Showing posts with label Napier. Show all posts
Showing posts with label Napier. Show all posts

Wednesday, December 09, 2020

ஒருவேளை உணவை ஒழி என்றால் ஒழியாய்.......  பகல் சாப்பாட்டுக்கான நேரம் நெருங்கிருச்சுன்னு கடற்கன்னிக்கு எதிர்வாடை சாலையைக் கடந்து போனோம்.  இந்த மெரீன் பரேடு இருக்கு பாருங்க..... நேப்பியரில்  இதை அடிச்சுக்க முடியாது. நல்ல அருமையான ஏரியா !  நடந்தே போய் எல்லாத்தையும் பார்த்து ரசிச்சு அனுபவிக்கலாம். இங்கே தங்குமிடம் தெரிஞ்செடுத்த 'நம்மவருக்கு' ஒரு  பாராட்டுப் பத்திரம்  (கூடக்)கொடுக்கலாம் :-)
முந்தாநாள்  இங்கே வந்து சேர்ந்ததும் சாப்பிட்ட அதே இடம் போனோம்.  இங்கத்துக் கடைசி சாப்பாடும் இங்கேயே ஆகட்டும். நல்ல கூமரா ஸாலட் கிடைச்சது. கூடவே ஒரு ச்சீஸ் கேக்கும் !  எனக்கு எங்கே போனாலும் உயிர்காக்கும் உணவு  அந்தப் பாழாப்போன பொட்டேட்டோதான். (இந்தியா விதிவிலக்கு, கேட்டோ ! )அதுக்கு இந்த கூமரா எவ்வளவோ தேவலை.  மாற்றமும் வேண்டித்தானே இருக்கு, இல்லையோ ?  கூமரா  =  சக்கரைவள்ளிக்கிழங்கு . 






சிட்டுக்குருவிகளும் என்னைப்போலத்தான்.... இல்லே....?  உருளையை ஒரு பிடி பிடிக்குதுகள் :-)
அக்கம்பக்கத்துக் கடைகளை வேடிக்கை பார்த்துக்கிட்டே போனப்ப, குழந்தைக்கோமாளி கண்ணில் பட்டான்.  அட! இவனுடைய அப்பா அங்கே நம்ம வீட்டில் இருக்காரே..... குழந்தையைக் கூட்டிப்போய்க் காமிச்சால் சந்தோஷப்படுவாரே....  புள்ளை பெரிய படிப்பாளி போல!   புத்தக அலமாரியிலே உக்கார்ந்துருக்கான். அவனை 'வாங்கி' பையில் போட்டாச்.  
முந்தாநாள் ராத்ரி பார்த்த இண்டியன் அலங்காரச்சாமான் கடை திறந்துருக்கு. ச்சும்மா எட்டிப்பார்த்தேன். அவ்ளோதான். இந்தக் கடை நம்மூரில் இருக்கப்டாதோ ?  பொதுவா, நியூஸியில் பல வியாபார நிறுவனங்கள்  எல்லாம் செயின் ஸ்டோர்ஸ் வகைதான்.  மெயின் ஸ்ட்ரீம்ஸ்  என்பதால் எல்லா ஊரிலும் வியாபாரம்  அமர்க்களம். விலையும் ஒன்னு போல என்பதால்.... எங்காவது போகும்போது இங்கிருந்து  அன்பளிப்பு வாங்கிப்போகணுமுன்னு இல்லை. என்ன கொடுக்கப்போறோமுன்னு இங்கே பார்த்து வச்சுக்கிட்டு அங்கங்கே போய் வாங்கிக்கலாம். சுமைகூலி மிச்சம் :-)   இந்தியன் கடைகள் மட்டுமே விதிவிலக்கு.  புத்தர் அரைவிலை. நல்லா இருக்கார். இருக்கட்டும் !   யானை வந்து பார்த்ததுக்கு அடையாளமா ஒரு யானை....

