Thursday, October 26, 2006

கோவிந்தா கோவிந்தா ஒஸ்தானுரா கோவிந்தா (A t d - பகுதி 3)
நேர வித்தியாசம் இருக்குதே, இது இந்தப் பாழும் உடம்புக்குப் புரியுதா? எங்க டைம் ஏழு மணிக்கு 'டாண்'னுமுழிப்பு வந்துருச்சு. அங்கத்து நேரம் காலை 4 மணி. ஏறக்குறைய 33 மணி நேரமாத் தமிழ்மணம் வேற பார்க்கலை. தலையெல்லாம் என்னவோ செய்யுது. இந்த 'கோல்ட் டர்க்கி'யைப் பத்தி பயந்துதான், கோபால் மடிக்கணினியைத் தூக்கிட்டு வந்ததும் இல்லாம அங்கே ஹொட்டல்லே ப்ராட்பேண்ட்க்கும் ஏற்பாடு செஞ்சிருந்தார். ஒரு நாளைக்கு25 $. முடிஞ்சவரை மேஞ்சுரலாமுன்னு தமிழ்மணம், ஜிமெயில், இன்னும் வெவ்வேற இடங்களிலே இருந்த தபால்பெட்டிங்கன்னு நோட்டம் விட்டுட்டு, தின கரன்/மலர்களைப் பார்த்துட்டு, பதில் போடவேண்டிய கடிதங்களுக்கு பதில் அனுப்பினேன்.


சிட்னியிலே இருக்கும் நம்ம பழைய நண்பர்களுக்கு தொலை பேசி, சந்திக்க நேரம் ஒதுக்கிட்டு,மற்ற வேலைகளையெல்லாம் முடிச்சுக்கிட்டு டவுன்ஹால் ஸ்டேஷனை நோக்கிப் போனோம். எலிவளை மாதிரி சுரங்கப்பாதைகள் பல திக்கிலும்போகுது. இதுக்கு முந்தி வந்த பயணங்களில் இத்தனை எண்ணிக்கை பார்த்த ஞாபகம் இல்லை.குவீன் விக்டோரியா பில்டிங்( இது என்னோட ஃபேவரிட் கட்டிடம். விவரமா அப்புறம் சொல்றேன்) மட்டும் அப்படிக்கு அப்படியே இருக்குமா? கவனிச்சுப் பார்த்தா, அங்கேயும் முந்தி இருந்த கடைகள் எல்லாம் கைமாறி இருக்கு. ச்சீனர்கள் கடைகளைப் புடிச்சுக்கிட்டாங்க போல. எல்லா காபி ஷாப்களிலும் அவுங்கதான் இருக்காங்க. அந்த 'இதாலியன் நகைக்கடை'யைத் தேடித்தேடிப் பார்த்தாச்சு. ஊஹூம்..........


அந்தக் கடையிலே என்ன விசேஷமுன்னா, அழகழகான க்ரீடம் டிசைன்களில் மோதிரம் செஞ்சு வித்துக்கிட்டு இருந்தாங்க. எல்லாம்ஹேண்ட் மேடு. கையாலே பண்ணிட்டாங்களாம். அப்பெல்லாம் விலை படியலை. இந்த தடவையாவது துணிஞ்சுறலாமுன்னு ஒரு எண்ணம் இருந்துச்சு. நம்ம காசு அவுங்களுக்குக் கொடுத்து வைக்கலை. போட்டும்.


இப்ப ரெண்டு வருசத்துக்கு முந்தி இங்கே ஒலிம்பிக்ஸ் 2000 நடந்துச்சுல்லையா? அப்ப அதுக்காக நிறைய மேம்பாடுகள் செஞ்சுருக்காங்க. ரோடுகள் எல்லாம் இன்னும் அகலமா ஆயிருச்சு. ஏராளமான சுரங்கப்பாதைகள், புதிய கட்டிடங்கள்,சாப்புடற இடங்கள்ன்னு தாளிச்சு விட்டுருக்காங்க. இத்தனை ( food court)ஃபுட் கோர்ட்ங்களைப் பார்த்த நினைவே இல்லை.எல்லா நாட்டுச் சாப்பாடும் கிடைக்குது. ஒவ்வொரு சாப்புடற இடத்திலும் குறைஞ்சது ஒரு இந்தியன் சாப்பாட்டுக்கடை. அங்கே வாங்குறவங்க எல்லாம் மத்த நாட்டுக்காரங்க. அதானே.......... வீட்டுலேதான் இந்தியச் சாப்பாடு. அதை வெளியிலும் திங்கணுமா? :-))))


சுரங்கம் முழுசும் கடைகண்ணிகள் வேற, ஜேஜேன்னு இருக்கு. டவுன்ஹால் ஸ்டேஷனை ஒட்டி 'வுல்வொர்த்' சூப்பர்மார்கெட்டின் ஒரு பகுதி. இதுவும் மூணு அடுக்கா இருக்கு. அதுலே ஏறிப்போனா அப்படியே தெருப்பக்கம் போயிறலாம்.இதே சூப்பர் மார்கெட் நம்ம ஊர்லேயும் இருக்கே, அதனாலே பார்த்ததும் பாசம் பொத்துக்கிட்டு வந்துருச்சு. உள்ளெ நுழைஞ்சோம். வாழைப்பழம் கெட்ட கேடு 16 டாலராம் கிலோ. நெஞ்சு அப்படியே 'கப்'னு அடைச்சுக்கிச்சு. ஓடிப்போய் ஒரு தண்ணி பாட்டிலை எடுத்துக்கிட்டோம். இங்கே நம்மூர்லே கிலோ $2.65க்குப் போட்டுருக்கறதையே,'கொள்ளை அடிக்கிறாங்க'ன்னுசொல்ற எனக்கு எப்படி இருந்துருக்கும்? எல்லாப் பழங்களுமே விலை ஏறிக்கிடக்கு. இத்தனைக்கும் நம்ம காசைவிடஇவுங்க காசு ஸ்ட்ராங் வேற. பிளேன்லே படிச்ச மேகஸின்லே 'சாக்லேட் ஃப்ரூட் (Black Sapote)ன்னு ஒரு விதம்இங்கெ ஆஸியிலே மட்டுமே கிடைக்குதுன்னு அளந்து விட்டுருந்தாங்க. அது என்னன்னு கண்டு பிடிக்கணுமுன்னு பழக்கடைகளைப் பார்த்ததும் பாய்ஞ்சுக்கிட்டு இருந்தேன் ஒரு பக்கம்.( கடைசி வரையில் கண்டு பிடிக்க முடியலைன்றது வேற விஷயம்)


