Friday, October 13, 2006

பூப்பூக்கும் ஓசை????






மக்கள்ஸ்,


டீச்சர் வகுப்பை விட்டு வெளியே ஒரு சின்ன வேலையாப் போகும்போது எதாவது ஒருபாடத்தைப் படிக்கும்படி சொல்லிட்டுப் போவாங்க.


எங்க டீச்சர் எப்பவும் ரெண்டு மூணு கணக்கைக் கொடுத்துட்டு செஞ்சு வைக்கணுமுன்னு சொல்லிட்டு ஒரு பத்து நிமிஷம் எஸ்கேப்.

இதெல்லாம் அந்தக் காலப் பள்ளிக்கூடங்களில்.

இப்ப?

இந்தப் படத்திலிருக்கும் பூ என்ன பூன்னு கண்டு பிடிச்சு வையுங்க.நான் ஒரு அஞ்சு..........க்கு வெளியே எட்டிப் பார்த்துட்டு வந்துடறேன்.

இன்னிக்கு தாவரயியல் வகுப்பா இருந்துட்டுப் போகட்டுமே:-)

39 comments:

said...

தும்பைப் பூவா?

இதனுடைய காய்களைத் தொட்டா உடனே வெடித்து விதைகளைப் பரப்பும். இங்கிலிபீசுப் பெயர் ஒரு காலத்திலே தெரிஞ்சிருந்தது.. இப்ப மறந்திட்டது. நாளைக்குச் சொல்றேனே.. :O)

said...

உள்ளேன் டீச்சர், என்ன இருந்தாலும் வரலாறு வகுப்புல பயாலஜி கேள்வி எல்லாம் ரொம்ப அவுட் ஆப் சிலபஸுங்க. ஐயாம் தி எஸ்கேப்.

said...

'ஸ்டூடண்டிற்கு எது தேவையொ அதை சொல்லித்தரத்தான் ட்டீச்சர்;
டீச்சருக்கு தெரிந்ததை எல்லாம்
படிக்றதுக்கு ஸ்டூடெண்ட் இல்லை"-
42 வருஷங்களுக்கு முன் என் பேராசிரியர் எனக்கு சொன்னது

said...

//"ஒரு அஞ்சு......க்கு.....//

........னா நிமிஷமா? மணியா? இல்லே நாளா?

said...

நீங்க இன்னமும் ஊரவிட்டுக் கெளம்பலியா

said...

"பூப்பூக்கும் ஓசை
பதிலை கேட்கதான் ஆசை..:)

said...

ஷ்ரேயா,

நாளைக்கே சொல்லுங்களேன்
அவசரமில்லை:-)))))))

said...

கொத்ஸ்,


நல்லவங்களுக்கு அடையாளம் சொல்லாமக் கொள்ளாமப் போறதுதான்.
ஆனா க்ளாஸ் லீடர் அப்படிப் போக முடியாதேப்பா.

எல்லாரையும் அமைதியா இருக்க வைக்கவேண்டியது இப்ப உங்க ட்யூட்டி.

said...

சிஜி,

ஸ்டூடண்ட்ஸ் தேவை எல்லாம் 'இப்ப' மாறிடுச்சாம்.
கலிகாலம்:-)

அஞ்சு.........?

யாராருக்கு எது விருப்பமோ அதைப் போட்டுக்கலாம்.
மாசம், வாரம், வருஷம்னு:-)

said...

பிரபா,

கொஞ்சம் பொழுது விடியட்டுமேப்பா:-)))

said...

துளசிம்மா,
ஊருக்கு போயிட்டு வந்து பயணக்கட்டுரை எழுதுவிங்க தானே? எந்த ஊருக்கு இந்த தடவை.

said...

மி.மி,

கொஞ்சம் பொறுங்க.
1369 பேருலே யாராவது ஒருத்தர் சரியான பதிலைச் சொல்றாங்களான்னு பார்ப்போம்:-)

said...

வாங்க சந்தோஷ்.
எந்த ஊரா?
அது உங்க அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது:-)

said...

எ.வா.ரா,

எப்பப்பார்த்தாலும் நடிகைகளைப் பார்க்கற கண்களுக்கு ஒரு ஓய்வு வேணுமுன்னுதான் 'பூ' படம்:-))))

said...

துளசியம்மா ...!

சிரிக்கக் கற்றுக் கொள் !
செடிகள் சொல்லிக் கொடுத்தன
பூக்கள் மூலம் !

சிரிப்பூ !

:))

said...

gk,

கவிதை?

சூப்பரப்'பூ':-)))

said...