ஓப்பன் மால்தான் இந்த இடம். இதைப்போல் எங்கூரிலும் கடற்கரைப் பேட்டையில்  ஒன்னு இருக்கு!  சனம் உக்காரப் போட்டு வச்சுருக்கும் மேடைகள் ஒவ்வொன்னிலும்  விதவிதமான  ஓட்டோவியம். என்ன இருந்தாலும் ஆர்ட் ஸிட்டி என்ற பெயரைக் காப்பாத்தணும்தானே ! 





இன்னும் ஒரு மணி நேரம் கைவசம் இருக்கு. ச்சும்மா ஒரு ட்ரைவ் போயிட்டுப்போகலாமா?  அப்பத்தான் நினைவு வந்தது...   படகுத்துறை போகலையேன்னு... ச்சலோ.....

ஏகப்பட்டவை நிக்குதுகள். மூரிங் பார்க் :-) கொடிமரம் உள்ளவைதான் அதிகம்.  காத்தாடப் போவாங்க இல்லே ? 

ஸ்லிப்வே யில் லேடி ஹேமில்டன், கரையில் ஏறி நிக்கிறாள்.  5558 இதுகளை எல்லாம் இடுப்புக்கு மேலேதானே எப்பவும் பார்க்கிறோம். இப்பக் காலையும் பார்க்க முடியுது.   ரிப்பேர் வேலைக்கு வந்துருக்காள்.

கடலையொட்டியே போகும் சாலையில் போனால் ஹாக்ஸ் பே ஏர்ப்போர்ட். போற போக்கில்  வண்டிக்குப் பெட்ரோல் நிரப்பிக்கிட்டோம். திருப்பி விடும்போது  ஃபுல் டேங் இருந்தால் நமக்கு நல்லது.  இல்லைன்னா அதுக்கொரு சார்ஜ் பண்ணிக்குவாங்க,  ரென்டல் கார்க்காரர்கள். வண்டியை, த்ரிஃப்டி பார்க்கிங்லே விட்டுட்டு, உள்ளே போய்  சாவியைக் கொடுத்துட்டு,  வண்டியில் கீறல் விழுந்ததைச் சொல்லி, அதுக்கான  படிவம் ( சரியா சாந்தி ? ) நிரப்பிக்கொடுத்தாச். ஒரு முன்னூறு டாலர் நம்ம கணக்குலே இருந்து எடுத்துக்கிட்டாங்க.  ரிப்பேர் வேலை முடிஞ்சதும் அதுக்குண்டான காசைக் கழிச்சுக்கிட்டு, மீதியை நம்ம கணக்குலே சேர்த்துருவாங்க. போகட்டும்.... (அப்புறம் ஒரு வாரத்துலே மீதியைப் போட்டாச்சுன்னு தகவல் வந்தது )

செல்ஃப் செக்கின் பண்ணி, பொட்டிகளை ஒப்படைச்சாச். இனி  காத்திருப்புதான். முக்கால் மணி நேரம் வேடிக்கை.  இங்கத்து முக்கிய சமாச்சாரம் என்னன்னு கோடி காமிக்குது  லவுஞ்சில் போட்டு வச்சுருக்கும்  காஃபி டேபிள்ஸ். 
பக்கத்துலே வந்து உக்கார்ந்த லேடியுடன் சின்னப்பேச்சில்  ஆரம்பிச்சு, அவுங்க ஓவியர் என்றதும்  கொஞ்சம் பெரிய பேச்சாகிருச்சு :-)நம்மூருலே மகள் வீட்டுக்குப் போறாங்களாம்.   தனிநபர் ஓவியக் கண்காட்சி நடத்தறாங்க. நம்மூரிலும் நடந்துருக்கு. நமக்குத் தெரியாமப்போச்சே..... செல்ஃபோனில் அவுங்க ஓவியங்களைக் காமிச்சாங்க  !  வாவ்...... அருமை !  நேரம் இருந்தால் வீட்டுக்கு வாங்கன்னு சொல்லி விவரமும் கொடுத்தேன். 