தண்ணி( குடிக்கிற)யுமே அங்கே 1.69$. ச்சின்ன பாட்டில்தான். வாட்டர் பால்ஸ் க்கு டிக்கெட் எடுத்துக்கிட்டோம்.ஞாயித்துக்கிழமையாச்சா, டிக்கட் கவுண்ட்டர்கூட ஆளில்லாம மூடிக்கிடக்கு. எல்லாம் தானியங்கி மெஷின்கள்தான்.ஒரு மணி நேரப் பயணம். அங்கே வெளியே வந்தா நம்ம கஸ்தூரிப் பெண்ணின் கணவர் ( இனிமேப்பட்டு க.பெ.க)காத்திருந்தார்.காருக்குக் கூட்டிக்கிட்டுப் போனார். அங்கெ க.பெ & ஸ்ரேயா. ஒரு அஞ்சு நிமிஷ ட்ரைவ். மெயின் ரோடிலே இருந்து இடது பக்கம் பிரியும் ஒரு சாலை. முகப்புலெயெ அம்புக்குறி போட்டு 'ஹிண்டு டெம்பிள். ஹெலன்ஸ்பர்க்'னு ஒரு போர்டு.கோயிலுக்குள்ளெ வந்துட்டோம். ச்சின்னதா மதிள் சுவர். ரிஷபம், யாழின்னு காங்க்ரீட் சிலைகள் மதில்மேல் ( பூனைகளாய்) உக்காந்துருக்கு. சிவா விஷ்ணு கோயில். ஆரம்பத்துலே இங்கே பெருமாள் கோயில் மட்டுமே இருந்துச்சு. ஒவ்வொருமுறையும் பார்க்க நினைச்சு, இந்தப் பக்கம் வரவே முடியாமத் தள்ளிப்போய்க்கிட்டு இருந்த கோயில். இப்ப ஒருசிவன் கோயிலையும் இதை ஒட்டிக் கட்டிட்டாங்க. சந்திரமெளலீஸ்வரர், புள்ளையார், முருகன், நவகிரகங்கள் எல்லாம்உண்டு. வலப்புறம் சுவர் முழுசும் பல்வேறு கணபதிகள். இடப்புறம் முழுவதும் பல்வேறு முருகன்கள். ஒரு பக்கமா அர்ச்சனைக்குப் பழத்தட்டுக்கள் &அர்ச்சனைச் சீட்டுக்கள் விற்பனை. இந்தக் கோயிலில் படம் எடுக்க அனுமதி இல்லைன்னு ஒரு போர்டு இருந்ததை நாலைஞ்சு படம் எடுத்தபிறகுதான் கவனிச்சார் நம்ம போட்டோகிராபர்.


இடது புறம் இருக்கற சுவரிலே ஒரு வாசல். அதுலே நுழைஞ்சால் பெருமாள் கோயிலின் வெளிப்பிரகாரம். ஒஸ்தானுரான்னு சொல்லிக்கிட்டு வாசலில் நுழைஞ்சால், அங்கெ ஒரு மேஜை மேலே இருந்த ஆரஞ்சு கீழே குதிச்சு,உருண்டு ஓடிவருது என்கிட்டே! ( சாட்சிகள் இருக்கு, க.பெ & ஸ்)


ரெண்டு கோயில்களுமே ஒட்டிக்கிட்டு இருந்தாலும் மூலவர்கள் மட்டும் ஆளுக்கு ஒரு பக்கமா பார்க்கறாங்களோ?கிழக்கும் மேற்குமா.......... சரி. ஒருத்தரை ஒருத்தர் பார்த்துப்பேச இது செளகரியமா இருக்குன்னு வச்சுக்க வேண்டியதுதான். சாமிக்கு எல்லாத் திசையும் ஒண்ணுதானே?


நின்ற திருக்கோலம். அவருக்கு வலது பக்கம் மகா லக்ஷ்மி, இடது பக்கம் ஸ்ரீ ஆண்டாள். தனித்தனி சந்நிதிகள்.இங்கேயும் கற்பூரம் தடை செஞ்சுருக்காங்களாம். நல்ல விஷயம்தான். புகை பிடிக்காம இருக்கும். விஷ்ணு அலங்காரப்பிரியனாச்சே, குறை ஒன்றும் இல்லாமல் ஜொலிச்சுக்கிட்டு இருக்கார். இந்தியாவில் இருந்த வந்த பட்டர். அர்ச்சனையை விஷ்ணு சகஸ்ரநாமமா செஞ்சுறவான்னு கேட்டார்? ஆஹா..... கரும்பு தின்னக் கூலியா?


அர்ச்சனைச் சீட்டு வாங்க இந்தப் பக்கம் ஓடுனார் கோபால், அந்தப் பக்கம் ஓடுறார் பட்டர்! பூப்பறிக்கப் போனாராம்.


