆச்சே. செண்ட்டர் கோர்ட்டுக்குப் போனா பயங்கரக் கூட்டம். எல்லாம் நண்டும் சிண்டுமாப் பிள்ளைங்க. பிள்ளைங்களைக் கூட்டி வந்த பெரியவுங்க. தாற்காலிகமா ஒரு மேடை போட்டு அங்கே 'பாப் டான்ஸ்' னு போர்டு போட்டு வச்சுருக்கு. மூணு பசங்க, 14 வயசு இருக்கும் தலைகீழா ஏதோ சிரசாசனம் பண்ணுறமாதிரி நின்னு(???) கிட்டு ஆடுதுங்க.


மாலுக்கு வந்தே ரொம்ப நாளாச்சுன்னு நினைச்சுக்கிட்டே ஒரு மால் வாக். அப்புறம் 'ப்ரிஸ்கோஸ்' நல்ல ஸேல்ன்னு தோழி ஞாபகப்படுத்துனாங்க.அங்கெயும் எட்டிப் பார்த்தோம். 29.95க்கு வித்த ஒரு செட்(4) ஷாம்பெய்ன் க்ளாஸ் 4 $க்குக் கிடைச்சது. நல்ல லாங் ஸ்டெம்மும், வளைவில்லாத நேரான டம்ளரும். அதுக்குள்ளெ மிதக்கும்பூக்கள் போட்டு வச்சா அழகா இருக்கும். வாங்கியாச்சு. நான் இல்லைங்க. தோழி தான். என்னமோ எனக்கு வரவர எதுவும் வாங்கிக்கணுமுன்னே தோணலை இப்போதைக்கு:-)


இன்னொரு சுத்து வந்துட்டு நகைக்கடையில் விளம்பரம் பார்த்துட்டு நுழைஞ்சோம். கால் கெரட் வைரம் பதிச்ச 599$ விலையுள்ள பெண்டண்ட் இன்னிக்கு நமக்காக 399$ தானாம். நினைச்ச மாதிரியே பொடிக் கற்கள். ( ச்சும்மா) நல்லா இருக்குன்னு கடைக்காரப் பொண்ணுகிட்டே சொல்லிட்டு, 'ஒரே கல் அதே 'கால் கெரட்'லே இதே விலைக்கு இருக்கா?' ன்னு சிரிச்சுக்கிட்டேக் கேட்டதும் அந்தப் பொண்ணுக்கும் சிரிப்பு தொத்திக்கிச்சு.


வந்தது வந்தோம், சூப்பர் மார்கெட்டுக்குள்ளெ நுழையாமப்போனா மால் வந்த பலன் கிடைக்காதுன்னு அங்கே தலையை நீட்டுனோம். இண்டர்நேஷனல் ரோஸ்ட் காபி ஸேல்லே இருக்கு. லிமிட் 4. சரி. நாலுன்னா நாலு. ஆளுக்கு நாலு. நம்மபூனைக்குத்தான் சாப்பாடு வாங்கணும். ஆனா கூலர்லே இருந்து வெளியே எடுத்துட்டு ரொம்ப நேரம் ஊர்சுத்திக்கிட்டு இருக்க முடியாதேன்னேன்.


