கண்ணாடி வளையல்கள் கொத்து ஒன்னை நீட்டினாங்க ஒரு பெண். நமக்கில்லைப்பா..... கோவில் பட்டர் கிட்டே. அவரும் அதை வாங்கி ஓரமா இருந்த கூடையில் வச்சார். அதுலே முக்கால்வாசி வளைகளா ரொம்பிக்கிடக்கு. இது நேத்து, வெள்ளிக்கிழமைக் கோயிலில் பார்த்த விஷயம். ஏன்? எதுக்கு? ன்னு மனசுக் குடைச்சல்,எனக்கு. நின்னு நிதானிக்க நேரம் இல்லை. நாளைக்கு வரத்தானே போறோம். விசாரிச்சுட்டால் ஆச்சு
பத்து நிமிசம் முன்னாலே வந்துட்டுப் பதுமனைச் சேவிச்சு ஒரு சுத்து சுத்திவரும்போது அஷ்டபுஜ விஷ்ணு துர்க்கைக்கு வளையல்கள் மாலை போட்டுருக்காங்க. இன்னிக்கு ஆடிப்பூரம். ஒருவேளை.............இதுதான் ஸ்பெஷலோ? கோவில்படி கடக்கும்போது இன்னொரு பெண் உதவியாளர் கையைப் பிடிச்சுக்கிட்டேத் தள்ளாடிய நடையில் வரும் திருமதி ஒய்ஜிபி அவர்களைப் பார்த்தேன். ரொம்பத்தான் வயசாயிருச்சு(-:
"நீ நினைக்கிறவங்களா இல்லாட்டி என்ன பண்ணுவே?"
"ஒன்னும் பண்ணமாட்டேன். உக்கார்ந்து பார்த்துட்டுப் பதிவு எழுதுவேன். ஒரே பேர்லே ஆளுங்க இருக்கமாட்டாங்களா என்ன?"
கால்வாசி நிரம்பி இருந்த ஹாலுக்குள் பிரவேசித்தோம். இதென்ன முன்னாலே எல்லா இடங்களும் , என் இடம் உள்படக் காலியா இருக்கே...... வீரநடை போட்டுப்போய் உக்கார்ந்த நிமிஷம், முதல் மூணு வரிசை இன்னிக்கு ரிசர்வுடுன்னு செக்யூரிட்டி வந்து சொல்றார். ரிசர்வுடுன்னா ஒரு அறிவிப்பு வச்சுருக்கக் கூடாதா?
ஏற்றவும் கடைசி வரிசையில் கோபிகா ஒற்றை ஆளா உக்கார்ந்திருக்காங்க. என்னை கண்டதும் 'பரிச்சயக்காரியைக் கண்டச் சிரி'.
"வரூ. ஈசைடு மும்போட்டு போயிருக்கூ"
"இன்னு புள்ளி ஆரா? "
ரெஜினிகாந்திண்டே மோளு"
"மெயில் அயிச்சிச்சுண்டு, கண்டோ?"
" இத்ரி தெரக்கா. சமயமில்லா. நாளை காணாம்"
'இத்ரியோ........... ஒத்ரியல்லோ'ன்னு நினைச்சுக்கிட்டேன்.