எனக்குப் பக்கத்துலெ இருந்த ஒரு மேடை(ஜை)யில் எரிஞ்சுக்கிட்டு இருந்த திருவிளக்கைக் கவனிச்சேன். குழந்தைகளுக்கு பால், மருந்து புகட்டும் சங்கு. அதுலே நெய் ஊத்தித் திரி போட்டு விளக்கு. அந்தச் சங்கை ஒரு நீண்ட கைப்பிடியில் இணைச்சிருக்கு. முதல்முறையா இப்பத்தான் பார்க்கறென். எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.


கருவறையிலே அமைதியான ச்சின்ன விளக்குலே பெருமாள். தயா சிந்து பார்த்ததும் 'டக்'ன்னு நம்ம கண்ணபிரான் நினைவு. நம்ம தருமி சொன்னதுபோல இது என்ன 'கெமிஸ்ட்டிரி'யோ தெரியலை? நேத்தும் முருகனைப் பார்த்ததும் நம்ம சைவச் செம்மல் ( அப்படித்தானே பட்டம் கொடுத்துருக்கு?)ராகவனை நினைச்சுக்கிட்டேன். இப்ப எல்லாம் பயணமுன்னு இல்லை, எப்பவுமே எதையாவது பார்த்தால் அது சம்பந்தப்பட்ட வலைஞர் நினைவு வர்றதைத் தடுக்கமுடியலை. அது இருக்கட்டும், வடை, பூனை, யானை இதையெல்லாம் பார்த்தால் என் நினைப்பு உங்களுக்கு வரணுமே!வருதா?


ஆற அமர 35 நிமிஷ அர்ச்சனை. கையிலே புத்தகம் வச்சுக்கிட்டு ஒரு வரியும் விடாமப் படிச்சு கிட்டே அர்ச்சனை.ஒரே ஒரு பகுதியை விட்டுட்டார், ஸ்ரீராம ராம ராமேதி, ரமே ராமெ மனோரமே............ மனசுக்குள்ளெ ஒரு ச்சின்னத் துடிப்புஎனக்கு. அடுத்ததா திருவிளக்கால் தீபாரதனை செய்யும்போது விட்டதைச் சொல்லிட்டார். அப்பாடா... திருப்தியாச்சு.தீர்த்தம் (கமகமன்னு பச்சைக்கற்பூரம் மணக்க), சடாரி, பிரசாதம் எல்லாம் ஆச்சு. கிடைச்சது மஞ்சள் பூ. ஆஹா...ப்ரெண்ட்ஷிப் டே! அங்கெ ஒரு பக்கம் நம்ம திருப்பதி உண்டியல் ஸ்டைலில் ஒரு உண்டி. அதைத் தாண்டி இருந்த பெரிய ஹாலில் தசாவதார சிற்பங்கள். நம்ம (ஆஞ்ச) நேயடு பவ்யமா இருக்கார் ஸ்ரீராம லக்ஷ்மணர்கள் & சீதா பிராட்டியார்பக்கத்துலே! இன்னொரு வரிசையில் பனிரெண்டு ஆழ்வார்கள். இந்தப் பக்கம் ஒரு தனி சந்நிதியில் சுதர்ஸன். இன்னொரு பக்கம் கருடன். ஸ்ரீவேணுகோபாலன், உலகளந்தப் பெருமாள், ஹயக்ரீவர்னு இன்னொரு வரிசை. அழகான, அட்டகாசமான, அருமையான சிற்பங்கள். ஹய்யோ............. பேசாம இங்கேயே வந்துறலாமா?


கோயிலில் கூட்டமே இல்லை. ஒரே ஒரு மனவா(டு)ளு ஜோடிதான் பிரகாரத்தைச் சுத்தி வந்துக்கிட்டு இருக்காங்க.அப்ப செருப்பு விடற இடத்துலே எக்கச்சக்கமா இருந்துச்சே, நாம பார்த்தமே ...........


வெளியே வந்தவுடன் விடை கிடைச்சது. கேண்டீன்லே இருக்கு மொத்த ஜனமும். சனி, ஞாயித்துக்கிழமைகளில் மட்டும் இந்தக் கேண்டீன் திறக்கறாங்களாம். தோசை, இட்டிலி, வடை, பரோட்டான்னு அமர்க்களம். மெனு போர்டுலே ஒரே ஒரு அயிட்டத்தை மட்டும் பேப்பர் ஒட்டி மறைச்சிருந்தாங்க. அது என்னவா இருக்குமுன்னு ஒரே மண்டைக்குடைச்சல். நல்ல வேளை , அது தக்காளி சாதமாம். போட்டும். யாருக்கு வேணும்? :-)


ஒரு வெட்டு வெட்டினோம். கூடவே ஆளுக்கொரு டீ. கையிலே கொண்டு போறதுக்கு மிக்ஸர் பொதி வேற வாங்கிட்டார்,நம்ம க.பெ.க. மொதல் நாள் க.பெ. வீட்டுலெ அதிரசத்துக்கு மாவு இடிச்சு ஆற வச்சிருந்தாங்க.காலையிலெ அதையும் நமக்காக அவசர அவசரமாச் செஞ்சு கொண்டு வந்துருந்தாங்க. ஜமாய் ராணி ஜமாய். என் காட்டுலே மழையோ மழை.