அப்பத்தான் தோழி சொல்றாங்க, கார்லெ ஒரு கூல் பின் வச்சுருக்கேன். ஃப்ரோசன் சாமான்கள் வாங்குனாலும் பயமில்லை.நாலைஞ்சு மணி நேரம் தாங்குமுன்னு. அட இது ஒரு நல்ல ஐடியாவா இருக்கே. பிக்னிக் போறதுக்கு மட்டுமுன்னுவாங்கி இருக்கும் கூல் பேக்கை இனி 'டிக்கி'யில் போட்டு வச்சுறணும். வாழ்க தோழியின் கூல் பேக்!
மலேசியாவுலே கிடைக்கும் ச்சின்னச்சின்ன வாழைப்பழம் இங்கே ஒரு கடையில் வந்திருக்காம். அங்கெ போனா,அது தீர்ந்து போச்சு. லேடீஃபிங்கர் பனானாவாம். ரெண்டு நாளிலெ கிடைக்குமாம். அங்கே பக்கத்துலே ஒரு செருப்புக்கடைக்கு அடுத்த விஸிட். எல்லா ஊர் செருப்பும் இருக்கு, ச்சீனத் தயாரிப்பு. நெக்லேஸ் வச்ச செருப்பும் பார்த்தேன். பாதத்துக்கு மேலெ அந்த நெக்லேஸ் உக்காருது. கல்யாணப்பொண்ணு அலங்காரத்துலே கை வளைக்கும் மோதிரத்துக்கும் நடுவுலே அலங்காரம் இருக்கும் பாருங்க அதெ போல காலுக்கு. புதுசுபுதுசா கண்டு புடிச்சாத்தானே ஜனங்கள் வாங்கும்? அறிமுக விலையாம், அரை விலை. அதுவே 100 டாலர். காசை விடுங்க, பென்ஸில் ஹீல்.இங்கே இருக்கற குளிருக்கு இதை யாரும் வாங்குவாங்களான்றது சந்தேகம்தான். மூணு மாசம் கழிச்சுப் போய்ப் பார்க்கணும். 20 டாலருக்கு வரும்! செருப்பு நெக்லேஸ்!


இந்த ஏரியாவுக்குப் போனா, என்னுடைய ஃபேவரைட் கடைக்குப் போகாம வரவே மாட்டேன். அங்கெ இதுவரை எதுவும் வாங்குனதும் இல்லை. வாங்கவும் மாட்டேன். ஆனா போயே ஆகணும். நம்மளைப் பத்தித் தெரிஞ்ச தோழியெ கேட்டுட்டாங்க, 'அங்கே போக வேணாமா?ன்னு! போகணும். போனோம். 'அனிமேட்ஸ்' பெட் ஷாப். வழக்கமான குருவிக்கூண்டு, மீன் தொட்டி, நாய், பூனைக்கான வீடுங்கன்னு பலதரப்பட்ட சாமான்கள். அடுத்த பகுதியிலே விற்பனைக்கு இருக்கும் நாய்க்குட்டிகளும், பூனைக்குட்டிகளும். ஒவ்வொரு கூண்டுலேயும் உள்ளே இருக்கறவங்களோட ஜாதகம் ஒட்டி வச்சுருக்கும். இன்னிக்கு என்னமோ பல கூண்டுகள் காலியா இருந்துச்சு. நாலே நாலு பூனைக்குட்டிகள்.அஞ்சு நாய்க்குட்டிகள். நாய்கள் ஒரே தூக்கம். பூனைங்கதான் அட்டகாசம் செஞ்சுக்கிட்டு ஒண்ணோட ஒண்ணு விளையாட்டு.ரொம்பக் க்யூட். கண்ணெல்லாம் பீங்கான் தட்டுலெ உருளும் திராட்சை( வசன உதவி மாமாவின் நண்பர்)போல!


சாப்பாட்டுக் கடைக்குப் போய்ச் சேர்ந்தோம். சைனீஸ் புத்தமதக்காரர் நடத்தும் கடை. ரெஸ்டாரண்ட்ன்னு பெரிய பேர் சொல்லிக்க முடியாது. சிக்கனமான அலங்காரம். ச்சின்னச் சின்ன மேசைகள். 30 பேர்களுக்கு இருக்கை வசதி.
அகலமான புன்னகையோடு, மெனு கார்டை எடுத்துக்கிட்டுக் கடை முதலாளி கம் தொழிலாளி வந்தார். ஆரம்பக் குசல பிரசனம் முடிஞ்சது. அசைவ உணவுப் பெயர்களா இருக்கு பட்டியல் முழுசும். ஐய்யய்யோ..... இங்கே வந்துட்டமேன்னு முழிச்சேன். தோழியும் சொன்னாங்க, இல்லே இது மரக்கறி சாப்பாடுக்கடைதான். ஆனா பேர் ஏன் இப்படி இருக்குன்னுதெரியலைன்னு.
கடைக்காரர் வந்தார் இன்னொரு பெரிய 'காது டு காது' வரை இருக்கும் புன்னகையோடு. வெங்காயம், வெள்ளைப்பூண்டுன்னு ஒண்ணும் இல்லாத சுத்தமான சைவ சாப்பாடுதானாம். எல்லா அயிட்டங்களும் சோயா, டோஃபூ, பீன் கர்ட் இப்படிசாமான்களால் செஞ்சதுதானாம். ஆனா............ அதொட ஷேப் & சைஸ்கள் அச்சு அசலா பார்க்க நான்வெஜ் மாதிரியே இருக்குமாம். பயப்படாம சாப்புடுங்கன்னு உத்திரவாதம் கொடுத்தார். அப்பவும் நான் முழிச்ச முழி சரியே இல்லை.


