Thursday, November 30, 2006

எவ்ரிடே மனிதர்கள் -24 சகுந்தலா

சகுந்தலா ஒரு இளம் விதவை. ஊருலே எல்லாரும் அப்படித்தான் சொல்றாங்க. பாவம், மூணே மாசம் ஆன கைக் குழந்தை இருக்கு. தகப்பனைத் தின்னுட்டானாம் அந்தக் குழந்தை! இதையும் அந்த ஊரேதான் சொல்லுது.ஆனா சகுந்தலாவுக்கு இன்னும் ஒரு சந்தேகம் இருக்கு. அது........?


நல்ல ஒல்லியான உடல்வாகு. கறுப்பும் இல்லாம ரொம்ப வெளுப்பாவும் இல்லாத ஒரு பொது நிறம். அலைஅலையாஅடர்த்தியாக் கூந்தல். ரொம்ப நீளம். பின்னி விட்டால் ச்சாட்டை போல இருக்கும். கண்ணுலே எப்பவும் ஒரு மெல்லிசானசோகம். டீச்சர் வேலை.



நல்ல வசதியான குடும்பம். கூடப்பிறந்தவுங்க 11 பேர். நாள் பார்த்து, நட்சத்திரம் பார்த்து, ஜாதகம் பார்த்துத்தான் கல்யாணம் நடந்துச்சு. புருஷன் வீட்டுலேயும் நல்ல வசதிதான். ரெண்டு அண்ணனுங்களாம் வீட்டுக்காரருக்கு. இவர்தான் கடைசிப்பிள்ளை. நல்ல படிப்பு. அந்தக் காலத்து பி.ஏ. சகுந்தலா அப்பத்தான் ஸ்கூல் ஃபைனல் முடிச்சிருந்தாங்க. வயசும் பதினேழுதான். நல்ல இடம் கிடைச்சுருக்கேன்னு மேலெ படிக்க விடாமக் கல்யாணம் முடிஞ்சுபோச்சு.


ஜெயகுமாருக்கு சொந்த பிஸினெஸ். ஒயிட் காலர் வேலைங்கச் சுலபமாக் கிடைக்கிற காலமா இருந்தும் இவருக்கு வியாபாரத்துலேதான் கண்ணு. என்னென்னவோ வியாபாரம் செஞ்சுக்கிட்டு இருந்தாராம். பூக்கடை பக்கத்துலே ராட்டன்(ரத்தன்) பஜார்லே பெரிய கடை. எப்பவும் கோட்டும் சூட்டுமாத்தான் பளிச்சுன்னு இருப்பாராம்.



தனிக்குடித்தனம். சொர்கத்தில் இருக்கற நினைப்பு. வீடு பூரா அட்டகாசமான வசதிகள். வீட்டு வேலைக்கு, சமையலுக்குன்னு ஆள். கதைப் புத்தகம், உள்ளூர் சொந்தங்கள் வந்து போறதுன்னு பொழுது போயிருக்கு.



'வெளியே போகலாமுன்னு சொன்னவுடன், அந்த க்ஷணமே செருப்பைக் காலிலே நுழைச்சுக்கிட்டுப் போய்க்கிட்டே இருக்கணுமாம். 'இருங்க, துணி மாத்திக்கிட்டு வந்துடறேனு' சொல்லிறக் கூடாதாம். சதா சர்வ காலமும் ஆடை ஆபரணங்களோடநீட்டா இருக்கணுமாம்' இது ஜெயகுமாரின் எதிர்பார்ப்பு.


ஆஹா.......... அப்படியே இருந்துட்டாப்போச்சு. அதான் எல்லா வேலைக்கும் ஆள் இருக்கே. நாளொரு அலங்காரம், பொழுதொரு புடவைன்னு காலம் போகுது. ரெண்டு வருஷம் ஜாலியோ ஜாலி. சகுந்தலா கர்ப்பமானாங்க. ஏழாம் மாசம் தாய் வீட்டுக்கு வந்தாச்சு.



அப்ப ரெண்டாவது உலக யுத்தம் நடந்துக்கிட்டு இருந்த காலக் கட்டம். இந்தியாவும் பிரிட்டனுக்கு சப்போர்ட். எங்கே பார்த்தாலும் ராணுவக் கெடுபிடிகள். ரேஷன் அது இதுன்னு இருந்துருக்கு. ஜெயகுமாரும் மிலிட்டரிக்கு சாமான்கள் சப்ளை செஞ்சுக்கிட்டு இருந்துருக்கார்.எல்லாம் பீங்கான் கண்ணாடிச் சாமான்கள். கூட்ஸ் வண்டியிலே சரக்குகள் ஏத்தி மூணு கேரேஜுகள் போயிருக்கு. பையன் பிறந்த யோகம் நல்ல காண்ட்ராக்ட் கிடைச்சிருக்கு.