திரும்பி வரும் வழியிலே ஒரு இடத்துலே ஸ்கை டைவிங். கொஞ்சம் உயரமான இடத்துலெ இருந்து மனுஷங்க ரெக்கை கட்டிக்கிட்டுக் குதிச்சுப் பறந்து போறாங்க. கீழே விழுந்துட்டா? அட... நீங்க வேற!. விழுந்தாத் தண்ணியிலே வுழணும், கடல்தானே கீழே இருக்கு. வேடிக்கைப் பார்த்துட்டு சலோன்னு 'வெண்ட்வொர்த் வில்' பக்கம் கூட்டிக்கிட்டுப் போனார் நம்ம க.பெ.க. எல்லாம் தமிழ்க்கடைகள். நாங்க கா.மா.க.கொ.பா. மாதிரி:-)))) ஃப்ரீஸர் பகுதியைக்கூட விடாம ஆராய்ஞ்சு விடவேண்டிய பெருமூச்சுக்களை விட்டுட்டு, சினிமாப் பகுதிக்குப் போனோம். நேத்தே கோபால் இவரோடு கூடப்போய் ஒரு டிவிடி ( கமல்ஹாஸனின் டாப் 50 பாடல்கள்) வாங்கியாந்திருந்தார்.


தமிழ்ப்படங்கள் புது ரிலீஸ் எல்லாமே இருக்கு. எல்லா டிவிடியிலும் ரெவ்வெண்டு படங்கள் வேற. நமக்குத் தமிழ்ப்படங்கள் வீடியோ கிளப்புக்காக வந்துருதே. அதனாலெ வேற எதாவது மலையாளம், ஹிந்தி இருக்கான்னு ஒரு தேடல்.'லாஹே ரஹோ முன்னாபாய்'( இது கூடவெ தேரே மேரே ஸ்வப்னே) கிடைச்சது. மணிச்சித்திரத்தாழ் & நரசிம்ஹம் அடுத்தது. பார்த்த படங்கள்தான். ஆனா...'ஒரு முறை வந்து பார்த்தாயா?'வுக்காக வாங்குனேன். விலையும் கொள்ளை மலிவு.(கடைக்காரருக்குச் சொல்லிறாதீங்க. நமக்குள்ளே இருக்கட்டும். அஞ்சு டாலர்தான் ஒரு டிவிடி வித் ரெண்டு படம்)


அங்கே இருந்து நேரா நம்ம ஸ்ரேயா வீடு. உங்களுக்கெல்லாம் இன்னொரு ரகசியம் சொல்லவா? இவுங்க வீணை வச்சிருக்காங்க.'வச்சிருக்காங்கன்னா? வாசிப்பாங்களா? தெரியுமா? 'ன்னு கேக்கறீங்கதானெ? இப்பத்தான் கத்துக்கிட்டு இருக்காங்களாம்.ஒவ்வொரு விஜயதசமிக்கும் வகுப்புத் தொடங்கி ஒரு மாசத்துலே அம்பேல். ஆனாலும் விடாம அவுங்களைத் தொல்லை செஞ்சு ரெண்டு பாட்டு(???) வாசிக்க வச்சுட்டோமுல்லெ! ரெண்டுதான் தெரியுங்கறது வேற விஷயம்:-))))


ச்சும்மா கலாட்டா செய்யறேனே தவிர, ஸ்ரேயாவுக்கு எங்கேங்க நேரம் இருக்கு? பாவம். வார முழுசும் ஏறக்குறைய ஒரு மணிநேரம் பயணிச்சு வேலைக்கு போகணும். திரும்பி வர இன்னும் ஒரு மணி. வார இறுதியிலே வீட்டு வேலைகள்,கோயிலில் இளைஞர் அணியில் சேவை. இதுலே, வலை பதியறது எல்லாம் வேலை நேரமோ? ( கேட்டுக்கலை!!!)


பாட்(டை)டுக் கேட்டதுக்காக ஜாங்கிரி, சோன்பப்டி( ஹல்திராம்) டீ எல்லாம் கொடுத்தாங்க. ஓசைப்படாமத் தின்னுட்டு 'மழை' வீட்டுலே இருந்து கிளம்புனா, வெளியிலே உண்மையான மழை!


க.பெ.க. ரயிலடியிலே கொண்டு வந்து விட்டார். நாங்களும் ரயிலைப் புடிச்சு ராத்திரி பத்தரைக்கு வந்து சேர்ந்தோம்.


ராத்திரி சாப்பாடு அதிரசமும், மிக்ஸரும், ஆப்பிளும்தான். கொஞ்ச நேரம் தமிழ்மணம், மெயில்கள் இத்தியாதி:-)))) ( கொடுக்கற காசுக்கு 'ப்ராட் பேண்டை' பயன் படுத்தணுமா இல்லையா? )முதல் படத்தில்: இடது பக்கம் பெருமாள் & வலதுபக்கம் சிவன் கோயில்கள்.


தொடரும்...........

தொடரும்...........

46 comments:

said...

//அங்கெ ஒரு மேஜை மேலே இருந்த ஆரஞ்சு கீழே குதிச்சு,உருண்டு ஓடிவருது என்கிட்ட//

ஏன் டீச்சர், நாலு பேரு நிலம் அதிர நடந்தா ஆரஞ்சு என்ன பெருமாளே உருண்டு வந்திருப்பாரு. உங்க நல்ல காலம் ஆரஞ்சோட போச்சு!

ஒரு வேளை அன்னைக்குத்தான் ஹவாய் தீவுகளில் நிலநடுக்கம் வந்துதா? :-D

said...

வாங்க கொத்ஸ்.

நாங்களே பூமாதேவிக்கு நோகக்கூடாதேன்னு நிலம் அதிராம நடக்கறவங்க.ம்க்கும்

ஏதோ,சாமியே 'சிம்பாலிக்கா' நம்மை வரவேற்கிறார்னு ஒரு அல்ப சந்தோஷப்பட்டுக்கலாமுன்னா......
அதுக்கும் வேட்டு வைக்க ரெடியா இருக்கீங்க:-)))))

said...