காரஞ்சாரமா ஒரு கறியும், கொஞ்சம் மைல்டா இன்னொரு கறியும் சாதமும் ஒருவழியா ஆர்டர் செய்தோம். நாங்களாஒண்ணும் செய்யலை. இது இன்னிக்கு ஷெப்'ஸ் ஸ்பெஷல்.


ஸுக்கினியைத் தோலோடு வட்டவட்டமா வெட்டுனாப்புலே இருந்த ஒரு பதார்த்தம். இன்னொண்ணு ஒரு வித இண்டியன்கறி. உருளைக்கிழங்கை நாலாய் வெட்டுனமாதிரி பெரியபெரிய துண்டா கொஞ்சம் குழம்போடு இருந்துச்சு. அதுலேயே நீராவியில் வச்செடுத்த பக்ச்சோய் கீரை.
ரெண்டுலேயும் நல்லா கார்ன் ஸ்டார்ச் அடிச்சு விட்டு 'கூயி'யா இருந்துச்சு. இண்டியன் கறி(???) யில் ச்சும்மா மொளகாப்பொடியைத் தூவிக் கொண்டு வந்ததுபோல ஒரே நெடி. குடிக்கத் தண்ணீர் தரட்டான்னு கேட்டார். அவருக்கும்நெடி அடிச்சுருக்குமுல்லே? தண்ணி இலவசமாம். த்தோடா............
சாப்பாட்டைப் பார்க்கப் பார்க்க நம்ம ஹரிஹரனோட பதிவு வேற மனசுக்குள்ளே வட்டம் போடுது. அதைப் பத்திச் சொன்னேன். அப்புறம் புத்த மதத்துலே இருக்கற மூணு பிரிவுகளைப் பத்தி தோழி சொன்னாங்க. அங்கெ ச்சீன புத்தமதக்காரர்கள் கண்டிப்பான சைவமாம். எனக்குத் தெரிஞ்ச சில புத்தமதக்காரகள் அசைவம் சாப்புடறவங்கதான். இங்கே எங்க ஊர்லே ஒரு புத்தர் கோயில் கட்டிக்கிட்டு இருக்காங்க. நல்லா பெரூசா கட்டுறாங்க. இவ்வளவு புட்டிஸ்ட்டாஇங்கே இருக்காங்க? கிட்டத்தட்ட 10 ஆயிரம் இந்துக்கள் இருந்தும் ஒரு கோயில் வர வழி இல்லை...... . அதுக்கான முயற்சியை ஆரம்பிச்சுப் பார்த்தோம். நம்ம மக்கள்ஸ் மொத மீட்டிங்லேயே கையைக் கழுவிட்டாங்க. நாங்கெல்லாம் இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயிலுக்குத்தான் போய்க்கிட்டு இருக்கோம். சரி, புத்தர் கோயில் கட்டி முடிக்கட்டும். அங்கெயும் போய்க் கும்பிட்டா ஆச்சு. அவரும் ஒரு அவதாரம்தானே?


சாப்புட்டோமுன்னு பேர் பண்ணிட்டு வெளியே வந்தோம். இந்த அழகுலே எங்களுக்கு ஃபோர்க் & நைஃப் வேணுமா,இல்லே சாப் ஸ்டிக் வேணுமான்னு வேற கேட்டார். அடுத்து எங்கே போகலாமுன்னு தோழி கேட்டாங்க. வீடுன்னேன்.