குழந்தைக்கு அஞ்சு மாசம் ஆனதும் கணவர் வீட்டுக்குக் கொண்டு போய் விட்டுருவாங்க. இவனை அப்படி வளர்க்கணும் இப்படி வளர்க்கணுமுன்னு கலர்க்கலராய் கனவுகள் சகுந்தலாவுக்கு. இடி விழுந்தது போல ஒரு செய்தி வருது ஒரு நாள் பொழுது விடியும் நேரத்துலே . ஜெயகுமார் தற்கொலை செஞ்சுக்கிட்டாராம்.


அய்யோ............ அடிச்சுக்கிட்டு அழத்தான் முடிஞ்சது.


ஏன்? எதுக்கு? எப்படி? ஒரே கேள்விகள் மண்டையைக் குடையுது.
சரக்கு ஏத்திப்போன வண்டி விபத்துலே சிக்கி, சாமான்கள் எல்லாம் நொறுங்கிப் போச்சாம். இதுலே வரப்போற பெருத்த லாபத்தை நம்பி, பாங்குலே வாங்குன கடனை எப்படி அடைக்கப்போறோமுன்ற பயம், விரக்தியிலே அவசரமுடிவு எடுத்துட்டார் ஜெயகுமார். வெளியே தெரிஞ்சா அவமானம், போலீஸ் கேஸ்ன்ற 'தேவை இல்லாத' பயத்தாலே'அண்ணன் வீட்டுலே தூக்குலே தொங்குன ஜெயக்குமாரை' ராவோடு ராவா மயானத்துக்குக் கொண்டு போய் எரிச்சாச்சாம்.


கிடைச்ச விவரம் இவ்வளவுதான். அந்தக் காலத்துலே இன்ஷூரன்ஸ் எல்லாம் அவ்வளவா இல்லை போல இருக்கு.பூச்சூடலுக்கு வந்து திரும்பியே போகலை. குடும்ப வழக்கபடி எதோ சாஸ்திரங்கள் சம்பிரதாயங்கள் எல்லாம் முடிஞ்சு கைக்குழந்தையோடு கண் கலங்கி நின்ன சகுந்தலாவுக்கு வயசு வெறும் இருவது. என்ன கொடுமை பாருங்க.


ஜெயகுமார் வீட்டுலே இருந்து ஒண்ணும் பெருசாக் கிடைக்கலை. சகுந்தலா கொண்டு போன சீர்செனத்திகள்தான் கொஞ்சம் போலத் திரும்ப வந்தது. புருஷன் வீட்டுச் சொந்தங்கள் உறவை அப்படியே மு(றி)டிச்சுக்கிட்டாங்க.
குழந்தைக்கு ஒரு வயசானபிறகு, சகுந்தலா மீண்டும் படிக்கப் போனாங்க. எல்லாம் டீச்சர் வேலைக்குத்தான். காஞ்சீபுரத்துலேஒரு டீச்சர் ட்ரெயினிங் ஸ்கூலிலே சேர்ந்துருக்காங்க. ஹாஸ்டல் வாசம். மாசம் ஒருதடவை மகனைப் பார்க்க வந்துட்டுப் போவாங்களாம். ரெண்டு வருசப் படிப்பு. ஆதாரக் கல்வித்திட்டம். இங்கே குழந்தை பாட்டி வீட்டுலே வளர்ந்தான். ஒரு சமயம் குழந்தைக்கு உடம்பு பூரா சிரங்கு வந்து மோசமாயிட்டானாம்.
என்னென்னவோ வைத்தியம் செஞ்சுருக்காங்க.அங்கங்கே சில தழும்புகளோடு நல்லா ஆனானாம்.