வாழைப்பழத்தால் மாரடைப்பா??:-))

said...

//வாழைப்பழம் கெட்ட கேடு 16 டாலராம் கிலோ. நெஞ்சு அப்படியே 'கப்'னு அடைச்சுக்கிச்சு. இங்கே நம்மூர்லே கிலோ $2.65க்குப் போட்டுருக்கறதையே,'கொள்ளை அடிக்கிறாங்க'ன்னுசொல்ற எனக்கு எப்படி இருந்துருக்கும்?//

டீச்சர்.
உங்க சந்தோஷத்துக்கு சில விஷயம். இங்கே வாழை ஒரு பவுண்ட் $0.33; கிலோ $0.75

//பெருமாள். தயா சிந்து பார்த்ததும் 'டக்'ன்னு நம்ம கண்ணபிரான் நினைவு. நம்ம தருமி சொன்னதுபோல இது என்ன 'கெமிஸ்ட்டிரி'யோ தெரியலை//

பெருமாளே! டீச்சரைக் காப்பாத்து; உன்னைப் பாத்ததும் உன்னையே நினைக்க வை :-)) ஹிஹி மிக்க நன்றி டீச்சர்!
எங்களுக்கும் யானை என்றால் நீங்கள் தான் நினைவுக்கு வாரீக! யானை மட்டுமா? ஜோசப் சார் சொன்னது போல் அந்தக் காபியும் தான்! :-))

//ஆரஞ்சு கீழே குதிச்சு,உருண்டு ஓடிவருது என்கிட்டே! ( சாட்சிகள் இருக்கு, க.பெ & ஸ்)//

நாங்கள் கோபால் சார் சாட்சியை மட்டுமே நம்புவோம்! அவர் சொல்லட்டும்.
அப்பறம், ஸ்கை டைவிங் நீங்க பண்ணலியா? அது பண்ணினா தானே தரிசனம் பூர்த்தியாகும்!

ஸ்ரேயா அவர்களுக்கு ஒரு நேயர் விருப்பம்; வீணையில், 'குறையொன்றுமில்லை' வாசிச்சு கேக்கணுமே! இல்லீன்னா, வீணை பற்றி ஒரு குட்டிப்பதிவாச்சும் போடுங்களேன்; டீச்சர் நீங்க கொஞ்சம் சொல்லக் கூடாதா? ஓ உங்க வாயில் தான் அதிரசம் உள்ளதே; நீங்க எப்படி பேசுவிங்க! என்ஜாய்!!! :-))

said...

வாங்க குமார்.

சில நாள் ஸேலில் 99 செண்ட்க்கு கிடைக்கும் வாழைப்பழம் 16 டாலர்ன்னா நெஞ்சு அடைக்காதா?
இது பத்தின மேல்விவரம் அடுத்த பதிவில் வரும்.

said...

KRS,

எந்தக் காப்பி? என்ன சொன்னார் டிபிஆர்?

ஸ்கை டைவிங் தானே பண்ணிக்கறேன்னு பெருமாள் சொல்லிட்டாருப்பா. அவருக்கென்ன கருடர் இருக்கார்:-))

said...

துளசி ப்ளாகருக்கு என்னவோ ஆச்சு.
ஒரு மைல் நீளப்(ச்சும்மா)பின்னூட்டம் ஓடிப் போச்சி. கெனாட்ஃபைண்ட் த சர்வர்னு.
அப்போ அங்கே போயி என்னை நினைக்கலியா.
கோவிலுக்குப் போயிட்டு மத்த எல்லாரையும் நினைச்சீங்களா.

//அர்ச்சனைச் சீட்டு வாங்க இந்தப் பக்கம் ஓடுனார் கோபால், அந்தப் பக்கம் ஓடுறார் பட்டர்! பூப்பறிக்கப் போனாராம்//
ஓ அப்போ ஓடினதெல்லாம் பதிவாளர்களின் பதிகள்தானா.

வாழைப்பழம் எங்க ஊரில 20--20ரூபாதான்.
வரேன்பா கோவிந்தா நல்லா இருக்கே.

அங்கே கோவில்ல எங்க சாமி நரசிம்மர் இல்லையா. சுதர்சன்
பின்னாலே உக்கார்ந்து இருப்பாரே.
அப்போவாவது என்னை நினைக்கலியா. அடடா.

ஆரஞ்சுக்குத் தெரியுமா நீங்க வரீங்கனு,.இல்லை அதோட ஜோடியை நீங்க சாமிக்கு நைவேத்யத்துக்கு வச்சு இருந்தீங்களோ/:-0)
அடுத்த பதிவுக்கு ரெடி.

said...

அப்பா இதுவாவது போச்சே.

said...

ஆப்பு வைக்கிறதுன்னா சொல்லிட்டு வைக்கனும்!! விஜயதசமி விளையாட்டு ஒரு ஒரே தடவைதான் நடந்ததுதுன்னு இத்தால் அறியத்தருகிறேன். :OD

//..வார இறுதியிலே வீட்டு வேலைகள்..//
சோக்குன்னா இது சோக்கு!!

//வலை பதியறது எல்லாம் வேலை நேரமோ? ( கேட்டுக்கலை!!!)//
பின்னே! ;O)

அது ஒலிம்பிக் 2004 இல்லே , ஒலிம்பிக் 2000.