வீட்டுக்கு வந்து கமகமன்னு ஒரு மசாலா டீ போட்டுக் குடிச்சப் பிறகுதான் செத்த நாக்குக்கு உயிர் வந்துச்சு.


பாவம், தோழிக்கே முகம் ஒரு மாதிரியாப் போச்சு. பேசாம தெரிஞ்ச மாதிரி இந்தியன் உணவகத்துக்கு, இவ்வளவு எதுக்கு? மாலில் இருக்கற ஃபுட் கோர்ட்டுலேயே சாப்புட்டு இருக்கலாம். அங்கேயும் 'ஷாமியானா'ன்னு ஒரு இந்திய சாப்பாட்டுக்கடை இருக்கு.


"ச்சும்மா ஒருக்காப் போய்ப் பார்க்கலாமுன்னுதான் இங்கே போனது. இன்னொரு நாள் வேற எங்கியாவது போய் சாப்புடலாமு"ன்னு சொல்லிட்டு, "அதுவும் என் கணக்கு"ன்னு அவசர அவசரமா சொல்லி முடிச்ச தோழியைப் பார்த்தா பாவமாவும் சிரிப்பாவும் இருந்துச்சு.


'லேடிஸ் நைட், லேடீஸ் ஒன்லி' ன்னு இங்கே பார்களில் எல்லாம் ஒரு ஸ்பெஷல் இருக்கு. அதுக்கெல்லாம் போக தைரியம் இல்லாததாலெயும் , நம்ம கிடக்கிற கிடப்புக்கும் இந்த 'லேடீஸ் டே' போதும்.


ஒரு உண்மை என்னன்னா, பொம்பளைங்களைத் தனியாக் கடைக்கு அனுப்புனா மொத்தக் காசையும் முடிச்சுருவாங்கன்னு சொல்றதெல்லாம் பொய். மறுபாதியோட போனாதான் 'வாங்கறது' மஜா. ஒவ்வொண்ணா வாங்க வாங்க, மறுபாதி'இதெல்லாம் என்னத்துக்கு அனாவசியமா?'ன்னு பல்லைக் கடிக்கிறதும், 'உங்களுக்கு ஒண்ணும் தெரியாது, ச்சும்மா இருங்க'ன்னுசொல்லி வாதம் செஞ்சும் வாங்குறது தாங்க ஷாப்பிங் சந்தோஷம்.

26 comments:

said...

//என்னமோ எனக்கு வரவர எதுவும் வாங்கிக்கணுமுன்னே தோணலை //

இதுக்கு அப்புறம் படிக்கவே இல்லை. உடம்புக்கு ஒண்ணும் இல்லைதானே? :D

said...

துள்சிக்கா

ஐடியா குடுத்துட்டீங்களே!
இதுதான் உங்க ரகசியமா.
தங்கமணி ஃபிரெண்சுகளோட போறென்னு
சொன்னா, கேக்குற கேஷை குடுத்து அனுப்பி வெச்சா அப்படியே திருப்பி கொண்டு வர்ரதும்,
எங்கூட வந்தா மட்டும், அட்டையைக்கிழிக்கறதும் ஆஹா ஆஹா அப்பிடியேதேன்.

said...

ஏங்க துளசி!!
முதலில் இருந்து கடைசி பத்திக்கு முந்தின பத்திவரை நல்லா கொண்டுபோய்விட்டு,
கடைசி பத்தியில் இப்படி போட்டு உடைச்சிட்டீங்களே.
இனிமேல் நாங்கள் எல்லாம் நைசாக நழுவிடவேண்டியது தான்.:-))

said...

வாங்க கொத்ஸ்.

உடம்புக்கு ஒண்ணுமில்லைப்பா
டச் வுட்:-))))

said...

பெருசு,

வீட்டுக்கு வீடு வாசப்படிகளாவே இருக்குல்லே? :-))))

said...

குமார்,

நழுவுறேன்னு எங்கே போயிறப் போறீங்க?

அதெல்லாம் சமயம் பார்த்துப் புடிச்சுருவோம்:-))))

நாங்க இல்லேன்னா உங்க லைஃப் எல்லாம் ரொம்ப போரடிச்சுரும்,ஆமா:-)))

said...