படிப்பு முடிச்சுட்டு வந்ததும் உள்ளூர்லேயே ஒரு ஆதாரக் கல்விப் பள்ளிக்கூடத்துலே வேலை கிடைச்சிருக்கு. வருஷம் ஓடிப்போச்சு. பையனுக்கு இப்ப 14 வயசு. பக்கத்து ஊர்லே இருக்கற ஹைஸ்கூலுக்குப் போய்க்கிட்டு இருக்கான்.ரயிலில் போய்வரணும். ரெண்டே ரெண்டு ஸ்டேஷந்தான். கெட்ட சகவாசம் ஆயிருச்சு. பள்ளிக்கூடம் போகாம ச்சீட்டு,கோலின்னு விளையாடிட்டு சாயந்திரம் சரியான நேரத்துக்கு வீட்டுக்கு வந்துருவான். அஞ்சாறு மாசம் இப்படிப் போயிருக்கு.பள்ளிக்கூடமும் ஒரு தகவலும் அனுப்பலை. குறைஞ்சபட்சம் ஏன் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பலைன்னு கடிதம் போட்டுருக்கலாம்.



சகுந்தலாவோட சின்ன அண்ணன் ஒரு நாள் வேற எதோ வேலையாப் போனவர், பையன் ரயில்வே ஸ்டேஷன் மரத்தடியிலே ஜமா சேர்த்துக்கிட்டு சீட்டு விளையாடறதைப் பார்த்துட்டார். வீட்டுக்கு வந்து விஷயத்தைச் சொன்னதும் மண்டகப்படி எல்லாம் ஆச்சு. தெலுங்கு மீடியத்துலே இருந்து தமிழ் மீடியத்துலே உள்ளூர்லேயே சேர்த்தாங்க. ஒரு வழியாஇப்படி அப்படின்னு படிப்பு முடிச்சு, (எல்லாம் ஹைஸ்கூல்தான்) வெளியே வரும்போது வயசு 20.


இதுக்கிடையிலெ எப்பவும் பஞ்சு அடிக்கிறது, பட்டை போடறது, ராட்டையில் நூக்கறதுன்னு பள்ளிக்கூடத்துலே வகுப்புகள் எடுத்ததுலே பஞ்சுத் துகள்கள் எல்லாம் மூக்குவழியாப் போய், ஆஸ்த்மா, க்ஷயரோகமுன்னு வந்துருச்சு சகுந்தலாவுக்கு. தினமும் ஊசி, பால் முட்டைன்னு செலவான செலவு. கையிருப்பெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக் கரைஞ்சுபோச்சு. போனாப் போட்டும், அந்தவரைக்கும் உடல்நிலை குணமாச்சே, அதைச் சொல்லுங்க. அப்புறம் கொஞ்சம் சிபாரிசு புடிச்சு,அரசாங்கப் பள்ளிக்கூடத்துலே வேலையை மாத்திக்கிட்டாங்க. உள்ளூர்தான்.


பையனுக்கு மேலே படிக்க நாட்டம் இல்லை. எதாவது வியாபாரமுன்னு துடிச்சுக்கிட்டே இருந்தான். அப்பனைக் கொண்டு இருக்குன்னு எல்லாரும் சொல்வாங்க. உருவமும் அப்படியேதான். போட்டாவுலே இருக்கற ஜெயகுமாருக்கும், அவர் பையனுக்கும் அப்படி ஒரு ஒத்துமை. இரும்பு நாற்காலி, மேஜை, சாய்வு நாற்காலின்னு ஒரு தொழில் தொடங்கி இப்ப நல்லாஇருக்கானா(ரா)ம். ஆச்சே வயசு இப்ப அறுவதுக்கும் மேலே.


சகுந்தலா வேலையில் இருந்து ஓய்வு வாங்கிக்கிட்டாங்களாம். இப்ப பரவாயில்லாம இருக்காங்கதான். ஆனாலும் மனசுலே இன்னும் ஒரு நெருடல். நிஜமாவே தான் ஒரு விதவையா? ஒரு வேளை சினிமாவில் வர்றதுபோல கணவரைச் சொந்தக்காரங்க ஒளிச்சு வச்சுட்டு செத்துட்டாருன்னு நாடகம் ஆடி இருப்பாங்களோ? இல்லாட்டி அவர் அவமானத்துக்குப் பயந்து ஓடி ஒளிஞ்சுக்கிட்டாரோ? ஏன் அவர் பொணத்தைக்கூடக் கண்ணுலே காட்டாமஎரிச்சாங்க? உண்மையிலெயே செத்துட்டாரா? திடீர்னு ஒரு நாள் திரும்பி வந்தாருன்னா எப்படி இருக்கும்?

இப்படி ஆயிரம் கேள்விகள். விடையே தெரியாத கேள்விகள்.