ஓவியம்னதும், நம்ம நெருங்கிய தோழி நினைவுக்கு வந்தாங்க. சிங்கையின் பிரபல எழுத்தாளர், (தமிழ் & இங்லிஷ் மொழிகளில் எழுதறாங்க )பிரபல ஓவியராகவும்  டபுள் ஆக்ட் இப்போ!  நமக்காக வரைஞ்சு கொண்டுவந்து கொடுத்தவைகளைப் பத்திச் சொல்லாமல் இருக்க முடியுதா? இதுவரை இந்திய டிஸைனில் ஒன்னும் வரைஞ்சதே இல்லையாம்.....   ஆரம்பிங்கன்னு சொன்னேன்.
ஒன்னேமுக்கால் மணி நேர ஃப்ளைட்.  குட்டி விமானம். ஆடி ஆடிப்பறந்து வர இம்மாநேரம் எடுக்குது. அஞ்சு நாப்பதுக்குத் தரை. 

ஆறேகாலுக்கு வீடு வந்தாச்.  நம்ம ரோட்டோருஆ பயணமும் முடிஞ்சது.
கோவிட் காரணம் இனி ரெண்டு வருஷங்களுக்கு  நாட்டைவிட்டுப்போக எங்களுக்கு அனுமதி இல்லை. தடுப்பு ஊசி அடுத்த வருஷம் முதல் கிடைக்கலாமாம்.  அதுவரை உள்நாட்டுப் பயணங்கள் செஞ்சுக்கலாம். நமக்கும் ஏகப்பட்ட இடங்கள், நியூஸியிலேயே பாக்கி இருக்கு. ஒவ்வொன்னாப் போய்ப் பார்த்துட்டு வரணும்.

ஏர்நியூஸிலாந்துக்கு,  போன ஜென்மக்கடன் எவ்ளோ இருக்கோ ?

போகட்டும். 

பயணம் செய்வது உடலுக்கும் உள்ளத்துக்கும் நல்லது. நெடுந்தூரப் பயணமா இருக்கணும் என்ற அவசியம் இல்லை. பக்கத்து ஊருக்குக்கூடப் போய்வரலாம். ஆனால் அங்கே இருக்கும் புராதனச்சின்னங்களையோ, மற்ற இயற்கைக் காட்சிகளையோ கண்ணையும் மனசையும் திறந்து வச்சுப் பார்த்து அனுபவிக்கணும். ஆனா ஒன்னு.... உடலில் கொஞ்சம் வலு இருக்கும்போதே போய் வந்தால் நல்லது. முட்டிவலி, முழங்கால் வலி, தலை சுத்தல் இப்படி  வலிகள்   வர்ற வயதான காலம்வரை  தள்ளிப்போடாதீங்க.....

ஆதலினால் பயணம் செய்வீர்!  






பொறுமையாகத் தொடர்ந்துவந்த வாசகப் பெருமக்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்! 



















PIN குறிப்பு :   கொஞ்ச நாளைக்கு லீவு விடலாமா ?  எப்படியும் கிறிஸ்மஸ் லீவு வேணுமா இல்லையா ?

பொழைச்சுக்கிடந்தால் புது வருஷத்தில் ஆரம்பிக்கலாம்.

கொரோனா ஒழிக !



Wednesday, December 02, 2020

கணக்கெடுப்பும் கதீட்ரலும் பின்னே ----------- (ரோட்டோருஆ பயணம் . பகுதி 19 )

இன்றைக்கு மார்ச் 7 ஆம் தேதி.  நியூஸியில் ரொம்ப முக்கியமான நாள்.  ரெண்டு மாசமா இதை நினைவூட்டிக்கிட்டே இருந்தது அரசு. நேத்து அதாவது 6 ஆம் தேதி, ராத்ரி நாம் எங்கே இருந்தோமுன்னு அரசுக்குச் சொல்லணும். நாம்தான் நம்ம வீட்டில் இல்லையே.... ஊர் சுத்திக்கிட்டு இருந்தமே...   அதனால் என்ன, எங்கே இருக்கியோ அங்கே  இதுக்கான படிமத்தில் விவரம் சொல்லு.  பொழுது விடிஞ்சதும் முதல் வேலையா படிமங்களை நிரப்பி வச்சாச்.  நாடு முழுக்க வீடுகளுக்கு அனுப்பி வச்சதுமில்லாம, ஊர் சுத்திகள், ஆஸ்பத்ரியில் தங்கி இருப்பவர்கள் எல்லோருக்கும் அங்கங்கே படிமங்கள் காத்திருக்கு !  இதுக்கும்  வழி இல்லைன்னா.......   ஆன்லைனில் கூட  செஞ்சுக்கலாம்.  செல்லில்லாத மக்கள் உண்டா என்ன ? மக்கள் தொகை கணக்கெடுப்பு நாள், 2018. 