துளசி,லேடீஸ் டே அவுட்டுன்னா நான் வந்து இருப்பேனே.
கண் பார்த்ததெல்லாம் கை
வாங்கும்.
நெக்லஸ் செருபு,
ஷஅம்பெயின் க்ளாஸ்,கூடவே சாம்பெயினும் கொடுக்க மாட்டாங்களா இலவச இணைப்பா?
ஒரு யானை கூட வாங்கலியா/"
:-))

said...

// 'உங்களுக்கு ஒண்ணும் தெரியாது, ச்சும்மா இருங்க'ன்னுசொல்லி வாதம் செஞ்சும் வாங்குறது தாங்க ஷாப்பிங் சந்தோஷம்.//

ஆகா இப்படியும் ஒரு சந்தோசம் இருக்குன்னு சொன்னதுக்கு -
பாவப்பட்ட குலத்தினரின் சார்பாக உங்களுக்கு நன்றி உரித்தாகுக துளசி மேடம்!

said...

துளசி மேடம்

நல்ல சுவாரசியமாக இருக்கிறது படிக்க..

நன்றி.

said...

வாங்க வல்லி.

//கண் பார்த்ததெல்லாம் கை
வாங்கும்.//

அப்படி இருந்த நான் எப்படி ஆயிட்டேன்
பார்த்தீங்களா? ஹூம்....

said...

வாங்க வாத்தியாரைய்யா.
எதுக்குங்க நன்றியெல்லாம்? சரி.... இருக்கட்டும்.
இன்னும் இதுபோல பல சந்தோசங்கள் இருக்குங்க,
பாவப்பட்ட குலத்தினருக்குன்னே!
அப்பப்ப ஒவ்வொண்ணா எடுத்து விடறேன்:-)))

said...

சிவபாலன்,

//நல்ல சுவாரசியமாக இருக்கிறது படிக்க..//

இருக்காதா பின்னே? வீ வீ வா ப. ஆச்சேங்க!

said...

இவ்வளவு வெவரமாக் கடைக்கு எங்கள எல்லாம் விட்டுட்டுப் போறதே தப்பு....போனதோட இல்லாம பாத்தது என்ன...வாங்குனது என்ன...கேட்டது என்னன்னு...சாப்டது என்னன்னு முழு வெவரம் வேற. ம்ம்ம்...வாழக வளர்க.

நீங்க சொல்ற மாதிரி பிடிச்ச கடைகள் சிலது எனக்கும் இருக்கு. தூத்துக்குடியில இருக்குற மார்க்கெட் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஏன்னே தெரியாது. சும்மா உள்ள போயிட்டு வரனும். ஒரு சந்தோசம். அப்படியே உள்ள இருக்குற மீன் மார்க்கெட்டையும் எட்டிப் பாத்துறனும். :-)

புத்தருங்கள்ள சைவ அசைவர்கள் இருக்காங்க. சிக்கிம்ல இருக்குற கேங்டாக்குல ஒரு மடாலயம். ரும்டெக் மடாலயம். அங்க போனா செவசெவன்னு உருண்டையா இருக்கு. நம்மூர்ல நெல்லிக்கா எலந்தப் பழம் தெருவுல விப்பாங்களே...அந்த மாதிரி. அந்த செவசெவ உருண்டைகளை ஒரு தொன்னையில் போட்டு இன்னமும் செவசெவன்னு இருக்குற கொழகொழக் குளுமத்த ஊத்தி வித்தாங்க. மாட்டுக்கறி உருண்டையாம். விடுங்கடா சாமீன்னு...மடத்துல இருக்குற சாப்பாட்டுக்கடைக்குப் போனோம். நானும் என்னோட நண்பனும். நான் வெஜிடேரியன் சௌமியன் கேட்டேன். அவன் பீஃப் மோமோ கேட்டான். என்னால சௌமியனைச் சாப்பிட முடியலை...நாலு வாய் தின்னுட்டு நாறுதுன்னு வெச்சுட்டேன். "இது நாறுதுன்னா இதென்ன சொல்வ"ன்னு கேட்டுக்கிட்டே பீஃப் மோமோவை மூக்குக் கிட்ட நீட்டீட்டான் படுபாவி....உவ்வே....எந்திரிச்சி ஓடி வெளிய வந்துட்டேன். மதியம் வரைக்கும் எதையும் திங்க முடியலை. பீஃப் அப்படீங்கறதுக்காக இல்லை. ஆனா அந்தப் பக்கத்து வாடை....இப்ப நெனச்சாலும் நடுங்குது ஒடம்பு.

said...

