நாங்க ஆடி அசைஞ்சு தீபாவளி கொண்டாடி முடிக்கறோம்.... திரும்பிப்பார்த்தா.... கார்த்திகைதீபம் வந்துக்கிட்டு இருக்கு! வடக்கர்கள் யாரும் இந்தப் பண்டிகையைக் கொண்டாடுவதில்லை. இது முழுக்க முழுக்க நம்ம பக்கத்துப் பண்டிகை இல்லையோ !
விசேஷப்பண்டிகைக்கு ஏதாவது விசேஷமா அலங்காரம் செய்யணும். நாஞ்சொல்லலை.... கொஞ்சநாட்களா அலங்காரப்பித்துத் தலைக்கேறிக்கிடக்குன்னு.... :-)
புதுசா எங்கே போய் என்னன்னு வாங்க.... வீட்டுலேயே ஏதாவது தேறுமான்னு பார்க்கணும். அப்பதான் ரொம்ப வருஷமா வீட்டுலே இருக்கும் 'அகல் விளக்குகளை' ஒருகை பார்க்கத்தோணுச்சு. இந்த அகல்விளக்கு வரிசை 2009 ஆம் வருஷக் கார்த்திகை தீபத்துச்சமயம் சென்னையில் வாங்கியது. சொல்லிவச்சாப்லெ மூணே மாசத்தில் அதுலே போட்டுவச்சுருந்த பல்ப் எல்லாம் மண்டையைப் போட்டுருச்சு. நாந்தான் தூக்கிப்போட மனசில்லாம இங்கே கொன்டுவந்து அதுலே ஒரு மல்ட்டிக்கலர் விளக்கு வரிசையை ஒட்டிவச்சுருந்தேன். அகல்விளக்குன்னா.... மண் அகல் இல்லை. டெர்ரகோட்டாக் கலரில் ப்ளாஸ்டிக் அகல்கள்தான்.
இப்பெல்லாம் எதை எடுத்தாலும் பொன்னாக்கும் வித்தை கைவசம் இருப்பதால் இதையெல்லாம் தங்கமாக்கி ஒரு அலங்காரத்தட்டு செஞ்சாச்.
வீட்டில் இருக்கும் விளக்குகளை எடுத்துவச்சுப் பார்த்தால்..... நிறம் மாறும் விளக்குகள் கொஞ்சம் குறையுது. எண்ணிக்கை போதாது. LED Colour changing Waterproof Tealights எனக்கு வேணும். கடைகளில் நமக்கு வேண்டாத சமயங்களில் எல்லாம் கண்ணில் படும் சமாச்சாரம், தேவைன்னதும் எங்கே போய் ஒளிஞ்சுக்குமோ தெரியல. விளக்கு வேட்டைன்னு அரைநாள் வீணாப்போயிருச்சு. வெறும் விளக்குகள் கொட்டிக்கிடக்கு. வேற வழின்னு அதையே வாங்கிவந்தோம். இந்தவகையிலே ஒரு நல்லதுன்னா.... விளக்கின் ஜோதி, உண்மை விளக்கு போலவே கொஞ்சம் ஆடியாடி எரியும்.
இந்தப் பண்டிகைக்காவது ஒரு புதுசு கட்டியே ஆகணுமுன்னு ஒரு வெறி வந்துருச்சு. அப்புறம் சாயங்காலம் கட்டிக்கலாமுன்னா.... சோம்பல். நினைத்ததை முடிப்பவளானேன். அதான் மெயில் ஆர்டரில் கொஞ்சம் புடவைகள் வந்துருக்கே :-) வீட்டுப்பூஜையை முடிச்சுட்டு, அப்படியே நம்ம கோவிலுக்கும் போயிட்டு வந்தோம். தாமோதர் மாசம் இன்னும் முடியலை. அருமையான தரிசனம் !
சாயங்காலம் வீட்டில் விளக்கேத்தி வச்சாச்! ஒளிவெள்ளம் கொஞ்சம் பாயட்டுமே !
இன்றைக்குச் சந்திர க்ரஹணம் வேற! 'blood micromoon' னு சொன்னாங்க. இதேமாதிரி ஒருக்கில் நியூஸியில் தெரிஞ்சது எண்ணூறு வருஷங்களுக்கு முன்னேயாம்! அடடா... நம்ம நல்லகாலம், இன்றைக்கு வானமும் பளிச்ன்னு இருக்கு. விடக்கூடாது ! அது பாருங்க....ஒவ்வொரு பௌர்ணமிக்கும் மேகமூட்டமா வந்துரும். காலையில் பார்த்தால் 'நான் நேத்தே வந்துருந்தேன்'னு வெளிறிப்போன நிலா கண்ணுலே படும். அத்திப்பூத்தாப்போலத்தான் சந்த்ரோதயம் கிடைக்கும்.
நம்ம ஒன்றையணாக்கேமெராவில் பாய்ஞ்சு பாய்ஞ்சுபோய் படம் எடுத்துக்கிட்டு இருந்தேன். துணைக்கு நம்ம ரஜ்ஜுதான். சாயங்காலம் எட்டு மணிக்கு ஆரம்பிச்சு ஆறுமணி நேரம் நீண்டு இருக்கும் க்ரஹணத்தை ச்சும்மா எட்டிப்பார்த்துட்டு 'நம்மவர்' போய் டிவி பார்க்க ஆரம்பிச்சுட்டார்.
சிலபடங்கள்தான் கொஞ்சம் சரியா வந்துச்சு. போகட்டும்.... அடுத்தமுறை பார்க்க 800 வருஷம் காத்திருந்தால் ஆச்சு :-)
7 comments:
தீபாவளிக் கொண்டாட்டங்கள் அருமை. ரஜ்ஜுவின் மேற்பார்வையை அவ்வப்போது ஒரு க்ளோசப் படம் போடவும்!
அருமை நன்றி
வாங்க ஸ்ரீராம்,
ரஜ்ஜுவின் இன்ஸ்பெக்ஷனில் பாஸ் ஆகிறவரை நடுக்கம்தான் :-)
வாங்க விஸ்வநாத்,
நன்றி !
எங்கும் எதிலும் வியாபித்திருக்கும் ரஜ்ஜு!!!! ஹாஹாஹா படத்துல ரஜ்ஜூ இல்லைனா என்னவோ மிஸ் ஆற மாதிரி ஒரு ஃபீலிங்க்!
குழந்தை சமத்து.
கிரஹணப் படங்கள் அட்டகாசம். அதைப் போய் ஒண்ணரையணா கேமரான்னு...டூஊஊஊஒ மச் இல்லையோ!!!!!!
கீதா
கார்த்திகை தீபம் கொண்டாட்டங்கள் நன்று. படங்களை ரசித்தேன்.
கார்த்திகை தீப கொண்டாட்டமும் சந்திர கிரகண படங்களும் .நன்றாக இருக்கின்றன.
ரஜ்ஜுவின் சூப்பவைஸ் இல்லாமல் ஒன்றும் ஆகாது சிறு குழந்தை செல்லங்கள் போல.
Post a Comment