//கோயிலில் கூட்டமே இல்லை. ஒரே ஒரு மனவா(டு)ளு ஜோடிதான் பிரகாரத்தைச் சுத்தி வந்துக்கிட்டு இருக்காங்க.அப்ப செருப்பு விடற இடத்துலே எக்கச்சக்கமா இருந்துச்சே, நாம பார்த்தமே //
அது போன பதிவிலே.. முருகன் கோயில்ல. குழப்பிட்டீங்க போல!! :O)

லகே ரகோ தேடின கதை சொல்ல மறந்திட்டீங்களே! :O))

said...

//ஸ்ரேயா அவர்களுக்கு ஒரு நேயர் விருப்பம்//
கண்ணபிரான்.. எனக்கும் அந்தப்பாட்டுப் பிடிக்கும். இன்ஷா அல்லா உங்க விருப்பம் நிறைவேறட்டும். :O)

கமலியை கேட்டதாச் சொல்லுங்க என்ன! [கமலி-கண்ணபிரான்-சிவகாமியின் சபதம்] :O)

said...

ஹலோ அட்டெண்டன்ஸ் கொடுத்திட்டேன்....ப்ரஸெண்ட் மேம்

said...

வாங்க வல்லி.

அதெல்லாம் நினைக்காம இருந்திருப்பேனா? 'கெமிஸ்ட்ரி ' வேற இருக்காமே:-))))

அதான் தசாவதாரம் சிற்பங்கள்ன்னு சொன்னேனே அதுலே நரசிம்ஹம் இருக்கேப்பா. அப்புறம் நான் வாங்குன
மலையாளப்படம் அதுவும் இதே பேர்தான். என்னோட இன்னொரு தோஸ்த்து இருக்காங்கப்பா. அவுங்களுக்கும்
அங்கிருந்து மெயில் அனுப்பிக்கிட்டுத்தான் இருந்தேனாக்கும்:-))))

said...

எந்தக் காப்பி? என்ன சொன்னார் டிபிஆர்? //

அதானே.. எனக்கே மறந்துபோச்சே..

அங்கே வாங்குறவங்க எல்லாம் மத்த நாட்டுக்காரங்க. அதானே.......... //

அவங்களுக்கு வேணும்னா நம்ம சாப்பாடு பிடிக்குமாருக்கும்.. ஆனா நமக்கு?

முக்கியமா சைனீஸ் ஃபுட்.. வெந்ததும் வேகாததுமா? ஒங்களால சாப்பிட முடியுமா என்ன?

ச்சின்னதா மதிள் சுவர்//

மதில ரொம்ப அழுத்தி சொல்றீங்க.. அவ்வளவு ஸ்ட்ராங்கான சுவரா:)

said...

வாங்க ஸ்ரேயா,

பாவம் , போனாப் போட்டுமுன்னு உங்களுக்கு வக்காலத்து வாங்குனா இப்படியா?
oops......வீட்டுவேலை எல்லாம் வேற யாரோ செய்யறாங்கன்ற குட்டை இப்படியா போட்டு உடைக்கணும்:-)))))

செருப்புக் குழப்பம் இல்லை. இங்கேதான் கார்டன் ஷெட் போட்டு, அதுக்குள்ளே அங்கங்கே இருந்துச்சு. முருகன் கோயிலில்தான்
கூட்டம் கண்முன்னாலேயே இருந்துச்சே:-)))

said...

வாங்க சிஜி.
ஆஜர் பதிஞ்சாச்சு:-)

said...

ஸ்ரேயா,

அது 2004... இல்லியா? 2000மா? அடடா...... இப்படி கோட்டை விட்டுட்டேனே (-:

said...

வாங்க டிபிஆர்ஜோ.

ஸ்ட்ராங்கா மதிள்னு சொல்லிட்டு அடுத்த வரியிலே மதில்னு போட்டுட்டேன்.
எது சரின்னு ஒரு குழப்பம்தான்.....

said...

பேடி மார்க்கெட் பக்கம் போனீங்களா ??

அங்கன கொஞ்சம் விலை குறைச்சல் எல்லாம்...!!!

டிரெயின்ல போகும்போது நார்த் சிட்னிக்கு முன்னால லூனா பார்க்குன்னு ஒரு போர்டை பார்த்திருபீங்களே !!!!

:)))))))))

said...

டொராங்கோ ஸூவுக்கு கூட்டுக்கிட்டு போயி ஒட்டகம் காட்டினாங்களா இல்லையா !!!!

said...

ஓசியில் ஆஸி கோவில் பார்த்த திருப்தி. பயணத்தை எப்படி வலைப்பதிவது என்பதற்கு இலக்கணமாக உள்ளது உங்கள் பதிவு.

said...

வாங்க ரவி.

பேடிஸ்( paddy's )மார்கெட் எல்லாம் முந்தியே சுத்தி இருக்கோம். ச்சைனாடவுன் பக்கம்தான்.
அங்கேயும் சனிக்கிழமைன்னாதான் நல்ல பழங்கள், காய்கறிகள் மலிவாக் கிடைக்கும்.
டார்லிங் ஹார்பர் பக்கம் இருக்க அக்வேரியத்துக்குத் தொட்டடுத்து ஒரு சிட்னி ஒயில்ட்லைஃப்
வொர்ல்ட் வந்துருக்கு. அங்கே போகலாமுன்னு நினைச்சு, கடைசியில் நேரமில்லாமப்போச்சு.
அந்த லூனா பார்க், மிருகக்காட்சி சாலை எல்லாம் மகள் சின்னவயசா இருக்கும்போது
கொண்டு போனதுதான்.

said...

வாங்க மணியன்.

நீங்க சொன்னது பாராட்டாத்தானே? :-))))

நீங்க கலாய்க்கமாட்டீங்கன்ற ஒரு நம்பிக்கைதான்:-)))

said...