ஒரு உண்மை என்னன்னா, பொம்பளைங்களைத் தனியாக் கடைக்கு அனுப்புனா மொத்தக் காசையும் முடிச்சுருவாங்கன்னு சொல்றதெல்லாம் பொய். மறுபாதியோட போனாதான் 'வாங்கறது' மஜா. ஒவ்வொண்ணா வாங்க வாங்க, மறுபாதி'இதெல்லாம் என்னத்துக்கு அனாவசியமா?'ன்னு பல்லைக் கடிக்கிறதும், 'உங்களுக்கு ஒண்ணும் தெரியாது, ச்சும்மா இருங்க'ன்னுசொல்லி வாதம் செஞ்சும் வாங்குறது தாங்க ஷாப்பிங் சந்தோஷம்//

அடடடா.. மறுபாதிங்கறது ஒரு பஞ்சிங் பேக் மாதிரிங்கறீங்க.. அது இல்லாட்டி யார குத்தறது.. எத்தன தரம் குத்தினாலும் வாய் திறக்காத ஜீவனாச்சே.. ஜமாய்ங்க..

said...

ராகவன் வாங்க.

மடாலயத்துலே இப்படி ஒரு சாப்பாடா?

அச்சச்ச்சோ...........

ஆமாம். புத்தர் 'கொல்லாமை'யை உபதேசிக்கலையா?

நானும் இங்கே ஷாப்பிங்செண்டர் கடைகளுக்கு நம்மூர் கோயில் மாதிரி ஒவ்வொரு
சந்நிதியா இருக்கும் பாருங்க அப்படி பேர் வச்சுருக்கேன். சண்டிகேஸ்வரர், நவகிரகமுன்னு
அதுனாலே எல்லாம் சுத்திட்டுத்தான் திரும்பணும். ஆமா....

said...

வாங்க டிபிஆர்ஜோ.

// எத்தன தரம் குத்தினாலும் வாய் திறக்காத ஜீவனாச்சே.. ...//

அதானே? அதெப்படிங்க முடியும்? அதான் வாயை இறுக்கமாத் தச்சு விட்டாச்சுல்லே!:-)))))

said...

//உங்களுக்கு ஒண்ணும்...........
........ஷாப்பிங் சந்தோஷம்//

இதான் எல்லாருக்கும் தெரியுமே..இத
சொல்லி வேற சந்தோஷப் படனுமோ?

said...

வாங்க சிஜி.


//இதான் எல்லாருக்கும் தெரியுமே//

சிலபேருக்கு மத்தவங்க சந்தோஷமா இருந்தாப் பிடிக்காதாமே!

இது உண்மையான்னு தெரியலைங்களே:-)))))

said...

இது மாதிரி தேடித் தேடிப் போகும் உணவகங்கள் இப்படித்தான் காலை வாரி விட்டு விடுகின்றன. அடுத்த தடவை புதிதாக முயற்சிக்கும் எண்ணமே வராமல் செய்து விடுகின்றன.

நல்ல விவரிப்பு. எனக்கும் அங்கெல்லாம் வந்து பார்க்க வேண்டும் என்று தோன்றியது :-)

அன்புடன்,

மா சிவகுமார்

said...

நல்லா எழுதியிருக்கீங்க. மலேசியாவிலும் எல்லா வெஜிடேரியன் உணவகங்களிலும் இப்படித்தாங்க. டோஃபுதான்.

வைசா

said...

//என்னமோ எனக்கு வரவர எதுவும் வாங்கிக்கணுமுன்னே தோணலை இப்போதைக்கு:-)//
புலி பதுங்கினால்...???உஷாராக வேண்டியவங்க உஷாராகுங்கப்பா...அவ்ளோ தான் சொல்ல முடீயும்!