நியாயம்தான். விழா நடத்தி முடிப்பதுவரை எவ்வளோ தலைவலின்னு நமக்குத் தெரியாதா? இன்னிக்குத்தான் கடைசி நாள். வசதியான இடமாப் பார்த்து(என்ன பெரிய வசதி? தலை மறைக்கக்கூடாது அம்புட்டுத்தான்)எக்ஸ்ட்ரா சேர் இழுத்துப்போட்டு உக்கார்ந்தோம். இசைக்குழு வந்து ஸ்ருதி சேர்த்து ரெடியா இருக்காங்க. பாடகி அதே நந்தினி ஆனந்த்தான். நமக்கு அதிர்ஷ்டமுன்னு நினைச்சேன். என்ன அருமையான குரல்வளம். ரொம்பத் தெளிவா, ஸ்பஷ்ட்டமாப் பாடுறாங்க. வழக்கம்போல் புடவைதான் கட்டி இருக்காங்கன்னாலும் மலையாளச் சாயலில் உள்ள ஹாஃப் ஒயிட் கசவு ஸாரி. நட்டுவாங்கமும் இதேபோல ஒரு புடவை. கூடுதல் விளக்குகளும், ஸ்பீக்கர்ஸுமா கொஞ்சம் பந்தாவாத்தான்................திமுதிமுன்னு ஒரு கூட்டம் வந்து முன்வரிசையைப் பிடிச்சது. போட்டோ க்ராஃபர்கள் எல்லாம் மொய்ச்சுக்கிட்டுப் படம் எடுத்துத் தள்ளறாங்க. தனுஷ் இந்தப் பக்கம் திரும்பி எல்லாருக்கும் பொதுவா கைகூப்பி ஒரு வணக்கம் சொல்லிட்டு உக்கார்ந்தார். அவர் என்னவோ சாதாரணமாத்தான் இருக்கார். அடிபொடிகள்தான் பாதுகாப்பு வளையம் மாதிரித் தெரிஞ்சது.
அடுத்த சலசலப்பு.............. லதா ரஜினிகாந்த். மருமகன் இருக்கும் பக்கம் இல்லாம அடுத்த பக்கம் வந்து உக்கார்ந்தாங்க. ஆஸ்ரம் ஸ்கூல் பழைய மாணவ மாணவிகள் சிலர் காலைத் தொட்டுக் கும்பிட்டு வணக்கம் சொல்லிக்கிட்டாங்க. இவுங்களோட தண்ணிபாட்டிலைக் கையில் வச்சுக்கிட்டு ஏவலுக்குக் காத்து நின்ன உதவியாளர் எஜமானி அம்மாவின் கட்டளையை எதிர்பார்த்துக் கதவோரம் காத்திருந்தார். ஒரு கையசைவு போதுமாயிருந்தது.சின்னதா பார்டர் போட்டக் கேரளக் கசவு ஸாரி அணிஞ்ச ஐஸ்வர்யா ஆட ஆரம்பிச்சாங்க. ஏனோ தானோன்னு இல்லாம ரொம்ப பவ்யமா, சின்ஸியரான ஆட்டம். முகபாவனைகள் அபிநயம் எல்லாமே சூப்பர். ஒல்லியான சின்ன உருவம். நட்டுவாங்கம் செஞ்சவங்கதான் குருவாம். கடைசிவரை விறுவிறுப்புக்குக் குறைவில்லை.
'அம்மம்மா' கையால் கடைசியில் பரிசு. பொன்னாடை. நட்டுவாங்கம் செஞ்சவங்களையும் மற்ற இசைக் குழுவினரையும் பாராட்டிப் பேசுனாங்க திருமதி ஒய் ஜி பி. அடுத்த நிகழ்ச்சிக்குத் தயாரா இருந்த கீதா மாஹாலிக்
அவர்களுக்கும் அம்மா கையால் பரிசு கொடுத்துக் கவுரவப்படுத்தணுமுன்னு கோபிகா கேட்டுக்கிட்டதால் அப்படியே செஞ்சாங்க. கம்பீரமான குரல் மட்டும் அப்படியே இருக்கு. உடல்தான் ரொம்பவே தளர்ந்து போச்சு.சினிமாக்காரர்கள் போனதும் மொத்தக்கூட்டமும் (சிலரைத் தவிர்த்து) அம்பேல். காயப் ஹோ கயா. நிம்மதியா 'என் இடம்' போய் அமர்ந்தேன்.
