Friday, February 02, 2024

சங்கத்தின் வெள்ளிவிழா !

காலநிலையும், இப்போக் கொஞ்சம் மேம்பட்டு இருக்கு ! மூணு மாச வசந்தகாலத்தில் ரெண்டு மாசம் முடியப்போகுது.  செடிகளும் கடமையாற்றத் தொடங்கிட்டதால் தோட்டப் பராமரிப்பு, தோட்டவேலைன்னு அது ஒருபக்கம் ! செஞ்சுதான் ஆகணும்.  வண்ணப்பூக்களைப்  பார்க்கும்போது வர்ற மகிழ்ச்சிக்குக் கூலி !
தசரா முடிஞ்சு, வரும் பௌர்ணமிக்கு அடுத்து வர்ற  அமாவாசைதான் தீபாவளிப் பண்டிகை. அதுவரை கொஞ்சம் ஓய்வெடுக்கலாமுன்னு நாம் நினைச்சாலும், நம்ம சமூகம் அப்படி விட்டு வைக்கறதில்லையே..... 
எத்தனை குழு இருக்கோ அத்தனை தீபாவளியைக் கொண்டாட வேண்டி இருக்கு ! 
நம்ம தமிழ்ச்சங்கத்தின் வெள்ளிவிழாக் கொண்டாட்டம் ஒரு  மூணுவருஷமா நிலுவையில் இருக்கு. அதான் கோவிட் வந்து புண்ணியம்  கட்டிக்கிச்சு இல்லையா ?  சிட்டிக்கவுன்ஸில் ஃபண்டிங் வேற கொடுத்துருக்கு !  வழக்கமா நம்ம சங்க விழாவின் பாட்லக் டின்னருக்கு லீவு !  சங்கமே சோறு போடுதாம் !  ஆஹா....   முதல் முறையா  இலவசச் சோறு!

இந்த சனிக்கிழமை வச்சுக்கலாமுன்னு முடிவு செஞ்சு, இதோ அந்த நாளும் வந்துருச்சு.  வெள்ளிவிழா, நவராத்ரி & தீபாவளின்னு முப்பெரும் விழான்னு சொல்லிக்கலாம். எத்னிக் கம்யூனிட்டி தலைவரையும் அழைச்சுருந்தோம். நம்ம நண்பர்தான்.  எத்னிக் கம்யூனிட்டியின் பாராட்டுப் பத்திரத்தை  அளித்து சங்கத்தைப் புகழ்ந்து பேசினார் ! 


தமிழ்ப்பள்ளிக்கூட மாணவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்தும், நியூஸியின் தேசியகீதமுமாய் விழா ஆரம்பம் ஆச்சு.  கலைநிகழ்ச்சிகளில்,  நம்ம பிள்ளைகளின்  நடனங்கள், உள்ளூர் பரதநாட்டியப்பள்ளி ( தோழியின் பள்ளிதான் )மாணவியரின் நடனம், பாட்டு  இவைகளுடன்  சீனர்களின் சிங்க நடனம் வேற!

கீழே சுட்டியில் பார்க்கலாம்.  இப்பெல்லாம் யூட்யூபிலே ஏத்தவே முடியலை...ப்ச்........

https://www.facebook.com/1309695969/videos/1990832351285925/






நம்ம தமிழ்ச்சங்கத்தின் தமிழ்ப்பள்ளிக்கூடம் ஆரம்பிச்ச காலத்தில் அதில் சேர்ந்த முதல் மாணவியின்  குடும்பமும் வந்திருந்தாங்க. பள்ளிக்கூடத்தின் முதல் ஆசிரியை நாந்தான். அப்ப முதல்மாணவி யாராக இருக்கும் ? யூகிச்சுச் சொல்லுங்க, பார்க்கலாம் :-)






உள்ளுரில் உணவகம் நடத்தும் தோழிதான்  விருந்து படைச்சாங்க !








எத்தனையோ இடையூறுகள்,  முதுகில் கிடைச்சக் கத்திக்குத்துகள், தலைமைப் போர்,  வேறுபட்டக் கருத்துகள் என்று பலதரப்பட்ட அனுபவங்கள் இருந்தாலும் கூட , சங்கம் இவ்வளவு வருஷம் தாக்குப்பிடிச்சு  நிக்கறது எங்களுக்கு ரொம்பவே மகிழ்ச்சியான சமாச்சாரம்.  நாம் ஆரம்பிச்சுவச்ச சங்கம் என்ற பெருமையும் கூட ! 







6 comments:

said...

படங்களை ரசித்தேன்.

said...

சங்கத்தின் விழா… நிகழ்வுகள் குறித்து அறிந்தேன். தொடர்ந்து இப்படியான விழாக்கள் நடந்து கொண்டிருப்பது அறிந்து மகிழ்ச்சி. தொடரட்டும் நிகழ்வுகளும் பதிவுகளும்.

said...

வாங்க ஸ்ரீராம்,

படங்களே நடந்தவைகளை விவரிச்சுருது இல்லே !!!!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

ஒரு கட்டத்தில் தலைமை இடத்துக்கான போட்டிகள் நின்னு போய், இப்ப கடந்த ரெண்டு ஆண்டுகளாக தமிழ்நாட்டுத் தமிழரே தலைவராக இருக்கிறார் என்பதும் ஒரு முன்னேற்றம்தான் !!!!

said...

சங்கத்தின் விழா சிறப்பாக நடந்திருக்கும் என படங்களே சொல்கின்றன.

முதல் ஆசிரியையாக இருந்த உங்களுக்கு வாழ்த்துகள்.
முதல் மாணவி உங்கள் மகள் என நினைக்கிறேன். சரியா?

said...

வாங்க மாதேவி.

சொன்னது முற்றிலும் சரி :-) எதுவுமே வீட்டில் இருந்துதான் ஆரம்பிக்கணும், இல்லையா :-)

வாழ்த்துகளுக்கு நன்றிப்பா !