மணி ஏழானாலும், இன்னும் வெளிச்சம் வந்தபாடில்லை. ஒரே மூட்டம் போட்டுருக்கு. நேத்துப் பேய்ஞ்ச மழை இன்னும் பாக்கி வச்சுருக்கு போல..... கடமைகளை முடிச்சு ரெடி ஆனோம். இன்றைக்கு  இந்த ஊரைவிட்டுக் கிளம்பறோம். செக்கவுட்  டைம் காலை பத்து.  நமக்கு ஒரு மணி நேரம் லேட் செக்கவுட் கிடைச்சது. 

நாம் இன்னும் பார்க்க இடங்கள் பாக்கி இருக்கே.... அதை முடிச்சுக்கணும். நல்ல வேளையா எல்லாமே இங்கே ரொம்பப்பக்கத்துலேதான். இதே மெரீன் பரேடுலே !

நம்மவருக்கு ராத்திரியெல்லாம் தூக்கம் வரலைபோல்..... வலையில் இருக்கே வழின்னு தேடிக்கிட்டு இருந்துருப்பார்....   அதான் வண்டியை இடிச்சுட்டாரில்லையா....    அதை ரிப்பேர் பண்ணிக்கலாமுன்னு.....   கொஞ்சம் விசாரிச்சுட்டு அப்புறமா ஊர் சுத்தலாமுன்னார்.  ரிப்பேர் கடைகளைத் தேடிக்கிட்டுப் போனோம்.  


  பார்த்துட்டு, ஒரு நூத்தியெழுபத்திரெண்டு டாலர்  ஆகுமுன்னு  எஸ்டிமேஷன் கொடுத்தாங்க.  செஞ்சுக்கலாமுன்னா ..... அஞ்சாறுமணி நேரம் ஆகுமாம். அதுவும் பகல் ஒரு மணிக்கு மேலேதான் நேரம் இருக்காம்.  நமக்கு நேரம் இல்லையே.... பகல் மூணரை மணிக்கு வண்டியை ஏர்ப்போர்ட்டில் விடறதாச் சொல்லியிருக்கோமே.  போகட்டும்..... ரென்டல் கம்பெனியே ரிப்பேர் பண்ணிக்கட்டும். வேற வழி ? 

நியூஸி , போஸ்ட் பெர்ஸன்களுக்கு த்ரீ வீலர் கொடுத்துருக்கு. மழையில் நனையாமப் போகலாம்.
கிளம்பி அடுத்த பத்தாவது நிமிட்  சர்ச் வாசலுக்கு வந்துட்டோம்.  முந்தாநாளில் இருந்து கண்ணுலே பட்டுக்கிட்டே இருக்கு.... 

Waiapu Cathedral னு பெயர்.  1862 லே கட்டுனது செயின்ட் ஜான்'ஸ் சர்ச். பிஷப் இங்கே இதே ஊரில் இருந்துருக்கார். அப்புறம் 1869 லே கதீட்ரல் என்னும் அந்தஸ்து கிடைச்சது.  இதுவும்  'அந்த ' நிலநடுக்கத்துலே  முழுசா இடிஞ்சு விழுந்துருச்சு.  அதுக்கப்புறம் ஒரு இருபத்தியஞ்சு வருஷம் மரக்கட்டடத்தில்  சர்ச் நடத்தி இருக்காங்க.   