//சரி, புத்தர் கோயில் கட்டி முடிக்கட்டும். அங்கெயும் போய்க் கும்பிட்டா ஆச்சு. அவரும் ஒரு அவதாரம்தானே?//
இது! இங்க தான் டீச்சர் நீங்க நிக்கறீங்க!

//மறுபாதியோட போனாதான் 'வாங்கறது' மஜா//
எத வாங்கறது? "மானத்தை?" :-)))
cabbage ன்னா lettuce வாங்கி வறீங்க!
lettuce ன்னா வேற ஏதோ அமேசான் காட்டில் இருந்து புடிச்சிட்டு வரீங்க!
அப்படின்னு திருவாய்மொழி எல்லாம் கேக்கறது நிஜமாலுமே மஜா தான் டீச்சர்! :-)))

அதுவும் நண்பனும் அவன் மனைவியோடும் சேர்ந்து போனோம்னு வச்சுகுங்க, அவ்ளோ தான்! அப்பீட்டு!!
கூட்டணி தர்மம் கொடி கட்டி பறக்கும்!!
நண்பர்கள் நாங்க தான் ஒருத்தரை ஒருத்தர் சமாதானப் படுத்திக்கணும்!

said...

வாங்க சிவகுமார். கட்டாயம் வாங்க. ஆனா 'அங்கே' போகமாட்டோம்:-))))
உங்களயும் 'சோதனை'க்கு உட்படுத்தணுமா? :-))))

said...

வைசா,

டோஃபு பரவாயில்லைதான். உடம்புக்கும் நல்லதாம். ஆனா எதுக்கும் ஒரு அளவில்லையா..?
அதையெ எல்லா வகையாவும் ஒரே நாளுலே சாப்புடமுன்னா.... முகத்துலே அடிச்ச
மாதிரி ஆயிருதுல்லே?

ஒரு தடவை இப்படித்தான் இங்கே இருக்கற ஒரு புகழ்பெற்ற'ஜப்பானிய ரெஸ்டாரண்ட்'
போயிட்டு வெஜிடேரியனுக்கு ரொம்பக் கஷ்டப்பட்டுட்டேன். 'ஆன் ட்ரெயிலிருந்து
டிஸ்ஸர்ட்' வரைக்கும் டோஃபு. அதுவும் ஒரே ஒரு வகை. மொத்தம் மூணு முறை
அதுவேதான். ஆனா வெவ்வேற தட்டு & அலங்காரம். வாழ்க்கை வெறுத்துப்போய்
வீட்டுக்கு வந்து பழைய குழம்பு எதோ இருந்துச்சு, அதைப் போட்டுக் கொஞ்சம்
சோறு தின்னப்புறம்தான் உயிரே வந்துச்சு. இது ஆஃபீஸ் பார்ட்டியாப் போச்சு.
சொந்தக் காசா இருந்துருந்தா அன்னிக்கு இவர் காலி:-))))

said...

KRS,

'பதுங்குதல்' காரணம் ரொம்பச் சரி. வருசக் கடைசியிலே ஊருக்குப் போகலாமான்னு ஒரு
எண்ணம் இருக்கு. அப்ப வச்சுக்கறேன்.............:-)))))
( இங்கத்து 9 கேரட்டை வாங்குனாலும்......)

நண்பன் குடும்பத்தோடு ஷாப்பிங்கா?
அவ்வளோ பாக்கியமுல்லாம் இவர் செய்யலை(-:
தனியாளாத்தான் சமாளிச்சுக்கிட்டு இருக்கார்:-))))

said...

துளசி
இங்க அமெரிக்காவில அசைவம் சாப்பிட்ட/பிடுகிற நிறைய பேர் சைவத்துக்கு மாற நினைக்கிறாங்க. அவங்களுக்காக சோயால, கறிகாயிலயும் அதே மாதிரி இருக்கறமாதிரி செய்யறது ஒரு வழக்கம். சைவ beef கூட உண்டு.

said...

வாங்க பத்மா.

அதுவேதான் காரணம். பார்க்கறதுக்கு 'நான்வெஜ்' மாதிரி இருக்கணுமாம்.