ஒவ்வொரு பூக்களுமே
சொல்கிறதே
டீச்சர் ஊருக்குப் போறாங்கோ! :-)

ஒவ்வொரு பூக்களுமே
சொல்கிறதே
க்ளாஸ்ரூமில் கும்மாளம், next 5 days!! :-))

ஒவ்வொரு பூக்களுமே
சொல்கிறதே
கொத்ஸே, Correct Answer leakout பண்ணிவிடு!!! :-)))

said...

டீச்சர் வரலைன்னா 'கொண்டாடுற மாணவர்கள்' எல்லா காலத்துக்கும் பொது என்று நிரூபிச்சுட்டார் நம்ம கே. ஆர். எஸ்:-)))

said...

1369 இல்லே 1370-உங்களையும் சேர்த்து
1370 லே ஒருத்தருக்காவது தெரியாமலாப் போயிடும்?

said...

துளசி,

எல்லாருமே நீங்க கேட்ட கேள்விய விட்டுப்போட்டு அளக்கறத பாருங்க..

இந்த காலத்து மாணவர்கள்கிட்டருந்து பதில் கிடைக்காது எதிர் கேள்விதான் கிடைக்கும்.

சரீஈஈஈஈ என்ன பூவுங்க? நீங்களே சொல்லிருங்க:(

said...

பேரைசொல்லுங்க...இல்லைன்னா நியாயமாகாதுங்க...

said...

எங்கேயும் கேள்வி எதிலும் கேள்வி..... பள்ளி கூடத்திலே கேள்வி, காலேஜ்'லே கேள்வி... வேலை பார்க்கிற இடத்திலே கேள்வி, இப்போ துளசிதளத்திலும் கேள்வி????

இத்தனை கேள்விகள் வந்தாலும் என்னோட ஓரே Default பதில்.!!! (எல்லா மொழிகளிலும்)

எனக்கு தெரியாது,
நன்கு கொத்தில்லா
நன் அறியல்லா
நன்கு தெளியாதூ
பதா நஹி
I Don't know

:-)))

said...

வாங்க டிபிஆர்ஜோ.

என்னங்க இப்படி இருக்காங்க நம்ம மாணவர்கள்?

ஒருத்தருக்குமா தெரியலை(-:

said...

வாங்க ரவி.

இன்னும் ஒரு ச்சான்ஸ் கொடுத்துப் பார்க்கவா?

வெயிட் அ நிமிட் ப்ளீஸ்:-)

said...

வாங்க ராம்.

இது......:-)))))

said...

ஆவியை பாத்திங்களா...
பிளாகை தொலைத்துவிட்டு தேடிகிட்டு இருந்தது...

இன்னும் ஆளையே காணும்...:)

இது சரியான பதிலா இருக்குமுனு நினைக்கிறேன்...:)

said...

துளசியக்கா!
இது அப்பிள்ப்பூ மாதிரி இருக்கிறது.
யோகன் பாரிஸ்

said...

எல்லாம் சிவமயம்னுவாங்க, ஆனால் எனிக்கு எல்லாம் பய மயம். ஸ்டாப்பில் நிக்கும்போது பஸ் வந்தாலும் பயம், வராட்டாலும் பயம், ஆட்டோ வந்தாலோ பயமோ பயம், பின்னூட்டம் வந்தா பயம், வராட்டாலும் பயம், பின்னூட்டம் செந்தமிழிலே வந்தா இன்னும் பயம், டீச்சரம்மாண்டு கேள்வியும் பயம்.
கந்தா, கடம்பா, கதிர்வேலா.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

டீச்சர், நீங்க கேட்ட கேள்வி எல்லாம் out of syllabus.
அதுனால பதில் தெரியலனாலும் மார்க் கிடைச்சிடும்.
ஆனா இப்ப நீங்க இந்த மாணவனோட சந்தேகத்த தீத்துவைங்க.
1) //அஞ்சு.........?

யாராருக்கு எது விருப்பமோ அதைப் போட்டுக்கலாம்.
மாசம், வாரம், வருஷம்னு:‍)//

நாள் missing ஆவுதே?

க‌ரெக்டா சொல்லிட்டுப் போங்க‌ எப்ப‌ திரும்பி வ‌ருவீங்க‌ன்னு.

2) //எந்த ஊரா?
அது உங்க அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது:-)//


இப்ப‌டி சொல்லி த‌ப்பிக்கா‌ம‌ போற‌ இட‌த்த‌ சொல்லிடுப்போங்க‌. (போகும் போது 'எங்க‌ போறிங்க‌னு' கேக்க‌க்கூடாதுல்ல‌)
ஆவ‌லோட‌ அந்த‌ இட‌த்த‌ ப‌த்தி க‌ற்ப‌னையோட‌ எதிர்பாத்துகிட்டு இருப்போம்ல‌ அதுக்குதான்

said...