ஒடிஸ்ஸி நடனம் ஆரம்பமாச்சு. ரொம்ப எளிமையான அலங்காரங்கள். தலை அலங்காரம் மட்டும் பிரமாதமா இருக்கு. ரொம்ப நிதானமான நடன வகை. அபிநயம், பாவங்கள் எல்லாத்துலேயும் நம்ம பரதத்தோட சாயல் அதிகம். சுத்திச் சுத்தி ஆடறாங்க. அந்த புடவைக் கட்டுலேச் சுத்தி ஆடும்போது எனக்கென்னமோ மராத்தியர்களின் நடனம் நினைவுக்கு வந்துக்கிட்டே இருந்துச்சு.கீதா, ஒடிஸி நாட்டியத்துலே ஆராய்ச்சி செஞ்சுக்கிட்டு இருக்காங்க. வைணவ பக்தியும் ஒடிஸ்ஸி நடனமும் எப்படி ஒன்னுக்கொன்னு இணைஞ்சு இழையுது, அதோட தாக்கம் எப்படின்னு ஆராயறாங்களாம். பஜன் வகைப் பாட்டுகளும் நடனமும் அருமை. பாவயாமி ரகுராமம் வட இந்திய ஸ்டைலில் பாடினார் பாடகர். ஒரிஸ்ஸாவில் பிறந்து வளர்ந்து இப்போ டெல்லியில் இருக்காங்க. கலாச்சாரக் கழகத்து ஃபெல்லோஷிப் அவார்ட் கிடைச்சுருக்கு. பல வருட பயிற்சியும் அனுபவமும் சேர்ந்து ரொம்ப க்ரேஸ்ஃபுல்லான நிகழ்ச்சியா இது அமைஞ்சுபோச்சு.
இவுங்ககூடவே இசைக்குழுவில் ஒரு மிருதங்கம், ஒரு சிதார், ஒரு பாடகர். இவரே ஹார்மோனியமும் வாசிச்சுக்கிட்டே பாடினார். ஒரு பெண் தாளம் போட்டாங்க. மிருதங்கம் வாசிச்சவரே நட்டுவாங்கமும் செஞ்சார். மொத்தக் குழுவையும் மேடையில் கூப்பிட்டு அறிமுகப் படுத்திப் பாராட்டி நன்றி சொன்னாங்க கீதா. இது ரொம்பவும் பாராட்டப்படவேண்டிய அம்சம். இசைக்குழு சரியில்லைன்னா என்னதான் ஆடினாலும் அது எடுபடாது பாருங்க. குழுவா சேர்ந்து ஒருத்தருக்கொருத்தர் ஆதரவா நிகழ்ச்சியைக் கொண்டு போகணும். புகழைப் பங்குபோட்டுக்கத் தெரியணும். தனி மரம் தோப்பாகாது. நிகழ்ச்சிக்கு நம்ம பத்மா சுப்ரமணியம் வந்துருந்தாங்க.
இப்படியாக மகாராஜா ஸ்வாதித் திருநாளின் பிறந்த தினத்தையொட்டி நடந்த 'ஸ்வாதி ந்ருத்தோல்ஸவம் 'அழகா இனிமையா முடிஞ்சது. கலா ரசிகர்களுக்காக இந்த நிகழ்ச்சிகளை ஏற்பாடு செஞ்சு அனைவரும் ஆர்வம் காட்டும் வகையில் இலவச நிகழ்ச்சியாக இதை அளித்த தாஸ்யம் நடனப் பள்ளி கோபிகா வர்மாவுக்குப் பதிவுலக சார்பில் நம் நன்றி.
Showing posts with label ஸ்வாதித் திருநாள் நாட்டிய விழா. Show all posts
Showing posts with label ஸ்வாதித் திருநாள் நாட்டிய விழா. Show all posts
Wednesday, July 29, 2009
எது நடந்ததோ, அது நல்லாவே நடந்துச்சு.
Posted by
துளசி கோபால்
at
7/29/2009 12:39:00 AM
37
comments
Labels: அனுபவம், ஒடிஸ்ஸி, ஸ்வாதித் திருநாள் நாட்டிய விழா
Subscribe to:
Posts (Atom)