உள்ளேன் டீச்சர்.பார்த்து பிரமித்து நிற்கிறேன்.என்ன பதிவு,என்ன எழுத்தாற்றால்,அருமையான படங்கள்.பேசாம இருக்கறதே புத்திசாலித்தனம்.
ஆனா ஒன்னு நிச்சியம் பொண்ணும் பேரனும் போகும்போது சிட்னி போயிடவேண்டியதுதான்

said...

டீச்சர்........டேபிள்ள வெச்சிருக்குற ஐட்டங்களைப் பாத்தா கோயில் மடப்பள்ளி ஐட்டங்கள் போலத் தெரியலையே...ஏதோ ஆஸ்த்திரேலியா சரவணபவன்ல சாப்பிட்ட மாதிரி இருக்குது.

அது சரி.......அத்தன முருகன்களைப் பாத்தீங்களே.....போட்டோ பிடிச்சிட்டு வந்திருக்கப் படாதா? ஏதோ மாணவன் சந்தோசப்பட்டிருப்பானே....

ஆண்டாளுக்குத் தனிக் கோயிலா...சூப்பர். ஆண்டள் திருக்கோயில் பாத்தாலே...திருப்பாவை ஒன்னு ரெண்டாவது நமக்குப் பாடீரனும். குரல் பிரமாதமில்லைன்னாலும்...ஒரு ஆர்வந்தான். ஆண்டளம்மா கோவிச்சிக்கிறமாட்டாங்கன்னு ஒரு நம்பிக்கைதான்.

என்னது...வாழப்பழத்துக்கு வெல சொல்றாங்களா...வாழத் தோட்டத்துக்கு வெல சொல்றாங்களா! வாழப்பழம் அந்தூரு வியாபாரிகளை வாழ வெக்கிற பழம் போல இருக்குது.

said...

//பாட்(டை)டுக் கேட்டதுக்காக ஜாங்கிரி, சோன்பப்டி( ஹல்திராம்) டீ எல்லாம் கொடுத்தாங்க. //

:-))))

அத‌னால‌த்தான் பாட்டு எப்படி இருந்திச்சின்னு விம‌ர்ச‌ன‌ம் ப‌ண்ணாம‌ விட்டுட்டீங்க‌ளா?

said...

வாங்க தி.ரா.ச.

இப்பச் சொன்னீங்க பாருங்க அது கரெக்ட். பேசாம பொண்ணுகூடவே போயிருங்க.
இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா லக்கேஜ் அவுங்களுக்கும் ஆச்சு:-))))

ஆமாம், அதென்ன வசிஷ்டர் வாக்கு மாதிரியா?
கோயில்களை நேரில் போய்ப் பாருங்க. இன்னும் பிரமிப்பாத்தான் இருக்கு.

said...

ராகவன்,

இந்தக் கோயிலிலேதான் போட்டோ எடுக்கத்தடை(-:

அடுத்த பதிவுலே (நேத்துபோன கோயில்)சிட்னி சிங்காரவேலனைப் போட்டுடறேன்.
மாணவருக்கான ஸ்பெஷல்:-)

இந்தக் கேண்டீன் கோயில் மடப்பள்ளி வகை இல்லையாக்கும். பரோட்டா குருமா எந்த மடைப்பள்ளியிலே
கிடைக்குது? :-)))))

இது ஒரு தனி மனிதர் நடத்துறார். அதுலெ வர்ற வருமானத்துலே கோயிலுக்குப் பங்குன்னு நினைக்கிறேன்.
இந்த வாழப்பழம் இப்படிப் பண்ணுமா? :-)))) வாழவைக்குது இல்லெ?

said...

ச்சும்மா இருங்க மதி.
வாயைக் கிளறாதீங்க. ஆமாம்:-))))

said...

அய்யோ அந்த டார்லிங் ஹார்பர் பக்கத்துல இருக்குற அக்வேரியமா ?

ஒன்னுமே இல்லை...டப்பா மீனை போட்டு வச்சிருக்கான்...

க்ருஸ்ல ஒரு டிக்கட்ட வாங்கிக்கிட்டு ஒரு சுத்து சுத்தினாலாவது குடுத்த காசு செரிக்கும்...

ஒலிம்பிக் நடந்தப்ப அங்கன இருந்தீயளா ??

said...

ஓ.கே! புரிஞ்சிடுச்சி டீச்சர்!
கப்! சிப்!!
(ஸ்ரேயா வந்து அட்டன்டென்சஸ் கொடுத்துட்டு, போயிட்டாங்கதானே?)

said...

ஆமாம் கெமிஸ்ட் ரி சரிதான். இல்லாட்டா இத்தனை பேர் சாமி புண்ணியத்தில இத்தனை பேரோட நட்பா இருக்க முடியுமா.

ஒஸ்தானுரானா வரேன்பா தானே?

துளசி மாலை அங்கே போடறாங்களா?
விக்டோரியா பில்டிங் இன்னும் எழுதலை மறந்துடாதீங்க.

said...

// திரும்பி வரும் வழியிலே ஒரு இடத்துலே ஸ்கை டைவிங். கொஞ்சம் உயரமான இடத்துலெ இருந்து மனுஷங்க ரெக்கை கட்டிக்கிட்டுக் குதிச்சுப் பறந்து போறாங்க. கீழே விழுந்துட்டா? அட... நீங்க வேற!. விழுந்தாத் தண்ணியிலே வுழணும், கடல்தானே கீழே இருக்கு. வேடிக்கைப் பார்த்துட்டு //

நீங்க ஜம்ப் பண்ணலயா? அடடா மிஸ் பண்ணிட்டீங்களே! நான் எப்பவாவது பண்ணியிருக்கேனா என்று கேட்காதீர்கள்! :-0))

வைசா

said...