ரொம்ப வருஷங்கள் கழிச்சுத்தான் இப்ப நாம் பார்க்கும் கதீட்ரலைக் கட்டி இருக்காங்க. 1967 இல் கட்டி முடிச்சாச்சு. பத்து வருஷமாச்சாம் வேலை முடிக்க !  வெளியே பார்க்க சிம்பிளாத் தெரிஞ்சாலும் உள்ளே சூப்பரா இருக்கு!  3700  குழாய்களோடு இருக்கும்  ஆர்கன்,  நியூஸியில் இருக்கும் சர்சுக்களுக்கான பெரிய  ஆர்கன்களில் ஒன்னு !  வாசிக்கும்போது கேட்டால் அட்டகாசமா இருக்குமில்லே !   சர்வீஸ் நடக்கும் சமயத்தில் நாம் போகலையேன்னு ஒரு குறை இருக்கு எனக்கு....  


அரைவட்ட வடிவமாக் கருவறை (! )பின்பக்கச் சுவரில்  பூ டிசைனில்  ஒரு ரோஸ்விண்டோ !  ஏகப்பட்ட பெஞ்சு வரிசைகள். முக்கியமாச் சொல்லவேண்டியது..... ஸ்டேண்டு மேலே நிக்கும்  கருடன் !  (பெரிய திருவடி, இல்லையோ ! ) Eagle lectern. கிறிஸ்துவர்களின் வேதப்புத்தகத்தை இதுலே இருக்கும் பலகையில்  வச்சு, நின்னுக்கிட்டு  வாசிப்பாங்களாம். ஆனால் இங்கே குத்துவிளக்கு ஸ்டேண்டில் நிக்கிறார் ! 
கருடரை எல்லா  Anglican churchகளிலும்  வச்சுருப்பாங்க.  எனக்கும் சர்ச்சுகளில் போய் சாமி கும்பிடுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. மனசுக்குள்ளே இருக்கும் பெருமாளை எங்கே கும்பிட்டால் என்ன ? போதாததுக்குப் பெரிய திருவடி வேற இருக்கார் ! 

நம்ம ஊர் நிலநடுக்கத்தில்கூட க்றைஸ்ட்சர்ச் கதீட்ரல் இடிஞ்சு விழுந்தப்ப, உள்ளே இருக்கும் பெரிய திருவடிக்கு ஒன்னும் ஆகலை. புதுசாக்கட்டுன கார்ட்போர்ட் (!) சர்ச்சில் இப்போ ஜம்னு உக்கார்ந்துருக்கார் !

 
அஞ்சு நிமிட் உக்கார்ந்து,  ஆடும் மனசை நிக்க வச்சு ஒரு நிமிட் மனசாரக்கடவுளை நினைச்சுத் தியானம் செஞ்சுட்டு,  விளக்கு ஏத்தி வச்சேன். இந்தப் பக்கங்களில் எல்லாம்  சர்ச்சுகளுக்குப் போகும்போது நாம் மெழுகுவத்தி வாங்கிப்போக வேணாம்.  அங்கேயே நமக்காக வச்சுருப்பதை எடுத்து விளக்கேத்திவச்சால் போதும்.  அதுவும் ஆச்சு :-)



பொதுவாச் சர்ச்சுகளுக்கே உரித்தான  ஸ்டெய்ன்டு / கட்  க்ளாஸ்  விண்டோக்கள்,  சம்ப்ரதாயமும், மாடர்ன் ஆர்ட்டுமாப்  பளிச்ன்னு  அழகு !  






நமக்குப் பதினொன்னுக்குதான் செக்கவுட் . ஆனால்.... பதினொரு  மணிக்கு எங்கே சுத்திக்கிட்டு இருப்போமோ... அதுக்குன்னு ஓடி வர முடியுதா? இன்னும்  நமக்கு சில இடங்கள் பாக்கி இருக்கே.  பேசாம இப்பப்போய் செக்கவுட் பண்ணிக்கலாம்.  பொட்டிகளை வண்டியில் வச்சால் ஆச்சு !  கதீட்ரலில் இருந்து  ஒரே ஒரு கிமீதான் . ஆனாலும்  சுத்திக்கிட்டுத்தான் வரணும்.  கிளம்பும்போதுதான்  ஹொட்டேல் ம்யாவ் கண்ணில் பட்டது. கொஞ்சம்  நம்ம கோகி ஜாடை இருக்கோ ?    

தொடரும்........... :-)