அடுத்தவாரம்: நாகரத்தினம்


நன்றி: தமிழோவியம்

Wednesday, November 29, 2006

வாத்தியாரின் வீட்டுப்பாடம்

இந்த ஹோம் வொர்க்கைத்தாங்க இப்படிச் சொன்னேன். அக்கா பொண்ணுச் சின்னக்குழந்தையா இருந்த சமயம். (என்ன? ஒரு ஏழு வயசு இருக்கும் அப்ப)
மாமாவோ தீவிர தமிழ் அன்பர், தமிழ்ப் பித்தர். தமிழரசுக் கழகமுன்னு ஒண்ணு அப்ப இருந்துச்சுங்க.(இப்பவும் இருக்கான்னு விவரம் தெரியாது) ம.பொ. சிவஞானகிராமணியார்தான் அதோட தலைவர். அவரை எல்லாரும் ம.பொ.சின்னு குறிப்பிடுவாங்க. நம்ம தமிழ்ப் பித்தர் தன்னையும்மா.து.சின்னே சொல்லிக்கிட்டு இருந்தார். எல்லாத்துலேயும் தமிழே தமிழ்தான் அவருக்கு.



பொண்ணு வீட்டுப்பாடம் சரியாச் செய்யலைன்னு இவர், பொண்ணோட டீச்சருக்கு ஒரு குறிப்பு எழுதிக் கொடுத்தனுப்புனார், பொண்ணுகிட்டே.

"சிலம்பரசி( பொண்ணோட பேர்) வீட்டு வேலைகள் ( ஹோம் ஒர்க்) சரியாகச் செய்வதில்லை. கொஞ்சம் கண்டித்து வையுங்கள்."


டீச்சர், உடனே சிலம்பரசி கிட்டே என்ன சொன்னாங்க?


" இதோ பாரும்மா. உங்க அப்பா இப்படிச் சொல்லி யிருக்கார். நாளையிலே இருந்து பள்ளிக்கூடத்துக்குவர்றதுக்கு முன்னாலேயும், பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்குப் போன பிறகும் அம்மாவுக்கு உதவியாவீட்டு வேலைகள் எல்லாம் செஞ்சு தரணும். சரியா? "


" என்ன வேலை டீச்சர்?"


" வீட்டுலே எவ்வளோ வேலை இருக்கும்? மாவு ஆட்டறது, தண்ணி பிடிச்சு வைக்கிறது, கடைக்குப் போறது,தம்பி தங்கச்சிங்களைத் தூக்கி வச்சுக்கறதுன்னு. எல்லாத்துலேயும் உதவி செய் ஆமாம்"


ஏழு வயசுக்குழந்தை என்னங்க வீட்டு வேலை செய்யும்? அதுவும் வீட்டு வேலைக்குன்னெ பெரியவுங்க நாலு பேர் இருக்கற வீடு, கூட்டுக்குடும்பம்.


பொண்ணு வீட்டுக்கு வந்து சொன்னதும், அப்பா முகத்தைப் பார்க்கணுமே:-))))))))))))


சரி. அதுபோகட்டும். நம்ம 'சுப்பையா வாத்தியார்' சுற்றுலா விஷயமா உங்களுக்கெல்லாம் ஒரு லிஸ்ட் போட்டுக் கொடுத்துருக்கார். அவர் அனுப்புனதை இங்கே அப்படியே போடப்போறேன்.


எல்லாத்தையும் கவனமாப் பார்த்துட்டு, உங்களுக்கு விருப்பம் இருக்கற இடங்களையும் குறிப்பிட்டுச் சொல்லுங்க. போற போக்கைப் பார்த்தா, ஒரு நாலைஞ்சு பஸ் ஏற்பாடு செஞ்சுக்கிட்டு, ' தமிழ்மணம் சுற்றுலா'ன்னு'பேனர்' கட்டிக்கிட்டு நாமெல்லாம் போற மாதிரி ஒரு கனவு கண்முன்னால் விரியுது!


***** ***** *****


சகோதரி துளசி கோபால் அவர்களுக்கு,நீங்கள் கேட்டுக்கொண்டபடி தமிழ்நாட்டிலுள்ள முக்கியமான, பார்க்க வேண்டிய இடங்களைக் கீழே குறிப்பிட்டுள்ளேன்.


நீங்கள்தான் துவங்கி வைத்தீர்கள் - ஆகவே அவற்றை நீங்களே பதிவாக்கிவிடுங்கள்.


