போனவகுப்பில் வராத மாணவ மணிகளுக்கு: முதல் பகுதி இங்கே:-)
கள்ளி கத்தாழை இதுகளில் என்ன வித்தியாசம் இருக்குது? இங்கே இந்தச் சொற்களை இப்படி எடுத்துக்கிட்டு இருக்கேன்.
கள்ளி = Cactus (பன்மை cacti .ஆனால் cactuses ன்னும் சொல்லலாமாம்)
கத்தாழை = succulents
எல்லாக் கள்ளியும் கத்தாழைதான். ஆனா எல்லாக் கத்தாழையும் கள்ளி இல்லை.
இந்த succulents என்றதுக்குப் பொருளே சதைப்பிடிப்பானது, தண்ணீரைத் தேக்கி வச்சுக்கும் குணமுடையதுன்றதுதான்.
பொதுப்படையாச் சொல்லிக்கலாமுன்னா கள்ளியில் முள்ளு இருக்கும். கத்தாழையில் சதை இருக்கும். (அதான் சோத்துக் கத்தாழைன்னு ஒண்ணு இருக்கே. விதிவிலக்குகள் எக்கச் சக்கம். (எந்தப்பக்கமும் போக விடமாட்டேங்குதே)
எல்லாக் கள்ளிகளும் அடிப்படியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்ததுதானாம்.
ஆனா இந்தக் கத்தாழைகள் அடிப்படையில் 12 குடும்பத்தைச் சேர்ந்துன்னு ஆரம்பிச்சு அதுலே இருந்து கிளை பிரிஞ்சு இப்பக் கணக்கில்லாமப் பெருகி இருக்கு. (சுருக்கமாச் சொன்னா சீனா & இந்தியாவைக் காப்பியடிச்சுருச்சு)
இங்கே நியூஸியில் கள்ளி(யிலும்) பால் வகைகளை நான் கண்ணுலேயே பார்க்கலை. நம்மூர்க்கே அதை வித்திச்சுருக்கு போல. அப்பத்தானே பெண் பிஞ்சுகளை ஒரேடியா அழிக்க முடியும்?(-:
நம்ம ஊர்லேதாங்க கள்ளி, ரயில் கத்தாழை, சோத்துக் கத்தாழை, சப்பாத்திக் கள்ளின்னு பேர்கள் இருக்கு. இங்கெல்லாம் இதெல்லாத்தையும் ரெண்டே வகையில் அடக்கிட்டாங்க.cacti & succulents.
கத்தாழைச் செடிகளில்கூட பலவிதம் இருக்கு. இதைப் பாருங்க புலி வேசம் போட்டுக்கிட்டு வரிவரியா இருக்கு.
கத்தாழைச் செடிகளில்கூட பலவிதம் இருக்கு. இதைப் பாருங்க புலி வேசம் போட்டுக்கிட்டு வரிவரியா இருக்கு.
இது என்னன்னா சதைப்பிடிப்பா முதுகிலும் பல் வச்சுருக்கு:-)
இது கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய் வகையோ?
நானானி கேட்டுக்கிட்டு இருந்த மாமியார் ஸ்டூல் இதுதான்:-) எங்கூர் பொட்டானிக்கல் கார்டன் காக்டெஸ் ஹவுஸில் எடுத்தது.
இதே ஸ்டூலின் சின்ன வகை நம்ம வீட்டில். பூ எவ்வளவு அழகு பாருங்க.
இன்னும் சில விதப் பூக்கள் பூக்கும் நம்மூட்டுக் கள்ளிகள் இவை.
நம்ம பழைய வீட்டில் ஒரு கள்ளிச்செடி இருக்கு. ஆளுயரமுன்னு சொல்ல முடியாது. அது ரெண்டரை மீட்டர் உயரத்துக்கு வளர்ந்து, கட்டிடத்தின் ஜன்னல் மேலே வரும் சாஃபிட்டை இடிச்சுக்கிட்டு மேலே போக இடமில்லாமல் வளைய ஆரம்பிச்சது.