மதி,

மூட்டிறாதீங்க ப்ளீஸ்:-)))))

said...

வல்லி,

துளசி மாலை? இல்லேன்னா துளசிக்கு மாலை?
ஓஓஓஓஓஓ அந்தத் துளசி மாலையா? துளசிச் செடிகள் இருக்குன்னு நினைக்கிறேன்.
மாலைகட்டும் அளவுக்கு 'பிருந்தா' வனம் இல்லை(-:

அடுத்து வர்றது 'அந்த பில்டிங்'தாம்ப்பா:-)))

ஒஸ்தானுவைக் கரெக்ட்டாப் புடிச்சுட்டீங்க. இதோ ஒஸ்தானு:-)))

said...

வைசா,
இங்கே எங்கூர்லேயே இருக்கே. விழுந்து அடிபட்டாலும் உள்ளூர் ஆஸ்பத்திரிதானே போகவர சுலபம்.
அதுக்கு என்னாத்து இன்னொரு நாட்டுலே பறக்கணும்? :-)))

said...

ரவி,

அந்த அக்வேரியம் ஆரம்பிச்ச புதுசுலே நல்லாத்தானே இருந்துச்சு. பெரிய பெரிய ஸ்கேட் ஃபிஷ், ஸ்டிங் ரே எல்லாம்கூட
இருந்துச்சே. நம்ம செந்தோஷாவுலே இருக்கறமாதிரி கன்வேயர் கூட ( இது ரொம்பச் சின்ன அளவு) போட்டு வச்சுருந்தாங்களெ.
இப்ப 'டப்பா' மீனாவா இருக்கு?

நான் சொல்றது மிருகங்கள். ஃப்ரில்ட் நெக்(லேஸ்) லிஸர்ட் எல்லாம் இருக்குன்னு விளம்பரம் பார்த்தேனே. 6000 வகை
அனிமல்ஸ் இருக்குன்னு சொல்றாங்க.

said...

ம்க்கும்!!! (இன்னும் இருக்கேன் .. போயிடலேன்னு "செருமி"க் காட்டுறேன். :O)

துளசி.. அவ்வ்வ்வ்வளோ மோசமாவா இருந்துது பாட்டு?? :O(

said...

ஷ்ரேயா,

ச்சீச்சீ.... ச்சும்மா ஒரு கலாட்டாவுக்குதான். கலாய்க்க ஆள் கிடைச்சா விடக்கூடாதேப்பா. ரூல்ஸ் இருக்கு தெரியாதா? :-))

பாட்டு உண்மைக்குமே நல்லாத்தாங்க இருந்துச்சு.

said...

//ஒரே ஒரு பகுதியை விட்டுட்டார், ஸ்ரீராம ராம ராமேதி, ரமே ராமெ மனோரமே............ மனசுக்குள்ளெ ஒரு ச்சின்னத் துடிப்புஎனக்கு. அடுத்ததா திருவிளக்கால் தீபாரதனை செய்யும்போது விட்டதைச் சொல்லிட்டார்..//

தமிழ்கூறும் ந்ல்லுலகம் ஒரு நல்ல 'டீச்சரை' இழந்திருச்சின்னு தோணுச்சி...

தமிழ்நாட்டுக்கு இழப்பு; நியூசிக்கு லாபம்..

said...

///6000 வகை
அனிமல்ஸ் இருக்குன்னு சொல்றாங்க///

அப்படியா...சூப்பர்...ஆனா கோபால் சார், நீங்க, நான் மூனுபேரும் போய் பார்த்தா 6003 வகை...இல்லையா !!!

said...

எங்கே ரவி..... அதுக்குத்தான் ச்சான்ஸ் இல்லாமப்போச்சே:-)))))

said...

வாங்க தருமி.

மாநாடு நல்லபடியா முடிஞ்சது போலிருக்கு. வீடியோ க்ளிப்பெல்லாம்
போட்டு அமர்க்களப்படுத்திட்டீங்க.

//தமிழ்நாட்டுக்கு இழப்பு; நியூசிக்கு லாபம்.. //

ஆமாம், இதுலே ஏதும் உள்க்குத்து இருக்கொன்னு ஒரு ஐயம்.
ஐயத்தைத் தெளிவிக்க மண்டபத்துலே 'யாராவது' இருக்காங்களா????.:-))))

said...

////தமிழ்நாட்டுக்கு இழப்பு; நியூசிக்கு லாபம்.. //
ஒருவேளை கோயில்லே பூசை செய்யக்கூடிய அறிவிருக்குன்றதை சொல்றாரோ? :O)

profile படத்துலே என்ன..தருமியின் மறுபக்கமா?? :O))

said...

ஷ்ரேயா,
அட... ஆமாம். இப்பத்தான் யார் வேணுமுன்னாலும் அர்ச்சகரா வரலாமுன்னு சொன்னாங்களே!

உதவிக்கு வந்ததுக்கு நன்றி.:-))))))

ஆமாம், யார் வேணுமுன்னாலும்... அதுலே பெண்களும் சேர்த்தியா இல்லியா?

said...

உருண்டு வந்த ஆரஞ்சே
உருக வைத்தாய் அக்காவை!
கருவறையில் இருந்தாயோ?
கண்ணன் அருள் தந்தாயோ?
மருண்டு வந்த மக்களெல்லாம்
மகேசன் அருள் பெற்றிடவே
பெருந்தவஞ்செய் பெருமாட்டி
பெருமை தனை உரைத்திட்டாய்!

said...

குமரன்,

'கவிதை'க்கு நன்றி.

ஆரஞ்சுகிட்டே இந்த க'விதை'யைப் பத்திச் சொல்லிடறேன்.