குறிப்பிட்டுள்ள 33 இடங்களில் 19 இடங்கள் கோவில்களாகும்.இறை நம்பிக்கையுள்ளவர்களும், இறைநம்பிக்கையில்லாதவர்களும் கூட பார்க்கவேண்டிய இடங்களாகும் அவைகள். தொன்மைக்காகவும், சிற்பக்கலைக்காகவும், பிரம்மாண்டத்திற்காகவும், கற்திருப்பணிகளுக்காகவும் பார்த்து ரசிக்கப் பட வேண்டியவை அவை. அது போன்று நூற்றுக் கணக்கான கோவில்கள் தமிழ் நாட்டில் இருந்தாலும் நான் பத்தொன்பது கோவில்களைத்தான் குறிப்பிட்டுள்ளேன்


தேக்கு மரத்தாலான, பிரம்மாண்டமான கட்டிடக் கலைக்கான வீடுகள் செட்டி நாட்டில் நிறைய உள்ளன. எல்லாம் நூறு வருடங்களுக்குமேல் தொன்மையாவை. அவற்றில் இரண்டை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன். வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அவைகள் காட்டப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


உங்களுக்குத்தெரிந்த இடங்கள், பிடித்த இடங்கள் இருந்தால் அவற்றையும் சேர்த்துக்கொள்ளும்படி வேண்டுகிறேன்.


1. மெரினா கடற்கரை, சென்னை

2. குடவரைக் கோவில்கள், மகாபலிபுரம்

3. காமாட்சியம்மன் கோவில், காஞ்சிபுரம்

4. நடராஜர் கோவில், சிதம்பரம்

5. பிட்சாவரம், சிதம்பரம் அருகில் உள்ளது

6. அண்ணாமலையார் கோவில், திருவண்ணாமலை

7. பட்டீஸ்வரர் கோவில், பேருர் - கோயமுத்தூர்

8. இயற்கைச் சூழலில் உள்ள சிறுவாணி அணை

9. உதகமண்டலம்

10. பழநி தண்டாயுதபாணி கோவில் ( அதன் தொன்மைக்காக - போகர் ஸ்தாபித்தது)

11. ஸ்ரீரெங்கநாதர் கோவில், ஸ்ரீரங்கம்

12. திருவானைக் கோவில், திருச்சி

13. பிரஹதீஸ்வரர் ஆலயம், தஞ்சாவூர்

14. தியாகராஜர் கோவில் - கமலாலயம் , திருவாரூர்

15. ராஜகோபாலசுவாமி கோவில், மன்னார்குடி

16. இளையாற்றங்குடி கைலசநாதர் கோவில்

17. செட்டிநாடு பேலஸ், கானாடுகாத்தான்

18. ராவ் பகதூர் வீடு, கொத்தமங்கலம்

19. மீனாட்சியம்மன் கோவில், மதுரை.

20. நாயக்கர் மகால், மதுரை

21. காளீஸ்வரர் கோவில், காளையார் கோவில்

22. கோமதியம்மன் கோவில், சங்கரன் கோவில்

23, நெல்லையப்பர் கோவில், திருநெல்வேலி

24, சண்முகர் கோவில், திருச்செந்தூர்

25. குற்றாலம் அருவி

26. கன்னியாகுமரி

27. முட்டம் கடற்கரை

28. தாணுமாலயன் கோவில், சுசீந்திரம்

29, கொட்டாரம் கிராமம், நாகர்கோவில் அருகில்

30. ராமநாதசுவாமி கோவில்,ராமேஸ்வரம்

31. கொடைக்கானல்

32. தேக்கடி

33. திருவீசர் - சிவகாமவல்லி, கற்பகவிநாயகர் கோவில், பிள்ளையார்பட்டி - குடவரைக் கருவரையில் உள்ள பிள்ளையார்.


நன்றி, வணக்கத்துடன்,SP.VR. சுப்பையா


***** ******* ******


இதுலே நான் வாங்குன மார்க் 20 தான். ( பாஸ்? )

நீங்க?



எனக்கும் இப்படி ஒரு சுப்பையா வாத்தியார் இருந்தார். அவரைப் பத்தி இங்கே:-)))))

Monday, November 27, 2006

அம்பது..........

நாமெல்லாம் 'கண்ணை மூடறதுக்குள்ளே' கட்டாயமாப் பார்க்க வேண்டிய அம்பது இடங்களைப் பத்தி, பிபிசிக்காரங்க ஒரு லிஸ்டு போட்டுருக்காங்களாம்.

சரி, அப்படி என்னதான் சொல்றாங்கன்னு போய்ப் பார்த்தேன்.