இவ்வளோ பெருசா வளர்ந்துபோன கள்ளியை வேற இடத்துக்கு ( இப்ப இருக்கும் வீட்டுக்கு) மாத்திக்கலாமுன்னு நினைச்சேன். வெளியேதான் தோட்டத்தில் நடணும். குளிர் ஊரில் ட்ரான்ஸ்ப்ளாண்ட் ஷாக் ஆகிப்போச்சுன்னா?
நம்மூர் பொட்டானிக்கல் கார்டனில் ஒரு காக்டெஸ் ஹவுஸ் இருக்கு. பேசாம அவுங்களுக்குத் 'தானம்' செஞ்சுறலாமுன்னு ஒரு நாள் 'கார்டன் கிரவுண்ட் கோ ஆர்டினேட்டர்'க்கு ஒரு மடல் தட்டிவிட்டேன். அவர் அவரோட மேலதிகாரிக்கு அனுப்பிக் கேட்டுருக்கார்.
I think it may be more trouble than it is worth at that size. Politely decline the offer அப்படின்னு பதில் வந்துருக்கு. அந்த மடலையும் சேர்த்து ரொம்பப் பணிவா
எனக்கு அனுப்பிட்டாங்க. இப்படித் 'தானம் கொடுக்க நினைச்ச மாட்டைப் பல்லை(முள்ளை)ப்புடிச்சுப் பார்த்துட்டாங்களே'ன்னு கொஞ்சம் புலம்பிக்கிட்டு இருந்தேன்.
மேல்விதானத்தில் இடிக்குதே அதையாவது வெட்டிச் சரிபண்ணிரலாமுன்னு அந்த வீட்டுக்கு மராமத்து வேலைக்கு வந்துருந்த நம்ம கிச்சன் கிங்கிட்டே சொன்னேன். கண்ணுலே ஒரு மிரட்சி இருந்துச்சு. ரம்பம் வச்சு அதை அறுத்துறலாமுன்னு யோசனையும் சொன்னேன். மறுநாள் அந்தப் பக்கம் வேற வேலையாப் போறேன்.... 'கிங்'கின் வண்டி நிக்குது. என்ன நடக்குதுன்னு எட்டிப்பார்த்தா..... கட்டிட்டுவான்னா வெட்டிட்டு வர்ற ஆளுப்பா இந்த கிங்!!!!
பரபரன்னு கள்ளியை அறுத்துக்கிட்டு இருக்கார். எப்படி அந்த நேரத்துக்கு அங்கே போனேன்னு பிரமிப்புதான் எனக்கு. வெட்டுன துண்டுகளை எப்படியாவது என்னமாவது செஞ்சு முளைக்க வைக்கமுடியுமான்னு பரிசோதிச்சே ஆகணும் எனக்கு. வீட்டுக்குத் தூக்கிவந்தேன்.
நேராப் போய் விழுந்தது கூகுளார்கிட்டேதான். அறுத்த துண்டுகளை நாலுவாரம் கழிச்சு நட்டு வைக்கணுமாம். அப்பத்தான் அதுலே இருந்த தண்ணீர் எல்லாம் வற்றி முளைக்கும் ஆர்வம் வரலாமாம். நெசமாவா சொல்றாரு? (கூகுள்) ஆண்டவரே சொன்னாலும், அப்படிச் 'சட்'னு நம்பிருவேனா? அதான் ரெண்டு இருக்கே. ஒண்ணு இன்னிக்கு இன்னொண்ணு நாலு வாரம் கழிச்சு. செஞ்சுறலாம்
வளர இடமில்லாமல் தலைதட்டிப் பாவமா கிடக்கும் நம்ம வீட்டுப் பாம்பு.........
நம்ம வீட்டுக்கு வந்தாச்சுல்லே.... இனி எல்லாம் சுகமே:-)
பூப்பதற்கு முன்னும் பின்னும்

கீழே உள்ள படம் கிறிஸ்மஸ் காக்டஸ். குளிர்காலத்தில் பூக்கும் பூ.
கள்ளியை முள்ளுன்னு தள்ளிவிடாம வகுப்புலே ஆர்வமாக் கலந்துக்கிட்டக் கண்மணிகளுக்கு நன்றி.
