வாரம் ஒரு வகுப்புதான். அதுவும் ஒரு மணி நேரம் மட்டும். அந்த நேரத்துக்குத்தான் ஹால் புக் பண்ணி இருக்கோம். அதையே ஒழுங்காப் பண்ணிட்டு வரக்கூடாது ? ஊஹூம்.... முடியாத். குழுவிலே யாருக்காவது பொறந்த நாள், கல்யாணநாள், வீட்டு விசேஷம் இப்படி வராமல் இருக்குமா ? இதுக்கு நடுவிலே பண்டிகைகள் வேற ! இதெல்லாம் போதாதுன்னு மாசத்தில் கடைசி வகுப்பில் ஒரு ஸ்நாக்ஸ் டே ! இப்படி ஏதாவது வந்தால் ஒரு இருபது நிமிட்ஸ், கொண்ட்டாட்டத்துக்கு எடுத்துக்குவோம். நாந்தான் இந்த வகை நாளுக்கு ஃபுட் யோகான்னு பெயர் வச்சேன்:-)
எங்க ஊர் ஸ்போர்ட்ஸ் கேன்டர்பரி அமைப்புதான் இந்த யோகா வகுப்புகளை ஆரம்பிச்சுக் கொடுக்குது. விருப்பம் உள்ளவர்களுக்கு பயிற்சி கொடுக்கறாங்க. பயிற்சியாளர்கள் தயாரானதும் நாங்களே இதை நடத்திக்குவோம். நிறுவனத்தார் நமக்கு ஒரு ஒருங்கிணைப்பாளரை ஏற்பாடு செஞ்சுருக்காங்க. அவுங்க மாசம் ஒரு முறை வந்து நம்ம வகுப்பு எப்படி (எந்த லட்சணத்தில் ) நடக்குது.... இன்னும் எந்தமாதிரி இதை மேம்படுத்தலாம், புதுசா என்னென்ன சொல்லித்தரலாமுன்னு பார்த்துக்குவாங்க.
ஒரு வாரம் இருக்கும்போதே நம்மிடம் விசாரிச்சு வச்சு அதுக்கேத்தபடி நடத்தறதுதான். சின்னச் சின்ன டெஸ்ட் வேற இருக்கும். எத்தனை விநாடிகள், நிமிஷத்தில் நம்மால் சிலதைச் செய்ய முடியுதுன்னு பார்ப்பாங்க. அடுத்த முறை வரும்போது போனமுறையை விட எவ்வளவு முன்னோக்கிப் போயிருக்கோமுன்னும் பார்த்து நம்மை ஊக்கப்படுத்துவாங்க. இந்த மூணு வருஷமா எங்களுக்கு உதவி செஞ்ச ஒருங்கிணைப்பாளர், வேற வேலைக்குப் போறாங்கன்னதும் எங்களுக்குக் கொஞ்சம் ஏமாத்தமாத்தான் இருந்தது. புதுசா இன்னொருத்தரைப் போட்டுருக்காங்களாம். அவுங்க ஒருநாள் வந்து பார்த்துட்டுப் போனாங்க.
யோகான்னதும் விதவிதமான ஆசனங்கள் போடறதும், தீரேந்திர ப்ரம்மச்சாரின்னு ஒரு யோகா குரு இருந்தாரே அவர் மாதிரி உடம்பை முடிச்சுப்போட்டுக்கறதும்தான்னு நினைச்சுடாதீங்க. இது கொஞ்சம் வயதானவர்களுக்கு கால்களுக்கு தடுமாற்றம் வராம நிற்க நடக்க வைக்கிறது, ஞாபகசக்தி போயிடாமல் மூளையை ஆக்டிவா வச்சுக்கறது, கொஞ்சம் மூச்சுப்பயிற்சின்னு நடப்பதுதான்.
ஒரு வகுப்பில் குழுவில் ஒருவருக்குப் பொறந்தநாள்னு கேக் வெட்டிக் கொண்டாடினோம். கூடவே தீனிகள்! குழு மக்களே சமையல் பொறுப்புகளை ஏத்துக்கறதும் அடிக்கடி நடக்கும். சமோஸா சாட், ஜலேபி, ஃபலூடான்னு ஒரு கை பார்க்க வேண்டியதாப் போச்சு. குழுவினர் எல்லோரும் வராததால் வீட்டுக்கு வேற பார்ஸல் ஆச்சுன்னு வையுங்க. கம்யூனிட்டி ஹால்களில் சகல வசதிகளுடன் அடுக்களையும் இருப்பதால் சுடவைக்க வேண்டியவைகளைச் சுடவச்சுக்குவோம்.
விழா முடிஞ்சதும் ஆளுக்கொரு வேலை பார்த்து அடுக்களையைச் சுத்தம் செஞ்சு வச்சுருவோம். இந்தப் பகுதியில் ஒருத்தர் மட்டும் வேலையில் உதவவேமாட்டாங்க. க்ளிக் வேலைதான் எப்பவும். நம்ம யோகா குழுவுக்கு அஃபிஸியல் பொட்டாக்ராஃபர் அவுங்க.
உங்களுக்குத் தெரிஞ்சவர்தான் என்பது உபரித்தகவல் :-)
10 comments:
அருமை நன்றி
Jelebi - wow.
தீரேந்திர பிரம்மச்சாரி விடுதலைப் போராட்ட வீரரும் கூட, இல்லை?
சாப்பாட்டு வரிசைகளைப் பார்த்தால், ஒரு மாதம் எக்ஸ்ட்ரா யோகா செய்யணும் போலிருக்கே
யோகா செய்கிறார்களோ இல்லையோ சாப்பிட நிறைய விஷயங்கள்...... :)
தகவல்கள் அனைத்தும் சிறப்பு.
புட் யோகா சுவைக்கிறது.
வாங்க விஸ்வநாத்,
நன்றி !
வாங்க ஸ்ரீராம்,
அப்படியா ? எனக்கு இது புதுத் தகவல்.
ஆனால் சாமிகிட்டே 'போன' முறைதான் வருத்தம் . ப்ச்.....
வாங்க நெல்லைத் தமிழன்,
ஹாஹா.... அப்ப வாரம் ஒருமுறை வகுப்பு போறாதுதானே !!!
முப்பதுபேர் இருக்கும் குழுவில் எதாவது விசேஷம் வந்துக்கிட்டுத்தானே இருக்கு. இதுலே மாசம் ஒருமுறை ஸ்நாக்ஸ் வேற :-)
வாங்க வெங்கட் நாகராஜ்.
கொஞ்சம் யோகா.... கொஞ்சம் தீனி :-)
வாங்க மாதேவி,
முப்பதுபேர் குழுவில் இருபது வகைகள் இருக்காதா ? :-)))
Post a Comment