நேத்துப்போன நம்ம சநாதன் தர்ம சபாவின் மகளிர் குழுவின் தீவாலி விழா இன்றைக்கு இருக்கு! சநாதன் லேடீஸ் குழுவில் நானெல்லாம் பேருக்குத்தான் இருக்கேன் . கமிட்டியில் இல்லை. என்னால் இவர்களைப்போல் முழுமூச்சாய் இதிலெல்லாம் ஈடுபட முடியாது என்பதே உண்மை. ஆனால் எதாவது வகையில் செய்ய முடிஞ்ச உதவியைச் செய்யாமல் விட்டதில்லை.
இந்த விழா டெம்பிள்டன் கம்யூனிட்டி ஹாலில் ஏற்பாடு. நம்ம நகரின் எல்லைக்குள்தான் இருக்குன்னாலும்... எல்லைக்கு அருகில்னு சொல்லலாம். நம்ம வீட்டிலிருந்து ஒரு ஒன்பது கிமீ தூரம். சிட்டிக்கவுன்ஸில் கட்டிவிட்ட ஹால்தான் . ஆச்சு 21 வருஷம். கொஞ்சம் தூரமா இருக்கேன்னு நினைச்சு முந்தியெல்லாம் வாடகைக்கு எடுக்காமல்தான் இருந்தோம். இந்த 2011 நிலநடுக்கம் வந்தபின் நகருக்குள் பல மாற்றங்கள் வந்துட்டதால் இந்த ஹாலைப் பிடிச்சுக்கிட்டோம். தமிழ்ச்சங்கம், கேரளா சங்கம், கிறிஸ்மஸ் கொண்டாட்டம் இப்படி நமக்கு சேவை செய்ய அதுக்கொரு வாய்ப்பு அமைஞ்சுருக்கு :-) நகரின் சந்தடியில்லாம கிராமச் சூழலில் இருக்கு. பார்க்கிங் கூட அவ்வளவாப் பிரச்சனை இல்லை.
நிகழ்ச்சியின் ஆரம்ப நடனமாகக் கடவுள் வாழ்த்து மாதர்சங்கத் தலைவி கேட்டுக்கிட்டாங்கன்னு நான் ஏற்பாடு செய்துகொடுத்திருந்தேன். நம்ம தோழியின் நடனப்பள்ளி மாணவிகள்தான். சகோதரிகள். இவர்களின் தாயும் ஒரு நடனக்கலைஞர் என்பதால் ரொம்ப அருமையாக அலங்காரம் செய்வார்கள்.
தமிழ்த் தெரியாவிட்டாலும் பாடல்பற்றிய விவரம் எல்லாம் கவனத்தோடுக் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு, ஆசிரியர் சொற்படி ரொம்ப ஆர்வத்தோடு ஆடுகிறார்கள். கலைக்குடும்பம் என்றால் சும்மாவா !!!!
https://www.facebook.com/1309695969/videos/699507311828525/
நம்ம மிஷலின் நடனங்களும், சில தனியார் நடனக்குழுவின் நடனங்களும், சீனர்களின் சிங்க நடனமும் , எல்லாத்துக்கும் மேலாக ராமாயண நாடகமும் அட்டகாசம், போங்க. அசோகவனத்தில் சீதை, ராமராவண யுத்தம் னு சின்னப்பசங்கள் அருமையாச் செஞ்சுருந்தாங்க.
மிஷல்
https://www.facebook.com/1309695969/videos/1311085292924434/
https://www.facebook.com/1309695969/videos/356625023390021/
சிங்கம்
https://www.facebook.com/1309695969/videos/295907603350464/
நிறைய ஸ்பான்ஸர்ஸ் கிடைச்சதால் ரொம்ப நல்லமுறையில் நடந்தது. நல்ல கூட்டம்தான். கொஞ்சம் கூட்டத்துக்கு நானே பொறுப்பு :-) தனிப்பட்ட முறையில் அழைப்பை அனுப்பிவச்சுப் புண்ணியம் கட்டிக்கிட்டேன்!
உண்மையைச் சொன்னால் குற்றம் ஏதும் கண்டுபிடிக்க முடியாத அளவு , நிகழ்ச்சியை நடத்தி அமர்க்களப்படுத்திட்டாங்க நம்ம மஹிளா மண்டலி பொறுப்பாளர்கள் ! மேடை நிகழ்ச்சிகளும், தீவாலிப் பலகாரங்களும், டின்னரும் கூட அட்டகாசம் !
இனிதாக எல்லாவற்றையும் நடத்திய சநாதன் மஹிளா மண்டலிக்கு நம் மனம் நிறைந்த நன்றிகள்
7 comments:
கொண்டாட்டத்தின் சிறப்பை படங்கள் சொல்கின்றன. உணவு வகைகள் கண்ணைக் கவர்கின்றன!
தீவாலி கொண்டாட்டங்கள், சிறப்பான ஏற்பாடுகள் என அனைத்தும் நன்று. தொடரட்டும் கொண்டாட்டங்களும் பகிர்வுகளும்.
வாங்க ஶ்ரீராம்,
குறையொன்றும் சொல்லமுடியாதபடி கொண்டாடுகிறார்கள் !!!!
வாங்க வெங்கட் நாகராஜ்,
உண்மையிலேயே சிறப்பாகச் செய்துவிட்டனர் மகளிர் !!!
கொண்டாட்டங்கள் நன்றாக இருக்கின்றன.
உங்கள் பங்கும் அதில் சேர்ந்திருப்பதில் மகிழ்ச்சி.
வாங்க மாதேவி,
நம்ம உதவி ஒரு துரும்பளவுதான்ப்பா.
வாங்க மாதேவி,
நம்ம உதவி ஒரு துரும்பளவுதான்ப்பா.
Post a Comment