ஆஹா..பாடமெல்லாம் பக்காவாத் தான் நடத்துறீங்க துளசி...

நீங்க வர்றதுக்குள்ள பதில் சொல்லலைனா பிரம்பு அடியெல்லாம் உண்டோ?

said...

டீச்சர் மூப்பூ போட்டாலும் அது ஒரு பூதான். இதுக்கு வெக்கப் பூன்னு பேரு. மொட்டா இருக்கைல இளஞ்சிவப்பா இருக்கும். விரிஞ்சி விரிஞ்சி வெளுத்துரும். இது கொடைக்கானல் மலைச்சாரல்களில் எக்கச்சக்கமாக உண்டு. சங்கப்பாடல்களில் இந்தப் பூவிற்கு நாணத்தி என்று பெயர். "நாணத்தியன்ன முகிழ்வுடை" என்ற வரிகள் இதனை விளக்கும். இந்தப் பூவிற்கு மருத்துவப் பண்பும் உண்டு. இதனைத் தேனில் ஊற வைத்து உண்டால்....தோல் வளமாக இருக்கும்.

said...

டீச்சர்........நான் மேல போட்ட பின்னூட்டம் சும்மா.........சும்மா ஒரு இதுக்கு ஹி ஹி

said...

ஆப்பில்...

said...

http://en.wikipedia.org/wiki/Apple
இட மறந்தது...

said...

டீச்சர் நானும் கண்டுபுடிச்சிட்டேன்.
ஆப்பிளே தான். சந்தேகமே இல்லை!
எப்படி சொல்றேன்னு பாக்கீகளா?

இன்னிக்குத் தான் ஆப்பிள் பிக்கிங் போனோம். Eastmont Orchards, NJ. அதுல 2-3 மரத்துல மட்டும் இன்னும் பூவாவே இருந்துச்சு. மத்தது எல்லாம் பழம் தான்...அதுல ஒன்னு அந்த பிங்க் பூ...இன்னும் dark pink ஆ இருந்துச்சு. crab apple ன்னு சொன்னாங்க! அஞ்சு அஞ்சு இதழா, நடுவுல மகரந்தம் மட்டும் சின்னதா இல்லாம நீட்டு நீட்டா இருந்துச்சு!!

உங்க பதிவ பத்தி உடனே சொன்னேன். Orchardsல கூட பிளாக்கர் பத்தித் தான் பேச்சான்னு ஒரே முறைப்பு; வாய மூடிக்கிட்டேன்!

என்ன, இந்த Orchards-க்கு நேத்தே போயிருந்தா யோகன் அண்ணா சொல்லு முன்னேயே சொல்லியிருக்கலாம்!
நமக்குத் தான் ரெண்டே மார்க்குல மெடலைக் கோட்டை விடுறது ராசியாப் போச்சே!
எனக்கும் கொஞ்சம் பாத்து மார்க்கைப் போட்டீங்கன்னா புண்ணியமாப் போவும்! :-))

said...

துளசி, ஆத்தோட போன மாமியார் அஞ்சு ஆழாக்கு வடிச்சுவைனு சொன்னாளாம்.
ஆர்கிட் பூவைப் போட்டாத் தெரியாதோ?
ஆர்கிட் தானே?:-))
பழைய படமெ பாதிதான் படிச்சிருக்கேன்.
புது ஹோம் வெர்க் எல்லாம் கொடுத்தா எப்படி?

said...

வகுப்பிலே உக்காந்து ஆர்வமாப் படிச்சு( இருக்காதா பின்ன்னே? அதான் டீச்சர் இல்லியே!) விடைகள் சொன்ன

சிஜி
வைசா
டோண்டு
யோகன்
கார்த்திகேயன்
மதி
ராகவன்
நோநோ
கே ஆர் எஸ்
வல்லி
அனைவருக்கும் நன்றி

சரியான விடை சொன்னவர்கள்

யோகன்
நோநோ
கே ஆர் எஸ்

பாஸ் பண்ணவங்களுக்கு ஆளுக்கு ஒரு கூடை க்ரானி ஸ்மித் கிரீன் ஆப்பிள்
அனுப்பவா?

நம்ம வீட்டு ஆப்பிள் மரப்பூக்கள்தான். காய் வரட்டும்:-))))

நான் பயணத்துலே இருந்து திரும்பும்வரை அமைதியா எல்லோரும் பதிவு எழுதிக்கிட்டு
இருங்க:-)))))

said...

An apple a day keeps the doctor away. An apple flower a day keeps the teacher away

said...

TRC,

எப்படியோ ஒரு புது மொழி சொல்லி டீச்சரை விரட்டியாச்சு:-))))))))))))