1.கிராண்ட் கேன்யன்

2.கிரேட் பேரியர் ரீஃப் ஆஸ்தராலியா

3.டிஸ்னி வொர்ல்ட் ( ப்ளோரிடா)

4.சவுத் ஐலண்ட் ( நியூஸி)

5.கேப் டவுன் சவுத் ஆஃப்ரிக்கா

6.பொற்கோயில் அம்ரித்ஸர் இந்தியா

7.லாஸ் வேகாஸ் யு.எஸ்.ஏ.

8.சிட்னி ஆஸ்தராலியா

9.நியூயார்க் யு.எஸ்.ஏ.

10.தாஜ்மஹால் இந்தியா

11.லேக் லூயீஸ் த ராக்கீஸ் கனடா

12. உலூரு அயர்ஸ் ராக் நார்தர்ன் ஆஸ்தராலியா ( உலூருன்றது அபாரிஜன் பெயர்)

13.Chichen Itz, Mexico மாயன் நாகரிகம் மெக்ஸிகோ

14.Machu Picchu, Peru மச்சு பிச்சு (இன்காஸ்) பெரு

15.நயாகரா நீர்வீழ்ச்சி

16.பெட்ரா ஜோர்தான்

17. பிரமிடுகள் எகிப்துPyramids, Egypt

18. வெனிஸ் நகரம் இத்தாலி Venice, Italy

19. மாலத்தீவுகள் Maldives

20. சீனா நெடு(பெரு)ஞ்சுவர் Great Wall, China

21.விக்டோரியா நீர் வீழ்ச்சி Victoria Falls, Zambia/Zimbabwe border

22. ஹாங்காங் Hong Kong

23.Yosemite National Park, USA

24. ஹவாயி தீவுகள் Hawaii

25.வடக்குத்தீவு நியூஸி North Island, New Zealand

26. Iguacu Falls, Argentina/Brazil border

27. பாரீஸ் மாநகர் ஃப்ரான்ஸ் Paris, France

28.அலாஸ்க்கா யு.எஸ்.ஏ. Alaska, USA

29.அங்கோர்வாட் கோயில். கம்போடியா Angkor Wat, Cambodia

30.எவரெஸ்ட் சிகரம். இமயமலை. Mount Everest, Himalayas

31. ரியோ டி ஜெனிரோ ப்ரேஸில் Rio de Janeiro, Brazil

32. வனவிலங்கு சஃபாரி, தேசீய பூங்கா. கென்யா Masai Mara, Kenya

33.கெலபேகோஸ் தீவுகள் Galapagos Islands, Ecuador

34. லக்ஸர் எகிப்து Luxor, Egypt

35. ரோமா நகர் இத்தாலி Rome, Italy

36.சான் ஃப்ரான்ஸிஸ்கோ யூ எஸ்.ஏ San Francisco, USA

37.பார்ஸிலோனா ஸ்பெயின் Barcelona, Spain

38.துபாய் Dubai, UAE

39. சிங்கப்பூர் Singapore

40. La Digue, Seychelles கறுப்புக் கிளிகள் (நிஜக்கிளிகள்) பார்க்கலாம்.

41. ஸ்ரீலங்கா

42.பாங்காக், தாய்லாந்து

43.பார்பேடோஸ் வெஸ்ட் இண்டீஸ் Barbados, West Indies

44. ஐஸ்லாந்து . Iceland

45. சுடுமண் படைவீரர்கள். ச்சீனா The Terracotta Army, China


46.Matterhorn, Switzerland

47. Angel Falls, Venezuela

48.அபு சிம்பெல் எகிப்து Abu Simbel, Egypt

49.பாலித்தீவு, இந்தோனேஷியா

50. Bora Bora, French Polynesia

இதெல்லாம் அவுங்க ச்சாய்ஸ்.

எனக்கு? இன்னும் இந்தியாவையே முழுக்கப் பார்க்கலை.(-:

போட்டும், உங்க சொந்தப் பட்டியல்களைச் சொல்லுங்க. எது எதெல்லாம் நிஜமாவே பார்க்க ஆசையா இருக்கு?


பட்டியல் தயாரானதும் ,(மேற்படிப் பட்டியலில் 4 & 25 விட்டுறணும்:-) ஆமா)
அங்கே இருக்கற நம்ம வலைஞர்கள் கிட்டே சொல்லி ஏற்பாடு செஞ்சுக்கலாம். பிரச்சனை இல்லை:-))))